என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் நோய்நொடிகள் அண்டாத உடல், நீடித்த ஆயுள், பிறரை உங்களிடம் ஈர்க்கச் செய்யும் முக வசீகரம், தொழில், வியாபாரங்களில் சிறந்த லாபங்கள் போன்றவற்றை அருள்வார் சுக்கிர பகவான்.
     ஓம் க்லீம் ஷும் சுக்ராய நமஹ்

    சுக்கிர பகவானின் மிக ஆற்றல் வாய்ந்த மந்திரம் இது. இந்த மந்திரத்தை தினமும் காலை வேளைகளில் 27 முறை மனதில் சுக்கிர பகவானின் உருவத்தை நினைத்தவாறு கூறி வர வேண்டும். வெள்ளிக்கிழமைகளில் காலை மற்றும் மாலை வேளைகளில் உங்கள் வீட்டிலிருக்கும் லட்சுமி படத்திற்கு விளக்கேற்றி, இந்த மந்திரத்தை 108 முறை துதித்து வந்தால் நோய்நொடிகள் அண்டாத உடல், நீடித்த ஆயுள், பிறரை உங்களிடம் ஈர்க்கச் செய்யும் முக வசீகரம், தொழில், வியாபாரங்களில் சிறந்த லாபங்கள் போன்றவற்றை அருள்வார் சுக்கிர பகவான்.

    மேலே கூறப்பட்டிருக்கும் சுக்கிர பகவானுக்குரிய மந்திரத்தில் வரும் “க்லீம்” சுகங்கள், மனத்திருப்தி, மகிழ்ச்சி ஆகியவற்றை ஏற்படுத்தக்கூடிய ஒரு மந்திர அதிர்வுமிக்க வார்த்தையாகும். சுகங்கள் பலவற்றை பெற நினைப்பவர்கள், சுக்கிர தோஷங்கள் கொண்டவர்கள் மேற்கூறிய மந்திரத்தை தினமும் கூறி வந்தால் சிறப்பான பலன்கள் கிடைக்கும்.
    அட்சய திருதியை நாளில், எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லி, அன்று முழுவதும், ‘ஓம் நமோ நாராயணா.. ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ..’ என சொல்ல, நன்மைகள் கிடைக்கும்.
    அட்சய திருதியை நாளில், எண்ணெய் தேய்த்து குளித்து, விஷ்ணு ஸ்தோத்திரம் சொல்லி, விரதம் மேற்கொள்ளலாம். பூஜை அறையில் விளக்கேற்றி, விஷ்ணு சகஸ்ரநாமமோ, அஷ்டோத்தரமோ சொல்லுங்கள்.

    பாயசம் அல்லது பொங்கல் நைவேத்தியமாக படைக்கலாம்.

    அன்று முழுவதும், ‘ஓம் நமோ நாராயணா.. ஸ்ரீமஹா விஷ்ணுவே நமஹ..’ என சொல்ல, நன்மைகள் கிடைக்கும்.

    இந்நாளில், கொஞ்சமாவது தங்கம் வாங்கினால், ஆண்டு முழுவதும் வீட்டில் தங்க மழை பொழிந்து கொண்டே இருக்கும் என்பது நம்பிக்கை.
    குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்திய வாழ்க்கை அமைய காமேஸ்வரிக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வழிபாடு செய்யலாம்.
    ‘காம’ எனில், விரும்பிய ரூபத்தை எடுக்கக் கூடியவள் என்று பொருள். இவள் கோடி சூர்ய பிரகாசமாக ஜொலிக்கும் தேக காந்தி உடையவள். மாணிக்க மகுடம் தரித்து, பொன்னாலான மரகத மாலை, ஒட்டியாணம் போன்ற விலை மதிப்பில்லா அணிகலன்களை அணிந்துள்ளாள். முக்கண்கள், ஆறு திருக்கரங்கள் கொண்டவள். தன் திருக்கரங்களில் கரும்பு வில், மலரம்புகள், பாசக்கயிறு, அங்குசம், அமிர்த பாத்திரம் மற்றும் வரத முத்திரை தரித்து உள்ளாள். பிறை சூடிய திருமுடியைக் கொண்ட இந்த அம்பிகையின் புன்சிரிப்பும், கருணை பொழிந்திடும் கண்களும், கேட்கும் வரங்களை வாரி வழங்கவல்லவை.

    மந்திரம்:

    ஓம் காமேஸ்வர்யை வித்மஹே
    நித்யக்லின்னாயை தீமஹி
    தன்னோ நித்யா ப்ரசோதயாத்.

    வழிபட வேண்டிய திதிகள்:
    சுக்ல பக்ஷ பிரதமை, அமாவாசை.

    வழிபடு பலன்கள்:

    குடும்பத்தில் ஆனந்தம், தனவரவு, மனநிறைவான தாம்பத்ய வாழ்க்கை அமையும்.
    கீழே கொடுக்கப்பட்டுள்ள இந்த ஸ்லோகத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் படிப்படியாக குறையும்.
    அவிச்ராந்தம் பத்யுர் குணகணகதாம்ரேடனஜபா
    ஜபாபுஷ்பச் சாயா தவ ஜனனி ஜிஹ்வா ஜயதி ஸா
    யதக்ராஸீநாயா ஸ்படிகத்ருஷ தச்சச்சவி மயீ
    ஸரஸ்வத்ய மூர்த்தி பரிணமதி மாணிக்யவபுஷா
    ஸௌந்தர்ய லஹரி ஸ்லோகம்

    பொதுப் பொருள்:

    அம்பிகையே, உன்னுடைய சிறந்த நாவினால் இடைவிடாமல் உனது கணவனாகிய சிவபெருமானின் பல குணங்களை விளக்கும் கதைகளைப் பேசுவதையே ஜபித்து, அதனால் அது செம்பருத்திப்பூவைப் போல சிவந்து சிறப்புடன் விளங்குகிறது. அந்நாவின் நுனியில் குடியிருக்கும் சரஸ்வதியினுடைய ஸ்படிகம் போன்ற தெளிவான வெண்மை வடிவானது, உன் நா நிறத்தால், மாணிக்கம் போல் சிவந்த வடிவமாக மாறுகிறது. உன் அம்சமான அந்த சரஸ்வதியை வணங்குகிறேன்.
    நம் செயல்களில் ஏற்படும் இடையூறுகளை அகற்றி வெற்றிபெறச் செய்பவர் விநாயகர். அறுகம்புல்லால் இத்துதியைக்கூறி அவரை அர்ச்சித்தால் எல்லா வளமும், காரிய வெற்றியும் பெறலாம்.
    ஓம் நமோ கணபதயே நமஹ
    கணபதிர் விக்னராஜோ லம்பதுண்டோ கஜானன:
    த்வைமாதுரஸ்ச ஹேரம்ப ஏகதந்தோ கணாதிப:
    விநாயகஸ்சாருகர்ண: பஸுபாலோ பவாத்மஜ:

    பொதுப் பொருள்:

    ‘ஓம்’ எனும் மூலமந்திரத்திற்கு அதிபதியான கணபதியை வணங்குகிறேன். பூத கணங்களுக்குத் தலைவனாக விளங்குபவரே, இடையூறுகளை இல்லாது செய்பவரே, அழகான நீண்டதுதிக்கையை உடையவரே, யானையின் முகம் படைத்தவரே, கங்கா, கௌரி என இரண்டு தாய்களைக் கொண்டவரே, பக்தர்களுக்குக் குறைவில்லாது அருள்புரிபவரே, ஒரு தந்தத்தைக் கொண்டு அருள் புரிபவரே, அழகிய பெரிய காதுகளைக் கொண்டவரே, உலக மக்களைக் காப்பவரே, பரமனின் புத்திரனே, உமக்கு நமஸ்காரம். எங்கள் விக்கினங்களையெல்லாம் விலக்கி நிம்மதிப்பெருவாழ்வு வாழ, வழி நடத்துவீராக.

    (விநாயகரைத் வழிபட நேரம் காலம் என்று எதுவும் கிடையாது. எப்போதும் அவரை நினைத்து வணங்கலாம். நம் செயல்களில் ஏற்படும் இடையூறுகளை அகற்றி வெற்றிபெறச் செய்பவர் அவர். அறுகம்புல்லால் இத்துதியைக்கூறி அவரை அர்ச்சித்தால் எல்லா வளமும், காரிய வெற்றியும் பெறலாம்.)
    சாகம்பரி தேவிக்கு உகந்த இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பதால் உங்கள் வீட்டில் நிலவுகின்ற வறுமை நிலையை விரைவில் போக்கும். தீராத கடன் பிரச்சினைகள் தீரும்.
    ஓம் சாகம்பர்யை வித்மஹே
    சதாக்ஷ்யை ச தீமஹி
    தன்னோ தேவி ப்ரசோதயாத்

    சாகம்பரி தேவிக்குரிய சக்தி வாய்ந்த இந்த காயத்ரி மந்திரத்தை தினமும் காலையில் எழுந்து, குளித்து முடித்ததும் உடல் மற்றும் மன சுத்தியுடன் 108 முறை துதிப்பது நல்லது. செவ்வாய் மற்றும் வெள்ளிக்கிழமைகளில் உங்கள் வீட்டில் இருக்கும் பூஜையறையில் அம்பாளின் படம் முன்பாக பழம் அல்லது கற்கண்டுகள் போன்றவற்றை நைவேத்தியம் வைத்து, இந்த மந்திரத்தை 108 அல்லது 1008 முறை துதிப்பதால் உங்கள் வீட்டில் நிலவுகின்ற வறுமை நிலையை விரைவில் போக்கும். உணவு, உடை, தண்ணீர் போன்றவற்றிற்கு எப்போதும் குறைவு உண்டாகாது. தீராத கடன் பிரச்சினைகள் தீரும். நீங்கள் விரும்பிய காரியங்கள் அனைத்தும் நடைபெறும்.
    சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசையின் போது சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். இப்போது சனி பகவானை குளிர்விக்கும் மந்திரங்களை பார்க்கலாம்.
    சனி தொடர்பான பிரச்சனைகள் மற்றும் சனி தசையின் போது சனியின் கடவுளான அனுமனைத் தினமும் வழிபடவேண்டும். இப்போது சனி பகவானை குளிர்விக்கும் மந்திரங்களை பார்க்கலாம்.
     
    சனி மூல மந்திர ஜபம்:

    "ஓம் ப்ரம் ப்ரீம் ப்ரௌம் ஷக் சனைச்சராய நமஹ", - 40 நாட்களில் 19000 முறை சொல்ல வேண்டும்.
     
    சனி ஸ்தோத்திரம்:

    நீலாஞ்ஜன ஸமாபாஸம்
    ரவிபுத்ரம் யமாக்ரஜம்!
    ச்சாயா மார்த்தாண்ட ஸம்பூதம்
    தம் நமாமி சனைச்சரம்!!
     
    தமிழில்:

    சங்கடந் தீர்க்கும் சனி பகவானே
    மங்களம் பொங்க மனம் வைத்தருள்வாய்!
    சச்சரவின்றிச் சாகா நெறியில்
    இச்சகம் வாழ இன்னருள் தா தா!!
     
    சனி காயத்ரி மந்திரம்:

    காகத்வஜாய வித்மஹே கட்க ஹஸ்தாய தீமஹி|
    தந்நோ மந்த: ப்ரசோதயாத்||
     
    சனி தசையின்போது வால்மீகி ராமாயணத்தில் பாலா காண்டத்தின், 30 வது அத்தியாயம் தினமும் படிக்க வேண்டும். அனைத்து சனி தொடர்பான பிரச்சனைக்கும் தசரத சனி ஸ்தோத்திரம் ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.
    மகாகாளிக்கு உகந்த இந்த மந்திரத்தை தினமும் அல்லது வெள்ளிக்கிழமைகளில் சொல்லி வழிபாடு செய்து வந்தால் செய்யும் தொழிலில் அதிக லாபம் கிடைக்கப்பெறலாம்.
    கட்கம் சக்ர கதேக்ஷூ சாப பரிகான் சூலம் புசுண்டீம் சிர:
    சங்க்கம் ஸந்தததீம் கரைஸ் த்ரிநயனாம் ஸர்வாங்க பூஷாவ்ருதாம்
    யாம் ஹந்தும் மதுகைடபௌ ஜலஜபூஸ் துஷ்டாவ ஸுப்தே ஹரௌ
    நீலாச்ம த்யுதி மாஸ்ய பாத தசகாம் ஸேவே மஹாகாளிகாம்
    தேவி மஹாத்மியம் மகாகாளி த்யானம்

    பொதுப் பொருள்:

    தன் திருக்கரங்களில் சூலம், கதை, அம்பு, கத்தி, புசுண்டி, கொம்பு, கேடயம், வில், அறுத்த அசுரனின் தலை, சங்கு ஆகியவற்றை ஏந்தியருளும் மகாதேவியே, காளியே, நமஸ்காரம். பத்து திருமுகங்கள், பத்து கால்கள், பத்து கைகள் கொண்டு ஒளிவீசும் தோற்றம் கொண்டவளே, நமஸ்காரம்.
    விஷ்ணுவை பாடல்கள் பாடியும், மந்திரம் சொல்லியும் வணங்கலாம். இந்த மந்திரத்தை சொல்லி விஷ்ணுவை வழிபாடு செய்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    ஓம் விஷ்ணுவே நமஹ
    ஓம் நமோ  பகவதே வாசுதேவாய
    ஓம் நமோ நாராயணா
    ஓம் ஸ்ரீ ஹரி விஷ்ணு ஹரி ஓம்.

    விஷ்ணு அலங்கார பிரியர். இவருக்கு பிடித்த பூ தாமரை பூஜைக்கு மட்டுமே தாமரையை பயன்படுத்துவர். தாமரை பூ தெய்வ மலர். வாசனையுள்ள மலர்களையே பூஜைக்கு பயன்படுத்த வேண்டும்.
    தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் பெண்களின் மனக்குறைகள் படிப்படியாக குறையும்.
    தினமும் அல்லது செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் மாரியம்மனுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை சொல்லி வந்தால் பெண்களின் மனக்குறைகள் படிப்படியாக குறையும்.

    அக்நிஜ்வாலாசிகாம் அக்னிநேத்ராம் அக்னிஸ்வரூபிணீம்
    கரண்ட மகுடோபேதாம் கதா டக்கா கராம்புஜாம்|
    வீராஸநாம் கபாலாஸி பாச ஹஸ்தாம் ரவிப்ரபாம்
    வந்தே தேவீம் மஹாமாரீம் நாகாபரணபூஷிதாம்.
    கெட்ட எண்ணங்கள் கொண்டவர்கள், கண் திருஷ்டி, பிறர் பொருள்மீது மோகம் கொள்பவர்கள் நம்மிடம் வராமல் இருக்க ஸ்ரீ வராஹரை வழிபடுவது சிறந்தது.
    ஸ்ரீ வராஹவதாரம் ஸ்ரீ மகாவிஷ்ணுவால் ஸ்ரீ பூமாதேவியை காக்க எடுக்கப்பட்டதாகும். முன்னொரு சமயம் ஹிரண்யாக்ஷன் என்னும் அசுரன் ஸ்ரீ பூமாதேவியை  அபஹரிக்க வந்ததால், ஸ்ரீ மஹாவிஷ்ணுவிடம் தஞ்சம்புகுந்தாள் ஸ்ரீ பூமாதேவி. ஹிரண்யாக்ஷனை வதம் செய்து ஸ்ரீ பூமாதேவியை காத்தார்.

    கெட்ட எண்ணங்கள் கொண்டவர்கள், கண் திருஷ்டி மற்றும் பிறர் பொருள்மீது மோகம் கொள்பவர்கள் ஆகியோர்கள் நம்மிடம் வராமல் இருக்க ஸ்ரீ வராஹரை  வழிபடுவது சிறந்தது. வெல்லம், கோரைகிழங்கு ஆகியவை இவருக்கு பிரசாதம். ஸ்ரீ அம்புஜவல்லி தாயார் உடன் இருந்து ரக்ஷித்து வருகிறார்.

    ஓம் தநுர்த்தராய வித்மஹே  
    வக்ர தம்ஷ்ட்ராய தீமஹி  
    தந்நோ வராஹஹ் ப்ரசோதயாத்
    கம்பராமாயணத்தில் ஸ்ரீ அனுமனைப்பற்றிய பாடல் இது. இந்த பாடலை சனிக்கிழமைகளில் அனுமன் படத்திற்கு முன் அமர்ந்து சொல்லி வழிபாடு செய்து வந்தால் துன்பங்கள் பறந்தோடும்.
    அஞ்சிலே ஒன்று பெற்றான் அஞ்சிலே ஒன்றைத்தாவி
    அஞ்சிலே ஒன்றாறாக ஆருயிர்க்காக ஏகி
    அஞ்சிலே ஒன்றுபெற்ற அணங்கைக் கண்டயலார் ஊரில்
    அஞ்சிலே ஒன்றைவைத்தான் அவன் நம்மை அளித்துக் காப்பான்.

    அஞ்சனை மைந்தா போற்றி ! அஞ்சினை வென்றாய் போற்றி !
    வெஞ்சினைக் கதிர்பின் சென்று பிழுமறையுணர்ந்தாய் போற்றி !
    மஞ்சன மேனிராமன் மலர்ப்பதம் மறவாய் போற்றி !
    எஞ்சலில் ஊழியெல்லாம் இன்றென் விருப்பாய் ! போற்றி !

    அஞ்சனைப் பெற்றெடுத்த அருந்தவப் புதல்வன் செல்வன்
    செஞ்சுடர் குலத்துதித்த சிலையணி ராமன் தூதன்
    வஞ்சகர் தமையடக்கி வணங்கிடும் அன்பர்க்கென்றும்
    அஞ்சலென்றருளும் வீரன் அனுமனைப் போற்றுவோமே.

    வால்விசைத் தெடுத்து வன்றாண் மடக்கிமார்பொடுக்கி மானத்
    தோள்விசைத்துணைகள்பொங்கக் கழுத்தினைச் சுருக்கித் தூண்டு
    கால் விசைத்தடக்கை நீட்டிக் கட்புலங் கதுவாவண்ணம்
    மேல்விசைத் தெழுந்தானுச்சி விரிஞ்சனாடுரிஞ்ச வீரன்.

    சுந்தர வில்லியேவ சூழ்கடல் இலங்கை மேவி
    அந்தமில் வீடுநல்கும் ஆயிழை தன்னைக் கண்டு
    வந்தவெல் வரக்கர் சிந்தி வளையெரி மடுத்து மீண்ட
    நந்தலில்லாத தூதன் நம்மையும் அளித்துக் காப்பான்.

    அன்னைகை மோதிரத்தை அளித்தலும் மணியைத் தந்து
    இன்னெடும் கடலைநீயும் எங்ஙனம் கடந்தாய், என்ன
    உன்னத நெடியமாலாய் உயர்ந்தெழுந் தடங்கி நின்று
    மன்னுதாய் ஆசி பெற்ற மாருதி பாதம் போற்றி.

    சொல்லுரம் பெற்ற சோர்விலா தூயவீரன்
    வல்லவன் ராமன் சீதை வாயுறை பெற்ற அன்பன்
    அல்லலைப் போக்கிக் காக்கும் அனுமனைப் பாடும்காலை
    கல்லினைப் பெண்ணாய்ச் செய்தான் கழலிணைப் போற்றுவோமே.
    ×