search icon
என் மலர்tooltip icon

    சமையல்

    சத்தான சுவையான பீட்ரூட் சென்னா டிக்கி
    X

    சத்தான சுவையான பீட்ரூட் சென்னா டிக்கி

    • டயட்டில் இருப்பவர்களுக்கு ஆரோக்கியமான ஸ்நாக்ஸ் இது.
    • குழந்தைகளுக்கு சத்தானது இந்த ஸ்நாக்ஸ்.

    தேவையான பொருட்கள்

    பீட்ரூட் - 2,

    பெரிய உருளைக்கிழங்கு - 1,

    கொண்டைக் கடலை - 1 கப்,

    வெங்காயம் - 1,

    பச்சை மிளகாய் - 2,

    இஞ்சி - சிறிய துண்டு,

    கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு - தலா 1/2 டீஸ்பூன்,

    கொத்தமல்லித்தழை - சிறிது.

    உப்பு, எண்ணெய் - தேவைக்கு,

    செய்முறை

    உருளைக்கிழங்கை வேகவைத்து தோல் நீக்கி மசித்து கொள்ளவும்.

    கொண்டைக் கடலையை 8 மணிநேரம் ஊற வைத்து குழையாமல் பதமாக வேகவைக்கவும்.

    ப.மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பீட்ரூட்டை தோல் நீக்கி துருவி கடாயில் போட்டு லேசாக வதக்கவும்.

    மிக்சியில் கொண்டைக்கடலையை கரகரப்பாக அரைத்து அதனுடன் வதக்கிய பீட்ரூட்டை சேர்த்து ஒரு சுற்று சுற்றி எடுத்துக் கொள்ளவும்.

    ஒரு பாத்திரத்தில் அரைத்த பீட்ரூட் கலவை, மசித்த உருளைக்கிழங்கு, பொடியாக நறுக்கிய ப.மிளகாய், கொத்தமல்லித்தழை, இஞ்சி, வெங்காயம், கரம் மசாலாத்தூள், மிளகாய்த்தூள், சோம்பு , உப்பு சேர்த்து நன்றாக கெட்டியாகப் பிசைந்து விருப்பமான வடிவத்தில் செய்து கொள்ளவும்.

    தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் செய்து வைத்த டிக்கிகளை வைத்து மேலே சிறிது எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் வைத்து இரண்டு பக்கமும் வெந்ததும் எடுத்து, விரும்பினால் மேலே முந்திரி பதித்து, சாட் மசாலா தூவி பரிமாறவும்.

    இப்போது சூப்பரான பீட்ரூட் சென்னா டிக்கி ரெடி.

    லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health

    Next Story
    ×