search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shiva slokas"

    சிவபெருமானுக்கு உகந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் தீர்க்காயுள் கிடைக்கும்.
    ஹஸ்தாப்யாம் கலசத்வயாம்ருத ரஸைராப்லாவயந்தம் சிரோ
    த்வாப்யாம் தெள தத்தம் ம்ருகாக்ஷவலயே த்வாப்யாம் வஹந்தம் பரம்
    அங்கந்யஸ்தகரத்வயாம்ருத்தரம் கைலாசகாந்தம் சிவம்
    ஸ்வச்சாம்போஜகதம் நவேந்துமகுடம் தேவம் த்ரிநேத்ரம் பஜே,

    – ம்ருத்யுஞ்ஜய ஸ்தோத்திரம்

    பொதுப் பொருள்: இரண்டு கைகளில் அம்ருதத்தை ஏந்திய வரும், மற்ற இரு கைகளில் மான் மற்றும் ருத்ராக்ஷ மாலையை ஏந்தியவாறு மேலிரண்டு கைகள் மேலே ஆகாயத்தை நோக்கியும், கீழிரண்டு கைகளும் தொடையில் வைத்தவாறு தலையில் பிறை சந்திரனை அணிந்தவரும், வெள்ளை மேகம் போல் காட்சியளிக்கும் கைலாயத்தில் வசிப்பவருமான அந்த முக்கண்ணனை வணங்குகிறேன்.
    பிரதோஷ தினமான இன்று கீழே கொடுக்கப்பட்டுள்ள மந்திரத்தை சிவன் முன்னிலையில் கூறி வழிபட, நம்மை அறியாமல் செய்த தீங்கினால் வந்த சாபங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.
    இன்று சிறப்பு வாய்ந்த மார்கழி மாத பிரதோஷம். சிவபெருமானுக்குரிய பிரதோஷம் மற்றும் சிவராத்திரி தினங்களில் பிரதோஷ காலத்தில் கோவிலுக்கு சென்று, அங்குள்ள நந்தி தேவருக்கு அருகம்புல்லையும், சிவபெருமானுக்கு செவ்வரளி பூக்களையும் சாற்றி சிவபெருமானுக்கு தீபாராதனை காட்டும் போது இந்த மந்திரத்தை 9 அல்லது 11 முறை கூறி வழிபட, நம்மை அறியாமல் பிற மனிதர்கள் மற்றும் பிற உயிர்களுக்கு செய்த தீங்கினால் வந்த சாபங்கள் நீங்கும் என்பது நம்பிக்கை.

    ம்ருத்யுஞ்ஜயாய ருத்ராய நீலகண்ட்டாய சம்பவே
    அம்ருதேஸாய சர்வாய மஹாதேவாய தே நமஹ
    நமது இந்து மத அடையாளங்களில் திருநீறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. திருநீறு பூசும் போது கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்து வரலாம்.
    நமது இந்து மத அடையாளங்களில் திருநீறு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்தது. இந்த ஸ்லோகத்தை திருநீறு பூசும் போது சொன்னால் சிறப்பு.

    பாஸனாத் பஸிதம் ப்ரோக்தம் பஸ்ம கல்மஷ பக்ஷணாத்
    பூதி: பூதிகரீபும்ஸாம் ரக்ஷா ரக்ஷாகரீ சுபா.
    தினமும் அல்லது சிவபெருமானுக்கு உகந்த நாட்களில் சொல்ல வேண்டிய லிங்காஷ்டகத்தை (தமிழில்) அறிந்து கொள்ளலாம்.
    அன்னையும் பிதாவும் முதன்மை என்கின்றன இதிகாச, புராணங்கள். அவர்களைப் பணிந்தாலே போதும், சகல வளமும் நலமும் சேரும் என்பது நிச்சயம். சிவபாலன் முருகன் தன் பெற்றோரைப் பணிந்து பாடிய இத்துதியைச் சொல்வது வற்றாத செல்வமும், குன்றாத ஆயுளும் தரும் என்பது குமரக்கடவுளின் வாக்கு. துதியைச் சொல்வதோடு தூய மனதுடன் உங்கள் தாய் தந்தையரையும் பணியுங்கள். நிச்சயம் உங்கள் சந்தோஷம் இரட்டிப்பாகும்.

    நான்முகன் திருமால் பூஜை செய் லிங்கம்

    தூயசொல் புகழ் பெரும் பேரெழில் லிங்கம்

    பிறவிப் பெருந்துயர் போக்கிடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 1

    காமனை எரித்த பேரெழில் லிங்கம்

    இராவணன் கர்வம் அடக்கிய லிங்கம்

    வழி வழி முனிவர்கள் வழிபடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 2

    திவ்ய மணம் பல கமழ்கின்ற லிங்கம்

    சித்தம் தெளிவிக்கும் சித்தர்கள் லிங்கம்

    தேவரும் அசுரரும் வணங்கிடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 3

    படம் எடுத்தாடும் பாம்பணை லிங்கம்

    கனகமும் நவமணி ஒளித்திடும் லிங்கம்

    தட்சனின் யாகத்தை அழித்திட்ட லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 4

    குங்குமம் சந்தனம் பொழிந்திடும் லிங்கம்

    பங்கய மலர்களைச் சூடிடும் லிங்கம்

    வந்ததொரு பாவத்தைப் போக்கிடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 5

    அசுரர்கள் அங்கம் போற்றிடும் லிங்கம்

    அன்பர்கள் பக்தியை ஏற்றிடும் லிங்கம்

    கதிரவன் கோடி சுடர் மிகு லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 6

    எட்டிதழ் மலர்களும் சுற்றிடும் லிங்கம்

    எல்லாப் பிறப்பிற்கும் காரண லிங்கம்

    அஷ்ட தரித்திரம் அகற்றிடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 7

    வியாழனும் தேவரும் போற்றிடும் லிங்கம்

    வில்வமதை மலர் எனக்கொளும் லிங்கம்

    தன்னோடு பிறரையும் காத்திடும் லிங்கம்

    வணக்கம் ஏற்ற ஸதாசிவ லிங்கம் 8

    (ஸ்ரீ லிங்காஷ்டகம் தமிழாக்கம் நிறைவு)
    கீழே கொடுக்கப்பட்டுள்ள அர்த்தநாரீஸ்வரர் துதியை தினமும் பாராயணம் செய்து வந்தால் கணவன்-மனைவியிடையே பிரிவினை என்பதே வராது.
    வலப்பக்கம் சிவனும், இடப்பக்கம் பார்வதியுமாக உள்ள திருக்கோலமே அர்த்த நாரீஸ்வர மூர்த்தியாகும். கணவன்-மனைவி இருவரும் ஒருவர்க்கு ஒருவர் விட்டுக்  கொடுத்து வாழவும், குடும்பத்தில் ஒற்றுமை, அமைதி நிலவவும் இந்தத் துதியை தினமும் ஜபம் செய்து வணங்கினால் காரியங்கள் கைகூடும் என்பது ஐதீகம். வில்வம், தும்பை, கொன்றை மலர் அர்ச்சனையும், சர்க்கரைப் பொங்கல் (அல்லது) நெய்யன்ன நைவேத்தியமும் செய்து, திங்கள்கிழமை, பிரதோஷ, பௌர்ணமி தினங்களில் இத்துதியை பாராயணம் செய்து வர பிரிந்த தம்பதியர் ஒன்று சேர்வர் என்பது பல ஆன்மிகர்களின் அனுபவ நம்பிக்கை.
     
    சாம்பேய கௌரார்த சரீரகாயை
    கர்பூர கௌரார்த சரீரகாய
    தம்மில்லகாயை ச ஜ்டாதராய
    நம:சிவாயை ச நம:சிவாய
    கஸ்தூரிகா குங்கும சர்சி தாயை
    சிதாரஜ:புஞ்ஜ விசர்சிதாய
    க்ருதஸ்மராயை விக்ருதய்மராய
    நம:சிவாயை ச நம:சிவாய
    ஜணத் க்வணத் கங்கண நூபுராயை
    பாதாப்ஜ ராஜத் பணி நூபுராய
    ஹேமாங்கதாயை புஜகாங்கதாய
    நம:சிவாயை ச நம:சிவாய 
    விசால நீலோத்பல லோசனாயை
    விகாஸி பங்கேருஹ லோசனாய
    ஸமேக்ஷனாயை விஷமேக்ஷணாய
    நம:சிவாயை ச நம:சிவாய
    மந்தார மாலா கலிதாலகாயை
    கபால மாலாங்கித கந்தராய
    திவ்யாம்பராயை ச திகம்பராய
    நம:சிவாயை ச நம:சிவாய
    அம்போதர ச்யாமல குந்தலாயை
    தடித் ப்ரபா தாம்ரஜடாதராய
    நிரீச்வராயை நிகலேச்வராய
    நம:சிவாயை ச நம:சிவாய
    ப்ரபஞ்ச ஸ்ருஷ்ட்யுன்முக லாஸ்ய
    காயை ஸமஸ்தஸம் ஹாரக தாண்டவாய
    ஜகத்ஜநன்யை ஜகதேகபித்ரே
    நம:சிவாயை ச நம:சிவாய
    ப்ரதீப்த ரத்னோஜ்வல குண்டலாயை
    ஸ்புரன் மஹாபந்நக பூஷணாய
    சிவான்விதாயை ச சிவான்விதாய
    நம:சிவாயை ச நம:சிவாய
    ஏதத்படேத் அஷ்டக மிஷ்டதம்
    யோ பக்த்யா ஸ மான்யோ
    புவி தீர்கஜீவீ  ப்ராப்னோதி
    ஸெளபாக்ய மனந்தகாலம்.

    மேற்கண்ட அர்த்தநாரீஸ்வர துதி மிகவும் சக்தி மிக்கது. குடும்பத்தில் மகிழ்ச்சியை தரக்கூடியது. கணவன்-மனைவி இடையே அன்பையும், பாசத்தையும், ஒற்றுமையையும் தரக்கூடியது. இதை தினமும் பாராயணம் செய்து வந்தால் கணவன்-மனைவியிடையே பிரிவினை என்பதே வராது. இருவரிடையே மன ஒற்றுமையை அர்த்தநாரீஸ்வரர் பலமாக உண்டாக்குவார்.
    சிவபெருமானுக்கு உகந்த இந்த சிவபுராணத்தை தினமும் அல்லது பிரதோஷ நாட்களில் சொல்லி சிவபெருமானை வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    நமச்சிவாய வாழ்க நாதன்தாள் வாழ்க
    இமைப்பொழுதும் என்நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க
    கோகழி யாண்ட குருமனிதன் தாள் வாழ்க
    ஆகம மாகிநின் றண்ணிப்பான் தாள் வாழ்க
    ஏகன் அநேகன் இறைவன் அடி வாழ்க
    வேகங் கெடுத்தாண்ட வேந்தனடி வெல்க
    பிறப்பறுக்கும் பிஞ்ஞகன்றன் பெய்கழல்கள் வெல்க
    புறத்தார்க்குச் சேயோன்றன் பூங்கழல்கள் வெல்க
    கரம் குவிவார் உள்மகிழும் கோன்கழல்கள் வெல்க
    சிரம் குவிவார் ஊங்குவிக்கும் சீரோன் கழல்வெல்க

    ஈசனடி போற்றி எந்தையடி போற்றி
    தேசனடி போற்றி சிவன்சே வடி போற்றி
    நேயத்தே நின்ற நிமல னடி போற்றி
    மாயப் பிறப்பறுக்கும் மன்னனடி போற்றி
    சீரார் பெருந்துறைநந் தேவனடி போற்றி
    ஆராத இன்பம் அருளுமலை போற்றி
    சிவன் அவன் என் சிந்தையுள் நின்ற அதனால்
    அவனரு ளாளே அவன்றாள் வணங்கிச்
    சிந்தைமகிழச் சிவபுரா ணந்தன்னை
    முந்தை வினைமுழுதும் ஓய உரைப்பனயான்

    கண்ணுதலான் தன் கருணைக் கண்காட்ட வந்தெய்தி
    எண்ணுதற் கெட்டா எழிலாற் கழலிறைஞ்சி
    விண்ணிறைந்து மண்ணிறைந்து மிக்காய் விளங்கொளியாய்
    எண்ணிறந் தெல்லை யிலாதானே நின்பெருஞ்சீர்
    பொல்லா வினையேன் புகழும் ஆறு ஒன்று அறியேன்
    புல்லாகிப் பூடாய்ப் புழுவாய் மரமாகிப்
    பல்விருக மாகிப் பறவையாய்ப் பாம்பாகிக்
    கல்லாய் மனிதராய்ப் பேயாய்க் கணங்களாய்
    வல்லசுர ராகி முனிவராய்த் தேவராய்ச்
    செல்லா அ நின்ற இத் தாவர சங்கமத்துள்

    எல்லாப் பிறப்பும் பிறந்திளைத்தேன் எம்பெருமான்
    மெய்யேயுன் பொன்னடிகள் கண்டின்று வீடுற்றேன்
    உய்யஎன் உள்ளத்துள் ஓங்கார மாய்நின்ற
    மெய்யா விமலா விடைப்பாகா வேதங்கள்
    ஐயா எனவோங்கி ஆழ்ந்தகன்ற நுண்ணியனே
    வெய்யாய் தணியாய் இயமானன் ஆம் விமலா
    பொய்யா யினவெல்லாம் போயகல வந்தருளி
    மெய்ஞ்ஞான மாகி மிளிர்கின்ற மெய்ச்சுடரே
    எஞ்ஞான மில்லாதேன் இன்பப் பெருமானே
    அஞ்ஞானந் தன்னை அகல்விக்கும் நல்லறிவே

    ஆக்கம் அளவிறுதி யில்லாய் அனைத்துலகும்
    ஆக்குவாய் காப்பாய் அழிப்பாய் அருள்தருவாய்
    போக்குவாய் என்னைப் புகுவிப்பாய் நின்றொழும்பின்
    நாற்றத்தின் நேரியாய் சேயாய் நணியானே
    மாற்றம் மனங்கழிய நின்ற மறையோனே
    கறந்தபால் கன்னலொடு நெய்கலந்தாற் போலச்
    சிறந்தடியார் சிந்தனையுள் தேனூறி நின்று
    பிறந்த பிறப்பறுக்கும் எங்கள் பெருமான்
    நிறங்களோ ரைந்துடையாய் விண்ணோர்கள் ஏத்த
    மறைந்திருந்தாய் எம்பெருமான் வல்வினையேன்றன்னை

    மறைந்திட மூடிய மாய இருளை
    அறம்பாவம் என்னும் அருங்கயிற்றாற் கட்டிப்
    புறத்தோல்போர்த் தெங்கும் புழுவழுக்கு மூடி
    மலஞ்சோரும் ஒன்பது வாயிற் குடிலை
    மலங்கப் புலனைந்தும் வஞ்சனையைச் செய்ய
    விலங்கு மனத்தால் விமலா உனக்குக்
    கலந்த அன் பாகிக் கசிந்து ள்ளுருகும்
    நலந்தா னிலாத சிறியேற்கு நல்கி
    நிலந்தன்மேல் வந்தருளி நீள்கழல்கள் காட்டி
    நாயிற் கடையாய்க் கிடந்த அடியேற்குத்

    தாயிற் சிறந்த தயாவான தத்துவனே
    மாசற்ற சோதி மலர்ந்த மலர்ச்சுடரே
    தேசனே தேனார் அமுதே சிவபுரனே
    பாசமாம் பற்றறுத்துப் பாரிக்கும் ஆரியனே
    நேச அருள்புரிந்து நெஞ்சில்வஞ் சங்கெடப்
    பேராது நின்ற பெருங்கருணைப் பேராறே
    ஆரா வமுதே அளவிளாப் பெம்மானே
    ஓராதார் உள்ளத் தொளிக்கும் ஒளியானே
    நீரா யுருக்கியென் ஆருயிராய் நின்றானே
    இன்பமும் துன்பமும் இல்லானே யுள்ளானே

    அன்பருக் கன்பனே யாவையுமாய் அல்லையுமாம்
    சோதியனே துன்னிருளே தோன்றாப் பெருமையனே
    ஆதியனே அந்தம் நடுவாகி அல்லானே
    ஈர்த்தென்னை யாட்கொண்ட எந்தை பெருமானே
    கூர்த்தமெய்ஞ் ஞானத்தாற் கொண்டுணர்வார் தங்கருத்தின்
    நோக்கரிய நோக்கே நுணுக்கரிய நுண்ணுணர்வே
    போக்கும் வரவும் புணர்வுமிலாப் புண்ணியனே
    காக்குமெங்காவலனே காண்பரிய பேரொளியே
    ஆற்றின்ப வெள்ளமே அத்தா மிக் காய் நின்ற
    தோற்றச் சுடரொளியாய்ச் சொல்லாத நுண்ணுணர்வாய்

    மாற்றமாம் வையகத்தின் வெவ்வேறே வந்தறிவாம்
    தேற்றனே தேற்றத் தெளிவேயென் சிந்தனையுள்
    ஊற்றான உண்ணா ரமுதே உடையானே
    வேற்று விகார விடக்குடம்பின் உட்கிடப்ப
    ஆற்றேன் எம் ஐயா அரனேயோ என்றென்று
    போற்றிப் புகழ்ந்திருந்து பொய்கெட்டு மெய்யானார்
    மீட்டிங்கு வந்து வினைப்பிறவி சாராமே
    கள்ளப் புலக்குரம்பை கட்டழிக்க வல்லானே
    நள்ளிருளில் நட்டம் பயின்றாடும் நாதனே
    தில்லையுட் கூத்தனே தென்பாண்டி நாட்டானே

    அல்லற் பிறவி அறுப்பானே ஓ என்று
    சொல்லற் கரியானைச் சொல்லித் திருவடிக்கீழ்
    சொல்லிய பாட்டின் பொருளுணர்ந்து சொல்லுவார்
    செல்வர் சிவபுரத்தி னுள்ளார் சிவனடிக்கீழ்ப்
    பல்லோரும் ஏத்தப் பணிந்து!!!

    திருச்சிற்றம்பலம்
    சென்னையின் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும், அஷ்ட லிங்கங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றை வணங்குவதற்குரிய பாசுரங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.
    திருவண்ணாமலை திருத்தலத்தில் அண்ணாமலையார் ஆலயத்தைச் சுற்றியுள்ள கிரிவலப் பாதையில் வலம் வரும்போது, அஷ்ட லிங்கங்களை நாம் தரிசனம் செய்ய முடியும். அதேபோல் சென்னையின் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலைச் சுற்றிலும், அஷ்ட லிங்கங்கள் அமைந்து சென்னை மக்களுக்கும் அருள்வழங்கிக் கொண்டிருக்கிறது. இந்த அஷ்ட லிங்கங்களும், சுமார் 18 கிலோமீட்டர் எல்லைச் சுற்றுக்குள் அமைந்திருக்கின்றன. எனவே இந்த எட்டு லிங்கங்களையும் ஒரே நாளில் தரிசனம் செய்து விட முடியும்.

    வேதங்கள் நான்கும் வேல மரங்களாக அடர்ந்திருந்த காரணத்தால், ‘வேற்காடு’ என்று பெயர் பெற்ற திருவேற்காடு தலத்துக்கு, அகத்தியர் ஒரு முறை வருகை தந்தார். அப்போது, சிவபெருமானை அவர் பாடிப் பணிந்ததன் பேரில், அவருக்கு சிவபெருமான் பார்வதிதேவியுடன் காட்சியளித்தார். அகத்தியர் வேண்டிய உடன் காட்சி தந்த சிவபெருமானிடம், அன்னை உமாதேவி ஒரு கேள்வியை முன் வைத்தார்.

    ‘மகரிஷிகளுக்கும், தவயோகிகளுக்கும், புண்ணிய சீலர்களுக்கும் கேட்ட உடன் உங்கள் திருக்காட்சியை அருள்கிறீர்கள். ஆனால், உலக மக்களுக்கு மட்டும் ஏன் தாமதம் செய்கிறீர்கள்?’ என்றார்.

    அதன் காரணமாகவே, அனைத்து மக்களும் வழிபட்டு எளிதில் ஈசனின் அருள்பெற திருவேற்காடு தலத்தின் எட்டு திசைகளிலும் உமாதேவியுடன் இணைந்து அஷ்ட லிங்க மேனிகளை இறைவன் வெளிப்படுத்தி கோவில் கொண்டதாக ஐதீகம்.

    அதேசமயம் ஒவ்வொரு திசையிலும் அத்திசைகளுக்குரிய திக்பாலகர்கள், அஷ்ட லிங்கங்களை அமைத்து வேதபுரீஸ்வரரை நோக்கி தவம் செய்ததாகவும் திருவேற்காடு புராணம் கூறுகிறது.

    வழிபாட்டு முறை

    பக்தர்கள் ‘சிவாலய ஓட்டம்’ என்ற முறையிலும், அஷ்டலிங்க தரிசன சேவை என்ற வகையிலும் பவுர்ணமி, அமாவாசை, ஞாயிறு, வெள்ளி மற்றும் திங்கட்கிழமைகளில் அஷ்ட லிங்கங்களை தரிசித்து பாசுரங்களை பாடி வணங்குகின்றனர். முதலில் திருவேற்காடு வேதபுரீஸ்வரர் சன்னிதியில் தொடங்கி ஈசான லிங்கத் திருமேனியான எட்டாவது லிங்கம் வரை தரிசனம் செய்வது மரபு. அந்த லிங்கங்கள் அமைந்துள்ள இடங்கள் மற்றும் அவற்றை வணங்குவதற்குரிய பாசுரங்கள் பற்றி இங்கே பார்ப்போம்.

    இந்திர லிங்கம்


    அஷ்ட லிங்கங்களில் முதலாவதாக தரிசிக்க வேண்டியது இந்திர லிங்கம். இது திருவேற்காடு வேதபுரீஸ்வரர் கோவிலில் இருந்து நேர் கிழக்காக சுமார் 1½ கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. இந்திரனால் பூஜை செய்யப்பட்டதால், இங்குள்ள இறைவன் ‘இந்திர சேனாபதீஸ்வரர்’ என்ற பெயருடன் வள்ளிக் கொல்லைமேடு என்ற இடத்தில் கோவில் கொண்டுள்ளார். அங்கே நெய் தீபம் ஏற்றி வைத்து, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால், பதவி உயர்வு, அரசாங்க காரிய அனுகூலம் போன்ற நற்பலன்கள் ஏற்படும்.

    ‘தூயகண் மூன்றினோடு சுடரும் பொன் வதனம் நான்கும்
    பாயுமான் மழுவினோடு பகர்வர தாபயம் கண்
    மேயதின் புயங்கள் நான்கும் மிளிருமின் அனைய தேகம்
    ஆயதற் புருடன் எம்மைக் குணதிசை அதனிற் காக்க’

    அக்னி லிங்கம்

    இரண்டாவதாக வழிபட வேண்டிய அக்னி லிங்கம், திருவேற்காட்டிற்கு தென்கிழக்கில் உள்ள வள்ளிக் கொல்லைமேட்டில் இருந்து சுமார் 3½ கி.மீ. தொலைவில் நூம்பல் என்ற இடத்தில் இருக்கிறது. ஆனந்தவல்லி சமேத அகத்தீஸ்வரர் என்னும் நாமம் கொண்டு இறைவன் அருள்புரிகிறார். அகத்திய முனிவரால் காசியில் இருந்து கொண்டு வரப்பட்ட ‘நூம்பல்’ என்னும் அபூர்வ புஷ்பங்களால் வழிபடப் பெற்றதால், இந்த தலத்துக்கு ‘நூம்பல்’ என்று பெயர். இங்குள்ள சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடினால் எதிரிகள் தொல்லை, வழக்குகள் மற்றும் வெப்பம் தொடர்பான பிணிகள் அகலும்.

    ‘பங்கயத் தவிசின் மேவி இருந்துடற் பற்று நீக்கி
    அங்கு நற்பூத சித்தி அடைவுடன் பின்னர்
    கங்கையைத் தரிசித்த சென்னிக் கற்பகத் தருவைச் செம்பொற்
    கொங்கை வெற்பனைய பச்சைக் கொடியொடும் உளத்தில் வைத்தே’

    எம லிங்கம்

    மூன்றாவதாக வணங்க வேண்டிய எம லிங்கம், நூம்பல் தலத்தில் இருந்து சுமார் 4½ கி.மீ தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையின் வலது பக்கம் உள்ள செந்நீர்க்குப்பத்தில் இருக்கிறது. இத்தல இறைவன் மரகதாம்பிகை தேவி சமேத கயிலாசநாதர். இவருடைய சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வணங்கினால் ஏழரைச் சனி, கண்டகச் சனி, வழக்கு சம்பந்தமான தொல்லைகளில் இருந்து விடுபடலாம்.

    ‘மான் மழுசூலம் தோட்டி வனைதரும் அக்கமாலை
    கூன்மலி அங்குசம் தீத்தமருகம் கொண்ட செங்கை
    நான்முக முக்கண் நீல நள்ளிருள் வருணம் கொண்டே
    ஆன்வரும் அகோர மூர்த்தி தென்திசை அதனிற் காக்க’

    நிருதி லிங்கம்

    நான்காவதாக வணங்க வேண்டியது நிருதி லிங்கம். செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 4½ கி.மீ தூரத்தில் ஆவடி-பட்டாபிராம் சாலையில், மகாநாடு பேருந்து நிறுத்தம் அருகில் பாரிவாக்கம் என்ற இடத்தில் இந்த ஆலயம் உள்ளது. இங்கே பாலீஸ்வரர் என்ற பெயருடன், பாலாம்பிகை சமேத பாலீஸ்வரர் என்ற நாமத்துடன் இறைவன் அருள்கிறார். சுமார் 2,300 ஆண்டுகள் முற்பட்ட இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால் தீராத துயரத்தில் சிக்கி நிர்க்கதியாய் நிற்பவர்களுக்கு நல்வாழ்வு உண்டாகும்.

    ‘வனமறை பயிலு நாவன்நா மணி நீலகண்டன்
    கனம் அடு பினாக பாணி கையினைத் தருமவாரு
    கிளர்புயன் தக்கன் யாகம் கெடுத்தவன் மார்பு தூய
    ஒளிதரு மேருவல்லி உதரம் மன்மதனைக் காய்ந்தோன்’

    வருண லிங்கம்

    ஐந்தாவது வழிபட வேண்டிய இந்த லிங்கம், செந்நீர்க்குப்பத்தில் இருந்து சுமார் 2½ கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி சாலையில் மேட்டுப்பாளையம் என்ற இடத்தில் இருக்கிறது. இங்கு ஜலகண்டேஸ்வரி சமேத ஜலகண்டேஸ்வரராக இறைவன் அருள்கிறார். இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி வைத்து கீழ்க்கண்ட பாசுரத்தை மனம் உருக பாடி வழிபாடு செய்தால், வீடு கட்டுவதில் உள்ள தடை தாமதங்கள் விலகும்.

    ‘திவண்மாரி அக்கமாலை செங்கையோர் இரண்டும் தாங்க
    அளிந்தரும் இரண்டு செங்கை வரதம் தோள் அபயம் தாங்க
    கவினிறை வதனம் நான்கும் கண்ணொரு மூன்றும் காட்டும்
    தவனமா மேனிச் சத்தியோ சாதண் மேற்றிசையில் காக்க’

    வாயு லிங்கம்

    ஆறாவது லிங்கமான வாயு லிங்கம், திருவேற்காட்டீஸ்வரர் சன்னிதிக்கு வடமேற்கு திசையில், மேட்டுப்பாளையத்தில் இருந்து சுமார் 4 கி.மீ. தொலைவில் பூந்தமல்லி-ஆவடி நெடுஞ்சாலையில் பருத்திப்பட்டு என்ற இடத்தில் அமைந்துள்ளது. விருத்தாம்பிகை தேவி சமேத வாயு லிங்கேஸ்வரராக இறைவன் வீற்றிருக்கிறார். இந்த சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால் கண் திருஷ்டி நீங்கும்.

    ‘கடையுகம் தன்னில் எல்லா உலகமும் கடவுள் தீயால்
    அடலை செய்து அமலை தானம் அறைதர நடிக்கும் ஈசன்
    இடைநெறி வளைதா பத்தில் எறிதரு சூறைக் காற்றில்
    தடைபடா தெம்மை இந்தத் தடங்கடல் உலகிற் காக்க’

    குபேர லிங்கம்

    அஷ்ட லிங்கங்களில் ஏழாவது குபேர லிங்கம். பருத்திப்பட்டு வாயுலிங்க சன்னிதியில் இருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில், ஆவடி-திருவேற்காடு சாலையில், சுந்தரசோழபுரம் என்ற இடத்தில் இந்த ஆலயம் இருக்கிறது. இத்தல இறைவன், வேம்புநாயகி சமேத குபேரீஸ்வரர். கி.பி.11-ம் நூற்றாண்டில் சுந்தரசோழன் ஆட்சி செய்த காரணத்தால், இந்த ஊர் சுந்தர சோழபுரம் என்று அழைக்கப்படுகிறது. குபேர லிங்க சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரங்களை பாடி வணங்கினால், பொன்னும், நவ மணிகளும் வீட்டில் தங்கும் என்பது ஐதீகம்.

    ‘கறைகெழு மழுவும் மானும் அபயமும் கண்ணின் நாமம்
    அறைதரு தொடையும் செய்ய அங்கைகள் நான்கும் ஏந்தி
    பொறை கொள் நான் முகத்து முக்கண் பொன்னிறமேனியோடும்
    மறைபுகழ் வாமதேவன் வடதிசை அதனிற் காக்க’

    ஈசான லிங்கம்

    அஷ்ட லிங்கங்களில் எட்டாவதாக தரிசனம் செய்ய வேண்டிய லிங்கம் இது. வேதபுரீஸ்வரர் சன்னிதிக்கு வடகிழக்கு திசையில், சுந்தர சோழபுரத்தில் இருந்து சுமார் 2 கி.மீ. தொலைவில் திருவேற்காடு- கோலடி சாலை சுற்றுப்பாதையில் வலப்புறமாக இந்த கோவில் இருக்கிறது. பார்வதி தேவி சமேத ஈசான லிங்கம் இதுவாகும். பெரிய பாணலிங்க வடிவில் அருள் புரியும் ஈசானிய லிங்க சன்னிதியில் நெய் தீபம் ஏற்றி, கீழ்க்கண்ட பாசுரத்தை பாடி வழிபட்டால், காரியத் தடை, கண் திருஷ்டி நீங்கும்.

    ‘அங்குசம் கபாலம் சூலம் அணிவர தாபயங்கள்
    சங்குமான் பாசம் அக்கம் தமருகம் கரங்கள் ஏந்தி
    திங்களிற் றவன மேனி திருமுகம் ஐந்தும் பெற்ற
    எங்கள் ஈசான தேவன் இருவிசும்பெங்கும் காக்க’
    சிவனுக்கு பிரியமான இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது பிரதோஷ தினங்களில் சொல்லுவதால், வாழ்வில் தடைகள் நீங்கி வளம் பெறலாம்.
    சிவனுக்கு பிரியமான இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது பிரதோஷ தினங்களில் சொல்லுவதால், வாழ்வில் தடைகள் நீங்கி வளம் பெறலாம்.

    பொன்னார் மேனியனே புலித்தோலை அரைக் கசைத்து
    மின்னார் செஞ்சடைமேல் மிளர்கொன்றை அணிந்தவனே
    மன்னே மாமணியே மழபாடியுள் மாணிக்கமே
    அன்னே உன்னையல்லால் இனியாரை நினைக்கேனே.

    இந்த ஸ்லோகத்தை தினமும் 11 முறை படித்து வரலாம். இந்த ஸ்லோகம் படிக்கும் போது அசைவம் சாப்பிடாமல் இருத்தல் நலம்.
    ×