என் மலர்tooltip icon

    ஆன்மிகம் தலைப்புச்செய்திகள்

    அண்ணாமலையாரை தரிசனம் செய்பவர்கள் உண்ணாமலை அம்மனையும் தரிசனம் செய்தால் தான் பரிபூரண நிலையை பெற முடியும்.
    ஆதிபராசக்தியிடம் இருந்துதான் மும்மூர்த்திகளும் தோன்றினார்கள் என்பது புராணக் கதையாக உள்ளது. ஆதிபராசக்திதான் சிவனின் சரிபாதியாக விளங்குகிறார். கன்னியாகுமரியில் ஒற்றைக்காலில் நின்று தவம் செய்து சிவனை திருமணம் செய்ய விரும்பினார் என்பது உள்ளிட்ட பல திருவிளையாடல்கள் உள்ளன. பார்வதியை பாகம்பிரியாள் என்றும் கூறுவார்கள். எவரும் பெண் துணையின்றி சாதிக்க முடியாது என்பதை உணர்த்தவே சிவசக்தி வடிவம் கொண்டனர். இல்லறமே நல்லறம் என்பதை உலகுக்கு உணர்த்துவதே சிவசக்தி தத்துவமாகும்.

    ஒவ்வொரு ஆணுக்குள்ளும் ஒரு பெண்ணின் சக்தி உண்டு .அதேபோல் ஒவ்வொரு பெண்ணுக்குள்ளும் ஆணின் சக்தி உண்டு. துறவறம் செல்பவர்களும் தங்கள் தாய் மீது பற்று கொண்டு இருப்பார்கள். தாய் பாசத்தை எவரும் துறக்க முடியாது. அண்ணாமலையார் வீதி உலா வரும்போது உண்ணாமலை அம்மனும் உடன்வருவார். சிவனை ஒரு கணமும் பிரியாதவள் சக்தி என்பதே உண்மை. சிவம் தனியாக இருந்தாலும் ,சக்தி தனியாக இருந்தாலும் அவர்களுக்குள் இன்னொரு சக்தியும் குடிகொண்டிருக்கும் என்பதை மறக்கலாகாது.

    ஒருவரில் இன்னொருவரையும் காணலாம் என்பதற்கு இவர்களே சாட்சி. புராணக் கதைகளை தாண்டி சிவசக்தி ஒரு தம்பதியாகவே உலகை ஆட்சி புரிகின்றனர். தமிழகத்தில் சக்தி வழிபாடும் பிரசித்தி பெற்றது தெருக்கள் தோறும் மாரியம்மனாக சக்தியை வழிபட்டு வருகின்றனர். அண்ணாமலையாரை தரிசனம் செய்பவர்கள் உண்ணாமலை அம்மனையும் தரிசனம் செய்தால் தான் பரிபூரண நிலையை பெற முடியும். திருவண்ணாமலையில் அன்னதானம் அதிக அளவில் நடைபெற உண்ணாமலை அம்மன் அருளே காரணம் என்று பக்தர்கள் கூறுகின்றனர்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் மலைமேல் தாமிர கொப்பரையில் 400 கிலோ நெய், 100 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு மகா தீபம் ஏற்றப்படும்.
    திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 11-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவினை முன்னிட்டு உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு தினமும் சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரங்கள் செய்யப்பட்டு சுவாமி தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

    விழாவின் முக்கிய நிகழ்ச்சியாக முருகனுக்கு நேற்று மாலை பட்டாபிஷேக நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவின் சிகர நிகழ்ச்சியாக இன்று காலை உற்சவர் சன்னதியில் முருகன் தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள் அலங்காரங்கள் செய்யப்பட்டு திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்.

    வழக்கமாக தீபத்திருவிழாவின் போது காலையில் பக்தர்கள் வடம் பிடிக்க சிறிய சட்ட தேரோட்டம் நடைபெறும். தற்போது கொரோனா பரவலை தடுக்கும் வகையில் தேரோட்டம் ரத்து செய்யப்பட்டு அதற்கு பதிலாக முருகன் - தெய்வானையுடன் திருவாச்சி மண்டபத்தை வலம் வந்து பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

    அதனை தொடர்ந்து மாலை 6 மணிக்கு மூலவர் சுப்பிரமணிய சுவாமிக்கு பால தீபம் ஏற்றப்பட்டு, கோவில் மணி அடிக்கப்படும். அதன் தொடர்ச்சியாக மலைமேல் தாமிர கொப்பரையில் 400 கிலோ நெய், 100 மீட்டர் காடா துணி, 5 கிலோ கற்பூரம் கொண்டு மகா தீபம் ஏற்றப்படும்.

    இந்த நிகழ்ச்சிக்காக மலைமேல் பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் உபயதாரர்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

    மாலையில் ஏற்றப்படும் மகா தீபத்தை பார்வையிட்டு பொதுமக்கள் தங்கள் இல்லங்களில் தீபங்களை ஏற்றி சுவாமியை வழிபடுவார்கள். அதன் தொடர்ச்சியாக மாலை 6.30 மணிக்கு 16 கால் மண்டபம் அருகே சொக்கப்பனை கொளுத்தப்படும்.

    விழா ஏற்பாடுகளை கோவில் நிர்வாகம் செய்து வருகிறது.
    யாராவது நோய்வாய் பட்டாலோ, யாருக்காவது அகால மரணம் நேரிட்டாலோ ‘அவர்கள் பாவிகள்’ அதனால் தான் இந்த நிலை என மற்றவர்கள் முடிவு கட்டி விடுகிறார்கள்.
    லூக்கா 13 : 6..9

    “ஒருவர் தம் திராட்சைத் தோட்டத்தில் அத்திமரம் ஒன்றை நட்டு வைத்திருந்தார். அவர் வந்து அதில் கனியைத் தேடியபோது எதையும் காணவில்லை. எனவே அவர் தோட்டத் தொழிலாளரிடம், ‘பாரும், மூன்று ஆண்டுகளாக இந்த அத்தி மரத்தில் கனியைத் தேடி வருகிறேன்; எதையும் காணவில்லை. ஆகவே இதை வெட்டிவிடும். இடத்தை ஏன் அடைத்துக்கொண்டிருக்க வேண்டும்?’ என்றார். தொழிலாளர் மறுமொழியாக, ‘ஐயா, இந்த ஆண்டும் இதை விட்டுவையும்; நான் இதைச் சுற்றிலும் கொத்தி எருபோடுவேன். அடுத்த ஆண்டு கனி கொடுத்தால் சரி; இல்லையானால் இதை வெட்டிவிடலாம்’ என்று அவரிடம் கூறினார்.”

    இயேசு இந்த உவமையைக் கூறியதற்கு ஒரு சின்ன பின்னணி உண்டு. அவர் வாழந்த காலத்து யூத மக்களிடையே ஒரு நம்பிக்கை உண்டு. யாராவது நோய்வாய் பட்டாலோ, யாருக்காவது அகால மரணம் நேரிட்டாலோ ‘அவர்கள் பாவிகள்’ அதனால் தான் இந்த நிலை என மற்றவர்கள் முடிவு கட்டி விடுகிறார்கள்.

    தன்னை நீதிமான்களாக காட்டிக் கொள்பவர்கள் தான் உண்மையிலேயே பாவிகள். அவர்கள் மனம் திரும்ப வேண்டும். மனம் திரும்புதலின் கனியை அவர்கள் கொடுக்க வேண்டும் என்பதையே இயேசு இந்த உவமையின் மூலம் விளக்குகிறார்.

    திராட்சைத் தோட்டத்தில் அத்தி மரம் என்பதே அத்தி மரத்துக்குக் கிடைக்கும் மிகப்பெரிய வரம். திராட்சைத் தோட்டத்தின் வளங்களையெல்லாம் உறிஞ்சி எடுத்து வளர முடியும். ஏகப்பட்ட இடத்தையும் அதிகரிக்கும். அப்படிப்பட்ட ஒரு அத்தி மரம் கனி கொடுக்காவிட்டால் தோட்ட உரிமையாளருக்கு அதனால் பயன் என்ன ?

    இங்கே அத்தி மரம் என்பது யூதர்கள் அல்லாதவர்களுக்குக் கிடைக்கும் மீட்பின் வாய்ப்பு எனலாம். நம்மைப் போன்ற பிற இனத்து மக்கள், கிறிஸ்துவின் மந்தையில் இணைக்கப்பட்டவர்கள் அந்த அத்தி மரம் போன்றவர்கள்.

    தோட்ட உரிமையாளர் என்பவர் தந்தையாம் இறைவன். அவரே நம்மை நடுகிறவர். உயிர்களை அனுமதிப்பவர் அவரே. தோட்டக்காரர் மகனாகிய இயேசு கிறிஸ்து.

    அத்தி மரத்தில் கனி இருக்கிறதா என்று தேடிக் கொண்டு தந்தையாம் கடவுளே வருகிறார். கனி கொடுக்கும் காலம் வந்த பின்புதான் அவர் வருகிறார். அதுவும் தொடர்ச்சியாக மூன்று பருவங்கள் அவர் வருகிறார். கனிகள் காணப்படவில்லை. எனவே அதை வெட்டி விட முடிவெடுக்கிறார்.

    இங்கே. தமது மக்களின் மீது கடவுள் கொள்ளும் அன்பு வெளிப்படுகிறது. கனியைத் தேடி, தானே மனிதனைத் தேடி வரும் எதிர்பார்ப்பு நிறைந்த தந்தையாய் அவர் இருக்கிறார்.

    மகனாம் இயேசுகிறிஸ்து நமக்கும் கடவுளுக்குமிடையேயான இடைநிலையாளராய் இருக்கிறார். பரமனாகவும், பரிந்து பேசுபவராகவும் அவரே இருக்கிறார். அவர் தந்தையிடம் நமக்காகப் பரிந்து பேசி ‘இந்த ஆண்டும் இதை விட்டு வையுங்கள்’ என்கிறார்.

    இங்கே, இயேசுவின் அளவிட முடியாத அன்பு வெளிப்படுகிறது. இது வரை கனிதராத மரத்தையும் அன்பு செய்கிறார். அது இனியாகிலும் கனி தரும் என எதிர்பார்க்கிறார். அதற்காக ,’சுற்றிலும் கொத்தி எரு போடுவேன்’ என களமிறங்குகிறார்.

    இயேசு நாம் கனிகொடுக்க வேண்டுமென இடை விடாமல் பணி செய்கிறார். நாம் வாழ்கின்ற நிலத்தைப் பண்படுத்துகிறார். நாம் வரங்கள் உறிஞ்சும் மரமாய் இருக்க உரத்தை நிரப்புகிறார். ஒரு மரம் கனி கொடுக்க என்னென்ன தேவையோ அனைத்தையும் தொடர்ந்து செய்கிறார்.

    இப்போது கனி கொடுக்காமல் இருக்க நம்மிடம் சாக்குப் போக்கு எதுவும் இல்லை. நிலம் சரியில்லை, நீர் கிடைக்கவில்லை போன்ற சால்ஜாப்புகள் இனிமேல் சொல்ல முடியாது. அப்போதேனும் கனி கொடுக்கிறோமா ?

    கனி உடைய மரங்களைக் கண்டு பிடிப்பது எளிது. வாசனை காற்றில் மிதந்து வந்து நம்மை அழைக்கும். கனிகளின் வசீகரம் கண்ணில் தோன்றி நம்மை ஈர்க்கும். அல்லது பறவைகள் அந்த மரத்தின் தலையில் வட்டமிடும். கனி கொடுக்கும் வாழ்க்கை, மலை மேல் இருக்கும் ஊரைப் போன்றது. அது மறைவாய் இருக்க முடியாது.

    அப்படி எந்த அடையாளமும் இல்லாத வாழ்க்கையை நாம் வாழும் போது நம்மிடம் கனி இல்லை என்று பொருள். எனினும் தந்தை வந்து நம்மிடம் ‘ஒரு கனியாவது’ கிடைக்காதா எனும் ஏக்கத்தோடு தேடுகிறார். கிடைக்கவில்லை.

    இனிமேல் இதை வெட்டி விட வேண்டியது தான் என முடிவெடுக்கிறார் தந்தை. இறைவனின் வரங்களையும், அவரிடமிருந்து எல்லா நன்மைகளையும் பெற்று நாம் வளர்கிறோம். அத்தி மரம் போல எல்லா உரத்தையும், நீரையும், காற்றையும், ஒளியையும் வீணாக்குகிறோம். இலைகளையும், கிளைகளையும் கவனிக்கும் அவசரத்தில் கனிகளைப் பற்றிக் கவலைப்படாமல் இருந்து விடுகிறோம்.

    கனி கொடுக்காத வாழ்க்கை என்பது நமக்கு மட்டுமான இழப்பல்ல. சமூக இழப்பு. அத்தி மரம் திராட்சைச் செடிகளுக்கான உரத்தைத் தின்று கொழுக்கிறது. அத்தி மரம் இல்லாமல் இருந்திருந்தால் திராட்சையாவது சில கனிகளை அதிகமாய்க் கொடுத்திருக்கும். இப்போது அதுவும் இல்லை.

    அத்தி மரம் வெட்டப்படும் என்பது இந்த உவமை சொல்லும் முத்தாய்ப்புச் செய்தி. வாய்ப்புகள் தொடர்ந்து வழங்கப்பட்டுக் கொண்டே இருக்காது. வெட்டப்படும் நாள் ஒன்று உண்டு. இப்போது நடப்பவை கூடுதலாய்க் கிடைத்திருக்கும் காலம். கிருபையின் காலம். இந்த கிருபையின் நாட்களிலாவது கனி தராவிடில் மரம் தறிக்கப்படுவது நிச்சயம்.

    கனி கொடுத்தால் விண்ணக வாழ்வாகிய மீட்பு.
    கனி தர மறுத்தால் நெருப்பு நரகத்தில் அழிவு.

    நமது வாழ்க்கையை மறு பரிசீலனை செய்வோம். நமது வாழ்க்கை கனிதரும் வாழ்வாய் இருக்கிறதா ? நாம் கனிதர இறைமகனின் உதவியை நாடுகிறோமா ? நமது வாழ்க்கை இறைவனுக்கு ஏற்புடையதா இல்லை ஏமாற்றமுடையதா ? பிறரைத் தீர்ப்பிடும் மனநிலையிலிருந்து திருந்தியிருக்கிறோமா ? நம்மை நாமே ஆராய்கிறோமா ?

    சிந்திப்போம்.
    கனி தருவதே மரத்தின் பணி.
    கனி தராவிடில் வாழ்வேது இனி.

    கார்த்திகை திருநாளை முன்னிட்டு பவுர்ணமி தினமான நேற்று தஞ்சை பெரியகோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. எரிகின்ற சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக பக்தர்கள் வணங்கினர்.
    கார்த்திகை திருநாள் இன்று (வெள்ளிக்கிழமை) உற்சாகமாக கொண்டாடப்படுகிறது. வீடுகளில் பெண்கள் கோலமிட்டு அகல்விளக்குகளை ஏற்றி சாமிக்கு வெல்லம், அவல்பொரி படைத்து வழிபாடு செய்வார்கள். இதேபோல் கோவில்களிலும் அகல்விளக்குகள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடு நடைபெறும். கார்த்திகை திருநாளை முன்னிட்டு பவுர்ணமி தினமான நேற்று தஞ்சை பெரியகோவிலில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. முன்னதாக பெருவுடையார்- பெரியநாயகி அம்மன் சிறப்பு அலங்காரத்தில் கோவில் நுழைவு கோபுரவாசல் அருகே சொக்கப்பனை வைத்திருக்கும் இடத்தில் எழுந்தருளினர். அங்கு சிறப்பு ஆராதனை காண்பிக்கப்பட்டு, அந்த தீபச்சுடரால் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.

    எரிகின்ற சொக்கப்பனையை அக்னிமய லிங்கமாக பக்தர்கள் வணங்கினர். மேலும் சொக்கப்பனைக்குள் பட்டாசுகள் போடப்பட்டு இருந்ததால், அந்த பட்டாசுகளும் வெடித்தன. சொக்கப்பனை கொளுத்தி முடித்தபிறகு அந்த சாம்பலை பக்தர்கள் எடுத்து நெற்றியில் பூசிக் கொண்டனர். மேலும் அந்த சாம்பலை தங்கள் வீடுகளுக்கும் கொண்டு சென்றனர்.
    பரணி மகா தீபத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமி சன்னதி தெருவில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதிக்கு கொண்டு வந்து மகாருத்ர தீபம் எனும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.
    கார்த்திகை தீபத்திருவிழாவிற்கு முந்தைய நாள் பரணி நட்சத்திரத்தில் பரணி மகா தீபம் ஏற்றப்படும். அதன்படி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    சுவாமி நெல்லையப்பர் சன்னதி மகாமண்டபத்தில் அமைந்திருக்கும் நந்தி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த பரணி தீபத்திற்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. தொடர்ந்து மகா ஹோமங்கள் செய்து சுவாமி நெல்லையப்பருக்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது.

    பின்னர் சுவாமி மூலஸ்தானத்தில் இருந்து தீபம் எடுத்து வரப்பட்டு பரணி மகா தீபம் ஏற்றப்பட்டது. தொடர்ந்து தீபத்திற்கு சிறப்பு தீபாராதனையும் நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    இன்று (வெள்ளிக்கிழமை) கார்த்திகை தீபத்திருவிழாவையொட்டி, பரணி மகா தீபத்தை சிவாச்சாரியார்கள் தலையில் சுமந்தபடி ஊர்வலமாக எடுத்து வந்து, சுவாமி சன்னதி தெருவில் உள்ள சொக்கப்பனை முக்கு பகுதிக்கு கொண்டு வந்து மகாருத்ர தீபம் எனும் சொக்கப்பனை ஏற்றும் நிகழ்ச்சி நடைபெறும்.

    பாளையங்கோட்டை அழகிய மன்னர் ராஜகோபாலசுவாமி கோவிலில் திருக்கார்த்திகை உற்சவத்தையொட்டி நேற்று காலையில் ராஜகோபாலசாமி மற்றும் தாயாருக்கு சிறப்பு திருமஞ்சனமும், தீபாராதனையும் நடந்தது. மாலையில் கோவில் முழுவதும் 5,008 தீபம் ஏற்றப்பட்டது. இரவில் சொக்கப்பனை கொளுத்தப்பட்டது. இதேபோல் பெருமாள் கோவில்களில் நேற்று சொக்கப்பனை கொளுத்தப்பட்டது.
    அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞானத்தைத் தரவல்ல கார்த்திகை தீபத் திருவிழாவினை வீடுகளில் தீபம் ஏற்றியும், கோவில்களில் தீபம் ஏற்றியும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து நாம் கொண்டாடி, இறைவனின் இறையருளைப் பெற வேண்டுவோம்.
    தீப திருவிழா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது புகழ் மிக்க திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் தான். இங்கு தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

    முக்கிய திருவிழாவான மகாதீபம் ஏற்றும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிறது.

    இது குறித்து மயிலாப்பூரைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் கூறியதாவது:-

    கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காலம் கார் காலமாகும். இந்த காலத்தில் நடைபெறும் இந்த விழா, கார்காலத்தை முடித்து வைக்கும் விழாவாகவும் அமைகிறது.

    கார்த்திகை பவுர்ணமி திதி இன்று (நேற்று) வந்ததால் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் கோவில் எதிரில் சொக்கப்பனையும் ஏற்றப்பட்டது. வீடுகளை பொறுத்தவரையில் கார்த்திகை தீப விழாவையொட்டி, வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்துவிட்டு, 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 விளக்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது.

    இதன் மூலம் வாழ்க்கையில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். தீபவிழாவையொட்டி 27 விளக்கு ஏற்ற முடியாதவர்கள் 9 விளக்குகளை ஏற்றி பண்டிகையை கொண்டாடலாம்.

    மேன்மையான கார்த்திகைப் பண்டிகையை மன மகிழ்ச்சியுடன் விளக்கேற்றி, பொரி பொரித்து வழிபடுவது சிறப்பாகும். அன்புக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே இதன் தத்துவம். அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞானத்தைத் தரவல்ல கார்த்திகை தீபத் திருவிழாவினை வீடுகளில் தீபம் ஏற்றியும், கோவில்களில் தீபம் ஏற்றியும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து நாம் கொண்டாடி, இறைவனின் இறையருளைப் பெற வேண்டுவோம்.

    இவ்வாறு சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

    கார்த்திகை தீபத்திருநாளான இன்று மாலையில் விளக்கேற்றிய பிறகு, பூஜையறையில் சுவாமி படங்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டு, இந்த ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.
    கார்த்திகை தீபத்திருநாளான இன்று சிவ வழிபாடு செய்வோம். இன்று இல்லத்தையும் உள்ளத்தையும் தூய்மைப்படுத்தி, வீடு முழுக்க தீபங்கள் ஏற்றி வைப்பது வழக்கம். தீபத்தில் மகாலட்சுமி வாசம் செய்கிறாள் என்பது ஐதீகம். அப்போது விளக்கேற்றிய பிறகு, பூஜையறையில் சுவாமி படங்களுக்கு எதிரே அமர்ந்து கொண்டு, இந்த ஸ்லோகத்தைச் சொல்லவேண்டும்.

    தீபம் ஜோதி பரப்பிரம்மம்
    தீபம் சர்வ தமோபஹம்
    தீபனே சாத்யத சர்வம்
    சந்த்யா தீப நமோஸ்துதே!

    இந்த ஸ்லோகத்தை 108 முறை ஜபிப்பது விசேஷம். இயலாதவர்கள் 11 முறை அல்லது 9 முறை அல்லது மூன்று முறை எனச் சொல்லலாம். கார்த்திகை தீபத் திருநாளைக் கொண்டாடுங்கள். சிவபார்வதியை தம்பதி சமேதராக வணங்குங்கள். வாழ்வில் சகல ஐஸ்வரியங்களும் கிடைக்கும். வீடு மனை யோகம் கிடைக்கும். இழந்ததையெல்லாம் கிடைக்கப் பெறுவீர்கள். இன்னல்களில் இருந்து விடுபடுவீர்கள் என்பது உறுதி.
    தீபத்திருவிழாவின் 9-ம் நாளான நேற்று காலையில் கொட்டும் மழையில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) 2,668 அடி உயர மலை உச்சியில் மகா தீபம் ஏற்றப்படுகிறது.
    திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா நடைபெற்று வருகிறது. தினமும் கோவிலின் 5-ம் பிரகாரத்தில் காலையில் விநாயகர், சந்திரசேகரர் உலாவும், இரவில் பஞ்சமூர்த்திகள் உலாவும் நடக்கிறது.

    இந்த நிலையில் நேற்று கோவிலில் 9-ம் நாள் விழா நடைபெற்றது. விழாவை முன்னிட்டு நேற்று காலை சிறப்பு அலங்காரத்தில் விநாயகர், சந்திரசேகரர் உற்சவ உலா நடைபெற்றது.

    3-ம் பிரகாரத்தில் உள்ள திருக்கல்யாண மண்டபத்தில் இருந்து மேளதாளங்களுடன் வந்து 5-ம் பிரகாரத்தில் தயார் நிலையில் இருந்த வாகனத்தில் விநாயகரும், சந்திரசேகரரும் எழுந்தருளினர். அங்கு சாமிக்கு தீபாராதனை நடந்தது. முன்னதாக திருவண்ணாமலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் நேற்று முழுவதும் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையில் சாமி உற்சவ உலா கோவில் பிரகாரத்தில் நடைபெற்றது.

    நேற்று முன்தினம் மதியம் முதல் கோவிலில் பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய தடை விதிக்கப்பட்டதால் சாமி உலா பக்தர்களின்றி நடைபெற்றது.

    மேளதாளங்கள் முழங்க 5-ம் பிரகாரத்தில் சாமி உலா நடந்தது. இரவு 9 மணி அளவில் நடைபெற்ற உற்சவத்தில் பஞ்சமூர்த்திகளான விநாயகர், வள்ளி-தெய்வானையுடன் முருகர், உண்ணாமலை அம்மன் சமேத அருணாசலேஸ்வரர், பராசக்தி அம்மன், சண்டிகேஸ்வரர் ஆகிய சாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி 5-ம் பிரகாரத்தை சுற்றி உலா வந்தனர்.

    விழாவின் சிகர நிகழ்ச்சியான மகா தீப தரிசனம் இன்று (வெள்ளிக்கிழமை) நடக்கிறது. இதையொட்டி மகா தீபத்திற்கு பயன்படுத்தப்படும் தீப கொப்பரைக்கு நேற்று அதிகாலை 5.30 மணி அளவில் 4-ம் பிரகாரத்தில் உள்ள சின்ன நந்தி சிலை முன்பு வைத்து சிறப்பு பூஜை மற்றும் தீபாராதனை நடந்தது.

    பின்னர் அந்த கொப்பரை பக்தர்களால் 2,668 அடி உயரமுள்ள மலை உச்சிக்கு கொண்டு செல்லப்பட்டது. மகா தீபத்தையொட்டி நேற்று கோவிலில் கொடிமரம், தீப தரிசன மண்டபம், பலி பீடம், சாமி சன்னதி, அம்மன் சன்னதி உள்பட 20-க்கும் மேற்பட்ட இடங்களில் பெங்களூருவை சேர்ந்த ஆதித்யாராம் பவுண்டேசன் சார்பில் ரூ.15 லட்சம் மதிப்பில் பல்வேறு வகையான ரோஜா பூக்கள், அந்தூரியம் பூக்கள், அர்சிட், கார்னேசன், ஜிப்சோபிலா உள்ளிட்ட வண்ண மலர்களாலும், 14 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தாமரை பூக்கள் மற்றும் சோளம் போன்றவற்றினாலும் சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது.

    கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கையாக இன்று பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதி ரத்து செய்யப்பட்டு உள்ளது. மேலும் மாவட்ட நிர்வாகத்தினால் கிரிவலம் செல்லவும் தடை விதிக்கப்பட்டு உள்ளது.

    பாதுகாப்பு பணியில் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் நேற்று முன்தினம் முதல் திருவண்ணாமலை நகரில் ஈடுபட்டு வருகின்றனர். இதனால் கிரிவலப்பாதை, அருணாசலேஸ்வரர் கோவிலை சுற்றியுள்ள மாடவீதி மற்றும் திருவண்ணாமலை நகர பகுதியில் போலீசார் தொடர்ந்து ரோந்து பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    மேலும் கோவில் வளாகத்தில் ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த நிலையில் கொரோனா தொற்று பரவல் காரணமாக இந்த ஆண்டும் மகா தீபத்தை பக்தர்கள் மலையேறி சென்று தரிசனம் செய்ய தடை செய்யப்பட்டு உள்ளது.

    மலைக்கு பக்தர்கள் செல்வதை கண்காணிக்க சிறப்பு கமாண்டோ படையினர் 120 பேர் மலைப்பகுதியில் பாதுகாப்பு பணியில் ஈடுபடுகின்றனர்.

    வெளி மாநில மற்றும் மாவட்ட பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவதை தவிர்க்க வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுக்கப்பட்டு உள்ளது. வெளி மாவட்டம் மற்றும் மாநில பக்தர்கள் வருவதை கண்காணிக்க மாவட்ட எல்லைகள், முக்கிய சந்திப்பு பகுதிகள் மற்றும் திருவண்ணாமலை நகரில் பல்வேறு இடங்களில் போலீசார் மூலம் தடுப்புகள் அமைக்கப்பட்டு தொடர்ந்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    நேற்று பகலில் பலத்த மழை பெய்தது. கொட்டும் மழையை பொருட்படுத்தாமல் போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். வெளி மாவட்ட, மாநில எண் கொண்ட வாகனங்கள் வந்தால் அவற்றை திருவண்ணாமலை நகருக்குள் அனுமதிக்காமல் போலீசார் தடுத்து நிறுத்தி விசாரித்து அனுப்பினர். நேற்று முதல் திருவண்ணாமலையை சுற்றி 11 இடங்களில் தற்காலிக பஸ் நிலையங்கள் மற்றும் கார், வேன் போன்ற வாகனங்கள் நிறுத்தும் இடங்கள் ஏற்படுத்தப்பட்டு செயல்படுத்தப்பட்டது.
    கார்த்திகை பவுர்ணமியான இன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.
    பவுர்ணமி, அமாவாசை திதிகள் இறை வழிபாடு முன்னோர் வழிபாட்டிற்கு உரியது. முழு நிலவு நாளில் ஆலயங்களில் அற்புத திருவிழாக்கள் நடைபெறும். சித்திரை பவுர்ணமி தொடங்கி பங்குனி உத்திரம் வரை ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி நாளில் பல விஷேசங்கள் நடைபெறுகின்றன.

    கார்த்திகை மாத பவுர்ணமி நாளான இன்று விரதம் இருந்து வழிபாடு செய்வதால் பிரகாசமான எதிர்காலம் அமையும். கார்த்திகை பவுர்ணமி அன்று அம்மை மற்றும் அப்பனை நினைத்து மேற்கொள்ளும் இவ்விரத முறை உமாகமேஸ்வர விரதம் என்று அழைக்கப்படுகிறது. கார்த்திகை பவுர்ணமியான இன்று கிரிவலம் வருவது மிகவும் சிறப்பு வாய்ந்தது. கார்த்திகையில் கிரிவலம் வரும்பொழுது மழை பெய்ய நேரிட்டால், அந்த மழையில் நனைந்தால் தேவர்களின் ஆசி கிட்டும்.

    இன்றைய தினம் நாள் முழுவதும் உண்ணாமல் விரதம் இருந்து சிவபெருமானை நினைத்து பாடல்களை பாடி வழிபாடு செய்ய வேண்டும். நாள் முழுவதும் விரதம் இருக்க முடியாதவர்கள் ஒருவேளை மட்டும் உணவருந்தி விரதம் அனுஷ்டிக்கலாம். மாலையில் சிவன் கோவிலுக்கு சென்று நெய்தீபம் ஏற்றி வழிபாடு செய்த பின்னர் விரதத்தை நிறைவு செய்யலாம். 

    கார்த்திகை மாதம் கார்த்திகை நட்சத்திரமும் பவுர்ணமியும் சிறப்பானதாக கொண்டாடப்பபடுகிறது. கார்த்திகை மாதக் கிருத்திகை நட்சத்திரத்தில், மலையின் உச்சியில் விளக்கேற்றுவதுடன் இல்லங்கள்தோறும் ஏராளமான விளக்குகளை ஏற்றுகின்றனர். இது, சிவபெருமானைக் குறித்துக் கொண்டாடும் விழாவாகும். இதை, திருக்கார்த்திகை தீபம், அண்ணாமலையார் தீபம் என்று அழைக்கின்றனர்.
    கார்த்திகை தீபத்திருவிழாவை முன்னிட்டு திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் இன்று மாலை மகா தீபம் ஏற்றப்பட உள்ளது.
    திருவண்ணாமலை:

    நினைத்தாலே முக்தி தரும் திருத்தலம் திருவண்ணாமலை. சிவபெருமானின் பஞ்சபூத தலங்களுள் அக்னி தலமாக இது விளங்குகிறது.
     
    இங்குள்ள அண்ணாமலையார் கோவிலில் கார்த்திகை தீபத்திருவிழா கடந்த 10-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகிறது.

    இந்நிலையில், இன்று அதிகாலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் வளாகத்தில் பரணி தீபம் ஏற்றப்பட்டது.

    இதைத்தொடர்ந்து, இன்று மாலை 6 மணிக்கு அண்ணாமலையார் கோவில் பின்புறம் உள்ள 2,668 அடி உயரம் கொண்ட அண்ணாமலையார் மலையின் மீது மகாதீபம் ஏற்றப்பட உள்ளது. இதற்காக தீப கொப்பரைக்கு திறப்பு பூஜை நடத்தப்பட்டு 3,500 லிட்டர் நெய், ஆயிரம் மீட்டர் காடா துணிகள் மலைக்கு எடுத்துச் செல்லப்பட்டுள்ளன.

    நீதிமன்ற உத்தரவின்படி உள்ளூர் பக்தர்கள் 5 ஆயிரம் பேரும், வெளியூர் பக்தர்கள் 15 ஆயிரம் பேரும் கிரிவலம் செல்ல அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் கார்த்திகை மாத பவுர்ணமியை முன்னிட்டு நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது
    திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஒவ்வொரு மாதமும் பவுர்ணமி அன்று மாலை கருடசேவை (தங்க கருட வாகன வீதிஉலா) நடப்பது வழக்கம்.

    அதன்படி நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணியில் இருந்து இரவு 9 மணி வரை கருடசேவை நடக்கிறது. தங்கக் கருட வாகனத்தில் உற்சவர் மலையப்பசாமி சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி கோவிலின் நான்கு மாடவீதிகளில் உலா வந்து பக்தர்களுக்கு அருள் பாலிக்கிறார்.

    மேற்கண்ட தகவலை திருமலை-திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
    கார்த்திகை மாத பிறப்பையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் காந்திமதி அம்பாள் சன்னதியில் பள்ளியறையில் இருந்து தங்கப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார்.
    கார்த்திகை மாத பிறப்பையொட்டி நெல்லை டவுன் நெல்லையப்பர் கோவிலில் நேற்று அதிகாலை 5 மணிக்கு நடை திறக்கப்பட்டு சிறப்பு வழிபாடு நடந்தது. இதைத்தொடர்ந்து காந்திமதி அம்பாள் சன்னதியில் பள்ளியறையில் இருந்து தங்கப்பல்லக்கில் சுவாமி எழுந்தருளினார்.

    பின்னர் மேளதாளத்துடன், திருவனந்தல் வழிபாட்டுக் குழுவினரின் திருமுறையுடன் அழைத்துச் சென்று சுவாமி நெல்லையப்பர் சன்னதியில் வைத்து சிறப்பு பூஜை நடந்தது. இதைத்தொடர்ந்து கஜபூஜை, கோபூஜை நடந்தது. இதில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.
    ×