என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    குத்தாலம் பெரிய கோவில் எனப்படும் உக்தவேதீஸ்வரர் கோவிலில் திருக்கல்யாண உற்சவத்தில் தருமபுரம் ஆதீனம் உள்ளிட்ட 1000-த்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
    மயிலாடுதுறை மாவட்டம், குத்தாலத்தில் தருமபுரம் ஆதீனத்திற்கு சொந்தமான உலகப் புகழ் வாய்ந்த பெரிய கோவில் எனப்படும் உக்தவேதீஸ்வரர் ஆலயம் அமைந்துள்ளது. சமயக்குரவர்கள் மூவரால் பாடல் பெற்றதும், சுந்தரர் தோல் நோய் நீக்கிய தலமாக விளங்கும் இந்த ஆலயத்தின் கும்பாபிஷேகம் 62 ஆண்டுகளுக்கு பின்பு நடந்தது.

    அதன் தொடர்ச்சியாக திருக்கல்யாண உற்சவம் நேற்று நடைபெற்றது. வெளிப்பிரகாரத்தில் அமைக்கப்பட்டிருந்த திருக்கல்யாண மேடைக்கு மணக்கோலத்தில் அரும்பண்ணவனமுலை அம்மையும், உத்தவேதீஸ்வரரும் எழுந்தருளினர்.

    தருமபுர ஆதீன 27வது குருமகா சன்னிதானம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள் முன்னிலையில் யாகம் வளர்க்கப்பட்டு பூர்ணாகுதி யுடன் மகா தீபாராதனை செய்யப்பட்டது.

    தொடர்ந்து மாலை மாற்றுதல், மணமகன் கையில் காப்பு கட்டுதல் உள்ளிட்ட திருமண சடங்குகள் நடைபெற்று, மாங்கல்ய தாரண நிகழ்ச்சி நடைபெற்றது.

    திருக்கல்யாண உற்சவத்தை மகேஷ் குருக்கள் தலைமையில் சிவாச்சாரியார்கள் செய்திருந்தனர். 1000த்திற்கும் மேற்பட்ட பெண்கள் உள்ளிட்ட திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர்.
    கிணத்துக்கடவு அருகே சூலக்கல் மாரியம்மன் கோவில் தேர் திருவிழாவில் வருகிற 26, 27, 28-ந் தேதிகளில் தினமும் மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெறுகிறது.
    கிணத்துக்கடவு அருகே உள்ள சூலக்கல்லில் பிரசித்தி பெற்ற மாரியம்மன்-விநாயகர் கோவில் உள்ளது. கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக தேர் திருவிழா நடைபெறவில்லை. இந்தநிலையில் கோவில் தேர் திருவிழா  காலை 9.30 மணிக்கு முகூர்த்தக்காய் உடைக்கும் நிகழ்ச்சியிடன் தொடங்கியது.

    முன்னதாக சூலக்கல் ஆற்றில் இருந்து மூங்கில் கம்பம் மேளதாளம், வாணவேடிக்கை முழங்க கொண்டு வரப்பட்டு சிறப்பு பூஜை நடந்தது. நிகழ்ச்சியில் சூலக்கல் சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர். திருவிழாவையொட்டி  காலை 9 மணிக்கு வேல் புறப்பாடு, பூச்சாட்டு விழா நடைபெறுகிறது.

    வருகிற 16-ந் தேதி இரவு 9 மணிக்கு கிராம சாந்தி, வாஸ்து சாந்தி பூஜை, 17-ந் தேதி  இரவு 9 மணிக்கு கம்பம் நடுதல், பூவோடு எடுத்து வருதல், 18-ந் தேதி காலை 9 மணிக்கு யாகசாலை ஆரம்பம், கொடியேற்றம் நிகழ்ச்சிகள் நடக்கிறது.  

    இரவு 9 மணிக்கு மாரியம்மன் சிம்ம வாகனத்தில் அம்மன் திருவீதி உலா, 19-ந் தேதி முதல் 24-ந் தேதி வரை தினசரி காலை, இரவு நேரங்களில் சூலக்கல் மாரியம்மன் திருவீதி உலாவும், பூவோடு எடுத்து வருதல், 25-ந் தேதி காலை 6 மணிக்கு மாவிளக்கு, பொங்கல் வைக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    பின்னர் அம்மனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடக்கிறது. வருகிற 26, 27, 28-ந் தேதிகளில் தினமும் மாலை 4 மணிக்கு திருத்தேர் வடம் பிடித்து தேரோட்டம் நடைபெறுகிறது. 29-ந் தேதி மதியம் 12 மணிக்கு சூலக்கல் மாரியம்மனுக்கு மகா அபிஷேகத்துடன் அன்னதானம் நடைபெறுகிறது.

    இதற்கான ஏற்பாடுகளை சூலக்கல் மாரியம்மன்-விநாயகர் கோவில் தக்காரும், உதவி ஆணையாளருமான கருணாநிதி, கோவில் செயல் அலுவலர் சுந்தரராசு, பொதுமக்கள் செய்து வருகின்றனர்.
    மே மாதம் 10-ம் தேதியில் இருந்து மே மாதம் 16-ம்தேதி வரை நடக்க உள்ள சில முக்கியமான ஆன்மிக நிகழ்வுகளை இந்த பகுதியில் பார்க்கலாம்.
    10-ம் தேதி செவ்வாய் கிழமை :

    * வளர்பிறை நவமி
    * குரங்கனி முத்துமாலையம்மன் பவனி
    * கொடிய நகசு
    * சந்திராஷ்டமம்: திருவோணம்

    11-ம் தேதி புதன் கிழமை :

    * வளர்பிறை தசமி
    * கன்னிகா பரமோஸ்வரி பூஜை
    * வாசவி ஜெயந்தி
    * திருத்தணி சிவபெருமான் ரதோற்சவம்
    * திருப்பணந்தாள் சிவபெருமான் திருக்கல்யாணம்
    * சந்திராஷ்டமம்: அவிட்டம்

    12-ம் தேதி வியாழக்கிழமை:

    * சர்வ ஏகாதசி
    * திருவள்ளூர் வீரராகவர் சோளசிம்மபுரம் லட்சுமி நரசிங்கர் தலங்களில் ரதோற்சவம்
    * காரைக்குடி அம்மன் ஹம்ஸ வாகன பவனி
    * சந்திராஷ்டமம்: சதயம்

    13-ம் தேதி வெள்ளிக்கிழமை:

    * சுபமுகூர்த்தம்
    * பிரதோஷம்
    * கடையம், சங்கரன்கோவில், திருக்கடவூர் இத்தலங்களில் ரதோற்சவம்
    * சந்திராஷ்டமம்: பூரட்டாதி

    14-ம் தேதி சனிக்கிழமை:

    * காரைக்குடி கொப்புடையம்மன் வெள்ளி கேடயத்தில் பவனி
    * வீரபாண்டி கௌமாரியம்மன் ரதோற்சவம்
    * காஞ்சி வரதராஜர் பவனி
    * சந்திராஷ்டமம்: உத்திரட்டாதி

    15-ம் தேதி ஞாயிற்றுக்கிழமை:

    * சுபமுகூர்த்த நாள்
    * பௌர்ணமி
    * புத்த பூர்ணிமா
    * விஷ்ணுபதி புண்ணிய காலம்
    * காஞ்சி வரதராஜர் காலை கருடன் இரவு ஹனுமன் வாகன பவனி
    * கொடிய நகசு
    * சந்திராஷ்டமம்: ரேவதி

    16-ம் தேதி திங்கட்கிழமை:

    * காரைக்குடி கொப்புடையம்மன வெள்ளி குதிரை வாகன புறப்பாடு
    * ஆழ்வார் திருநகரி ஸ்ரீநம்மாழ்வார் புறப்பாடு
    * சந்திராஷ்டமம்:  அசுபதி
    பேரருள் உடைமை, அளவில்லாத ஆற்றல் உடைமை என்ற மங்கள குணங்கள் ஆறும் தன்பால் உள்ளவர் என்பதனைச் "சிவ" எனும் திருப்பெயர் விளக்குகின்றது.
    நந்த்யோ நந்தி ப்ரியோ நாதோ நாதமத்ய ப்ரதிஷ்டித:
    நிஷ்கலோ நிர்மலோ நித்யோ நித்யா நித்யோ நிராமய:
    அங்காரக மஹா ரோக நிவாரா பிஷக்பதே
    சரீரே வியாதி வர்காம்ஸ்த்வம் அஸவநுத்ய ப்ரபாலய
    ஸ்ரீ வைத்ய நாதம் கணநாதநாதம்
    பாலாம்பிகை நாதம் அலம் குஜார்த்த;
    ஸதா ப்ரபத்யே சரணம் ப்ரபத்யே
    முதே ப்ரபத்யே சிவலிங்க ரூபம்
    திருப்பதி கோவிலில் வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நாராயணகிரி பகுதியில் பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடைபெற உள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வருகிற 10-ந்தேதி முதல் 12-ந்தேதி வரை நாராயணகிரி பகுதியில் பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள் 3 நாட்கள் நடைபெற உள்ளது.

    கடந்த 2 ஆண்டுகளாக கொரோனா பரவலால் நடத்தப்படாமல் இருந்த இந்த பத்மாவதி திருக்கல்யாண நிகழ்ச்சிகள், இந்த ஆண்டு வெகு சிறப்பாக நடத்த திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. இதற்கான ஏற்பாடுகளும் மும்முரமாக நடைபெற்று வருகிறது.

    முதல் நாளான நாளை 10-ந்தேதி பெருமாள் திருமண மண்டபத்திற்கு கஜ வாகனத்திலும், 2-ம் நாள் அஸ்வ வாகனத்திலும், 3-ம் நாள் கருட வாகனத்திலும் ஸ்ரீதேவி, பூதேவி சமேதமாய் எழுந்தருள்வார்.

    இதில் ஊஞ்சல் சேவைகளும், புராண, இதிகாச சொற்பொழிவுகளும் நடைபெறும். பத்மாவதி திருக்கல்யாண உற்சவத்தையொட்டி தினமும் நடைபெறும் ஆர்ஜித பிரம்மோற்சவம் மற்றும் சகஸ்ரதீப அலங்கார சேவை ரத்து செய்யப்பட்டுள்ளது
    பெரிவர்கள் கூட ஒரு காரியத்தை செய்ய சொல்லியபோது செய்யாமல் விட்டுவிட்டால் ஆஹா மறந்து மறந்து போய்விட்டது. நாளை செய்கின்றேன் என்பார்கள்.
    ஓருவர் ஜாதகத்தில் சந்திரம் பலம் பெற்றிருந்தால் தான் நினைவாற்றல் நன்றாக இருக்கும். நிகழ்கால தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள இயலும். மேலும் ஜாதகத்தில் ஞானக்காரகன் கேதுவும், வித்யாகாரகன் புதனும் படிப்பு ஸ்தானத்தோடு சம்பந்தப்பட்டிருக்க வேண்டும்.

    அப்பொழுது தான் கல்வியிலும் தேர்ச்சி பெற்றவராக விளங்க முடியும். மறதி இல்லாத மனிதராக வாழ்ந்து மகத்தான சாதனைகளை படைக்க முடியும். சில பிள்ளைகளுக்கு மறதி அதிகமாக இருக்கும். எதை சொன்னாலும் அடுத்த நிமிடமே மறந்து விடுவார்கள். பெரிவர்கள் கூட ஒரு காரியத்தை செய்ய சொல்லியபோது செய்யாமல் விட்டுவிட்டால் ஆஹா மறந்து மறந்து போய்விட்டது. நாளை செய்கின்றேன் என்பார்கள்.

    மறதி என்ற மூன்றெழுத்துக்குள்ளேதான் மதி என்ற இரண்டெழுத்தும் இருக்கிறது. மதி என்றால் சந்திரன் என்று பொருள். படிப்பில் அதிக மதிப்பெண் பெற கல்வி வளம்பெற கலைகளில் தேர்ச்சி பெற ஹயக்ரீவர் வழிபாடு உகந்தது. சரஸ்வதி படம் வைத்து கசலகலாவல்லி மாலை பாடி வழிபாடு செய்வத மிகவும் உகந்தது.
    சிவன் ஆலயத்தில் பொதுவாக சில சன்னிதிகளோடு சேர்த்து மொத்தம் 25 பகுதிகள் இருக்க வேண்டும் என்பது விதி. அந்த 25 இடங்களைப் பற்றி இங்கே பார்ப்போம்..
    1. இறைவன் வீற்றிருக்கும் கருவறை (மூலஸ்தானம்)

    2. சிவாச்சாரியார்கள் பூஜை செய்யும் இடம் (அர்த்த மண்டபம்)

    3. பக்தர்கள் தரிசனத்திற்காக நிற்கும் இடம் (மகா மண்டபம்)

    4. சண்டிகேஸ்வரர் சன்னிதி

    5. அம்பாள் மூலஸ்தானம்

    6. கலை நிகழ்ச்சி நடத்தும் இடம் (நிருத்த மண்டபம்)

    7. பள்ளியறை

    8. நடராஜர் சன்னிதி

    9. கொடிமரம் இருக்கும் இடம் (துவஸதம்ப மண்டபம்)

    10. இறைவனுக்கான நைவேத்தியம் தயாரிக்கும் இடம் (மடப்பள்ளி)

    11. நால்வர் சன்னிதி (சம்பந்தர், அப்பர், சுந்தரர், மாணிக்கவாசகர்)

    12.பசு பராமரிக்கும் இடம் (கோசாலை)

    13. அம்பாள் சன்னிதி

    14. சந்தான குரவர் சன்னிதி

    15. விழாக்கால சப்பரம் வைக்கும் இடம் (வாகன சாலை)

    16. விநாயகர் சன்னிதி

    17. முருகன் சன்னிதி

    18. வசந்த மண்டபம்

    19. பைரவர் சன்னிதி

    20. சூரியன் சன்னிதி

    21. சந்திரன் சன்னிதி

    22. ராஜகோபுரம் அல்லது நுழைவு வாசல்

    23. அபிஷேகத் தீர்த்தக் கிணறு அல்லது தெப்பக் குளம்

    24. நைவேத்தியத்திற்காக நீர் எடுக்கும் இடம்

    (மடப்பள்ளிக் கிணறு)

    25. தட்சிணாமூர்த்தி சன்னிதி

    இவைத் தவிர பெரிய ஆலயங்களில், சோமாஸ்கந்தர், சந்திரசேகரர், பிட்சாடனர் சன்னிதி, யாக சாலை, ஆகம நூலகம் போன்றவையும் இடம்பெற்றிருக்கும்.
    ஒருவர் பார்வை போல் மற்றொருவர் பார்வை அமையாது. ஒரு சிலரின் பார்வை தீங்கு விளைவிக்கும் விதத்தில் இருக்கும். இதனால் குழந்தைக்கு திருஷ்டி ஏற்படலாம்.
    அழகான சிறு குழந்தைகளை பார்த்தால் அதோடு பேச வேண்டும், அதைபார்த்து சிரிக்க வேண்டும். அதற்கு முத்தம் கொடுத்து கொஞ்ச வேண்டும் என்ற எண்ணம் எல்லோருக்கும் உருவாகும்.

    ஆனால் ஒருவர் பார்வை போல் மற்றொருவர் பார்வை அமையாது. ஒரு சிலரின் பார்வை தீங்கு விளைவிக்கும் விதத்தில் இருக்கும். இதனால் குழந்தைக்கு திருஷ்டி ஏற்படலாம். குழந்தை செழிப்போடும் சிறப்போடும் இருக்க வேண்டுமானால் தாய் தன் குழந்தைக்கு அலங்காரம் செய்யும் போது கன்னத்தில் கருப்பு பொட்டு வைக்க வேண்டும். மேலும் நெற்றியில் வைக்கும் பொட்டை லேசாக அழித்து விட வேண்டும்.

    அப்போது தான் மற்றவர்களின் கண் திருஷ்டி ஏற்படாது.
    ஆழ்வார்திருநகரியில் ஆதிநாதர் ஆழ்வார் கோவில் திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 11-ந்தேதியும், தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி 12-ந்தேதியும் நடைபெறுகிறது.
    தாமிரபரணி நதிக்கரையோரம் சிறப்புபெற்ற நவதிருப்பதி கோவில்களில் 9-வது தலமான ஆழ்வார்திருநகரி ஆதிநாதர் ஆழ்வார் கோவிலில் சித்திரை பிரம்மோற்சவ திருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது. கடந்த 2ஆண்டுகளாக கொரோனா தொற்று பரவல் காரணமாக பக்தர்கள் இன்றி விழா எளிமையாக நடத்தப்பட்டது.இந்த ஆண்டிற்கான சித்திரை பிரம்மோற்சவ திருவிழா கடந்த 3-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    திருவிழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி பொலிந்துநின்றபிரான் திருவீதி உலா வருதல் நடைபெற்று வருகிறது.  5-ஆம் திருவிழாவான நேற்று முன்தினம் இரவு 7 மணிக்கு கருடசேவை விமரிசையாக நடந்தது.

    சுவாமி பொலிந்து நின்றபிரான் கருட வாகனத்திலும், நம்மாழ்வார் அன்ன வாகனத்திலும் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். இதில் சுற்றுவட்டாரத்தில் இருந்து திரளான பக்தர்கள் குவிந்து சுவாமி தரிசனம் செய்தனர்.

    திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வருகின்ற 11-ந்தேதியும்(புதன்கிழமை), தாமிரபரணி நதியில் தீர்த்தவாரி 12-ந்தேதியும் (வியாழக்கிழமை) நடைபெறுகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் செயல்அலுவலர், தக்கார், உபயதாரர்கள் மற்றும் ஊா்மக்கள் செய்து வருகின்றனர்.
    அழகர்கோவிலில் உள்ள 18-ம் படி கருப்பணசாமி சன்னதியில் திருநிலை கதவுகளுக்கு பக்தர்கள் மாலைகள், சந்தனம் சாத்தி வணங்கினர்.
    அழகர்கோவிலில் உள்ள பிரசித்தி பெற்ற கள்ளழகர் கோவிலுக்கு நேற்று விடுமுறை நாள் என்பதால் ஏராளமான பக்தர்கள் வந்திருந்தனர். இதில் அழகர் மலை உச்சியில் உள்ள நூபுர கங்கையில் ஏராளமான பக்தர்கள் வந்து புனித நீராடி அங்குள்ள ராக்காயி அம்மனுக்கு தீபமேற்றி தரிசனம் செய்தனர்.

    வரும் வழியில் உள்ள முருகப் பெருமானின் ஆறாவது படைவீடு சோலைமலை முருகன் கோவிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் சென்று நெய் விளக்கேற்றி தரிசனம் செய்தனர்.மூலவர் வள்ளி, தெய்வானை சமேத சுப்பிரமணிய சுவாமி, வித்தகவிநாயகர், வேல்சன்னதியிலும் விசேஷ பூஜைகள், தீபாராதனைகள் நடந்தது.

    மேலும் அழகர்மலை அடிவாரத்தில் உள்ள உற்சவர் கள்ளழகர் பெருமாள், தேவியர்களுடன், சிறப்பு அலங்காரத்தில் காட்சி தந்தார். இங்கும் பக்தர்கள் விளக்கேற்றி தரிசனம் செய்தனர். காவல் தெய்வமான பதினெட்டாம் படி கருப்பணசுவாமி சன்னதியில் திருநிலை கதவுகளுக்கு பக்தர்கள் மாலைகள், சந்தனம் சாத்தி வணங்கினர். இந்த கோவில் வெளி பகுதியில் உள்ள கோட்டை வளாகத்தில் கருப்பணசாமி சன்னதி நோக்கி நேர்த்திகடனாக கிடாய்கள் வெட்டி, வழிபாடு செய்தனர்.
    பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து ஏழுமலையான் கோவில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    திருப்பதி, மே.9

    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கோடை விடுமுறையையொட்டி பக்தர்கள் அதிக அளவில் தரிசனத்திற்கு குவிந்து வருகின்றனர்.

    தரிசன டிக்கெட்டுகளை முன்பதிவு செய்தவர்கள் மட்டுமே திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதிக்கப்பட்டு வந்தனர். இந்த நிலையில் பக்தர்களின் எண்ணிக்கை அதிகரித்து உள்ளதால் பக்தர்கள் தரிசனம் டிக்கெட் இல்லாமல் அனுப்பி வருகின்றனர்.

    பக்தர்கள் தங்கள் ஆதார் அட்டையை காண்பித்து ஏழுமலையான் கோவில் வைகுண்டம் காத்திருப்பு மண்டபங்களில் தங்க வைக்கப்பட்டு பின்னர் தரிசனத்திற்கு அனுமதிக்கப்படுகின்றனர்.

    நேற்று காலை முதல் ஏழுமலையான் கோவில் வைகுண்டம் காம்ப்ளக்சில் உள்ள 25 அறைகளில் பக்தர்கள் காத்திருக்கின்றனர். இலவச தரிசனத்தில் 8 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர். ரூ.300 ஆன்லைன் தரிசன டிக்கெட் பெற்றவர்கள் தரிசனத்திற்கு 2 முதல் 3 மணி நேரமும் ஆனது.

    காத்திருப்பு அறைகளில் பக்தர்களுக்கு உணவு, பால், குடிநீர் உள்ளிட்டவை வழங்கப்பட்டு வருகிறது.

    காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை ஸ்ரீவாரி மெட்டு நடைபாதை வழியாக பக்தர்கள் செல்கின்றனர்.

    அலிபிரி, ஸ்ரீவாரிமெட்டு ஆகிய 2 பாதையில் பக்தர்கள் அதிகளவில் செல்கின்றனர். பக்தர்கள் வருகை அதிகரிப்பால் வாராந்திர சேவைகள் ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது.

    திருப்பதியில் நேற்று 75, 876 பேர் தரிசனம் செய்தனர். 32,164 பேர் முடி காணிக்கை செலுத்தினர்.ரூ.4.46 கோடி உண்டியலில் காணிக்கையாக வசூலானது.

    அகத்தியருக்கு, சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.
    வேதாரண்யம் வேதாரண்யேஸ்வரர் கோவில் மூர்த்தி, தலம், தீர்த்தம் ஆகிய மூன்றிலும் சிறப்புடையது. அகத்திய முனிவருக்கு சிவபெருமான் திருமணக் கோலத்தில் காட்சி தந்த இடம். வேதங்கள் பூஜை செய்து மூடிக்கிடந்த திருக்கதவை அப்பரும், சம்பந்தரும் தேவார பதிகங்கள் பாடி திறந்ததாக வரலாறு.

    இந்த கோவிலில் உள்ள சிவன்-பார்வதிக்கு ஆண்டுக்கு ஒருமுறை நடைபெறும் சிறப்பு அபிஷேகங்கள் நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை தொடர்ந்து  நேற்று திருக்கல்யாணம் தரிசனம் நடந்தது. இதை தொடர்ந்து அகத்தியருக்கு, சிவபெருமான் திருமணக்கோலத்தில் காட்சி அளிக்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் திண்டுக்கல் சிவபுர ஆதீனம் திருநாவுக்கரசர் கலந்து கொண்டு பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார்.

    மேலும் யாழ்ப்பாணம் வரணி ஆதீனம் செவ்வந்திநாதர் பண்டார சந்நிதி, கோவில் நிர்வாக அதிகாரி ஜெயச்சந்திரன் மற்றும் உபயதாரர்கள், திரளான பக்தர்கள்  கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ×