என் மலர்
சமையல்
- இட்லி சாப்பிடாத குழந்தைகளும் இதை விரும்புவார்கள்.
- இந்த ரெசிபியை 10 நிமிடத்தில் செய்து விடலாம்.
தேவையான பொருட்கள் :
இட்லி - 8
நல்லெண்ணெய் - 4 டீஸ்பூன்
கடுகு - அரை டீஸ்பூன்
உளுந்து - 1 டீஸ்பூன்
கடலை பருப்பு - 1/2 டீஸ்பூன்
ப.மிளகாய் - 3
வேர்க்கடலை - சிறிதளவு
முந்திரி - 10
சின்ன வெங்காயம் - 50 கிராம்
கொத்தமல்லி தழை, கறிவேப்பிலை - சிறிதளவு
சாம்பார் பொடி - 1 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
செய்முறை :
இட்லியை நன்கு உதிரி உதிரியாக உதிர்த்து வைக்கவும்.
வெங்காயம், கொத்தமல்லி தழை, ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
கடாய் அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுந்து, கடலைப்பருப்பு போட்டு தாளித்த பின்னர் வேர்க்கடலை, முந்திரி சேர்த்து பொன்னிறமாக மாறியதும் நறுக்கிய சின்ன வெங்காயம், ப.மிளகாய் சேர்த்து வதக்குங்கள்.
வெங்காயம் நன்கு வதங்கிய பிறகு சாம்பார் பொடி மற்றும் மிளகுப்பொடி சேர்த்து பச்சை வாசனை போக வதக்குங்கள்.
அடுத்து அதில் உதிர்த்து வைத்திருக்கும் இட்லியை சேர்த்து அடுப்பை மிதமான தீயில் வைத்து உதிரி உதிரியாக வரும் வரை கிளறவும்.
உதிரியாக வந்தவுடன் கடைசியாக கொத்தமல்லி தழை தூவி அடுப்பை அணைத்துவிடுங்கள்.
அவ்வளவுதான் இட்லி உப்புமா ரெடி... சுட சுட பரிமாறுங்கள்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மீதமாகிய சப்பாத்தியை வைத்து ‘கப் பீட்சா’ செய்யலாம்.
- இன்று இந்த ரெசிபி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்:
சப்பாத்தி - 4
எண்ணெய் - 2 கப்
மொசரில்லா சீஸ் (துருவியது) - 1 கப்
சில்லி பிளேக்ஸ் - 2 டீஸ்பூன்
பீட்சா சாஸ் - 4 டீஸ்பூன்
ஓரிகானோ - 2 டீஸ்பூன்
மிளகுத்தூள் - 1 டீஸ்பூன்
ஆலிவ் பழம் - 5
குடைமிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
வெங்காயம் (பொடிதாக நறுக்கியது) - 2 டீஸ்பூன்
செய்முறை:
ஒரு நீண்ட எவர்சில்வர் டம்ளரின் வெளிப்பகுதி முழுவதும் சிறிதளவு எண்ணெய் தடவி, அதன் மேல் சப்பாத்தியை நூல் கொண்டு கட்டுங்கள்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் டம்ளரை அதில் போட்டு, சப்பாத்தி பொன்னிறமாக மாறும்வரை பொரித்து எடுங்கள்.
சூடு ஆறிய பிறகு டம்ளரில் இருந்து சப்பாத்தியை பிரித்து எடுக்கலாம்.
கிண்ணம் போல இருக்கும் சப்பாத்தியின் உள்ளே சீஸ், குடைமிளகாய், வெங்காயம், பீட்சா சாஸ் என ஒவ்வொன்றாக நிரப்பவும்.
அதன்மேல் மிளகுத்தூள், சில்லி பிளேக்ஸ், ஓரிகானோ ஆகியவற்றைத் தூவி ஆலிவ் பழம் கொண்டு அலங்கரிக்கவும்.
அடுப்பில் தவாவை வைத்து சூடானதும், தயார் செய்த சப்பாத்தியை அதன் மேல் வைத்து மூடி 15 நிமிடங்கள் வரை 'பேக்' செய்தால் 'கப் பீட்சா' தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- கல்லீரல் கோளாறுகளுக்கு பீட்ரூட் ஒரு சிறந்த டானிக்.
- இரத்தத்தில் சிவப்பணுக்களை அதிகரிக்க செய்யும்.
தேவையான பொருட்கள்:
பீட்ரூட் - 1 கப் (துருவியது)
கெட்டி தயிர் - 2 கப்
பூண்டு - 2 பல்
காய்ந்த புதினா இலைகள் - 1½ டேபிள் ஸ்பூன்
ஆலிவ் எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்
உப்பு - தேவைக்கு
செய்முறை:
பூண்டை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு அகன்ற கிண்ணத்தில் பூண்டு, ஒரு டேபிள் ஸ்பூன் காய்ந்த புதினா இலைகள், ஒரு டேபிள் ஸ்பூன் ஆலிவ் எண்ணெய், பீட்ரூட் மற்றும் தேவையான அளவு உப்பு சேர்த்து கலக்கவும்.
இதை 5 நிமிடங்களுக்கு அப்படியே மூடி வைக்கவும்.
பின்னர் இந்தக் கலவையுடன் கெட்டி தயிர் சேர்த்து நன்றாகக் கலந்து குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
ஒரு மணி நேரம் கழித்து வெளியே எடுத்து, அதன் மேலே ஆலிவ் எண்ணெய் மற்றும் காய்ந்த புதினா இலைகள் தூவி பரிமாறவும்.
சூப்பரான பீட்ரூட் டிப் ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- சைனீஸ் உணவுகளில் மிகவும் பிரபலமான ஒன்று டிராகன் சிக்கன்.
- குழந்தைகளுக்கு இந்த சிக்கன் மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
எலும்பில்லாத சிக்கன் - 1 கிலோ
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
சில்லி ப்ளேக்ஸ் - 1 1/2 டீஸ்பூன்
தக்காளி சாஸ் - 2 டீஸ்பூன்
சோயா சாஸ் - 1 டேபிள் ஸ்பூன்
சர்க்கரை - 1/2 டீஸ்பூன்
கொத்தமல்லி - 1 கையளவு
வெங்காயம் - 1
வெங்காயத் தாள் - சிறிதளவு
வெஜிடேபிள் ஆயில் - தேவையான அளவு
ஊற வைப்பதற்கு…
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 2 டீஸ்பூன்
மிளகுத் தூள் - 1 1/2 டீஸ்பூன்
முட்டை - 1 (வெள்ளைக்கரு மட்டும்)
சோள மாவு - 2 டேபிள் ஸ்பூன்
செய்முறை
இஞ்சி, பூண்டு, வெங்காயம், வெங்காயத்தாள், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சிக்கனை நன்றாக சுத்தம் செய்து சற்று நீளமாக வெட்டி கொள்ளவும்.
ஒரு கிண்ணத்தில் எலும்பில்லாத சிக்கனை போட்டு அதில் ஊற வைப்பதற்கு கொடுத்துள்ள பொருட்களை சேர்த்து நன்றாக பிரட்டி, தனியாக 1 மணி நேரம் ஊற வைக்க வேண்டும்.
ஊறவைத்த சிக்கனை எண்ணெயில் போட்டு, பொன்னிறமாக பொரித்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
நாண்ஸ்டிக் தவாவை அடுப்பில் வைத்து, அதில் 2 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், அதில் இஞ்சி, பூண்டு சேர்த்து பொன்னிறமாக வதக்கி, சில்லி சாஸ் சேர்த்து கிளறி, தக்காளி சாஸ், சோயா சாஸ் மற்றும் சர்க்கரை சேர்த்து, கலவையை கொதிக்க விட வேண்டும்.
கலவையானது கொதிக்க ஆரம்பித்ததும், தீயை மிதமான சூட்டில் வைத்து, அதில் பொரித்து வைத்துள்ள சிக்கனை சேர்த்து, மூடி வைத்து 5 நிமிடம் வேக வைத்து இறக்க வேண்டும்.
இப்போது அருமையான டிராகன் சிக்கன் ரெடி!!!
இதன் மேல் கொத்தமல்லி மற்றும் வெங்காயத் தாள் தூவி அலங்கரித்து பரிமாறலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- ஒட்ஸ் சாப்பிடுவதால் டைப்2 நீரிழிவு நோய் கட்டுப்படுத்தப்படுகிறது.
- ஓட்ஸில் கெட்ட கொழுப்பை கரைக்கக்கூடிய வேதிப்பொருட்கள் அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள்
ஓட்ஸ் - 1 கப்
தண்ணீர் - 1 1/2 கப்
அரிசி மாவு - 1 மேசைக்கரண்டி
வெங்காயம் - 1
பச்சை மிளகாய் - 1
இஞ்சி - சிறிய துண்டு
கேரட் - 1
முட்டைகோஸ் - சிறிய துண்டு
சீரகம் - 1/2 தேக்கரண்டி
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
கொத்தமல்லி இலை - சிறிதளவு
உப்பு - 1 தேக்கரண்டி
நெய் - தேவையான அளவு
செய்முறை:
* கேரட், முட்டைகோஸை துருவிக்கொள்ளவும்.
* வெங்காயம், ப.மிளகாய், இஞ்சி, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஓட்ஸில் தண்ணீர் ஊற்றி 30 நிமிடம் ஊற வைத்த பின்னர் மிக்ஸியில் சேர்த்து கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த ஓட்ஸை ஒரு பாத்திரத்தில் போட்டு அதனுடன் நறுக்கிய வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, துருவிய கேரட், துருவிய முட்டைகோஸ்,
சீரகம், மஞ்சள் தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
* பின்பு நறுக்கிய கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து கொள்ளவும்.
* பணியாரக்கல்லை அடுப்பில் வைத்து நெய் ஊற்றி சூடானதும் மாவை ஊற்றி 5 நிமிடம் வேகவிடவும். ஒரு பக்கம் வெந்ததும் மறுபக்கம் திருப்பி விட்டு 5 நிமிடம் வேகவிடவும்.
* இப்போது சத்தான சுவையான ஓட்ஸ் குழிப்பணியாரம் தயார்!
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வாழைக்காயில் பல ரெசிபிகளை செய்யலாம்.
- வாழைக்காய் சிப்ஸ் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.
தேவையான பொருட்கள் :
வாழைக்காய் - 1
உப்பு - தேவையான அளவு
மிளகுத் தூள்/மிளகாய் தூள் - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை :
ஒரு கிண்ணத்தில் மிளகுத் தூள்/மிளகாய் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து வைக்கவும்.
வாழைக்காயை நீரில் கழுவி, இரு முனைகளையும் வெட்டி தோலுரித்துக் கொள்ள வேண்டும்.
பின்னர் அதனை மெல்லியதாக, வட்ட வட்டமாக வெட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு அகன்ற வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி எண்ணெய் நன்கு சூடானதும், அதில் வாழைக்காய் துண்டுகளைப் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்து, ஒரு பௌலில் போட்டு, அதில் கலந்து வைத்த மிளகாய் தூளை சேர்த்து நன்றாக குலுக்கி எடுத்தால் வாழைக்காய் சிப்ஸ் ரெடி.
இதனை காற்று புகாத டப்பாவில் போட்டு வைத்து 1 வாரம் வரை பயன்படுத்தலாம்.
சூப்பரான வாழைக்காய் சிப்ஸ் ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த சட்னி இட்லி, தோசைக்கு சேர்த்து சாப்பிட அற்புதமாக இருக்கும்.
- இந்த சட்னி 4-6 மணிநேரம் வரை கெட்டுப் போகாமல் இருக்கும்.
தேவையான பொருட்கள்:
துருவிய தேங்காய் - 1 கப்
உளுத்தம் பருப்பு - 3 டேபிள் ஸ்பூன்
வரமிளகாய் - 2
புளி - 2 டீஸ்பூன்
எண்ணெய், உப்பு - தேவைக்கு ஏற்ப
தாளிக்க
கடுகு - 1 டீஸ்பூன்
கறிவேப்பிலை
செய்முறை:
* ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுக்க வேண்டும்.
* பின்பு அதில் துருவிய தேங்காய் சேர்த்து பொன்னிறமாகும் வரை வறுக்க வேண்டும்.
* தேங்காய் பொன்னிறமானதும், வரமிளகாய், புளி சேர்த்து 2 நிமிடம் வறுத்து இறக்கி குளிர வைக்க வேண்டும்.
* வறுத்த பொருட்கள் ஆறியதும் மிக்சர் ஜாரில் போட்டு, சுவைக்கேற்ப உப்பு மற்றும் தேவையான அளவு நீர் சேர்த்து நன்கு மென்மையாக அரைக்க வேண்டும்.
* கடாயை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் தாளிக்க கொடுக்கப்பட்டுள்ள பொருட்களை போட்டு தாளித்து சட்னியில் சேர்த்து பரிமாறவும்.
* இப்போது சுவையான தேங்காய் புளி சட்னி தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த போண்டாவை டீ, காபியுடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
- இந்த போண்டா செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
தேவையான பொருட்கள்
மைதா மாவு - 1 கப்
பெரிய வெங்காயம் - 4
பச்சை மிளகாய் - 3
சோம்பு - 1 ஸ்பூன்
தனி மிளகாய்தூள் - 1 ஸ்பூன்
கறிவேப்பிலை - சிறிதளவு
கடலை மாவு - 4 ஸ்பூன்
அரிசி மாவு - 2 ஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு
செய்முறை
வெங்காயத்தை தோல் நீக்கி நீளமாக மெலிதாக நறுக்கிக் கொள்ளவும்.
கறிவேப்பிலை, பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் நறுக்கிய வெங்காயத்தை போட்டு இதனுடன் உப்பு, மிளகாய் தூள், ப.மிளகாய், கறிவேப்பிலை, சோம்பு போட்டு நன்றாக கலந்து இந்த கலவையை 10 நிமிடம் மூடி வைக்கவும்.
10 நிமிடம் கழித்து பார்த்தால் வெங்காயம் மிருதுவாகி இருக்கும். இப்போது மைதா மாவு, கடலை மாவு, அரிசி மாவை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலக்கவும். மாவு உருண்டை பிடிக்கிற அளவு பக்குவமாக இருக்குமாறு பார்த்து கொள்ளவும்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் மாவை சிறிய உருண்டைகளாக உங்களுக்கு பிடித்த வடிவில் உருட்டி போட்டு அடுப்பை சிம்மில் வைத்து நன்கு வேக வைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான மாலை நேர ஸ்நாக்ஸ் டீக்கடை வெங்காய போண்டா ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த இட்லி உடல் சூட்டைத் தணிக்கும் அருமருந்து.
- இன்று இந்த இட்லி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
இட்லி அரிசி - ஒரு கிலோ
உளுந்து - கால் கிலோ
வெந்தயம் -
இளநீர் - தேவையான அளவு
உப்பு - சிறிதளவு.
செய்முறை
இட்லி அரிசி, வெந்தயத்தை நன்றாக கழுவி 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
உளுந்தை தனியாக 1 மணிநேரம் ஊறவைக்கவும்.
அரிசி, வெந்தயத்தை கிரைண்டரில் போட்டு அரைக்கும்போது தண்ணீருக்குப் பதிலாக இளநீர் சேர்த்து அரைக்க வேண்டும்.
அதேபோல் உளுந்து அரைக்கும் போது தண்ணீருக்கு பதிலாக இளநீர் சேர்த்து அரைத்து சேர்க்கவும்.
அரைத்த இரண்டு மாவையும் ஒரு பாத்திரத்தில் போட்டு உப்பு, இளநீரைச் சேர்த்து கரைத்து புளிக்க வைத்து விட்டு, பின்பு இட்லிகளைச் சுட்டெடுக்கவும்.
சூப்பரான இளநீர் இட்லி தயார்!!!
உண்பதற்கு இனிப்பாக இருக்கும் இந்த இட்லி, வெயிலின் சூட்டைத் தணிக்கும் அருமருந்து.
கவனத்தில் கொள்ள வேண்டியவை..
இட்லி மாவு அரைக்கும் போது, மாவில் கைபடாமல் கரண்டியைப் பயன்படுத்தி அரைப்பது நல்லது. அப்போது தான் சீக்கிரம் புளிப்பது, நீண்ட நேரத்துக்குப் பிறகு புளிப்பது போன்ற பிரச்னை களைத் தவிர்க்க முடியும்.
அலுமினியம், ஈயம் பூசப்பட்ட பித்தளைப் பாத்திரம் போன்ற பாத்திரங்களில் மாவை வைத்தால் சீக்கிரம் புளித்து போக வாய்ப்புள்ளது. அதனால், எவர்சில்வர் பாத்திரத்தில் வைப்பது நல்லது.
அடுப்புக்குப் பக்கத்தில் மாவை வைத்துப் பயன்படுத்து வதைத் தவிர்க்க வேண்டும். காரணம் சூட்டில் மாவு சீக்கிரம் புளித்து விடும். இட்லியின் ருசி அதன் புளிப்புத் தன்மையில் தான் இருக்கு. புளிப்பு சரியான அளவில் இருந்தால் தான் இட்லி ருசி நன்றாக இருக்கும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வாரத்தில் இருமுறை கோவக்காய் சாப்பிட்டு வந்தால் செரிமான கோளாறுகள், மலச்சிக்கல் பிரச்சனை தீரும்.
- கோவக்காயில் இரும்பு சத்து அதிகம் உள்ளது.
தேவையான பொருட்கள்:
கோவக்காய் - 500 கிராம்
கடுகு - 2 தேக்கரண்டி
சீரகம் - 2 தேக்கரண்டி
வெந்தயம் - 2 தேக்கரண்டி
புளி - ஒரு எலுமிச்சம்பழம் அளவு
காய்ந்த மிளகாய் - 50 கிராம்
பெருங்காயத்தூள் - ½ தேக்கரண்டி
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 10 பல்
நல்லெண்ணெய் - தேவையான அளவு
கல் உப்பு - தேவையான அளவு
செய்முறை:
கோவக்காயை நீளவாக்கில் நறுக்கி வைக்கவும்.
புளியை ஒரு பாத்திரத்தில் போட்டு சிறிது தண்ணீர் கலந்து ஊறவைக்கவும். அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றாமல் வெந்தயம், சீரகம், கடுகு ஆகியவற்றை தனித்தனியாக மிதமான தீயில் வாசனை வரும் வரை வறுக்கவும்.
பின்னர் அவற்றுடன் காய்ந்த மிளகாய், இஞ்சி, பூண்டு, உப்பு மற்றும் 2 தேக்கரண்டி தண்ணீர் சேர்த்து மிக்சியில் அரைத்துக்கொள்ளவும்.
அடுப்பில் அடிகனமான வாணலியை வைத்து அதில் நல்லெண்ணெய் ஊற்றி சூடானதும், நீளவாக்கில் நறுக்கிய கோவக்காய்களை போட்டு நன்றாக வதக்கியபின் இறக்கவும்.
மற்றொரு வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், கடுகு மற்றும் அரைத்த மசாலா சேர்த்து 5 நிமிடங்கள் வதக்கவும்.
பின்னர் பெருங்காயத்தூள் மற்றும் வதக்கிய கோவக்காய்களை சேர்த்துக் கிளறவும்.
அதன் பிறகு ஊற வைத்த புளிக்கரைசலை அதில் ஊற்றவும் (புளிக்கு மாற்றாக எலுமிச்சம்பழச் சாற்றையும் சேர்க்கலாம்).
10 முதல் 15 நிமிடங்கள் வாணலியை மூடி வைத்து மிதமான தீயில் கோவக்காய்களை வேக வைக்கவும்.
இந்தக் கலவை ஊறுகாய் பதத்துக்கு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
இப்போது 'கோவக்காய் ஊறுகாய்' தயார்.
இது ஆறியதும் கண்ணாடி ஜாடியில் போட்டு பயன்படுத்தவும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- முள்ளங்கியில் அதிக நோய் எதிர்ப்பு சக்தி உள்ளன.
- முள்ளங்கி நீரிழிவு நோயாளிகளுக்கு சிறந்த பயனளிக்கும்.
தேவையான பொருட்கள்:
முள்ளங்கி (பொடிதாக நறுக்கியது) - 2 கப்
ஓமம் - ½ டீஸ்பூன்
பச்சை மிளகாய் (பொடிதாக நறுக்கியது) - 2
பெருங்காயப்பொடி - 2 சிட்டிகை
எண்ணெய் - 1½ டேபிள் ஸ்பூன்
செய்முறை:
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், ஓமத்தைப் போட்டு பொரிய வைக்கவும்.
பின்பு அதில் பச்சை மிளகாய், பெருங்காயப்பொடி சேர்த்து வதக்கவும்.
பின்னர் நறுக்கிய முள்ளங்கியை சேர்த்து நன்றாக வதக்கவும்.
தேவையான அளவு உப்பு சேர்க்கவும்.
இப்போது முள்ளங்கியில் இருந்து சாறு வெளியேற ஆரம்பிக்கும்.
அது வற்றும் வரை நன்றாக வதக்கவும்.
முள்ளங்கி முழுவதுமாக வெந்தபின்பு அடுப்பிலிருந்து இறக்கவும்.
சூப்பரான முள்ளங்கி சப்ஜி ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பருப்பு வடையை விட இந்த வடை சூப்பரான இருக்கும்.
- இன்று இந்த வடை செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள் :
காய்ந்த பச்சை பட்டாணி - 200 கிராம்,
கடலைப் பருப்பு - 50 கிராம்,
அரிசி - ஒரு டேபிள்ஸ்பூன்,
பெரிய வெங்காயம் - ஒன்று,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
கறிவேப்பிலை, கொத்தமல்லி - சிறிதளவு,
இஞ்சித் துண்டுகள் - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2,
உப்பு - தேவைக்கேற்ப,
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை :
* இஞ்சி, வெங்காயம், கறிவேப்பிலை, கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* காய்ந்த பச்சை பட்டாணி, கடலைப்பருப்பு, அரிசி மூன்றையும் 2 மணி நேரம் ஊறவைத்து, உப்பு, பெருங்காயத்தூள், பச்சை மிளகாய் சேர்த்து கெட்டியாக, கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
* அரைத்த மாவில் நறுக்கிய வெங்காயம், இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.
* கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் பிசைந்த மாவை வடைகளாகத் தட்டி போட்டு பொரித்து எடுக்கவும்.
* மாலை நேர ஸ்நாக்ஸ் பச்சை பட்டாணி வடை ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health






