என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    கீழே கொடுக்கப்பட்டுள்ள சிவ மந்திரத்தை தினமும் 108 முறை சொல்லி வந்தால் என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்பதை விரிவாக பார்க்கலாம்.
    நங்சிவயநம என்று உச்சரிக்க - திருமணம் நிறைவேறும்
    அங்சிவயநம என்று உச்சரிக்க - தேகநோய் நீங்கும்
    வங்சிவயநம என்று உச்சரிக்க - யோகசித்திகள் பெறலாம்.
    அங்சிவயநம என்று உச்சரிக்க - ஆயுள் வளரும், விருத்தியாகம்
    ஓம் அங்சிவாய என்று உச்சரிக்க - எதற்கும் நிவாரணம் கிட்டும்.
    கிலி நமசிவய என்று உச்சரிக்க - வசிய சக்தி வந்தடையும்
    ஹிரீநமசிவய என்று உச்சரிக்க - விரும்பியது நிறைவேறும்
    ஐயும் நமசிவய என்று உச்சரிக்க - புத்தி வித்தை மேம்படும்.
    நம சிவய என்று உச்சரிக்க - பேரருள், அமுதம் கிட்டும்.
    உங்யுநமசிவய என்று உச்சரிக்க - வியாதிகள் விலகும்.
    கிலியுநமசிவய என்று உச்சரிக்க - நாடியது சித்திக்கும்
    சிங்வங்நமசிவய என்று உச்சரிக்க - கடன்கள் தீரும்.
    நமசிவயவங் என்று உச்சரிக்க - பூமி கிடைக்கும்.
    சவ்வுஞ் சிவாய என்று உச்சரிக்க - சந்தான பாக்யம் ஏற்படும்.
    சிங்றீங் என்று உச்சரிக்க - வேதானந்த ஞானியாவார் உங்றீம்
    சிவயநம என்று உச்சரிக்க - மோட்சத்திற்கு வழி வகுக்கும்.
    அங்நங் சிவாய என்று உச்சரிக்க - தேக வளம் ஏற்படும்.
    அவ்வுஞ் சிவயநம என்று உச்சரிக்க - சிவன் தரிசனம் காணலாம்.
    ஓம் நமசிவாய என்று உச்சரிக்க - காலனை வெல்லலாம்.
    லங் ஸ்ரீறியுங் நமசிவாய என்று உச்சரிக்க - தானிய விளைச்சல் மேம்படும்.
    ஓம் நமசிவய என்று உச்சரிக்க - வாணிபங்கள் மேன்மையுறும்
    ஓம் அங்உங்சிவயநம என்று உச்சரிக்க - வாழ்வு உயரும், வளம் பெருகும்.
    ஓம் ஸ்ரீயும் சிவயநம என்று உச்சரிக்க - அரச போகம் பெறலாம்.
    ஓம் நமசிவய என்று உச்சரிக்க - சிரரோகம் நீங்கும்.
    ஓங் அங்சிவாய நம என்று உச்சரிக்க - அக்னி குளிர்ச்சியைத் தரும்.
    இந்த ஸ்லோகம் தினமும் ஒரு முறை சொல்லி வழிபட்டு வந்தால் அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து சகல செல்வங்களும் பெற்று வாழ முடியும் என்கிறது சாஸ்திரம்.
    சிவ பெருமானுக்கு நிகரான கால பைரவரை இந்த ஸ்லோகம் தினமும் ஒரு முறை சொல்லி வழிபட்டு வந்தால் அனைத்து கஷ்டங்களும் தீர்ந்து சகல செல்வங்களும் பெற்று, 16 பேறுகளும் உண்டாகி சுக போக வாழ்க்கையை வாழ முடியும் என்கிறது சாஸ்திரம்.

    தேவராஜ ஸேவ்யமான பாவனாங்க்ரி பங்கஜம்
    வ்யால யஜ்ஞ ஸூத்ரமிந்து சேகரம் க்ருபாகரம்
    நாரதாதி யோகிப்ருந்த வந்திதம் திகம்பரம்
    காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!!

    பொருள்: இந்திரன் வணங்கும் திருவடிகளையும், சந்திரனை தரித்தவரும், நாரதர் போன்ற யோகியர்களால் வணங்கப்பட்டவரும், திகம்பரருமான காசிநகரத்தில் அருள் பாலிக்கும் காலபைரவரை வணங்குகிறேன்.

    பானுகோடி பாஸ்வரம் பாவாப்தி தாரகம் பரம்
    நீலகண்ட மீப்ஸிதார்த்த தாயகம் த்ரிலோசனம்
    கால காலமம்புஜாக்ஷ மஸ்த ஸூன்ய மக்ஷரம்
    காசிகாபுராதி நாத காலபைரவம் பஜே!!

    பொருள்: பல ஆயிரம் சூரியன்களை போல பிரகாசமானவர், சம்ஸார கடலிலிருந்து கடைத்தேற்றுபவர், நீல கண்டர், விரும்பியதை அருள்பவர், முக்கண்னர், காலகாலர், தாமரையை ஒத்த கண்களை உடையவர், பரிபூரண அக்ஷரமானவர், காசியை காவல் காக்கும் தெய்வமான காலபைரவரை வணங்குகிறேன்.

    ஸூலடங்கபாச தண்ட பாணிமாதி காரணம்
    ச்யாமகாய மாதிதேவமக்ஷரம் நிராமயம்
    பீமவிக்ரமம் ப்ரபும் விசித்ர தாண்டவப்ரியம்
    காசிகா புராதிநாத கால பைரவம் பஜே!!

    பொருள்: சூலம், உளி, பாசம், தண்டம் இவைகளை கைகளில் பூண்டு ஆதி காரணமாய், கருமை நிற மேனியராய், குறையாத அக்ஷரமாய், பயங்கர நெறிமுறைகள் கொண்ட பிரபுவாய், விசித்திரமான தாண்டவம் புரிபவராய் திகழும் காசி காலபைரவரை வணங்குகிறேன்.

    புக்திமுக்தி தாயகம் ப்ரசஸ்தசாரு விக்ரஹம்
    பக்தவத்ஸலம் ஸ்திரம் ஸமஸ்தலோக விரக்ரஹம்
    நிக்வணன் மனோஜ்ஞ ஹேம கிங்கிணீ லஸத்கடிம்
    காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!!

    பொருள்: புத்தி, மோட்சம் இரண்டையும் அருள்பவராய்,அழகிய உருவங்கொண்டவராய், அடியார்களிடத்தில் அன்பு கொண்டவராய், உறுதியாய் அனைத்து உலகமும் வடிவாக அமைந்தவராய், தங்கத்தால் ஜொலிக்கும் அரைச்சதங்கையில் ஒலியெழுப்புபவராய் காசியை தாயகமாக கொண்ட காலபைரவரை வணங்குகிறேன்.

    தர்மஸேதுபாலகம் த்வதர்மமார்க நாஸகம்
    கர்மபாஸமோசகம் ஸுஸர்மதாயகம் விபும்
    ஸ்வர்ணவர்ண கேஸபாஸ சோபிதாங்க நிர்மலம்
    காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!!

    பொருள்: தர்மம் என்கிற பாலத்தை பாதுக்காப்பவராய், அதர்மத்தை அழிப்பவராய், கர்மம், பந்தம் இல்லை என்றாக்குபவராய், எங்கும் நிறைந்து நலம் அருளும் தங்க நிற கேசம் கொண்டவராய், தூய வடிவினராய் இருக்கும் காசி காலபைரவரை வணங்குகிறேன்.

    ரத்னபாதுகா ப்ரபாபிராம பாதயுக்மகம்
    நித்ய மத்விதீயமிஷ்ட தைவதம் நிரஞ்ஜனம்
    ம்ருத்யுதர்பநாசனம் கரால தம்ஷ்ட்ரபூஷணம்
    காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!!

    பொருள்: வைரம் இழைத்த பாதுகைகள் அணிந்திருப்பதால் மிகவும் அழகாயிருக்கின்றன. அவர் நித்யமான இஷ்ட தெய்வம். இரண்டாகக் கொள்ளப்படாதவர், எமனின் கொட்டத்தை அடக்கியவர். பயங்கர தெற்றிப்பற்கள் இருந்தாலும் அழகாயிருக்கின்றன. அத்தகைய காசி காலபைரவரை வணங்குகிறேன்.

    அட்டஹாஸபின்ன பத்மஜாண்ட கோசஸந்ததிம்
    த்ருஷ்டிபாத நஷ்ட பாபஜாலமுக்ரசாஸனம்
    அஷ்டஸித்தி தாயகம் கபால மாலிகா தரம்
    காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!!

    பொருள்: பிரம்மனின் அண்ட கோச கூட்டை அட்டகாசம் செய்து உடைத்தவருமான, பார்த்தவுடன் பாவங்களை ஒழிப்பவருமாய், பயங்கரமான கட்டளைகளை கொண்டவருமாய், மண்டை ஓட்டை மாலையாக அணிந்து அஷ்டமா சித்திகளை அருளும் காசி காலபைரவரை வணங்குகிறேன்.

    பூதஸங்கநாயகம் விசால கீர்த்திதாயகம்
    காசிவாஸிலோக புண்யபாப ஸோதகம் விபும்
    நீதிமார்ககோவிதம் புராதநம் ஜகத்பதிம்
    காசிகா புராதிநாத காலபைரவம் பஜே!!

    பொருள்: பூத கணங்களுக்கு நாயகராக, பரந்த கீர்த்தி தருபவர். காசியில் வாழும் மக்களின் பாவ, புண்ணியங்களை ஆராய்பவராக எங்கும் இருப்பவர். நீதி அறிந்த புராதன உலகத்தலைவரான காசி காலபைரவரை வணங்குகிறேன்.

    காலபைரவாஷ்டகம் படந்தி யே மனோஹரம்
    ஜ்யானமுக்திஸாதகம் விசித்ரபுண்யவர்த்தனம்
    சோகமோஹ லோபதைன்யகோப தாப நாசனம்
    தே ப்ரயாந்தி காலபைரவாங்க்ரி ஸந்ந்திம்த்ருவம்.

    பொருள்: இத்தகைய அழகிய காலபைரவாஷ்டகத்தைப் படிப்பவர்கள் ஞானம், முக்தியுடன் பற்பல புண்ணியங்களையும் அடைவார்கள். துக்கம், மோகம், லோபம், ஏழ்மை, கோபம், தாபம் நீங்க பெற்று காலபைரவர் சந்நிதியை நிச்சயம் அடைவார்கள்.
    காயத்ரி மந்திரம் உச்சரித்தால் எப்படி கோடீஸ்வரன் ஆக முடியும்? என்ற கேள்விக்கு உண்டான கதை சுருக்கத்தை இங்கே காணலாம்.
    காயத்ரி மந்திரம் உச்சரித்தால் எப்படி கோடீஸ்வரன் ஆக முடியும்? என்ற கேள்விக்கு உண்டான கதை சுருக்கத்தை இங்கே காணலாம்.

    ஒரு முறை அக்பர் மாளிகையில் தினமும் யாசகம் கேட்டு வந்த ஒரு பெரியவரை மகான் கோலத்தில் மன்னர் அக்பர் கண்டு வியந்தார். என்னடா இது? சில நாட்களுக்கு முன்பு வரை நம்மிடம் பிச்சை கேட்டு வாழ்ந்து வந்த இந்த முதியவரை இன்று மகான் என்று மக்கள் கொண்டாடுகிறார்களே எப்படி இது நிகழ்ந்தது என்று சிந்தித்து கொண்டு இருந்தார். கூட்டம் கலைந்து அந்த முதியவரிடமே சென்று கேட்டும் விட்டார் அக்பர்.

    அதற்கு அந்த பெரியவர் அருகில் நின்று கொண்டிருந்த பீர்பாலை சுட்டி காட்டி மன்னர் பெருமானே பீர்பால் தான் என்னை காயத்ரி மந்திரத்தை தினமும் உச்சரித்து வந்தால் அதிக பணம் தருகிறேன் என்று கூறினார். நானும் பணம் கிடைக்கிறதே என்று அவர் கோரியவாறு உச்சரித்து வந்தேன். ஆனால் என்னை அறியாமல் என் உடலில் புது வித மாற்றம் ஏற்படுவதை உணர்ந்தேன். பின்னர் பக்தி சிரத்தையுடன் கூறி வந்தேன்.

    அதனால் உள்ளம் சக்தி பெறுவதை கண்டேன். இந்த சக்தியால் தான் இன்று மக்களுக்கு என்னால் அருள்வாக்கு கூற முடிகிறது. தீரா பிணி தீர ஆசி வழங்குகிறேன் என்றார். சாதாரண மனிதனையும் தெய்வீக சக்தி பெற்ற மனிதராக மாற்றிய மந்திரம் தான் காயத்ரி மந்திரம். உடனே அனைவரும் கோடீஸ்வரனாக மாறி விட முடியுமா என்று கேட்கலாம். நம்பிக்கையுடன், பக்தி சிரத்தையுடன் உச்சரித்து வாருங்கள். மாற்றத்தை நீங்களே உணர்வீர்கள்.
    மன பயம் கொண்டவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள வீரலட்சுமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலனை காணலாம்.
    அஷ்டபாஹுயுதாம் லக்ஷ்மீம் ஸிம்ஹாஸன வரஸ்திதாம்
    தப்த காஞ்ச ந ஸங்காசாம் கிரீட மகுடோஜ்வலாம்
    ஸ்வர்ண கஞ்சுக ஸம்யுக்தாம் கந்த வீரதரம் ததா
    அபயம் வரதம் சைவ புஜயோஸ் ஸவ்ய வாம்யோ: சக்ரம்
    சூலம் ச பாணம் ச சங்கம் சாபம் கபாலகம்
    தததீம் வீரலக்ஷ்மீம் ச நவதாலாத்மிகாம் பஜே

    - வீரலக்ஷ்மி ஸ்லோகம்

    பொதுப் பொருள்: எட்டுத் திருக்கரங்களுடைய தேவியே. சிம்மாசனத்தில் கம்பீரமாக எழுந்தருளியுள்ளவளே. அதிகார தோரணை கொண்டவளே. ஒளி வீசும் ஆபரணங்களைப் பூண்டவளே. அபய வரதம் காட்டும் கரங்களுடன் மற்ற கரங்களில் சூலம், சங்கு, சக்கரம், வில், அம்பு, கபாலம் ஏந்தி வீரத்தோடு தோற்றமளிப்பவளே, தங்களைப் சரணடைந்தோருக்கு சௌபாக்கியங்களோடு துணிவையும், மன உறுதியையும் அருள்பவளே வீரலட்சுமித் தாயே தங்களை சரணடைகிறேன்.
    இத்துதியை தினமும் அல்லது செவ்வாய் கிழமைகளில் ஜபித்து வர ஆபத்துகளிலிருந்து முருகப்பெருமான் நம்மை கைதூக்கிக் காப்பாற்றுவான்.
    தேவாதி தேவனுதே தேவகணாதிநாத
    தேவேந்த்ர வந்த்யம்ருத பங்கஜமஞ்சுபாதா
    தேவரிஷி நாரதமுனீந்த்ர சுகிர்த கீர்த்தி
    வல்லீசநாத மம தேஹி கராவலம்பம்.
        
    பொதுப்பொருள்: தேவர்கள் அனைவரிலும் உயர்வான பெருமை கொண்டவரை, வணங்குகிறேன். தேவர்கள் அனைவருக்கும் தலைவரே, தேவேந்திரன் உட்பட அனைவரும் வணங்கிப் பணிந்திடும் பெருமை கொண்டவரே, குறவள்ளி மணாளனே, தங்கள் அபயக் கரத்தால் என் கை பற்றிக் காக்க வேண்டும், ஐயனே.
    இம்மந்திரத்தை ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அல்லது ஒரு திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை ஏகாதசியன்றோ அதிகாலையில் சொல்லத் தொடங்குதல் கூடுதல் நலம் பயக்கும்
    ஓம் ஹ்ராம் ஹ்ரீம் க்லீம்
    ஓம் நம ஸ்ரீ வேங்கடேசாய”

    இந்த மந்திரம் நமக்கு நல்ல திருப்பங்களை தந்தருளும் திருப்பதி திருமலை திருவேங்கடவனின் மீது பாடப்பட்ட அரிய மந்திரமாகும். திருவேங்கடவனின் திருவருளை பெறும் பலவித வழிகளில் இந்த மந்திரமும் ஒன்று.முதலில் பிள்ளையாரையும், குல தெய்வத்தையும் மனதார வணங்கி விட்டு இந்த மந்திரத்தை துளசி மணி மாலை கொண்டு தினமும் காலையில் 108 முறை ஜபம் செய்யவும்.

    இம்மந்திரத்தை ஒரு வளர்பிறை திங்கட்கிழமையன்றோ, அல்லது ஒரு திருவோண நட்சத்திரத்தன்றோ அல்லது வளர்பிறை ஏகாதசியன்றோ அதிகாலையில் சொல்லத் தொடங்குதல் கூடுதல் நலம் பயக்கும்
    பெருமாளுக்கு உகந்த இத்துதியை சனிக்கிழமைகளில் பாராயணம் செய்து வந்தால் சகல செல்வங்களும் கிட்டும். கடன் பிரச்சனை படிப்படியாக குறையும்.
    த்யாயேத் வெங்கடேஸம் கலிமலஹரணம், காஞ்சநாராதிங்ரிம்
    ஸேஷாத்ரெள ஸந்நிவிஷ்டம் சிரமபி ரமயா பூமி வைகுண்டநாதம்
    ஸுப்ரஹ்மண்யம், ஸுகேஸம், ஸகல முநிகணைஸ்ஸேவிதம் மந்த்ரமூர்த்திம்
    பக்தேஷ்டார்த்த ப்ரதாந ப்ரவித தயஸஸம் விஷ்ணுமர்ச்சாவதாரம்.

    - வெங்கடேஸ்வர த்யானம்

    பொதுப்பொருள்: கலி தோஷங்களைப் போக்குபவனே, சேஷாத்ரி மலையின் சிகரமான பூலோக வைகுண்டமாம் திருமலையில் வாசம் செய்பவனே, வேங்கடவனே, நமஸ்காரம். சுப்ரமண்யனைப் போல் மலைமேல் கோயில் கொண்டவனே, சுகங்களை வாரி வாரி பக்தர்களுக்கு அளிப்பவனே, முனிகணங்களால் சேவிக்கப்படும் மந்திரங்களை ஈர்த்துக்கொள்பவனே, நமஸ்காரம். பக்தர்களின் விருப்பங்களைப் பூர்த்தி செய்பவனே, கருணையே உருவானவனே விஷ்ணுவின் அர்ச்சாவதாரமான வேங்கடவனே நமஸ்காரம்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள மகாலட்சுமிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செல்வம் பெருகும்.
    இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செல்வம் பெருகும். மங்களம் உண்டாகும்.

    “ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நம:
     வஸுதே வஸுதாரே வஸூகரீ தனகரீ தான்யகரீ
     ரத்னகரீ சௌபாக்யகரீ சாம்ராஜ்யகரீ ஸ்வாஹா
     ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ஸ்ரீம் மஹாலக்ஷ்ம்யை நமஹ ”
    குரு பகவானை வியாழக்கிழமைகளில் இந்த மந்திரங்களை சொல்லி வழிபடுவோருக்கு உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுப்பார்.
    குரு பகவான், தம்மை வழிபடுவோருக்கு உயர் பதவி, புத்திரப்பேறு, நிறைவான செல்வம் போன்றவற்றை கொடுப்பதோடு தம்மால் ஏற்படக்கூடிய கல்லீரல், காது, இடுப்புகளில் ஏற்படும் நோய்களுக்கு தாமே மருந்தாக அருள்புரிகிறார். வியாழக்கிழமை விரதம் இருந்து நெய் தீபம் ஏற்றி குருவிற்குரிய வஸ்திரம், தானியம் கொண்டு வழிபடுவது நன்மை தரும்.

    குரு சுலோகம் :

    குரு பிரம்மா குரு விஷ்ணு
    குரு தேவோ மகேஸ்வர;
    குரு சாஷாத் பரப்பிரம்மா
    தஸ்மை ஸ்ரீகுருவே நமஹ

    குரு மந்திரம் :

    தேவாணாஞ்ச ரிஷிணாஞ்ச
    குரும் காஞ்சன ஸந்நிபம்
    புத்தி பூதம் திரிலோகேஸம்
    தம் நமமி பிருகஸ்பதிம்

    குரு பகவான் காயத்ரி :

    வருஷபத் வஜாய வித்மஹே
    க்ருணீ ஹஸ்தாய தீமஹீ
    தந்நோ குரு ப்ரசோதயாத்

    சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். இந்த நமஸ்கார துதியை தினமும் சொல்லி வழிபாடு செய்துவந்தால் உடல் வலிமை பெறலாம்.
    யா தேவி ஸர்வபூதேஷு சக்திரூபேண ஸம்ஸ்திதா
    நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை, நமஸ்தஸ்யை நமோ நமஹ
                            
    பொதுப்பொருள்: எந்த தேவியானவள் சக்தி ரூபமாய் அனைத்து உயிர்களிடத்திலும் உறைகின்றாளோ அந்த தேவிக்கு நமஸ்காரங்கள். நெருப்பில் உஷ்ணம் எவ்வாறு உணரப் படுகின்றதோ, காற்றில் அதன் வலிமை எவ்வாறு உணரப் படுகின்றதோ, வெயிலில் அதன் சூடு எவ்வாறு உணரப் படுகின்றதோ, குளிரில் அதன் வாடை எவ்வாறு தெரிகின்றதோ அவ்வாறு இயற்கையாகவே மனிதரிடம் உள்ள சக்தி உருவாய் தேவி விளங்குகின்றாள். அந்த தேவிக்கு நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள், நமஸ்காரங்கள். இத்துதியை வசந்த பஞ்சமி நாளில் பாராயணம் செய்தால் உடல் வலிமை பெறும்.
    இந்த மகத்தான துதியை செவ்வாய்க்கிழமைகளில் துதித்தால் நோய்கள் நீங்கும், கடன்கள் தீரும். வராகமூர்த்தியின் திருவருள் கிட்டும்.

    ஊர்த்வ ப்ரஸாரி பரிதூம்ர விதூதரோமா
    ப்ரோக்ஷிப்த வாலதி: அவாங்க்முக கோர கோண:
    தூர்ண ப்ரதீர்ண ஜலத: பரிகூர்ண தக்ஷ்ணா
    ஸ்தோத்ரூந் முநீந் சிசிரயந் அவதேரித த்வம்

    - நாராயணீயம் தசகம் 12(7)

    பொதுப்பொருள்: குருவாயூரப்பா! நீ வராக அவதாரம் எடுத்தபோது உன் திருவுருவம் எப்படி இருந்தது தெரியுமா? உனது ரோமங்கள் மேல் நோக்கியும் கருப்பும் சிவப்பும்  வண்ணம் கொண்டு அசைந்தன. உனது வால் உயரமாகத் தூக்கியிருந்தது. உனது மூக்கு கீழ் நோக்கியபடி பயங்கரமாக இருந்தது. மேகக்கூட்டத்தை நீ பிளந்தாய், உன்னை  துதித்துக் கொண்டிருந்த முனிவர்களுக்கு உன் திருக்கண்களால் ஆசி வழங்கிக் கொண்டே பூமியை மீட்க கடலினுள் இறங்கினாய் அல்லவா? அத்தகைய பராக்கிரமம்  கொண்ட நீ எனது துயரை எல்லாம் தீர்த்து வைப்பாயாக. (இத்துதியை நாராயணபட்டத்திரி பாடியபோது அந்த வராகமூர்த்தியின் தோற்றத்தை குருவாயூரப்பன் அவருக்கு  காட்டியருளியதாக நம்பிக்கை. 
    தினமும் காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.
    ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம்
    மாமுத்தராத்ய க்ருபயா கருணாபயோதே
    லக்ஷ்மீஞ்சதேஹி விபுலாம் ருணவாரணாய
    ஸ்ரீவெங்கடேச மம தேஹி கராவலம்பம்.
        
    - வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.

    பொதுப் பொருள்: அகில உலகத்திற்கும் இறைவனே, வெங்கடாஜலபதியே தங்களுக்கு நமஸ்காரம். அனைத்து உலகங்களையும் காப்பவரே, உம்மை வணங்குகிறேன். கருணைக்கடலே, உலகியல் மாயையில் மூழ்கித் தவிக்கும் என்னைக் கரை சேர்க்கக் கைகொடுத்து அருள்வாய். நான் பட்ட கடன்களைத் தீர்க்க என் மீது இரக்கம் காட்டுவாய். மகாலட்சுமியின் நாயகனே! எனக்கு எல்லா செல்வ வளங்களையும் அருளி, என் சகல தோஷங்களையும் போக்கி, என்னைக் காக்கும் இறைவனான வெங்கடாஜலபதியே, தங்களை மீண்டும் வணங்குகிறேன். 
    ×