என் மலர்
கிறித்தவம்
திருச்சி ஆலந்தெருவில் உள்ள புனித செல்வநாயகி அம்மாள் ஆலயத்தில் நேற்று மாலை திருப்பலியோடு திவ்ய நற்கருணை பவனி தொடங்கியது.
திருச்சி மேலப்புதூர் புனித மரியன்னை பேராலயத்தில் திவ்ய நற்கருணை பெருவிழா நேற்று மாலை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, திருச்சி ஆலந்தெருவில் உள்ள புனித செல்வநாயகி அம்மாள் ஆலயத்தில் நேற்று மாலை திருப்பலியோடு திவ்ய நற்கருணை பவனி தொடங்கியது. பேராலய பங்கு தந்தை டி.சகாயராஜ் தலைமையில் உதவி பங்கு தந்தை ஏ.சகாயராஜ் மற்றும் திரளான கிறிஸ்தவர்கள் திவ்ய நற்கருணை பவனியில் பங்கேற்றனர். முன்னதாக அருட்தந்தை விக்டர் ஜெயபாலன் திருப்பலி நடத்தினார்.
திவ்ய நற்கருணை பவனி புனித செல்வநாயகி அம்மாள் ஆலயம் முன்பு தொடங்கி காஜாப்பேட்டை, புதுத்தெரு, ஆர்.சி. காம்பவுண்டு, பூந்தோட்டம், புனித மோட்சராக்கினி மாதா ஆலயம், வேர்ஹவுஸ், மேலப்புதூர் சுரங்கப்பாதை, கான்வென்ட் சாலை வழியாக புனித மரியன்னை பேராலய வளாகத்தை அடைந்தது. இதில் பங்கு பேரவை நிர்வாகிகள், அன்பியங்கள், பக்த சபைகள், இளையோர் இயக்கங்கள் மற்றும் இறைமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

“உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்” என்ற போதனைகளை அறியாதோர் இருக்க முடியாது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் மலைப்பிரசங்கத்தை அறியாதவர்கள் இருக்க முடியாது என்று சொல்லலாம். ஒருவேளை மலைப்பிரசங்கத்தையும் அதில் காணப்படும் ஒரு சில போதனைகளையும் முழுமையாக சிலர் அறியாமலிருக்கலாம்.
ஆனால், “உங்கள் சத்துருக்களைச் சிநேகியுங்கள்; உங்களைப் பகைக்கிறவர்களுக்கு நன்மை செய்யுங்கள்; உங்களைச் சபிக்கிறவர்களை ஆசீர்வதியுங்கள்” என்ற போதனைகளை அறியாதோர் இருக்க முடியாது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து இந்த வாக்கியங்களைக் கூறியபிறகு, “உங்களை நிந்திக்கிறவர்களுக்காக ஜெபம் பண்ணுங்கள்” என்கிறார்.
‘நிந்திக்கிறவர்கள்’ என்கிற வார்த்தை காயப்படுத்துவதை, அல்லது புண்படுத்துவதைக் குறிக்கிறது. காயப்படுவதும், புண்படுவதும் நம்மில் அநேகர் அனுதினமும் வாழ்க்கையில் அனுபவிக்கும் ஒரு கொடுமை என்று சொல்லலாம்.
நம்முடைய கருத்துக்கு எதிர் கருத்துக்கொண்டவர்கள், நமது வளர்ச்சியைக் கண்டு பொறாமைப்படுகிறவர்கள், நமது ஒழுக்கமான வாழ்க்கையை வெறுப்பவர்கள், நம்மைப் பகைக்கிறவர்கள், நமது உயர்வை, அல்லது வெற்றியை விரும்பாதவர்கள் என நம்மைக் காயப்படுத்தும் மக்கள் அநேகர் உண்டு.
அப்படிப்பட்டவர்கள் நாம் பணிபுரியும் இடங்களில் இருக்கலாம், பயிலும் இடங்களில் இருக்கலாம், பக்கத்து வீட்டில், அல்லது எதிர்வீட்டில் வசிக்கலாம். ஏன், நம் வீட்டிலும், குடும்பத்திலும்கூட இப்படிப்பட்டவர்கள் காணப்படலாம். இவர்கள் தங்களது சொல்லாலும் செயலாலும் நம்மை எப்போதும் காயப்படுத்திக்கொண்டே இருக்கலாம்.
உலகத்தில் வழக்கமாக இரண்டு வகை மக்கள் உண்டு. முதலாவது, தங்களை நேசிக்கிறவர்களையும், காயப்படுத்துபவர்கள், அல்லது புண்படுத்துபவர்கள். இரண்டாவது, தங்களைக் காயப்படுத்துகிறவர்களைக் காயப் படுத்து பவர்கள்.
ஆனால், தம்மைப் பின்பற்றுகிறவர்கள் மூன்றாவது வகையாக இருக்கவேண்டுமென்று ஆண்டவர் இயேசு விரும்புகிறார். அது என்னவெனில், தம்மைக் காயப்படுத்துகிறவர் களுக்காகப் பிரார்த்தனை செய்வது.
இவ்வாறு செய்யமுடியுமா? என்கிற கேள்வி ஒரு சிலருக்குள் எழும்பலாம். இப்படிச் செய்வது மிகவும் சிரமமான ஒன்றுதான். ஆயினும், நம்மால் இயலாத ஒன்றல்ல.
ஏனெனில், ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து தம்மைக் காயப்படுத்தின, புண்படுத்தின மக்களை மன்னித்து, நமக்கு நல்ல மாதிரியை முன்வைத்துப் போயிருக்கிறார். என்னைக் காயப்படுத்துகிறவர்களுக்காக நான் பிரார்த்தனை செய்வதால் எனக்கென்ன நன்மை என்று சிலர் நினைக்கலாம்.
முதலாவது, அப்படிப்பட்டவர்களுக்காக நாம் பிரார்த்தனை செய்யும்போது அவர்களுக்கு விரோதமாக நம்முடைய மனதில் காணப்படும் எரிச்சல், கோபம் மறைவது மட்டுமன்றி, அவர்கள் செய்த, அல்லது பேசின காரியத்துக்காக பழிவாங்க வேண்டும் என்கிற தீமையான எண்ணம் நம்மைவிட்டு அகலுகிறது.
மனிதனுக்குள் காணப்படும் “நான்”, “சுயம்”, “பெருமை” போன்ற எண்ணங்களே வழக்கமாக பதிலடி கொடுக்கும்படி அவனைத் தூண்டுகிறது.
ஆனால், ஆண்டவராகிய இயேசு, “நீ தீமையினால் வெல்லப்படாமல், தீமையை நன்மை யினால் வெல்லு” என்று கூறுகிறார்.
நம்மைக் காயப்படுத்துகிறவர்களுக்காகப் பிரார்த்தனை செய்வதைப்போன்ற ஒரு நன்மை இருக்கமுடியுமா? நீங்களே சிந்தித்துப் பாருங்கள்.
இப்படிப்பட்ட நன்மையை நம்மைக் காயப்படுத்துகிறவர்களுக்காகச் செய்யும்போது, அந்த நன்மையின் பலனை நாம் நிச்சயம் அனுபவிப்போம். அதுமட்டுமல்ல, அப்படிப்பட்ட செயல் நமக்குச் சமாதானத்தையும், மகிழ்ச்சியையும் கொடுப்பது மட்டுமன்றி, நமது அன்றாட அலுவல்களில் தீவிர கவனம் செலுத்தவும் உதவும்.
இரண்டாவதாக, நம்மை நிந்திக்கிறவர்களுக்காக, துன்புறுத்துகிறவர் களுக்காக, வேதனைப்படுத்துகிறவர்களுக்காக, காயப்படுத்துகிறவர் களுக்காக, புண்படுத்துகிறவர்களுக்காக நாம் வேண்டிக்கொள்ளும்போது நம்முடைய பரம தகப்பனைப்போல நடந்துகொள்ளுகிறோம் என்று ஆண்டவராகிய இயேசு கிறிஸ்து கூறுகிறார்.
சுருக்கமாகச் சொன்னால், இறைவனின் பிள்ளைகள் அவருடைய குண லட்சணங்களை வெளிக்காட்டவேண்டும் என்று ஆண்டவர் இயேசு கூறுவதைக் காண்கிறோம்.
பரம தகப்பனுடைய தன்மைகளை நாம் வெளிப்படுத்தி வாழும்போது, நமது வாழ்வு செழிக்கிறது. நாம் வாழும் உலகம் நம்மால் நன்மையடைகிறது. எல்லாவற்றுக்குமேலாக, கடவுளின் திருநாமம் எல்லாராலும் போற்றப்படுகிறது.
ஜோசப் வில்லியம், சென்னை-106

குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே சரலில் உள்ள புனித பேதுரு பவுல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே சரலில் உள்ள புனித பேதுரு பவுல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு கல்லறை தோட்டத்தில் திருப்பலி நடக்கிறது.
மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடக்கிறது. இதற்கு நுள்ளிவிளை பங்குத்தந்தை அருளப்பன் தலைமை தாங்க, அருட்பணியாளர் ரூபஸ் அருளுரையாற்றுகிறார். இதில் திருநயினார்குறிச்சி பங்குத்தந்தை லியோன் கென்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தினமும் காலை மற்றும் மாலை திருப்பலியும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 23-ந்தேதி மாலை 6.30 மணிக்கு குழந்தை இயேசு பவனி நடைபெறுகிறது.
29-ந்தேதி காலை 7 மணிக்கு பாதுகாவலர் விழா, திருமுழுக்கு திருப்பலி, மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். இதற்கு கீழஆசாரிபள்ளம் பங்குத்தந்தை அந்தோணிப்பிச்சை தலைமை தாங்க, மறைமாவட்ட இளைஞர் இயக்க செயலாளர் ஜெனிபர் எடிசன் அருளுரை வழங்குகிறார். மதியம் 12 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது.
மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை மற்றும் சிறப்பு ஆராதனையும் நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் ஆன்றனி அல்காந்தர் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஸ்டீபன் அருளுரை வழங்குகிறார். இரவு 8 மணிக்கு அன்பியங்களுக்கு இடையே போட்டி நடனம் நடக்கிறது. 30-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும், 8 மணிக்கு ஆடம்பர திருவிழா மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் டேவிட் அருளுரை வழங்குகிறார். அதன்பிறகு கொடியிறக்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடக்கிறது.

ரோமாபுரியில் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
நெய்வேலி அருகே உள்ள ரோமாபுரியில் பழமை வாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் ஜூன் மாதம் பெருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான பெருவிழா கடந்த 16-ந் தேதி மாலை 6 மணிக்கு அருட்தந்தைகள் தேனிமலை லாசர் சவரிமுத்து, நெய்வேலி நிர்மல்ராஜ், பெரியாக்குறிச்சி லாரன்ஸ் ஆகியோர் முன்னிலையில் கூனங்குறிச்சி பெரியநாயகி அன்னை மாதா ஆலய பங்கு தந்தை கிறிஸ்துராஜ் தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை தொடர்ந்து தினசரி காலை, மாலை நேரத்தில் கூட்டு திருப்பலியும், சிறப்பு பிரார்த்தனையும் நடைபெற்று வந்தது. இரவில் சிறிய வகை தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டு, பவனி நடந்து வந்தது.
17-ந்தேதி மாலை 6 மணிக்கு அருட்தந்தைகள் நிர்மல்ராஜ், சைமன் அந்தோணிராஜ் ஆகியோர் தலைமையில் நவநாள் திருப்பலியும், ஆராதனையும் நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் நடைபெற்றது. இதையொட்டி அன்று மாலை 6 மணிக்கு பங்கு தந்தைகள் கூனங்குறிச்சி கிறிஸ்துராஜ், பெரியாக்குறிச்சி லாரன்ஸ், போபால் அருட்தந்தை சுவாமிநாதன் ஆகியோர் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் புனித அந்தோணியாரின் சொரூபம் வைக்கப்பட்டது. இதையடுத்து ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. பவனியானது ரோமாபுரியில் உள்ள முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது.
இதில் நெய்வேலி, விருத்தாசலம், டவுன்ஷிப், வடலூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை பங்கு தந்தை கிறிஸ்துராஜ், வேதியர் தேவராஜ் ஆகியோர் செய்திருந்தனர்.

“ சிலுவையை பற்றிய உபதேசம் கெட்டுப்போகிறவர்களுக்கு பைத்தியமாயிருக்கிறது. இரட்சிக்கப்படுகிற நமக்கோ அது தேவபலனாயிருக்கிறது.” (1 கொரிந்தியர்: 1:18)

கிறிஸ்தவத்தின் அடையாள சின்னமாக சிலுவை விளங்குகிறது. இந்த அடையாளத்தை நாம் ஆங்காங்கே அடிக்கடி பார்க்கும் விதமாக வைப்பது நல்லது. அது அடிக்கடி பாக்கப்பட வேண்டும். பாவம் என்பது எவ்வளவு பயங்கரமான ஒன்று என்பதை அது ஞாபகப்படுத்துகிறது. பாவத்திலிருந்து மனிதனை மீட்க ஏசு எவ்வளவு பெரிய கிரயத்தை செலுத்த வேண்டியிருந்தது என்பதை அது நமக்கு நினைவுபடுத்துகிறது. அதை பார்க்கும் போது மிகக்கொடிய தண்டனையாகிய சிலுவை மரணத்தின் மூலம் என்னுடைய பாவங்களிலிருந்து நான் மீட்கப்பட உதவி செய்தீரே என்று கர்த்தரை துதிக்கலாம். ஆனால் இவ்வித உணர்வுகளோடு சிலுவையை பார்ப்பவர்கள் எத்தனைபேர் என்று கேட்க வேண்டியுள்ளது. பல ஆலயங்களில் சிலுவை அடையாளம் என்பது இங்கே ஒரு கிறிஸ்துவ ஆலயம் இருக்கிறது என்பதை பிறருக்கு அடையாளம் காட்டவே பயன்படுகிறது. பலர் அந்த அடையாளத்தை நாங்களும் கிறிஸ்தவர்கள் என்று அடையாளம் காட்ட உபயோகிக்கிறார்கள்.
கிறிஸ்துவர்கள் அணியும் ஆபரணங்களிலும் இந்த அடையாளம் இடம் பெற்று அதை அணிந்துள்ளவர்கள் கிறிஸ்தவர்கள் என்று அறிவிக்கிறது. சிலுவை ஆசீர்வாத சின்னமாக மாற்றப்பட்டது. எனவே இந்த சிலுவையின் அடையாளம் இணையும் இடங்களில் ஆசிர்வாதங்கள் எதிர்பாக்கப்படுகிறது. சிலுவையை நெற்றியில் குறித்தல், வீட்டு சுவர்களிலோ, கதவுகளிலோ வரைந்து வைத்தல்.
சிலுவை அடையாளம் பொறித்த பொருட்களை உபயோகித்தல் போன்றவை கிறிஸ்தவ ஐதீகங்களாக மாறிவிட்டன. எப்படியோ சிலுவை மிக விரும்பப்பட்ட முக்கிய அடையாளமாகி விட்டது. ஆனால் சிலுவையின் உண்மையான அர்த்தங்கள் மறக்கப்பட்டுவிட்டன. சிலுவை அடையாளங்களை நம்மோடு வைத்திருப்பதாலும், சிலுவை அடையாளங்களை நாம உபயோகிக்கும் பொருட்களில் பொறிப்பதாலும் ஆசீர்வாதம் வரும் என்ற ஐதீக சிந்தனை மாற வேண்டும்.
சிலுவையை அல்ல சிலுவையில் நமக்காக அறைப்பட்ட ஏசுவின் ஐக்கியத்தை நம்மிடம் காண எப்போதும் சிலுவை மூலம் ஏசு நமக்காக உருவாக்கிய ரட்சிப்பின் அனுபவம் நம்மோடு இருக்க வேண்டும். நமக்கு தேவை சிலுவையின் அடையாளம் அல்ல. சிலுவையின் மூலமாக நமக்காக ஆயத்தமாக்கப்பட்ட பரிசுத்த வாழ்வு என்ற அடையாளமே அவசியம். சிலுவையை பார்ப்போம் ஆசீர்வாதத்துக்காக அல்ல ஆசீர்வாதம் உருவான வழியை உணர்ந்து அதற்கேற்ப வாழ்வதற்காக.

எரேமியா எழுதிய நூல் ‘புலம்பல்’. இவை எருசலேமின் அழிவையும், மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட துயரத்தையும் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன.
எரேமியா எழுதிய நூல் ‘புலம்பல்’. ஐந்து எபிரேயக் கவிதைகளால் ஆனது. துயரத்தின் விளிம்பில் ஒலிக்கின்ற பாடல்களாக இந்தக் கவிதைகள் இருக்கின்றன. இவை எருசலேமின் அழிவையும், மக்கள் வாக்களிக்கப்பட்ட நாட்டை விட்டு வெளியேற்றப்பட்ட துயரத்தையும் பாடுபொருளாகக் கொண்டிருக்கின்றன.
விவிலியத்தில் உள்ள நூல்களிலேயே கண்ணீரின் ஈரத்தால் நிரம்பி யிருக்கும் நூல் இது தான். ஒரு தேசத்தின் நிலைகண்டு கண்ணீர் வடிக்கின்ற ஒரு இறைவாக்கினரின் வலிகள் இதில் வரிகளாய் இருக்கின்றன.
இந்த நூலில் உள்ள சில செய்திகள் நமது உயிரையும் உலுக்கி எடுக்கும் வலிமை கொண்டவை. இஸ்ரேல் முற்றுகையிடப்பட, வாழவே வழியில்லாமல், தாய் சொந்த குழந்தைகளையே கொன்று தின்கின்ற செய்தியை வாசித்து விட்டு அதிர்ச்சியடையாமல் கடந்து செல்ல முடியாது.
எரேமியா ஒரு கவிஞர். எனவே துயரத்தையும், மக்களின் வலியையும், இயலாமையையும் கண்ணீரால் பதிவு செய்கிறார். இவருக்கு ‘அழும் இறைவாக்கினர்’ எனும் பட்டப்பெயரும் உண்டு.
இந்த நூலின் பாடல்கள் எருசலேமின் துன்பம், எரிசலேமின் தண்டனை, தண்டனைத் தீர்ப்பும் நம்பிக்கையும், வீழ்ச்சியடைந்த எருசலேம், இரக்கத்திற்கான இறைவேண்டல் எனும் சிந்தனைகளில் அமைந்துள்ளன. எபிரேய எழுத்துகள் இருபத்து இரண்டு. அதன் அடிப்படையில் இருபத்திரண்டு வசனங்கள் என பாடல்கள் அமைந்துள்ளன. ஒரு பாடல் மட்டும் 66 வசனங்களோடு இருக்கிறது. ஒவ்வொரு எழுத்துக்கும் மூன்று வசனங்கள் எனும் கணக்கில்.
அழுகையையும், கண்ணீரையும் விவிலியம் ஊக்கப்படுத்தியே வந்திருக்கிறது. கண்ணீர் சரணடைதலின் அடையாளம், உடைதலின் அடையாளம், உணர்வின் அடையாளம். எபிரேயச் சிந்தனை கண்ணீரை ஆதரித்தது. கிரேக்கச் சிந்தனையே கண்ணீரை அவமானமாக்கியது.
இந்த ஐந்து பாடல்களும் இலக்கிய நயத்தோடும், ஆன்மிக புரிதலோடும், உணர்வின் மொழியோடும் வடிக்கப்பட்டிருக்கிறது. முதல் பாடல் “அவள்” எனும் கருப்பொருளில் அமைகிறது. நகரை, ‘அவள்’ என்றும், நகரிலுள்ள மக்களை ‘எருசலேம் மகளிர்’ என்றும் இந்த பாடல் குறிப்பிடுகிறது.
இரண்டாவது பாடல், “அவன்” எனும் பெயரில் அமைகிறது. இந்த துயரங்களுக்கெல்லாம் காரணமான அவன் யார்? இறைவனை மையப்படுத்தும் பாடல் இது.
மூன்றாவது பாடல் ‘நான், எனது’ என தன்னிலைப்படுத்தும் பாடல். இது எருசலேமைப் பற்றிப் பாடுகிறது. நான்காவது பாடல் “அவர்கள்” எனும் மையத்தில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ஐந்தாவது பாடல் ‘நாம், நமது’ எனும் பொருளில் அமைந்துள்ளது.
முதல் பாடல் அழிந்து கிடக்கின்ற நகரையும் நகரின் மக்களையும் பார்க்கிறது. பாவம் தான் இந்த அழிவின் காரணம். அது அவரை இன்னும் காயப்படுத்துகிறது. பாலை நிலம் போல வெற்றிடமாய்க் கிடக்கும் நகர் அவரை கண்ணீர் விட வைக்கிறது.
இரண்டாவது பாடல் இறைவனின் கோபம் கொதித்தெழுவதைப் பற்றிப் பாடுகிறது. கடவுள் பொறுமையுடன் காத்திருக்கிறார். ஆனால் மக்களுக்கு அது புரியவில்லை. பாவம் புரிகின்றனர். இனிய வாழ்வை இழக்கின்றனர். கடவுளின் தண்டனையை இந்த பாடல் பேசுகிறது.
மூன்றாவது பாடலை தன்னை மையப் படுத்தி எரேமியா எழுதியுள்ளார். எத்தனையோ மன வருத்தங்களைக் கடவுளுக்குக் கொடுத்தபின்னும் அவர் மக்களை முழுமையாய் அழிக்கவில்லை. அவர்களை வேறொரு நாட்டுக்கு அனுப்பும் வேலையை மட்டுமே செய்கிறார் என்பதே அவரது ஆறுதல். அதில் இறைவனின் இரக்கத்தை அவர் கண்டு கொள்கிறார்.
நான்காவது பாடல் மக்கள் மனம் திரும்ப வேண்டும் எனும் சிந்தனையின் அடிப்படையில் இருக்கிறது. ஏதேன் தோட்டத்தின் ஆதாம் ஏவாள் நிகழ்வுகளைக் குறிப்பிட்டு பாவத்தைப் பேசுகிறார். மனம் திரும்புதல் நிச்சயம் தேவை என்பதை புலம்பலாய் வடிக்கிறார்.
ஐந்தாவது பாடல் ஒரு செபம். ஒரு இறை வேண்டல். இறைவனின் இரக்கம் வேண்டுமென இறைஞ்சுகின்ற விண்ணப்பம். இறைவன் மனம் இரங்குவார் எனும் நம்பிக்கை இதில் இழையோடுகிறது.
எரேமியாவும், இறைமகன் இயேசுவும் பல இடங்களில் ஒரே சிந்தனையுடன் செயல்படுவதை அவரது வாழ்க்கையும், எழுத்துகளும் எடுத்துரைக்கின்றன. அதனால் தான் பல நூற்றாண்டுகளுக்குப் பின் “என்னை மக்கள் யார் என சொல்கிறார்கள்” என இயேசு தன் சீடர்களிடம் கேட்டபோது “சிலர் எரேமியா என்கின்றனர்” என்று சீடர்கள் பதில் சொன்னார்கள்.
இருவரும் சொந்த ஊரில் மதிக்கப்படவில்லை, இருவரும் ஆட்டுக்குட்டியோடு ஒப்பிடப்படுகிறார்கள். ஆலயத்தின் புனிதம் கெடுகையில், “இந்தக் கோவில் உங்கள் பார்வையில் கள்வரின் குகையாகிவிட்டதோ” என இருவருமே கூறுகின்றனர்.
இந்த புலம்பல் நூல் பைபிளுக்கு மட்டும் உரியதல்ல. இன்றும் யூதர்கள் அபிப் (ஜூலை) மாதத்தின் ஒன்பதாம் நாள் இந்த முழு நூலையும் தொழுகைக் கூடங்களில் பாடிப் புலம்புவார்கள். காரணம் கி.மு. 586- ல் அதே நாளில் தான் எருசலேம் தேவாலயம் இடிக்கப்பட்டது.
வியப்பான இன்னொரு விஷயம் என்னவெனில், அந்த தேவாலயம் புதுப்பிக்கப்பட்ட பின் இரண்டாவது முறையும் இடிக்கப்பட்டது. கி.பி. 70-ல் அதே நாளில்.
பைபிள் வியப்பின் நூல், புலம்பல் அந்த வியப்பின் ஒரு துளி.

கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
கோவை புலியகுளத்தில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தின் தேர் பவனி ஆண்டுதோறும் நடைபெறும்.
இந்த ஆண்டு ஆடம்பர தேர் திருவிழா கடந்த 9-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து காலை மற்றும் மாலை நேரங்களில் சிறப்பு திருப்பலி நடந்தது. 15-ந் தேதி காலையில் புதுநன்மை நிகழ்ச்சி நடைபெற்றது.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர் பவனி நேற்று நடந்தது. இதையொட்டி நேற்று காலை 8 மணியளவில் ஆயர் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் ஆடம்பர கூட்டுத்திருப்பலி, மறை மாவட்ட பொருளாளர் ஜோ பிரான்சிஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. தொடர்ந்து இரவு 8 மணியளவில் ஆடம்பர தேர் பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர்.

சுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.
திருச்சி சுப்ரமணியபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. தொடர்ந்து தினமும் மாலை சிறப்பு திருப்பலி நடந்து வருகிறது. இந்த நிலையில் விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடந்தது.
ஆலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்த பின் தேர்பவனி நடந்தது. மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டிருந்தது. தேர் சுப்ரமணியபுரம் வீதிகளை சுற்றி ஆலயத்தை வந்தடைந்தது. இதில் கிறிஸ்தவர்கள் உள்பட திரளானோர் கலந்து கொண்டனர்.

மேல்நாரியப்பனூரில் புனித அந்தோணியார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே மேல்நாரியப்பனூரில் பழமைவாய்ந்த புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் பெருவிழா வெகுவிமரிசையாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டுக்கான பெருவிழா கடந்த 5-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதைதொடர்ந்து ஆலயத்தில் தினசரி சிறப்பு பிரார்த்தனை மற்றும் கூட்டு திருப்பலி நடைபெற்று வந்தது. மேலும் பொருத்தனை தேர்பவனி உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடைபெற்றது.
விழாவின் சிகர நிகழ்ச்சியான ஆடம்பர தேர்பவனி நேற்று முன்தினம் இரவு நடைபெற்றது.
இதையொட்டி புதுச்சேரி- கடலூர் உயர்மறை மாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் பெருவிழா திருப்பலி நடைபெற்றது. பின்னர் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர்களில் புனித சூசையப்பர், புனித மரியாள், புனித அந்தோணியார் சொரூபங்கள் வைக்கப்பட்டது. அதன்பிறகு ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது.
பவனியானது மேல்நாரியப்பனூர் பகுதியின் முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் சின்னசேலம், விழுப்புரம், சேலம், கள்ளக்குறிச்சி, சங்கராபுரம், புதுச்சேரி, பெங்களூரு, கடலூர், பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான கிறிஸ்தவர்கள் மற்றும் பல்வேறு மதத்தினர் கலந்து கொண்டனர். இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை பால்ராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

கடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழாவை முன்னிட்டு தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளானவர்கள் கலந்து கொண்டனர்.
கடலூர் சொரக்கல்பட்டு புனித அந்தோணியார் ஆலய ஆண்டு பெருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. முன்னதாக திருப்பலி நடந்தது. தொடர்ந்து ஒவ்வொரு நாளும் திருப்பலி, நற்கருணை ஆராதனை நடைபெற்றது. முக்கிய நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது.
இதில் திருப்பாதிரிப்புலியூர் புனித வளனார் மேல்நிலைப்பள்ளி முதல்வரும், அருட்தந்தையுமான ஆக்னல் கலந்து கொண்டு சிறப்பு திருப்பலி நடத்தினார். தொடர்ந்து மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில் அந்தோணியார் சொரூபம் வைக்கப்பட்டது.
அதன்பிறகு கோவில்தெரு, பாரதி சாலை, பீச்ரோடு, கான்வென்ட் சாலை போன்ற முக்கிய சாலைகள் வழியாக தேர் பவனி வந்து மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

புதுச்சேரி ஆட்டுப்பட்டி புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடந்தது.இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
புதுச்சேரி ஆட்டுப்பட்டி புனித பதுவை அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 10-ந் தேதி மாலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் தினமும் மாலை திருப்பலியும் தொடர்ந்து சிறிய தேர்பவனியும் நடந்தது.
விழாவில் நேற்று காலை 6.30 மணிக்கு அந்தோணி ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது. மாலை 5.30 மணிக்கு புதுவை - கடலூர் மறைமாவட்ட பேராயர் அந்தோணி ஆனந்தராயர் தலைமையில் திருவிழா திருப்பலியும் தொடர்ந்து ஆடம்பர தேர்பவனியும் நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 4-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் 10-ம் நாளான நேற்று தேர்பவனி நடைபெற்றது. இதனையொட்டி அதிகாலை 5 மணிக்கு பாளை மறைமாவட்ட அருட்பணியாளர் டெரன்ஸ் தலைமையில் திருவிழா திருப்பலி காலை 7 மணிக்கு அழகப்பபுரம் அருட்பணியாளர்கள் தலைமையில் திருப்பலி மதியம் 2.30 மணிக்கு தேர்பவனி இரவு 8.30 மணிக்கு நற்கருணை ஆசீர் ஆகியவை நடந்தது. தேர்பவனியில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை நெல்சன் பால்ராஜ் உதவி பங்குத்தந்தை சர்ச்சில் பங்குபேரவை துணைத்தலைவர் சேவியர் மணி செயலாளர் பாண்டியன் இணை செயலாளர் கீவன் பொருளாளர் செல்லத்துரை மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.