என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    கொரோனா அச்சுறுத்தலோடு பள்ளிக்கு செல்வதிலும், பாடம் நடத்துவதிலும் ஆசிரியர்களும், மாணவர்களும் கடைப்பிடிக்கவேண்டிய பாதுகாப்பு வழிமுறைகளை பார்க்கலாம்.
    மத்திய-மாநில அரசுகள் கொரோனாவிற்கான விழிப்புணர்வு வழிகாட்டுதலை ஏற்படுத்தி கொடுத்துள்ளது. அதை ஆசிரியர்கள் சரிவர கடைப்பிடித்தாலே போதுமானது. தன்னுடைய பள்ளி மாணவ-மாணவிகளும் அதை கடைப்பிடிப்பதை உறுதிப்படுத்த வேண்டும். தன்னையும் பாதுகாத்து, தன்னுடைய பள்ளி மாணவர்களையும் பாதுகாக்கும் கடமை ஆசிரியர்களின் தோள்களில் சுமத்தப்பட்டிருக்கிறது.

    சமூக இடைவெளியை கடைப்பிடித்தல், கிருமிநாசினி கொண்டு கைகளை கழுவுதல், இடைவெளியுடன் மாணவர்களை அமர வைத்தல், மாணவ-மாணவிகள் கூட்டம் கூடுவதை தவிர்த்தல், குழுவாக சேர்ந்து படிப்பதை தவிர்த்தல் ஆகியவற்றை கடைப்பிடிப்பது அவசியமாகிறது. மேலும் மாணவர்கள் கேன்டீனில் கூடுவது, பிரேயர் அரங்கில் கூடுவதையும் தவிர்க்கவேண்டும். ஒரே சமயத்தில் கூட்டமாக கழிவறைக்கு செல்வதையும் தவிர்க்கவேண்டும். குறிப்பாக அடுத்தவரிடமிருந்து நோட்டு-புத்தகங்கள், பேனா-பென்சில்களை கடன் பெறுவதையும் அறவே தவிர்க்கவேண்டும். கட்டாயம் முககவசம் அணிந்தே இருக்கவேண்டும்.
    கொரோனாவல் பள்ளிக்கு செல்லும் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அதனால் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். இதனால் குழந்தைகளுக்கு உற்சாகமின்மை, அலட்சியம், உறக்கமின்மை, மறதி போன்றவைகளை ஏற்படுத்துகிறது.
    பள்ளிகளில் குழந்தைகளுக்கு கல்வி மட்டும் கிடைப்பதில்லை. சக நண்பர்களை நேரடியாக காண்பார்கள். பேசுவார்கள். விளையாடுவார்கள். அதன் வழியாக அவர்களுக்கு மனோவளர்ச்சி கிடைக்கும். கொரோனாவால் அந்த வாய்ப்பை குழந்தைகள் இழந்திருக்கிறார்கள். அந்த ஏமாற்றம் தொடக்க நிலைக் கல்வி பயிலும் குழந்தைகளிடம் அதிகமாக தென்படும். அதை பெற்றோர் புரிந்துகொண்டு குழந்தைகளிடம் அதிக கோபம்கொள்ளக்கூடாது. குறிப்பாக மழலையர் பள்ளி மற்றும் ஒன்றாம் வகுப்புக்கு செல்ல முடியாத குழந்தைகளிடம் எப்போதும் படிக்கச்சொல்லி வற்புறுத்தக்கூடாது. வற்புறுத்தினால் அவர்கள் பள்ளி திறந்த பின்பும் படிப்பை வெறுக்கும் சூழல் ஏற்படலாம்.

    பள்ளிக்கு செல்லும்போது குழந்தைகளுக்கு பயணம், மைதானத்தில் விளையாட்டு, சூரிய ஒளி உடலில்படுதல் போன்றவை கிடைக்கும். சூரிய ஒளியில் கிடைக்கும் வைட்டமின் டி மூளையின் செயல்பாட்டிற்கு மிக முக்கியம். ஆனால் இப்போது குழந்தைகள் வீட்டிற்குள்ளே இருக்கிறார்கள். பெரும்பாலான குழந்தைகளுக்கு வீட்டு முற்றத்திற்கு வருவதற்குகூட அனுமதி கிடைப்பதில்லை.

    பள்ளிகள் இல்லாததால் மைதானங்களிலான விளையாட்டுகளுக்கு பதில் செல்போன், கம்ப்யூட்டர்களில் விளையாடுகிறார்கள். அதனால் டிஜிட்டல் அடிக்‌ஷன் எனப்படும் பாதிப்புக்கு நிறைய சிறுவர்-சிறுமியர்கள் உள்ளாகியிருக்கிறார்கள். அவர்களை மனநல சிகிச்சைக்கு அழைத்து வருகிறார்கள். எலக்ட்ரானிக் உபகரணங்களோடு குழந்தைகள் அதிக நேரத்தை செலவிடுவது அவர்களுக்கு உற்சாகமின்மை, அலட்சியம், உறக்கமின்மை, மறதி போன்றவைகளை ஏற்படுத்துகிறது.

    முன்பு தினமும் பெருமளவு நேரத்தை குழந்தைகள் பள்ளிகளில் செலவிடுவார்கள். இப்போது முழுநேரத்தையும் அவர்கள் வீடுகளிலேயே செலவிடுவதால் பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளுக்காக ஆசிரியர் வேலையையும் சேர்த்து செய்யவேண்டிய நிலை ஏற்பட்டிருக்கிறது. இது பெற்றோருக்கும், பிள்ளைகளுக்கும் ஒருவித கடினமான அனுபவம்தான்.
    குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுக்கும் போது அம்மாக்கள் ஒரு சிக்கலை பொதுவாகவே சந்திப்பார்கள். அவை என்னவென்றும் எப்படி புட்டிப்பால் கொடுக்க வேண்டும் என்றும் பார்க்கலாம்.
    பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் தான் சிறந்தது என்றாலும் வெகு அரிதாக சில குழந்தைகளுக்கு தாய்ப்பால் பற்றாக்குறை உண்டாகிறது. அல்லது தாய்ப்பால் கிடைக்காமல் போகிறது. அப்படி இருக்கும் போது குழந்தைகளுக்கு பாட்டில் பால் கொடுப்பது வழக்கம். அதே போன்று தாய்ப்பால் கொடுத்தாலும் ஆறுமாதங்களுக்கு பிறகு குழந்தைக்கு இணை உணவு கொடுத்தாலும் கூட தாய்ப்பால் பற்றாக்குறையாக இருக்கும். அதனால் குழந்தைக்கு மாற்றுப்பாலும் பழகுவார்கள். அப்போதுதான் பாட்டில் பழக்கத்தை ஏற்படுத்துவோம்.

    குழந்தைக்கு பாட்டில் பழகும் போது முதலில் குழந்தை பாட்டில் பாலை குடிக்க திணறுவார்கள்.அம்மாவின் மார்பு காம்புகளில் உறிஞ்சு குடித்த குழந்தைக்கு திடீரென்று பாட்டில் பால் சிரமமாக இருக்கும். பாட்டில் பழகுவதற்கு சில வாரங்கள் வரை ஆகலாம். எனினும் குழந்தைக்கு பாட்டில் பால் பழகும் போது இதையெல்லாம் மனதில் வையுங்கள்.

    குழந்தைக்கு பால் புகட்டும் போது உங்கள் முழங்கையை கைகளில் மடித்து குழந்தையின் தலையை உங்கள் கை மேல் வைத்து கையை குழந்தையை சுற்றி இறுக்கி பாட்டிலை பிடித்து கொள்ளுங்கள். குழந்தையின் தலை நிமிர்ந்த நிலையில் இருக்க வேண்டும்.முதுகு வளைந்த நிலையில் இருக்க கூடாது. எக்காரணம் கொண்டும் குழந்தையை படுத்த நிலையில் வைத்து பால் புகட்ட கூடாது.

    குழந்தைக்கு பாட்டில் பால் கொடுக்கும் போது அம்மாக்களும் நேராக உட்கார்ந்துகொள்ள வேண்டும். குழந்தையை முழங்கால்கள், வயிற்றிலும் கோணலில்லாமல் குழந்தையை சீராக வைத்திருக்க வேண்டும். தாய்ப்பால் போன்று அம்மாக்கள் குழந்தையின் முகத்தை ஒட்டி இருக்க வேண்டும். குழந்தையின் பால் பாட்டில் நிப்பிள் முழுவதும் குழந்தையின் வாயில் வைக்க வேண்டும். இல்லையெனில் குழந்தை பாட்டில் பாலை உறிஞ்சும் போது குழந்தையின் வாய் வழியே காற்று சென்றுவிட வாய்ப்புண்டு.

    குழந்தை சற்றூ வளர்ந்ததும் குழந்தையின் தலையை தட்டையாக வைக்காமல் சற்று உயரமான தலையணையில் படுக்க வைத்து கொடுக்கவும். பாட்டிலில் பால் புகட்டுவதால் அதிக கவனம் தேவை. பாட்டிலில் பால் கொடுத்தால் தான் என்றில்லை. குழந்தை பாட்டிலில் தண்ணீர் குடிக்கும் போதும் இதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

    குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுக்கும் போது அம்மாக்கள் ஒரு சிக்கலை பொதுவாகவே சந்திப்பார்கள். குழந்தை தாய்ப்பால் குடிக்கும் போது அங்கும் இங்கும் வேடிக்கை பார்ப்பார்கள். குறும்பு செய்வார்கள். சில நேரம் நாக்கை நீட்டியபடி அம்மாவின் முகத்தை பார்த்துகொண்டிருப்பது,கைகளை வாய்க்குள் வைத்து விளையாடுவது, பசியின்மையை கொண்டிருப்பது, விரல்களை வாயில் வைத்திருப்பது இவற்றுக்கு இடையே தான் அவர்கள் பால் குடிப்பார்கள். ஆனால் பால் பாட்டில் குடிக்கும் போது அவர்கள் உறிஞ்சுவிட்டாலே பால் வரத்தொடங்கி விடும்.

    அதனால் குழந்தைக்கு அடிக்கடி பால் புகட்ட வேண்டியிருக்காது. ஆனால் தாய்ப்பால் குடிக்கும் போது குழந்தை அதிகமாக பால் குடித்தது. ஆனால் பாட்டில் பாலில் குழந்தை பால் அதிகம் கொடுப்பதில்லை என்று அம்மாக்கள் கவலைகொள்வார்கள். இதனால் குழந்தையின் வாயில் பால் பாட்டிலை வலுக்கட்டாயமாக புகட்டுவார்கள். ஆனால் பாட்டில் பால் கொடுக்கும் போது குழந்தைக்கு தொடர்ந்து கொடுக்காமல் இடைவெளிவிட்டு கொடுக்க வேண்டும். குழந்தை பாட்டிலில் பால் உறிஞ்சுவதற்கு ஏற்றதாக உள்ளதா என்பதையும் கவனிக்க வேண்டும்.

    குழந்தைக்கு பாட்டிலில் பால் கொடுத்தாலும் தண்ணீர் கொடுத்தாலும் வேகமாகவோ மெதுவாகவோ இல்லாமல் சீராக வெளிவருகிறதா என்பதை கவனிக்க வேண்டும். குழந்தை ஒரே மூச்சில் பால் குடிக்க வேண்டும் என்று நினைக்காமல் சில நிமிடங்கள் அல்லது குழந்தை 15 முறை விழுங்கிய உடன் இடைவெளி விட வேண்டும். இது குழந்தைக்கு உடல்பருமனை உண்டாக்கிவிடவும் வாய்ப்புண்டு. குழந்தைக்கு வயிறு நிறைவது தெரியாமல் அதிகமாக கொடுத்துவிட வாய்ப்புண்டு.

    குழந்தைக்கு பால் கொடுக்கும் போது பால் வெதுவெதுப்பான சூட்டில் இருக்கும்படி பார்த்துகொள்ளுங்கள். பாலை மணிக்கட்டில் சில துளி விட்டு பிறகு சரியான வெப்பத்தில் கொடுக்கலாம். குழந்தை வளர வளர ஈறுகள், பற்கள் வளர்வதால் குழந்தை நிப்பிள் கடிப்பார்கள். அதனால் நிப்பிள் அதிகமாக விரிசலை சந்திக்க கூடும். அதையும் அடிக்கடி கவனத்தில் கொண்டு பார்க்க வேண்டும்.

    இறுதியாக பாட்டில்களை பயன்படுத்தும் போது சரியான பாட்டிகளை தேர்வு செய்யுங்கள். தரமான பாட்டில்களாக பயன்படுத்துவது அவசியம். பாட்டில்களை சரியான முறையில் சுத்தம் செய்வது அவசியம். பாட்டில்கள், வளையம், நிப்பிள் அனைத்தையும் தனித்தனியாக கழட்டி சுத்தம் செய்யவும். தினமும் கொதிநீரில் பாட்டிலை போட்டு எடுக்கவும்.பாட்டிலை கழுவி துடைத்து வெயிலில் உலர வைத்து எடுக்கவும். பாட்டில் வாங்கும் போது ஏதும் சந்தேகம் இருந்தால் மருத்துவரின் ஆலோசனை பெறவும் தயங்க வேண்டாம்.
    தூக்கம் வராமல் குழந்தை அவதிப்படுவதை கண்டுபிடிப்பது கடினம். 30 சதவீத குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
    குழந்தைகளுக்கு உடல்நல பாதிப்புகள் ஏற்பட்டால் பெற்றோர் பெரும்பாலும் கண்டுபிடித்துவிடுவார்கள். ஆனால் தூக்கம் வராமல் குழந்தை அவதிப்படுவதை கண்டுபிடிப்பது கடினம். தூக்கம் வராமல் தவிப்பது, நள்ளிரவில் திடீரென்று எழுவது, படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது போன்றவை தூக்கமின்மையின் அறிகுறியாக இருக்கலாம். 30 சதவீத குழந்தைகள் தூக்கமின்மையால் பாதிக்கப்படுவதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

    * பகல் வேளையில் குழந்தைகள் அதிக நேரம் தூங்குவது தூக்க கோளாறு பிரச்சினைக்கு ஆரம்பகட்ட அறிகுறியாகும். சிலவேளைகளில் சோர்வு காரணமாக பகலில் அயர்ந்து தூங்கலாம். ஆனால் தொடர்ந்து பகலில் தூங்குவதை வழக்கமாக கொண்டிருந்தால் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியம்.

    * குழந்தைகளுக்கும் கனவுகள் வரக்கூடும். இரவில் நன்றாக தூங்கிக்கொண்டிருக்கும் குழந்தைகள் சில சமயங்களில் கனவின் பிரதிபலிப்பால் திடீரென்று பயந்து போய் எழுவார்கள். அதன்பிறகு தூக்கம் வராமல் விளையாட தொடங்கிவிடுவார்கள். இதனால் குழந்தையின் தூக்கம் பாதிப்புக்குள்ளாவதோடு வேறு சில உடல்நல பிரச்சினைகளும் ஏற்படக்கூடும்.

    * குழந்தைகள் படுக்கைக்கு சென்ற சில நிமிடங்களில் தூங்க வேண்டும். அதுதான் சரியான தூக்கம். தூக்கம் வருவதற்கு அதிக நேரம் எடுத்துக்கொண்டால் அது தூக்கமின்மை பிரச்சினைக்கு காரணமாகிவிடும். மன அழுத்தத்திற்கு உள்ளான குழந்தைகளால் ஆழ்ந்து தூங்க முடியாது. அவர்கள் இரவில் நீண்ட நேரம் தூக்கம் வராமல் கண்விழித்திருப்பார்கள்.

    * சில குழந்தைகள் தூங்கும்போது குறட்டை விடுவார்கள். அதனால் நுரையீரலில் அடைப்பு ஏற்படுவதோடு தூக்கமின்மையும் உண்டாகும். மூக்கடைப்பு, சுவாசக்கோளாறு, சுவாசக்குழாய் நோய்த்தொற்று போன்றவை குழந்தைகளுக்கு குறட்டை ஒலி ஏற்படுவதற்கு பொதுவான காரணங்கள். எனினும் தொடர்ந்து குறட்டை பிரச்சினை இருந்து வந்தால் தூக்கம் பாதிப்புக்குள்ளாகும். தூக்கத்தில் மூச்சுத்திணறலும் ஏற் படக்கூடும். அதற்கு முறையான சிகிச்சை அவசியம்.

    * தூக்கத்தில் கனவு வந்து எழுவதற்கும், எதையாவது நினைத்து பீதியில் விழித்தெழுவதற்கும் வித்தியாசம் இருக்கிறது. தூக்கத்தில் இருந்து எழுந்து திடீரென்று அலறுவது, அழுவது, எதையாவது மனதில் நினைத்துக்கொண்டு பேசுவது, வேகமாக மூச்சை உள்ளிழுத்து வெளியிடுவது, வியர்வை வெளிப்படுவது, பதற்றம் அடைவது போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டால் பெற்றோர் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

    * ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் தூக்கத்தில் படுக்கையிலேயே சிறுநீர் கழிப்பது இயல்பாக நடக்கும் விஷயம்தான். ஆனால் 3-4 தடவைக்கு மேல் அப்படி செய்தால் அது தூக்கமின்மைக்கான அறிகுறியாகும்.

    * சில குழந்தைகள் திடீரென்று கண்விழித்து எழுந்து நடப்பார்கள். அப்போது சம்பந்தம் இல்லாமல் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்கள். இந்த வழக்கம் அடிக்கடி நீடித்தால் டாக்டரை கலந்தாலோசித்து பரிசோதனை செய்ய வேண்டியது அவசியமானது.
    இந்த வகை உணவுகளை குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு தவிர்ப்பது நன்மை அளிக்கும். ஏனெனில் இது நம்முடைய நோயெதிர்ப்பு சக்தியை குறைக்க வாய்ப்பு உள்ளது.
    குளிர்காலத்தில் நோய்களின் வரத்து அதிகம். இதனால் நம் குழந்தைகளின் நோயெதிர்ப்பு சக்தியை அதிகரிக்க அவர்களுக்கு அந்த சமயங்களில் சரியான உணவை அளிப்பது அவசியம். குளிர்காலத்தில் பொதுவாக குழந்தைகள் காய்ச்சல், நிமோனியா, கடுமையான காது தொற்று, ஆஸ்துமா மற்றும் தோல் அழற்சி இவற்றால் பாதிக்கப்படுகின்றனர். எனவே இதையெல்லாம் தவிர்க்க குழந்தைகளுக்கு போதுமான தூக்கத்தை அளிப்பதும், முழு தானிய உணவுகளை கொடுப்பது அவசியம்.

    பழங்கள் மற்றும் காய்கறிகள் போன்றவற்றை கொடுத்து அவர்களை நீரேற்றமாகவும் வைத்திருக்க வேண்டும். ஆனால் அதே நேரத்தில் குளிர்காலத்தில் கொடுக்கப்படும் சில உணவுகள் அவர்களுக்கு சளி, இருமலை உண்டாக்கலாம். எனவே அந்த வகை உணவுகளை தவிர்ப்பதும் அவசியம். எனவே குளிர்காலத்தில் குழந்தைகளுக்கு கொடுக்கக் கூடாத உணவுகளை அறிந்து கொள்ளுங்கள்.

    குளிர்காலத்தில் எண்ணெய் உணவுகளை உட்கொள்வது நல்லதல்ல. எனவே விலங்குகளின் கொழுப்பில் இருந்து பெறப்படும் எண்ணெய்க்கு பதிலாக வெஜிடபிள் எண்ணெய்யை பயன்படுத்துங்கள். உங்க குழந்தைக்கு சீரணிக்கவும் ஏதுவாக இருக்கும்.

    குளிர்காலத்தில் எளிய சர்க்கரை உணவுகள் மிகவும் மோசமானவை. உடலில் சர்க்கரை உள்ளடக்கம் அதிகரிப்பது நோய்களிலிருந்து உங்களைப் பாதுகாக்கும் வெள்ளை இரத்த அணுக்கள் குறைவை ஏற்படுத்தும்.இதனால் அதிகப்படியான சர்க்கரை உங்கள் குழந்தைகளின் உடல்களை வைரஸ் மற்றும் பாக்டீரியா தொற்றுநோய்களுக்கு உள்ளாக்கும். குளிர்காலத்தில் உங்கள் பிள்ளைகளுக்கு சோடாக்கள், குளிர் பானங்கள், மிட்டாய்கள், சாக்லேட், கேலாக்ஸ், மிகவும் சுத்திகரிக்கப்பட்ட மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகளை கொடுக்க வேண்டாம்.

    இறைச்சிகள் மற்றும் முட்டைகளில் சளி உற்பத்தியை ஊக்குவிக்கும் நிறைய புரதங்கள் உள்ளன, இது குளிர்காலத்தில் உங்கள் குழந்தையின் தொண்டைக்கு மிகவும் எரிச்சலை ஏற்படுத்தும். பதப்படுத்தப்பட்ட இறைச்சிகள் மற்றும் முட்டைகள் மிக மோசமானவை. எனவே அதற்கு பதிலாக மீன் மற்றும் கரிம இறைச்சியை தேர்ந்தெடுங்கள்.

    பால் பொருட்களில் உள்ள விலங்கு புரதம் சளியை தடிமனாக்கும். இது விழுங்குவதை கடினமாக்குகிறது. எனவே, குளிர்காலத்தில் உங்கள் குழந்தைகளுக்கு சீஸ், கிரீம், கிரீம் சார்ந்த சூப்கள் மற்றும் கிரீம் சார்ந்த பொருட்களை தவிர்ப்பது நல்லது. குறிப்பாக அவர்களுக்கு சளி பிடித்த சமயங்களில் முற்றிலும் தவிர்ப்பது நல்லது.
    குழந்தைகள் குறைந்த இடைவெளியில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்க செல்வதற்குள் அடங்காமல் வெளியேறுவது என எல்லாமே கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.
    வளரும் பிள்ளைகள் சிறுநீர் வரும் போது பெரும்பாலும் அடக்காமல் வெளியேற்றுவார்கள். ஆனால் குறைந்த இடைவெளியில் அடிக்கடி சிறுநீர் கழிப்பது, சிறுநீர் கழிக்க செல்வதற்குள் அடங்காமல் வெளியேறுவது என எல்லாமே கவனிக்க வேண்டிய விஷயங்கள் என்கிறார்கள் மருத்துவர்கள்.

    வளரும் பிள்ளைகள் அதாவது 3 வயதுக்கு மேற்பட்ட 5 வயதுக்குட்பட்ட பிள்ளைகள் அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டிய பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். ஒவ்வொரு 30 நிமிடங்கள் இடைவெளியில் இவர்கள் சிறுநீர் கழிக்க கழிப்பறை சென்றால் நீங்கள் கவனம் செலுத்த வேண்டிய நேரம் அது என்று சொல்லலாம்.

    சிறுநீர் கழிக்கும் போது சிறிய அளவு மட்டுமே வெளியேறும். சிறுநீர் கழிக்கும் போது அவர்கள் வலியை அனுபவிக்க மாட்டார்கள். பெரும்பாலும் பகல் நேரத்தில் தான் இந்த பிரச்சனை என்பதால் இரவு நேரங்களில் ஆடையை நனைக்க மாட்டார்கள். அதே நேரம் அதிக தண்ணீரும் குடிக்க மாட்டார்கள்.

    ​காரணம் என்ன?

    பிள்ளைகளுக்கு அதிகப்படியான சிறுநீர்ப்பை இருப்பதால் வழக்கத்தை விட அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடும். இது பொல்லாகுரியா என்று அழைக்கப்படுகிறது. இதனால் குழந்தைகள் அடிக்கடி சிறுநீர் கழிப்பார்கள். அதாவது 10 நிமிடங்களுக்கு ஒரு முறை கூட சிறுநீர் கழிப்பார்கள். இதனால் நாள் ஒன்றுக்கு 10 முதல் 30 முறைவரை சிறுநீர் கழிப்பார்கள். இந்த பொல்லாகுரியா குறைபாடு 8 வயது வரையான குழந்தைகளை பாதிக்க செய்கிறது.

    இது பகல் நேரங்களில் மட்டுமே வெளிப்படும். இது வேறு அறிகுறிகளை கொண்டிருக்காது. இது பெரும்பாலும் மன அழுத்தத்துடன் தொடர்பு கொண்டது என்கிறார்கள் மருத்துவர்கள். இந்த குறைபாடு கொண்டிருக்கும் பிள்ளைகளுக்கு சிகிச்சை அளிக்காத நிலையில் இரண்டு அல்லது மூன்று வாரங்களுக்கு பிறகு இந்த குறைபாடு நீங்கும். முதலில் உங்கள் பிள்ளையின் மன அழுத்தத்தை போக்கும் விஷயங்களை கண்டறிந்து அதற்கு தீர்வு செய்தால் விரைவில் சரியாகும்.

    சிறுநீர்ப்பை தசைகள் கட்டுப்படுத்தமுடியாத பிடிப்புகளை கொண்டிருப்பதால் சிறிதளவு சிறுநீர் இருந்தாலும் வெளியேறிவிடும். சிறுநீர்க்குழாயை சுற்றியிருக்கும் தசைகள் சிறுநீர்ப்பையில் இருந்து சிறுநீர் குழாய் வழியாக வெளியேறுவதை தடுக்கும். அதற்கு சிறுநீர்ப்பை சுருக்கமடையவேண்டும். இதில் தடங்கல் உண்டாகும் போது அடிக்கடி சிறுநீர் கழிக்க நேரிடுகிறது.

    சிறுநீர் பாதையில் நோய்த்தொற்றுகள் இருந்தாலும் சிறுநீர் அடிக்கடி கழிக்க நேரிடும். குழந்தைகளின் நரம்பில் ஏதேனும் குறை இருந்தாலும் இந்த சிறுநீர் கழிக்கும் அறிகுறிகள் உண்டாகும். எனினும் இது தீவிரமானவை அல்ல. நீங்கள் இதை உணர்ந்து கவனித்தாலே குழந்தைகள் சரியாக கூடும்.

    குழந்தைகளுக்கு காஃபின் நிறைந்த பொருள்கள் தருவதும் சிறுநீர் பிரிவை அதிகரிக்கிறது. ஒவ்வாமை பொருட்கள் குழந்தைகளுக்கு பதட்டத்தை உண்டாக்கி அடிக்கடி சிறுநீர் கழிக்க வைக்கும். சில குழந்தைகள் சிறுநீர் வரும் போது அடக்கி வைப்பதாலும், மலச்சிக்கல் போன்றவையும் கூட சொல்லலாம்.

    ​என்ன செய்யலாம்

    குழந்தைகள் வளர வளர 15 % வரை இதன் பாதிப்பு குறையும். சிறுநீர் கழிக்க வேண்டும் என்னும் உடலின் சமிக்ஞைகளை குழந்தைகள் புரிந்துகொள்ளலாம். சிறுநீர்ப்பை குழந்தைகள் வளர வளர அதிகரிக்க கூடும்.

    குழந்தைகள் படுக்கையில் சிறுநீர் கழித்தாலும் நாளடைவில் அவர்கள் வளர்ச்சிக்கு பிறகு தானாகவே சரியாக கூடும். சிறுநீர் கழிப்பதை கட்டுப்படுத்த பயிற்சி அளிக்க வேண்டும். சிறுநீர்ப்பை தசைகளை வலுப்படுத்தும் பயிற்சிகளை தொடர்ந்து பழக்க வேண்டும்.

    சீரான இடைவெளியில் குழந்தைகளை சிறுநீர் கழிக்க செய்ய வேண்டும். முதலில் இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை அவர்களை பழக்க வேண்டும். பிறகு படிப்படியாக நேரத்தை அதிகரித்து 4 மணி நேரத்துக்கு ஒரு முறை பழக்கலாம். சிறுநீரை வெளியேற்ற தூண்டும் காஃபின் பானங்களை தவிர்ப்பது மிகவும் உதவியாக இருக்கும்.

    இவையெல்லாம் தாண்டி குழந்தை அவசர அவசரமாக சிறுநீரை வெளியேற்றுவதோ, சிறுநீரை அடக்க முடியாமல் அவதிப்படும் நிலைமை வந்தாலோ தவிர்க்காமல் மருத்துவரை அணுக வேண்டும்.

    குழந்தைகள் அறியாமல் செய்யும் தவறுகளை அம்மாக்கள் ஆரம்பத்தில் கண்டறிந்தால் எளிதாக அதை திருத்த முடியும். அப்படி குழந்தைகள் செய்யும் பொதுவான தவறுகள் குறித்து பார்க்கலாம்.
    குழந்தைகள் ஒரு வயதுக்குள்ளாகவே விரல் சூப்பும் பழக்கத்தை கற்றுகொள்கிறார்கள். இதை கவனிக்காமல் இருக்கும் போது இதிலிருந்து விடுபடுவதற்கு அவர்களுக்கு நான்கு முதல் ஆறு வயது கூட ஆகிவிடுகிறது. குழந்தை எப்போதும் தூங்கும் போதும் கூட விரல் சூப்புவதை நிறுத்துவதில்லை.

    குழந்தைக்கு பற்கள் வளரும் வரை அவர்கள் கட்டை விரல் சூப்பும் பழக்கம் கொண்டிருப்பது பிரச்சனையில்லை. ஆனால் அதன் பிறகும் அவர்கள் இதை செய்துவந்தால் பற்கள் வரிசை பாதிக்கப்படும். பல் பிரச்சனையை உண்டாக்கும். வெகு சில குழந்தைகள் தானாக இந்த பழக்கத்திலிருந்து விடுபட்டாலும் சில குழந்தைகள் பலவிதமான மிரட்டல் தண்டித்தல் போன்றவற்றுக்கு பிறகே விரல் சூப்பும் பழக்கத்தை நிறுத்துகிறார்கள்.

    குழந்தைகள் விரல் சூப்பும் போது பாதுகாப்பாக இருப்பதை போன்ற உணர்வை பெறுகிறார்கள். இதை தடுக்க குழந்தையை அரவணைத்தப்படி ஒருவர் உடன் இருக்க வேண்டும். குழந்தைக்கு புரியக்கூடிய வயதாக இருந்தால் அதன் விளைவுகள் குறித்து பேசி அவர்களை வேறு திசைக்கு திருப்பலாம். குழந்தைகளை எப்போதும் உங்கள் மீது கவனம் வைக்கும்படி இருக்க செய்தால் இதை ஆரம்ப கட்டட்திலேயே தடுத்து நிறுத்திவிட முடியும்.

    ​மூக்கில் விரல் விட்டு குடைதல்

    எல்லா குழந்தைகளும் கண்டிப்பாக இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். குழந்தைகளுக்கு சளி அல்லது சலிப்பு காரணமாக இந்த பழக்கம் உருவாகலாம். சளியை வெளியே எடுக்கும் பழக்கத்தை குழந்தைகள் செய்யும் போது அடிக்கடி விரலை மூக்கு துவாரத்தில் விட்டு நோண்டி கொண்டே இருப்பார்கள். இதனால் சமயத்தில் மூக்கின் உள்ளே விரல்களில் ஒட்டியிருக்கும் கிருமிகள் உள்ளே செல்ல கூடும். அரிதாக மூக்கினுள் ரத்தகசிவும் வருவதற்கான வாய்ப்புண்டு.

    எப்படி தடுத்து நிறுத்துவது

    சிறு குழந்தைகளாக இருந்தால் அவர்களுக்கு மூக்கு குடைதலின் விளைவுகள் புரியாது. அம்மாக்கள் தினமும் குளிப்பாட்டும் போது அந்தரங்க உறுப்பு சுத்தம் சொல்லிதருவது போல் மூக்கை சுத்தம் செய்யும் வழிமுறைகளை கற்றுதந்து தினமும் குளிக்கும் போது இதை செய்தால் போதும் என்று அறிவுறுத்த வேண்டும். குழந்தைகளின் நகங்களை வெட்டி விரல்களை சுத்தமாக வைத்திருக்க வேண்டும். அவர்களது மூக்கு காய்ந்து உலர்ந்திருந்தால் மூக்கு ஈரப்பதமாக இருக்க ஈரப்பதமூட்டும் ஜெல் பயன்படுத்தலாம். அவர்கள் விரல்களுக்கு வேலை கொடுத்துகொண்டே இருந்தால் அவர்களது விரல்கள் மூக்கின் அருகே செல்லாது.

    ​நகம் கடித்தல்

    நகம் கடிக்கும் பழக்கம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை பெரும்பான்மையினரிடம் உள்ளது. மன அழுத்தம் இருக்கும் போது நகம் கடிப்பது உண்டு. வளரும் பருவத்திலேயே இந்த பழக்கத்தை தடுக்காவிட்டால் அவர்கள் வளர்ந்த பிறகும் இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள். மன அழுத்தம் அல்லது பதற்றத்தால் இது உருவாவதாக சொல்லப்படுகிறது.

    பெரும்பாலும் வளர்ந்த பிள்ளைகள் தான் இந்த பழக்கத்தை கொண்டிருப்பார்கள் மன அழுத்தம் அவர்களை ஆட்கொண்டிருந்தால் அதை போக்க முயற்சிக்க வேண்டும். பிள்ளைகளின் கை விரல் நகங்களை எப்போதும் சுத்தமாக வைத்திருங்கள். நகங்களுக்கு நெயில் பாலிஷ் வைத்து விடலாம். வளர்ந்தவர்களாக இருந்தால் மன அழுத்தம் குறைக்க முயற்சி செய்வது நல்லது.

    குழந்தைகள் சில விஷயங்கள் செய்யும் போது அவர்களுக்கு அது பிடிக்காமல் இருந்தாலோ அல்லது பிடிக்காத நபராக இருந்தாலோ அவர்கள் மீது புகார் சொல்வதை வழக்கமாக கொண்டிருப்பார்கள். அவர்கள் வயதை ஒத்த குழந்தைகளிடம் விளையாடும் போது கூட தங்களது தவறை மறைத்து மற்றவர்கள் செய்யும் தவறை மட்டும் மிகைப்படுத்தி சொல்வார்கள். இந்த பழக்கம் பள்ளியிலும் தொடரும். கூடுதலாகவே இருக்கும்.

    குழந்தைகள் முன்பு மற்றவர்களை குறை கூறுவதை செய்யாதீர்கள். குழந்தைகள் சண்டையிடும் போது நேரிடையாகவே இருவருக்கும் சமரசம் செய்யுங்கள். பொறுமையும், சமரச குணங்களையும் அவர்களுக்கு சொல்லி கொடுங்கள். நேர்மறையான சிந்தனைகளையும், நேர்மறையான வாழ்க்கை முறையையும் கற்றுகொடுங்கள்.
    அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை அதிகமாக காணப்படும்.
    மூக்கில் அடிபட்டால் ரத்தம் வருவது இயல்பு. அடிபடாமல், காயம் எதுவும் ஏற்படாமல், சிலருக்கு மூக்கில் இருந்து திடீரென்று ரத்தம் வடிவது உண்டு. நடைமுறையில் வயதில் மூத்தவர்களைவிட குழந்தைகளுக்குத்தான் இந்த தொல்லை அதிகமாக காணப்படும். இதை ஆங்கிலத்தில் ‘எபிஸ்டேக்சிஸ்' என்று அழைக்கிறார்கள்.

    சுவாசத்துக்கும் வாசனைக்கும்தான் மூக்கு படைக்கப்பட்டு உள்ளது என்று நினைக்காதீர்கள். மூக்கு ஒரு ஏர்கண்டிஷனர் மாதிரி. வெளியில் இருந்து வருகிற குளிர்ந்த காற்றையோ, சூடான காற்றையோ நம் உடலுக்கு தேவையான வெப்பநிலைக்கு மாற்றி உடலுக்குள் அனுப்ப வேண்டியதும் மூக்கின் வேலைதான்.

    மூக்கு பார்ப்பதற்கு பலமானதுபோல் தோன்றுகிறதே தவிர. உள்ளுக்குள் அது மிக மென்மையானது. இதன் ஆரம்பத்தில், முகத்தின் பல பகுதிகளில் இருந்து மிக நுண்ணிய ரத்தக் குழாய்கள் வந்து சேருகின்றன. இப்பகுதிக்கு ‘லிட்டில்ஸ் ஏரியா' என்று பெயர். இது ஒரு தொட்டால் சிணுங்கி பகுதி. இது லேசாகச் சீண்டப்பட்டால்கூட, மூக்கில் இருந்து ரத்தம் கொட்டிவிடும். இதை ‘சில்லுமூக்கு' என்றும் சொல்வார்கள். மூக்கில் இருந்து ரத்தம் வடிவதற்கு 80 சதவீத காரணம் இந்தப் பகுதியில் உண்டாகும் கோளாறுதான்; மீதி 20 சதவீதம்தான் மூக்கின் மேற்பகுதியிலும் உடலின் பிற பகுதிகளிலும் ஏற்படுகிற காரணங்களாகும்.

    குழந்தைகளிடம் ஒரு பழக்கம் உண்டு. எப்போது பார்த்தாலும் மூக்கில் விரலை நுழைத்து குடைந்து கொண்டிருப்பார்கள். இன்னும் சிலர் குச்சி, பேனா, பென்சில் என்று ஏதாவது ஒரு பொருளை மூக்கில் நுழைத்து குடைவார்கள். இதன் விளைவாக, லிட்டில்ஸ் ஏரியாவில் புண் உண்டாகி, ரத்த கசிவு ஏற்படும். சிலருக்கு ஒவ்வாமை காரணமாக அடிக்கடி ஜலதோஷம் பிடிக்கும். மூக்கில் சளி ஒழுகும். அப்போது மூக்கினுள் அளவுக்கு அதிகமாக ஈரத்தன்மை காணப்படும். அப்போது மூக்கில் இருந்து ரத்தம் வடியலாம்.
    குழந்தைகளை கொசு கடித்தால் மென்மையான சருமம் வீக்கத்தையும், அரிப்பையும் அதிகமாக சந்திக்கும். இதை போக்க வீட்டில் இருக்கும் பொருள்களை அம்மாக்கள் பயன்படுத்தலாம்.
    பெரியவர்களை காட்டிலும் குழந்தைகளை கொசு கடிக்கும் போது ஒவ்வாமை அல்லது தொற்றுகளுக்கு ஆட்படுகிறார்கள். குழந்தைக்கு கொசு கடிக்கும் போது சரும வீக்கம் இரண்டு நாட்கள் வரை இருக்க கூடும். இளஞ்சிவப்பு நிறத்தில் சருமம் தடித்திருக்கும். இதை போக்க வீட்டில் இருக்கும் பொருள்களை அம்மாக்கள் பயன்படுத்தலாம். எனினும் தீவிரம் அதிகமாக இருந்தால் கொசுக்களால் பரவும் நோயை தடுக்க மருத்துவ உதவி தேவைப்படலாம்.

    குழந்தைகளுக்கு ஐஸ்கட்டி ஒத்தடம் கொடுக்கலாம். குளிர்ந்த நிலையில் இவை ரத்த நாளங்களை கட்டுப்படுத்த கூடும். இது ஒவ்வாமைக்கு எதிர்வினையாக செயல்படுவதோடு இது சருமத்தில் அரிப்பையும் போக்கும். ஐஸ்கட்டியை மெல்லிய துணியில் சுற்றி ஒன்று அல்லது இரண்டு மணி நேரங்களுக்கு ஒருமுறை கொசு கடித்து வீக்கமான சருமத்தில் ஒற்றி எடுக்கவும். தொடர்ந்து 10 நிமிடங்கள் வரை வைத்து எடுத்தால் போதும்.

    க்ரீன் டீ அழற்சி எதிர்ப்பு பண்புகளை கொண்டுள்ளது. இது சருமத்தின் வீக்கத்தை வேகமாக குறைக்கும். க்ரீன் டீ பேக் ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருங்கள். அவை இலேசாக குளிர்ந்து போகும் போதே எடுத்து குழந்தைக்கு ஒத்தடம் கொடுக்கலாம். தினமும் 3 அல்லது நான்கு முறை வரை இப்படி செய்தால் போதுமானது.

    அமிலத்தன்மை கொண்ட வினிகர் நச்சுத்தன்மையை சமநிலைப்படுத்துகிறது, இது கொசுக்கடி போன்று தேனிக்கள் போன்ற பூச்சிகளீருந்தும் சருமத்தை பாதுகாக்கிறது. வினிகர் அமிலத்தன்மை நிறைந்தது என்பதால் அதை சம அளவு நீரில் கலந்து சுத்தமான பருத்தி துணியால் துடைத்து எடுக்கவும். இரண்டு வேளை தடவினால் போதுமானது.

    எலுமிச்சையில் தயாரிக்கப்படும் இந்த எலுமிச்சை தைலம் இயற்கை ஆண்டிஹிஸ்டமைன் என்று சொல்லலாம். இது சரும அரிப்பை நீக்க உதவுகிறது. எலுமிச்சை தைலம் இல்லையென்றால் எலுமிச்சை இலையை கசக்கி அதன் சாறைநீரில் கலந்து சருமத்தின் மீது நேரடியாக பூசவும். சருமத்துக்கு ஊறுவிளைவிக்காது என்றாலும் மென்மையான சருமம் என்பதால் நீங்கள் குழந்தையின் குளியல் தொட்டியில் ஒரு மூடி விட்டு சில நிமிடங்கள் கழித்து அந்த நீரில் குழந்தையை குளிப்பாட்டலாம்.

    ​டீ ட்ரி ஆயிலில்  உள்ள எண்ணெய்கள் ரசாயனங்கள் பாக்டீரியா மற்றும் பூஞ்சைகளை கொல்வதால் இது கிருமிகளை வெளியேற்றுகிறது. இது சரும வீக்கத்தை குறைக்க செய்கிறது. இதன் வாடைக்கு கொசுக்கள் அருகில் வராது என்பதால் கொசு அதிகமாக இருக்கும் வீட்டில் வசிப்பவர்கள் முன்கூட்டியே குழந்தைக்கு இதை தடவி விடுவது நல்லது.

    தாத்தா-பாட்டிகளோடு வளரும் குழந்தைகளின் நடத்தைகளும், செயல்பாடுகளும் மேம்பட்டதாக இருக்கும் என்பது அறிவியல் ரீதியாக உறுதியாகியுள்ளது.
    வேலைக்கு செல்லும் பெற்றோரின் குழந்தைகளை தாத்தா, பாட்டிகள் பொறுப்போடு கவனித்துக் கொள்வார்கள். அதனால் குழந்தைகள் சரியான நேரத்திற்கு சாப்பிட்டார்களா? தூங்கினார்களா? என்று பெற்றோர் கவலைப்பட வேண்டியதில்லை. சிலர் குழந்தைகளை கவனித்துக் கொள்வதற்காக வேலைக்கு ஆட்களை அமர்த்துவார்கள். அவர்களை விட அன்புடனும், அக்கறையுடனும் தாத்தா -பாட்டிகள் தங்கள் பேரக் குழந்தைகளை கவனித்துக் கொள்வார்கள். தாத்தா-பாட்டிகளுடன் வசிக்கும் குழந்தைகளுக்கு பெற்றோரை பிரிந்து அன்னியமாக இருக்கும் உணர்வு எழாது. வீட்டில் பாதுகாப்புடன் இருப்பதாக உணர்வார்கள்.

    தாத்தா - பாட்டிகளிடம் வளரும் குழந்தைகள் குடும்ப பின்னணியை முழுமையாக தெரிந்து கொள்வார்கள். உறவுகளின் உன்னதத்தையும் புரிந்து கொண்டு அவர்களுக்கு உரிய மதிப்பை கொடுப்பார்கள். குடும்ப சூழ்நிலை, பெற்றோர் எதிர்கொள்ளும் கஷ்டங்களை தாத்தா-பாட்டிகள் குழந்தைகளுக்கு சொல்லி புரியவைப்பார்கள். பாசம், மரியாதை, ஒழுக்கம், சுய கட்டுப்பாடு போன்ற குணங்களை அந்த குழந்தைகள் வளர்த்துக்கொள்வார்கள். மற்ற குழந்தைகளை விட புத்திசாலித் தனமாகவும், அறிவு முதிர்ச்சியுடனும் வளர்வார்கள்.

    தாத்தா-பாட்டிகளுடன் அதிக நேரத்தை செலவிடும் குழந்தைகள் நிறைய வாழ்வியல் விஷயங்களை கற்றுக்கொள்வார்கள். சிக்கலான சூழ்நிலையை கையாளும் திறமையும் அவர்களிடம் இருக்கும். பிரச்சினைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளையும் அறிந்துகொள்கிறார்கள். ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் நடத்திய ஆய்வில், தாத்தா-பாட்டிகளுடன் வளரும் குழந்தைகளுக்கு மற்ற குழந்தைகளை விட தனிமை, பதற்றம், மனச்சோர்வு போன்ற பாதிப்புகள் குறைவாக இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

    கதைகள் மூலம் வாழ்க்கையின் எதார்த்தத்தை குழந்தைகளுக்கு எளிதாக தாத்தா-பாட்டிகள் புரியவைத் துவிடுவார்கள். அவர்கள் சொல்லும் கதைகள் குழந்தைகளின் அறிவாற்றலை வளர்க்கும். நல்ல போதனைகளை கற்றுக் கொடுக்கும். அதன்படி ஒழுக்கம், சம்பிரதாயங்களை குழந்தைகள் கடைப்பிடிக்க தொடங்கி விடுவார்கள். சமூகத்தில் மற்றவர்கள் பாராட்டும் நபராகவும் வளர்வார்கள்.

    வயதாகும்போது ஞாபகமறதி, மன சோர்வு போன்ற பாதிப்புக்கு நிறைய பேர் ஆளாகிறார்கள். இதில் கவனிக்கவேண்டிய விஷயம் என்ன வென்றால் இந்த நோய்களெல்லாம் முதியவர்கள் தனிமையில் இருப்பதால்தான் ஏற்படுகின்றன. பேரக் குழந்தைகளுடன் வசிப்பவர்களுக்கு இத்தகைய பாதிப்புகள் அரிதாகவே ஏற்படுகின்றன. இதனை பெற்றோர் புரிந்து கொண்டு தங்கள் குழந்தைகளை தாத்தா - பாட்டியுடன் நேரத்தை செலவிட அனுமதிக்க வேண்டும். அப்போதுதான் வீட்டில் தனிமை விலகி இனிமை நிலவும்.
    பேர குழந்தைகளின் மீது அன்பை செலுத்தும் அதே நேரத்தில், தாத்தா-பாட்டிகள் தேவையான கண்டிப்பையும் காட்டினால்தான் குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்தெடுக்க முடியும்.
    தாத்தா, பாட்டிகளின் அருகாமை தங்கள் குழந்தைகளுக்கு கிடைக்க வேண்டும் என்று பெரும்பாலான பெற்றோர்கள் விரும்புகிறார்கள். அந்த பழைய தலைமுறையினரின் பாதுகாப்பும், பராமரிப்பும் தங்களுக்கு அவசியம் என்பதை குழந்தைகளும் புரிந்துகொண்டிருக்கத்தான் செய்கிறார்கள். தாத்தா-பாட்டிகள் குழந்தைகளை வழிநடத்துவதில் மிகுந்த கவனம் செலுத்தவேண்டும். சில குழந்தைகள் பெற்றோரை ஏமாற்றவும், திசைதிருப்பவும் தங்கள் தாத்தா-பாட்டிகளை பயன்படுத்திக்கொள்கிறார்கள். 

    ‘நான் விளையாடச் சென்றதையோ, கடைகளுக்கு சென்று உணவுப் பொருட்கள் வாங்கி சாப்பிட்டதையோ அப்பா, அம்மாவிடம் சொல்லக்கூடாது. சொன்னால் நான் உங்கள் இருவரிடமும் பேசவே மாட்டேன்’ என்று உணர்ச்சிபூர்வமாக மிரட்டவும் செய்கிறார்கள். அதற்கெல்லாம் தாத்தா-பாட்டிகள் செவிசாய்த்துவிடக்கூடாது. அவர்கள் அன்பை செலுத்தும் அதே நேரத்தில், தேவையான கண்டிப்பையும் காட்டினால்தான் குழந்தைகளை நல்லமுறையில் வளர்த்தெடுக்க முடியும்.

    பேரன்-பேத்திகளை வழிநடத்தும் விஷயத்தில் தாத்தா-பாட்டிகள் கடைப்பிடிக்கவேண்டிய புதிய அணுகுமுறைகள்:

    முதுமையடைந்துவிடும் தாத்தா-பாட்டிகள் மீண்டும் இளமைக்கு திரும்ப பேரன்-பேத்திகள் காரணமாக இருப்பார்கள். அவர்களோடு பொழுதுபோக்குவது, விளையாடுவது, வெளி இடங்களுக்கு செல்வது போன்றவை முதியோர்களை மனதளவில் இளமைக்கு திரும்ப வழிவகை செய்யும். குழந்தைகளுக்குதக்கபடி அவர்கள் தங்களை மாற்றிக்கொண்டு, அவர்களிடம் நண்பர்கள் போன்று பழக முன்வரவேண்டும். பெற்றோர்களிடம் சொல்லத் தயங்கும் விஷயங்களைகூட தாத்தா பாட்டியிடம் சொல்லலாம் என்ற எண்ணம் வரும் அளவுக்கு குழந்தைகளிடம் நடந்துகொள்ளவேண்டும். குழந்தைகளாக இருக்கும்போது மட்டுமல்ல, அவர்கள் பெரியவர்களான பின்பும் அத்தகைய சிறந்த உறவை மேற்கொள்ளும் அளவுக்கு தாத்தா- பாட்டிகள் நம்பிக்கைக்குரியவர்களாகத் திகழவேண்டும்.

    தாத்தா-பாட்டிகளுக்கு பழைய கால அனுபவங்கள் நிறைய இருக்கும். ஆனால் அவர்கள் வாழ்ந்தகாலம் வேறு. அதனால் அவர்களது அனுபவங்கள் மட்டுமே சிறந்தது என்று கருதாமல் தாத்தா-பாட்டிகள் காலத்திற்கு ஏற்றபடி தங்களை மாற்றிக்கொள்வது மிக அவசியம். காலத்திற்கும், சூழ்நிலைகளுக்கும் தக்கபடி அவர்கள் மாறினால் மட்டுமே பேரன்-பேத்திகளுடனான உறவை சிறப்பாக பேணமுடியும். இன்றைய கால மாற்றத்தையும், இன்று குழந்தைகள் வளர்ந்துவரும் சூழ்நிலைகளையும் முதியோர்கள் கவனத்தில்கொள்ளவேண்டும். அவர்கள் தங்கள் மகன், மகள்களை வளர்த்த சூழ்நிலை வேறு. தனது பிள்ளைகளை கட்டுப்படுத்தி வளர்த்ததுபோல், தனது பேரன் பேத்திகளை கட்டுப்படுத்தி வளர்க்க முடியாது என்பதை அவர்கள் புரிந்துகொள்ளவேண்டும். தேவையான சுதந்திரத்தை கொடுத்தால் மட்டுமே சிறுவர்-சிறுமியர்களிடம் இணக்கமாக செயல்படமுடியும். சிறுவர்- சிறுமியர்களை புரிந்துகொண்டு செயல்பட்டால் மட்டுமே அவர்களுக்கு நல்ல விஷயங்களை கற்றுக்கொடுக்க முடியும்.

    மனித சுபாவங்கள் வித்தியாசமானவை. சில தம்பதிகள் தாங்கள் பெற்றோராக இருந்த காலகட்டத்தில் குழந்தைகளை கவனிக்காமல் எப்போதும் வேலை வேலை என்று சுழன்றிருப்பார்கள். அதனால் ‘குழந்தைகளோடு இருந்து அவர்களை வளர்த்து அதில் கிடைக்கும் மகிழ்ச்சியை அனுபவிக்காமல் விட்டுவிட்டோமே’ என்ற ஏக்கம் அவர்களிடம் இருந்துகொண்டிருக்கும். அந்த பிள்ளைகள் வளர்ந்து பெரியவர்களாகி திருமணமாகிவிட்ட நிலையில் தாத்தா பாட்டியாகும் அவர்கள், பழைய குறைகளை போக்கும் விதத்தில் பேரன் பேத்திகளை அருகில் இருந்து வளர்த்து, அந்த மகிழ்ச்சியை அனுபவிக்கவேண்டும் என்று நினைப்பார்கள்.

    அப்படி நினைப்பதில் தவறில்லை. ஆனால் அவர்கள் அளவுக்கு மீறிய அன்பை வெளிப்படுத்தி பேரன் பேத்திகளை சோம்பேறிகளாகவோ, பொறுப்பற்றவர்களாகவோ வளர்த்துவிடக்கூடாது. அதுபோல் தனது குழந்தைகளை அதிக கண்டிப்புடன் வளர்த்த பெற்றோரும் தனது பேரக்குழந்தைகளுக்கு அதிக அன்பை கொடுத்து வளர்க்க விரும்புகிறார்கள். அது நல்ல பழக்கம் இல்லை. அன்புக்கும் அளவுகோல் அவசியம். குழந்தைகளுக்கு அன்பும் சுதந்திரமும் கொடுத்து வளர்ப்பதுபோல், அவசியம் ஏற்படும்போது தவறுகளை சுட்டிக்காட்டி லேசான தண்டனைகளை கொடுத்தும் திருத்தவேண்டும்.

    சிலர் ராணுவ கட்டுப்பாட்டோடு வளர்க்கப்பட்டிருப்பார்கள். அவர்கள் பிற்காலத்தில் தாத்தா பாட்டியானதும் அதே கட்டுப்பாடுகளை தங்கள் பேரன் பேத்திகளிடமும் திணிக்கப்பார்ப்பார்கள். அதில் அடக்குமுறையும், கட்டுப்பாடும் மட்டுமே இருக்கும். அன்பு இருக்காது. இப்படி வளர்க்கப்படுபவர்களிடம் குழந்தைப் பருவத்தில் பெரிய பிரச்சினை எதுவும் தோன்றாது. ஆனால் அவர்கள் இளமைப் பருவத்தை எட்டும்போது மிகுந்த மனஅழுத்தத்திற்கு உள்ளாகுவார்கள். மற்றவர்களிடம் அவர்களால் இயல்பாக பழக முடியாது. எதற்கெடுத்தாலும் கோபம் கொள்வார்கள். வன்முறை குணமும் உருவாகலாம். ராணுவ கட்டுப்பாடு போன்ற முறைகளில் வளர்ந்த முதியோர்கள் தனது அடுத்தடுத்த தலைமுறையும் அதுபோல் இருக்கவேண்டும் என்று நினைப்பது தவறு. காலத்திற்கு ஏற்றபடி முதியோர்கள் தங்களை மாற்றிக்கொள்ள முன்வரவேண்டும்.

    சில பெற்றோர்கள் தங்கள் குழந்தைகள் செய்யும் தவறுகளை திருத்தும் விதத்தில் அவர்களுக்கு தண்டனை கொடுக்க முன்வருவார்கள். அப்போது அந்த குழந்தைகள் தாத்தா-பாட்டியின் பின்னால் போய் ஒளிந்துகொள்ளும். அந்த தருணத்தில் முதியோர்கள் குழந்தைகளுக்கு ஆதரவாகப் பேசினால், அவர்கள் செய்யும் தவறுக்கு ஆதரவளித்ததுபோல் ஆகிவிடும். சில முதியோர்கள் ஒரு படி மேலே சென்று, ‘உன் மகன் செய்த இந்த தவறுக்கே இப்படி குதிக்கிறாயே. இதைவிட எத்தனையோ பெரிய தவறுகளை எல்லாம் நீ செய்திருக்கிறாயே..!’ என்று கூறி வக்கலாத்து வாங்கி, குழந்தை செய்ய தவறுகளை நியாயப்படுத்தி, மகனையே மட்டம்தட்டிவிடுவார்கள். இது தவிர்க்கப்படவேண்டியது. இப்படிப்பட்ட தாத்தா பாட்டிகளால் அந்த குழந்தைகளின் எதிர்காலம் பாதிக்கப்படுவதோடு, அந்த குடும்பத்தின் கட்டுறுதியும் சிதைக்கப்பட்டுவிடும்.

    நவீன காலத்திற்கு ஏற்றபடி தாத்தா-பாட்டிகள் தங்கள் விஞ்ஞான அறிவையும் வளர்த்துக்கொள்ளவேண்டும். இப்போது குழந்தைகள் ஆன்லைன் வகுப்புகளில் கலந்துகொள்கிறார்கள். சமூக வலைத்தள செயல்பாடுகளிலும் ஈடுபடுகிறார்கள். அவைகளை பற்றிய அறிவை ஓரளவாவது தாத்தா பாட்டிகள் பெற்றிருக்கவேண்டும். பெற்றிருந்தால் மட்டுமே இந்த காலத்து குழந்தைகளை அவர்களால் பாதுகாக்கவும், பராமரிக்கவும் முடியும்.
    பெரும்பாலும் குழந்தைகள் இந்த சிறுநீர் பாதை தொற்றால் பாதிக்கப்படும் போது அதை சொல்ல தெரிவதில்லை. அம்மாக்கள் கவனித்து கண்டறிந்தால் மட்டுமே இந்த தொற்றை கவனிக்க முடியும்.
    வளரும் குழந்தைகளுக்கு சிறுநீர்த்தொற்று வருவது பொதுவானதுதான். இது எளிதான ஆன்டி பயாடிக் மருந்துகள் மூலம் குணப்படுத்த முடியும். அரிதாக இது தீவிரமான பிரச்சனையின் காரணமாகவும் இருக்கலாம்.

    சிறுநீர்ப்பாதை இரண்டு பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது. மேல் சிறுநீர் பாதை சிறுநீரகங்கள் மற்றும் சிறுநீரகத்திலிருந்து சிறுநீர்ப்பை வரை இயங்கும் மென்மையான குழாய் அமைப்பு உண்டு. கீழ் பாதையில் சிறுநீர்ப்பை மற்றும் வெளிப்புறம் வரை வரக்கூடிய சிறுநீர்ப்பை குழாய் அடங்கும். இந்த சிறுநீர்த்தொற்று ஏன் உண்டாகிறது என்பது குறித்து அம்மாக்கள் தெரிந்துகொள்ள வேண்டும்.

    குழந்தைகளில் யுடிஐக்கான காரணங்களில் பொதுவாக சொல்லப்படுவது மலச்சிக்கல் சிறுநீர் முழுமையாக கழிக்காமல் தேக்கிவைப்பது தான். ஆண் பிள்ளைகளை காட்டிலும் பெண் பிள்ளைகள் தான் அதிகமாக சிறுநீர்த்தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஏனெனில் பெண் பிள்ளைகளின் சிறுநீர்க்குழி குறைவாக இருப்பதோடு ஆசனவாயிலிருந்து வெளிவரும் பாக்டீரியாக்கள் சிறுநீர்ப்பாதை மற்றும் யோனிக்குள் நுழைந்து இரண்டு பகுதிகளிலும் தொற்றை உண்டாக்குகிறது.

    வெகுஅரிதாக சிறுநீர்ப்பை மற்றும் சிறுநீரகங்களில் பிறப்பு குறைபாடுகள் உள்ள குழந்தைகள் அதிகமாக இந்த யுடிஐ பிரச்சனைக்கு ஆளாகிறார்கள். மேலும் சிறுநீர்ப்பாதை குறுகலாக இருந்தாலும் அது சிறுநீரை தடுப்பதோடு அங்கு கிருமிகளை அதிகரிக்க செய்து நோய்த்தொற்றுகளை வளர செய்யலாம்.

    நீண்ட நேரம் டயபர் மாற்றாமல் இருப்பது, அவ்வபோது சிறுநீர் கழித்தாலும் சுத்தமாக பராமரிக்காதது, மோசமான உணவுகளும் கூட காரணமாகலாம்.

    குழந்தைகள் யுடிஐ தொற்றால் பாதிக்கப்படும் போது உண்டாகும் அறிகுறிகள் குறித்து பார்க்கலாம். பிள்ளைகள் சிறுநீர் கழிக்கும் போது இளஞ்சிவப்பு நிறத்தில் இருக்கும். சமயங்களில் சிறுநீரில் இரத்தம் கலந்து வரும். சிறுநீர் கழித்த பிறகு துர்நாற்றம் வீசக்கூடும். சிறுநீர் அடர்த்தியாக கலங்கலாக இருக்கும். அடிக்கடி சிறுநீர் கழிக்க ஓடுவார்கள்.

    சிறுநீர் சொட்டு சொட்டாக பிரியலாம். மிகச்சிறிதளவு மட்டுமே வரலாம். சிறுநீர் வந்த பிறகு கழிப்பறைக்கு செல்வதற்குள் வேகமாக வரக்கூடும். சமயங்களில் இரவில் படுக்கையை நனைக்கலாம். சிறுநீர் கழிப்பதற்கு முன்பு அல்லது பின்பு அந்த இடத்தில் எரிச்சல் வந்தாலும் அது சிறுநீர் தொற்றின் அறிகுறியாக இருக்கலாம். பிள்ளைகள் அடிக்கடி முதுகு பக்கங்களிலும் அடி வயிற்றிலும் வலியை உணர்வார்கள்.

    பிள்ளைகளுக்கு காய்ச்சல், குமட்டல் உணர்வு, வாந்தி, வயிற்றுப்போக்கு போன்றவையும் இருக்க கூடும். இந்த அறிகுறிகள் தொடர்ந்தால் குழந்தைகள் சிறுநீர் கழிக்கும் போது கவனித்து வந்தால் ஆரம்ப நிலையில் சிகிச்சை அளிக்கலாம்.

    ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகள் டயபர் பயன்படுத்துபவர்களாக இருந்தால் அவர்களுக்கு அடிக்கடி டயபர் மாற்றிவிடுங்கள். முடிந்தால் டயபர் அணியாமல் விடுங்கள். அடிக்கடி உள்ளாடை மாற்றினால் கிருமிகள் பரவாமல் தடுக்கலாம். காற்றோட்டமான இடமாக இருப்பதால் இங்கு பாக்டீரியாக்கள் வளர்வது தடுக்கப்படுகிறது.

    பிள்ளைகளுக்கு அதிகமாக பழச்சாறு தண்ணீரை பழக்குங்கள். ஒவ்வொரு முறை சிறுநீர் கழித்த பிறகும் அவர்களது உறுப்பை சுத்தம் செய்து விடுங்கள். கடினமான காரமான, மசாலா அதிகம் நிறைந்த உணவுகள், துரித உணவுகள், ஃபாஸ்ட் ஃபுட் போன்றவற்றை தவிர்த்து மென்மையான உணவுகளை மட்டுமே கொடுத்து பழகுங்கள். சரியான சிகிச்சையோடு, உணவு முறை மற்றும் வாழ்க்கை முறையிலும் கவனம் செலுத்தினால் மீண்டும் இந்த சிறுநீர் தொற்று வராமல் தடுக்கலாம்.
    ×