என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.
    எந்த ஒரு காரியத்தைத் தொடங்கினாலும் அது எவ்விதத் தடையும் இல்லாமல் முற்றுப்பெற விநாயகர் வழிபாட்டுடன் ஆரம்பிப்பது நமது வழக்கம்.

    சுக்லாம் பரதரம் விஷ்ணும் சசிவர்ணம் சதுர்ப்புஜம்
    ப்ரசன்ன வதனம் த்யாயேத் சர்வ விக்நோப சாந்தயே

    என்று பிள்ளையாரை வணங்கி நெற்றியில் குட்டிக் கொண்டு எந்த ஒரு காரியத்தையும் ஆரம்பிக்க வேண்டும். இது விஷ்ணு சகஸ்ரநாமத்தில் உள்ளது.

    எல்லாவிதத் தடைகளும் இடையூறுகளும் நீங்கவும், மறைந்து போகவும் வெள்ளை நிற உடையணிந்து கொண்டிருப்பவரும் நான்கு கரங்களை உடையவரும் எங்கும் நிறைந்திருக்கும் பரம்பொருளும், நிலவைப் போன்ற தன்மையுடையவரும், எப்பொழுதும் ஆனந்தமயமாக அருட்காட்சியளிக்கும் விநாயகரைத் தியானிப்போம் என்பது இதன் பொருளாகும்.

    காலையில் எழுந்தவுடன் சொல்ல வேண்டிய ஸ்லோகம்

    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    பொருள் : யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.
    கருட தரிசனம் செய்வது பெருமாளே நேரில் வந்து நமக்கு வெற்றி வாழ்த்து சொல்வதற்கு சமம் ஆகும். கருட பகவானுக்கு உகந்த சிறந்த மந்திரத்தை பார்க்கலாம்.
    ஓம் நமோ பகவதே கருடாய காலாக் வர்ணாய
    ஏஹி ஏஹி காலாநல, லோல ஜிஹ்வாய
    பாதய பாதய, மோஹய மோஹய
    வித்ராவய வித்ராவய பிரமபிரம, பிரமய பிரமய
    ஹந ஹந, தஹ தஹ, பதபத ஹ¨ம்பட்
    ஸ்வாஹா.
    கிருஷ்ண பகவானை துதித்து இவர் எழுதிய மந்திரத்தை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை நினைத்து உச்சரித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது உறுதி.
    பாண்டவர்களில் ஒருவர் சகாதேவர். சிறந்த ஞானம் உள்ளவர். பலவித ஜோதிட சாஸ்திரம் எழுதி ஜோதிடக்கலையில் வல்லவராக திகழ்ந்தார். கிருஷ்ண பகவானை துதித்து இவர் எழுதிய மந்திரத்தை ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவை நினைத்து உச்சரித்தால் பகவான் ஸ்ரீ கிருஷ்ணரின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது உறுதி. அந்த சக்திவாய்ந்த மந்திரம் இதோ...

    ஓம் நமோ விஸ்வரூபாய
    விஸ்ய சித்யந்த ஹேதவே
    விஹ்வேஸ்வராய விஸாவாய
    கோவிந்தாய நமோ நமஹ நமோ
    விக்ஞான ரூபாய
    பரமானந்த ரூபிணே
    கிருஷ்ணாய கோபிநாதாய
    கோவிந்தாய நமோ நமஹ

    வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்களான எட்டு வடிவங்களைப் பெண்கள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும்.
    வெள்ளிக்கிழமைகளில் மகாலட்சுமியின் திருவடிவங்களான எட்டு வடிவங்களைப் பெண்கள் தங்களது நாவால் பாடி அழைக்க வேண்டும். இசைக்கு மயங்காதவர்களும் உண்டா? தெய்வங்களில் விஷ்ணு அலங்காரப் பிரியர் என்றால் அவரது தர்ம பத்திரியான தேவி இசைப் பிரியையாக விளங்குகிறாள். ஆகவே நாம் விரும்பிய வரங்களைப் பெற்றிட திருமகளை மகிழ்விக்கும் பாடலை மனமுருகிப் பாட வேண்டும்.

    நமக்குத் காரியங்கள் நிறைவேறவும், மனதில் உள்ள சஞ்சலங்கள் நீங்கவும், ஒவ்வொரு உருவத்தில் தேவிஸ்ரீ மகாலட்சுமி வடிவெடுத்து வருகிறாள். மகாலட்சுமி தேவியை இல்லத்தில் படையல் இட்டு மகிழ வைத்துத் தாயை அம்மா என்றழைப்பது போல அழைப்போம்.

    1. தனலட்சுமி

    பொங்கு தனகரத்தாள் பொற்புடைய சக்கரத்தாள்
    எங்கு நலம் தருகின்ற எழிற்கரத்துத் தாமரையாள்
    தங்குகின்ற கமலத்தில் தளிரடிகள் தாம் வைத்தாள்
    தங்கரத்தால் தண்மைதரு தனமகளே போற்றியம்மா!

    2. ஆதிலட்சுமி

    சோதிமிக வுடையாள் சோம்பலற்ற மனமுடையாள்
    தாதியரின் புடைசூழத் தாவிவரும் தார்மிகத்தாள்
    பூதிமிகு மலரபய பூரண நல் வரதத்தாள்
    ஆதியிலும் ஆதியனே ஆதித்திரு போற்றியம்மா!

    3. தான்யலட்சுமி

    எண்கரத்தின ஏற்புடைய எழிற்படைகள் ஏற்றவளே
    பண்புடைய பகவதியே பலக்கதைகள் பெற்றவளே
    கண்படைத்த பயனாகக் களிப்படைய வந்தவளே
    மண் செழிக்கத் தானிய நல் மணிதந்தாய போற்றியம்மா!

    4. வீரலட்சுமி


    சூலமொரு அபயத்தாள் சூழ்ச்சியற்ற வரதத்தாள்
    காலனவன் கால்நடுங்கு கதிர் ஒளியின் சக்கரத்தாள்
    நீலத்திரை அமுதத்தாள் நீங்கா நற்புகழுடையாள்
    மாலவனார் மனமகிழும் வீரத்திரு போற்றியம்மா!

    5. கஜலட்சுமி

    தடாகத் தாமரையாள் தண்மைமிகு தவவடிவாள்
    அடா அத் துயரமதை அழிக்கின்ற அருளடியாள்
    விடாநற் றனமழையாள் விளங் கானைத் துடியடியாள்
    படாகக் கரியிவர்வாள் பண்ணடிகள் போற்றியம்மா

    6. சந்தான லட்சுமி

    அன்புடையாள் அறுகரத்தாள் அன்னையிலும் அன்னையவள்
    இன்புடையான் கேடகத்தான் இடர்நீக்கு வாளுடையாள்
    மன்புகழின்மலர்க்கதர்தே மகவுடனே அமுதுடையாள்
    சந்தனத்தாய் சந்தானப் பெருக்குடையாய் போற்றியம்மா

    7. விஜய லட்சுமி

    வாளுடன் சாரங்கம் வார்புகழின் சுதர்சனமும்
    ஆளுடைய கேடயமும் ஆண்டாருளும் எண்கரத்தி
    நாளுடனே நாற்புகழும் நாரணர்க்குத் தாமணித்த
    தான் மலரும் தனிவெற்றித் தாயே நீபோற்றியம்மா

    8. ஐஸ்வர்ய லட்சுமி

    நாற்கரத்து நாயகியாள் நாற்றிசையின் நல்வினையாள்
    கார்மேகம் போல் தனத்தைக் காத்திடவே பெய்திடுவாள்
    நூற்புலவர் தம்முகத்தான் நூதனத்தின் ஒருவடிவாள்
    பாற்பணியும் அயிசுவரியப் பாவையளே போற்றியம்மா
    தினமும் காலையில் விநாயகருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்த பின்னர் வேலையை ஆரம்பித்தால் எந்த தடங்களும் இல்லாமல் இனிதே நடந்தேறும்.
    தினமும் காலையில் விநாயகருக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்த பின்னர் வேலையை ஆரம்பித்தால் எந்த தடங்களும் இல்லாமல் இனிதே நடந்தேறும்.

    கஜானனம் பூத கணாதி ஸேவிதம்
    கபித்த ஜம்பூ பலஸார பக்ஷதம்
    உமாஸுதம் சோக வினாச காரணம்
    நமாமி விக்னேஸ்வர பாத பங்கஜம்

    பொருள் :

    யானை முகத்தை உடையவரும், பூத கணங்களால் வணங்கப்பட்டவரும், விளாம்பழம், நாவல்பழம் ஆகியவற்றின் சாரத்தை ரசிப்பவரும், உமையின் புத்திரனும், துக்கத்தைத் தீர்ப்பவரும் ஆகிய விக்னேஸ்வரரின் பாதங்களைப் பணிகிறேன் என்பதாகும்.
    அனுமனுக்கு உகந்த இந்த துதியை துதிப்பவர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு போன்ற அனைத்து விதமான ஐஸ்வர்யங்களும் கிடைக்கும்.
    அயோத்யாநகர ரம்யே ரத்ன ஸௌந்தர்ய மண்டபே
    மந்தாரபுஷ்பைராபத்த விதாநே தோரணாங்கிதே
    ஸிம்ஹாஸந ஸமாரூடம் புஷ்பகோபரி ராகவம்
    ரக்ஷோபிர் ஹரிபிர் தேவைர்திவ்ய யாநகதை:ஸுபை:
    ஸம்ஸ்தூயமாநம் முநிபி: ஸர்வத: பரிஸேவிதம்
    ஸீதாலங்க்ருத வாமாங்கம் லக்ஷ்மணேநோபஸோபிதம்
    ஸ்யாமம் ப்ரஸந்நவதநம் ஸர்வாபரண பூஷிதம்

    பொதுப்பொருள்:

    அயோத்தி நகரத்தில் ரம்யமான ரத்ன ஸௌந்தர்ய மண்டபத்தில் மந்தாரம்போன்ற பலவிதமான புஷ்பங்களால் ஆக்கப்பட்ட தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட விதானத்தின் கீழ் சிம்மாசனத்தில் சீதா, பரத, லக்ஷ்மண, சத்ருக்னனோடு மேகவண்ணத்துடன் புன்முறுவல் பூத்த முகத்துடன் சர்வாலங்காரத்துடன் காட்சி தரும் ராமபிரானை வணங்குகிறேன்.

    இத்துதியை துதிப்பவர்க்கு அறம், பொருள், இன்பம், வீடு போன்ற சதுர்வித புருஷார்த்தங்களையும் தரும்.
    வாராகி மாலையும் அதனை படித்து அன்னையை பூஜிப்பதால் ஏற்படும் அற்புதங்களையும் அவளுக்கு பிடித்த நைவேத்தியம் என்ன வென்று பார்க்கலாம்.
    என் வாராகி பக்த கோடிகளே நான் இரு வாரங்களாக வாராகி மாலை விளக்கங்கள் கொடுத்து வந்தேன். அன்னையின் மாலை கேட்டு கண்ணீர் மல்க என் அன்னையின் மகத்துவத்தை அறிந்து மகிழ்ந்து கூறிய உங்கள் மனதையும் பொற்பாதங்களையும் வணங்கி மகிழ நான் கடமைபட்டுள்ளேன். இவ்வாரம் வாராகி மாலை படித்து அன்னையை பூஜிப்பதால் ஏற்படும் அற்புதங்களையும் அவளுக்கு பிடித்த நைவேத்தியம் என்ன வென்று பார்க்கலாம், மேலும் வாராகி மாலையில் இன்னும் 6 பாடல்கள் உள்ளது. அதை பாடலாக மட்டும் கொடுத்துவிடுகிறேன். எல்லா பாடல்களுமே அன்னை நம்மை காக்கும் கவசமாக நிற்கும் அற்புத பாடல்களே. அதை மட்டும்கொடுத்து அதன் அற்புதங்களை விளக்குகின்றேன்.

    25. ‘‘சிந்தை தெளிந்து வாழ்த்திப் பணிந்து தினம் துதித்தே
    அந்தி பகல் உன்னை அர்ச்சித்தபேரை அசிங்கியமாய்
    நிந்தனை பண்ணி மதியாத உலத்தர் நிணம் அருந்தி
    புந்தி மகிழ்ந்து வருவாய் வாராஹி நற்பொற் கொடியே...’’

    26. ‘‘பொருப்புக்கு மாறுசெய் பாழியும் தோளும் பொருப்பைவென்ற
    மருப்புக்கு நேர்சொலும் கொங்கையும் மேனியும் வாழ்த்தும் எனது
    இருப்புக் கடிய மனதில் குடிகொண்டு எதிர்த்தவரை
    நெருப்புக்குவால் என கொல்வாய் வாராஹி என் நிர்குணியே’’

    விளக்கம்:-
    இப்பாடலை மனம் ஒருநிலைபடுத்த பாடினால் மனம் தெளிந்து ஒற்றுமைபடும். முயற்சித்து அருள் பெருக.

    27. ‘‘தேறிட்ட நின்மலர்ப்பாத அரவிந்தத்தை சிந்தை செய்து
    நீறு இட்டவர்க்கு வினைவருமோ? நின் அடியவர் பால்
    மாறிட்டவர் தமை வாளாயுதம் கொண்டு வாட்டி இரு
    கூறிட்டு எறிய வருவாய் வாராஹி குலதெய்வமே.’’

    28. ‘‘நரிபரி ஆக்கிய சம்புவின் பாகத்தை நண்ணியமாள்
    அரிஅயன் போற்றும் அபிராமி தன் அடியார்க்கு முன்னே
    சரியாக நின்று தருக்கம் செய் மூடர் தலையை வெட்டி
    எரியாய் எரித்து விடுவாள் வாராஹி எனும் தெய்வமே’’

    29. ‘‘வீற்றிருப்பாள் நவகோணத்திலே, நம்மை வேண்டுமென்று
    காத்திருப்பாள் கலி வந்தனுகாமல் என் கண் கலக்கம்.
    பார்த்திருப்பாள் அல்லல் எங்கே என்று அங்கு சபாசம் கையில்
    கோர்த்திருப்பாள், இவளே என்னை ஆளும் குலதெய்வமே’’

    30. சிவஞான போதகி செங்கைப் கபாலி, திகம்பரி நல்
    தவமாகும் மெய்அன்பர்கே இடர்சூடும் தரியலரை
    அவமானம் செய்யக் கணங்களை ஏவும் அகோரி, இங்கு நலமாய் வந்தெனைக் காக்கும் திரிபுரை நாயகியே...

    (முற்றும்)

    காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள்.
    ஓம் பூர்புவஸ் ஸுவ தத்ஸவிதுர் வரேண்யம் பர்கோ
    தேவஸ்ய தீமஹி தியோயோன் ப்ரசோதயாத்

    காயத்ரி மந்திரத்திற்கு மேலான் மந்திரம் உலகில் கிடையாது. விசுவாமித்திரரால் அருளப்பட்டது இந்த மந்திரம். பிரம்மதேவன் புஷ்கரம் என்ற புன்னிய பூமியில் ஒரு பெரிய யாகத்தை தொடங்கினார். அந்த யாகத்தின் போது தன்னுடைய சக்தியினால் ஸ்ரீ காயத்ரி தேவியை சிருஷ்தித்தார்.

    காயத்ரி சிகப்பு நிறமாகத் தோற்றம் கொண்டுள்ளாள், 5 திருமுகங்களையும், 10 திருக்கைகளையும் கொண்டவள். இதை சொல்வதால் கொடிய வினைகள் அகலும், உடல் பலம், மனோபலம் கூடும். 24 அட்சரங்களைக் கொண்டது காயத்ரி மந்திரம். இதை தினசரி ஜபித்து வந்தால் பூர்வ ஜென்ம பாவங்கள் அகலும். சக்திகள் பெருகும்.

    வைராக்கியம் உண்டாகும். காயத்ரி என்பதற்கு தன்னை ஜபிப்பவனைக் காப்பாற்றுவது என்று பொருள். இதை ஜபித்து வர எல்லாவித ஆபத்துக்களும் நீங்கும். மற்ற எல்லா மந்திரங்களுக்கும் தாய் போன்றவள் காயத்ரி. காயத்ரி சந்தசமம் மாத எனப்படும். இந்த ஜென்மத்தில் தெரிந்தோ தெரியாமலோ செய்த பாவம் அகலும். அதற்காக வேண்டும் என்றே தெரிந்தே பாவங்களைச் செய்து

    விட்டு காயத்ரி மந்திரம் ஜபித்தால் பலன் கிடைக்காது. காயத்ரி என்ற மந்திரத்திற்கு சாவித்ரி என்றும் சரஸ்வதி என்றும் பெயர்கள் உண்டு. இந்த மந்திரம் காலையில் காயத்ரிக்காகவும், நடுப்பகலில் சாவித்ரிக்காகவும், மாலை சந்தியா வந்தனத்தில் சரஸ்வதிக்காகவும் ஜபிக்கப்படுகிறது.

    காயத்ரி மந்திரம் ஜபிக்கப்பட்ட பின்னரே மற்ற மந்திரங்கள் ஜபிக்கப்படுகின்றன. மந்திர வழிபாட்டில் காயத்ரிக்குத் தான் முதல் இடம். காயத்ரி ஜபம் செய்யாத எந்த ஜபமும், ஆராதனையும் பயனற்றது. மனம் ஒரு புறம் எதையோ நினைத்துக் கொண்டிருக்க வாய் மட்டும் இந்த மந்திரத்தை 1008 அல்லது 108 தடவை உச்சரித்தால் பலன்

    கிடையாது. முறையாக 27 தடவை முழு மன ஒருமைப்பாட்டுடன் கூறினால் மட்டுமே பலன் கிடைக்கும். காலையில் கிழக்கு முகமாக சூரியனைப் பார்த்து நின்று கொண்டு இரு கைகளையும் முகத்திற்கு எதிராகக் கூப்பிக் கொண்டும், மதியம் கிழக்கு முகமாக உட்கார்ந்து கொண்டு கைகளை மார்புக்கு எதிரே கூப்பிக் கொண்டும், மாலையில் மேற்கு முகமாக அமர்ந்து கைகளை நாபிக்கு சமமாக கூப்பிக் கொண்டும் ஜபம் செய்ய வேண்டும்.

    தினமும் குறைந்தது 108 முறை ஜபிக்கவும். ஆபத்துக் காலத்தில் 28 அல்லது 10 தடவை ஜபிக்கவும். உடலும், உள்ளமும் தூய்மையான குழந்தைகளும், வயதான பெண்களும் காயத்ரி மந்திரத்தை ஜபிக்கலாம்.
    சென்னையின் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும், அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றை வணங்குவதற்குரிய பாசுரங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.
    திருவண்ணாமலை திருத்தலத்தில் அண்ணாமலையார் ஆலயத்தைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் வலம் வரும்போது, அஷ்ட லிங்கங்களை நாம் தரிசனம் செய்ய முடியும். அதேபோல் சென்னையின் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும், அஷ்ட லிங்கங்கள் அமைந்து சென்னை மக்களுக்கும் அருள்வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அஷ்ட லிங்கங்களும், சுமார் 18 கிலோமீட்டர் எல்லைச் சுற்றுக்குள் அமைந்திருக்கின்றன. எனவே இந்த எட்டு லிங்கங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து விட முடியும்.

    வேதங்கள் நான்கும் வேல மரங்களாக அடர்ந்திருந்த காரணத்தால், ‘வேற்காடு’ என்று பெயர் பெற்ற திருவேற்காடு தலத்துக்கு, அகத்தியர் ஒரு முறை வருகை தந்தார். அப்போது, சிவபெருமானை அவர் பாடிப் பணிந்ததன் பேரில், அவருக்கு சிவபெருமான் பார்வதிதேவியுடன் காட்சியளித்தார். அகத்தியர் வேண்டிய உடன் காட்சி தந்த சிவபெருமானிடம், அன்னை உமாதேவி ஒரு கேள்வியை முன் வைத்தார்.

    ‘மகரிஷிகளுக்கும், தவயோகிகளுக்கும், புண்ணிய சீலர்களுக்கும் கேட்ட உடன் உங்கள் திருக்காட்சியை அருள்கிறீர்கள். ஆனால், உலக மக்களுக்கு மட்டும் ஏன் தாமதம் செய்கிறீர்கள்?’ என்றார்.

    அதன் காரணமாகவே, அனைத்து மக்களும் வழிபட்டு எளிதில் ஈசனின் அருள்பெற திருவேற்காடு தலத்தின் எட்டு திசைகளிலும் உமாதேவியுடன் இணைந்து அஷ்ட லிங்க மேனிகளை இறைவன் வெளிப்படுத்தி கோவில் கொண்டதாக ஐதீகம்.

    அதேசமயம் ஒவ்வொரு திசையிலும் அத்திசைகளுக்குரிய திக்பாலகர்கள், அஷ்ட லிங்கங்களை அமைத்து வேதபுரீஸ்வரரை நோக்கி தவம் செய்ததாகவும் திருவேற்காடு புராணம் கூறுகிறது.

    வழிபாட்டு முறை

    பக்தர்கள் ‘சிவாலய ஓட்டம்’ என்ற முறையிலும், அஷ்டலிங்க தரிசன சேவை என்ற வகையிலும் பவுர்ணமி, அமாவாசை, ஞாயிறு, வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் அஷ்ட லிங்கங்களை தரிசித்து பாசுரங்களை பாடி வணங்குகின்றனர். முதலில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் சன்னிதியில் தொடங்கி ஈசான லிங்கத் திருமேனியான எட்டாவது லிங்கம் வரை தரிசனம் செய்வது மரபு. அந்த லிங்கங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றை வணங்குவதற்குரிய பாசுரங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

    இந்திர லிங்கம்


    அஷ்ட லிங்கங்களில் முதலாவதாக தரிசிக்க வேண்டியது இந்திர லிங்கம். இது திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து நேர் கிழக்காக சுமார் 1½ கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்திரனால் பூஜை செய்யப்பட்டதால், இங்குள்ள இறைவன் ‘இந்திர சேனாபதீஸ்வரர்’ என்ற பெயருடன் வள்ளிக் கொல்லைமேடு என்ற இடத்தில் கோவில் கொண்டுள்ளார். அங்கே நெய் தீபம் ஏற்றி வைத்து, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால், பதவி உயர்வு, அரசாங்க காரிய அனுகூலம் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

    ‘தூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்
    பாயுமான் மழுவினோடு பகர்வர தாபயம் கண்
    மேயதின் புயங்கள் நான்கும் மிளிருமின் அனைய தேகம்
    ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை அதனிற் காக்க’

    அக்னி லிங்கம்

    இரண்டாவதாக வழிபட வேண்டிய அக்னி லிங்கம், திருவேற்காட்டிற்கு தென்கிழக்கில் உள்ள வள்ளிக் கொல்லைமேட்டில் இருந்து சுமார் 3½ கி.மீ. தொலைவில் நூம்பல் என்ற இடத்தில் இருக்கிறது. ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் என்னும் நாமம் கொண்டு இறைவன் அருள்புரிகிறார். அகத்திய முனிவரால் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட ‘நூம்பல்’ என்னும் அபூர்வ புஷ்பங்களால் வழிபடப் பெற்றதால், இந்த தலத்துக்கு ‘நூம்பல்’ என்று பெயர். இங்குள்ள சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடினால் எதிரிகள் தொல்லை, வழக்குகள் மற்றும் வெப்பம் தொடர்பான பிணிகள் அகலும்.

    ‘பங்கயத் தவிசின் மேவி இருந்துடற் பற்று நீக்கி
    அங்கு நற்பூத சித்தி அடைவுடன் பின்னர்
    கங்கையைத் தரிசித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற்
    கொங்கை வெற்பனைய பச்சைக் கொடியொடும் உளத்தில் வைத்தே’

    எம லிங்கம்

    மூன்றாவதாக வணங்க வேண்டிய எம லிங்கம், நூம்பல் தலத்தில் இருந்து சுமார் 4½ கி.மீ தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையின் வலது பக்கம் உள்ள செந்நீர்க்குப்பத்தில் இருக்கிறது. இத்தல இறைவன் மரகதாம்பிகை தேவி சமேத கயிலாசநாதர். இவருடைய சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வணங்கினால் ஏழரைச் சனி, கண்டகச் சனி, வழக்கு சம்பந்தமான தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

    ‘மான் மழுசூலம் தோட்டி வனைதரும் அக்கமாலை
    கூன்மலி அங்குசம் தீத்தமருகம் கொண்ட செங்கை
    நான்முக முக்கண் நீல நள்ளிருள் வருணம் கொண்டே
    ஆன்வரும் அகோர மூர்த்தி தென்திசை அதனிற் காக்க’

    நிருதி லிங்கம்

    நான்காவதாக வணங்க வேண்டியது நிருதி லிங்கம். செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 4½ கி.மீ தூரத்தில் ஆவடி-பட்டாபிராம் சாலையில், மகாநாடு பேருந்து நிறுத்தம் அருகில் பாரிவாக்கம் என்ற இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. இங்கே பாலீஸ்வரர் என்ற பெயருடன், பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் என்ற நாமத்துடன் இறைவன் அருள்கிறார். சுமார் 2,300 ஆண்டுகள் முற்பட்ட இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால் தீராத துயரத்தில் சிக்கி நிர்க்கதியாய் நிற்பவர்களுக்கு நல்வாழ்வு உண்டாகும்.

    ‘வனமறை பயிலு நாவன்நா மணி நீலகண்டன்
    கனம் அடு பினாக பாணி கையினைத் தருமவாரு
    கிளர்புயன் தக்கன் யாகம் கெடுத்தவன் மார்பு தூய
    ஒளிதரு மேருவல்லி உதரம் மன்மதனைக் காய்ந்தோன்’

    வருண லிங்கம்

    ஐந்தாவது வழிபட வேண்டிய இந்த லிங்கம், செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 2½ கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையில் மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் இருக்கிறது. இங்கு ஜலகண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரராக இறைவன் அருள்கிறார். இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட பாசுரத்தை மனம் உருக பாடி வழிபாடு செய்தால், வீடு கட்டுவதில் உள்ள தடை தாமதங்கள் விலகும்.

    ‘திவண்மாரி அக்கமாலை செங்கையோர் இரண்டும் தாங்க
    அளிந்தரும் இரண்டு செங்கை வரதம் தோள் அபயம் தாங்க
    கவினிறை வதனம் நான்கும் கண்ணொரு மூன்றும் காட்டும்
    தவனமா மேனிச் சத்தியோ சாதண் மேற்றிசையில் காக்க’

    வாயு லிங்கம்

    ஆறாவது லிங்கமான வாயு லிங்கம், திருவேற்காட்டீஸ்வரர் சன்னிதிக்கு வடமேற்கு திசையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் பருத்திப்பட்டு என்ற இடத்தில் அமைந்துள்ளது. விருத்தாம்பிகை தேவி சமேத வாயு லிங்கேஸ்வரராக இறைவன் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால் கண் திருஷ்டி நீங்கும்.

    ‘கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள் தீயால்
    அடலை செய்து அமலை தானம் அறைதர நடிக்கும் ஈசன்
    இடைநெறி வளைதா பத்தில் எறிதரு சூறைக் காற்றில்
    தடைபடா தெம்மை இந்தத் தடங்கடல் உலகிற் காக்க’

    குபேர லிங்கம்

    அஷ்ட லிங்கங்களில் ஏழாவது குபேர லிங்கம். பருத்திப்பட்டு வாயுலிங்க சன்னிதியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், ஆவடி-திருவேற்காடு சாலையில், சுந்தரசோழபுரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இத்தல இறைவன், வேம்புநாயகி சமேத குபேரீஸ்வரர். கி.பி.11-ம் நூற்றாண்டில் சுந்தரசோழன் ஆட்சி செய்த காரணத்தால், இந்த ஊர் சுந்தர சோழபுரம் என்று அழைக்கப்படுகிறது. குபேர லிங்க சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரங்களை பாடி வணங்கினால், பொன்னும், நவ மணிகளும் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.

    ‘கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்
    அறைதரு தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்தி
    பொறை கொள் நான் முகத்து முக்கண் பொன்னிறமேனியோடும்
    மறைபுகழ் வாமதேவன் வடதிசை அதனிற் காக்க’

    ஈசான லிங்கம்

    அஷ்ட லிங்கங்களில் எட்டாவதாக தரிசனம் செய்ய வேண்டிய லிங்கம் இது. வேதபுரீஸ்வரர் சன்னிதிக்கு வடகிழக்கு திசையில், சுந்தர சோழபுரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் திருவேற்காடு- கோலடி சாலை சுற்றுப்பாதையில் வலப்புறமாக இந்த கோவில் இருக்கிறது. பார்வதி தேவி சமேத ஈசான லிங்கம் இதுவாகும். பெரிய பாணலிங்க வடிவில் அருள் புரியும் ஈசானிய லிங்க சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால், காரியத் தடை, கண் திருஷ்டி நீங்கும்.

    ‘அங்குசம் கபாலம் சூலம் அணிவர தாபயங்கள்
    சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தி
    திங்களிற் றவன மேனி திருமுகம் ஐந்தும் பெற்ற
    எங்கள் ஈசான தேவன் இருவிசும்பெங்கும் காக்க’
    கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது. கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி பின்வருமாறு அறிந்து கொள்ளலாம்.
    கருடனை கைகூப்பி வணங்குதல் கூடாது. மாறாக வலது கை மோதிர விரலால் இரண்டு கன்னங்களில் ஒற்றிக் கொண்டே வணங்க வேண்டும். கருடனை வணங்கும் போது சொல்ல வேண்டிய கருட அஞ்சலி துதி பின்வருமாறு

    “குங்குமங்கித வர்ணாய
    குந்தேற்து தவளாயச
    விஷ்ணு வாஹ நமஸ்துப்யம்
    பட்சிராஜாயதே நமஹ”

    இன்று வரலட்சுமி விரதம் கடைபிடிக்கும் பெண்கள் லட்சுமி தேவிக்கு உகந்த இந்த 108 ஸ்ரீலட்சுமி போற்றி சொல்லி வழிபாடு செய்து வந்தால் அனைத்து செல்வங்களும் பெறலாம்.
    எந்தக் குறையுமின்றி சகல செல்வங்களுடன் முதலில் தோன்றியவள் ஆதிலட்சுமி. அவளை வணங்குவதால், நோய்கள் நீங்கும். அதற்காக அஷ்டமங்கலப் பொருட்களைத் தனது திருவடியின் கீழ் கொண்டு காட்சி தரும் வகையில் அமைந்து அருள் தருபவள் ஆதிலட்சுமி.

    ஓம்  திருவே  போற்றி
    ஓம்  திருவளர் தாயே போற்றி
    ஓம்  திருமாலின் தேவி  போற்றி
    ஓம்  திருவெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  திருத்தொண்டர் மணியே  போற்றி
    ஓம்  திருப்புக ழுடையாய்  போற்றி
    ஓம்  திருஞான வல்லி  போற்றி
    ஓம்  திருவருட் செல்வி  போற்றி
    ஓம்  திருமால் மகிழ்வாய்  போற்றி
    ஓம்  திருமார்பி லமர்ந்தாய்  போற்றி
    ஓம்  தினமெமைக் காப்பாய்  போற்றி
    ஓம்  தீபசோதியே  போற்றி
    ஓம்  தீதெலாம் தீர்ப்பாய்  போற்றி
    ஓம்  தூப ஜோதியே  போற்றி
    ஓம்  துயரம்தீர்த் தருள்வாய்  போற்றி
    ஓம்  திருப்பாற் கடலாய்  போற்றி
    ஓம்  திருவமு தருள்வாய்  போற்றி
    ஓம்  அன்னையே அருளே  போற்றி
    ஓம்  அழகெலாம் உடையாய்  போற்றி
    ஓம்  அயன்பெறு தாயே  போற்றி
    ஓம்  அனைவருக்கும் அருள்வாய்  போற்றி
    ஓம்  அமரர் குல விளக்கே  போற்றி
    ஓம்  அமரேசன் தொழுவாய்  போற்றி
    ஓம்  அன்பருக் கினியாய்  போற்றி
    ஓம்  அண்டங்கள் காப்பாய்  போற்றி
    ஓம்  ஆனந்த வல்லியே  போற்றி
    ஓம்  ஆருயிர்க் குயிரே  போற்றி
    ஓம்  ஆவிநல் வடிவே  போற்றி
    ஓம்  ஆக்கம் தருள்வாய்  போற்றி
    ஓம்  இச்சை கிரியை  போற்றி
    ஓம்  இருள்தனைக் கடிவாய்  போற்றி
    ஓம்  இன்பப் பெருக்கே  போற்றி
    ஓம்  இகபர சுகமே  போற்றி
    ஓம்  ஈகையின் பொலிவே  போற்றி
    ஓம்  ஈடிலா அன்னை  போற்றி
    ஓம்  எங்குமே நிறைந்தாய்  போற்றி
    ஓம்  எண்குண வல்லி  போற்றி
    ஓம்  ஓங்கார சத்தி  போற்றி
    ஓம்  ஒளிமிகு தேவி போற்றி
    ஓம்  கற்பக வல்லி  போற்றி
    ஓம்  காமரு தேவி  போற்றி
    ஓம்  கனக வல்லியே  போற்றி
    ஓம்  கருணாம் பிகையே  போற்றி
    ஓம்  குத்து விளக்கே  போற்றி
    ஓம்  குலமகள் தொழுவாய்  போற்றி
    ஓம்  மங்கல விளக்கே  போற்றி
    ஓம்  மங்கையர் தொழுவாய்  போற்றி
    ஓம்  தூங்காத விளக்கே  போற்றி
    ஓம்  தூயவர் தொழுவாய்  போற்றி
    ஓம்  பங்கஜ வல்லி  போற்றி
    ஓம்  பாவலர் பணிவாய்  போற்றி
    ஓம்  பொன்னி அம்மையே  போற்றி
    ஓம்  புலவர்கள் புகழ்வாய்  போற்றி
    ஓம்  நாரணன் நங்கையே  போற்றி
    ஓம்  நாவலர் துதிப்பாய்  போற்றி
    ஓம்  நவரத்தின மணியே  போற்றி
    ஓம்  நவநிதி நீயே  போற்றி
    ஓம்  அஷ்ட லட்சுமியே  போற்றி
    ஓம்  அறம்பொருள் தருவாய்  போற்றி
    ஓம்  ஆதிலட்சுமியே  போற்றி
    ஓம்  ஆணவம் அறுப்பாய்  போற்றி
    ஓம்  கஜலட்சுமியே  போற்றி
    ஓம்  கள்ளமும் கரைப்பாய்  போற்றி
    ஓம்  தைரியலட்சுமியே  போற்றி
    ஓம்  தயக்கமும் தவிர்ப்பாய்  போற்றி
    ஓம்  தனலட்சுமியே  போற்றி
    ஓம்  தனதானியம் தருவாய்  போற்றி
    ஓம் விஜயலட்சுமியே  போற்றி
    ஓம்  வெற்றியைத் தருவாய்  போற்றி
    ஓம்  வரலட்சுமியே  போற்றி
    ஓம்  வரமெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  முத்துலட்சுமியே  போற்றி
    ஓம்  முக்தியை அருள்வாய்  போற்றி
    ஓம்  பூவேந்தர் தொழுவாய்  போற்றி
    ஓம்  முத்தமிழ் தருவாய்  போற்றி
    ஓம்  கண்ணே எம் கருத்தே  போற்றி
    ஓம்  கவலையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  விண்ணே எம் விதியே  போற்றி
    ஓம்  விவேகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பொன்னேநன் மணியே  போற்றி
    ஓம்  போகம் தருள்வாய்  போற்றி
    ஓம்  பூதேவி தாயே  போற்றி
    ஓம்  புகழெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  சீதேவி தாயே  போற்றி
    ஓம்  சிறப்பெலாம் அருள்வாய்  போற்றி
    ஓம்  மதிவதன வல்லி  போற்றி
    ஓம்  மாண்பெலாம் தருவாய்  போற்றி
    ஓம்  நித்திய கல்யாணி  போற்றி
    ஓம்  நீதிநெறி அருள்வாய்  போற்றி
    ஓம்  கமலக்கன்னி  போற்றி
    ஓம்  கருத்தினி லமர்வாய்  போற்றி
    ஓம்  தாமரைத் தாயாய்  போற்றி
    ஓம்  தவநிலை அருள்வாய்  போற்றி
    ஓம்  கலைஞானச் செல்வி  போற்றி
    ஓம்  கலைஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  அருள்ஞானச் செல்வி  போற்றி
    ஓம்  அறிஞருக் கருள்வாய்  போற்றி
    ஓம்  எளியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  ஏழ்மையைப் போக்குவாய்  போற்றி
    ஓம்  வறியவர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  வறுமையை ஒழிப்பாய்  போற்றி
    ஓம்  வேத வல்லியே  போற்றி
    ஓம்  வேட்கையைத் தணிப்பாய்  போற்றி
    ஓம்  பிறர்பொருள் கவர எண்ணாப்
     பெரியர்க் கருள்வாய்  போற்றி
    ஓம்  நடுநிலை நீங்கிடாத நல்லவர்க்
     கருள்வாய்  போற்றி
    ஓம்  அறநெறி வழுவிலாத அடியவர்க்
     கருள்வாய்  போற்றி
    ஓம்  அனைத்துமே ஆனாய்  போற்றி
    ஓம்  அருள்மிகு லட்சுமிதாயே
    போற்றி போற்றி போற்றி
    ஜாதகப்படி கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கும், ராகு, கேது, சரியான ஸ்தானங்களில் அமையாதவர்களும் இந்த மந்திரங்களைக் கூறிப்பலன் பெறலாம்.
    ஆவணி மாதம் வளர்பிறை பஞ்சமி திதியில் சுவாமி நட்சத்திரத்தில் கருடன் பிறந்தான். எனவே, ஆவணி மாத சுக்கிலபட்ச பஞ்சமி கருட பஞ்சமியாகக் கொண்டாடப்படுகிறது. மேலும் சுவாதி நட்சத்திரம் கருடனின் ஜென்ம நட்சத்திரமாக இருப்பதால் சுவாதி நட்சத்திரம் வரும் நாளில் கருடனைத் தரிசனம் செய்வது பெரும் புண்ணியத்தையும், சுபிட்சங்களையும் அளிக்கும். இதேபோல் பஞ்சமி திதியிலும் தரிசிக்க வேண்டும்.

    ஓம் ஷிப ஸ்வாஹா

    ஜாதகப்படி கால சர்ப்ப தோஷம் உள்ளவர்களுக்கும், ராகு, கேது, சரியான ஸ்தானங்களில் அமையாதவர்களும் இந்த மந்திரங்களைக் கூறிப்பலன் பெறலாம்.
    ×