என் மலர்
கிறித்தவம்
திருச்சி வரகனேரி புனித பதுவை அந்தோணியார் ஆலய 10 நாள் திருவிழா தொடங்கியது. இன்று முதல் வருகிற 11-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் அந்தோணியாரின் பக்தி முயற்சியும், சிறப்பு திருப்பலியும் நடைபெறும்.
திருச்சி வரகனேரியில் பிரசித்தி பெற்ற கோடி அற்புதர் புனித பதுவை அந்தோணியார் ஆலயம் உள்ளது. ஆண்டுதோறும் இந்த கோவில் திருவிழா 10 நாட்கள் வெகு விமரிசையாக நடத்தப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு 199-ம் ஆண்டு திருவிழாவாக நேற்று மாலை கொடியோற்றத்துடன் தொடங்கியது. அதன்படி இந்த விழா வருகிற 13-ந்தேதி வரை நடக்கிறது.
நேற்று மாலை 6 மணிக்கு திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமியால் புனிதரின் கொடியேற்றமும், அதனைத்தொடர்ந்து சிறப்பு கூட்டு பாடல் திருப்பலியும் நடந்தது. இன்று (5-ந்தேதி) முதல் வருகிற 11-ந்தேதி வரை ஒவ்வொரு நாளும் மாலை 6.30 மணிக்கு அந்தோணியாரின் பக்தி முயற்சியும், 7 மணிக்கு சிறப்பு திருப்பலியும் நடைபெறும்.
வருகிற 12-ந்தேதி மாலை 6 மணிக்கு சிறப்பு திருப்பலியும், அதனைத்தொடர்ந்து ஆடம்பர உள்வீதி தேர் பவனியும் நடைபெறுகிறது. 13-ந்தேதி பாளையங்கோட்டை முன்னாள் மறைமாவட்ட ஆயர் ஜூட்ஜெரால்டு பால்ராஜ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலியும், அதனைத் தொடர்ந்து ஆடம்பர வெளி வீதி தேர்பவனியும் நடைபெறுகிறது.
14-ந்தேதி மதியம் 12 மணிக்கு அன்னதான திருப்பலியும், மாபெரும் அன்னதானமும் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை தெரு நிர்வாகம் சார்பில் தலைவர் முத்தப்பன், துணைத் தலைவர் பல்த்தசார், செயலாளர் பாபு பெர்னான்டஸ், துணைச் செயலாளர் கஸ்பர் ரீகன், பொருளாளர் பிராங்கிளின் ராஜேஸ், துணைப்பொருளா ளர் ஆரோக்கியராஜ், உப தேசியார் ஜோசப், சாமுவேல் மற்றும் தெரு மக்கள், செயற்குழு, புனித பதுவை அன்பியம், அன்னை தெரசாள் அன்பியம், நம்பிக்கை, மாதா மரியாயின் சேனை, விழாக்குழுவினர்கள் ஆகியோர் சிறப்பாக செய்து வருகிறார்கள்.

கல்லக்குடியில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் இந்தாண்டுக்கான திருவிழா நடந்தது. இதில் திராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கல்லக்குடியில் உள்ள புனித சவேரியார் ஆலயத்தில் ஆண்டுதோறும் மே மாதம் திருவிழா நடைபெறுவது வழக்கம். அதேபோல் இந்தாண்டும் திருவிழா நடந்தது.
இந்நிலையில் மழை வேண்டியும், உலக நன்மைக்காகவும் கிராம மக்கள் சார்பில் புனித சவேரியார் ஆலயத்தில் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. தொடர்ந்து கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாக மாதா சொரூபம் தாங்கிய வேண்டுதல் சப்பர பவனி நடைபெற்றது. இதில் கல்லக்குடி, பளிங்காநத்தம், முதுவத்தூர், மேலரசூர், வரகுப்பை பகுதிகளில் இருந்து ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை அடைக்கலராஜ், கிராம பட்டையதாரர்கள், லயன் சங்க தலைவர் ஜான் மற்றும் பொதுமக்கள் செய்திருந்தனர்.

பெரிய இறைவாக்கினர்களில் முதலானவர் என அழைக்கப்படும் எசாயா நூலை அதன் இறைத் தன்மைக்காகவும், நிலைத் தன்மைக்காகவும், இலக்கியத் தன்மைக்காகவும் வாசிக்கலாம்.
விவிலியத்தில் உள்ள நூல்களில் மிக முக்கியமான தீர்க்க தரிசன நூல் எசாயா நூல் தான். 1948 -ல் சாக்கடல் சுருள்கள் கண்டுபிடிக்கப்பட்ட போது கிடைத்த நூல்களில் எசாயா நூலின் பதிப்பு ஒன்றும் இருந்தது. அது கி.மு. 100-ம் ஆண்டைச் சேர்ந்தது. விவிலியத்தில் இடம்பெற்றுள்ள எசாயா நூலிலிருந்து அது வேறுபடாமல் இருந்தது நூலின் நம்பகத்தன்மையை உறுதியாக்கியிருக்கிறது.
எசாயா நூலைப் பிரித்திருப்பதிலும் ஒரு சுவாரசியம் உண்டு. நூலில் 66 அதிகாரங்கள் உண்டு. விவிலியத்தில் உள்ள மொத்த நூல்களின் எண்ணிக்கையும் 66. (இணை திருமறைகள் தவிர). அந்த அதிகாரங்களும் இரண்டு பெரும் பிரிவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளன. முதல் 39 அதிகாரங்கள் ஒரு பிரிவு, அடுத்த 27 அதிகாரங்கள் இரண்டாவது பிரிவு. சுவாரசியம் என்னவென்பது புரிந்திருக்கும். பழைய ஏற்பாட்டு நூல்கள் 39, புதிய ஏற்பாட்டு நூல்கள் 27 என்பது இந்த அதிகாரங்களின் எண்ணிக்கைகளோடு ஒத்துப்போகிறது.
அது வெறும் எண்ணிக்கைக் கணக்கோடு முடியவில்லை. முதல் முப்பத்தொன்பது அதிகாரங்களில் பழைய ஏற்பாட்டின் சாராம்சத்தையும் அடுத்த இருபத்தேழு அதிகாரங்களில் புதிய ஏற்பாட்டின் சாராம்சத்தையும் நாம் கண்டுகொள்ளலாம். அதிலும் குறிப்பாக ‘குரலொளி ஒன்று முழங்குகின்றது; பாலைநிலத்தில் ஆண்டவருக்காக வழியை ஆயத்தமாக்குங்கள்’ எனும் வார்த்தையோடு இரண்டாவது பாகம் தொடங்குவது வியப்பு. அது புதிய ஏற்பாட்டில் இயேசுவை வரவேற்க யோவான் கூறிய வார்த்தைகள் என்பது குறிப்பிடத்தக்கது.
சுருக்கமாகச் சொல்லவேண்டுமெனில், ஒட்டு மொத்த பைபிளின் ஒரு சுருங்கிய வடிவமாக இந்த நூலைச் சொல்லலாம். கி.மு. 740 -க்கும் 680- க்கும் இடைப்பட்ட காலத்தில் அவர் பணி செய்தார். இவரை ‘மெசியானிக் இறைவாக்கினர்’, ‘பழைய ஏற்பாட்டின் பவுல்’, ‘இறைவாக்கினர்களின் ஷேக்ஸ்பியர்’ என்றெல்லாம் புகழ்வதுண்டு.
மிகவும் அழகான இலக்கியத்தரத்தோடும், கவிநயத்தோடும் எழுதப்பட்ட நூல் எசாயா. ஆன்மிகச் செறிவும், அழகியலும் கலந்த நூல் இது. இந்த நூலில் 1292 வசனங்களும், 37,044 வார்த்தைகளும் இடம்பெற்றுள்ளன.
‘எசாயா’ எனும் பெயருக்கு ‘கடவுள் மீட்கிறார்’ என்பது பொருள். இயேசு, யோசுவா என்ற பெயர்களைப் போலவே பொருளுடைய பெயர் இது. யூதர்கள், மோசே, எலியா போன்றோரோடு எசாயாவையும் இணைத்துப் பார்க்கின்றனர்.
“இவர் நல்ல ஆன்மிகப் பெற்றோரின் மகனாகப் பிறந்தவர். யோவாஸ் மன்னனின் பேரன். உசியாவின் உடன்பிறவா சகோதரன். நல்ல செல்வமும், படிப்பும், புகழும் உடையவர். ஆன்மிகத்தில் ஆழமாய் இருந்தவர்” என்றெல்லாம் இவரைப்பற்றி வரலாற்றாசிரியர் ஜோசபஸ் குறிப்பிடுகிறார்.
இவரது மனைவியும் ஒரு இறைவாக்கினராய் வாழ்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு இரண்டு அல்லது மூன்று பிள்ளைகள் இருந்திருக்கலாம் என்பது வரலாறு. இறைவனின் புனிதத்தன்மையைப் பார்த்தபின் அவரால் தனது அழுக்குகளை பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை. உதடுகளை சூடுவைத்துக் கொண்டவர் இவர்.
“யாரை நான் அனுப்புவேன்? நமது பணிக்காக யார் போவார்” என பேசும் இறைவார்த்தையின் மூலமாக இறைவனின் “மூவொரு தன்மை”யை வெளிப்படுத்தியவர் எசாயா. இறைமகன் இயேசுவின் பிறப்பும், அவரது வாழ்வு, மரணமும் இவரது நூலில் அழகாக வெளிப்படுகிறது.
எசாயாவின் காலத்தில் பல முக்கியமான மன்னர்கள் ஆட்சி செலுத்தினார்கள். அவர்களுக்கெல்லாம் இறைவனின் செய்தியையும், எச்சரிக்கையையும் எசாயா வழங்கினார்.
உசியா மன்னன் 52 ஆண்டுகள் ஆட்சி செலுத்தினார். நல்லமுறையில் ஆட்சியைத் தொடங்கிய அவர் பின்னர் வழி விலகிப் போனார். யோத்தாம் பத்தொன்பது ஆண்டுகள் ஆண்டார். நல்லவராக இருந்த மன்னர்களில் ஒருவர் இவர். ஆகாஸ் இருபது ஆண்டுகள் மோசமான ஆட்சியை நடத்தினார். எசேக்கியா நல்ல ஆட்சியை இருபத்தொன்பது ஆண்டுகள் கொடுத்தவர். மனாசே ஐம்பத்து இரண்டு ஆண்டுகள் மோசமான ஆட்சியை வழங்கினார்.
இவர்கள் எல்லோருடைய காலத்திலும் எசாயா வாழ்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இவருடைய நூலின் முதல் பாகமும் இரண்டாம் பாகமும் மிகப்பெரிய வேறுபாட்டைக் கொண்டிருக்கிறது. சிலர் இதை இரண்டாம் எசாயா எழுதினார் என்று கூட சொல்வதுண்டு.
உதாரணமாக முதல்பாகம் அதிகமான கெட்ட செய்தியைச் சொல்கிறது, இரண்டாம் பாகம் நல்ல செய்திகளை அதிகமாய் பேசுகிறது. முதலாவது பாவம், பழிவாங்குதல் போன்றவற்றைப் பேசுகிறது. இரண்டாவது மீட்பையும், காப்பாற்றுதலையும் பேசுகிறது. முந்தையது நீதியையும், அடுத்தது இரக்கத்தையும் பேசுகிறது. முந்தையது யூதர்களையும் பிந்தையது பிற இனத்தாரையும் பேசுகிறது. முந்தையது நிகழ்காலத்தையும், பிந்தையது எதிர்காலத்தையும் பேசுகிறது. இப்படி அடுக்கிக் கொண்டே போகலாம்.
எசாயா நீண்டகாலம் வாழ்ந்தார் என்பதும், பல காலகட்டங்களில் வாழ்ந்தார் என்பதும், பலவகையான சூழல்களில் அவர் இறைவாக்குரைத்தார் என்பதும் தான் இந்த நூலின் பன்முகத் தன்மைக்குக் காரணம். இறைவனின் தெளிவான வெளிப்பாடை இவர் பெற்றிருந்தார் என்பதற்கு கடைசி இருபத்தேழு அதிகாரங்கள் மிகச் சிறந்த சான்று.
பெரிய இறைவாக்கினர்களில் முதலானவர் என அழைக்கப்படும் எசாயா நூலை அதன் இறைத் தன்மைக்காகவும், நிலைத் தன்மைக்காகவும், இலக்கியத் தன்மைக்காகவும் வாசிக்கலாம்.
சேவியர்

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது.
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா நாளை (செவ்வாய்க்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கி 10 நாட்கள் நடக்கிறது. விழாவில் நாளை மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, தட்டு சப்பரபவனி, தொடர்ந்து தூத்துக்குடி ஆயர் இல்ல அருட்பணியாளர் கிறிஸ்டியான் தலைமை தாங்கி கொடியேற்றி வைத்து மறையுரையாற்றுகிறார்.
விழா நாட்களில் தினமும் அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, மாலை 6.30 மணிக்கு ஜெபமாலை, மறையுரை, நற்கருணை ஆசீர், இரவு 9 மணிக்கு கலை நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது.
11-ந்தேதி காலை 8 மணிக்கு அருட்பணியாளர் ஜெபநாதன் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி, இரவு 7 மணிக்கு வடக்கன்குளம் வட்டார முதன்மை அருட்பணியாளர் ஜாண்பிரிட்டோ தலைமையில் நற்கருணை பவனி, 12-ந்தேதி இரவு 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் தலைமையில் திருவிழா மாலை ஆராதனை, இரவு 9.30 மணிக்கு தேர் பவனி, 13-ந்தேதி அதிகாலை 5 மணிக்கு பாளையங்கோட்டை அருட்பணியாளர் டெரன்ஸ் தலைமையில் திருவிழா கூட்டுத்திருப்பலி, காலை 7 மணிக்கு அழகப்பபுரம் அருட்பணியாளர்கள் கலந்து கொள்ளும் திருப்பலி, மதியம் 2 மணிக்கு தேர்பவனி, இரவு 8.30 மணிக்கு தேரில் நற்கருணை ஆசீர் ஆகியவை நடக்கிறது.
விழாவுக்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ், உதவி பங்குத்தந்தை ஜெய ஆன்ரோ சர்ச்சில், பங்கு பேரவை துணை தலைவர் சேவியர் மணி, செயலாளர் பாண்டியன், பொருளாளர் செல்லத்துரை, இணை செயலாளர் கீவன்மேரி மற்றும் நிதிக்குழு, செயற்குழு உறுப்பினர்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் ஆகியோர் செய்து வருகிறார்கள்.

புள்ளம்பாடி ஒன்றியம் புதூர்பாளையம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயத்தில் நவநாள் திருப்பலியும், வேண்டுதல் சப்பர பவனியும் நடைபெற்றது.
புள்ளம்பாடி ஒன்றியம் புதூர்பாளையம் கிராமத்தில் புனித சவேரியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலய திருவிழா கடந்த 25-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.
தொடர்ந்து தினமும் மாலையில் நவநாள் திருப்பலியும், வேண்டுதல் சப்பர பவனியும் நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மாதா, சவேரியார், சம்மனசுமேரி சொரூபங்கள் தாங்கிய ஆடம்பர சப்பர பவனி நடைபெற்றது. இதில், திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டு சிறப்பு பிரார்த்தனை செய்தனர்.
முன்னதாக விழாவையொட்டி ஆலயம் முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. இரவில் இன்னிசை கச்சேரியும், வாணவேடிக்கைகளும் நடைபெற்றன. விழாவிற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குத்தந்தை தங்கசாமி மற்றும் சவேரியார் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்திருந்தனர்.

எறையூர் புனித ஜெபமாலை அன்னை ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
உளுந்தூர்பேட்டை அருகே உள்ள எறையூரில் பழமை வாய்ந்த புனித ஜெபமாலை அன்னை ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி 49-வது ஆண்டு பெருவிழா கடந்த 21-ந் தேதி இரவு 8 மணிக்கு அரசக்குழி பங்குதந்தை அல்போன்ஸ் தலைமையில் கூட்டு திருப்பலி மற்றும் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
இதையடுத்து தினசரி காலை, மாலை நேரத்தில் ஆலயத்தில் கூட்டு திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வந்தது. மேலும் தினந்தோறும் இரவில் தேர்பவனி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி மாலையில் கூட்டு திருப்பலி நடந்தது. பின்னர் இரவு 11 மணிக்கு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் புனித ஜெபமாலை அன்னை, குழந்தை ஏசு, அந்தோணியார் உள்ளிட்ட சொரூபங்கள் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து ஆடம்பர தேர்பவனி நடந்தது. பவனியானது எறையூர் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதையடுத்து நேற்று காலை கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைந்தது. இதில் எறையூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை ஆலய பங்குதந்தை மற்றும் கிறிஸ்தவர்கள் செய்திருந்தனர். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜெயக்குமார் தலைமையிலான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர்.

வேளாங்கண்ணியில் அன்னை மரியாவுக்கு முடிசூட்டு விழா நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் அமைந்துள்ளது. கீழை நாடுகளின் “லூர்து நகர்” என அழைக்கப்படும் இந்த தலத்திற்கு தினமும் தமிழ்நாடு மட்டுமின்றி பல்வேறு பகுதிகளில் இருந்தும் எண்ணற்ற பேர் வருகின்றனர். கிறிஸ்துவ ஆலயத்துக்கு மிக அரிதாக கிடைக்கக்கூடிய பசிலிக்கா என்ற பெருமை இந்த தலத்திற்கு உண்டு.
மே மாதம் மாதாவின் வணக்க நாளாக ஆண்டுதோறும் கொண்டாடப்படுவது வழக்கம். இந்த ஆண்டுக்கான வணக்க நாள் கடந்த மாதம் 1-ந் தேதி தொடங்கி நடைபெற்றது. விண்ணக அரசியாக முடி சூட்டப்பட்டதை நினைவூட்டும் வகையில் இந்த நிகழ்ச்சி மாதா கோவிலில் நடைபெற்றது.
விழா நாட்களில் மாதாவின் கருணையை வெளிப்படுத்தும் வகையில் சிறப்பு சிந்தனை நிகழ்ச்சியும், தேர் பவனி மற்றும் சிறப்பு திருப்பலி உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. தொடர்ந்து அன்னை மரியாவுக்கு முடி சூட்டு விழா நேற்று முன்தினம் நடைபெற்றது. முன்னதாக தஞ்சை மறை மாவட்ட ஆயர் தேவதாஸ் அம்புரோஸ் தலைமையில் சிறப்பு கூட்டு திருப்பலி நடைபெற்றது.
திருப்பலியின் முடிவில் மாதாவின் மணிமுடி ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டு, தேருக்கு எழுந்தருளிய அன்னை மரியாவுக்கு முடி சூட்டப்பட்டது. பின்னர் தேர் பவனி நடைபெற்றது.
தேர் பவனி மாதாக்குளத்தில் இருந்து சிலுவை பாதை வழியாக சென்று கீழக்கோவிலை வந்தடைந்தது. விழாவில் பேராலய அதிபர் பிரபாகர், பங்குதந்தை சூசைமாணிக்கம், பொருளாளர் யாகப்பா ராஜரத்தினம், உதவி பங்கு தந்தைகள் ஆண்டோ ஜேசுராஜ், டேவிட் தன்ராஜ் மற்றும் அருள்தந்தையர்கள், சகோதரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

‘அன்பு’ என்பது ஒரு வார்த்தையில் மட்டும் அடக்கிவிடக்கூடிய ஒன்றல்ல. நான் எல்லோரிடமும் அன்பாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியும் மக்களை பார்த்திருக்கிறோம்.
‘அன்பின்றி அமையாது உலகு’ என்ற வாசகம் அனைவரும் அறிந்ததே. இவ்வுலகில் அன்பில்லை என்றால் வாழ்வதற்கு ஒரு சுவராசியமும் இருக்காது.
‘அன்பு’ என்பது ஒரு வார்த்தையில் மட்டும் அடக்கிவிடக்கூடிய ஒன்றல்ல. நான் எல்லோரிடமும் அன்பாக இருக்கிறேன் என்று சொல்லிக்கொண்டு திரியும் மக்களை பார்த்திருக்கிறோம்.
உண்மையில் அவர்களின் உள்ளத்தில் அன்பின் வெளிப்பாடு இல்லையேல் ஒரு பயனும் இல்லை. அயலானிடம் இரக்கம் காட்டுபவன் தான் உண்மையான அன்புடையவன். அன்பின் வெளிப்பாடே இரக்கம். அதை நாம் அறிந்துகொள்ளவும் உணரவும் முடியும்.
“இறக்கத்தான் பிறந்தோம், அது வரை இரக்கத்தோடு இருப்போம்” என்று அன்னை தெரசா தனது வார்த்தையின் படி வாழ்ந்து காட்டியவர். உலகமெங்கும் இரக்கத்தின் இலக்கணமாக திகழ்ந்தவர். மரணப் படுக்கையில் இருக்கும் மக்களின் அருகில் சென்று அவர்களை கட்டியணைத்து புன்னகை யோடு அவர்களுக்கு வேண்டியதை செய்தவர். இயேசுவின் வாழ்க்கையே, அன்னை தெரசாவுக்கு ஏழை பணி தான் தன் வாழ்வின் முதல் பணி என்று தேர்ந்தெடுக்க வைத்தது.
நீதிமொழிகள் 21:21 வசனத்தில் “நேர்மையையும் இரக்கத்தையும் கடைப் பிடித்து நடப்பவர், நீடித்து வாழ்வார், மேன்மையும் அடைவார்” என சொல்லப்பட்டுள்ளது. தன்னை தான் தாழ்த்தி தன்னலம் துறந்து வாழும் மனிதனால் தான் மற்றவர்களுக்கு இரக்கம் காட்ட முடியும். அதுவே உண்மையான இறைபணி.
முதலாவதாக தயை உடையவர்கள் மற்றவர்களின் உணர்ச்சியை மதிப்பார்கள். வேதம் தெளிவாக சொல்கிறது “நீங்கள் யாவரும் உங்களைச் சார்ந்தவற்றில் அல்ல, பிறரை சார்ந்தவற்றிலேயே அக்கறை கொள்ள வேண்டும்” (பிலிப்பியர் 2:4). தன்னலம் மறந்து பிறர் நலனுக்காக வாழும் வாழ்க்கையையே கடவுள் விரும்புகிறார்.
குறைந்தபட்சம் நாம் சந்திக்கும் மக்களிடம் ஒரு புன்னகையாவது கொடுத்து விட்டுச் செல்லலாமே. நேரம் கிடைப்பதில்லை என்று சொல்லி சொந்த குடும்பத்தில் உள்ளவர்களிடம் கூட தயவாக பேச நேரம் செலவிட மக்கள் மறந்து விடுகிறார்கள். தினமும் வீட்டில் குடும்ப ஜெபமும் அன்றைய தினத்தை பற்றிய ஒரு சின்ன பகிர்தலும் இருப்பது மிகவும் நல்லது. அது குடும்ப உறவுகளைக் கட்டி எழுப்ப உதவும்.
தயையுடையவர்கள் மற்றவர்களுக்கு ஆறுதல் அளிக்க தயங்க மாட்டார்கள். பல நேரங்களில் ஆறுதலாக ஒரு வார்த்தை சொன்னாலே போதும், கவலையில் வாழும் மக்களுக்கு அந்த நிலையிலிருந்து மீண்டு வர அதுவே ஒரு வாய்ப்பாக அமையும். நம் வார்த்தைகள் மற்றவர்களின் வாழ்க்கையைக் கட்டி எழுப்ப உதவுகிறதா? இல்லை உடைத்து விழ செய்கிறதா என்று ஆராய வேண்டும்.
நம் கடவுள் நமக்கு எப்போதும் ஆறுதலாக இருப்பவர். அவரை பின்பற்றும் நாமும் அதை போல தான் மற்றவர்களுக்கு ஆதரவாக வாழ வேண்டும்.
2 சாமுவேல் 22:19 இப்படி கூறுகிறது: “என் ஆபத்து நாளிலே எனக்கு எதிரிட்டு வந்தார்கள்; கர்த்தரோ எனக்கு ஆதரவாயிருந்தார்”.
சற்று சிந்தித்து பார்ப்போம், கடைசியாக எப்போது பெற்றோரிடம் ஆறுதலாய்ப் பேசினோம்?, அவர்களுடைய தேவைகளை அவர்கள் கேட்கும் முன்பே நிறைவேற்றியிருக்கிறோமா?, நம்முடன் பணி புரிபவர்களின் துயரங்களைக் காது கொடுத்துக் கேட்டிருக்கிறோமா? இல்லையேல் இனிமேலாவது நம் அயலாருக்கு ஆறுதலாக கர்த்தர் கற்பித்தபடி நடப்போமா?
இரக்கமுள்ளவர்கள் நேர்மையாகவும் நியாயமாகவும் வாழ்வார்கள். மருத்துவர் நோயாளியை பரிசோதனை செய்து விட்டு அவருக்கு ஒரு கொடிய நோய் இருப்பதாக அறிந்தால் அப்படியே விட்டு விடுவதில்லை. நோயாளிக்கு வலிக்கும் என்பதற்காக அறுவை சிகிச்சை செய்யாமல் எல்லாம் சரியாகிவிடும் என்று சொல்வதில்லை. எப்படியாவது அவரை குணப்படுத்த வேண்டும் என்று பிரயாசப்படுவார்.
அதேபோல, நல்ல நண்பர்கள் சில சமயங்களில் நம் தீய செயல்களைக் கண்டு அப்படியே விட்டு விடாமல் கடிந்து கொள்வதுண்டு. அதுவும் இரக்கத்தின் வெளிப்பாடே.
இரக்கம் என்பது எப்போதும் பணிந்து போவதல்ல, மாறாக தவறுகளை தட்டிக்கேட்டு திருத்துவது அதன் முக்கியமான சிறப்பம்சமாகும். உண்மையான நண்பன் நம் வாழ்வின் நன்மைக்காக ஏற்படுத்தும் காயங்கள் கூட நல்லது தான், ஒரு எதிரியின் முத்தத்தை விட.
காலம் தாழ்த்தாமல் பிறருடைய தேவையை அறிந்து உடனே செயல்படுவதே முக்கியம். அது உங்களுக்கு கொடுக்கப்பட்ட ஓர் அரிய வாய்ப்பு. தாமதித்தால் அந்த வாய்ப்பு கைவிட்டு போகும். இப்படி நீங்கள் இழந்த வாய்ப்புக்கள் எத்தனை?
இயேசு நம்மை பார்த்து பசியாயிருந்தேன் எனக்கு உணவு கொடுத்தீர்கள், தாகமாய் இருந்தேன், தாகத்தை தணித்தீர்கள்; அந்நியனாக இருந்தேன், ஏற்றுக்கொண்டீர்கள்; ஆடையின்றி இருந்தேன், நீங்கள் ஆடை அணிவித்தீர்கள்; நோயுற்றிருந்தேன், என்னை கவனித்துக்கொண்டீர்கள் என்று சொல்லும்படியான ஒரு வாழ்க்கையை வாழ்வோம். எல்லோரையும் நேசிப்போம், இரக்கம் காட்டுவோம்.
“இறக்கத்தான் பிறந்தோம், அது வரை இரக்கத்தோடு இருப்போம்” என்ற அன்னை தெரசாவின் வாழ்க்கை நமக்கு ஊக்கமூட்டட்டும்.
துலீப் தாமஸ், சென்னை.

புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய திருவிழாவை முன்னிட்டு இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.
புள்ளம்பாடி புனித அன்னாள் ஆலய திருவிழா கடந்த 1-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி நவநாள் திருப்பலி நடைபெற்றது. நேற்று முன்தினம் இரவு மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட சப்பர பவனி நடைபெற்றது.
நேற்று காலை திருவிழா சிறப்பு திருப்பலி நடைபெற்றது. பின்னர் ஆடம்பர தேரோட்டம் நடைபெற்றது. இதில் புனித அன்னாள் சொரூபம் தாங்கிய தேரை பக்தர்கள் வடம் பிடித்து இழுத்துச்சென்றனர். மாலையில் திவ்விய நற்கருணை ஆசீர் நடைபெற்றது.
விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை மறைவட்ட முதன்மைகுரு ஹென்றிபுஷ்பராஜ், உதவி பங்குதந்தை எடிசன் ராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

தகுதியையும், செல்வாக்கையும் இலக்காக வைத்திருந்தாலும், அவற்றைப் பெறுவதற்காக வகுத்துக்கொள்ளும் பாதையை பலர் சரியாக தேர்வு செய்வதில்லை.
கண்களில் காண்பவைகளை எல்லாம் அனுபவிக்கும் தகுதியைப் பெறுவதும், நினைப்பதையெல்லாம் பெறக்கூடிய செல்வாக்கைப் பெற்று வாழ்வதும்தான் வெற்றிகரமான வாழ்க்கை என்று பலரும் நினைக்கிறோம். தகுதியையும், செல்வாக்கையும் இலக்காக வைத்திருந்தாலும், அவற்றைப் பெறுவதற்காக வகுத்துக்கொள்ளும் பாதையை பலர் சரியாக தேர்வு செய்வதில்லை.
நாம் தேர்வு செய்துகொள்ளும் பாதைதான், நமது மற்றும் வாரிசுகளின் வாழ்க்கையில் இறைவன் அருளும் சமாதானத்தை அளி(ழி)ப்பதாக அமைகிறது.
செல்வத்தை அடைந்தாலே மற்ற எந்த பிரச்சினைகளையும் சமாளித்துவிட முடியும் என்ற சிந்தனைதான், செல்வத்தை அடைய தீய வழிகளை நோக்கிச்செல்ல பாதை அமைத்துத் தருகிறது. இறைவனால் நிர்ணயித்துத் தரப்படும் வாழ்க்கைக்குத் தேவையானவைகளை மட்டுமே சிந்தித்து செயல்பட்டால், பிரச்சினைகளை வராமலேயே தவிர்த்துவிடலாம் என்பதுதான் வாழ்வியலின் சத்தியமாகும்.
ஆனால் இந்த அடிப்படை சத்தியத்துக்கு முரணான போதனைகள்தான் செழிப்பை விரும்பும் பலரது சிந்தனைக்கு தீனி போட்டு தீயவழியில் நடக்கச் செய்கின்றன. இறைவனை வழிபடுவதற்கான வழிகளை பலரும் போதிக்கின்றனர்.
மனிதன் கேட்டதையெல்லாம் இறைவன் கொடுத்துவிடுவாரா? அவற்றையெல்லாம் இறைவன் நமக்குக் கொடுப்பதற்கு என்னென்ன செய்ய வேண்டும்? என்பவை ஒவ்வொருவரின் மனதிலும் எழும் கேள்விகள். இவற்றுக்கு யோவான்15:16-ம் வசனம் நேரடியாக பதிலளிக்கிறது. “நீங்கள் என் நாமத்தினாலே பிதாவைக் கேட்டுக்கொள்வது எதுவோ, அதை அவர் உங்களுக்குக் கொடுக்கத்தக்கதாக நீங்கள் போய்க் கனி கொடுக்கும்படிக்கும், உங்கள் கனி நிலைத்திருக்கும்படிக்கும், நான் உங்களை ஏற்படுத்தினேன்” என்று இயேசு கூறியுள்ளார்.
இந்த வசனத்தை பொருள் மாறாமல் சற்று விளக்கமாகச் சொன்னால், நமது பக்தி வாழ்க்கைக்குத் தேவையானது எது என்பதை முதலில் முடிவு செய்து, அதை இயேசுவின் மூலமாக பிதாவிடம் விண்ணப்பமாக வைக்க வேண்டும். அவர் கூறியுள்ளபடி கனி கொடுக்கும் வாழ்க்கையை வாழும்போது அதைப் பெறும் தகுதி கிடைக்கிறது.
இந்த வசனத்தை மூன்றாகப் பிரித்து ஆராயலாம். முதலாவது, பிதாவைக் கேட்டுக்கொள்ளக்கூடியவை எவை? இரண்டாவது, அவற்றைப் பெறுவதற்காக வாழ்க்கையின் மூலம் கொடுக்க வேண்டிய கனிகள் எவை? மூன்றாவது, அந்தக் கனிகளை எப்படி, யாருக்குக் கொடுக்க வேண்டும்?
வேதத்தில் பல சத்தியங்கள் மறைக்கப்பட்டதாயும், பல சத்தியங்களை சொந்த வாழ்க்கையில் நடக்கும் சம்பவங்கள் மூலமாக அறியக் கூடியதாகவும் உள்ளன. இங்கு முதலாவது கேட்கப்பட்ட கேள்விக்கு வேதம் நேரடியான பதிலை தெளிவாக அளிக்கிறது. மத்.6:31-33-ம் வசனங்களில், “உண் பதையும், உடுப்பதையும் பற்றி கவலைப்படாமல், இறைவன் நம்மை ஆளும் படிக்கு நடந்துகொள்ள வேண்டிய அவரது நீதி என்னென்ன என்பதையே முதலில் தேடுங்கள்” என்று கூறுகிறது.
அதாவது, வாழ்க்கையின் கடைசிவரை நல்ல உணவு கிடைப்பதற்காக நன்றாக சம்பாதிக்க வேண்டுமே; மற்றவர்கள் முன்பு நன்றாக உடுத்திக்காட்டுவதற்காக மிகுந்த செல்வாக்கை பெற வேண்டுமே என்ற எண்ணத்தில் அவற்றைத் தேடி ஓடினால், உலக பாவங்களில் விழுந்து நம்மையும், நமது வாரிசுகளின் வாழ்க்கையையும் பாழ்படுத்திவிட நேரிட்டுவிடும்.
நமக்கு அமைந்துள்ள வாழ்க்கையில் நமது சம்பாத்தியம் சரியானதுதானா? நமது பேச்சில் உண்மையுள்ளதா? உள்நோக்கம் உள்ளதா? சிந்தனையிலும் பாவக்கறைகள் உள்ளதா? அடுத்தவரின் பொருளை அபகரித்து வைத்திருக்கிறோமா? என்றெல்லாம் சிந்தித்து, இறைநீதிக்கு உட்பட்ட செயல்பாடுகளைத் தேடித்தேடிச் செய்வதுதான் வாழ்வின் முழுமுதல் கடமையாகும் என்று அந்த வசனம் தெளிவுபடுத்துகிறது.
ஆக, இப்படிப்பட்ட அனைத்து காரியங்களிலும் இறைநீதிக்குட்பட்டு செயல்படாதபடி நாம் வாழ்ந்தோமானால், எங்கெல்லாம் தவறுகிறோமோ அங்கெல்லாம் செய்யப்பட வேண்டிய இறைநீதிதான், இறைவனிடம் நாம் கேட்க வேண்டியதாக உள்ளது என்பது முதல் கேள்விக்கான விடையாக அமைகிறது.
இப்படி கேட்டதை இறைவன் கொடுக்க வேண்டுமானால், இயேசு கூறியபடி கனி கொடுத்தாக வேண்டும். அந்தக் கனிகள் எவை? மத்.3:8-ம் வசனம், ‘மனந்திரும்பு தலுக்கேற்ற கனிகளைக் கொடுங்கள்’ என்று உரைக்கிறது. அதாவது, சரீரத்தினால் செய்யப்படும் பாவங்கள், உள்ளத்தின் எண்ணங்களினால் செய்யப்படும் பாவங்கள், ஜென்ம சுபாவங்களினால் செய்யப்படும் பாவங்கள் ஆகியவற்றில் இருந்து மீண்டு, இயேசுவின் போதனைகளின்படி இறைப்பாதைக்கு திரும்பக்கூடிய மனந்திரும்புதல் என்பதுதான் முதல் கனியாகும்.
இந்தக் கனியைக் கொடுத்தவனிடம் காணப்படும் மற்ற கனிகள் எவை என்பதை, கலா.5:22, எபே.5:9 ஆகிய வசனங்கள் சுட்டிக்காட்டுகின்றன. இரண்டாவது கேள்விக்கும் பதிலாக அது அமைகிறது. அதாவது, சாதி-மதம் பார்க்காமல் எல்லாரிடத்திலும் அன்புகாட்டுவது, எந்தப் பிரச்சினை வந்தாலும் சந்தோஷம், சமாதானம், நீடிய பொறுமையாக இருப்பது, பகைப்பவனுக்கும் தயை காட்டுவது என பல நற்குணங்கள், கனி களாகக் கூறப்பட்டுள்ளன.
இந்தக் கனிகளை யாருக்குக் கொடுக்க வேண்டும் என்ற மூன்றாம் கேள்விக்கான பதிலை இயேசு நேரடியாகவே போதிக்கிறார். அதை மத்.5:39-44-ம் வசனங்களில் காணலாம். ஒரு கன்னத்தில் அடித்தால் மறுகன்னத்தைக் காட்டு; உன் வஸ்திரத்துக்காக வழக்காடுபவனுக்கு உன் அங்கியையும் சேர்த்துவிட்டுக்கொடு; கேட்பவன் எவனென்றாலும் அதை அவனுக்குக் கொடு; பகைப்பவனின் நன்மைக்காக ஜெபம் செய், என்றெல்லாம் பெரிய பட்டியலை, ஒவ்வொரு பக்தனும் வாழ்க்கையில் கொடுக்க வேண்டிய கனிகளாக இயேசு சுட்டிக்காட்டியதோடு மட்டுமல்லாமல் நடத்திக்காட்டிவிட்டும் சென்றிருக்கிறார்.
ஆக, இப்படிப்பட்ட கனிகளை நம் வாழ்க்கையில் கொடுக்க முற்படும்போதுதான் யோவான்15:16-ம் வசனத்தில் கூறியபடி, நாம் கேட்டுக்கொண்டதை இறைவன் கொடுக்கிறார். அதோடு விட்டுவிடாமல், மத்.6:33-ல் சுட்டிக்காட்டியபடி, உலக காரியங்களையும் கூடுதல் ஆசீர்வாதமாக இறைவன் அளிப்பார்.
எனவே தவறான போதனைகளில் சிக்கி, தேவையற்றதை இறைவனிடம் கேட்காமல், வேதம் கூறியபடி தகுதியுடன் அவரிடம் கேட்டு ஆசீர்வாதங்களைப் பெறுவோமாக.
ஜெனட், சென்னை

கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக்கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பாடல்கள் மிகவும் பிரசித்தமான நூலாக இருந்து வந்துள்ளது.
“மனிதர்மீது நம்பிக்கை வைப்பதைவிட, ஆண்டவரிடம் தஞ்சம் புகுவதே நலம்” எனும் வசனம் தான் திரு விவிலியத்திலுள்ள மைய வசனம். கிறிஸ்தவ ஆன்மிகத்தின் மையமும் அது தான். இந்த வசனம் இடம்பெற்றுள்ள நூல்: திருப்பாடல்கள்.
கிறிஸ்தவ உலகில் மிகவும் பிரபலமான நூல் திருப்பாடல்கள் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. ஆதிக்கிறிஸ்தவர்களின் காலம் தொட்டே திருப்பாடல்கள் மிகவும் பிரசித்தமான நூலாக இருந்து வந்துள்ளது. சொல்லப் போனால் ஆதிக்கிறிஸ்தவ போதகர்கள் திருப்பாடல்கள் முழுவதையும் மனப்பாடம் செய்து வைக்கும் வழக்கம் கொண்டிருந்தனர் என்கிறது இறையியல் வரலாறு.
மொத்தம் 150 பாடல்கள் கொண்ட இந்த நூலில் 2461 வசனங்களும், 43743 வார்த்தைகளும் இடம் பெற்றுள்ளன. உண்மையில் இது ஐந்து பாடல் புத்தகங்களின் தொகுப்பு. திருப் பாடல்கள் 41,72,89,106,150 ஆகியவையே ஒவ்வொரு நூலின் கடைசிப் பாடல்.
சுமார் ஆயிரம் ஆண்டுகள் இடைவெளியில் எழுதப்பட்ட பாடல்களின் சங்கமம் இது. தாவீதின் காலமான கி.மு. 1000-களில் பெரும்பான்மையான பாடல்கள் எழுதப்பட்டன. மோசேயின் காலமான கி.மு. 1300-ல் உள்ள பாடல்களும், கானானை விட்டு இஸ்ரேயலர்கள் வெளியேறி வாழ்ந்த கி.மு. 500-களின் பாடல்களும் இதில் இடம்பெற்றுள்ளன.
திருப்பாடல்கள் இசைக்கும் போது நமது இதயத்தையே நாம் ஊடுருவிப் பார்க்கும் சிந்தனை எழுவது இதன் சிறப்பு. சர்வதேசத்துக்கும், சர்வகாலத்துக்கும் பொருந்தக் கூடியவகையில் திருப்பாடல்கள் இருப்பது உண்மையிலேயே வியப்பான விஷயம் தான்.
எபிரேய மொழியில் இந்த நூல் ‘தெனிலிம்’ என அழைக்கப்படுகிறது. அதற்கு “புகழ்ச்சிப் பாடல்கள்” என்று பொருள். இந்த திருப்பாடல்களை இரண்டாக வகுக்க வேண்டுமெனில், “நான்” என தன்னை மையப் படுத்தி இறைவனைப் புகழும் தனிப்பட்ட பாடல்கள். “நாம்” என குழுவை மையப்படுத்தி இறைவனைப் புகழும் குழுப்பாடல்கள் என வகுக்கலாம்.
உணர்வுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் திருப்பாடல்கள் நிறையவே இந்த நூலில் உண்டு. “உமது தோற்பையில் என் கண்ணீரைச் சேர்த்து வைத்துள்ளீர்” என்பது போன்ற வரிகள் நம்மை வியப்பிலாழ்த்துகின்றன. பண்டைய யூதர்களிடையே ஒரு வழக்கம் இருந்தது. யாராவது இறந்து விட்டால், அவர்களுக்காகக் கண்ணீர் வடிப்பவர்கள் அதை ஒரு பாட்டிலில் சேமித்து தங்களது இரங்கலாக அனுப்பி வைப்பார்கள். அத்தகைய சமூகப் பழக்கங்கள் திருப்பாடல்களில் எதிரொலிப்பதை ஆங்காங்கே காணலாம்.
கோபம், எரிச்சல், பொறாமை, பயம் போன்ற எதிர்மறை உணர்வுகளும், மகிழ்ச்சி, களிப்பு, ஆறுதல், நம்பிக்கை, சமாதானம் போன்ற நேர்மறை உணர்வுகளும் திருப்பாடல்களில் நிரம்பியிருக்கின்றன.
இன்னொரு வகையில் திருப்பாடல்களைப் பிரிக்க வேண்டுமெனில் இறைஞ்சும் பாடல்கள், நன்றிப் பாடல்கள், வருந்தும் பாடல்கள் என பிரிக்கலாம். இதன் ஆன்மிகச் செழுமை காரணமாக மார்டின் லூதர் ‘இது பைபிளுக்கு உள்ளே உள்ள இன்னொரு பைபிள்” என்று குறிப்பிட்டார்.
இந்த நூலின் மிகச்சிறிய அதிகாரம் 117. அதில் இரண்டே இரண்டு வசனங்கள் உள்ளன. மிகப்பெரிய பாடல் 119. அதில் 176 வசனங்கள் உள்ளன. பொதுவாக எபிரேயப் பாடல்கள் எல்லாமே சத்தமாய் பாடப்பட வேண்டிய பாடல்கள் தான். திருப்பாடல்களும் அதற்கு விதி விலக்கல்ல.
இந்தத் திருப்பாடல்களில் 73 பாடல்களுக்கு மேல் தாவீது எழுதியிருக்கிறார். தாவீதைத் தவிர ஆஸாப் புதல்வர்கள் பன்னிரண்டு பாடல்கள், மோசே ஒரு பாடல், கோராவின் மகன்கள் பத்து பாடல்கள், ஹெர்மான் ஒரு பாடல், எசேக்கியா பத்து பாடல்கள், ஏதன் ஒரு பாடல், சாலமோன் இரண்டு பாடல்கள் என பங்களிப்பு செய்திருக்கின்றனர்.
தாவீது மன்னனின் வாழ்க்கையை ஆழமாகப் புரிந்து கொள்ள இந்த பாடல்கள் உதவி புரிகின்றன. பத்சேபாவுடனான உறவுக்குப் பின் மனம் வருந்தி அவர் எழுதிய திருப்பாடல் 51 மிகப்பிரபலம். மொத்தம் பதினான்கு பாடல்கள் தாவீதின் வாழ்க்கை நிகழ்வுகளோடு பின்னிப் பிணைந்திருக்கின்றன.
தற்போதைய பாடல்களைப் போலில்லாமல் திருப் பாடல்கள் பெரும்பாலும் தனிப்பட்ட உணர்வுகளின் வெளிப்படுத்தலாக இருப்பது சிறப்பு. பல பாடல்கள் குறிப்பிட்ட இறை சிந்தனையை நமக்கு விளக்குகின்றன. உதாரணமாக, ‘இறைவார்த்தையைப் படிக்க வேண்டும்’ எனும் சிந்தனையை திருப்பாடல் 119 பதிவு செய்கிறது, ஓய்வு நாளை கடைப்பிடிக்க வேண்டுமென திருப்பாடல் 92 வலியுறுத்துகிறது.
இறைமகன் இயேசுவின் வாழ்க்கையை தீர்க்க தரிசனமாக உரைக்கும் பல பாடல்கள் திருப்பாடல்களில் உள்ளன. மனிதர்களால் இகழப்படுவார், ஆணிகளால் அறையப்படுவார், ஆடைகள் ஏலமிடப்படும், அவரது எலும்புகள் ஏதும் முறிபடாது என இயேசுவின் மரணத்தைக் குறித்தும் மிக விரிவாக இவை பேசு கின்றன.
இறைவனைப் புகழவும், இறைவனோடு உள்ள உறவை வலுப்படுத்தவும் இன்றும் நமக்கு திருப்பாடல்கள் துணை செய்கின்றன. அற்புதமான இலக்கியச் சுவை, ஆழமான ஆன்மிகச் சுவை என திருப்பாடல்கள் நூல் வாசிக்கும் யாவரையும் வசீகரிக்கிறது.
சேவியர்.

திருவிவிலியத்தை வாசிப்பவர்களை புரட்டிப் போடும் ஒரு நூல் என இந்த நூலைச் சொல்லலாம். ஆன்மிக நூலுக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதைப் போலத் தோன்றும் ஒரு காதல் நூல் இது.
திருவிவிலியத்தை வாசிப்பவர்களை புரட்டிப் போடும் ஒரு நூல் என இந்த நூலைச் சொல்லலாம். ஆன்மிக நூலுக்குள் தெரியாமல் வந்து மாட்டிக்கொண்டதைப் போலத் தோன்றும் ஒரு காதல் நூல் இது. சற்றே காமம் இழையோடும் காதல் நூல் என இதைச் சொல்வதே சரியானதாக இருக்கும்.
இதை எழுதியவர் சாலமோன் மன்னன். தனது வாழ்வின் இளமைக் காலத்தில் இந்த காதல் பாடலை அவர் எழுதியிருக்கிறார். எட்டு அதிகாரங்களுடன், நூற்று பதினேழு வசனங்களுடன், இரண்டாயிரத்து அறுநூற்று அறுபத்து ஒன்று வார்த்தைகளுடன் அமைந்துள்ள அற்புதமான கவிதை நூல் இது. எட்டு அதிகாரங்களானாலும் இந்த நூலை 28 கவிதைகளின் தொகுப்பு என்கின்றனர் இறையியலார்கள்.
விவிலியத்தில் 22 -வது நூலாக இது அமைந்துள்ளது. விவிலியத்தில் அமைந்துள்ள கவிதை நூல்களில் இது கடைசி நூல். இந்த நூலின் சாலமோன் மன்னனின் பெயர் ஏழு முறை குறிப்பிடப்பட்டுள்ளது. கடவுளின் பெயர் குறிப்பிடப்படாத இரண்டு நூல்கள் பைபிளில் உண்டு. ஒன்று எஸ்தர், இன்னொன்று இந்த இனிமை மிகு பாடல்.
ஒரு நாடகம் போல அமைந்துள்ள இந்தப் பாடலில் காதலே பிரதானம். இது கடவுளுக்கும் இஸ்ரயேல் மக்களுக்கும் இடையேயான உறவைச் சொல்லும் கவிதைகள் என சிலர் விளக்கம் தருகின்றனர். சிலரோ, பாலஸ்தீன நாட்டில் திருமண நிகழ்ச்சிகளில் பாடப்பட்ட பாடல்கள் இவை என்கின்றனர். சிலர் இன்னும் பல வித்தியாசமான விளக்கங்களுடன் களமிறங்குகின்றனர்.
ஆனால் இவை ஒரு ஆணுக்கும், பெண்ணுக்கும் இடையே முளைக்கின்ற காதலின் வரிகள் என்று சொல்வதே பொருத்தமானது. கிறிஸ்தவம் அன்பினால் கட்டமைக்கப்பட்டது. திருமணம் இறைவனால் ஏற்படுத்தப்பட்டது. இதில் அன்பும், காதலும் கசிந்துருகுதலும் இயல்பே. எனினும் இது சொல்லும் ஆன்மிகப் புரிதல்களை உள்வாங்கிக் கொள்ளுதல் அதிகம் பயன் தரும்.
இந்தக் கவிதை நாவலை எளிமையாகப் புரிந்து கொள்ள ஒரு சின்ன முன்னுரைக் கதையை விவிலிய அறிஞர் ஒருவர் தருகிறார். ஒரு ஏழை பெண் இருக்கிறார். அவள் மலை நாட்டில் திராட்சைத் தோட்டங்களில் வேலை செய்கிறாள். வசதியற்றவள் அவள். அவளுடைய குடும்பத்தினரின் அன்பு கிடைக்கவில்லை, வேலைக்காரியாய் நடத்துகிறார்கள்.
அவளை ஒரு ஆட்டிடையன் காதலிக்கிறான். உண்மையில் அவன் தான் சாலமோன் மன்னன். அது அவளுக்குத் தெரியவில்லை. காதலில் கசிந்துருகுகின்றனர். திருமணம் செய்து கொள்ள முடிவெடுக்கின்றனர். திரும்பி வருவேன் என சொல்லிவிட்டு இடையன் சென்று விடுகிறான். நீண்ட நாட்களுக்கு மவுனம். காதலியின் இரவுகள் துயரம் கொள்கின்றன. பகல்கள் பரிதவிக்கின்றன.
ஒருநாள் அவன் திரும்பி வருகிறான், அரசனாக. இவள் அதிர்ச்சியடைகிறாள். பல மனைவியரில் ஒருத்தியாக தான் இணைந்ததை அவள் புரிந்து கொள்கிறாள். அரசின் உயரிய இடம் அவளுக்குக் கிடைக்கிறது. ஆனாலும் அவளுக்கு நிம்மதியில்லை. மீண்டும் அந்த பழைய வாழ்க்கைக்கு காதலனுடன் செல்ல ஆசைப்படுகிறாள்.
இந்த கதையை பின்னணியாக வைத்துக் கொண்டு இந்தப் பாடலை வாசிக்கும் போது அது அற்புதமான வாசிப்பு அனுபவத்தைத் தருகிறது என்பதை மறுப்பதற்கில்லை.
கிரேக்க இலக்கிய மரபும், கிரேக்கக் கலாசாரமும் உடலையும், ஆன்மாவையும் இரண்டாகப் பார்க்கிறது. இரண்டு விதமான வாழ்க்கையாகப் பார்க்கிறது.
எபிரேய மரபு இரண்டுமே இறைவனின் படைப்பாக ஒன்றிணைந்த நிலையில் பார்க்கிறது. அந்த எபிரேயக் கலாசார மனநிலையில் இந்த நூலை வாசிப்பது அதிக புரிதலைத் தருகிறது.
கடவுளுக்கும் மனிதனுக்கும் இடையேயான அன்னியோன்ய உறவாக இந்த பாடலை பார்க்கலாம். இறைவன் திருச்சபையை மணப்பெண்ணாகப் பார்க்கும் விளக்கம் புதிய ஏற்பாட்டில் காணக்கிடைக்கிறது. கடவுள் இஸ்ரயேலை மணப்பெண்ணாகப் பார்க்கும் நிலை பழைய ஏற்பாட்டில் காணக்கிடைக்கிறது. அதுபோல கடவுள் மனிதனை மணப்பெண்ணாகப் பார்க்கும் வடிவம் இது எனக் கொள்ளலாம்.
1005 காதல் பாடல்களை எழுதிய சாலமோன் மன்னனின் பாடல்களில் ஒன்று இது. மிக முக்கியமான பாடல் என்பதால் தான் இறைவன் இதைத் தேர்ந்தெடுத்து பைபிளில் இடம் பெறச் செய்திருக்கிறார் என்பதில் சந்தேகமில்லை.
கிறிஸ்தவ வாழ்க்கை என்பது ஆலயம் செல்வதோ, பைபிள் வாசிப்பதோ, நற்செய்தி அறிவிப்பதோ அல்ல. இவை எல்லாவற்றுக்கும் மேலாக இறைவனோடு ஒரு ஆழமான அன்புறவை கொண்டிருப்பது. அதைத் தான் இந்த நூல் குறிப்பால் உணர்த்துகிறது.
இந்த நூலில் 15 நாடுகளைக் குறித்த செய்திகளும், இருபத்தோரு உணவுப் பொருட்களின் குறிப்புகளும், பதினைந்து விலங்குகளைக் குறித்த தகவல்களும் இருப்பதாய் புள்ளி விவரங்கள் சொல்கின்றன.
காதலனும் காதலியும் ஒருவருக்கொருவர் ஈர்க்கப்படுவது, ஆசை கொள்வது, துணையாய் இருப்பது, இன்பமாய் இருப்பது, இணைந்தே இருப்பது, பிரிந்து இருப்பது, நம்பிக்கையாய் இருப்பது, புகழ்வது என இந்தப் பாடல்கள் பல்வேறு உணர்வுகளைப் பதிவு செய்கின்றன.
வியக்க வைக்கும் இந்த கவிதை நூல், நிச்சயம் தவற விடக் கூடாத நூல்.