என் மலர்
சமையல்
- இந்த கீரையை பச்சையாக உண்ணுதல் மிகவும் நல்லது.
- வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.
தேவையான பொருட்கள் :
வல்லாரைக்கீரை - அரை கட்டு,
தக்காளி, வெங்காயம் - தலா ஒன்று,
இஞ்சி - சிறிய துண்டு (சுத்தம் செய்து கொள்ளவும்),
தேங்காய் துருவல், - கால் கப்,
பச்சை மிளகாய் - 5,
கடுகு, உளுத்தம்பருப்பு - தலா கால் டீஸ்பூன்,
பெருங்காயத்தூள் - ஒரு சிட்டிகை,
எண்ணெய் - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவைக்கேற்ப.
செய்முறை:
வல்லாரைக்கீரையை முள் நீக்கி விட்டு நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும்.
வெங்காயம், தக்காளி, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
வாணலியில் சிறிதளவு எண்ணெய் ஊற்றி சூடானதும் வல்லாரைக்கீரை, நறுக்கிய தக்காளி, வெங்காயம், பச்சை மிளகாய், இஞ்சி, தேங்காய் துருவல் என ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
ஆறியபின் உப்பு சேர்த்து, சிறிதளவு தண்ணீர் விட்டு அரைக்கவும்.
மீதமுள்ள எண்ணெயில் கடுகு, உளுத்தம்பருப்பு, பெருங்காயம் தாளித்து, அரைத்த விழுதில் சேர்க்கவும்.
சத்தான சுவையான வல்லாரை சட்னி ரெடி.
குறிப்பு: வல்லாரைக் கீரை மூளையை சுறுசுறுப்பாக்கும். நினைவாற்றலை வளர்க்கும். வல்லாரைக் கீரை சமைக்கும்போது புளி சேர்த்தால், அதன் பலன் முழுமையாக கிடைக்காது.
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- மீனில் பல்வேறு ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
- சூடான சாதத்துடன் சாப்பிட சூப்பராக இருக்கும்.
தேவையான பொருட்கள்
வஞ்சரம் மீன் - அரை கிலோ
தேங்காய் பால் - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி - 2
பூண்டு - 1
இஞ்சி - சிறிய துண்டு
பச்சை மிளகாய் - 4
மஞ்சள் தூள் - 1/4 தேக்கரண்டி
மிளகாய் தூள் - 1 தேக்கரண்டி
மல்லி தூள் - 1 தேக்கரண்டி
சீரக தூள் - 1 தேக்கரண்டி
கடுகு - 1 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
கல் உப்பு - 1 தேக்கரண்டி
தேங்காய் எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை
* மீனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.
* தக்காளி, வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* பூண்டு, இஞ்சியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* ஒரு கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி சூடானதும் அதில் கடுகு போட்டு தாளித்த பின்னர் பொடியாக நறுக்கிய வெங்காயம், பூண்டு பற்கள், மெலிதாக நறுக்கிய இஞ்சி, கீறிய பச்சை மிளகாய் மற்றும் கறிவேப்பிலை சேர்த்து நன்கு வதக்கவும்.
* வெங்காயத்தை நன்கு வதக்கிய பின்பு அதில் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்து குழைய வதக்கவும்.
* தக்காளி குழைய வதங்கியதும் அதனுடன் கல் உப்பு, மஞ்சள் தூள், மிளகாய் தூள், மல்லி தூள், சீரக தூள், மற்றும் அரை கப் தண்ணீர் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்
* குழம்பு கொதித்தவுடன் மீன் துண்டுகளை சேர்த்து வேக வைக்கவும்.
* மீன் வெந்த உடன் தேங்காய் பாலை சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.
* சுவையான மற்றும் வித்தியாசமான தேங்காய் பால் மீன் குழம்பு தயார்
லைஃப்ஸ்டைல் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த குழம்பு தோசை, இட்லிக்கு தொட்டுக்கொள்ள சூப்பராக இருக்கும்.
- இதில் காய்கறிகள் சேர்த்து செய்வதால் ஆரோக்கியமானதும் கூட.
தேவையான பொருட்கள்
தேங்காய் - 1
உருளைக்கிழங்கு - 4
கத்திரிக்காய் - 4
முருங்கைக்காய் - 1
எலுமிச்சை - 1/2
பூண்டு - 1
ப.மிளகாய் - 4
மல்லி - 2 டீஸ்பூன்
சீரகம் - 2 டீஸ்பூன்
சோம்பு - 1/2 டீஸ்பூன்
பட்டை - 1
கிராம்பு - 2
ஏலக்காய் - 2
கறிவேப்பிலை - சிறிது
எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
உருளைக்கிழங்கு, கத்தரிக்காய், முருங்கைக்காயை துண்டுகளாக நறுக்கிகொள்ளவும்.
மிக்ஸியில் மிளகாய், மல்லி, சீரகம் ஆகியவற்றை சேர்த்து, தண்ணீர் ஊற்றி பேஸ்ட் செய்து கொள்ள வேண்டும்.
பின்னர் தேங்காயை துருவி, மிக்ஸியில் போட்டு, சிறிது தண்ணீர் ஊற்றி நன்கு அரைத்து, வடிகட்டி பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
பின் மீண்டும் அதில் தண்ணீர் ஊற்றி, தனியாக ஒரு பாத்திரத்தில் இரண்டாவது பால் எடுத்துக் கொள்ள வேண்டும்.
இரண்டாவது பாலில் அரைத்து வைத்துள்ள பேஸ்ட்டை சேர்த்து கலந்து கொள்ள வேண்டும்.
பின்பு அதில் நறுக்கிய காய்கறிகளை சேர்த்து, உப்பு தூவி, அடுப்பில் வைத்து வேக வைக்க வேண்டும்.
காய்கறிகளானது வெந்ததும், அதில் முதல் தேங்காய் பாலை ஊற்றி, மஞ்சள் தூள் சேர்த்து கொதிக்க விட வேண்டும்.
பிறகு மற்றொரு அடுப்பில் ஒரு வாணலியை வைத்து, அதில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், சோம்பு, பட்டை, கிராம்பு, ஏலக்காய், கறிவேப்பிலை சேர்த்து தாளித்து, பின் குழம்பில் கொட்ட வேண்டும்.
இறுதியில் அதில் எலுமிச்சையை பிழிந்து இறக்கினால், தேங்காய் பால் குழம்பு ரெடி!!!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பிள்ளைகளுக்கு மதிய உணவிற்கு இதை செய்து கொடுக்கலாம்.
- 20 நிமிடத்தில் இந்த ரெசிபியை செய்து முடிக்கலாம்.
தேவையான பொருட்கள் :
பாசுமதி அரிசி - 2 கப்
பன்னீர் - 200 கிராம்
புதினா - 1 கட்டு
கிராம்பு - 4
பட்டை - 1 இன்ச்
வெங்காயம் - 2
பச்சை மிளகாய் - 3
இஞ்சி பூண்டு பேஸ்ட் - 1 டீஸ்பூன்
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு
தண்ணீர் - 4 கப்
செய்முறை :
பன்னீரை துண்டுகளாக வெட்டி கொள்ளவும்.
வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளுங்கள்.
புதினாவை நன்றாக கழுவி, மிக்ஸியில் போட்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு நைசாக அரைத்துக் கொள்ளுங்கள்.
அரிசியை நன்கு கழுவி உதிரியாக வடித்து வைத்துக்கொள்ளுங்கள்.
ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில் 1 டேபிள் ஸ்பூன் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், நறுக்கி வைத்துள்ள பன்னீர் துண்டுகளை 3 நிமிடம் வறுத்து தனியாக வைத்துக் கொள்ள வேண்டும்.
அதே வாணலியில் சிறிது எண்ணெய் சேர்த்து காய்ந்ததும், பட்டை மற்றும் கிராம்பு சேர்த்து தாளித்த பின் நறுக்கிய வெங்காயம் சேர்த்து, பொன்னிறமாக வரும் வரை வதக்குங்கள்.
வெங்காயம் நன்றாக வதங்கியதும், அரைத்து வைத்திருக்கின்ற புதினா மற்றும் உப்பு சேர்த்து 2 நிமிடம் வதக்குங்கள்.
புதினா பச்சை வாசனை போனவுடன் இறுதியில் வறுத்து வைத்துள்ள பன்னீர் துண்டுகள் மற்றும் வடித்து வைத்துள்ள சாதத்தை சேர்த்து, மீண்டும் 5 நிமிடம் பிரட்டி, இறக்கி விட வேண்டும்.
தற்போது சுவை நிறைந்த புதினா பன்னீர் புலாவ் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு உருளைக்கிழங்கு மிகவும் பிடிக்கும்.
- உருளைக்கிழங்கில் பல்வேறு ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள்
செட்டிநாடு மசாலா தூள் செய்ய
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் - 5
மிளகு - 1 தேக்கரண்டி
உருளைக்கிழங்கு ப்ரை செய்ய
பேபி உருளைக்கிழங்கு - கால் கிலோ
வெங்காயம் - 2
உளுத்தம் பருப்பு - 1/2 தேக்கரண்டி
கடலை பருப்பு - 1/2 தேக்கரண்டி
சீரகம் - 1/4 தேக்கரண்டி
கடுகு - 1/4 தேக்கரண்டி
பெருங்காய தூள் - 1/4 தேக்கரண்டி
கறிவேப்பிலை - சிறிதளவு
உப்பு , எண்ணெய் - தேவையான அளவு
செய்முறை:
* பேபி உருளைக்கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைத்து கொள்ளவும்.
* வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
* கடாயை அடுப்பில் வைத்து உளுத்தம் பருப்பு, சிவப்பு மிளகாய், மிளகு ஆகியவற்றை சேர்த்து பொன்னிறமாக மாறும் வரை வறுத்து ஆறவைத்து மிக்சியில் போட்டு பொடித்துகொள்ளவும். செட்டிநாடு மசாலா தூள் தயார்.
* அடுத்து பானில் எண்ணெய் ஊற்றி சூடானதும் உளுத்தம் பருப்பு, கடலை பருப்பு, சீரகம், கடுகு, பெருங்காய தூள் போட்டு தாளித்த பின்னர் வெங்காயம், கறிவேப்பிலை சேர்த்து வதக்கவும்.
* வெங்காயம் வதங்கியதும், வேகவைத்த சிறிய உருளைக்கிழங்கு, உப்பு, செட்டிநாடு மசாலா தூள் சேர்த்து உருளைக்கிழங்கு மசாலா தூளுடன் நன்கு கலக்கும் வரை வதக்கவும்.
* இப்போது சூப்பரான செட்டிநாடு உருளைக்கிழங்கு ப்ரை தயார்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகள் தினமும் வெரைட்டியாக சாப்பிட ஆசைப்படுவாங்க.
- குழந்தைகளுக்கு இந்த தோசையை செய்து கொடுத்தால் மிச்சம் வைக்காமல் சாப்பிடுவார்கள்.
தேவையான பொருட்கள்:
தோசைமாவு - தேவையான அளவு
பன்னீர் - 2 கப்
குடை மிளகாய் - 1
வெங்காயம் - 1
தக்காளி - 1
பச்சை மிளகாய் - 1
மஞ்சள்தூள் - 1/2 டீ ஸ்பூன்
சீரகத்தூள் - 1 டீ ஸ்பூன்
மிளகாய் தூள் - 1 டீ ஸ்பூன்
கரம் மசாலா - 1 டீ ஸ்பூன்
பட்டர் - தேவையான அளவு
கொத்தமல்லித்தழை, புதினா - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
நெய் - தேவையான அளவு
செய்முறை:
வெங்காயம், தக்காளி, ப.மிளகாய், கொத்தமல்லியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.
பன்னீரை துருவிக் கொள்ளவும்.
ஒரு கடாயை அடுப்பில் வைத்து பட்டர் சேர்த்து உருகியதும் வெங்காயம், பச்சை மிளகாய், குடை மிளகாய் சேர்த்து நன்கு சாஃப்ட் ஆகும் வரை வதக்க வேண்டும்.
பிறகு, அதில் தக்காளி சேர்த்து வதங்கியதும் மஞ்சள் தூள், சீரகத்தூள், மிளகாய் தூள், கரம் மசாலா வதக்கி கொள்ள வேண்டும்.
இப்பொழுது அதில், துருவிய பன்னீரை சேர்த்து கொள்ளலாம்.
தேவையான அளவு உப்பு மற்றும் கொத்தமல்லித்தழை, புதினா சேர்த்து வதக்க வேண்டும். இப்பொழுது பன்னீர் மசாலா ரெடியாகி விட்டது. இதை தனியே வைத்துக் கொள்ள வேண்டும்.
தோசை கல்லை அடுப்பில் வைத்து சூடானதும் மாவை எடுத்து தோசை போல் ஊற்றி அதன் மேல் நெய் சேர்த்து நன்கு மொறு மொறுப்பாகும் வரை வேக விட வேண்டும்.
இப்பொழுது தோசையின் மேல் பன்னீர் மசாலாவை சேர்க்க வேண்டும். அதன் மேல் சிறிது பட்டர் வைத்துக் கொள்ளலாம். தோசை வெந்ததும் இரண்டாக மடித்து தட்டில் மாற்ற வேண்டும்.
இப்போது சூப்பரான பன்னீர் மசாலா தோசை ரெடி.
இதனுடன் தேங்காய் சட்னி சேர்த்து பரிமாறினால் நன்றாக இருக்கும்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- இந்த சட்னி செய்ய 15 நிமிடங்களே போதுமானது.
- இன்று இந்த சட்னி செய்முறையை பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
வெங்காயம் - 1
தக்காளி - 1
பூண்டு - 4 பற்கள்
காய்ந்த மிளகாய் -5
இஞ்சி - சிறிய துண்டு
கறிவேப்பிலை - 2 ஆர்க்கு
புதினா - சிறிதளவு
கொத்தமல்லி இலை - சிறிதளவு
புளி - 1/2 தேக்கரண்டி
துருவிய தேங்காய் - 1/4 கப்
உப்பு - தேவைக்கேற்ப
எண்ணெய் - 2 தேக்கரண்டி
தாளிக்க
எண்ணெய் - 1 தேக்கரண்டி
கடுகு - 1/2 தேக்கரண்டி
உளுத்தம் பருப்பு - 2 தேக்கரண்டி
செய்முறை
வெங்காயம், தக்காளியை நறுக்கி வைக்கவும்.
இஞ்சியை தோல் நீக்கி வைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி சூடானதும் சிகப்பு மிளகாயை போட்டு வறுத்த பின்னர் வெங்காயம், தக்காளி, பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்தமல்லி, புதினா, புளி என்று ஒவ்வொன்றாக சேர்த்து வதக்கவும்.
அடுத்து அதில் துருவிய தேங்காய் சேர்த்து 5 நிமிடம் வதக்கி பின் இறக்கி ஆற வைக்கவும்.
அனைத்து நன்றாக ஆறிய பின்னர் மிக்சியில் போட்டு உப்பு சேர்த்து அரைத்து கொள்ளவும். தேவைப்பட்டால் சிறிது தண்ணீர் சேர்க்கலாம்.
கடாயில் எண்ணெய் ஊற்றி சூடானதும் கடுகு, உளுத்தம் பருப்பு தாளித்து, அரைத்த சட்னியில் சேர்த்து கலந்து பரிமாறவும்.
சூப்பரான கதம்ப சட்னி ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு இந்த ஸ்நாக்ஸ் மிகவும் பிடிக்கும்.
- சொஜ்ஜி அப்பம் என்பது பூரி போன்ற இனிப்பு உணவு.
தேவையான பொருட்கள்
ரவை - 1 கப்
மைதா - 1 கப்
துருவிய தேங்காய் - 1 கப்
சர்க்கரை - ஒன்றரை கப்
எண்ணெய் - பொரிக்கத் தேவையான அளவு
உப்பு - சிட்டிகை
நெய் - 1 டீஸ்பூன்
செய்முறை
வெறும் வாணலியில் ரவையை லேசான தீயில் வறுத்தெடுத்துக்கொள்ளுங்கள்.
மற்றொரு பாத்திரத்தில் மைதா, உப்பு, நெய் மற்றும் தண்ணீர் சேர்த்து பூரி மாவு பதத்துக்குப் பிசைந்து இரண்டு மணிநேரம் ஊறவிடுங்கள்.
இப்போது வறுத்த ரவையுடன் ஒன்றரை கப் தண்ணீர் சேர்த்து ரவையை வேகவிடுங்கள்.
ரவை வெந்ததும் துருவிய தேங்காய், சர்க்கரை சேர்த்து கிளறி இறக்கிவைத்துவிடுங்கள். ரவை ஆறியதும் எலுமிச்சைப் பழ அளவு உருண்டைகளை உருட்டிக்கொள்ளுங்கள்.
இப்போது பிசைந்து வைத்துள்ள மைதா மாவைச் சிறு உருண்டைகளாகத் திரட்டி அதன் நடுவில் ரவை பூரணத்தை வைத்து மூடி மீண்டும் பூரியாகத் திரட்டுங்கள்.
வாணலியில் எண்ணெய் சூடானதும் திரட்டிவைத்துள்ள சொஜ்ஜி அப்பத்தை போட்டு பொரித்தெடுத்துப் பரிமாறுங்கள்.
இப்போது சூப்பரான ஸ்நாக்ஸ் சொஜ்ஜி அப்பம் ரெடி.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பலவகை ரசங்களைப் பற்றி கேள்விப்பட்டிருப்போம்.
- அகத்திக்கீரை ரசம் சுவையிலும் மணத்திலும் தனித்துவம் மிக்கது.
தேவையான பொருட்கள்
அகத்திக்கீரை - 1 கட்டு
சீரகம், தனியா - தலா 1 டீஸ்பூன்
காய்ந்த மிளகாய் - 3
சின்ன வெங்காயம் - 1 கைப்பிடி
தேங்காய் - 2 சில்லு
புளி - எலுமிச்சை அளவு
உப்பு, நல்லெண்ணெய் - தேவைக்கு
கடுகு, கறிவேப்பிலை - சிறிதளவு
செய்முறை
அகத்திக்கீரையை நன்றாக சுத்தம் செய்து கொதிக்கும் தண்ணீரில் வேகவைத்து, தண்ணீரை வடிக்கவும்.
சீரகம், தனியா, காய்ந்த மிளகாய், சின்னவெங்காயம், தேங்காய் இவற்றை ஒன்றாகச் சேர்த்து அரைக்கவும்.
புளியை சிறிதளவு தண்ணீரில் ஊறவைத்து கரைக்கவும்.
வாணலியில் சிறிதளவு நல்லெண்ணெய் விட்டு காய்ந்ததும், கடுகு, கறிவேப்பிலை சேர்த்து தாளித்த பின்னர் அதில் புளிக்கரைசலை ஊற்றி கொதிக்கவிடவும்.
வேகவைத்த கீரை, மசாலா விழுதைச் சேர்த்து தேவையான அளவு உப்பு, தண்ணீர் சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவும்.
இப்போது சூப்பரான சத்தான அகத்திக்கீரை ரசம் ரெடி.
பெண்களுக்கு தாய்ப்பால் ஊற, இந்த ரசத்தைத்தான் கொடுப்பார்கள்.
இந்த ரசத்தை சூப் போன்றும் குடிக்கலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- குழந்தைகளுக்கு சத்தான ஸ்நாக்ஸ் கொடுக்க விரும்பினால் இதை செய்து கொடுக்கலாம்.
- இந்த அல்வா செய்முறையை பார்க்கலாம்.
தேவையானபொருட்கள் :
விதை நீக்கிய பேரீச்சம்பழம் - 100 கிராம்,
கர்ஜூர் (Khajur )- 8 (விதை நீக்கியது),
நெய் - 100 கிராம்,
எண்ணெய் - 50 மில்லி,
சர்க்கரை - 250 கிராம்,
டூட்டி ஃப்ரூட்டி - 50 கிராம்,
முந்திரி, திராட்சை - தலா 25 கிராம்,
வெள்ளரி விதை - ஒரு டீஸ்பூன்.
செய்முறை :
பேரீச்சை, கர்ஜூர் இரண்டையும் முதல் நாள் இரவே மூழ்கும் அளவு நீர் விட்டு ஊறவைத்து, மறுநாள் அந்த நீருடன் நைஸாக அரைக்கவும்.
நெய் - எண்ணெயை ஒன்றாக சேர்க்கவும்.
வாணலியில் சர்க்கரை, அரைத்த விழுது சேர்த்து கிளறவும் (முதலில் அது இளகும். பயப்பட வேண்டாம்). அவ்வப்போது நெய் - எண்ணெய் கலவை சேர்த்து நன்கு கிளறவும்.
ஒட்டாமல் வரும்போது முந்திரி, திராட்சை, வெள்ளரி விதை, டூட்டி ஃப்ரூட்டி சேர்த்து இறக்கவும்.
சூப்பரான சத்தான ட்ரை ஃப்ரூட் அல்வா ரெடி.
இதை அப்படியேவும் கொடுக்கலாம். அல்லது நெய் தடவிய தட்டில் கொட்டி ஆறியதும் துண்டுகளாக வெட்டியும் கொடுக்கலாம். இதை ஒரு வாரம் வரை பிரிட்ஜில் வைத்திருந்து சாப்பிடலாம்.
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- பன்னீரில் அதிகம் கால்சியம் இருப்பதால் பற்கள், எலும்புகளை வலுவாக்க உதவும்.
- பன்னீரில் அதிகளவு ஊட்டச்சத்துக்களும், கலோரிகள் குறைவாகவும் உள்ளது.
தேவையான பொருட்கள் :
பன்னீர் - 200 கிராம்,
பெரிய வெங்காயம் -3,
தக்காளி - 4,
இஞ்சி, பூண்டு விழுது - 1 டேபிள் ஸ்பூன்,
மிளகாய்த் தூள் - 2 டேபிள் ஸ்பூன்,
தனியா தூள் - 1 டீஸ்பூன்,
கரம் மசாலா தூள் - அரை டீஸ்பூன்,
வெண்ணெய் - 50 கிராம்,
ஃப்ரெஷ் கிரீம் - 2 டேபிள் ஸ்பூன்
காய்ந்த வெந்தயக் கீரை - 2 டீஸ்பூன்,
உப்பு - தேவையான அளவு
செய்முறை:
பன்னீரை சிறு துண்டுளாக வெட்டிக்கொள்ளவும்.
வெங்காயம், தக்காளியைத் தனித்தனியே அரைத்து கொள்ளவும்.
வாணலியில் வெண்ணெயைப் போட்டு உருகியதும் அதில் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் சற்று வதங்கியதும் இஞ்சி, பூண்டு விழுதைச் சேர்த்து, தீயை 'ஸிம்'மில் வைத்து பச்சை வாசனை போகும் வரை வதக்குங்கள்.
பின்னர், அதனுடன் மிளகாய்த் தூள், தனியா தூள், தக்காளி விழுது சேர்த்து, கொதிக்கவிடுங்கள்.
கடைசியாக, பன்னீர் துண்டுகள், கரம் மசாலா, உப்பு, காய்ந்த வெந்தயக் கீரை சேர்த்து 5 நிமிடம் கிளறி இறக்குங்கள்.
ஃப்ரெஷ் கிரீமை மேலாக ஊற்றிப் பரிமாறுங்கள்.
குழந்தைகள் விரும்பும் சத்தான சைடிஷ், இந்த பன்னீர் பட்டர் மசாலா!
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health
- வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே இந்த ரெசிபியை செய்யலாம்.
- கோதுமை மாவில் வித்தியாசமான ருசியான ரெசிபிகளை செய்யலாம்.
தேவையான பொருட்கள் :
கோதுமை மாவு - 1 கப்
வெல்லம் - 1/2 கப்
அரிசி மாவு - 2 டேபிள் ஸ்பூன்
கனிந்த வாழைப்பழம் - 2
ஏலக்காய் பொடி - 1 சிட்டிகை
சமையல் சோடா - 1/4 டீஸ்பூன்
உப்பு - 1 சிட்டிகை
எண்ணெய் - பொரிப்பதற்கு தேவையான அளவு.
செய்முறை :
வெல்லத்தை பொடித்து கொள்ளவும்.
வாழைப்பழத்தை நன்கு மசித்துக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் 1/4 கப் தண்ணீர் ஊற்றி, அதில் வெல்லத்தைப் போட்டு அடுப்பில் வைத்து, வெல்லப் பாகு தயார் செய்து வடிகட்டிக் கொள்ள வேண்டும்.
ஒரு பாத்திரத்தில் கோதுமை மாவு, அரிசி மாவு, மசித்த வாழைப்பழத்தை சேர்த்து, அத்துடன் காய்ச்சி வடிகட்டி வைத்துள்ள வெல்லப் பாகு, உப்பு, சமையல் சோடா, ஏலக்காய் பொடி, சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக தண்ணீர் ஊற்றி, ஓரளவு கெட்டியாக கலந்து 30 மணி நேரம் அப்படியே வைக்கவும்.
பின்னர் ஒரு வாணலியை அடுப்பில் வைத்து, அதில பொரிப்பதற்கு தேவையான அளவு எண்ணெய் ஊற்றி சூடானதும், ஒரு கரண்டியில் மாவு எடுத்து, எண்ணெயில் ஊற்றி, பொன்னிறமாக பொரித்து எடுக்க வேண்டும். இப்படி அனைத்து மாவையும் எண்ணெயில் பொரித்து எடுத்தால், வாழைப்பழ அப்பம் ரெடி!..
ஆரோக்கியம் சம்பந்தமான அனைத்து தகவல்களையும் அறிந்து கொள்ள இந்த லிங்க்கை கிளிக் செய்யவும்... https://www.maalaimalar.com/health






