என் மலர்
கிறித்தவம்
பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான புனித அந்தோணியார் உருவ பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பாவூர்சத்திரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் ஊத்துமலை குரு வியான்னி ராஜ் திருப்பலி நடத்தினார். விழாவில் தினமும் சிறப்பு திருப்பலிகள் மறையுரை நடைபெற்றது.
மறையுரைகளை லாரன்ஸ் சகாயராஜ் பெர்னாட்ஷா இருதயசாமி ஸ்டேன் ஆகியோர் நடத்தினர். விழாவில் நேற்று முன்தினம் இரவு புனித அந்தோணியார் உருவ பவனி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழாவில் நேற்று காலை திருவிழா திருப்பலி கொடியிறக்கம் அசனவிருந்து நடைபெற்றது. ஏற்பாடுகளை பங்கு பணியாளர் அமிர்தராசா சுந்தர் அருட்சகோதரிகள் செய்திருந்தனர்.

திருச்சி சுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் மாலை நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
திருச்சி சுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நேற்று மாலை நடந்தது. முன்னதாக மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து கொடியேற்றப்பட்டது. எடமலைப்பட்டி புதூர் கார்மேல்சபை பாதிரியார் அமல்ராஜ் கொடியேற்றினார். இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து தினமும் மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலி நடைபெற உள்ளது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக வருகிற 15-ந்தேதி மாலை 6 மணிக்கு தேர்பவனி நடக்கிறது. 16-ந் தேதியுடன் விழா நிறைவடைகிறது. அன்றைய தினம் மாலை 6 மணிக்கு கொடியிறக்கம் நிகழ்ச்சி நடைபெற உள்ளது. விழாவுக்கான ஏற்பாடுகளை கோவில் பங்குதந்தை மற்றும் பணிக்குழுவினர் செய்துள்ளனர்.

திருச்சி மார்சிங்பேட்டை அர்ச். அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று இரவு நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி மார்சிங்பேட்டை அர்ச். அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. ஆலயத்தில் தொடர்ந்து தினமும் மாலையில் சிறப்பு திருப்பலி நடந்து வருகிறது.
இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று இரவு நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. தேர் ஆலயத்தில் இருந்து புறப்பட்டு மார்சிங்பேட்டை, கண்டோன்மென்ட், கோர்ட்டு, பீமநகர் வழியாக மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
இன்று (வியாழக்கிழமை) மாலை 6.30 மணி அளவில் உள் வீதி தேர்பவனி நடைபெற உள்ளது. நாளை (வெள்ளிக்கிழமை) இரவு 7 மணிக்கு அன்னதானம் நடைபெற உள்ளது. முன்னதாக தேர்பவனிக்கான ஏற்பாடுகளை ஆலய நிர்வாக குழுவினர் செய்திருந்தனர்.

மணிகண்டம் அருகே ஓலையூரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.
மணிகண்டம் அருகே ஓலையூரில் உள்ள புனித ஆரோக்கிய அன்னை ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அன்று மாலை ஆலய கொடிமரத்தில் ஆவூர் பங்குத்தந்தை டேவிட்ராஜ் கொடி ஏற்றி வைத்து திருப்பலி நடத்தினார். தொடர்ந்து ஒவ்வொரு நாளும் இரவில் நவநாள் திருப்பலி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதை முன்னிட்டு அன்று காலை பங்குத்தந்தை டேவிட்ராஜ் மறைமாவட்ட இளையோர் பணிக்குழு தலைவர் ரமேஷ் ஆகியோர் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடத்தினர். மாலையில் வண்ண மின் விளக்குகள் மற்றும் மலர் தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்கள் பவனி வந்தன. முதல் தேரில் சம்மனசு, 2-வது தேரில் சூசையப்பர், 3-வது தேரில் புனித ஆரோக்கிய அன்னை எழுந்தருளினர்.
தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்து மீண்டும் நிலையை அடைந்தது. இதைத்தொடர்ந்து இன்னிசை கச்சேரி, கலை நிகழ்ச்சி நடைபெற்றது. விழாவையொட்டி அன்னதானம் வழங்கப்பட்டது. இதில் பல்வேறு ஊர்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். பாதுகாப்பு பணியில் மணிகண்டம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் சூர்யா தலைமையில் ஏராளமான போலீசார் ஈடுபட்டனர்.

அன்பில் கிடைக்கும் சக்திக்கு நிகரான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவேயில்லை. எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும்.
நாம் வாழ்ந்து கொண்டிருக்கிற மிக அழகான, அன்புக்குரிய இந்த உலகம் அன்புக்காக ஏங்கி தவிக்கிறது. அன்பு செய்கின்ற மனிதர்களாலே, இவ்வுலகம் அழகானதாக உருமாறி நிற்கிறது. அன்பு மட்டுமே இவ்வுலகில் மாறாமல் இருக்கிறது. அன்பில் கிடைக்கும் சக்திக்கு நிகரான மருந்து இன்னும் கண்டுபிடிக்கப்படவேயில்லை. எங்கு அன்பு இருக்கிறதோ, அங்கு செல்வமும், வெற்றியும் இருக்கும்.
ஒருநாள் தனது ஐந்து வயது தங்கையை அழைத்து கொண்டு ஏழு வயது அண்ணன் கடைவீதி வழியாக நடந்து சென்று கொண்டிருந்தான். அப்போது அச்சிறுமி ஒரு கடையின் முன்னால் நின்று கொண்டு அங்கிருந்த மொம்மையை பார்த்து கொண்டிருந்தாள்.அப்போது அச்சிறுவன் எந்த பொம்மை வேண்டும் என கேட்டு கடையிலிருந்த ஒரு பொம்மையை எடுத்து கொடுக்கிறான். கடையின் முதலாளியிடம் இப்பொம்மையின் விலை என்னவென்று கேட்கிறான். உடனே முதலாளி உன்னிடம் என்ன இருக்கிறது என கேட்ட போது ஆறு சிப்பி இருக்கிறது என பதிலுரைத்தான்.
ஆறு சிப்பியினை எடுத்து கடைமுதலாளியிடம் கொடுத்தான். இப்பொம்மையின் விலை நான்கு சிப்பி தான் எனக்கூறி நான்கை பெற்று கொண்டு மீதி இரண்டை திரும்ப கொடுத்து விடுகிறார். இதனை வேடிக்கை பார்த்து கொண்டிருந்த வேலைக்காரன், 4 சிப்பியினை பெற்று கொண்டு மிக உயர்ந்த பொம்மையை கொடுத்து விட்டீர்களே என கேள்வி எழுப்புகிறான். உடனே முதலாளி அச்சிறுவனுக்கு பணம் கொடுத்தால் தான் பொம்மை கிடைக்கும் என்பதை புரியாத வயது, ஆதலால் பணம் தான் பெரியது என்ற சிந்தனை அவனது உள்ளத்தில் உருவாகாமல் தடுத்து விட்டேன்.
அவன் பெரியவனாகிற போது இச்சம்பவத்தை நினைத்து பார்த்தான் என்றால் இவ்வுலகம் நல்லவர்களால் ஆனது என்ற சிந்தனை அவனில் பிறப்பெடுக்கும். எல்லாரிடமும் அன்பு காட்டும் போது வாழ்வு அழகானதாக உருமாறும். அன்பு தான் இவ்வுலகத்தினை இயக்கிக்கொண்டு இருக்கின்றது என்பதனை உணர்ந்தவர்களாய் நாமும் வாழ முற்படுவோம்.
இன்றைய நாளில் எத்தனை மனிதர்களின் உள்ளத்தில் அன்பு மலர்வதற்கு நான் காராணமாக இருந்தேன் என்பதனை உணர்வோம். அன்பு ஒன்றே நிரந்தரம், அது வாழ்வில் ஆதாரம்.
அருட்பணியாளர் குருசு கார்மல்,
கோட்டார் மறைமாவட்டம்.

விவிலியத்தில் உள்ள முக்கியமான இறைவாக்கினர்களில் ஒருவர் எரேமியா. இருந்தாலும் இந்த நூல் எசாயா நூலைப் போல பிரபலமானதாகவோ, பிரியமானதாகவோ இல்லை.
விவிலியத்தில் உள்ள முக்கியமான இறைவாக்கினர்களில் ஒருவர் எரேமியா. இருந்தாலும் இந்த நூல் எசாயா நூலைப் போல பிரபலமானதாகவோ, பிரியமானதாகவோ இல்லை. காரணம் இதில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் அச்சுறுத்தலாகவோ, புரிந்து கொள்ளக் கடினமாகவோ, மன அழுத்தம் தரக்கூடியதாகவோ இருக்கின்றன என்பது தான்.
எரேமியா நூல் ஐம்பத்து இரண்டு அதிகாரங்கள் கொண்ட ஒரு பெரிய நூல். நாற்பது ஆண்டு கால இறைவாக்குரைத்தலின் தொகுப்பு இது. ஆங்கிலத்தில் ‘ஜெரமியட்’ என்றால் ‘துயரத்தின் பாடல்’ என்று பொருள்.
இந்த நூலும் ஒரு துயரத்தின் பாடலாய் தான் இருக்கிறது. எபிரேய மொழியில் ‘எரேமியா’ என்பது ‘கட்டியெழுப்பு’ என்றும் பொருள்படும், ‘உடைத்தெறி’ என்றும் பொருள்படும்.
அவருடைய இறை செய்தியும் அவரது பெயரைப் போலவே இருக்கிறது. “கீழ்ப்படிபவர்களை கடவுள் கட்டியெழுப்புவார், நிராகரிப்பவர்களை கீழே தள்ளுவார்” என்பதே அவரது இறைவாக்கின் மையம்.
இந்த நூலில் பல சுவாரசியங்கள் இருக்கின்றன. எரேமியாவின் நீண்ட பணிவாழ்வின் காரணமாக அவருடைய போதனைகளில் சில முரணாக மாறுகின்றன. உதாரணமாக பாபிலோனுக்கு எதிரான கடுமையான மனநிலை இவரது ஆரம்ப காலகட்டங்களில் இருந்தது. பிந்தைய காலகட்டங்களில் அவர் பாபிலோனுக்கு ஆதரவான நிலைப்பாட்டை எடுத்திருந்தார். அந்தந்த கால சூழலுக்கு ஏற்ப இவரது வாக்கை இறைவன் பயன்படுத்தியிருந்தார் என புரிந்து கொள்வதே சரியானது.
இவரது காலம் கி.மு. ஏழாம் நூற்றாண்டு. மனாசேவின் காலத்தில் இவர் பிறந்தார். மனாசே கொடூரமான மன்னன். தனக்கு எதிராக இறைவாக்கு உரைத்தார் எனும் காரணத்துக்காக இறைவாக்கினர் எசாயாவை படுகொலை செய்தவர். தனது சொந்தப் பிள்ளைகளையே நரபலி கொடுத்தவன். இவனது ஆட்சியில் தெருக்களெங்கும் ரத்த வாடை வீசியது. அந்த காலகட்டத்தில் பிறந்த எரேமியா, யூதாவில் முக்கியமான ஏழு மன்னர்களின் அரசாட்சியில் வாழ்ந்தார்.
எருசலேமிலிருந்து சுமார் ஐந்து கிலோமீட்டர் தொலைவில் இருந்தது இவரது பிறந்த ஊர். பிறக்கும் முன்பே இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்டவர் எரேமியா. தயக்கமும், கோழைத்தனமும், கூச்ச சுபாவமும் கொண்ட இளைஞனாகவே இவரது வாழ்க்கை இருந்தது. பதின் வயதுகளின் பிந்தைய காலகட்டத்தில் அவர் இறைவாக்குரைக்க ஆரம்பித்தார். இவருக்கு ‘அழும் இறைவாக்கினர்’ எனும் பெயருண்டு. மக்களுக்காக இதயத்தில் கடும் துயரை அனுபவித்தவர் அவர்.
அவரது காலம் கொஞ்சம் சிக்கலானது. வடக்கிலுள்ள இஸ்ரேல் நாடு அசீரியர்களின் கட்டுப்பாட்டில் வந்திருந்த காலம். யூதாவிலும் அத்தகைய ஒரு நிலை வரும் என்பதைக் கடைசியாக உரைத்த இறைவாக்கினர் இவர் தான். ஆபகூக்கு, செப்பனியா, எசேக்கியேல் மற்றும் தானியேல் போன்றவர்களின் காலத்தவர் இவர்.
குயவன் பானை செய்வதன் மூலமாக இறைவன் எரேமியாவுக்குச் சொன்ன ஆன்மிக பாடம் முக்கியமானது. கடவுள் அவரை குயவனின் இடத்துக்குப் போகச் சொன்னார். எரேமியா சென்று பார்த்தார். அங்கே குயவன் பானைகளைச் செய்து கொண்டிருந்தார். கையில் சரியாகச் சுழலாத மண் சரியான பானையாக மாறவில்லை. அதை மீண்டும் தரையில் போட்டார் குயவன்.
நல்ல பானை உருவாவதும், மோசமான பானை உருவாவதும் குயவனின் கையிலல்ல. மண்ணின் கையில் தான். மண் தன்னை குயவன் கைக்கு முழுமையாய் ஒப்புக் கொடுத்தால் மட்டுமே அழகான பானையாய் உருமாறும். அதுபோல இஸ்ரேல் மக்கள் தங்களை முழுமையாய் இறைவனின் கையில் ஒப்புக்கொடுக்க வேண்டும் என அவர் போதித்தார்.
அதே போல, சுடப்பட்ட பானை இறுகி விடுகிறது. அதைக் கீழே போட்டு உடைத்த எரேமியா அதன் மூலமும் ஒரு பாடத்தைச் சொன்னார். கடின இதயம் கொண்டவர்களை இறைவன் உடைத்தெறிவார் என்பதே அந்த பாடம்.
இஸ்ரேல் மக்களை இறைவன் கைகழுவி விடப்போகின்ற கடைசி நாட்களில் கூட ஒரு நம்பிக்கையின் ஒளியாய் அவரது எச்சரிக்கையும், அச்சுறுத்தலும், இறைவாக்கும் இருந்தது.
எரேமியாவின் எழுத்துகள் கவிதைகளாய் இருக்கின்றன. இறைவன் மக்களிடம் செய்திகளை உரைநடையாகவும், தனது இதயத்தின் உணர்வுகளைக் கவிதையாகவும் சொல்வது வழக்கம். எரேமியாவின் நூலிலும் அந்த அழகியலைக் காணலாம்.
இவரது நூலில் அழகிய நாடகத்தன்மையும் உண்டு. ஒரு முறை அழுக்கான உள்ளாடை ஒன்றை மண்ணில் புதைத்து வைத்தார். ஏன் என்று கேட்டபோது இது மக்களுடைய அக வாழ்க்கையைக் குறிக்கிறது என்றார். மக்களின் பாவ வாழ்க்கையை ‘பளிச்’ என விளக்க இத்தகைய நாடக பாணி போதனையைப் பின்பற்றினார்.
வெளிப்படையான ஆன்மிக வாழ்வு பயனற்றது எனவும், இறைவன் தனித் தனியே மக்களை நியாயம் விசாரிப்பார் எனவும், கடவுள் புதிய உடன்படிக்கையைத் தருவார் எனவும் அவர் சொன்ன இறை செய்திகள் அவரை மற்ற அனைத்து இறைவாக்கினர்களிடமிருந்தும் வேறு படுத்துகிறது.

இறைவனின் தன்மையையும், அன்பையும் ஆழமாகப் புரிந்து கொள்ள எரேமியா நூல் நமக்கு துணை செய்கிறது.
சேவியர்
கோவை புலியகுளத்தில் உள்ள புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு கோவை மட்டுமின்றி பிற மாவட்டங்களை சேர்ந்தவர்களும் வந்து பிரார்த்தனை செய்கின்றனர். இந்த ஆலயத்தின் தேர் திருவிழா ஆண்டுதோறும் நடைபெறும். இந்த ஆண்டு ஆடம்பர தேர்பவனி வருகிற 16-ந் தேதி நடக்கிறது.
இதையொட்டி நேற்று காலையில் புனித அந்தோணியார் ஆலயத்தில் கொடியேற்றம் நடைபெற்றது. கோவை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமை யில் காலை சிறப்பு கூட்டுத்திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்து கொண்டு பிரார்த்தனை செய்தனர்.
பின்னர் அந்தோணியார் உருவம் பொறிக்கப்பட்ட கொடியை முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்தனிஸ் மந்திரித்தார். இதையடுத்து கொடி ஆலயத்தை சுற்றிலும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டது. அப்போது பொதுமக்கள் கொடிமீது பூக்களை தூவி வழிபட்டனர்.
பின்னர் ஆலயம் முன்பு உள்ள கொடிமரத்தில் கொடி ஏற்றப்பட்டது. இதில் ஆலய பங்கு குரு ராயப்பன் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். மாலை 5.30 மணிக்கு போத்தனூர் பங்கு குரு ஜோசப் டேவிட் தலைமையில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
இன்று (திங்கட்கிழமை) தொடங்கி 12-ந் தேதி வரை நாள்தோறும் காலை மற்றும் மாலை நேரங்களில் திருப்பலி நடைபெறுகிறது. வருகிற 15-ந் தேதி காலை 8 மணிக்கு புதுநன்மை நிகழ்ச்சி கோவை மறைமாவட்ட ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடக்கிறது.
16-ந் தேதி காலை 8 மணிக்கு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி நடக்கிறது. அதைத்தொடர்ந்து மறை மாவட்ட பொருளாளர் ஜோ பிரான்சிஸ் தலைமையில் திருப்பலி நடைபெறும். அன்று மாலை ஆடம்பர தேர்பவனி நடக்கிறது.

திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சை மாவட்டம திருக்காட்டுப்பள்ளி அருகே பூண்டி மாதா பேராலயம் உள்ளது. பல்வேறு சிறப்பு பெற்ற இந்த பேராலயத்தில் புதுமை இரவு வழிபாடு நடைபெற்றது. சேலம் மறைமாவட்ட அருட்தந்தை கிருபாகரன் புதுமை இரவு நிகழ்வுகளை ஒழுங்கு செய்து நடத்தினார். முதலில் திருப்பலி நடைபெற்றது. இதை தொடர்ந்து பூண்டி மாதாவின் சொரூபத்துடன் பக்தர்கள் ஜெபமாலை பாடல்களுடன் தேர்பவனி நடந்தது. பின்னர் இரவில் நற்கருணை ஆராதனையுடன் ஜெபவழிபாடு நடைபெற்றது.
இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தைராஜ், உதவி பங்குத்தந்தையர்கள். ஜெயன், ஜேம்ஸ், ஆன்மிக தந்தை அருள் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

மணிகண்டம் அருகே சூரக்குடிப்பட்டியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நடைபெற்றது.
மணிகண்டம் அருகே சூரக்குடிப்பட்டியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலய திருவிழா கடந்த மாதம் 30-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் ஆலயத்தின் முன்புள்ள கொடிமரத்தில் நாகமங்கலம் பங்குத்தந்தை அல்போன்ஸ்ராஜ் பிரபு கொடியேற்றி வைத்து திருப்பலி நடத்தினார்.
இதைத்தொடர்ந்து ஆலயத்தில் ஒவ்வொரு நாளும் மாலை அருட்தந்தையர்கள் மறையுரை மற்றும் திருப்பலியாற்றினார்கள். விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதை முன்னிட்டு இரவில் ஆலயத்தில் பங்குத்தந்தை அல்போன்ஸ்ராஜ் பிரபு தலைமையில் திருவிழா சிறப்பு கூட்டுத்திருப்பலி நடந்தது. நள்ளிரவில் வண்ண மின் விளக்குகள், தோரணங்களால் அலங்கரிக்கப்பட்ட 3 தேர்களின் பவனி நடந்தது.
முதல் தேரில் உயிர்த்த ஏசு ஆண்டவரும், 2-வது தேரில் அந்தோணியாரும், 3-வது தேரில் மிக்கேல் அதிதூதரும் எழுந்தருளினர். பின்னர் வாணவேடிக்கை, மேளதாளம் முழங்க தேர்கள் முக்கிய வீதிகள் வழியாக பவனி வந்து, மீண்டும் நிலையை அடைந்தன.
இதில் நாகமங்கலம், மணிகண்டம், பாத்திமா நகர், யாகப்புடையான்பட்டி, ஆவூர், குன்னத்தூர் உள்பட பல்வேறு ஊர்களில் இருந்து திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை சூரக்குடிப்பட்டி, கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர். பாதுகாப்பு பணியில் மணிகண்டம் போலீசார் ஈடுபட்டனர்.

‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக் ‘கிறோம்’. (ரோமர் 8:28)
வானத்தை விரித்து, பூமியை பரப்பி, சமுத்திரத்தை நிலை நிறுத்திய சர்வ வல்லமையுள்ள தேவனாகிய கர்த்தர் பரலோகத்திலிருந்து மனிதனை பூமியிலே கண்ணோக்கி பார்க்கிறார். ஆனால் மனிதனோ, ‘தேவன் தன்னை பார்க்கவில்லை’ என்று நினைக்கிறான்.
‘அவருடைய பார்வைக்கு மறைவான சிருஷ்டி ஒன்றுமில்லை, சகலமும் அவருடைய கண்களுக்கு முன்பாக நிர்வாணமாயும் வெளியரங்கமாயுமிருக்கிறது, அவருக்கே நாம் கணக்கு ஒப்புவிக்கவேண்டும்’ (எபி.4:13).
மனுஷனுடைய வழிகள் இறைவனின் கண் களுக்கு முன்பாக இருக்கிறது. அவனுடைய வழிகள் எல்லாவற்றையும் அவர் சீர்தூக்கிப் பார்க்கிறார். அவருடைய பார்வைக்கு மறை வானது ஒன்றுமில்லை. உலகம் முழுவதும் அவர் பார்வைக்கு எல்லாமே வெளியரங்கமாய் இருக்கிறது.
தேவன் என்னை எப்பொழுதும் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற சிந்தையுடன் வாழவேண்டும். நாம் தனிப்பட்ட செயல்களில் தவறு செய்தால், அவர் பார்க்கவில்லை என்று நினைப்பது தவறு.
சங்கீதக்காரன் தாவீது சொல்லுகிறார், ‘நான் உட்கார்ந்தாலும், நடந்தாலும், படுத்திருந்தாலும் எல்லாமே நீர் அறிந்திருக்கிறீர். என் நினைவு களைத் தூரத்திலிருந்து அறிகிறீர். என் நாவில் சொல்பிறவாவதற்கு முன்னே அதையெல்லாம் நீர் அறிந்திருக்கிறீர். நமது வாழ்க்கையைப் பற்றிய கணக்கை அவருக்கு ஒப்புவிக்க வேண்டும். அவரை யாரும் ஏமாற்ற முடியாது’.
தீமைகள்
‘பிரியமானவனே, நீ தீமையானதைப் பின்பற்றாமல், நன்மையானதைப் பின்பற்று, நன்மை செய்கிறவன் தேவனால் உண்டாயிருக்கிறான், தீமை செய்கிறவன் தேவனைக் காணவில்லை’. (3 யோவா. 1:11)
நன்மைக்குத் தீமை செய்கிறவன் எவனோ அவன் வீட்டைவிட்டுத் தீமை நீங்காது. பிறருக் கு நன்மை செய்கிறவனை தேவன் பார்க்கிறார். தீமை செய்கிறவன் ஒருபோதும் தேவனை காணமாட்டான். தீமையை யோசிக்கிறவர்கள் தவறுகிறார்கள். நன்மையை யோசிக்கிறவர்கள் செழிப்பார்கள். துன்மார்க்கன் தன் தீமையிலே வீழ்ச்சி அடைவான். நன்மை செய்கிறவன் என்றென்றைக்கும் நிலைத்திருப்பான்.
மனுஷனின் இருதயம் தீமையினால் நிறைந் திருக்கிறது. புரட்டு நாவுள்ளவர்கள் தீமையில் விழுவார்கள். சுத்தமான நாவுள்ளவர்கள் உயர்ந்த இடத்தில் இருப்பார்கள். தீமையை வெறுப்பதே தேவனுக்கு பயப்படும் பயம். நன்மையை சிந்திப்பதே தேவனுக்கு பிரியம். தீமையை விட்டு விலகி நன்மையை செய்து சமாதானத்தைத் தேடி அதைத் தொடர்ந்து பற்றிக்கொள்.
நன்மைகள்
‘அன்றியும், அவருடைய தீர்மானத்தின்படி அழைக்கப்பட்டவர்களாய்த் தேவனிடத்தில் அன்புகூருகிறவர்களுக்குச் சகலமும் நன்மைக்கு ஏதுவாக நடக்கிறதென்று அறிந்திருக் ‘கிறோம்’. (ரோமர் 8:28)
நீ பிறருக்கு நன்மை செய்தால் உனக்கு மேன்மை உண்டு. நன்மை செய்கிறவன் சந்ததி பூமியைச் சுதந்தரித்துக் கொள்வார்கள். தெய்வத்தை தேடுகிறவர்களுக்கு ஒரு நன்மையும் குறைபடாது. உன் நிலத்தின் கனியிலும் பரிபூரண நன்மை உண்டாகக் கட்டளையிடுவார். மாறுபாடான இருதயமுள்ளவர்கள் நன்மையைக் கண்டடைவதில்லை.
உத்தமமாய் நடக்கிறவர்களுக்கு நன்மை செய்வார். நீதிமான்களுக்கோ நன்மை பலனாக வரும். இருதயத்தில் செம்மையானவர்களுக்கு நன்மைகள் பெருகும். நீங்கள் பிழைக்கும்படி நன்மையைத் தேடுங்கள். நீங்கள் தீமையை வெறுத்து நன்மையை விரும்புங்கள். உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்.
‘ஒவ்வொரு கிரியையையும், அந்தரங்கமான ஒவ்வொரு காரியத்தையும், நன்மையானாலும் தீமையானாலும், தேவன் நியாயத்திலே கொண்டு வருவார்’. (பிரசங்கி 12:14)
‘தேவனைத் தேடுகிற உணர்வுள்ளவன் உண்டோ’ என்று பார்க்க, கர்த்தர் பரலோகத்திலிருந்து மனுபுத்திரரைக் கண்ணோக்கி பார்த்தார். எல்லோரும் வழி விலகி ஏகமாய்க் கெட்டுப் போனார்கள். நன்மை செய்கிறவன் இல்லை. ஒருவனாகிலும் இல்லை. தேவன் நன்மை செய்கிற நீதிமானுடைய சந்ததியோடே இருக்கிறார்.
அவன் தீமைகள் அவன் சிரசின் மேல் திரும்பும். அவன் கொடுமை அவன் உச்சந்தலையின் மேல் இறங்கும். தன் பாவங்களை மறைக்காமல் அறிக்கைசெய்து தீமையை விட்டுவிலகினால் இரக்கம் பெறுவான்.
தேவன் மனுஷனை செம்மையானவனாக உண்டாக்கினார். அவர்களோ அநேக உபாய தந்திரங்களைத் தேடிக்கொண்டார்கள். உன் நெஞ்சின் வழிகளிலும், உன் கண்ணின் காட்சிகளிலும் நீ நடந்தாலும். எல்லாவற்றையும் தேவன் உன்னை நியாயத் தீர்ப்பிலே கொண்டு வருவார். நன்மை செய்கிறவர்கள் நித்திய ராஜ்ஜியத்திலே பிரவேசிப்பார்கள், ஆமென்.
ஆசீர்வாத சுவிசேஷ ஊழியம் சி.பூமணி, சென்னை-50.

மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
சின்னசேலம் அருகே உள்ள மேல்நாரியப்பனூரில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் பேராலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான பெருவிழா நேற்று முன்தினம் மாலை 6 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்கியது.
முன்னதாக கேரள மாநிலம் பாலக்காடு சுல்தான்பேட்டை மறைமாவட்ட ஆயர் பீட்டர் அபீர் தலைமையில் கூட்டுத்திருப்பலி நடந்தது. பின்னர் மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் புனித அந்தோணியாரின் உருவம் பொறிக்கப்பட்ட கொடி வைக்கப்பட்டு, முக்கிய வீதிகள் வழியாக பவனியாக கொண்டு செல்லப்பட்டது.
பவனியானது ஆலய வளாகத்தை வந்தடைந்ததும், அங்குள்ள 70 அடி உயரம் கொண்ட கொடிமரத்தில் கொடியேற்றப்பட்டது. இதில் மேல்நாரியப்பனூர் மற்றும் விழுப்புரம், கடலூர் மாவட்டத்தை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
தொடர்ந்து வருகிற 13-ந்தேதி வரை தினசரி காலை, மாலை நேரத்தில் கூட்டுத் திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனையும், இரவில் தேர்பவனியும் நடைபெற உள்ளது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி வருகிற 13-ந் தேதி இரவு 10 மணிக்கு புதுச்சேரி-கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் நடைபெற உள்ளது.
பின்னர் 14-ந் தேதி திருத்தல அதிபர் பால்ராஜ் தலைமையில் திருப்பலி நடத்தப்பட்டு கொடியிறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. இதற்கான ஏற்பாடுகளை அருட்தந்தையர்கள், அருட்சகோதரிகள், அருட்சகோதரர்கள், காரியக்காரர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் செய்து வருகின்றனர்.
மேல்நாரியப்பனூர் புனித அந்தோணியார் ஆலயத்திற்கு வரும் கிறிஸ்தவர்களின் வசதிக்காக 12 மற்றும் 13-ந் தேதி மட்டும் மேல்நாரியப்பனூர் ரெயில் நிலையத்தில் எக்ஸ்பிரஸ் ரெயில்களும் நின்று செல்லும். மேலும் கள்ளக்குறிச்சி, சின்னசேலம், விருத்தாசலம், ஆத்தூர் ஆகிய இடங்களில் இருந்து சிறப்பு பஸ்கள் இயக்கப்படுகிறது.

இன்பம்-துன்பம் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்பதை உணர்ந்திடுவோம். அதற்கேற்ப நமது வாழ்வினை அமைத்து கொள்வோம்.
மனித வாழ்வில் இன்பம், துன்பம் இரண்டும் இயல்பானவையே. எல்லா மனிதர்களுமே இன்பத்தையும், துன்பத்தையும் அனுபவித்து தான் வாழ்வில் வெற்றி பெற முடியும். இரண்டையும் சரிசமமாக அனுபவிக்க தெரிந்தவர்களே பிறருக்கு பயன் கொடுக்கிறவர்களாக மாறுகின்றனர். ஒரு வயதான விவசாயி மிகவும் கடினப்பட்டு உழைத்து அதில் கிடைக்கிற வருமானத்தை கொண்டு வாழ்ந்து வந்தார். அவரது வாழ்வுக்கு ஆதாரமாய் இருந்த குதிரை ஒன்று திடீரென காணாமல் போய் விட்டது. இதனை கேள்வியுற்ற அக்கம் பக்கத்தினர் வந்த விசாரித்தனர். பலர் ஆறுதல் கூறினர். ஆனால் எவ்விதத்திலும் கலக்கம் அடையாத விவசாயி முன்பு வாழ்ந்ததை போன்று தனது பணியினை செய்து கொண்டே இருந்தார்.
சிலநாட்கள் கடந்து காணாமல் போன குதிரை தன்னுடன் வேறு 3 குதிரைகளை அழைத்து கொண்டு விவசாயியின் வீட்டுக்கு வந்தது. இப்போது அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் உனக்கு 4 குதிரை கிடைத்து விட்டதே. நீ ராசிக்காரன் தான் என புகழ ஆரம்பித்தனர்.
நான்கு குதிரைகளை பார்த்த விவசாயியின் மகன், குதிரை சவாரிக்கு தயார் செய்து புறப்பட்டான். அப்போது ஏற்பட்ட திடீர் விபத்தில் கீழே விழுந்து கால்கள் உடைந்து போய்விட்டது. இதனை கேள்வியுற்ற அக்கம் பக்கத்தினர் உமக்கு ஒரு நல்லது நடந்தால், உடனே ஒரு தீமையும் நடக்கிறதே என கூறி ஆதங்கப்பட்டனர். இப்போதும் விவசாயி எதற்கும் கலங்காது இயல்வாகவே தனது பணியினை தொடர்ந்து கொண்டே இருந்தார்.
வாழ்வில் இயல்புகளை முழுமையாக புரிந்து கொண்டவர் விவசாயி. ஆதலால் தான் எல்லா சூழல்களிலும அவரால் இயல்பாக இருக்க முடிந்தது. நல்லது கெட்டது இரண்டையும் சரி சமமாக அணுக முடிந்தது. வாழ்வு என்பதும் ஒவ்வொரு நாளும் நமக்கு நேரடியாகவும், மறைமுகமாகவும் ஏராளமான வாழ்க்கை பாடங்களை கற்று கொடுத்து கொண்டே இருக்கிறது. இதனை மிக சரியாக புரிந்து கொண்டாலே வாழ்வினை சரியாக நம்மால் எதிர்கொள்ள முடியும். இன்பம்-துன்பம் இரண்டும் ஒன்றுக்கொன்று தொடர்பு உடையவை என்பதை உணர்ந்திடுவோம். அதற்கேற்ப நமது வாழ்வினை அமைத்து கொள்வோம்.
அருட்பணியாளர் குருசு கார்மல்
கோட்டார் மறைமாவட்டம்