என் மலர்

  ஆன்மிகம்

  வீடுகள், கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாட்டம்
  X
  வீடுகள், கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாட்டம்

  வீடுகள், கோவில்களில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொண்டாட்டம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞானத்தைத் தரவல்ல கார்த்திகை தீபத் திருவிழாவினை வீடுகளில் தீபம் ஏற்றியும், கோவில்களில் தீபம் ஏற்றியும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து நாம் கொண்டாடி, இறைவனின் இறையருளைப் பெற வேண்டுவோம்.
  தீப திருவிழா என்றாலே அனைவருக்கும் ஞாபகம் வருவது புகழ் மிக்க திருவண்ணாமலை அருணாசலேசுவரர் கோவில் தான். இங்கு தீபத்திருவிழா கடந்த 10-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது.

  முக்கிய திருவிழாவான மகாதீபம் ஏற்றும் நிகழ்வு இன்று (வெள்ளிக்கிழமை) மாலை நடக்கிறது.

  இது குறித்து மயிலாப்பூரைச் சேர்ந்த சிவாச்சாரியார்கள் கூறியதாவது:-

  கார்த்திகை தீபம் ஏற்றப்படும் காலம் கார் காலமாகும். இந்த காலத்தில் நடைபெறும் இந்த விழா, கார்காலத்தை முடித்து வைக்கும் விழாவாகவும் அமைகிறது.

  கார்த்திகை பவுர்ணமி திதி இன்று (நேற்று) வந்ததால் மயிலாப்பூர் கபாலீசுவரர் கோவிலில் கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. அதேபோல் கோவில் எதிரில் சொக்கப்பனையும் ஏற்றப்பட்டது. வீடுகளை பொறுத்தவரையில் கார்த்திகை தீப விழாவையொட்டி, வீட்டை முழுமையாகச் சுத்தம் செய்துவிட்டு, 27 நட்சத்திரங்களைக் குறிக்கும் வகையில் 27 விளக்குகள் இன்று (வெள்ளிக்கிழமை) ஏற்றப்படுகிறது.

  இதன் மூலம் வாழ்க்கையில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும் என்பது நம்பிக்கையாகும். தீபவிழாவையொட்டி 27 விளக்கு ஏற்ற முடியாதவர்கள் 9 விளக்குகளை ஏற்றி பண்டிகையை கொண்டாடலாம்.

  மேன்மையான கார்த்திகைப் பண்டிகையை மன மகிழ்ச்சியுடன் விளக்கேற்றி, பொரி பொரித்து வழிபடுவது சிறப்பாகும். அன்புக்கு வசப்படும் இறைவன் பொரிக்குள்ளும் தோன்றுவான் என்பதே இதன் தத்துவம். அஞ்ஞானத்தைப் போக்கி, மெய்ஞானத்தைத் தரவல்ல கார்த்திகை தீபத் திருவிழாவினை வீடுகளில் தீபம் ஏற்றியும், கோவில்களில் தீபம் ஏற்றியும், சிறப்பு அபிஷேக, ஆராதனைகள் செய்து நாம் கொண்டாடி, இறைவனின் இறையருளைப் பெற வேண்டுவோம்.

  இவ்வாறு சிவாச்சாரியார்கள் தெரிவித்தனர்.

  Next Story
  ×