என் மலர்
குழந்தை பராமரிப்பு
- கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.
- தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.
* தேர்வு கால அட்டவணையை (Time Table) பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.
* தேர்விற்கான நுழைவுச் சீட்டினையும் (Hall Ticket), தேவையான எழுதுப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
* தேர்வு நாட்களில் காலை சிற்றுண்டியை (அவித்த உணவு, இட்லி சிறந்தது) கண்டிப்பாக சாப்பிட்டு செல்ல வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்த்தல் வேண்டும்.
* தேர்வு நாட்களில் விரைவாக தூங்கச் சென்று, அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிப்பது நல்லது.
* இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேர்வு எழுதும் சமயத்தில் அசதி, மறதி, வாந்தி, குழப்பம் மற்றும் சோர்வு ஏற்படும்.
* தேர்வு அறையில் வினாத்தாளில் தேர்வு எண்ணைத் தவிர, வேறு எதுவும் எழுதுதல் மற்றும் டிக் அடித்தல் கூடாது.
* தேர்வு நேரத்தில் வினாத்தாள் பெற்றவுடன் வினாத்தாளில் உள்ள வினாக்களை வரி வரியாக முழுவதுமாக படித்து புரிந்துகொண்டு, எவ்வித பதற்றமும் இன்றி தேர்வினை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக எழுதத் தொடங்க வேண்டும்.
* தேர்வுக்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். வினாவிற்கு உண்டான மதிப்பெண்ணிற்கு ஏற்றவாறு விடைகளை சுருக்கியும் விரித்தும், முக்கிய தலைப்புகள் இட்டும், தெளிவான கையெழுத்தில் எழுதுதல் மிக அவசியம்.
* கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.
* இன்றைய கல்விச் சூழலில் பாடத்திட்ட நடைமுறையில் 'சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்' (Hot Questions) கேட்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
* அறிவியல் பாடங்களில் வரும் வரை படங்களை வரைந்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு, தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.
* வினாக்களை தேர்வு செய்து எழுதுவதற்கு (Choice) வாய்ப்பு இருக்கும் பொழுது, முழுமையாக நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது சிறந்தது.
மலர்விழி, பெங்களூரு.
- ஆண்டுக்கு ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை செய்ய வேண்டும்.
- குழந்தைகள், செல்போன் பயன்படுத்துவதைப் குறைக்கவோ தடுக்கவோ உதவ வேண்டும்.
உங்கள் குழந்தை தொலைக்காட்சிப் பெட்டி அருகில் அமர்ந்து பார்க்கிறது என்றால் அதற்குக் கிட்டப் பார்வைக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது.
குழந்தைகள், கண்களைச் சிமிட்டிக்கொண்டிருந்தாலோ, கண்களைச் சுருக்கிச் சுருக்கிப் பார்த்தாலோ, அடிக்கடி கண் கட்டி வந்தாலோ அந்தக் குழந்தைக்குக் கண் பார்வைக் குறைபாடு இருக்க வாய்ப்புள்ளது. அதேபோல, அடிக்கடி குழந்தைகளுக்குத் தலைவலி ஏற்பட்டாலும், பார்வைக் குறைபாடு இருக்கிறதா என்று உடனடியாகப் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
உங்கள் குழந்தைகள் வெயிலில் கண்களைச் சுருக்கிச் சுருக்கிப் பார்த்தால், அவர்களின் விழித்திரையில் பிரச்சினை இருக்க வாய்ப்புள்ளது. மேலும், பார்வைக் குறைபாடு உள்ள குழந்தைகளுக்கு விழித்திரை விலகல் மற்றும் கிளாக்கோமா வரவும் சாத்தியமுள்ளது. ஆண்டுக்கு ஒருமுறை கண் விழித்திரை பரிசோதனை செய்து கொள்வதன் மூலம் இதன் பாதிப்பைத் தடுக்கலாம்.
எல்லாவற்றுக்கும் மேலாக, தற்போது குழந்தைகள் அதிக நேரம் செல்போனில் விளையாடிக் கொண்டிருப்பதால், பார்வைக் குறைபாட்டால் பாதிக்கப்படுகின்றனர். இதைத் தடுக்க குழந்தைகள், செல்போன் பயன்படுத்துவதைப் பெற்றோர்கள் குறைக்கவோ தடுக்கவோ உதவ வேண்டும்.
- கண்ணில் உள்ள தசைகளை வலுப்படுத்த கண்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம்.
- தினமும் காலை சூரிய உதயத்தின் போதும், மாலையில் சூரிய அஸ்தமனத்தின் போதும் கண் பயிற்சிகளை செய்ய வேண்டும்.
இன்றைய சூழலில் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகிஉள்ளது. தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக குழந்தைகள் அமரும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
கண்ணில் உள்ள தசைகளை வலுப்படுத்த கண்களுக்கு பயிற்சி அளிப்பது அவசியம். அதாவது கண்களை அடிக்கடி நன்றாக சிமிட்டுமாறு குழந்தைகளை சொல்ல வேண்டும். அவ்வாறு செய்வதன் மூலம் கண்களுக்கு நல்ல ஈரப்பசை கிடைத்து, கண் எரிச்சலும், அரிப்பும் ஏற்படாது.
மேலும் பார்வை திறனை அதிகரிக்க வெள்ளையான சுவரைப் பார்த்து, தலையை அசைக்காமல், திருப்பாமல் கண்களால் 8 போட வேண்டும். இதுபோல சில முறை பயிற்சி செய்தாலே கிட்டப் பார்வை, தூரப் பார்வை பிரச்சினை சிறிது சிறிதாக குறைந்து விடும். தினமும் காலை சூரிய உதயத்தின் போதும், மாலையில் சூரிய அஸ்தமனத்தின் போதும் கண் பயிற்சிகளை செய்ய வேண்டும். கண் கருவிழிகளை மட்டும் இடமிருந்து வலமாக சுற்றுதல், பின்னர் வலமிருந்து இடமாக சுற்றுதல், கருவிழிகளை மேலும் கீழும் பார்த்தல் உள்ளிட்ட பயிற்சிகளின் மூலம் ஒருவர் தெளிவாகவும், கவனமாகவும் பார்க்க முடியும். மேலும் கண் மருத்துவர், குழந்தைகளின் பார்வை திறனுக்கு தக்கவாறு, தேவையான கண் பயிற்சிகளையும் பரிந்துரை செய்வார்.
பார்வைக் குறைபாட்டைத் தடுக்க…
# ஒவ்வொரு குழந்தையையும் பள்ளியில் சேர்க்கும் முன் மற்றும் வருடம் ஒரு முறை என முழுக் கண் பரிசோதனை செய்துகொள்ள வேண்டும்.
# குழந்தைகளுக்கு வைட்டமின் சத்துள்ள உணவுப் பொருட்களான கேரட், கீரை வகைகள், காய்கறிகள், பப்பாளி, மீன், பால், முட்டை போன்றவற்றைக் கொடுக்க வேண்டும்.
# குழந்தைகள் படிக்கும் இடத்தில் வெளிச்சம் சரியாக இருக்கும்படி பார்த்துக்கொள்ள வேண்டும்.
# குழந்தைகளுக்குக் கண்ணில் ஏதாவது பிரச்சினை என்றால் உடனடியாகக் கண் மருத்துவரை அணுக வேண்டும். அதை விடுத்து நாமாகவே வைத்தியம் செய்யக் கூடாது.
# வீடியோ கேம், செல்போன் விளையாட்டுகள் போன்றவற்றை விளையாடுவதிலிருந்து குழந்தைகளைத் தடுத்து, டென்னிஸ், பாட்மிண்டன் போன்ற இதர மைதான விளையாட்டுகளில் அவர்களைக் கவனம்செலுத்த வைக்க வேண்டும்.
- குழந்தைகளை சூரிய ஒளியில் நன்கு விளையாட விட வேண்டும்.
- குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
இன்றைய சூழலில் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகிஉள்ளது. தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக குழந்தைகள் அமரும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள கொடுக்க வேண்டும். கண்களுக்கு சமமான உயரத்தில் தொலைக்காட்சியின் திரை இருக்க வேண்டும். தொலைக்காட்சி பெட்டியில் இருந்து 6 அடி தூரத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.
குழந்தைகளை சூரிய ஒளியில் நன்கு விளையாட விட வேண்டும். அப்போது தான் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சத்துக்கள் அதிகளவு கிடைக்கும். மேலும் குழந்தைகள் கண்களில் ஏதேனும் பிரச்சினை என்று தெரிவித்தால் அவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். தாங்களாகவே வைத்தியம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
மாணவர்கள், 80 சதவீதக் கல்வியைத் தங்கள் கண்கள் மூலம்தான் கற்கிறார்கள். அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் நல்ல கண் பார்வை முக்கியம். ஒரு குழந்தையின் எதிர்காலம் முழுவதும் அந்தக் குழந்தையின் நல்ல பார்வையைச் சார்ந்தே அமைகிறது. ஒரு குழந்தைக்கு நல்ல பார்வை கிடைக்க அவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முன் வர வேண்டும்.
* பள்ளிக்கூடங்களில் உள்ள கரும்பலகையில் எழுதப்படும் எழுத்துகளை படிக்க குழந்தைகள் சிரமப்படுதல்
* குழந்தைகள் ஏதேனும் எழுத்தை தெளிவாக பார்க்க கண்களை அடிக்கடி தேய்த்தல்
* தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க, கண்களை சுருக்குதல்
* படிக்கும்போது புத்தகங்களை முகத்திற்கு மிக அருகில் வைத்து படித்தல்
* குழந்தைகள் கண் வலி, தலை வலி என தொடர்ந்து கூறுவது
இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே கண் மருத்துவரை பார்ப்பது நல்லது.
- குழந்தையாக கற்க ஆரம்பித்து, தன் வாழ்நாள் முடியும் வரை கல்வியை கற்றுக்கொண்டே இருக்க முடியும்
- கல்வி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுக்கும்.
நம் வாழ்க்கையை முன்னேற்றும் சக்திவாய்ந்த கருவி கல்வியாகும். கல்வி ஒருவருடைய அறிவையும், ஆற்றலையும் உயர்த்தி சமூகத்தில் நல்ல அந்தஸ்தை தரும்.கல்வி ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுப்பதோடு, நேரத்தின் மதிப்பை நமக்கு உணர்த்துகிறது. குழந்தையாக கற்க ஆரம்பித்து, தன் வாழ்நாள் முடியும் வரை கல்வியை கற்றுக்கொண்டே இருக்க முடியும், அதற்கு எல்லை ஏதுமில்லை.
கல்வி கற்றவர்களுக்கு வேலைவாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது மற்றும் உயர் பதவிகளிலும் அவர்களுக்கே வாய்ப்பு அதிகமாக கிடைக்கிறது.
கல்வி ஒருவருக்கு எந்தெந்த இடத்தில் எவ்வாறு அணுக வேண்டும் என்பதையும், கருத்துப்பரிமாற்றத் திறனையும் கற்றுத்தருகிறது. கற்றவர்களுக்கு நினைத்ததை தெளிவாக வெளிப்படுத்தும் ஆற்றல் இருப்பதோடு , மற்றவர்களின் எண்ணங்களையும் பல கோணங்களில் ஆராய்ந்து அதற்கு தீர்வு கூறும் வல்லமை பெற்றிருப்பர். இதனால் அவர்களால் எந்த சூழலையும் சிறப்பாக எதிர்கொள்ள முடிகிறது.
கல்வி ஒருவருக்கு தொழில்நுட்ப அறிவை தருவதோடு, அதனால் அவர்களால் எந்த எந்திரத்தையும் எளிதாக உபயோகிக்க முடிகிறது மற்றும் பல துறைகளில் அவர்கள் சாதித்து காட்டுகிறார்கள். ஒரு தலைமுறையினரை அடுத்த தலைமுறையினருக்கு முறையாக வழி நடத்த வேண்டும் என்பதிலும் சமுதாயத்தில் பங்களிப்பு செய்ய வைப்பதிலும் கல்வி முக்கிய பங்கு வகிக்கிறது. தொழில்நுட்ப வளர்ச்சிக்கும், புதியகண்டுபிடிப்புகளுக்கும் கல்வி உதவி புரிகிறது.
- இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும்.
- கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.
தேர்வு கால அட்டவணையை (Time Table) பார்வையில் படும்படி வைத்துக் கொள்ளவும்.
* தேர்விற்கான நுழைவுச் சீட்டினையும் (Hall Ticket), தேவையான எழுதுப் பொருட்களையும் தயார் நிலையில் வைத்துக் கொள்ளவும்.
* தேர்வு நாட்களில் காலை சிற்றுண்டியை (அவித்த உணவு, இட்லி சிறந்தது) கண்டிப்பாக சாப்பிட்டு செல்ல வேண்டும். எண்ணெய் பதார்த்தங்களைத் தவிர்த்தல் வேண்டும்.
* தேர்வு நாட்களில் விரைவாக தூங்கச் சென்று, அதிகாலையில் எழுந்து பாடங்களைப் படிப்பது நல்லது.
* இரவில் அதிக நேரம் கண் விழித்து படிப்பதை தவிர்க்க வேண்டும். இல்லையெனில் தேர்வு எழுதும் சமயத்தில் அசதி, மறதி, வாந்தி, குழப்பம் மற்றும் சோர்வு ஏற்படும்.
* தேர்வு அறையில் வினாத்தாளில் தேர்வு எண்ணைத் தவிர, வேறு எதுவும் எழுதுதல் மற்றும் டிக் அடித்தல் கூடாது.
* தேர்வு நேரத்தில் வினாத்தாள் பெற்றவுடன் வினாத்தாளில் உள்ள வினாக்களை வரி வரியாக முழுவதுமாக படித்து புரிந்துகொண்டு, எவ்வித பதற்றமும் இன்றி தேர்வினை தன்னம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக எழுதத் தொடங்க வேண்டும்.
* தேர்வுக்கு நேர மேலாண்மை மிகவும் முக்கியமானதாகும். வினாவிற்கு உண்டான மதிப்பெண்ணிற்கு ஏற்றவாறு விடைகளை சுருக்கியும் விரித்தும், முக்கிய தலைப்புகள் இட்டும், தெளிவான கையெழுத்தில் எழுதுதல் மிக அவசியம்.
* கட்டாய வினாக்களுக்கு விடை அளிக்க தவற வேண்டாம்.
* இன்றைய கல்விச் சூழலில் பாடத்திட்ட நடைமுறையில் 'சிந்தனையைத் தூண்டும் வினாக்கள்' (Hot Questions) கேட்க வாய்ப்பு அதிகம் உள்ளது.
* அறிவியல் பாடங்களில் வரும் வரை படங்களை வரைந்து பார்த்து பயிற்சி எடுத்துக் கொள்ள வேண்டும்.
* எதிர்கால வாழ்வினை கருத்தில் கொண்டு, தேர்வு அறையில் எவ்வித ஒழுங்கீன செயல்களில் ஈடுபடுதல் கூடாது.
* வினாக்களை தேர்வு செய்து எழுதுவதற்கு (Choice) வாய்ப்பு இருக்கும் பொழுது, முழுமையாக நன்கு பதில் தெரிந்த கேள்விகளுக்கு பதில் அளிப்பது சிறந்தது.
-ர.சவுந்தரபாண்டியன், எம்.எஸ்சி., எம்.எம்.எட்., எம்.பில்.,
முதுகலை உயிரியல் ஆசிரியர்,
ஊ.பு.அ. சவுந்திரபாண்டியன் மேல்நிலைப்பள்ளி,
அயனாவரம், சென்னை.
- பிள்ளைகள் ஆசைப்படுகின்றனர் என்பதற்காக பெற்றோர் இருசக்கர வாகனங்களை வாங்கிக் கொடுக்கின்றனர்.
- மாணவர்கள் செய்யும் தவறால், சாலையில் செல்லும் பொதுமக்களும் விபத்தில் சிக்கி வருகின்றனர்.
சமீப காலமாக சாலையில் இளைஞர்கள் சாகச பயணங்களை மேற்கொள்ளும் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி வருகின்றன.
இதுபோன்று, தினம்தினம் சாகச பயணம் மேற்கொள்ளும் சம்பவங்கள் தொடர்ந்தாலும், 'நமக்கேதும் நடக்காது' என்ற மனநிலையில், விபரீதம் தெரியாமல் இளைஞர்கள் மற்றும் மாணவர்கள் வாகனம் ஓட்டுவதே அடுத்தடுத்த விபத்துகளுக்கு வழிவகுக்கிறது என்பதே நிதர்சனமான உண்மை.
பிள்ளைகள் ஆசைப்படுகின்றனர் என்பதற்காக பெற்றோர் விலையை கூட யோசிக்காமல் அதிக திறன் கொண்ட புதிய மாடல் இருசக்கர வாகனங்களை வாங்கிக் கொடுக்கின்றனர். புதிய மோட்டார் சைக்கிள், அதிக திறன் கொண்டது என்பதால் ஆர்வ மிகுதியில் மாணவர்கள் சாலையில் சாகசங்களை செய்து அதிவேகமாக பறப்பது வாடிக்கையாகி விட்டது.
அதிலும் மோட்டார் சைக்கிளில் நான்கு பேர் அமர்ந்து ஹெல்மெட் கூட அணியாமல், மற்ற வாகன ஓட்டுனர்களை அச்சுறுத்தும் வேகத்தில் பறக்கின்றனர். இதனால் அடிக்கடி விபத்துகளும் அரங்கேறுவது வழக்கமாகிவிட்டது. மாணவர்கள் செய்யும் தவறால், சாலையில் செல்லும் பொதுமக்களும் விபத்தில் சிக்கி வருகின்றனர். சமீப காலமாக நடக்கும் வாகன விபத்தில் சிக்கி உயிரை பறிகொடுப்பவர்கள் 25 வயதுக்குட்பட்ட இளைஞர்களே. அவர்கள் செய்யும் தவறால் பாதிக்கப்படுவது என்னவோ அப்பாவி பொதுமக்கள் தான். பொதுமக்கள் தட்டிக்கேட்டாலும், மாணவர்கள் அதனை கண்டுகொள்வதில்லை. ஆசிரியர்களும் தற்போது மாணவர்களை கண்டிக்க முடியாத இடத்தில் உள்ளனர். இதுகுறித்து பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:
அசுர வேகத்தில் செல்லும் இளைஞர்கள்
கடலூர் பாதிரிக்குப்பம் கோபிநாத்: இருசக்கர வாகனங்களால் தான் விபத்துகள் அதிகளவு நடக்கிறது என புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. பள்ளி, கல்லூரி செல்லும் வயதில் பைக் வாங்கி கொடுக்கக்கூடாது என அறிவுறுத்தினாலும் பெற்றோர் செய்யும் தவறால் பலருக்கும் பாதிப்பு ஏற்படுகிறது. விபத்துகளில் அவர்கள் காயமடைந்து கால், கைகளை இழப்பது, உயிர் இழப்பதை காணும் போது உள்ளமெல்லாம் பதை பதைக்கிறது. கடலூர் மாநகரில் இரவில் பல இளைஞர்கள் அதிக திறன் கொண்ட பைக்குகளில் சாகச பயணம் மேற்கொள்கின்றனர். அவர்கள் சாலையில் அசுர வேகத்தில் செல்லும் போது, பொதுமக்கள் பலர் விபத்தில் சிக்குகின்றனர். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க முதலில் பெற்றோர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.
பீனிக்ஸ் பறவை போல்...
விருத்தாசலம் மங்கையர்கரசி: 18 வயதுக்கு குறைவான சிறுவர்களுக்கு மோட்டார் சைக்கிள் ஓட்டுவதற்கான தகுதியே கிடையாது. ஆனால் 18 வயதுக்கு குறைவான பள்ளி, கல்லூரி மாணவர்கள் தற்போதைய காலத்தில் அதிகளவு மோட்டார் சைக்கிள்களை ஓட்டி வருகின்றனர். இளங்கன்று பயம் அறியாது என்பதை போல ஒரு சில மாணவர்கள் தங்களுடன் படிக்கும் சக மாணவர்களை ஏற்றிக்கொண்டு நான்கு பேர், 5 பேர் என சாகச பயணத்தில் ஈடுபடுகின்றனர். அதுவும் போக்குவரத்து நெரிசல் உள்ள விருத்தாசலம் போன்ற நகரங்களில் அவர்கள் பயணம் மேற்கொள்ளும் போது எதிரே வரும் வாகன ஓட்டிகள் கடும் அவதி அடைகின்றனர்.
மேலும் பள்ளி சீருடைகளிலேயே நகரை வலம் வந்து கொண்டிருக்கிறார்கள். பள்ளிக்கூடங்களுக்கு மோட்டார் சைக்கிளை கொண்டு செல்ல அனுமதி இல்லை என்பதால் அருகிலுள்ள கடைகளில் நிறுத்திவிட்டு செல்கின்றனர். மீண்டும் வீட்டிற்கு செல்லும் போது பீனிக்ஸ் பறவை போல பறக்கின்றனர். அப்பாவி விவசாயிகள் மீது அபராதத்தை திணிக்கும் போக்குவரத்து போலீசாரோ, இது போன்ற மாணவர்களை கண்டுகொள்வதில்லை. எனவே கல்வித்துறை அதிகாரிகளும், போக்குவரத்து போலீசாரும் இணைந்து பெற்றோர்- ஆசிரியர் கூட்டத்தைக் கூட்டி மாணவர்களின் எதிர்கால நலனை கருத்தில் கொண்டு பெற்றோர்களுக்கு உரிய அறிவுரை வழங்க வேண்டும்.
பெற்றோர் பொறுப்பேற்க வேண்டும்
விருத்தாசலம் சந்திரசேகர்: வாகனம் மோதி மோட்டார் சைக்கிளில் சென்ற மாணவன் பலி என தினந்தோறும் செய்தித்தாளில் செய்தி வந்து கொண்டு தான் இருக்கின்றன. ஆனால் இதனை எல்லாம் பார்க்கும் பெற்றோர், அதை ஒரு செய்தியாக மட்டுமே பார்த்து கடந்து செல்கின்றனர். தங்களுக்கு நடக்கும் வரை கேள்விப்படுவது எல்லாம் செய்தியாக தான் இருக்கும். நடந்து விட்டால் தான் கவலை பிறக்கும். மாணவர்களுக்கு ஆர்வக்கோளாறால் சாகசம் செய்ய வேண்டும் என்ற எண்ணம் அதிகம் இருக்கும். இந்த நேரத்தில் அவர்களை பக்குவப்படுத்த வேண்டியது பெற்றோர் மற்றும் ஆசிரியர்களின் கடமையாகும். ஆனால் இன்று ஆசிரியர்கள், மாணவர்களை கண்டிக்க முடியாத நிலையில் உள்ளனர். அதனால் முழு பொறுப்பையும் பெற்றோர்களே, ஏற்க வேண்டும். மாணவர்களுக்கு மோட்டார் சைக்கிளை பள்ளி பருவத்தில் கொடுக்கக் கூடாது.
வெளியூர்களுக்கு சென்று படிக்க நேரிட்டால் அவர்களை பஸ்சிலோ அல்லது சைக்கிளிலோ சென்று வர அறிவுறுத்த வேண்டும். போலீசாரும் தங்களுக்கு என்ன என்று இல்லாமல் ஒவ்வொருவரும் சாகச பயணம் மேற்கொள்ளும் மாணவர்களை கண்டறிந்து கண்டித்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்தியாவின் வருங்கால தூண்களாகிய இளம் பிள்ளைகளை நாமே நமது அலட்சியத்தால் இழக்கலாமா?. அதனால் பள்ளிகளில் சமூக ஆர்வலர்களை கொண்டு விழிப்புணர்வு கூட்டம் நடத்தி மாணவர்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.
- நல்ல நட்பை அடையாளம் காண சில வழிகள் உண்டு.
- கஷ்டம் வந்தபோது கை கொடுத்தால் அது நல்ல நட்பு.
நண்பர்களிலே நல்ல நண்பர் யார்? என்பது அனுபவத்தின் மூலம் தான் தெரியுமே தவிர, சாதாரணமாக கண்டுகொள்ள முடியாது. நல்ல நட்பை அடையாளம் காண சில வழிகள் உண்டு. உனக்கு கஷ்டம் வந்தபோது கை கொடுத்தால் அது நல்ல நட்பு. புறம்பேசி மகிழ்ந்தால் தீயநட்பு. நீ இல்லாத இடத்தில் உன்னைப் பற்றி தவறாக பேசும்போது, நல்ல நண்பன் அதை மறுத்து பேசுவான். அப்படிப்பட்டவர்களையே நாம் நல்ல நண்பனாக ஏற்றுக்கொள்ள வேண்டும்.
நண்பர்கள் ஒன்றாக உட்கார்ந்து பேசிய காலமெல்லாம் மலையேறி போய்விட்டது. இன்றைக்கு சக நண்பர்களோடு பேசுவதைவிட, கையில் இருக்கும் செல்போன் அல்லது கம்ப்யூட்டர் முன்னாடியே தங்கள் காலத்தை கழித்து விடுகிறார்கள். நண்பர்களிடம் நேரில் பேச முயற்சி எடுங்கள். நல்ல நட்பு அமைய, ஒருவரோடு ஒருவர் நேரில் பேசுவதைவிட சிறந்த வழி வேறு எதுவும் இல்லை. ஏனென்றால் நேரில் ஒருவருடன் பேசும்போது அவர் எப்படி பேசுகிறார். அவர் என்ன உணர்ச்சிகளை முகத்தில் காட்டுகிறார். அவருடைய சைகைகள் எப்படி இருக் கிறது? என எல்லா விஷயத்தை யும் கவனிக்க முடியும்.
ஆன்லைனில் தொடர்பு இருந்தால் மட்டும் உண்மையான நட்பு வளர்ந்து விடாது. நீங்களும் சரி உங்கள் நண்பரும் சரி ஒருவருக்கொருவர் அன்பு காட்டி, நன்றாக புரிந்துகொள்ள வேண்டும். அப்போதுதான் உங்கள் நட்பு நிலைத்திருக்கும். நல்ல நட்புக்கு ஆதாரமாக இருக்கும் இந்த குணங்களை நீங்கள் ஆன்லைனில் காட்ட முடியுமா? யோசித்து பாருங்கள்.
தாய், தந்தையைவிட தன் வாழ்வில் அதிக நேரம் நம்முடன் இருப்பவர்கள் நண்பர்களே. தாய், தந்தையிடம் கூட ஆலோசனை செய்ய முடியாத பல விஷயங்களை நண்பர்களுடன் கலந்துரையாடுவதன் மூலம் ஒரு தெளிவான தீர்வை பெறலாம். பெற்றோரது அன்பு, உற்றார் உறவினர்களது பாசம், நேசம் சாதிக்க முடியாததை நட்பு சாதித்து விடுகிறது.
நட்பு, தோழமை என்பது இருவர் இடையே அல்லது பலரிடம் ஏற்படும் ஒரு உன்னத உறவாகும். வயது, மொழி, இனம், நாடு என எந்த எல்லைகளும் இன்றி புரிந்துகொள்ளுதல், அனுசரித்தலை அடிப்படையாக கொண்டது. நண்பர்கள் தங்களின் தனிப்பட்ட விருப்பு, வெறுப்புகளை மறந்து இன்பத்திலும், துன்பத்திலும் தானாக முன்வந்து உணர்வுகளை பகிர்ந்துகொள்வார்கள்.
ஒரு நாணயத்தில் இரண்டு பக்கங்களைப் போல நண்பர் களையும், நல்ல நண்பர்கள், கெட்ட நண்பர்களையும் தெரிந்துகொள்ள லாம். நல்ல நண்பன் தனது நட்பை முதலில் தனது சிந்தனை, பண்பாடு, நடத்தை, ஒழுக்கம் என்பன வற்றை வெளிப்படையாகவே வழங்குவான்.
புகைபிடித்தல், போதை பொருள், பாலியல் கொலை, கொள்ளை உள்ளிட்ட தீயநடத்தைகளை கொண்டவர்களை நட்பாக பெறக்கூடாது. அது போன்றவர்களிடம் விலகி இருக்க பெற்றோர்களும், நல்ல நண்பர்களும் அவர்களுக்கு வழிகாட்ட வேண்டும். நம்மை சுற்றியிருப்பவர்கள் அத்தனை பேரும் நமக்கு நல்லது செய்பவர்கள் என்று எப்படி நம்புவது நாம் விட்டு கொடுக்கும் போதும் மனதை திறந்து உள்ளதை சொல்ல முற்படும்போதும் மற்றவர்கள் அதை தவறாக பயன்படுத்தி கொள்ள முற்படலாம். அவர்களிடம் எந்த சூழ்நிலையிலும் நெருங்காமல் இருப்பது நல்லது.
பகிர்ந்து கொள்ளுதல் ஒரு நல்ல பண்பு. நல்ல நட்பிற்கு இலக்கணமே பகிர்ந்துகொள்ளுதல்தான். எல்லாரும் நல்லவரே என்பது நம்மில் பலரின் எண்ணம். இதுவும் ஒரு விதத்தில் வெகுளித்தனம்தான். நண்பன் நல்லவனா என்பதை ஆராய்ந்துதான் நட்பு கொள்ள வேண்டும். நல்ல நண்பர்களோடு பழகுவோம். நட்புடன் வளர்வோம்.
- பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது.
- ஒவ்வொரு வகுப்பறையிலும் குறைந்தது 5 மாணவர்களாவது கண் கண்ணாடி அணிகின்றனர்.
கடந்த 10, 15 ஆண்டுகளுக்கு முன்பு வரை 50 வயதை கடந்தவர்கள் தான் கண் பார்வை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டு ஆஸ்பத்திரிகளுக்கு சென்று வந்தனர். இதனால் கண் ஆஸ்பத்திரிகளும் பெரிய நகரங்களில் மட்டுமே அமைந்திருந்தது. ஆனால் இன்றைய காலகட்டத்தில் அதற்கு நேர்மாறாக 5 வயது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் கண் பார்வை பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வளர்ச்சியில் மாறுதல்கள்
காரணம், தற்போது உள்ள குழந்தைகளின் கைகளில் ஸ்மார்ட் போன், டேப்லெட், மடிக்கணினி உள்ளிட்டவை தான் அதிகளவில் தவழ்கிறது. அதில் இருந்து வெளியேறும் ஒளிக்கதிர்கள் கண் பார்வையை இழக்க வைக்கிறது. மேலும் ஊட்டச்சத்து குறைபாடு, கணினி, தொலைக்காட்சி ஆகியவற்றில் நீண்டநேரம் செலவிடுதல், ஜீன் தொடர்பான குறைபாடுகள், சுற்றுச்சூழல் குறைபாடுகள், கண்களின் வளர்ச்சியின்போது ஏற்படும் மாறுதல்கள் உள்ளிட்ட பல காரணிகள், கண் சார்ந்த பிரச்சினைகளை ஏற்படுத்துகின்றன. சில குழந்தைகளுக்கு பார்வை குறைபாடு காரணமாக மாறுகண் கூட ஏற்படலாம்.
குறிப்பாக கடந்த 20 ஆண்டுகளை எடுத்துக்கொண்டால், பள்ளிக் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகியுள்ளது. பல பெற்றோர்களுக்கு, தங்கள் குழந்தைகளின் கண்பார்வை பாதிப்பு குறித்து போதியளவு விழிப்புணர்வு இல்லை என்பது ஒரு கசப்பான உண்மை. இதனால் தற்போது பார்வை குறைபாட்டால் ஏராளமான சிறுவர்கள் கண் ஆஸ்பத்திரிகளுக்கு படையெடுக்கின்றனர்.
பள்ளிக்கூடங்களிலும் ஒவ்வொரு வகுப்பறையிலும் குறைந்தது 5 மாணவர்களாவது கண் கண்ணாடி அணிகின்றனர். எனவே, குழந்தைகளுக்கு ஏற்படும் கண் தொடர்பான பிரச்சினைகள் மற்றும் அவர்களின் கண்ணொளியை பாதுகாத்தல் உள்ளிட்டவை குறித்து டாக்டர் மற்றும் பொதுமக்கள் தங்கள் கருத்துகளை தெரிவித்துள்ளனர். அதுபற்றிய விவரம் வருமாறு:-
குழந்தைகளை விளையாட விடவேண்டும்
திடீர்குப்பம் ரேவதி: இன்றைய சூழலில் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகிஉள்ளது. தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக குழந்தைகள் அமரும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள கொடுக்க வேண்டும். கண்களுக்கு சமமான உயரத்தில் தொலைக்காட்சியின் திரை இருக்க வேண்டும். தொலைக்காட்சி பெட்டியில் இருந்து 6 அடி தூரத்தில் அமர்ந்திருக்க வேண்டும். குழந்தைகளை சூரிய ஒளியில் நன்கு விளையாட விட வேண்டும். அப்போது தான் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சத்துக்கள் அதிகளவு கிடைக்கும். மேலும் குழந்தைகள் கண்களில் ஏதேனும் பிரச்சினை என்று தெரிவித்தால் அவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். தாங்களாகவே வைத்தியம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.
வீட்டுக்குள் முடங்கும் குழந்தைகள்
கடலூர் ஷோபனா: குழந்தைகள் தவழ தொடங்குவதில் இருந்து அவர்கள் அழாமல் இருக்க பெற்றோர் செல்போன்களை கொடுத்து பழக்கி விடுகின்றனர். அதன் பிறகு குழந்தைகள் வளர வளர அவர்கள் செல்போனிலேயே மூழ்கி கிடக்கின்றனர். தற்போது கிராம பகுதிகளில் உள்ள குழந்தைகள் மட்டுமே அருகில் உள்ள குழந்தைகளுடன் விளையாட செல்கின்றனர். நகர பகுதிகளில் வசிக்கும் பெரும்பாலான மக்கள் தங்கள் பிள்ளைகளின் பாதுகாப்பு கருதி அவர்களை வீட்டை விட்டு வெளியே விளையாட அனுப்புவதில்லை. இதனால் வீட்டுக்குள் முடங்கும் குழந்தைகள் செல்போன், டி.வி.யே கதி என கிடக்கின்றனர். மணிக்கணக்கில் செல்போனில் மூழ்கி கிடப்பதால் சிறு வயதிலேயே பார்வை குறைபாடு ஏற்படுகிறது. அதனால் குழந்தை பருவத்தில் செல்போன் கொடுப்பதை குறைத்து, விளையாட வைக்க வேண்டும். மேலும் சத்தான காய்கறிகள் வழங்க வேண்டும்.
பார்வை குறைபாடு
விருத்தாசலம் குழந்தைகள் நல மருத்துவ நிபுணர் டாக்டர் அனுபிரியா: குழந்தைகளின் கண் பார்வை பிறந்து 5 வயது வரை அவர்களின் உடல் மற்றும் மனவளர்ச்சிக்கு முக்கிய பங்கு வகிக்கிறது. கண் பார்வை குறைபாட்டில் முக்கியமானவை கிட்டப்பார்வை, தூரப்பார்வை. தூரப்பார்வை குழந்தை பிறப்பில் இருந்து 7 வயது வரை வளர்ச்சியை பாதிக்கின்றது. அதனால் குழந்தைகளுக்கு குவிந்த பார்வை அல்லது மாறுபட்ட பார்வை இருப்பின் உடனே மருத்துவரை அணுகி சரி செய்து கொள்ள வேண்டும். இருளான இடத்தில் செல்போன் திரையில் இருந்து வெளிவரும் புறஊதாக்கதிர், மூளையில் நாளமில்லா சுரப்பி உருவாவதை தடுப்பதால் தூக்கமின்மை ஏற்படுகிறது. இதனால் செல்போனை பயன்படுத்தும் போது புற ஊதாக்கதிரை தடுக்கும் கண்ணாடிகளை பயன்படுத்த வேண்டும். பல்வேறு வழிகாட்டுதல்கள் இருந்தாலும் பொதுவாக திரை நேரத்தை ஒரு மணி நேரத்திற்கு மேல் பயன்படுத்தாமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு 10 நிமிடத்திற்கும் இடைவெளி எடுத்துக் கொள்ள வேண்டும். கண்ணை திசை திருப்புதல், தூரமாக பார்த்தல், கண்ணை மூடி இருத்தல் உள்ளிட்ட செயல்பாடுகள் மூலம் கண் பார்வை குறைபாடு ஏற்படாமல் தவிர்க்கலாம். மேலும் கீரை வகைகள், ஆட்டு இறைச்சி கல்லீரல், மீன் மற்றும் ஆரஞ்சு உள்ளிட்டவை சாப்பிடுவதன் மூலம் பார்வைதிறன் மேம்படுகிறது.
- குழந்தையின் பொக்கை வாய்ச் சிரிப்புக்கு மயங்காதவர் யாருமே இருக்க முடியாது.
- குழந்தையின் பற்களை ஆரம்பத்திலிருந்து பராமரிக்க வேண்டியது அவசியம்.
தாய்ப்பால் குடிக்கும் பச்சிளம் குழந்தைகளின் பல் பராமரிப்பு பற்றிய சில அத்தியாவசியத் தகவல்கள். ஏன் குழந்தைகளுக்கு பற்கள் முளைக்கும்போதே சொத்தையாக வளர்கிறது என்பதற்கான காரணங்களை தெரிந்து கொள்ளலாம்.
குழந்தை பால் குடித்து முடித்த ஒவ்வொரு முறையுமே, நம் விரலில் தூய்மையான துணியை சுற்றி குழந்தையின் ஈறுகளை நன்றாக சுத்தம் செய்துவிடவேண்டும்.
குழந்தைகளுக்கு பால் பற்கள் முளைத்ததும், அவர்களுக்கென இருக்கும் பிரத்தியேக டூத் பிரஷ், பேஸ்ட் கொண்டு தினமும் காலை, இரவு என இரு வேளைகளிலும் பல் துலக்கிவிடவும்.
பின்னர் பெரியவர்கள் பயன்படுத்தும் டங்க் க்ளீனரை பயன்படுத்தாமல், தூய்மையான துணியாலோ அல்லது குழந்தைக்கு பல் துலக்கப் பயன்படுத்தும் பிரஷ் கொண்டோ நாக்கினை சுத்தம் செய்துவிடலாம்.
பெரும்பாலான அம்மாகள், இரவு நேரத்தில் பால் புட்டியை வாயில் வைத்தபடியே குழந்தைகளை தூங்க வைப்பார்கள்.
அதனால் இரவு முழுக்க குழந்தையின் பற்களில் பாலில் இருக்கும் இனிப்பு, பாக்டீரியாக்களுடன் வினைபுரிய வாய்ப்பிருக்கிறது. இச்செயல்பாடு தொடர்ந்தால், சிறு வயதிலேயே குழந்தைகளுக்கு பல் சொத்தை உள்ளிட்ட பிரச்சனைகள் வர வாய்ப்பிருக்கிறது.
சிறுவயதில் குழந்தைகளுக்கு பற்களில் பிரச்சனை உண்டானால் நிரந்த பற்கள் முளைக்கும்போது சரியாகிவிடும் என குழந்தைகளின் பல் பராமரிப்பில் பல பெற்றோர்கள் கவனம் செலுத்த மாட்டார்கள்.
இது முற்றிலும் தவறானது. பால் பற்கள், நிரந்தர பற்களின் சக்தியையும் தாங்கி வளர்கின்றன என்பதால், இதில் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.
வாயில் விரல் வைத்து சூப்புவது, நாக்கினை இரண்டு பற்களுக்கு இடைபட்ட பகுதியில் அடிக்கடி வைத்துக்கொள்வது போன்ற செயல்பாடுகளை பெரும்பாலான குழந்தைகள் செய்வார்கள். இதனால் அவர்கள் பல் வரிசை சீரற்றதாகவும், முக அமைப்பு மாறவும் வாய்ப்பிருக்கிறது. இதனால் பெற்றோர்கள் குழந்தைகளின் இந்த நடவடிக்கைகளை கண்காணித்துக் கொண்டேயிருக்க வேண்டும்.
- குழந்தைக்கு அதிக காய்ச்சல் இருக்கும்போது மூச்சுவிட சிரமமாக இருக்கிறது.
- தண்ணீரை கொதிக்கவைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும்.
தமிழகத்தில் கடந்த சில வாரங்களாவே காய்ச்சலால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. வழக்கமாக டிசம்பர், ஜனவரி மாதங்களில் காய்ச்சல், சளி, இருமல் போன்ற பாதிப்புகள் இருக்கும். அதன்பின்னர், படிப்படியாக அந்த பாதிப்புகள் பிப்ரவரி மாதத்தில் குறைய தொடங்கும். ஆனால், இந்த ஆண்டு வழக்கத்துக்கு மாறாக, பிப்ரவரி மாதத்திலும் வைரஸ் காய்ச்சல் குறைந்தபாடில்லை. தற்போது வரை அதாவது மார்ச் மாதம் தொடங்கிய பின்னரும் வைரஸ் காய்ச்சல், இருமலால் பாதிக்கப்படும் நபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே செல்கிறது.
இந்தநிலையில், காய்ச்சல் பாதிப்பு அதிகம் இருக்கக்கூடிய பகுதிகள் கண்டறியப்பட்டு, போதிய மருத்துவ சிகிச்சை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும், மக்கள் பீதி அடைய வேண்டாம் என்றும் சுகாதாரத்துறை வலியுறுத்தி உள்ளது. இதுபோல், தமிழகம் முழுவதும் வருகிற 10-ந்தேதி ஆயிரம் இடங்களில் காய்ச்சல் முகாம் நடத்தப்படும் என சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.
பனிக்காலத்தில் இதுபோன்ற வைரஸ் காய்ச்சல்கள் பரவுவது இயல்பான ஒன்று. ஆனால் கோடைக்காலம் தொடங்கிய பின்னரும், காய்ச்சல் வேகமாக பரவி வருகிறது.
இதுகுறித்து மதுரை அரசு ஆஸ்பத்திரி குழந்தைகள் பிரிவு துறை தலைவர் டாக்டர் பாலசங்கர் கூறுகையில், தற்போது பரவி வரும் வைரஸ் காய்ச்சல் சளி மற்றும் காற்றின் மூலம் வேகமாக பரவி வருகிறது. குறிப்பாக இந்த காய்ச்சல் குழந்தைகளை குறிவைத்து தாக்குகிறது..
குழந்தைகள் காய்ச்சலால் பாதிக்கப்பட்டால் அவர்களை உடனடியாக பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்த வேண்டும். அப்போது தான் ஒரு குழந்தைக்கும் இன்னொரு குழந்தைக்கும் பரவுவதை தடுத்து நிறுத்த முடியும். குழந்தைக்கு அதிக காய்ச்சல் இருக்கும்போது மூச்சுவிட சிரமமாக இருக்கிறது, இருமல் அதிகமாக இருக்கிறது என்றால் மருத்துவரை சந்திப்பது தான் சிறந்தது. வெயில் காலம் அதிகரிக்க தொடங்கிவிட்டால், காய்ச்சல் பாதிப்பு படிப்படியாக குறைந்துவிடும். வரும் நாட்களில் காய்ச்சல் குறைந்துவிடும்.
இந்த காய்ச்சல் குறித்து அச்சப்பட தேவையில்லை. மதுரையில் காய்ச்சல் பாதிப்பை காட்டிலும் மஞ்சள் காமாலை பாதிப்பு அதிக அளவில் பரவி வருகிறது.
மதுரை அரசு ஆஸ்பத்திரியில் மஞ்சள் காமாலை நோய் பாதிப்புக்காக சிகிச்சைக்கு வந்து உள்நோயாளிகளாகவும் அனுமதிக்கப்படுகின்றனர். தண்ணீரை கொதிக்கவைத்து, ஆற வைத்து குடிக்க வேண்டும். தண்ணீரின் மூலமே டைபாய்டு காய்ச்சல், மஞ்சள் காமாலை பாதிப்பு வருகிறது. எனவே, சுத்தமான தண்ணீரை குடிக்க வேண்டும் என்றார்.
- குழந்தைகளுக்கு இருமல் மருந்துக்கு பதிலாக, கை வைத்தியத்தை பின்பற்றலாம்.
- சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன.
உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவது, வைட்டமின்கள், தாதுக்கள் குறைவாக இருப்பது, ரத்த சோகை, ரத்தத்தில் அதிகரித்து காணப்படும் ஈஸ்னோபில் செல்கள், ஒவ்வாமை, சுகாதாரமற்ற தண்ணீர், உணவுகளால் ஏற்படும் வைரஸ் பாக்டீரியா தொற்றுகள் இவைகளால் அடிக்கடி சளி, இருமல், காய்ச்சல் வருகிறது.
இரண்டு நாட்களுக்கும் மேலாக தீவிர காய்ச்சல், அதீத இருமலுடன் வரும் குழந்தைகளுக்கு நுரையீரல் தொற்று இருப்பதோடு, சில குழந்தைகளுக்கு மூச்சுத் திணறலும் ஏற்படுகிறது. அவர்களுக்கு ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய தேவை இருப்பதோடு, சில நேரங்களில் அதீத அழுத்தம் கொண்ட ஆக்சிஜன் கொடுக்க வேண்டிய சூழலும் ஏற்படுவதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.காய்ச்சல் இல்லாமல் சாதாரண இருமல் மட்டும் இருந்தால், இருமல் மருந்துக்கு பதிலாக, கை வைத்தியத்தை பின்பற்றலாம்.
சித்த மருத்துவத்தில் இதற்கு சிறந்த மருந்துகள் உள்ளன. குறிப்பாக சளி, இருமல், குணமடைய தாளிசாதி சூரணம் 1 கிராம், கஸ்தூரி கருப்பு 100 மி.கி., பவள பற்பம் 100 மி.கி. அளவு எடுத்து தேனில் கலந்து இருவேளை சாப்பிட வேண்டும். ஆடாதோடை மணப்பாகு-5 மி.லி. வீதம் காலை, இரவு இருவேளை கொடுக்க வேண்டும். மேலும், தூதுவளை நெய் 5 மி.லி. வீதம் இரவு வேளை சாப்பிடலாம்.
வீட்டுத் தோட்டத்தில் இருக்கும் மூலிகைகளை கொண்டே சளி, இருமலை குணப்படுத்தலாம். துளசி-5 இலைகள், கற்பூரவல்லி 2 இலைகள், ஆடாதோடை 2 இலைகள் எடுத்து சாறு பிழிந்து, அதில் தேன் கலந்து சூடுபடுத்தி காலை 5 மி.லி, இரவு 5 மி.லி வீதம் கொடுக்க வேண்டும். தூதுவளை ரசம் வைத்து சாப்பிடலாம். முட்டையை ஆப் பாயில் செய்து அதனுடன் மிளகு கலந்து சாப்பிட்டு வரவேண்டும்.
பாலில், மிளகு, மஞ்சள், சுக்கு, பனங்கற்கண்டு சேர்த்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும். நண்டு ரசம், நாட்டுக்கோழி ரசம் உணவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். தண்ணீரை கொதிக்க வைத்து இளஞ்சூட்டில் குடிக்க வேண்டும்.
குழந்தைகள் குடிக்கும் பாலுடன் சிறிதளவு மஞ்சள் தூள், மிளகுத்தூள் கலந்து கொடுக்கலாம். மஞ்சள் சளியை நீக்கும்.
2 பல் பூண்டை எடுத்து உரித்துக்கொண்டு அதை 50 மில்லி தண்ணீரில் போட்டு 10 நிமிடங்கள் வரை வேக விடவும். ஆறிய பிறகு இந்த தண்ணீரை எடுத்து 2 முதல் 3 மணி நேரத்திற்கு ஒரு முறை குழந்தைக்கு தரவும். 4 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.
சளியை வெளியேற்றும் தன்மை இஞ்சிக்கு உள்ளது மேலும் மூக்கடைப்புக்கும் இஞ்சி சிறந்த தீர்வளிக்கும். இஞ்சியை பொடியாக துருவிக் கொண்டு அதனை வெந்நீரில் போட்டு வைத்து 10 நிமிடங்களுக்கு பிறகு அந்த தண்ணீரை குழந்தைக்கு தரலாம். 2 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இதனை தர வேண்டும்.
சித்த மருத்துவ நிபுணர் டாக்டர் ஒய்.ஆர். மானக்சா எம்.டி. (சித்தா)
மின்னஞ்சல்: doctor@dt.co.in,
வாட்ஸ் அப்: 7824044499






