search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சேதம் அடைந்த நிலையில் உள்ள இரும்பாடி காசி விஸ்வநாதர் கோவில்
    X
    சேதம் அடைந்த நிலையில் உள்ள இரும்பாடி காசி விஸ்வநாதர் கோவில்

    இரும்பாடி காசி விஸ்வநாதர் கோவிலை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த கோரிக்கை

    சோழவந்தான் அருகே 300 ஆண்டுகள் பழமையான இரும்பாடி காசி விஸ்வநாதர் கோவில் சேதம் அடைந்து உள்ளதால் அதனை புனரமைத்து கும்பாபிஷேகம் நடத்த வேண்டும் என்று பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
    சோழவந்தான் அருகே இரும்பாடி கிராமத்தில் வடநாட்டில் உள்ள காசி விசுவநாதர் கோவிலுக்கு இணையாக தென்னகத்து காசி என்று பக்தர்களால் அழைக்கப்படக் கூடிய காசி விஸ்வநாதர் கோவில் உள்ளது.

    சுமார் 300 ஆண்டுகள் பழமை வாய்ந்த இந்த கோவிலின் கட்டிடங்கள் மற்றும் கோபுரங்கள் அனைத்தும் தற்போது சேதமடைந்த நிலையில் உள்ளது. இதனால் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி விட்டதாகவும், இந்த கோவிலில் வழிபட முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாகவும் கிராம மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    மேலும் இது குறித்து கிராம மக்கள் கூறுகையில், “இக்கோவிலில் உள்ள சிற்பங்கள் மிகவும் அற்புதமானவை. இப்படிப்பட்ட பழமை வாய்ந்த இந்த கோவில் சேதமடைந்து தற்போது சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருவது வேதனை அளிக்கிறது.

    எனவே தமிழக அரசின் இந்து சமய அறநிலையத்துறை இக்கோவிலை முழுமையாக புனரமைத்து சுற்றுச்சுவர் எழுப்பி கோவில் கும்பாபிஷேகத்தை நடத்த வேண்டும். இக்கோவில் பக்தர்கள் வழிபாடு நடத்த உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று கூறினார்.
    Next Story
    ×