என் மலர்tooltip icon

    ஸ்லோகங்கள்

    பெண்கள் நெற்றியில் குங்குமம் இடுவதால் ஸ்ரீ மஹா லக்ஷ்மியின் நீங்காத அருளைப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை. பெண்கள் நெற்றியில் குங்குமம் ஈடும் போது இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
    குங்குமமாவது குறைகளைத் தீர்ப்பது
    குங்குமமாவது குடியினைக் காப்பது
    குங்குமமாவது குணமதளிப்பது
    குங்குமமாவது கொல்வினை தீர்ப்பது.

    விதி வினை வெல்வது விமலையின் குங்குமம்
    நிதிதனை ஈவது நிமலையின் குங்குமம்
    பதிதனைக் காப்பது பதிவிரதை குங்குமம்
    கதிதனையாள்வதும் குங்குமமாமே

    தஞ்சமென்றோரை தடுத்தாண்டு கொள்வதும்
    பஞ்ச மாபாதகம் பரிந்துமே தீர்ப்பதும்
    அஞ்சின பேர்க்கு அபயமளீப்பதும்
    கஞ்சி காமாக்ஷி குங்குமமாமே

    நற்பத மீவது நாரணி குங்குமம்
    பொற்பினை ஈவது பூரணி குங்குமம்
    சிற்பரமாவது சிவகாமி குங்குமம்
    கற்பினைக் காப்பதும் குங்குமமாமே

    செஞ்சுடர் போல்வது சீரான குங்குமம்
    கொஞ்சு மழகைக் கொடுப்பது குங்குமம்
    அஞ்சு புலங்களடக்கி யருள்வதும்
    கஞ்சி காமாக்ஷியின் குங்குமமாமே

    நோயினைத் தீர்ப்பதும் நுண்ணறிவீவதும்
    பேயினைத் தீர்ப்பதும் பெரும் புகழீவதும்
    சேயினைக் காப்பதும் செல்வம் தருவதும்
    தாயினை அர்ச்சித்த குங்குமமாமே

    சக்தி கொடுப்பதும் சத்தியம் காப்பதும்
    பக்தி யளிப்பதும் பரகதி யீவதும்
    முக்தி கொடுப்பதும் மும்மலம் தீர்ப்பதும்
    சித்தி தருவதும் குங்குமமாமே

    நெஞ்சிற் கவலைகள் நீக்கியருள்வதும்
    செஞ்சொற் கவிபாடும் சீரினை யீவதும்
    வஞ்ச பகைவரை வாட்டி யருள்வதும்
    கஞ்சி காமாக்ஷி குங்குமமாமே

    சிவசிவ என்று திருநீறணிந்த பின்
    சிவகாமியேயென் சிந்தித்தணிவதும்
    தவமான மேலோருந்தரித்துக் களீப்பதும்
    பவவினை தீர்ப்பதும் குங்குமமாமே

    எவையெவை கருதிடில் அவையவையீவதும்
    நவவகை சக்தியின் நலனைக் கொடுப்பதும்
    குவிசெய் கரத்துடன் கும்பிட்ட பேர்க்கு
    குவிநிதி யீவதும் குங்குமமாமே

    அஷ்டலக்ஷ்மி அருளதளிப்பதும்
    இஷ்டங்களீவதும் ஈடற்ற குங்குமம்
    கஷ்டம் தவிர்ப்பதும் காத்தெனை யாள்வதும்
    சிஷ்டராய் செய்வதும் குங்குமமாமே

    குஷ்டம் முதலான மாரோகம் தீர்ப்பதும்
    நஷ்டம் வாராதொரு நலனைக் கொடுப்பதும்
    எட்டும் இரண்டும் அறிவித்தோர் வீடினை
    கிட்டவே செய்வதும் குங்குமமாமே

    பட்ட காலிலே படுமென கஷ்டங்கள்
    விட்டிடாமலே வந்துமே வாட்டினும்
    பட்டான பார்வதி பாதம் பணீந்தே
    இட்டார் இடர் தவிர் குங்குமமாமே

    சித்தம்தனை சுத்தி செய்வதற் கெளியதோர
    எத்துந் தெரியாத ஏமாந்த மாந்தரே
    நித்தம் தொழுதென்னை குங்குமந்தன்னை
    நித்தம் தரித்துமே வீடடைவீரே

    மிஞ்சும் அழகுடன் குங்குமம் தன்னை
    செஞ்சுடராகுமோர் கஞ்சி காமாக்ஷியின்
    கஞ்ச மலர் முகந்தன்னில் திகழ்வதும்
    பஞ்ச நிதி தரும் குங்குமாமே.
     
    இந்த ஸ்லோத்தை வெள்ளிக்கிழமைகளில் அல்லது முடியும் போதெல்லாம் தினமும் சொல்லி வந்தால் குடும்பத்தார் மனதில் உள்ள வேற்றுமைகள் தீர்ந்து, ஒற்றுமையாக வாழலாம்.
    மஹாதேவீம் மஹாசக்திம் பவானீம்
    பவவல்லபாம்பவார்திபஞ்ஜநகரீம்
    வந்தே த்வாம் லோகமாதரம்ஜகத்கர்த்ரீம்
    ஜகத்தாத்ரீம் ஜகத்ஸம்ஹாரகாரிணீம்முனிபி:
    ஸமஸ்துதாம் பத்ராம் வந்தேத்வாம் மோக்ஷதாயினீம்.

    பொருள்:

    மகாதேவனுடைய மனைவியே, மிகுந்த சக்தி வாய்ந்தவளே, பவானி என்றழைக்கப்படுபவளே, பக்தர்களின் குடும்ப வாழ்க்கையில் ஏற்படும் மனக் கவலைகளைப் போக்குகிறவளே, அனைத்து உலகங்களுக்கும் தாயே, தங்களை நமஸ்கரிக்கிறேன். உலகைப் படைப்பவளே, படைத்ததைக் காப்பவளே, கடைசியில் அதை அழிக்கவும் செய்பவளே, முனிவர்களால் துதிக்கப்படுபவளே, பக்தர்களுக்கு எந்நாளும் மங்கலத்தை அளிப்பவளே, முக்தியை தரவல்லவளே, தங்களை நமஸ்கரிக்கிறேன்.
     
    அனைத்து அம்சங்களையும் தன்னுள் முழுமையாக கொண்ட திருமாலின் ஒன்பதாவது அவதாரமான கண்ணனை போற்றும் ஸ்லோகம் இது.
    ஸமஸ்த கோபநதனம் ஹ்ருதம்புஜைகமோஹனம்
    நமாமி குஞ்ஜமத்யகம் ப்ரஸன்ன பானுசோபனம்
    நிகாமகாம தாயகம் த்ருகந்தசாருஸாயகம்
    ரஸாலவேணுகாயகம் நமாமி குஞ்ஜநாயகம்

    அனைத்து அம்சங்களையும் தன்னுள் முழுமையாக கொண்ட திருமாலின் ஒன்பதாவது அவதாரமான கண்ணனை போற்றும் ஸ்லோகம் இது. இந்த ஸ்லோகத்தை தினந்தோறும் எப்போது வேண்டுமானாலும் 108 முறை துதிப்பது நல்லது. புதன், சனிக்கிழமைகளிலும், மாதத்தில் வரும் ஏகாதசி தினங்களிலும் காலையில் எழுந்து குளித்து முடித்தவுடன் உங்கள் பூஜையறையில் இருக்கும் கண்ணனின் படத்திற்கு சில துளசி இலைகளை சமர்ப்பித்து, இந்த ஸ்லோகத்தை 27 முறை அல்லது 108 முறை துதித்து வர உயர்ந்த சிந்தனைகளும், எண்ணங்களும் மனதில் தோன்றும். உங்களிடமிருக்கும் எதிர்மறை குணங்கள் நீங்கும். ஆக்கபூர்வமான ஆற்றல்கள் பெருகும்.
    மகாலட்சுமியிடம் உரையாடி, உங்களின் கோரிக்கைகளை வைக்க வேண்டுமா? உங்களின் வேண்டுதல் மகாலட்சுமியின் செவிகளில் விழுவதற்கான சிறப்பான மந்திரம் ஒன்று இருக்கின்றது.
    மகாலட்சுமியிடம் உங்களது குறைகளை நேரடியாக சொல்ல வேண்டும் என்று விரும்புகிறீர்களா? எப்படிப்பட்ட குறைகளையும் தீர்க்கும் வல்லமை பெற்றவர்தான் அந்த லட்சுமி தேவி. உங்களின் வேண்டுதல் மகாலட்சுமியின் செவிகளில் விழுவதற்கான சிறப்பான மந்திரம் ஒன்று இருக்கின்றது.

    மகாலட்சுமி வழிபாடு என்றாலே அதை வெள்ளிக்கிழமை அன்று, நாம் எல்லோரும் செய்வது வழக்கம். நம்முடைய வீட்டை எப்போதும் போல் சுத்தம் செய்துவிட்டு, பூஜை அறையை அலங்காரம் செய்து தீபம் ஏற்றிய பின்பு இந்த மந்திரத்தை உச்சரித்தாலே போதும்.

    மகாலக்ஷ்மியை மனதார நினைத்து, மனம் உருகி வேண்டி, இந்த மந்திரத்தை 108 முறை உச்சரிக்க வேண்டும். வாரம்தோறும் இந்த மந்திரத்தை வெள்ளிக்கிழமை அன்று 108 முறை உச்சரித்தால் மிகவும் நல்லது. முடியாதவர்கள் பௌர்ணமி தினத்தன்று, மந்திரத்தை உச்சரித்து மகாலட்சுமிக்கு பூஜை செய்யும் பழக்கத்தை வைத்துக்கொள்ளுங்கள். உங்களுக்கான மகாலட்சுமியின் மந்திரம் இதோ..

    தன ஆகர்ஷன மந்திரம்:

    ராஜ வஸ்ய. தன வஸ்ய. புருஷ வஸ்ய.
    ஸ்திரீ வஸ்ய. புத்ர வஸ்ய. சர்வ சம்பத் வஸ்ய.
    நாகலோகத்தில் உண்டாகின்ற சர்வ ஜிவ பிராணிகளும்
    உன் வசமானார் போல்
    எங்கள் குடும்ப வசமாக வஸ்ய வஸ்ய ஓம் சுவாஹா! !

    மந்திரத்தை அனாவசியமாக உச்சரிக்கக் கூடாது. மகாலட்சுமி தாயாரின் முன்பு தீபம் ஏற்றி வைத்த பின்பே உச்சரிக்க வேண்டும். பிழையில்லாமல் உச்சரிப்பது மிகவும் நல்ல பலனைத் தரும்.

    சிவபெருமானின் இந்த மந்திரத்தை சொல்வதால் நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும். ஈசனின் ஆசீர்வாதத்தை வரமாக பெறமுடியும்.
    நம் வாழ்வோடு பின்னிப் பிணைந்திருக்கும் இந்த சிவபெருமானின் மூலமந்திரத்தை நாமும் தெரிந்து கொண்டு தினம்தோறும் உச்சரிப்பது தானே அழகு. உங்களுக்கான சிவபெருமானின் மூல மந்திரம் இதோ..

    சிவபெருமான் மூல மந்திரம்:

    “ஓம்கார நமசிவாய ஓம் நகாராய நமசிவாய‌
    ஓம் மகாராய நமசிவாய ஓம் சிகாராய நமசிவாய
    ஓம் வகாராய நமசிவாய ஓம் யகாராய நமசிவாய ஓம் நம ;
    ஸ்ரீ குரு தேவாய, பரமபுருஷாய ஸர்வ தேவதா வசீகராய‌
    ஸர்வாரிஷ்ட விநாசாய ஸர்வ துர்மந்தரச் சேதனாய
    த்ரை லோக்யம் வசமாய ஸ்வாஹா ”

    இந்த மந்திரத்தை காலை எழுந்தவுடன் பதினோரு முறை உச்சரிப்பது நல்ல பலனைத் தரும். நம் மனதில் இருக்கும் கெட்ட எண்ணங்கள் அனைத்தும் நம்மை விட்டு விலகிவிடும். ஈசனின் ஆசீர்வாதத்தை வரமாக பெறமுடியும். தோல்வியிலிருந்து தப்பித்துக் கொள்ளலாம். புகழின் உச்சிக்கு செல்லலாம். துஷ்ட சக்திகள் நம்மை அண்டாது. நம் மனதை பிடித்து ஆட்டிக் கொண்டிருக்கும் காமம், குரோதம், பற்று, பேராசை, அகங்காரம் இவைகள் அனைத்தும் நீங்கிவிடும். மனதில் எந்தவிதமான கெட்ட எண்ணமும் இல்லாதவர்கள், அந்த ஈசனின் ஆசியை பெற்றவர்கள் தானே. தினம்தோறும் உங்களால் இந்த மந்திரத்தை உச்சரிக்க முடியவில்லை என்றாலும் பிரதோஷ காலத்திலாவது பதினோரு முறை உச்சரிப்பது மிகவும் நல்ல பலனைத் தரும். மந்திரத்தை உச்சரிக்கும்போது பிழையில்லாமல் உச்சரிப்பது அவசியம்.
    குடும்ப ஒற்றுமைக்கு கீழே கொடுக்கப்பட்டுள்ள ராதா, கிருஷ்ணன் காயத்ரி மந்திரத்தை தினமும் சொல்லி வழிபாடு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    கிருஷ்ண காயத்ரி

    ஓம் தேவகிநந்தனாய வித்மஹே,
    வாசுதேவாய தீமஹி,
    தந்நோ க்ருஷ்ண ப்ரசோதயாத்.

    ராதா காயத்ரி

    ஓம் வ்ருஷபானுஜெய வித்மஹே,
    க்ருஷ்ணப்ரியாயே தீமஹி,
    தந்நோ ராதா ப்ரசோதயாத்.
    இந்த தியான ஸ்லோகத்தை தினமும் சொல்லி ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரியை வழிபட்டு வந்தால் அனைத்து விதமான துன்பத்திலிருந்தும் விடுபடலாம்.
    அருண கிருண ஜாலா
    ரஞ்ஜிதா சாவகாசா
    வித்ருத ஜப படீகா
    புஸ்தகா பீதி ஹஸ்தா
    இதரகர வராட்யா
    புஹ்ல கஹ்லார சமஸ்தா
    நிவஸது ஹ்ருதி பாலா
    நித்ய கல்யாண சீலா

    இந்த தியான ஸ்லோகத்தை தினமும் சொல்லி ஸ்ரீ பாலாதிரிபுரசுந்தரியை வழிபட்டு வந்தால் அனைத்து விதமான துன்பத்திலிருந்தும் விடுபடலாம்.
    தன்வந்திரி பகவானே, எல்லா நோய்களையும் தீர்ப்பவரே, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.
    ஓம் நமோ பகவதே
    வாஸுதேவாய! தன்வந்தரயே!
    அம்ருத கலச ஹஸ்தாய !
    ஸர்வ ஆமய விநாசநாய த்ரைலோக்ய
    நாதாய் ஸ்ரீமகாவிஷ்ணவே நம !

    பொருள்: அமிர்த கலசத்தை கையில் ஏந்திய வாசுதேவனே, தன்வந்திரி பகவானே, எல்லா நோய்களையும் தீர்ப்பவரே, மூன்று உலகங்களுக்கும் அதிபதியான ஸ்ரீ மஹாவிஷ்ணுவாகிய உங்களுக்கு நமஸ்காரம்.

    தேவதைகளின் கூட்டத்தால் எப்போதும் வணங்கப்படுபவளும், செம்பருத்திப் பூவின் நிறமுடையவளுமான அம்பிகையை ஜப காலத்தில் தியானிக்க வேண்டும்.
    ஸகுங்கும விலேபனா மளிகசும்பி கஸ்தூரிகாம்
    ஸமந்த ஹஸிதேக்ஷணாம் ஸசரசாப பாசாங்குசாம்
    அசேஷ ஜனமோஹினீ மருண மால்ய பூஷாம்பராம்
    ஜபாகுஸும பாஸுராம் ஜபவிதௌ ஸ்மரே தம்பிகாம்

    - லலிதா த்யான ஸ்லோகம்

    பொதுப் பொருள்: குங்குமப்பூச்சு தரித்தவளும், வண்டுகள் நாடும் கஸ்தூரி பூசியவளும், புன்னகை பூத்த பார்வையுடையவளும், அம்பு, வில், பாசம், அங்குசம் ஆகியவற்றைத் தரித்தவளும், எல்லா மக்களையும் மோகிக்கச் செய்பவளும், சிகப்பு மாலை, ஆபரணம், புத்தாடை அணிந்தவளும், தேவதைகளின் கூட்டத்தால் எப்போதும் வணங்கப்படுபவளும், செம்பருத்திப் பூவின் நிறமுடையவளுமான அம்பிகையை ஜப காலத்தில் தியானிக்க வேண்டும்.

    ஆதிசங்கரர் தன் ஸௌந்தர்ய லஹரியின் 45ம் ஸ்லோகமான அராலை எனும் ஸ்லோகத்தில் மலர்ந்த புன்சிரிப்புடனும், பிரகாசிக்கும் பல்வரிசையுடனும், நறுமணத்துடனும் கூடிய உன் முகத் தாமரையால் மன்மதனை எரித்த சிவனின் கண்கள் எனும் தேன் வண்டுகள் மயங்குகின்றன. அப்படிப்பட்ட உன் திருமுகம் இயற்கையாகவே சுருண்டு, சிறு வண்டுகள் பறப்பன போன்ற அழகினை உடைய முன் நெற்றி மயிர்களால் சூழப்பெற்று தாமரையின் அழகைப் பரிகாசிப்பது போல் உள்ளது என போற்றிப்பாடியுள்ளார். தேவியின் முகத்தாமரையும் பாத கமலங்களும் எப்போதும் என்றென்றும் பக்தர்களைக் காத்தருளும். 
    சகல தோஷங்களும் விலக, கடன் பிரச்சனைகள் தீர கீழே கொடுக்கப்பட்டுள்ள பெருமாளுக்கு உகந்த இந்த ஸ்லோகத்தை தினமும் சொல்லி வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
    ஸ்வாமின் ஜகத்தரண வாரிதிமத்ய மக்னம்
    மாமுத்தராத்ய க்ருபயா கருணாபயோதே
    லக்ஷ்மீஞ்சதேஹி விபுலாம் ருணவாரணாய
    ஸ்ரீவெங்கடேச மம தேஹி கராவலம்பம்.
        
    - வெங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம்.

    பொதுப் பொருள்: அகில உலகத்திற்கும் இறைவனே, வெங்கடாஜலபதியே தங்களுக்கு நமஸ்காரம். அனைத்து உலகங்களையும் காப்பவரே, உம்மை வணங்குகிறேன். கருணைக்கடலே, உலகியல் மாயையில் மூழ்கித் தவிக்கும் என்னைக் கரை சேர்க்கக் கைகொடுத்து அருள்வாய். நான் பட்ட கடன்களைத் தீர்க்க என் மீது இரக்கம் காட்டுவாய். மகாலட்சுமியின் நாயகனே! எனக்கு எல்லா செல்வ வளங்களையும் அருளி, என் சகல தோஷங்களையும் போக்கி, என்னைக் காக்கும் இறைவனான வெங்கடாஜலபதியே, தங்களை மீண்டும் வணங்குகிறேன். ஒவ்வொரு சனிக்கிழமையும் காலையில் இந்த துதியை ஜபம் செய்து வந்தால் திருமலையப்பனின் திருவருளால் கடன்கள் தீரும். சகல தோஷங்களும் விலகும்.
    காமாட்சி அன்னையே, உன் அருளால் மஞள் சரடும் அணிந்துகொண்டேன். என் கணவரைக் காத்தருளும் தெய்வம் நீயம்மா…. என்றும் காத்தருள்வாய் அன்னையே என்று இந்த ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.
    சந்த்ராசந்த்ராபீடாம் சதுரவதனாம் சஞ்சலா பாங்கலீலாம்
    குந்தஸ்மேராம் குசபரநதாம் குந்தளோத்தூத ப்ருங்காம்
    மாராராதே: மதனஸிகினம் மாக்ஸளம் தீபயந்தீம்
    காமாக்ஷீம் தாம் கவிகுலகிராம் கல்பவல்லி முபாஸே..

    விளக்கம்:

    சந்திரனை தலையின் ஆபரணமாக அணிந்துகொண்டிருப்பவளே.. அழகிய திருமுகம் கொண்டவளே… சஞ்சலமிக்கவர்களின் மனவேதனையைப் போக்குபவளே. குந்த புஷ்பம் போன்ற அழகை கொண்டிருப்பவளே… ஸ்தன பாரத்தினால் வணங்கிய சரீரத்தை உடையவளே.. மன்மதனை சாம்பலாக்கிய ஈசனுக்கு காமாக்னியை விருத்தி செய்கிறவளே..காமாட்சி தாயே…உன்னை வணங்குகிறேன்.

    பூஜை முடித்து  நோன்பு கயிறு கழுத்தில் கட்டும் போது உருகாத வெண்ணெயும், ஓரடையும் வைத்து நான் நோன்பு இருந்தேன். ஒருக்காலும் என் கணவர் என்னை விட்டு பிரியாதிருக்க வேண்டும் என்று வேண்டி கீழ்க்கண்ட ஸ்லோகத்தை சொல்ல வேண்டும்.

    தோரம் க்ரஹணாமி ஸூபகே
    ஸஹாரித்ரம் தராம்யஹம்
    பர்த்து: ஆயுஷ்ய ஸித்யர்த்தம்
    சுப்ரீதா பவ ஸர்வதா:

    என்ற ஸ்லோகத்தை சொல்லி கட்டிக்கொள்ள வேண்டும்.

    விளக்கம்:

    என்னுடைய கணவர் நீண்ட காலம் நோய்நொடியில்லாமல் வாழ்வதற்காக, இந்த நோன்பு விரத்ததை மேற்கொள்கிறேன். காமாட்சி அன்னையே, உன் அருளால் மஞள் சரடும் அணிந்துகொண்டேன். என் கணவரைக் காத்தருளும் தெய்வம் நீயம்மா…. என்றும் காத்தருள்வாய் அன்னையே !
    நமது வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு நவ கோள்களின் ஆதிக்கமும் முக்கிய காரணம். நவகிரக காயத்ரியை நாம் பக்தி சிரத்தையோடு ஜெபிப்பதினால் நற்பயனை பெறலாம் என்பது நம் முன்னோர் வாக்கு.
    இந்த பிரபஞ்சம் நவகோள்களின் கட்டுப்பாட்டில் இயங்குவதாக  நம்பப்படுகிறது. நமது வாழ்க்கையில் ஏற்படும் ஏற்ற இறக்கங்களுக்கு இந்த நவ கோள்களின்  ஆதிக்கமும் முக்கிய காரணிகளாக நம் முன்னோர் கருதுகின்றனர். அதனால் தான் அவரவர் ஜாதகத்தில் ஏற்படக்கூடிய பலாபலன்களுக்கு ஏற்ப நவகிரக பரிகார ஸ்தலங்களுக்கு  சென்று வழிப்பட அறிவுறுத்தப்பட்டுள்ளது.

    ஆதித்யன் (சூரியன்)


    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
    பாசஹஸ்தாய தீமஹி
    தன்னோ சூர்யஹ் ப்ரசோதயாத்

    சந்திரன்

    ஓம் பத்மத்வஜாய வித்மஹே
    ஹேமரூபாய தீமஹி
    தன்னோ சோமஹ் ப்ரசோதயாத்

    அங்காரகன்

    ஓம் வீரத்வஜாய வித்மஹே
    விக்ன ஹஸ்தாய தீமஹி
    தன்னோ பௌமஹ் ப்ரசோதயாத்

    புதன்

    ஓம் கஜத்வஜாய வித்மஹே
    சுகஹஸ்தாய தீமஹி
    தன்னோ புதஹ் ப்ரசோதயாத்

    குரு


    ஓம் குருதேவாய வித்மஹே
    பரப்ரஹ்மாய தீமஹி
    தன்னோ குருஹ் ப்ரசோதயாத்

    சுக்கிரன்

    ஓம் அஸ்வத்வஜாய வித்மஹே
    தனு ஹஸ்தாய தீமஹி
    தன்னோ சுக்ரஹ் ப்ரசோதயாத்

    சனி பகவான்

    ஓம் காகத்வஜாய வித்மஹே
    கட்கஹஸ்தாய தீமஹி
    தன்னோ மந்தஹ் ப்ரசோதயாத்

    ராகு

    ஓம் நகத்வஜாய வித்மஹே
    பத்மஹஸ்தாய தீமஹி
    தன்னோ ராஹுஹ் ப்ரசோதயாத்

    கேது

    ஓம் அம்வத்வஜாய வித்மஹே
    சூலஹஸ்தாய தீமஹி
    தன்னோ கேது ப்ரசோதயாத்

    நமக்கு வரும் வினைகளை முற்றிலும் தவிர்க்க இயலாத போதிலும், அதன் தாக்கத்தை பரிகாரங்களின் மூலம் குறைத்துக்கொள்ள முடியும். நவகிரக காயத்ரியை நாம் பக்தி சிரத்தையோடு ஜெபிப்பதினால் நற்பயனை பெறலாம் என்பது நம் முன்னோர் வாக்கு.
    ×