என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    னி பிரம்மோற்சவத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்ட காட்சி
    X
    னி பிரம்மோற்சவத்தையொட்டி திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவில் கொடிமரத்தில் கொடியேற்றப்பட்ட காட்சி

    அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆனி பிரம்மோற்சவ விழா கொடியேற்றம்

    இந்த ஆண்டுக்கான தட்சிணாய புண்ணிய கால உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று இரவு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு மற்றும் வாஸ்து ஹோமம், வாஸ்து பூஜை ஆகியவை நடந்தது.
    திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் ஆண்டு முழுவதும் பல்வேறு திருவிழாக்கள் நடைபெறுவது வழக்கம்.

    இதில் தட்சிணாய புண்ணிய கால உற்சவ விழாவும் ஒன்று. சூரியன் வடகிழக்கில் இருந்து தென்கிழக்கு நோக்கி செல்லும் மாத தொடக்கத்தில் இந்த திருவிழா நடைபெறும்.இதனை ஆனி பிரம்மோற்சவ விழா என்பார்கள்.

    இந்த ஆண்டுக்கான தட்சிணாய புண்ணிய கால உற்சவ விழாவை முன்னிட்டு நேற்று இரவு சம்பந்த விநாயகர் சன்னதியில் சிறப்பு வழிபாடு மற்றும் வாஸ்து ஹோமம், வாஸ்து பூஜை ஆகியவை நடந்தது.

    இன்று அதிகாலை 5.30 மணிக்கு அருணாசலேஸ்வரர்  மூலவர் சன்னதிக்கு முன்புள்ள கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரம் முழங்க கொடியேற்றினர்.

    முன்னதாக சின்ன நாயக்கர் மற்றும் பராசக்தி அம்மன் அங்கு எழுந்தருளினர். இந்த நிகழ்ச்சியில் கோவில் அலுவலர்கள், ஊழியர்கள் மற்றும் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டு வழிபட்டனர்.

    பக்தர்கள் கொரோனா கட்டுப்பாடு விதிமுறைகளை கடைபிடித்து சமூக இடைவெளியுடன் வந்து சாமி தரிசனம் செய்தனர். போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    திருவண்ணாமலை  அருணாசலேஸ்வரர் கோவிலில் நடைபெறும் தட்சிணாய புண்ணிய காலம் உற்சவ விழாவை முன்னிட்டு இன்று முதல் 10 நாட்கள் தினமும் 5-ம் பிரகாரத்தில் காலை 9 மணிக்கும், இரவு 7 மணிக்கும் சுவாமி -அம்மன் பல்லக்கில் எழுந்தருளி பக்தர்களுக்கு காட்சி தருவார்கள்.
    Next Story
    ×