என் மலர்
ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்
சிவராத்திரி என்றாலே இரவு முழுவதும் உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து முழு ஈடுபாட்டுடன் சிவபெருமானை நினைத்து வழிபடும் ஒரு இரவாக இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே.
மாதந்தோறும் சிவராத்திரி வந்தாலும் மாசி மாதம் வரும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்ற சிறப்பு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது. சிவராத்திரி என்றாலே இரவு முழுவதும் உண்ணாமல் உறங்காமல் விரதமிருந்து முழு ஈடுபாட்டுடன் சிவ பெருமானை நினைத்து வழிபடும் ஒரு இரவாக இருந்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. மாத சிவராத்திரியின் முழு பலனை அடைவது எப்படி என்பதை இப்பதிவில் நாம் காணலாம்.
சிவராத்திரியில் பல வகைகள் காணப்படுகின்றன. அவை மாத சிவராத்திரி, பட்ச சிவராத்திரி, யோக சிவராத்திரி, நித்திய சிவராத்திரி, மகா சிவராத்திரி என்று குறிப்பிடப்பட்டு வருகின்றது. அதில் குறிப்பாக மாசி மாதம் வரும் கிருஷ்ணபட்ச சதுர்த்தி அன்று அமாவாசைக்கு முந்தைய நாள் அனுஷ்டிக்கப்படும் சிவராத்திரி தான் மகா சிவராத்திரி என்று கொண்டாடப்பட்டு வருகிறது.
புராணங்களில் மகா சிவராத்திரியை குறித்த பல கதைகள் வழக்கத்தில் உள்ளன. எல்லா கதைகளிலும் குறிப்பிடப்பட்டு கூறப்படும் ஒரு பலன் என்றால் அது ‘இறுதி மோட்சம்’ என்பது தான். மகா சிவராத்திரியில் விரதம் இருப்போருக்கு நினைத்த காரியங்கள் கைகூடும். பொருளாதார முன்னேற்றம் அடைந்து சகல வளங்களும் வெகு விரைவில் கிட்டும். வேண்டிய வேண்டுதல்கள் எல்லாம் தடையின்றி நிறைவேறும். அனைத்து பாவங்களும் நீங்கி இறுதியில் சிவபெருமானின் திருவடியை அடைந்து மோட்சம் பெறுவோம்.
மாத சிவராத்திரிகளில் விரதம் இருந்து உங்களால் முடிந்தவரை இயலாதவர்களுக்கு அன்னதானம் அளிக்க வேண்டும். இவ்வாறு முறையாக வழிபடுவதன் மூலம் இறுதி காலத்தில் நிம்மதியாக வாழ்ந்துவிட்டு மோட்சம் அடையலாம். சிவனை நினைத்து நெஞ்சுருகி விழித்திருப்பதன் மூலம் மகாசிவராத்திரியின் முழு பலனையும் அடையலாம் என்கிறது சாஸ்திரம்.

சிவன்கோவில்களில் நேற்று பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடு நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு பக்தர்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது.
திருச்சி நம்பர் 1 டோல்கேட் அருகே உள்ள உத்தமர் கோவிலில் பிரதோஷத்தை முன்னிட்டு நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் தீபாராதனை நடைபெற்றது. முன்னதாக நந்தி பகவானுக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்று பஞ்சமுக தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து மூலவர் பிச்சாண்டேஸ்வரருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் மகாதீபாராதனை நடைபெற்றது. இதையடுத்து சவுந்தர்யபார்வதி உடனுறை பிச்சாண்டேஸ்வரர் ரிஷப வாகனத்தில் புறப்பாடு கண்டு கோவில் பிரகாரத்தை வலம்வந்து மூலஸ்தானத்தை சென்றடைந்தார்.
இதேபோல் திருப்பட்டூர் பிரம்மபுரீஸ்வரர் கோவிலில் உள்ள நந்தி பெருமானுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதைதொடர்ந்து ரிஷப வாகனத்தில் பிரம்மபுரீஸ்வரர் பிரம்ம சம்பத்கவுரி ஆகியோர் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
மேலும் திருவாசி மாற்றுரைவரதீஸ்வரர் கோவில், பனமங்கலம் வாரணபுரீஸ்வரர் கோவில், உத்தமர்சீலி அருகே திருப்பால்துறை ஆதிமூலேஸ்வரர், சமயபுரம் போஜீஸ்வரர் கோவில், மண்ணச்சநல்லூர் பூமிநாதசுவாமி கோவில், ஏகாம்பரநாதர் கோவில், உப்பிலியபுரம் அருகே ரெட்டியாப்பட்டியில் ஸ்ரீகாளஹஸ்தீஸ்வரர் கோவில், கொப்பம்பட்டி ஸ்ரீசப்தரீஸ்வரர் கோவில், தெற்கு விஸ்வாம்பாள் சமுத்திரம் காசிவிஸ்வநாதர் கோவில், முசிறி சந்திரமவுலீஸ்வரர் கோவில், வெள்ளூர் திருக்காமேஸ்வரர் கோவில், தா.பேட்டை காசி விஸ்வநாதர் கோவில் உள்ளிட்ட சிவன் கோவில்களில் பிரதோஷத்தை முன்னிட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றது. நீண்ட நாட்களுக்கு பிறகு பிரதோஷ வழிபாட்டில் கலந்துகொள்ள அனுமதி வழங்கப்பட்டதால் பக்தர்கள் பெரிதும் மகிழ்ச்சி அடைந்து பயபக்தியுடன் சாமியை வணங்கினர்.

2 மாதத்திற்கு பிறகு ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரதோஷ தினமான நேற்று மரக்கேடயத்தில் சாமி 3-ம் பிரகாரத்தில் வலம் வந்தார்.
கொரோனா தொற்று குறைந்ததால் தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து கோவில்களிலும் 5-ம் தேதி முதல் பக்தர்கள் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். இதேபோல் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலிலும் 2 மாதத்திற்கு பிறகு பக்தர்கள் வழக்கம்போல் தரிசனத்திற்கு அனுமதிக்கப்பட்டு வருகின்றனர். பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வரும் நிலையிலும் 22 தீர்த்த கிணறுகளில் நீராடுவதற்கு தொடர்ந்து தடை விதிக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதன் எதிரொலியாக கோவிலுக்கு பக்தர்களின் வருகையும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. 2 மாதத்திற்கு பிறகு ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் பிரதோஷ தினமான நேற்று மரக்கேடயத்தில் சாமி 3-ம் பிரகாரத்தில் வலம் வந்தார். அப்போது திரளான பக்தர்கள் சாமியை தரிசனம் செய்தனர்.

சிவன் கோவில்களில் ஆனி பிரதோஷ விழாவில் 16 வகையான அபிஷேகம் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
திருப்பரங்குன்றம் மலைக்கு பின்புறம் உள்ள பால் சுவை கண்ட சிவ பெருமான் கோவிலில் ஆனி மாத பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவையொட்டிபால் சிவபெருமானுக்கு பால், பன்னீர், இளநீர், பஞ்சாமிர்தம் உள்பட 16 வகையான திரவியங்கள் கொண்டு அபிஷேகம் நடந்தது. இதனையடுத்து மலர்களால் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. அவை கண்கொள்ளா காட்சியாக இருந்தது. இதற்கிடையே சுவாமிக்கு நெல், கனிகள் படைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. மேலும் மகா தீபாராதனை நடந்தது. பக்தர்கள் கலந்து கொண்டு பயபக்தியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
மேலும் மதுரை இம்மையில் நன்மை தருவார் கோவிலில் நடைபெற்ற பிரதோஷ விழாவில் சிறப்பு அலங்காரத்தில் சுவாமி, அம்பாள் பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
சோழவந்தான் வைகை ஆற்று கரையில் கிழக்குப்பகுதியில் அமைந்துள்ள பிரளயநாத கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நந்திபெருமானுக்கு 12 வகையான அபிஷேகங்கள் நடைபெற்று மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது. சுவாமியும், அம்பாளும் ரிஷபவாகனத்தில் எழுந்தருளி கோவில் வளாகத்தை சுற்றிவந்தனர். சிறப்பு அர்ச்சனை, பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது.
திருவேடகம் ஏடகநாதர் சுவாமி கோவிலில் பிரதோஷ விழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகங்கள் நடைபெற்று சுவாமி, அம்பாள் கோவில் வளாகத்தில் வலம் வந்தனர். இதேபோல் தென்கரை அகிலாண்டேஸ்வரி சமேத மூலநாத சுவாமி கோவில், மன்னாடிமங்கலம் மீனாட்சிசுந்தரேஸ்வரர் கோவில், சோழவந்தான் பேட்டை அருணாசல ஈஸ்வரர் கோவில், திருவளவயநல்லூர் மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், விக்கிரமங்கலம் கோவில்பட்டி ஈஸ்வரமுடையார் கோவில் ஆகிய கோவில்களில் பிரதோஷ விழா நடந்தது. பூஜைக்கு பின்னர் பக்தர்கள் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியுடன் சாமி தரிசனம் செய்தனர்.
பாலமேடுபஸ் நிலையம் அருகில் உள்ள சிவன் கோவிலில் பிரதோஷ பூஜைகள் நடந்தது. இதில் சிவனுக்கு பால், பழம், பன்னீர், விபூதி, சந்தனம், வில்வ இலைகள், உள்ளிட்ட பல்வேறு அபிஷேகங்கள் நடந்தது. இதையொட்டி பக்தர்கள் அரசு வழிகாட்டுதல்படி கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். இதற்கான ஏற்பாடுகளை பாலமேடு கிராம பொது மகாலிங்க சுவாமி மடத்து கமிட்டி நிர்வாகிகள் செய்திருந்தனர்.

இயேசு கிறிஸ்து தாம் இயற்கை மீது அதிகாரம் கொண்ட கடவுள் என்பதை தமது அற்புதங்கள் மூலம் எண்பித்தார். கலிலேய ஏரியில் ஏற்பட்ட புயலை இயேசு அடக்கியதையும், அவர் சபித்த அத்தி மரம் பட்டுப்போன நிகழ்வையும் இங்கு காண்போம்.
ஒரு நாள் இயேசுவும் அவருடைய சீடர்களும் படகில் ஏறியதும், “ஏரியின் அக்கரைக்குச் செல்வோம் வாருங்கள்” என்று அவர் அவர்களுக்குச் சொன்னார். அவர்களும் படகைச் செலுத்தினார்கள். படகு போய்க் கொண்டிருந்தபோது அவர் ஆழ்ந்து தூங்கிவிட்டார். அப்பொழுது ஏரியில் புயல் அடித்தது. படகு நீரால் நிரம்பியது. அவர்கள் ஆபத்துக்கு உள்ளானார்கள். அவர்கள் அவரிடம் வந்து, “ஆண்டவரே, ஆண்டவரே, சாகப் போகிறோம்” என்று சொல்லி அவரை எழுப்பினார்கள். அவர் விழித்தெழுந்து காற்றையும் நீரின் கொந்தளிப்பையும் கடிந்துகொண்டார். உடனே அவை ஓய்ந்தன; அமைதி உண்டாயிற்று. அவர் அவர்களிடம், “உங்கள் நம்பிக்கை எங்கே?” என்றார். அவர்கள் அச்சமும் வியப்பும் நிறைந்தவர்களாய், “இவர் காற்றுக்கும் நீருக்கும் கட்டளையிடுகிறார். அவை இவருக்குக் கீழ்ப்படிகின்றனவே! இவர் யாரோ?” என்று ஒருவரோடு ஒருவர் பேசிக்கொண்டார்கள். (லூக்கா 8:22-25)
பெத்தானியாவை விட்டு அவர்கள் எருசலேமுக்கு திரும்பிய பொழுது இயேசுவுக்குப் பசி உண்டாயிற்று. இலையடர்ந்த ஓர் அத்திமரத்தை அவர் தொலையிலிருந்து கண்டு, அதில் ஏதாவது கிடைக்குமா என்று அதன் அருகில் சென்றார். சென்றபோது இலைகளைத்தவிர வேறு எதையும் அவர் காணவில்லை. ஏனெனில் அது அத்திப் பழக்காலம் அல்ல. அவர் அதைப் பார்த்து, “இனி உன் கனியை யாரும் உண்ணவே கூடாது” என்றார். அவருடைய சீடர்கள் இதைக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். மறுநாள் காலையில் அவர்கள் அவ்வழியே சென்றபோது, அந்த அத்தி மரம் வேரோடு பட்டுப்போயிருந்ததைக் கண்டார்கள். (மாற்கு 11:12-14,20)

உலக பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவிலில் நந்தியம் பெருமானுக்கு நடந்த பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் சமூக இடைவெளியுடன் அமர்ந்து தரிசனம் செய்தனர்.
தஞ்சை பெரிய கோவில் உலக பிரசித்தி பெற்றகோவிலாகும். தமிழர்களின் கட்டிடக்கலைக்கு எடுத்துக்காட்டாக திகழும் இந்த கோவில் உலக பாரம்பரிய சின்னமாகவும் விளங்கி வருகிறது. இந்த கோவிலில் உள்ள நந்தியம்பெருமானுக்கு நடக்கும் பிரதோஷ வழிபாட்டில் கலந்து கொள்ள பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள். பால், வில்வம், மஞ்சள், சந்தனம், தயிர் மற்றும் வாசனை திரவியங்களை கொண்டு நந்தியம் பெருமானுக்கு அபிஷேகம் நடத்தப்படுவது வழக்கம்.
இந்நிலையில், கொரோனா 2-வது அலை எதிரொலியாக, கடந்த ஏப்ரல் மாதம் 16-ந் தேதி கோவில் மூடப்பட்டது. இருப்பினும், கோவிலில் தினமும் நான்கு கால பூஜைகள் வழக்கம் போல நடத்தப்பட்டது.
இந்த நிலையில் கொரோனா தொற்று குறைந்ததையடுத்து ஊரடங்கில் தளர்வுகள் அறிவிக்கப்பட்டு கோவில் கடந்த 5-ந்தேதி முதல் திறக்கப்பட்டது. இந்த நிலையில் பிரதோஷமான நேற்று பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர். பிரதோஷத்தை முன்னிட்டு நந்தியம் பெருமானுக்கு பால், மஞ்சள், சந்தனம் போன்ற மங்கல பொருள்களை கொண்டு அபிஷேகம் நடந்தது.
இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர். பிரதோஷத்தை காண வந்திருந்த பக்தர்கள் கோவில் பிரகாரத்தில் சமூக இடைவெளியுடன் அமரவைக்கப்பட்டனர். 5 பிரதோஷங்களுக்குப்பின்னர் நேற்று பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். இதே போல கடந்த 2020-ம் ஆண்டு கொரோனா ஊரடங்கு காரணமாக பக்தர்கள் இன்றி 12 முறை பிரதோஷ வழிபாடு நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவில் பிரதோஷ விழாவில் மூலவர் கரபுரநாதர், நந்திகேஸ்வரர் சுவாமிக்கும் அபிஷேக ஆராதனை, தீபாராதனை வழிபாடும் நடந்தது.
சேலம் அருகே உத்தமசோழபுரம் கரபுரநாதர் கோவிலில் பிரதோஷ விழா நடந்தது.
இதில் மூலவர் கரபுரநாதர், நந்திகேஸ்வரர் சுவாமிக்கும் அபிஷேக ஆராதனை, தீபாராதனை வழிபாடும் நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். பக்தர்கள் சமூக இடைவெளியுடன் முக கவசம் அணிந்து சாமி தரிசனம் செய்தனர்.
அனைவருக்கும் பிரசாதம் வழங்கப்பட்டது.

நாகை காயாரோகணசாமி கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடு நடந்தது. இதையொட்டி நந்திகேஸ்வரருக்கு மஞ்சள், இளநீர், தேன், பால், தயிர், சந்தனம், விபூதி உள்ளிட்ட பொருட்களால் அபிஷேகம் நடந்தது.

அதேபோல் அமரநந்தீஸ்வரர் கோவில், காசி விஸ்வநாதர் கோவில், கட்டியப்பர் கோவில், நடுவதீஸ்வரர் கோவில், அழகிய நாதர் கோவில், வீரபத்திர சுவாமி கோவில், மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோவில், நாகநாதர் கோவில், சட்டையப்பர்கோவில், வெளிப்பாளையம்அகஸ்தீஸ்வரர் கோவில், வடக்கு பொய்கை நல்லூர் நந்தி நாதேஸ்வரர் கோவில், நாகூர் நாகநாதர் கோவில் உள்ளிட்ட கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடைபெற்றது.
கொரோனா ஊரடங்கு தளர்வுகளின்படி பிரதோஷ வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில், தோப்புத்துறை கைலாசநாதர் கோவில், வடமறைக்காடர் கோவில், தேத்தாகுடி வடக்கு அழகியநாதர் கோவில், அகஸ்தியன்பள்ளி அகஸ்தீஸ்வரர் கோவில், நாலுவேதபதி அமராபதீஸ்வரர் கோவில், மறைஞாயநல்லூர் மேலமறைக்காடர் சிவன்கோவில், கத்தரிப்புலம் கோவில்குத்தகை காசிநாதர் கோவில் ஆகிய சிவன் கோவில்களிலும் பிரதோஷ வழிபாடு நடந்தது.

இந்த ஆண்டுக்கான தட்சிணாய புண்ணிய கால உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று இரவு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு மற்றும் வாஸ்து ஹோமம், வாஸ்து பூஜை ஆகியவை நடந்தது.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.
இதில் தட்சிணாய புண்ணிய கால உற்சவ விழாவும் ஒன்று. சூரியன் வடகிழக்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி செல்லும் மாத தொடக்கத்தில் இந்த திருவிழா நடைபெறும்.இதனை ஆனி பிரம்மோற்சவ விழா என்பார்கள்.
இந்த ஆண்டுக்கான தட்சிணாய புண்ணிய கால உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று இரவு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு மற்றும் வாஸ்து ஹோமம், வாஸ்து பூஜை ஆகியவை நடந்தது.
இன்று அதிகாலை 5.30 மணிக்கு அருணாசலேஸ்வரர் மூலவர் சன்னதிக்கு முன்புள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கொடியேற்றினர்.
முன்னதாக சின்ன நாயக்கர் மற்றும் பராசக்தி அம்மன் அங்கு எழுந்தருளினர். இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.
பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தட்சிணாய புண்ணிய காலம் உற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்கள் தினமும் 5-ம் பிரகாரத்தில் காலை 9 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி -அம்மன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.

சோழவந்தான் அருகே 300 ஆண்டுகள் பழமையான இரும்பாடி காசி விஸ்வநாதர் கோவில் சேதம் அடைந்து உள்ளதால் அதனை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் வடநாட்டில் உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு இணையாக தென்னகத்து காசி என்று பக்தர்களால் அழைக்கப்படக் கூடிய காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.
சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலின் கட்டிடங்கள் மற்றும் கோபுரங்கள் அனைத்தும் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டதாகவும், இந்த கோவிலில் வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
மேலும் இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், “இக்கோவிலில் உள்ள சிற்பங்கள் மிகவும் அற்புதமானவை. இப்படிப்பட்ட பழமை வாய்ந்த இந்த கோவில் சேதமடைந்து தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவது வேதனை அளிக்கிறது.
எனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை இக்கோவிலை முழுமையாக புனரமைத்து சுற்றுச்சுவர் எழுப்பி கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். இக்கோவில் பக்தர்கள் வழிபாடு நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.

காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் நேற்று திறக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் குளிக்க தடை, பொங்கலிட தடை உள்ளிட்ட சில காரணங்களால் குறைந்த அளவிலான பக்தர்களே வந்தனர்.
கொரோனா ஊரடங்கையொட்டி பாபநாசம் கோவில் அடைக்கப்பட்டு, கோவில் முன்பாக அமைந்துள்ள தாமிரபரணி படித்துறை பகுதியில் பொதுமக்கள் குளிப்பதற்கும் தடை விதிக்கப்பட்டது. தற்போது கொரோனா தொற்றின் வேகம் குறைந்த காரணத்தால் தமிழகத்தில் உள்ள அனைத்து கோவில்களும் திறக்கப்பட்டது.
இந்த நிலையில் நேற்று பாபநாசம் கோவிலுக்கு ஏராளமான பக்தர்கள் வந்து சாமி தரிசனம் செய்தனர். மேலும் ஏராளமான உள்ளூர் மற்றும் வெளியூர் பொதுமக்கள் கொரோனா தொற்றை கண்டுக்காமல் பாபநாசம் ஆற்றுப்பகுதியில் புனித நீராடினார்கள்.
முன்னதாக அப்பகுதிக்கு வாகனங்களில் வந்தவர்களை விக்கிரமசிங்கபுரம் நகராட்சி அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர். வாகனங்களில் இருப்பவர்கள் அனைவரும் முககவசம் அணிந்துள்ளார்களா? என்று சோதனை செய்த பின்னரே பாபநாசம் கோவிலுக்குள் அனுமதித்தனர்.
இதேபோல் பாபநாசம் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் அமைந்துள்ள காரையாறு சொரிமுத்து அய்யனார் கோவில் நேற்று திறக்கப்பட்டது. ஆனால் ஆற்றில் குளிக்க தடை, பொங்கலிட தடை உள்ளிட்ட சில காரணங்களால் குறைந்த அளவிலான பக்தர்களே வந்தனர். தெர்மல் ஸ்கேனர் மூலம் உடல் வெப்ப பரிசோதனை செய்தபிறகே கோவிலுக்குள் பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர். அங்கு சமூக இடைவெளியுடன் நின்று சாமி தரிசனம் செய்தனர்.

ஆந்திராவில் அனைத்து மாவட்டங்களிலும் பஸ் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளது. இதனால் இலவச தரிசனம் செய்வதற்காக ஏராளமான பக்தர்கள் திருப்பதிக்கு வந்த வண்ணம் உள்ளனர்.
திருப்பதி :
நாடு முழுவதும் கொரோனாவின் தாக்கம் வெகுவாக குறைந்து பல மாநிலங்களிலும் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் கொண்டுவரப்பட்டுள்ளது.
அதன்படி ஆந்திராவிலும் கொரோனா கட்டுப்பாடுகளில் தளர்வுகள் ஏற்படுத்தப்பட்டு இயல்புநிலை திரும்பியுள்ளது. இதன் காரணமாக திருப்பதிக்கு பக்தர்கள் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது.
கடந்த ஒரு மாதத்துக்கு முன்னர் வரை திருப்பதிக்கு வரும் பக்தர்கள் எண்ணிக்கை சராசரியாக தினமும் 2 ஆயிரத்தில் இருந்து 3 ஆயிரமாக இருந்தது. ஊரடங்கு தளர்வுகளால் இப்போது 15 ஆயிரத்துக்கும் அதிகமான பக்தர்கள் தினமும் திருப்பதிக்கு வருகின்றனர்.
ரூ.300 கட்டணத்தில் ஆன்லைனில் முன்பதிவு செய்த பக்தர்கள் மட்டுமே தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர். இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்ட நடைமுறையே தற்போது வரை தொடர்கிறது.
கொரோனா பிரச்சனைக்கு முழு அளவில் தீர்வுகள் ஏற்பட்ட பிறகே மீண்டும் இலவச தரிசனம் தொடங்கப்படும் என ஏற்கனவே திருப்பதி தேவஸ்தானம் அறிவித்துள்ளது.

திருப்பதிக்கு வந்த பிறகுதான் அவர்களுக்கு இலவச தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது தெரியவருகிறது. இதனால் அவர்கள் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கின்றனர்.
இயல்புநிலை திரும்பியுள்ளதால் இலவச தரிசனத்தை மீண்டும் தொடங்க வேண்டும் என்று பக்தர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
திருப்பதியில் நேற்று 16,984 பக்தர்கள் வழிபட்டனர். அவர்களில் 7,642 பேர் முடிகாணிக்கை செய்து தங்கள் நேர்த்திக்கடனை செலுத்தினர்.