search icon
என் மலர்tooltip icon

    குழந்தை பராமரிப்பு

    மாணவர்களின் பார்வை குறைபாடுக்கான அறிகுறிகள்
    X

    மாணவர்களின் பார்வை குறைபாடுக்கான அறிகுறிகள்

    • குழந்தைகளை சூரிய ஒளியில் நன்கு விளையாட விட வேண்டும்.
    • குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    இன்றைய சூழலில் குழந்தைகள் கண்ணாடி அணியும் எண்ணிக்கை பல மடங்கு பெருகிஉள்ளது. தொலைக்காட்சி மற்றும் கணினி முன்பாக குழந்தைகள் அமரும் நேரத்தை முடிந்த அளவு குறைக்க வேண்டும். ஊட்டச்சத்துள்ள உணவுகளை உட்கொள்ள கொடுக்க வேண்டும். கண்களுக்கு சமமான உயரத்தில் தொலைக்காட்சியின் திரை இருக்க வேண்டும். தொலைக்காட்சி பெட்டியில் இருந்து 6 அடி தூரத்தில் அமர்ந்திருக்க வேண்டும்.

    குழந்தைகளை சூரிய ஒளியில் நன்கு விளையாட விட வேண்டும். அப்போது தான் கண்களுக்கு தேவையான வைட்டமின் ஏ மற்றும் டி போன்ற சத்துக்கள் அதிகளவு கிடைக்கும். மேலும் குழந்தைகள் கண்களில் ஏதேனும் பிரச்சினை என்று தெரிவித்தால் அவர்களை உடனடியாக மருத்துவரிடம் அழைத்து செல்ல வேண்டும். தாங்களாகவே வைத்தியம் செய்வதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். மேலும் குழந்தைகளுக்கு செல்போன்கள் கொடுப்பதை தவிர்க்க வேண்டும்.

    மாணவர்கள், 80 சதவீதக் கல்வியைத் தங்கள் கண்கள் மூலம்தான் கற்கிறார்கள். அவர்கள் தேர்வில் நல்ல மதிப்பெண் வாங்க வேண்டும் என்றால் நல்ல கண் பார்வை முக்கியம். ஒரு குழந்தையின் எதிர்காலம் முழுவதும் அந்தக் குழந்தையின் நல்ல பார்வையைச் சார்ந்தே அமைகிறது. ஒரு குழந்தைக்கு நல்ல பார்வை கிடைக்க அவர்களின் பெற்றோர்களும் ஆசிரியர்களும் முன் வர வேண்டும்.

    * பள்ளிக்கூடங்களில் உள்ள கரும்பலகையில் எழுதப்படும் எழுத்துகளை படிக்க குழந்தைகள் சிரமப்படுதல்

    * குழந்தைகள் ஏதேனும் எழுத்தை தெளிவாக பார்க்க கண்களை அடிக்கடி தேய்த்தல்

    * தூரத்தில் உள்ள பொருட்களை பார்க்க, கண்களை சுருக்குதல்

    * படிக்கும்போது புத்தகங்களை முகத்திற்கு மிக அருகில் வைத்து படித்தல்

    * குழந்தைகள் கண் வலி, தலை வலி என தொடர்ந்து கூறுவது

    இந்த அறிகுறிகள் இருந்தால் உடனே கண் மருத்துவரை பார்ப்பது நல்லது.

    Next Story
    ×