என் மலர்
சமையல்
- வரகரிசி உணவுகளை சாப்பிட்டு வந்தால் இதய ஆரோக்கியம் மேம்படும்.
- கொள்ளு அதிக புரதச்சத்து நிறைந்தது.
தேவையான பொருட்கள்:
வரகு அரிசி - 200 கிராம்
கொள்ளு - 50 கிராம்
சீரகம் - 2 டீஸ்பூன்
மிளகு - 15
நெய் - 3 டீஸ்பூன்
தேங்காய் எண்ணெய் - 3 டீஸ்பூன்
தோல் சீவிய இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - ஒன்று
கொத்தமல்லித்தழை - சிறிதளவு
கறிவேப்பிலை - ஒரு கைப்பிடி அளவு
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கொள்ளுப் பயறை இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
வரகரிசியை அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
இஞ்சியுடன் பச்சை மிளகாய் சேர்த்து ஒன்றிரண்டாக அரைத்தெடுக்கவும்.
குக்கரில் நெய், எண்ணெய் ஊற்றி சூடானதும் சீரகம், மிளகு தாளித்து, கறிவேப்பிலை சேர்த்துக் கிளறவும்.
அதனுடன் இஞ்சி - பச்சை மிளகாய் விழுது சேர்த்து நன்கு வதக்கவும்.
பிறகு உப்பு, தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொதிக்கவிடவும்.
அதனுடன் கொள்ளு, வரகு சேர்த்து குக்கரை மூடி ஆறு விசில்விட்டு இறக்கவும்.
குக்கரில் ஆவி அடங்கியதும் மூடியைத் திறந்து கொத்தமல்லித்தழை தூவிப் பரிமாறவும்.
சத்தான சுவையான வரகு அரிசி கொள்ளு பொங்கல் ரெடி.
குறிப்பு: விரும்பினால் முந்திரி சேர்க்கலாம். சாதாரண அரிசியைவிட சிறுதானியங்கள் இறுகும் தன்மையுடையதால் தண்ணீர் அதிகமாகச் சேர்க்கவும்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு இந்த ஸ்வீட் மிகவும் பிடிக்கும்.
- இந்த ரெசிபி செய்ய அதிக நேரம் ஆகாது.
தேவையான பொருட்கள்
தேங்காய்த் துருவல், இனிப்பில்லாத கோவா - தலா 1/2 கப்,
கேரட் துருவல் - 1 கப்,
சர்க்கரை - 2 கப்,
ஏலக்காய்த்தூள் - 1 சிட்டிகை,
நெய் - 1 டேபிள்ஸ்பூன்,
அலங்கரிக்க :
பிஸ்தா, பாதாம் - சிறிது.
செய்முறை
கடாயில் நெய் ஊற்றி கேரட் சேர்த்து மிதமான தீயில் வைத்து பச்சை வாசனை போக வதக்கி, ஒரு பாத்திரத்தில் கொட்டவும்.
பிஸ்தா, பாதாமை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
மீண்டும் அதே கடாயில் தேங்காய்த் துருவல் சேர்த்து வதக்கி சர்க்கரை சேர்த்து வதக்கவும்.
சர்க்கரை கரைந்து வரும்போது கேரட் துருவல் போட்டு வதக்கி சுருண்டு வரும்போது கோவா துருவல், ஏலக்காய்த்தூள் சேர்த்து நன்கு கிளறி பர்ஃபி பதத்திற்கு வந்ததும் நெய் தடவிய தட்டில் கொட்டி அதன் மேல் பொடியாக நறுக்கிய பாதாம், பிஸ்தாவை கொட்டி நன்றாக அழுத்தி விடவும். ஆறியதும் துண்டுகள் போட்டு அலங்கரித்து பரிமாறவும்.
இப்போது ராஜஸ்தான் ஸ்பெஷல் கேரட் கோவா பர்ஃபி ரெடி.
குறிப்பு: நெய் தேவையானால் 1 டீஸ்பூன் கடைசியாக சேர்க்கலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- டயட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இது.
- குழந்தைகளுக்கு சத்தானது இந்த ஸ்நாக்ஸ்.
தேவையான பொருட்கள்
பீட்ரூட் - 2,
பெரிய உருளைக்கிழங்கு - 1,
கொண்டைக் கடலை - 1 கப்,
வெங்காயம் - 1,
பச்சை மிளகாய் - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,
கொத்தமல்லித்தழை - சிறிது.
உப்பு, எண்ணெய் - தேவைக்கு,
செய்முறை
உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.
கொண்டைக் கடலையை 8 மணிநேரம் ஊற வைத்து குழையாமல் பதமாக வேகவைக்கவும்.
ப.மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி கடாயில் போட்டு லேசாக வதக்கவும்.
மிக்சியில் கொண்டைக்கடலையை கரகரப்பாக அரைத்து அதனுடன் வதக்கிய பீட்ரூட்டை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் அரைத்த பீட்ரூட் கலவை, மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய ப.மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி, வெங்காயம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு , உப்பு சேர்த்து நன்றாக கெட்டியாகப் பிசைந்து விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளவும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த டிக்கிகளை வைத்து மேலே சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து, விரும்பினால் மேலே முந்திரி பதித்து, சாட் மசாலா தூவி பரிமாறவும்.
இப்போது சூப்பரான பீட்ரூட் சென்னா டிக்கி ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- புளிச்சக்கீரையில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
- இன்று புளிச்சக்கீரையில் ஊறுகாய் செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
புளிச்சக்கீரை - 4 கட்டு,
வெந்தயம் - 1 டீஸ்பூன்,
தனியா - 1 டீஸ்பூன்,
பச்சை மிளகாய் - 4,
கடுகு உளுந்தம்பருப்பு - 3 டீஸ்பூன்,
எள் - 3 டீஸ்பூன்,
சீரகம் - 1 டீஸ்பூன்,
வற்றல் மிளகாய் - 4 அல்லது 5,
எண்ணெய், உப்பு - சுவைக்கேற்ப
செய்முறை
புளிச்சக்கீரை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு புளிச்சக் கீரையை போட்டு வதக்க வேண்டும்.
அடுத்து அதில் வெந்தயம், தனியா, எள், சீரகம், பச்சை மிளகாய் மற்றும் சுவைக்கேற்ப உப்பு சேர்த்து வதக்கி, ஆறியவுடன் அரைக்கவும்.
மற்றொரு வாணலியில் சிறிது எண்ணெய் விட்டு கடுகு, உளுத்தம் பருப்பு, காய்ந்த மிளகாயைச் சேர்த்து தாளித்த பின்னர் அரைத்த கோங்குரா பேஸ்ட்டை இதனுடன் சேர்த்து வதக்கினால் சுவையான கோங்குரா ஊறுகாய் ரெடியாகிவிடும்.
இதை இட்லி, தோசை, சப்பாத்தியுடன் சேர்த்து சாப்பிடலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- புளிச்சக்கீரயில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து நிறைந்தது.
- இந்த கீரை சாப்பிட்டால் மலச்சிக்கல் என்ற பேச்சுக்கே இடம் இருக்காது.
தேவையான பொருட்கள்
புளிச்சக்கீரை - 2 கப்,
தனியா தூள் - 1/2 டீஸ்பூன்,
மிளகாய்த்தூள் - 1/2 டீஸ்பூன்,
எண்ணெய் மற்றும் உப்பு - தேவையான அளவு,
வேர்க்கடலைத்தூள் - 1 டேபிள் ஸ்பூன்,
சர்க்கரை மற்றும் பெருங்காயம் - 1 சிட்டிகை,
கடுகு உளுந்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்.
செய்முறை
புளிச்சக்கீரையை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
வாணலியில் சிறிது எண்ணெய் ஊற்றி கடுகு, உளுத்தம் பருப்பை போட்டுத் தாளிக்க வேண்டும்.
அதில் தனியா மற்றும் மிளகாய் தூளைச் சேர்க்கவும்.
அதன்பின் அதோடு புளிச்சக்கீரையைப் போட்டு நன்றாக வதக்க வேண்டும்.
அடுத்து அதில் சிறிதளவு பெருங்காயம், சீனி, உப்பு சுவைக்கேற்ப சேர்க்க வேண்டும்.
புளிச்சக்கீரை நன்றாக வதக்கியதும் ஆறிய வைத்து மிக்ஸியில் போட்டு அரைத்து எடுத்தால் சுவையான கோங்குரா சட்னி ரெடியாகிவிடும்.
இந்தச் சட்னியை இட்லி, தோசையோடு சேர்த்து சாப்பிடலாம்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு இந்த கேக்சிக்கில்ஸ் ரொம்ப பிடிக்கும்.
- இந்த ரெசிபி செய்ய 30 நிமிடமே போதுமானது.
தேவையான பொருட்கள்:
கேக் (உங்களுக்கு விருப்பமானது) - 2 கப்
பட்டர் கிரீம் - 3 டேபிள் ஸ்பூன்
வெள்ளை சாக்லெட் - 1 கப்
சிலிக்கான் மோல்டு - 1
ஐஸ்கிரீம் குச்சிகள் - தேவைக்கேற்ப
செய்முறை:
ஒரு சிறிய பாத்திரத்தில் சாக்லெட்டை கொட்டவும்.
அதைவிட சற்று பெரிய பாத்திரத்தில் சிறிது தண்ணீர் ஊற்றி, அதில் சாக்லெட் இருக்கும் பாத்திரத்தை வைத்து தண்ணீரை சூடுப்படுத்தவும். தண்ணீரின் வெப்பத்தால் சாக்லெட் உருகியதும் அதை ஆறவைக்கவும்.
சிலிக்கான் மோல்டை ஈரப்பதம் இல்லாமல் சுத்தமாக துடைக்கவும். பின்பு அதில் உருக்கிய வெள்ளை சாக்லெட்டை 3 டீஸ்பூன் ஊற்றி, எல்லா பக்கமும் படியுமாறு மெதுவாக சுழற்றவும்.
பின்னர் ஐஸ்கிரீம் குச்சிகளை உருக்கிய சாக்லெட்டில் தோய்த்து மோல்டின் நடுப்பகுதியில் நுழைக்கவும். இது செட் ஆவதற்காக 10 முதல் 12 நிமிடங்கள் வரை குளிர்சாதனப் பெட்டியில் வைக்கவும்.
இப்போது கேக்கை தூளாக உதிர்த்துக்கொள்ளவும். பின்பு அதனுடன் சிறிது சிறிதாக பட்டர் கிரீமை சேர்த்து நன்றாகக் கலக்கவும். இந்தக் கலவை சப்பாத்தி மாவு பதத்தில் இருக்க வேண்டும்.
குளிர்சாதனப் பெட்டியில் வைத்திருக்கும் மோல்டை வெளியே எடுக்கவும்.
தயாரித்து வைத்திருக்கும் கேக் கலவையை, மோல்டில் இருக்கும் வெள்ளை சாக்லெட் மீது நிரப்பவும்.
பின்னர் அதன் மீது சிறிதளவு உருக்கிய வெள்ளை சாக்லெட்டை ஊற்றவும். (சாக்லெட் இறுகி இருந்தால் சில நிமிடம் மறுபடியும் சுடுநீரில் வைக்கவும்.) மீண்டும் 12 முதல் 15 நிமிடங்கள் வரை மோல்டை குளிர்சாதனப் பெட்டியில் வைத்து எடுக்கவும்.
இப்போது சுவையான கேக்சிக்கில்ஸ் தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பலாக்காய் வைத்து சமைக்கும் ரெசிபி இது.
- சப்பாத்தி, சாதம், தோசைக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்:
பலாக்காய் - 1 சிறியது
பிரியாணி இலை - 2
காய்ந்த மிளகாய் - 3
மிளகு - 1 டீஸ்பூன் (லேசாக இடித்தது)
பெருங்காயம் - ½ டீஸ்பூன்
மிளகாய்த் தூள் - 1 டீஸ்பூன்
மல்லித்தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - ½ டீஸ்பூன்
பெரிய வெங்காயம் - 1 நறுக்கியது
சின்ன வெங்காயம் - ½ கிலோ
பூண்டு - 20 பல்
இஞ்சி - 3 அங்குலத் துண்டு
எண்ணெய் - தேவையான அளவு
இளஞ்சூடான தண்ணீர் - தேவையான அளவு
உப்பு - தேவையான அளவு
கரம் மசாலாவுக்கு:
கருப்பு ஏலக்காய் - 2
பச்சை ஏலக்காய் - 3
ஜாதிக்காய் - 1
ஜாதிபத்திரி - 1
சீரகம் - 1 டீஸ்பூன்
சோம்பு - 1 டீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
கிராம்பு - 10
கல்பாசி - 2 கிராம்
பட்டை - 1
அன்னாசி பூ - 1
செய்முறை:
கரம் மசாலா தயாரிப்பதற்கு கொடுக்கப்பட்டிருக்கும் பொருட்களுடன் உப்பு சேர்த்து அரைத்துப் பொடியாக்கிக்கொள்ளவும்.
பலாக்காயை மேல்தோல் நீக்கி சிறு துண்டுகளாக நறுக்கி தண்ணீரில் போட்டு வைக்கவும். இதனால், பலாக்காயில் உள்ள பிசுபிசுப்பு குறையும், காய் கருத்துப் போகாமல் இருக்கும்.
இஞ்சி மற்றும் 10 பல் பூண்டை விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும், பிரியாணி இலை, பெருங்காயம், வெங்காயம் சேர்த்து பொன்னிறமாகும் வரை வதக்கவும்.
பின்பு சின்ன வெங்காயம், பலாக்காய் மற்றும் உப்பு சேர்த்து நன்றாகக் கிளறி வாணலியை மூடி வைக்கவும்.
10 நிமிடங்கள் கழித்து வாணலியைத் திறந்து, இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கிளறவும்.
3 நிமிடங்களுக்குப் பிறகு 200 மில்லி இளஞ்சூடான தண்ணீரைச் சேர்த்துக் கிளறி, வாணலியை மூடி வைக்கவும்.
பத்து நிமிடங்களுக்குப் பின்னர், தோலுடன் கூடிய 10 பல் பூண்டு, அரைத்த கரம் மசாலா, கருப்பு மிளகு, காய்ந்த வற்றல், மிளகாய்த் தூள், மல்லித்தூள் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து நன்றாகக் கிளறவும்.
இப்போது 300 மில்லி இளஞ்சூடான தண்ணீரைச் சேர்த்து அதிகமான தீயில் 8 நிமிடங்கள் வரை கொதிக்க வைக்கவும்.
பின்பு குறைந்த அளவு தீயில் 25 நிமிடங்கள் வரை கொதிக்க வைத்து, அவ்வப்போது கிளறி விடவும்.
கலவையில் இருந்து எண்ணெய் பிரிந்து வரும் நிலையில், அடுப்பை அணைத்து நன்றாகக் கிளறி இறக்கவும். சுவையான கதல் மசாலா தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- புடலங்காயில் கூட்டு, பொரியல் செய்து சாப்பிட்டிருப்பீர்கள்.
- இன்று புடலங்காயில் சூப்பரான பஜ்ஜி செய்து சாப்பிடலாம்.
தேவையான பொருட்கள்
புடலங்காய் - 1
கடலை மாவு - 1 கப்
அரிசி மாவு - 1/2 கப்
மிளகாய் தூள் - 1 டீஸ்பூன்
மஞ்சள் தூள் - 1 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/2 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு
செய்முறை:
புடலங்காயின் தோலை நீக்கிவிட்டு, அதனை வட்ட வட்டமாக வெட்டி, அதனுள் உள்ள விதைகளை நீக்கி விட வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கடலை மாவு, அரிசி மாவு, மிளகாய் தூள், மஞ்சள் தூள், பெருங்காயத்தூள், உப்பு சேர்த்து தேவையான அளவு தண்ணீர் சேர்த்து பஜ்ஜி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், வெட்டி வைத்த புடலங்காயை பஜ்ஜி மாவில் பிரட்டி எண்ணெயில் போட்டு பொன்னிறமாக பொரித்து எடுத்தால், புடலங்காய் பஜ்ஜி ரெடி!!!
கொத்தமல்லி அல்லது தக்காளி சட்னியுடன் சேர்த்து சாப்பிடலாம். குழந்தைகள் மிகவும் விரும்பி சாப்பிடும் உணவிது.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- உடல் பருமனைக் குறைக்க பச்சை பயறு பெரிதும் உதவியாக இருக்கும்.
- கொத்தமல்லி வயிற்றில் ஏற்படும் தொல்லைகளுக்கு தீர்வு தரும்.
தேவையான பொருட்கள் :
பச்சைப் பயறு - 100 கிராம்
பச்சரிசி - ஒரு கைப்பிடி அளவு
கொத்தமல்லித்தழை - தேவையான அளவு
சீரகம் - 2 சிட்டிகை
பச்சை மிளகாய் - ஒன்று
எண்ணெய், உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
பச்சைப் பயறு, பச்சரிசியை நன்றாக கழுவி இரண்டு மணி நேரம் ஊறவைக்கவும்.
கொத்தமல்லியை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
ஊறவைத்த அரிசி, பயிருடன் கொத்தமல்லித்தழை, பச்சை மிளகாய், உப்பு, சீரகம் சேர்த்து மிக்ஸியில் சற்று கொரகொரப்பாக அரைத்து கொள்ளவும்.
அரைத்த மாவை தோசை மாவைக் காட்டிலும் சிறிது தண்ணீர் அதிகம் சேர்த்துக் கரைக்கவும்.
தோசைக்கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவைத் தோசைகளாக ஊற்றி, சுற்றிலும் எண்ணெய்விட்டு இரண்டு பக்கமும் சிவந்ததும் எடுக்கவும்.
இப்போது சத்தான சுவையான பச்சைப் பயறு கொத்தமல்லி பெசரட் ரெடி.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வீட்டில் மீந்து போன இட்லி மாவைக் கொண்டு குணுக்கு செய்யலாம்.
- இந்த குணுக்கு போண்டா போன்று இருக்கும்.
தேவையான பொருட்கள்:
இட்லி மாவு - 1 பெரிய கப்
மைதா - 2 டேபிள் ஸ்பூன்
சமையல் சோடா - 1 சிட்டிகை
பெரிய வெங்காயம் - 1 (பொடியாக நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2 (நறுக்கியது)
கறிவேப்பிலை - சிறிது
கடுகு - 1/2 டீஸ்பூன்
பெருங்காயத் தூள் - 1/4 டீஸ்பூன்
உப்பு, எண்ணெய் - தேவையான அளவு (பொரிப்பதற்கு)
செய்முறை:
வெங்காயம், ப.மிளகாயை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
ஒரு பாத்திரத்தில் இட்லி மாவு, மைதா சேர்த்து, அத்துடன் வேண்டுமானால் சிறிது தண்ணீர் ஊற்றி இட்லி மாவு பதத்திற்கு கலந்து கொள்ள வேண்டும்.
அடுத்து அதில் சமையல் சோடா, வெங்காயம், பச்சை மிளகாய், உப்பு, கறிவேப்பிலை சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டீஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், கடுகு மற்றும் பெருங்காயத் தூள் சேர்த்து தாளித்து, மாவில் சேர்த்து நன்கு கலந்து கொள்ள வேண்டும்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் ஒரு சிறு கரண்டியில் மாவை எடுத்து, எண்ணெயில் ஊற்றி பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும்.
இப்போது சூப்பரான மாலை நேர ஸ்நாக்ஸ் குணுக்கு ரெடி!!!
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இஞ்சி வயிற்றில் தங்கியுள்ள கொழுப்பைக் கரைக்கும்.
- இஞ்சி துவையல் சாப்பிட மலச்சிக்கல், மார்பு வலி தீரும்.
தேவையான பொருட்கள்
இஞ்சி - 250 கிராம்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 7
காய்ந்த மிளகாய் - 6
புளி - 2 துண்டு
வெல்லம் - 1 துண்டு
துருவிய தேங்காய் - 2 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை - 1/2 கப்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
தாளிக்க
உளுத்தம் பருப்பு - 1/4 டீஸ்பூன்
சீரகம் - 1/4 டீஸ்பூன்
கடுகு - 1/4 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 1
பெருங்காய தூள் - 1 சிட்டிகை
கறிவேப்பில்லை - சிறிதளவு
எண்ணெய் - 1 டீஸ்பூன்
செய்முறை:
* இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்
* கடாயில் இஞ்சி, வெங்காயம், பச்சை மிளகாய், காய்ந்த மிளகாய் , புளி துண்டு சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
* வெங்காயம் பாதி வதங்கியதும், இதில் தேங்காய் மற்றும் கொத்தமல்லி சேர்த்து 1 நிமிடம் வதக்கவும்.
* இதில் உப்பு சேர்த்து கிளறி, ஆறவிடவும்.
* ஆறிய கலவையை, மிக்ஸியில் போட்டு சிறிது தண்ணீர் சேர்த்து அரைக்கவும்.
* தாளிப்பு கரண்டியில், எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, சீரகம், கடுகு, காய்ந்த மிளகாய், பெருங்காய தூள் மற்றும் கறிவேப்பில்லை சேர்த்து தாளித்து சட்னி மேல் ஊற்றவும்.
* இப்போது சுவையான இஞ்சி சட்னி தயார்.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பள்ளியில் இருந்து வரும் குழந்தைகளுக்கு இதை கொடுக்கலாம்.
- குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஸ்நாக்ஸ் இது.
தேவையான பொருட்கள்
பிரெட் டோஸ்ட் செய்ய
பிரெட் துண்டுகள் - 5
எண்ணெய் - 3 தேக்கரண்டி
சில்லி பிரெட் செய்ய
பூண்டு - 5 பல்
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 2
வெங்காயம் - 1
குடைமிளகாய் - 1
வெங்காயத்தாள் வெங்காயம் - 1 மேசைக்கரண்டி
கொத்தமல்லி இலை -சிறிதளவு
மிளகு தூள் - 1/2 தேக்கரண்டி
வினிகர் - 1 தேக்கரண்டி
சோயா சாஸ் - 2 தேக்கரண்டி
மிளகாய் விழுது - 1 மேசைக்கரண்டி
தக்காளி கெட்சப் - 2 மேசைக்கரண்டி
சோளமாவு - 1 1/2 தேக்கரண்டி
தண்ணீர் - 1/4 கப்
வெங்காயத்தாள் - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - 3 தேக்கரண்டி
செய்முறை:
வெங்காயம், பூண்டு, ப.மிளகாய், இஞ்சி, குடைமிளகாய், வெங்காயத்தாள்,கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
சில்லி பேஸ்ட் செய்ய மிளகாயை தண்ணீரில் வேகவைத்து, ஆறவிட்டு நன்கு விழுதாக அரைக்கவும்.
பிரெட்டின் ஓரங்களை வெட்டி விட்டு சிறு துண்டுகளாக நறுக்கவும்.
ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பிரெட்டை சேர்த்து மிதமான தீயில் பொன்னிறமாக டோஸ்ட் செய்யவும்.
ஒரு பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் நறுக்கிய பூண்டு, இஞ்சி, பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
பிறகு நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய் சேர்த்து 5 நிமிடம் வதக்கவும்.
பின்பு உப்பு, மிளகு தூள் சேர்த்து கலந்து விடவும்.
அடுப்பை குறைந்த தீயில் வைத்து வினிகர், சோயா சாஸ், அரைத்த மிளகாய் விழுது, தக்காளி கெட்சப் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
பிறகு நறுக்கிய வெங்காயத்தாள் வெங்காயம் சேர்த்து கலந்த பின்னர் தண்ணீர் சேர்த்து வேகவிடவும்.
சோளமாவு, தண்ணீர் இரண்டையும் சேர்த்து கட்டியின்றி கரைத்து கடாயில் சேர்க்கவும்.
அடுத்து டோஸ்ட் செய்த பிரெட்டை சேர்த்து நன்கு கலந்து விடவும்.
இறுதியாக நறுக்கிய வெங்காயத்தாள், கொத்தமல்லி இலை சேர்த்து கலந்து விட்டு உடனே பரிமாறவும்.
காரமான சில்லி பிரெட் தயார்!
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health






