என் மலர்
கிறித்தவம்
திண்டுக்கல் புனித வளனார் பேராலயம் சார்பில் இந்த ஆண்டுக்கான நற்கருணை பெருவிழா நடந்தது.
திண்டுக்கல் புனித வளனார் பேராலயம் சார்பில் ஆண்டுதோறும் நற்கருணை பெருவிழா நடத்தப்பட்டு வருகிறது. இதையொட்டி சிறப்பு திருப்பலி, பவனி, நற்கருணை ஆசீர் வழங்கப்படுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான நற்கருணை பெருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி திண்டுக்கல் புனித வளனார் பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதனை, மதுரை மாநில சேசு சபை தலைவரின் உதவியாளர் தேவதாஸ், பாதிரியார்கள் இணைந்து நிறைவேற்றினர்.
அதைத்தொடர்ந்து அங்கிருந்து நற்கருணை பவனி தொடங்கியது. இதில் மாரம்பாடி வட்டார அதிபர் அமலதாஸ் நற்கருணையை ஏந்தி வர அண்ணா சிலை, தூய மரியன்னை மேல்நிலைப்பள்ளி வழியாக பவனி பேராலயத்தை அடைந்தது. அங்கு, திண்டுக்கல் குமரன் திருநகர் பங்குத்தந்தை ஸ்டீபன் கஸ்பார் மறையுரை ஆற்றினார். அதன்பிறகு அனைவருக்கும் நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. இதில் பாதிரியார்கள், அருட்சகோதரிகள், பங்கு மக்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஆழ்வார்திருநகரி தூய அன்னம்மாள் ஆலய சப்பர பவனி நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
தூத்துக்குடி மாவட்டம் ஆழ்வார்திருநகரியில் உள்ள தூய அன்னம்மாள் ஆலய திருவிழா கடந்த மாதம் 28-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழா 10 நாட்கள் நடந்தது. கடந்த 5-ந் தேதி நற்கருணை பவனி நடந்தது. நேற்று முன்தினம் இரவில் குரும்பூரை சேர்ந்த அமல் தலைமையில் மாலை ஆராதனை நடந்தது. இதில் பலர் கலந்து கொண்டனர்.
நேற்று காலை 7.30 மணிக்கு திருவிழா திருப்பலி நடந்தது. திருப்பலிக்கு லூசியா மையத்தை சேர்ந்த கிராசிஸ் மைக்கேல் தலைமை தாங்கினார். அதனை தொடர்ந்து மதியம் 12 மணிக்கு சப்பர பவனி நடந்தது. சப்பர பவனியானது ஆழ்வார்திருநகரி பஜார் பகுதி வழியாக சென்று மீண்டும் ஆலயத்தை வந்தடைந்தது. மாலை 5 மணிக்கு ஆலய திருவிழா கொடி இறக்கத்துடன் நற்கருணை ஆசீர் நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பெண்ணாடத்தில் புனித தோமையார் ஆலய ஆடம்பர தேர்பவனி நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
பெண்ணாடம் அருகே உள்ள பெ.பொன்னேரியில் புனித தோமையார் ஆலயம் அமைந்துள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் திருவிழா சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்த ஆண்டுக்கான விழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனை தொடர்ந்து தினந்தோறும் ஆலயத்தில் கூட்டு திருப்பலி நடைபெற்று வந்தது. விழாவின் சிகர நிகழ்ச்சியான தேர்பவனி நேற்று முன்தினம் நடந்தது. இதையொட்டி திருப்பலி மற்றும் பிரார்த்தனை நடந்தது. தொடர்ந்து இரவு வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தனித்தனி தேர்களில் காவல் சம்மனசு, அன்னை மாதா, புனித தோமையார் ஆகிய சொரூபங்கள் வைக்கப்பட்டது.
அதனை தொடர்ந்து பங்குதந்தை குழந்தைராஜ் தலைமையில் தேர்பவனி நடைபெற்றது. பவனியானது முக்கிய வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலய வளாகத்தை வந்தடைந்தது. இதில் பெ.பொன்னேரி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.

பெருமை என்ற சிறிய குணம் எவ்வளவு பெரிய மனிதர்களையும் அழித்துவிடும். ஆனால் தாழ்மை என்னும் குணம் எவ்வளவு சிறிய மனிதர்களையும் பெரியவர்களாக்கி விடும்.
‘நான் அதிகம் படித்தவன்’ என்ற மமதையுடன், மற்றவர்களை அற்பமாய் கருதுகிற பண்டிதர் ஒருவர் இருந்தார். ஒருமுறை ஒரு காட்டாற்றைக் கடந்து ஒரு கிராமத்திற்கு செல்ல வேண்டியதாயிற்று. அந்த பண்டிதர் ஆற்றின் கரையில் இருந்த பரிசல் ஓட்டுபவரை வாடகைக்கு அமர்த்தி ஆற்றைக் கடக்க தீர்மானித்தார்.
பரிசலில் ஏறியவுடன் அமைதியாக இருந்த பண்டிதர் சிறிது நேரம் கழித்து, பரிசல்காரனிடம், ‘பரிசல்காரா, உனக்கு அர்த்தசாஸ்திரம் தெரியுமா?’ என்று கேட்டவுடன், அவன் மிகவும் வருத்தத்துடன் ‘ஐயா, நான் படிக்காதவன் அதெல்லாம் எனக்கு தெரியாது ஐயா’ என்றான்.
உடனே பண்டிதர் ‘போடா முட்டாள், வாழ்க்கையின் கால்பகுதியை வீணாக்கிவிட்டாய்’ என்றார். உடனே பரிசல்காரன் ‘ஐயோ கடவுளே கால்பகுதி போச்சே’ என்று புலம்பினான்.
மறுபடியும் சிறிது தூரம் சென்றவுடன் பண்டிதர், ‘ஓ பரிசல்காரா, உனக்கு பூகோள சாஸ்திரமாவது தெரியுமா?’ என்றவுடன், ‘ஐயா அதுவும் எனக்கு தெரியாது’ என்றான். உடனே பண்டிதர் ‘அட மடையா, உன் வாழ்க்கையில் அரைவாசியை வீணடித்து விட்டாயே’ என்றார். பரிசல்காரன் கவலையோடு பரிசலை செலுத்தினான். பரிசல் ஆற்றின் மையப்பகுதியை நெருங்கிக் கொண்டிருந்தது.
மீண்டும் பண்டிதர் ‘பரிசல்காரனே, உனக்கு வான சாஸ்திரமாவது தெரியுமா?’ என்று கேட்கவே, பரிசல்காரன் ஓவென்று அழுது கொண்டே ‘ஐயா இது கூட எனக்கு தெரியாது’ என்றான். உடனே பண்டிதர் ‘போடா மூடனே, உன் வாழ்க்கையின் முக்கால் பகுதியை நீ வீணாக்கிவிட்டாய்’ என்றார்.
இதற்குப்பின் பரிசல்காரன் மிகவும் வருத்தத்தோடு பரிசலை செலுத்தினான். பரிசல் ஆற்றின் நடுப்பகுதியை அடைந்தது. இந்த நேரத்தில் காற்று பலமாக அடிக்க ஆரம்பித்தது. புயல் மழை வரத்தொடங்கியது, பண்டிதர் முகத்தில் இருந்த கர்வம் மறைந்து பயம் தொற்றிக்கொண்டது.
பரிசலில் தண்ணீர் நிரம்ப ஆரம்பித்து, ஒருபகுதி தண்ணீரில் மூழ்கத் தொடங்கியது. அப்போது பரிசல்காரன் பண்டிதரை நோக்கி, ‘ஐயா பண்டிதரே உங்களுக்கு நீச்சல் சாஸ்திரம் தெரியுமா?’ என்று கேட்டவுடன், ‘என்னது நீச்சல் சாஸ்திரமா? நான் இதுவரை கேள்விப்பட்டதில்லையே’ என்றார்.
உடனே பரிசல்காரன், ‘ஐயையோ என்னை மன்னிச்சிடுங்க ஐயா! உங்க வாழ்க்கையின் முழுபகுதியும் வீணாகிவிட்டது’ என்று சொல்லி ஆற்றில் குதித்தான். பண்டிதரின் நிலைமை பரிதாபத்திற்குள்ளானது.
பெருமை என்ற சிறிய குணம் எவ்வளவு பெரிய மனிதர்களையும் அழித்துவிடும். ஆனால் தாழ்மை என்னும் குணம் எவ்வளவு சிறிய மனிதர்களையும் பெரியவர்களாக்கி விடும்.
‘இறுமாப்பு ஒருவரைத் தாழ்த்தும், தாழ்மை உள்ளம் ஒருவரை உயர்த்தும்’ (நீதிமொழிகள் 29:23).
தாழ்மையின் வடிவம் இறைமகன் இயேசு
‘தாழ்மை’ என்றால் நடத்தையில் அல்லது மனப்பான்மையில் பணிவு காண்பிப்பதாகும். ‘மனத்தாழ்மை’ என்றும் சொல்லலாம். இது இறைவன் விரும்புகிற பண்பு மட்டுமல்ல, இறைவனின் பண்புமாகும்.
ஆண்டவர் இயேசு ஏழையாய் பிறந்து ஏழ்மையில் வாழ்ந்து கைவிடப்பட்டவராகவே மரித்தார். கடவுள் வடிவில் விளங்கிய அவர், கடவுளுக்கு இணையாயிருக்கும் நிலையை வலிந்து பற்றிக்கொண்டிருக்க வேண்டியதொன்றாகக் கருதவில்லை.
ஆனால் தம்மையே வெறுமையாக்கி அடிமையின் வடிவை ஏற்று மனிதருக்கு ஒப்பானார். மனித உருவில் தோன்றி, சாவை ஏற்கும் அளவுக்கு, அதுவும் சிலுவைச் சாவையே ஏற்கும் அளவுக்குக் கீழ்படிந்து தம்மையே தாழ்த்திக்கொண்டார்.
தாழ்மையை விரும்புகிற கடவுள்
நாம் சேவிக்கிற நம் இறைவன் கனிவும், மனத்தாழ்மையும் உடையவராயிருக்கிறார். ஆதலால் நம்மிடத்திலேயும் அவர் தாழ்மையான வாழ்வை எதிர்பார்க்கிறார். ‘ஓ மானிடா நல்லது எது என அவர் உனக்கு காட்டியிருக்கின்றாரே. நேர்மையைக் கடைப்பிடித்தலையும் இரக்கம் கொள்வதில் நாட்டத்தையும் உன் கடவுளுக்கு முன்பாக தாழ்ச்சியோடு நடந்து கொள்வதையும் தவிர வேறு எதை ஆண்டவர் உன்னிடம் கேட்கிறார்?’ (மீகா 6:8).
தாழ்நிலையில் உள்ளவர்களுக்கு கருணை காட்டுவார்
அகந்தையையும் மனமேட்டிமையையும் வெறுக்கிற கடவுள் பரிவு, இரக்கம், நல்லெண்ணம், கனிவு, பொறுமையைப் பூண்டவர்களாக நாம் வாழ வேண்டும் என்று விரும்புகிறார். ‘செருக்குற்றோரைக் கடவுள் இகழ்ச்சியுடன் நோக்குவார் தாழ்நிலையில் உள்ளவர்களுக்கோ கருணை காட்டுவார்’ (1 பேதுரு 5:5).
தாழ்த்துகிறவர்களை ஆண்டவர் உயர்த்துவார்
தங்களை உயர்ந்தவர்களாகவும் மற்றவர்களை அற்பமாகவும் எண்ணிய பரிசேயர், சதுசேயர், தலைமைக் குருக்கள், மூப்பர்கள், மறைநூல் அறிஞர்கள், போன்றவர்களின் மனமேட்டிமையை இயேசு கண்டிக்கிறார். ‘பெரியவராக இருக்க விரும்புகிறவர் தொண்டராக இருக்க வேண்டும்’ என்கிறார்.
தம்மைத்தாமே உயர்த்துகிறவர் எவரும் தாழ்த்தப்பெறுவர். தம்மைத்தாமே தாழ்த்துகிறவர் எவரும் உயர்த்தப்பெறுவர். நாம் மண், தூசியும் சாம்பலுமானவர்கள் என்று ஒன்றுமற்றவர்களாக கருதி, கடவுளின் வல்லமைமிக்க கரத்தில் நம்மை ஒப்படைக்கின்றபொழுது, ஏற்ற காலத்தில் அவர் நம்மை உயர்த்துவார்.
‘உங்களிடம் பணிவு இருந்தால், புகழ்ச்சியோ இகழ்ச்சியோ உங்களைப் பாதிக்காது. ஏனெனில் உங்கள் உண்மை நிலை உங்களுக்கேத் தெரியும்’ என்கிறார். அன்னை தெரசா அவர்கள்.
ஆண்டவர் முன் உங்களைத் தாழ்த்துங்கள் அவர் உங்களை உயர்த்துவார்’ (யாக் 4:10).
அருட்பணி ம.பென்னியமின், தூய பவுல் லுத்தரன் ஆலயம், உண்ணாமலைக்கடை.

ரோமன் கத்தோலிக்க கிறிஸ்தவ ஆலயங்களில் மிகவும் பிரசித்தி பெற்றது குமரி மாவட்டத்தில் உள்ள கோட்டார் புனித சவேரியார் ஆலயம். இந்த ஆலயத்தின் வரலாற்றை அறிந்து கொள்ளலாம்.
குமரி மாவட்ட தலைநகரமான நாகர்கோவில் நகரின் மைய பகுதியான கோட்டாரில் அமைந்துள்ளது சவேரியார் ஆலயம். சவேரியார் திருப்பலி நடத்தியதால் அவரது பெயரை தாங்கி நிற்கும் இந்த ஆலயத்துக்கு சாதி, மத வேறுபாடு பார்க்காமல் அனைத்து சமுதாய மக்களும் வந்து செல்கின்றனர். அப்படி வந்து செல்வோர் தங்களது வேண்டுதல்படி நோய்களில் இருந்து விடுதலை கிடைக்கிறது என்ற நம்பிக்கையும் கொண்டுள்ளனர்.
உலகிலேயே சவேரியாருக்கு முதன்முதலாக ஆலயம் எழுப்பப்பட்டது குமரி மாவட்டம் கோட்டாரில்தான். கோவாவுக்கு அடுத்தபடியாக இங்குள்ள சவேரியார் ஆலயம்தான் இந்தியாவில் புகழ் பெற்ற ஆலயமாக உள்ளது இன்னும் சிறப்புக்குரியது.
இந்தியா வந்த சவேரியார்
இந்த ஆலயம் பெயர் வர காரணமான சவேரியார் ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார். அவர் நவார் மாகாணத்தில் சேவியர் அரண்மனையில் உயர் குலத்தில் பிறந்தவர். 1529-ம் ஆண்டு புனித இன்னாசியாரை சந்தித்த பிறகுதான் அவரது வாழ்க்கை ஆன்மிக பாதையில் திரும்பியது. 1537-ம் ஆண்டு குருப்பட்டம் பெற்றார். 1540-ம் ஆண்டு லிஸ்பென் சென்று அங்கு 9 மாதங்கள் இறை பணி செய்தார்.
1542-ம் ஆண்டு கோவா சென்றார். அங்கு சிறையில் இருப்போர் மற்றும் ஏழைகளை சந்திப்பதும், நோயாளிகளுக்கு பணிவிடை செய்வதுமாக தனது வாழ்க்கையை அமைத்துக் கொண்டார். கோவாவில் இருந்து கடற்கரையோரமாக தமிழகம் வந்தார். மணப்பாடு பகுதியில் இறை பணி செய்து வந்த அவர், அடிக்கடி குமரி மாவட்டம் கோட்டாருக்கும் வந்து சென்றார்.
பாண்டிய மன்னரை வென்றார்
இந்தநிலையில் திருவிதாங்கூர் மன்னனுக்கும், மதுரை பாண்டிய மன்னனுக்கும் இடையே போர் நடந்தது. அப்போது சிலுவையை கையில் ஏந்தி பாண்டிய மன்னனின் படைகளை திரும்பி போக செய்ததுடன் திருவிதாங்கூர் மன்னரை வெற்றி பெறச் செய்தார். இதனால் மகிழ்ச்சி அடைந்த மன்னர், சவேரியாருக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று நினைத்தார். உடனே சவேரியாரை அழைத்து திருவிதாங்கூர் சமஸ்தானத்தில் இறை பணியை செய்ய அனுமதி அளித்தார்.
மேலும் ஆலயம் கட்டுவதற்கு கோட்டார் பகுதியில் நிலத்தையும் வழங்கி பொருள் உதவியும் செய்து கொடுத்தார். அதன்பிறகு கோட்டாரை மையமாக கொண்டு சவேரியார் இறை பணியை தொடர்ந்து செய்தார். பின்னர் அவர், பசிபிக் கடல் தீவுகள், இலங்கை, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்று இறை பணி செய்தார். இறுதியாக சீனாவுக்கு செல்லும் வழியில் சான்சியன் தீவில் கடுமையான காய்ச்சல் காரணமாக 1552-ம் ஆண்டு டிசம்பர் 3-ந் தேதி உயிர்நீத்தார்.
புனிதர் பட்டம்
6 மாதம் கழித்து சவேரியார் அடக்கம் செய்யப்பட்ட கல்லறையை திறந்து பார்த்த போது அவரது உடல் சிதைவு இல்லாமல் இருந்தது அனைவரையும் ஆச்சரியப்பட செய்தது. அதன்பிறகு இன்னும் சவேரியார் உடல் கோவாவில் உள்ள நல்ல இயேசு ஆலயத்தில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. பல நூறு மைல்கள், பல்வேறு நாடுகளுக்கு சென்று இயேசுவின் போதனைகளை கூறி ஊழியம் செய்த சவேரியாருக்கு 1622-ம் ஆண்டு புனிதர் பட்டம் வழங்கப்பட்டது.

கீழ்த்திசை நாடுகளின் திருத்தூதர், இரண்டாம் பவுல், கேட்ட வரம் தரும் கோட்டார் புனித சவேரியார் என்றெல்லாம் குமரி மாவட்ட மக்கள் சவேரியாரை கூறுவது உண்டு. சவேரியாரின் வருகைக்கு முன்னரே குமரி மாவட்டத்தில் கிறிஸ்தவர்கள் வாழ்ந்து வந்தாலும், அவரது வருகைக்கு பின்னர்தான் ஏராளமான இடங்களில் கிறிஸ்தவ சபைகள் தொடங்கப்பட்டன. கோட்டார் சவேரியார் ஆலயத்துக்கு அனைத்து சமுதாய மக்களும் வந்து செல்வதால் இந்த ஆலயம் மத நல்லிணக்கத்துக்கு எடுத்துக்காட்டாக விளங்குகிறது.
இந்த பேராலயத்தின் பங்குத்தந்தையாக கிரேஸ் குணபால் ஆராச்சியும், இணை பங்குத்தந்தையாக டோனி ஜெரோம் ஆகியோர் பணியாற்றி வருகின்றனர்.
ஆலயம் கடந்து வந்து பாதை
* 1605-ம் ஆண்டு மூவொரு இறைவன் ஆலயமானது தூய சவேரியாருக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
* 1640-ம் ஆண்டு கற்களால் ஆன புதிய ஆலயம் கட்டப்பட்டது.
* 1643-ம் ஆண்டு தூய இன்னாசியார், தூய சவேரியாரின் திருபண்டங்கள் கோட்டார் ஆலயத்தில் வைக்கப்பட்டன.
* 1752-ம் ஆண்டு மறைசாட்சி தேவசகாயம் பிள்ளை உடலின் எஞ்சிய பாகங்கள் கோட்டார் ஆலயத்தில் அடக்கம் செய்யப்பட்டன.
* 1865-ம் ஆண்டு மேற்கு, வடக்கு, தெற்கு பகுதிகள் விரிவாக்கம் செய்யப்பட்டன. அதன்பிறகு தான் ஆலயம் சிலுவை அடையாள தோற்றத்தை பெற்றது.
* 1876-ம் ஆலய பீடம் அழகிய மரத்தால் வடிவமைக்கப்பட்டது. மரத்தால் செய்யப்பட்ட தூய சவேரியார் சொரூபம் கோவாவில் இருந்து கொண்டு வரப்பட்டு பீடத்தில் நிறுவப்பட்டது.
* 1930-ம் ஆண்டு கொல்லம் மறைமாவட்டத்தில் இருந்து கோட்டார் தனி மறைமாவட்டமாக பிரிக்கப்பட்டு கோட்டார் ஆலயம் பேராலயமாக உயர்த்தப்பட்டது.
* 1955-ம் ஆண்டு ஆலயம் மீண்டும் விரிவாக்கம் செய்யப்பட்டு, தூய ஆரோபண அன்னை ஆலயம், பேராலயத்தோடு இணைக்கப்பட்டது. ஆலயத்தின் வடக்குப் பகுதியில் தூய லூர்து அன்னை கெபி அழகுற கட்டப்பட்டது.
* 1956-ம் ஆண்டு சவேரியார் இந்தியாவுக்கு வந்து 400 ஆண்டுகள் ஆனதன் நினைவாக ஆலயத்தில் கோபுரம் கட்டப்பட்டு அதன் மீது சொரூபம் நிறுவப்பட்டது.
* 1992-ம் ஆண்டு தூய சவேரியார் இந்தியாவுக்கு வருகை புரிந்து 450 ஆண்டுகள் ஆனதன் நினைவாக பேராலயம் புதுப்பிக்கப்பட்டது.
* 1994-ம் ஆண்டு முதல் தூய ஆரோபண அன்னை ஆலயத்தில் முழுநேர நற்கருணை ஆராதனை தொடங்கப்பட்டது.
* 2009-ம் ஆண்டு வெண்கலத்தால் ஆன கொடிமரம் நிறுவப்பட்டது.
* 2010-ம் ஆண்டு திருப்பீடம் மீண்டும் புதுப்பிக்கப்பட்டது.
* 2013-ம் ஆண்டு மாதா சிறப்பு பவனி தொடங்கப்பட்டது. அதன்பிறகு ஒவ்வொரு மாதமும் 2-ம் சனிக்கிழமை மாலை 6.15 மணிக்கு லூர்து அன்னை கெபியின் முன் ஜெபமாலை சிறப்பு நற்கருணை ஆசீர் வழிபாடு நடக்கிறது.
* 2014-ம் ஆண்டு தூய லூர்து அன்னை கெபி புதுப்பிக்கப்பட்டு அர்ச்சிக்கப்பட்டது.
* 2016-ம் ஆண்டு பேராலய மறுசீரமைப்பு பணி துவங்கப்பட்டது.
* 2017-ம் ஆண்டு புதுப்பொலிவு பெற்ற பேராலய அர்ச்சிப்பு விழா, புனித சவேரியாருடைய இந்திய வருகையின் 475-ம் ஆண்டு நிறைவு விழா, கோட்டார் சவேரியார் பேராலய பெருவிழா ஆகிய முப்பெரும் விழா நடந்தது.

இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கப்பட்டிருந்த இலக்கு சாதாரணமானது இல்லை. உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் பாவங்களின் தண்டனையை ஏற்றுக்கொண்டு பாவிகளாய் வாழ்பவர்களை நீதிமானாக மாற்றுவது.
ஆண்டவராகிய இயேசு கிறிஸ்துவின் நாமத்தில் அன்பின் வாழ்த்துக்கள். புனித வாரம் மிகவும் அதிசயமான நிகழ்வு சுமார் 2000 வருடங்களுக்கு முன்பு ஒலிவ மலையின் கெத்சமனே தோட்டத்தில் நிகழ்ந்தது. இந்த நிகழ்வு பரிசுத்த வேதாகமத்தில் லூக்கா: 22-44 ல் வாசிக்கலாம். “அவர் மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். அவருடைய வியர்வை ரத்தத்தின் பெருந்துளிகளாய் தரையில் விழுந்தது.
இயேசு கிறிஸ்துவின் மேல் வைக்கப்பட்டிருந்த இலக்கு சாதாரணமானது இல்லை. உலகில் உள்ள அனைத்து மனிதர்களின் பாவங்களின் தண்டனையை ஏற்றுக்கொண்டு பாவிகளாய் வாழ்பவர்களை நீதிமானாக மாற்றுவது. ஒரு மாற்றத்தை மனிதகுலத்திற்கு தருவது. இந்த இலக்கை நிறைவேற்றி முடிக்கிற கடைசி ஆயத்த நேரம் அது.
ஒரு மனிதன் அதிக வேலை செய்யும்போது அவன் ரத்தத்திலிருந்து நீர் வியர்வையாக வெளியேறுகிறது, இது ஒரு சாதாரண நிகழ்வு. ஆனால் ஒரு மனிதனிலிருந்து வியர்வை துளிகள் வராமல் ரத்தத்தின் பெருந்துளிகள் விழும் என்றால் அச்சரீரம் எவ்வளவான மன அழுத்தத்தை ஏற்றுக்கொண்டிருக்கும் என்று பாருங்கள். அது ஒரு பெண்ணின் பிரசவ வலியைவிட மிக மிக அதிகமானது. இந்த மனுகுலத்தை மீட்பதற்காக இயேசு அன்று மிகவும் வியாகுலப்பட்டு, அதிக ஊக்கத்தோடே ஜெபம் பண்ணினார். ரத்தம் சிந்தினார்.
எபிரேயர்: 9-28-ம் வசனம் இப்படி சொல்கிறது. கிறிஸ்துவும் அநேகருடைய பாவங்களைச்சுமந்து தீர்க்கும்படிக்கு ஒரே தரம் பலியிடப்பட்டு என்றும், எபிரேயர்: 10-10 இயேசு கிறிஸ்துவினுடைய சரீரம் ஒரே தரம் பலியிடப்பட்டதினாலே, அந்தச்சித்தத்தின்படி நாம் பரிசுத்தமாக்கப்பட்டிருக்கிறோம் என்றும், எபிரேயர்: 10-20 அவருடைய ரத்தத்தினாலே நமக்கு தைரியம் உண்டாயிருக்கிறது. அவருடைய ரத்தம் நமக்கு பரிசுத்தத்தையும் தைரியத்தையும் தரும்படி நமது பாவங்களை நீக்கி நம்மை சுத்திகரித்திருக்கிறது என்று வேதத்தில் கூறப்பட்டுள்ளது. பிரியமானவர்களே! தேவன் (கடவுள்) மனிதனாய் பிறந்ததே ஒரு மகா அற்புதம் அதுவும் நம் பாவங்களை போக்கும் பலியாகவும் பரிகாரமாகவும் வந்தது அற்புதத்தின் அற்புதம். எனவே இந்த அற்புதத்தின் தேவனை ஆராதிக்க மறவாதிருப் போம். ஆமென்.
பாஸ்டர்.இ.டி.பாபு, திருப்பூர்.

விவிலியத்திலுள்ள பிரபலமான புத்தகங்களின் பட்டியலைப் போட்டால் தானியேல் நூலும் தவறாமல் இடம் பிடிக்கும். நிறைய ஆச்சரியங்களாலும், வியப்பூட்டும் நிகழ்வுகளாலும், குறியீடுகளாலும் நிரம்பியிருக்கும் நூல் என தானியேல் நூலைச் சொல்லலாம்.

இஸ்ரேல் மக்கள் நாடுகடத்தப்பட்ட போது அவர்களோடு பாபிலோன் நாட்டுக்கு வந்தவர் தான் தானியேல். அப்போது கொடுங்கோலன் நெபுகத்நேசர் ஆட்சியில் இருக்கிறார்.
தானியேல் பாபிலோனில் இறைவனுக்கு சாட்சியான ஒரு வாழ்க்கையை வாழ்கிறார், அங்குள்ள மக்களையும் இறைவனின் அருஞ்செயல்களைக் காண வைக்கிறார். மக்கள் இறைவனை நாடி வர காரணமாகிறார் என்பது இந்த நூலின் ஒரு வரிச்செய்தி எனலாம்.
எபிரேய மொழியிலும், அரேமிய மொழியிலும், கிரேக்க மொழியிலும் என மூன்று மொழிகளில் கலந்து எழுதப்பட்ட நூல் தானியேல். விவிலியத்தில் மொத்தம் 735 எதிர்கால தீர்க்கதரிசனங்கள் உண்டு. அதில் 166 தானியேல் நூலில் இடம்பெற்றிருக்கிறது என்பது வியப்பான விஷயம். இதில் பெரும்பாலானவை குறியீடுகள்.
கி.மு. 605, 606 களில் தானியேல் பாபிலோனுக்கு கொண்டு வரப்படுகிறார். அரசவையில் வேலை பார்க்கும் வாய்ப்பு கிடைக்கிறது. அவரும் அவருடைய மூன்று நண்பர்களும் அங்கே பணியாற்றுகிறார்கள். அவர்களுக்கு பாபிலோனிய பெயர்கள் வழங்கப்படுகின்றன. பெயர்களை மாற்றிக்கொண்டாலும் இறைவனை மாற்றிக்கொள்ளவில்லை அவர்கள். இறைவன் தந்த கட்டளைகளைக் கடைப்பிடித்து வாழ்கின்றனர்.
இந்த நூல் தானியேலின் 75 ஆண்டு கால வாழ்க்கையையும், இஸ்ரேல் மக்களின் 440 ஆண்டு கால வரலாற்றையும் பதிவு செய்கிறது. தானியேல் நூலில் பன்னிரண்டு அதிகாரங்கள் உள்ளன. முதல் ஆறு அதிகாரங்களும் எளிமையாகவும், வியப்பூட்டும் அற்புதங்களாலும் நிரம்பியிருக்கின்றன.
ஒரு நிகழ்வில் மன்னன் நெபுகத்நேசர் ஒரு கனவு காண்கிறார். பொதுவாக கனவுக்கு விளக்கம் கேட்கத் தான் அறிஞர்களை அழைப்பார்கள். இங்கே கொஞ்சம் வித்தியாசமாக மன்னன் ஒரு கட்டளை இடுகிறார். அறிஞர்கள் மன்னர் கண்ட கனவையும் சொல்ல வேண்டும், அதன் பலனையும் சொல்ல வேண்டும். யாராலும் விடுவிக்க முடியாத இந்தப் புதிரை தானியேல் விடுவித்தார். கனவையும் சொல்லி அதன் பலனையும் அவர் விளக்கினார்.
அந்தக் கனவு கடவுளால் நெபுகத்நேசருக்கு விடுக்கப்பட்ட ஒரு எச்சரிக்கை. ‘அரசுகளை அமைப்பதும், கலைப்பதும் என்னால் ஆகும்’ என்பதை இறைவன் இந்த கனவின் மூலம் மன்னருக்குப் புரிய வைக்கிறார்.
இன்னொரு நிகழ்வில், மன்னன் தன்னுடைய பொற்சிலை ஒன்றை வடிக்கிறான். அது 90 அடி உயரமும், ஒன்பது அடி அகலமும் உடையது. அதை மக்கள் எல்லோரும் வணங்க வேண்டும் என்பது அரச கட்டளை. எல்லோரும் கட்டளைகளுக்குக் கட்டுப்படுகிறார்கள்.
ஆனால் தானியேலின் நண்பர்கள் “சாத்ராக்கு, மேசாக்கு, ஆபேத்நெகோ” ஆகியோர் மன்னனை வணங்காமல் கடவுளை மட்டுமே வணங்குகின்றனர். அதனால் கோபமுற்ற மன்னன் அவர்களுக்கு ஒரு கடைசி வாய்ப்பை வழங்குகிறார். அவர்களோ அதை ஏற்றுக்கொள்ளவில்லை.
வழக்கத்தை விட ஏழு மடங்கு சூடான நெருப்புச் சூளையில் அவர்கள் எறியப்பட்டனர். அவர்களை நெருப்பில் எறியச் சென்றவர்கள் அந்த வெப்பத்தில் கருகி இறந்தனர். ஆனால் நெருப்புக்குள் விழுந்தவர்களோ நெருப்பின் நடுவே இறைவனோடு உலவினார்கள். அதிர்ந்து போன மன்னன், இவர்களின் கடவுளே உண்மைக் கடவுள் என பிரகடனம் செய்தான்.
இன்னொரு கனவில் ஒரு மிகப்பெரிய மரம் வானளாவ வளர்ந்து நிற்கிறது. எல்லா வித விலங்குகளுக்கும் பறவைகளுக்கும் அது நிழலும், கனியும் தருகிறது. அது பின்னர் கடவுளின் தூதனால் வெட்டி வீழ்த்தப்படுகிறது. ஆனாலும் அதன் அடிமரம் மட்டும் விட்டு வைக்கப்படுகிறது. ஏழு ஆண்டுகள் அது அப்படியே இருக்கும் என உரைக்கப்படுகிறது. அதன் விளக்கத்தையும் தானியேலால் மட்டுமே கூற முடிந்தது.
கனவின் படி மன்னனே அந்த மரம். மன்னன் வீழ்வான். ஏழு ஆண்டுகள் அவன் விலங்கைப் போல அலைவான். புல் தின்று, பனியில் நனைந்து ஒரு மனநலம் பாதிக்கப்பட்டவனாய் வாழ்வான். ஏழு ஆண்டுகளுக்குப் பின் மீண்டும் அரசு அவனுக்குக் கிடைக்கும். தானியேலின் விளக்கத்தின்படியே அனைத்தும் நடந்தன.
இன்னொரு முக்கியமான நிகழ்வில் மன்னனை வழிபட மறுத்த தானியேல் சிங்கத்தின் குகையில் வீசப்படுகிறார். அப்போது மன்னனாய் இருந்தவர் தாரியு. தானியேலின் வயது 90. தானியேல் சிங்கத்தின் குகைக்குள் அமைதியாய் துயில்கிறார். சிங்கங்கள் அவரை எதுவும் செய்யவில்லை. மறுநாள் எல்லோரும் வியப்படைகின்றனர். தானியேலின் மீது குற்றம் சாட்டப்பட்டவர்கள் அப்போது குகையில் எறியப்படுகின்றனர். தரையை அடையும் முன் சிங்கங்கள் அவர்களைக் கவ்விக் கிழிக்கின்றன.
இரண்டாம் பாகமான ஏழு முதல் 12 வரையிலான அதிகாரங்கள் கொஞ்சம் கடினமான குறியீடுகளால் ஆனது. அவை மிகப்பெரிய இறையியல் சிந்தனைகளும், துல்லியமான எதிர்கால தீர்க்க தரிசனங்களும் அடங்கியது.
மொத்தத்தில், தானியேல் நூல் இறைவனின் வலிமையையும், திட்டங்களையும் விளக்கும் ஒரு அற்புதமான பெட்டகம்.
சேவியர்

கடவுள் விரும்புகிறதற்கும் நாம் செய்வதற்கும் நடுவே பல முரண்களிருந்தாலும் அவர் தீர்வாக நமக்கு தருவது மன்னிப்பு. அந்த மன்னிப்பையே நாமும் விட்டுக்கொடுப்பதின் மூலமும் பகிர்வதின் மூலமும் ஏற்றுக்கொள்வதின் மூலமும் மற்றவர்களுக்கும் கொடுப்போம்.
மனிதர்கள் குடும்பமாக நண்பர்களாக சமுதாயமாக சேர்ந்து வாழும் போது பல நேரங்களில் மற்றவர்களின் கருத்தோடு நாம் முரண்படுகிறோம். அவை சரியான முறையில் உடனுக்குடன் தீர்க்கப்படாதபோது அவை பெரிய பகையாக மாறி உறவுகளையே சிதைத்தும் விடுகின்றது.
முரண்களை எப்படி கையாள்வது என்பதை பைபிளிலிருந்து சில நிகழ்வுகள் மூலமாக பார்க்கலாம்.
செல்வத்தினால் வரும் முரண்:
ஊர் என்கிற கல்தேயருடைய பட்டணத்தில் வாழ்ந்து வந்த ஆபிரகாம் கர்த்தரின் அழைப்பிற்கேற்ப தன்னுடைய நாட்டை விட்டு வேறொரு தேசத்திற்கு சென்றபோது சகோதரரின் மகனாகிய லோத் என்பவரும் இணைந்தே பயணிக்கிறார்.
காலங்கள் செல்கின்றன. இருவரிடமும் ஏராளமான ஆடுகளும் ஒட்டகங்களும் இருந்ததால் அவர்களால் ஒரே இடத்தில் தங்க முடியவில்லை. ஒரு கட்டத்தில் இந்த இருவரின் மேய்ப்பர்களுக்கும் வாக்குவாதம் உண்டாயிற்று.
இதை கேள்விப்பட்ட ஆபிரகாம் லோத்தை அழைத்து “எனக்கும் உனக்கும் என் மேய்ப்பருக்கும் உன் மேய்ப்பருக்கும் வாக்குவாதம் வேண்டாம்; நாம் சகோதரர்கள். இந்தத் தேசமெல்லாம் உனக்கு முன் இருக்கிறது அல்லவா? நீ என்னைவிட்டுப் பிரிந்துபோகலாம். நீ இடதுபுறம் போனால் நான் வலதுபுறம் போகிறேன்; நீ வலதுபுறம் போனால் நான் இடதுபுறம் போகிறேன்” என்றுச் சொல்லி விட்டுக்கொடுக் கிறார்.
அதிக செல்வத்தினால் உறவுகளுக்குள் சிக்கல் வரும்போது அதற்கான முக்கியத் தீர்வு விட்டுக்கொடுத்தல்.
அதிகாரத்தினால் வரும் முரண்:
இயேசு உயிர்த்தெழுந்து பரலோகத்திற்கு சென்ற பிறகு சீடர்கள் இயேசுவைக் குறித்து பலருக்குப் பிரசங்கித்தார்கள். கிறிஸ்தவர்களின் எண்ணிக்கை அதிகமாகிக் கொண்டே சென்றது.
அதோடு கூட அவர்கள் யாவரும் தங்களுடைய செல்வங்களை விற்று பொதுவாக வைத்து ஒவ்வொருவனுக்கும் தேவையானதற்குத்தக்கதாக பகிர்ந்து கொடுத்தார்கள். ஆனால் சில நாட்களிலேயே விதவைகள் சரிவர கவனிக்கப்படவில்லை என்னும் முறுமுறுப்பு வர ஆரம்பித்தது.
விஷயம் இயேசுவின் சீடர்களிடத்தில் போனது. அந்த பன்னிரு சீடர்களும் மக்களை அழைத்து நாங்கள் இயேசுவைப்பற்றிய வசனங்களை போதியாமல் பந்தி விசாரணை செய்வது நல்லதல்ல. ஆகையால் பரிசுத்தமும் ஞானமும் நிறைந்து நற்சாட்சிப் பெற்றிருக்கிற ஏழுபேரை உங்களில் தெரிந்துகொள்ளுங்கள். அவர்கள் பந்திவிசாரிப்பு வேலையை செய்யட்டும். இயேசுவுடனிருந்த சீடர்களாகிய நாங்கள் இயேசுவைக் குறித்துப் போதிப்பதையும் ஜெபிப்பதையும் செய்கின்றோம் என்றனர். அப்படியே ஏழு மூப்பர்கள் தேர்வுச் செய்யப்பட்டு முறுமுறுப்புகள் குறைக்கபட்டது.
இங்கே மக்களின் முறுமுறுப்புக்கு காரணமான முரண் அதிகாரம் ஓரிடத்தில் மையப்பட்டது. அதற்கான தீர்வு அதிகாரத்தைப் பகிர்தல்.
உழைப்பினால் வரும் முரண்:
இயேசு சொன்ன உவமைகளில் முக்கியமான ஒரு உவமை ஒரு திராட்சைத் தோட்டக்காரர் பற்றியது.
ஒரு திராட்சைத் தோட்டக்காரர் தன்னுடைய தோட்டத்தில் வேலை செய்ய ஆட்களைத் தேடி அதிகாலையில் செல் கிறார். எதிர்படுகிற தொழிலாளிகளிடம் தன்னுடைய தோட்டத்தில் வேலை செய்ய வரும்படியும் அதற்கு ஒரு பணம் கூலியாக தரப்படுமென்றும் சொல்லி அழைக்கிறார். அவர்களும் அதற்கு உடன்பட்டு வேலைச் செய்கிறார்கள்.
இன்னும் அதிகமாய் ஆட்கள் தேவைப்படவே அந்த தோட்டக்காரர் ஒவ்வொரு 3 மணி நேரத்திற்கு ஒரு முறையென மாலை வரை ஆட்களை அழைத்துக் கொண்டேயிருக்கிறார்.
மாலையில் ஊதியம் கொடுக்கும் நேரம் வந்த போது கடைசியாக வந்த வேலைக்காரர்களுக்கு முதலாவது ஒரு பணம் ஊதியம் கொடுக்கிறார். அதிகாலையிலிருந்து வேலைச் செய்த மற்ற வேலைக்காரர்களுக்கு தங்களுக்கு அதிக ஊதியம் கிடைக்குமோ என்னும் எண்ணம் உண்டாகிறது. ஆனால் எஜமானனோ அவர்களுக்கும் தான் சொன்னபடியே ஒரு பணம் மட்டுமே கொடுக்கிறார். அதனை அந்த வேலைக்காரர்களால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.
எஜமானன் அதில் ஒருவனைப் பார்த்து “சிநேகிதனே நான் உனக்கு அநியாயஞ்செய்யவில்லை; நீ என்னிடத்தில் ஒரு பணத்துக்கு சம்மதிக்கவில்லையா? உன்னுடையதை நீ வாங்கிக்கொண்டு போ உனக்குக் கொடுத்தது போலப் பிந்தி வந்தவனாகிய இவனுக்கும் கொடுப்பது என்னுடைய இஷ்டம்” என்றார்.
பல நேரங்களில் ஏதோவொரு சூழ்நிலை காரணமாக நம்மைவிட பின் தங்கிய நிலையில் இருப்பவர்கள் நமக்கு சமமாக வரும்போது மனம் ஏற்றுக்கொள்ள தயங்குகிறது. அதையும் மீறி நாம் அவர்களை ஏற்றுக்கொள்ளும் போது முரண்கள் களையப்படுகிறது.
கடைசியாக ஒரு முரண்: ஒருநாள் விபசாரத்தில் கையும் களவுமாக பிடிக்கப்பட்ட ஒரு பெண்ணை இயேசுவிடம் கொண்டு வந்து இவளை மோசேயின் கட்டளைப்படி கல்லெறிந்துக் கொல்லலாமெனயிருக்கிறோம் நீர் என்ன சொல்லுகிறீரெனக் கேட்டனர்.
இயேசு அவர்களைப் பார்த்து “உங்களில் பாவமில்லாதவன் முதலாவது கல்லை எறியட்டும்” என்கிறார். உடனே எல்லாரும் அந்த இடத்தை விட்டு சென்றுவிட்டார்கள். இயேசு மாத்திரம் இருக்கிறார். அவர் அவளைப்பார்த்து நானும் உன்னை தண்டிக்க விரும்பவில்லை இனி பாவம் செய்யாதேயென சொல்லியனுப்புகிறார்.
ஆம் கடவுள் விரும்புகிறதற்கும் நாம் செய்வதற்கும் நடுவே பல முரண்களிருந்தாலும் அவர் தீர்வாக நமக்கு தருவது மன்னிப்பு. அந்த மன்னிப்பையே நாமும் விட்டுக்கொடுப்பதின் மூலமும் பகிர்வதின் மூலமும் ஏற்றுக்கொள்வதின் மூலமும் மற்றவர்களுக்கும் கொடுப்போம்.
அன்பர்புரம் சகோ. ஹெசட் காட்சன்.

தற்காலிக பொருள்கள், பணம், பதவி சிற்றின்பங்கள் மேல் நம்பிக்கை வைப்பவன் வாழ்க்கை சோகத்தால் நிறைந்தது. ஆனால் கடவுள் மேல் நம்பிக்கை வைப்பவன் வாழ்க்கை நிரந்தரமான மகிழ்ச்சியை கொடுக்கும்
ஒரு அழகிய விடுமுறை நாளின் மாலைப் பொழுதில் மனதின் ஆழத்தில் ஏதோ ஒரு சோகம் ஆட்கொண்டது. என்னவென்று ஆராய்ந்து பார்க்க மனம் துடித்தது. வாழ்க்கையில் இன்னும் நன்றாக வாழ்ந்திருக்கலாமோ என்று தோன்றியது. இன்னும் அதிகமாக சம்பாதித்திருந்தால், வேறு வேலை செய்திருந்தால், பெரிய வீடு கட்டியிருந்தால், வேறு எங்காவது வாழ்ந்திருந்தால், இன்னும் படித்திருந்தால்... என்று நிறைய கேள்விகள் மனதுக்குள் வந்து வந்து இன்னும் சோகத்தை ஆழமாக பதித்து விட்டு சென்றன. கவலை மனதை சிறைப்படுத்துவதற்கு முன் சட்டென எழுந்து நண்பர் வீட்டுக்கு புறப்பட்டேன்.
நண்பனின் அடுக்குமாடி குடியிருப்பின் வாசலில் புதிய செக்யூரிட்டி ஒருவரை பார்த்தேன். கம்பீரமான தோற்றம், நாற்பது வயது இருக்கும் அவருக்கு. எனக்கு அறிமுகம் இல்லாதவர், ஆதலால் நான் அவரிடம் என்னை அறிமுகப்படுத்திவிட்டு யாரை பார்க்க வேண்டும் என்று சொல்லி அவரிடம் நலம் விசாரித்தேன். கம்பீரமாக இருந்தவர் சற்று தடுமாறினார். கண்கள் கலங்க ஆரம்பித்தன. இவ்வளவு நேரம் கவுரவ தோற்றத்துடன் இருந்த அவர் முகம் சுருங்கி சோகத்தின் உச்சத்தை தொட்டது. என்ன பிரச்சினையோ, உதவி ஏதாவது தேவைப்படுகிறதோ, பண தட்டுப்பாடு இருக்குமோ என்று பல கேள்விகள் எனக்குள் வந்து போயின.
“சொல்லுங்க...” என்றேன்.
“என் மகளுக்கு.......” என்று சொல்லி அப்படியே இரண்டு நிமிடம் இடைவெளி விட்டார். அவர் இதயம் நொறுங்கி நின்றது எனக்கு புரிந்தது. எனக்கு என்ன செய்வதென்று தெரியாமல் திகைத்தேன். பின்னர் அவருடைய மகளுக்கு ஒரு கொடிய நோய் தாக்கியுள்ளது என்றும் அதை சரி செய்ய அவர் தினமும் படும் பாடுகள் மிகவும் வேதனையானது என்றும் அறிந்து கொண்டேன். அவரது துன்பத்தை அறிந்த எனக்கு இன்னும் சோகம் அதிகமானது ஆனால் எனது கேள்விகளுக்கு பதில் கிடைக்க ஆரம்பித்தது. என்னை போன்ற இன்னொருவர் எவ்வளவு வேதனையில் வாழ்கிறார் என்றும் ஆனால் நானோ எல்லாம் இருந்தும் வாழ்க்கையில் ஏதோ இழந்தது போல வாழ்கிறேனே என்றும் கடவுள் கற்று கொடுத்தார்.
கர்த்தருக்குள் எப்பொழுதும் சந்தோஷமாயிருங்கள்; சந்தோஷமாயிருங்கள் என்று மறுபடியும் சொல்கிறேன் என்று வேதத்தில் (பிலிப்பியர் 4:4) கூறப்பட்டுள்ளது. எல்லோரும் சந்தோஷமாக இருக்க ஆசைப்படுவார்கள், ஆனால் பல சூழ்நிலைகளின் மத்தியில் அப்படி இருக்க முடிவதில்லை. நமது நம்பிக்கை எதன் மீது வைத்துள்ளோமோ அதை பொறுத்தே நமக்கு சந்தோஷம் கிடைக்கும். ஒரு வேளை நமது நம்பிக்கை உலக பிரகாரமான பொருள்களின் மேல் வைத்தால் நமக்கு ஏமாற்றமே மிஞ்சும்.
பணத்தின் மேல் நம்பிக்கை வைத்தால் அது நம்மை விட்டு போகும் போது நாம் வாழ்க்கையில் எல்லாம் இழந்தது போல தோன்றும். பணக்காரன் தான் சந்தோஷமாக இருக்க முடியும் என்றால் பணக்கார நாடுகளில் ஏன் இன்னும் மக்கள் மகிழ்ச்சியில்லாதவர்களாக இருக்கிறார்கள். மகிழ்ச்சி என்பது அகம் சார்ந்தது. அதை கடவுளால் மட்டுமே கொடுக்க முடியும். ஆம், கர்த்தர் மேல் நம்பிக்கை வைப்பவர்கள் மகிழ்ச்சி உள்ளவர்களாக காணப்படுகிறார்கள். நாம் பல்வேறு சூழ்நிலைகளில் வாழ்ந்தாலும் கடவுள் மேல் நம்பிக்கை வைத்திருந்தால் நிச்சயமாக சந்தோஷமாக வாழ முடியும்.
இது கர்த்தர் உண்டுபண்ணின நாள்; இதிலே களிகூர்ந்து மகிழக்கடவோம் (சங்கீதம் 118:24). கர்த்தர் நாம் எல்லோரும் சந்தோஷமாக வாழ வேண்டும் என்று விரும்புகிறார், அதற்காக தான் அவர் நமக்கு ஆயுசு நாட்களை கொடுத்திருக்கிறார்.
ஏழைகள் எப்படி மகிழ முடியும் என்று அன்னை தெரசாவிடம் கேட்டபோது, “பணம் மட்டுமே மகிழ்வைத் தரும் என்பது தலைமுறைக்கு தரப்பட்டிருக்கும் தவறான பாடம்” என்று கூறினார். மற்றும் தன் பணியாளர்களிடத்தில் ஒரு முறை அவர்கள் இப்படி சொன்னார்கள். “ஏழ்மை என்பது அழகானதல்ல, ஆனால் அந்த ஏழ்மையிலும் வாழ்வின் மீது மனிதன் வைத்திருக்கும் புன்னகை கலந்த நம்பிக்கை மிக பெரிது”.
தற்காலிக பொருள்கள், பணம், பதவி சிற்றின்பங்கள் மேல் நம்பிக்கை வைப்பவன் வாழ்க்கை சோகத்தால் நிறைந்தது. ஆனால் கடவுள் மேல் நம்பிக்கை வைப்பவன் வாழ்க்கை நிரந்தரமான மகிழ்ச்சியை கொடுக்கும் - எவ்வித சூழ்நிலையிலும்.
எல்லோரையும் நேசிக்க வேண்டும் என்பது கடவுள் நமக்கு கற்றுத்தந்த பாடம், அப்படியானால் மகிழ்ச்சியாய் இருப்பதற்கு மற்றவர்களின் வெற்றியும் நாம் கொண்டாடப்பட வேண்டியதே. இயேசு இவ்வுலகில் வாழ்ந்த நாட்களில் மற்றவர்களுக்காக வாழ்ந்தார். தனக்காக அவர் எதையும் செய்யவில்லை. பாவத்தில் விழுந்த மக்கள் மனம் திருந்திய போதும், நோயாளிகள் குணமுற்ற போதும் அவர் மகிழ்ந்தார் ஏனென்றால் அதற்காக தானே அவர் பூமிக்கு மனிதனாக வந்தார். ஆதலால் வீணாக கவலைப்படாமல் இறைநம்பிக்கையுடன் மகிழ்ச்சியாக வாழ்வோமா?
துலீப் தாமஸ், சென்னை.

நாகர்கோவில் இயேசுவின் திரு இருதய ஆலய திருவிழா கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது.
நாகர்கோவில் இயேசுவின் திரு இருதய ஆலய திருவிழா கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமையில் கொடியேற்றத்துடன் தொடங்கியது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு திருவிழா கொடியை ஏற்றி திருப்பலி நிறைவேற்றினார். இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். இந்த திருவிழா வருகிற 30-ந் தேதி நடக்கிறது.
விழா நாட்களில் தினமும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள், திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. விழாவில் 29-ந்தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு அன்பியம் மற்றும் பக்தசபை ஒருங்கிணையங்களின் ஆண்டுவிழா, 30-ந்தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆன்டணி தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 5 மணிக்கு கோட்டார் வட்டார முதன்மைப் பணியாளர் மைக்கேல் ஏஞ்சலுஸ் தலைமையில் திருப்பலி, கொடியிறக்கம், 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா ஆகியவை நடைபெறுகிறது.
இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை ஜான்சன், பங்கு பேரவை துணை தலைவர் மெல்கியாஸ், செயலாளர் அல்போன்ஸ் போலி கார்ப், பொருளாளர் மெலோடியஸ் கிறிஸ்டோபர், துணை செயலாளர் ஜோஸ்பின் சைமன் மற்றும் பங்கு மக்கள் செய்து உள்ளனர்.

நாகர்கோவில் வேப்பமூடு இயேசுவின் திரு இருதய ஆலய பங்கு குடும்ப திருவிழா வருகிற 26-ந்தேதி தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது.
நாகர்கோவில் வேப்பமூடு இயேசுவின் திரு இருதய ஆலய பங்கு குடும்ப திருவிழா வருகிற இன்று தொடங்கி 5 நாட்கள் நடைபெறுகிறது. விழாவில் முதல்நாளான இன்று மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை நவநாள், தொடர்ந்து கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு திருவிழா கொடியை ஏற்றி திருப்பலி நிறைவேற்றுகிறார்.
விழா நாட்களில் தினமும் மாலை 6.15 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள், திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது.
இன்று காலை 11 மணிக்கு அன்னை நகர் பங்குதந்தை சகாய ஆனந்த் தலைமை தாங்கி நோயாளிகளுக்கான திருப்பலி, இரவு 8.30 மணிக்கு அன்பின் விருந்து ஆகியவை நடக்கிறது.
விழாவில் 29-ந்தேதி காலை 6.15 மணிக்கு திருப்பலி, இரவு 8.30 மணிக்கு அன்பியம் மற்றும் பக்தசபை ஒருங்கிணையங்களின் ஆண்டுவிழா, 30-ந்தேதி காலை 7 மணிக்கு தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் ஆன்டணி தலைமை தாங்கி திருவிழா திருப்பலியை நிறைவேற்றுகிறார். மாலை 5 மணிக்கு கோட்டார் வட்டார முதன்மைப் பணியாளர் மைக்கேல் ஏஞ்சலுஸ் தலைமையில் திருப்பலி, கொடியிறக்கம், 6.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டுவிழா ஆகியவை நடைபெறுகிறது.

‘எசேக்கியேல்’ எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் 48 அதிகாரங்களும், 1273 வசனங்களும், 39407 வார்த்தைகளும் அமைந்துள்ளன.
அதிகமாக யாரும் வாசிக்காத பைபிள் நூல் எது என்று கேட்டால் ‘எசேக்கியேல்’ என்று சொல்லலாம். காரணம் இந்த நூலில் உள்ள விஷயங்கள் ஏதோ பழைய காலத்தில், அந்த மக்களுக்குச் சொன்னவை என்பது போன்ற தோற்றம் அளிப்பதும், மன அழுத்தம் தரக்கூடிய செய்திகளால் நிரம்பியிருப்பதும் தான்.
‘எசேக்கியேல்’ எனும் பெயருக்கு ‘ஆண்டவர் ஆற்றல் அளிப்பார்’ என்பது பொருள். இந்த நூலில் 48 அதிகாரங்களும், 1273 வசனங்களும், 39407 வார்த்தைகளும் அமைந்துள்ளன.
எசேக்கியேல் நூலின் சில பகுதிகள் மிகவும் பிரபலமானவை. உதாரணமாக, உலர்ந்த எலும்புக்கூடுகள் எசேக்கியேல் இறைவாக்கு உரைத்த போது உயிர்பெற்று எழுந்த புதுமை நிகழ்வு. அதே போல, “பாவம் செய்பவரே சாவர். பிள்ளைகள் பெற்றோரின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள். அவ்வாறே பெற்றோரும் பிள்ளைகளின் குற்றத்தைச் சுமக்க மாட்டார்கள்” எனும் வசனமும் மிகவும் பிரபலமானது.
எசேக்கியேல் நூலை முழுமையாகப் படித்தால், நூல் முழுவதும் இறைவனின் அன்பு இழையோடுவதைக் காண முடியும். நமது வேண்டுதல்களுக்கு அவர் எப்படி செவிகொடுக்கிறார். அவர் எப்படி நம்மை அரவணைக்கிறார். நம்மைப்பற்றி என்ன நினைக்கிறார், போன்றவற்றை எல்லாம் புரிந்து கொள்ளவேண்டுமெனில் எசேக்கியேல் நூலை நாம் முழுமையாய் வாசிக்க வேண்டும்.
பன்னிரண்டு கோத்திரங்களான இஸ்ரேலின் பத்து கோத்திரங்கள் வடக்கே “இஸ்ரேல்” என்றும், இரண்டு கோத்திரங்கள் தெற்கே “யூதா” என்றும் எல்லை பிரித்து ஆட்சியமைத்து வந்தன. அதில் இஸ்ரேல் நாடு இறைவாக்கினர்களின் வார்த்தைகளை நிராகரித்து பாவத்தின் மேல் பாவம் செய்து குவித்தது. எனவே அவர்கள் கடவுளால் கைவிடப்பட்டு அசீரியர்களால் நாடு கடத்தப்பட்டனர்.
தென் நாடான யூதா இறைவனோடு நெருங்கியும், விலகியும் வாழ்ந்து வந்தது. பிற்காலங்களில் அதுவும் இறைவனை விட்டு விலகி வேற்று தெய்வங்களின் காலடியில் விழுந்தது. எசாயா போன்ற பெரிய இறைவாக்கினர்களின் வார்த்தைகளும் அவர்களது இதயத்தில் விழவில்லை.
எசேக்கியேல் இறைவாக்கினரும் கடைசி காலத்தில் யூதாவில் இறைவாக்கு உரைத்தார். ஆனால் அவரது வார்த்தைகளும் காற்றில் அடித்துச் செல்லப்பட்டன. யூதா பாவத்தில் மூழ்கியது. அவர்கள் பாபிலோனியரின் கைகளில் சிக்கிக்கொண்டு, பாபிலோனுக்கு நாடு கடத்தப்பட்டனர்.
கடவுள் எசேக்கியேலிடம், ‘மக்கள் கேட்க மாட்டார்கள், மனம் மாற மாட்டார்கள், உன்னை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் தொடர்ந்து இறைவாக்கு உரைக்க வேண்டும் என கட்டளை கொடுத்திருந்தார். எனவே மக்கள் இறைவார்த்தையைக் கேட்காமல் தங்கள் இதயத்தைக் கடினப்படுத்திக் கொண்டபோதும் எசேக்கியா தொடர்ந்து இறைவாக்குரைத்தார்.
பாபிலோனுக்கு மக்கள் நாடு கடத்தப்பட்ட காலகட்டத்தில் பாபிலோன் பகுதியில் இருந்து இறைவாக்குரைத்தார். எனினும் தொலைவில் இருந்த எருசலேமில் என்ன நடக்கிறது என்பதை தீர்க்கதரிசனமாய் காணும் வரம் அவருக்கு இருந்தது.
ஒருமுறை ஒரு மனிதர் எருசலேமில் கீழே விழுந்து இறந்து போவதைக் காட்சியாகக் கண்டார், அதே நேரத்தில் அந்த மனிதர் அதே போல இறந்தும் போனார்.
நிகழ்காலத்தை மட்டுமல்லாமல் எதிர்காலத்தைக் காட்சி களாய் காண்பதிலும் எசேக்கியேல் இறையருள் பெற்றிருந்தார். பைபிளில் மொத்தம் 735 எதிர்கால தீர்க்கதரிசனங்கள் உண்டு. அதில் 593 எதிர்கால தீர்க்கதரிசனங்கள் நிறைவேறிவிட்டன. இந்த தீர்க்கதரிசனங்களில் பெரும்பாலானவை இருப்பது எசேக்கியேல் மற்றும் தானியேல் நூல்களில் தான்.
எசேக்கியேலின் இறைவார்த்தைகள் மூன்று கட்டங்களாக வருகின்றன. அவருடைய முப்பது வயதுக்கும், முப்பத்து மூன்று வயதுக்கும் இடைப்பட்ட காலத்தில் முதல் இறைவாக்கு காலம் வருகிறது. எருசலேமின் அழிவு தான் அதன் முதன்மையான விஷயமாய் இருக்கிறது. மக்கள் மனம் திரும்ப வேண்டும் எனும் பாடம் தொடர்ந்து உரைக்கப்படுகிறது. அதன்பின் யூதா பாபிலோனின் ஆட்சிக்குள் அடங்கிவிட்டது.
அடுத்த கட்டமான இறைவாக்கு அவரது 36, 37 வயதுகளில் வருகிறது. இப்போது எருசலேமைச் சுற்றி இருக்கின்ற நாடு களைக் குறித்தும் அவர் இறைவாக்கு உரைக்கிறார். அந்த காலகட்டத்துக்குப் பின் இறைவன் அவரை இறைவாக்கு உரைக்க நீண்டகாலம் அனுமதிக்கவில்லை.
மூன்றாவது கட்டமாக, அவரது 50-வது வயதில் இறைவாக்கு உரைக்க ஆரம்பித்தார். மீண்டும் தாயகம் திரும்ப வேண்டும் என்பதே அவரது அந்த செய்தியின் அடிப்படை. வறண்டு எலும்புக் கூடாய் கிடக்கும் மக்கள் மீண்டும் உயிர் பெற்று எழவேண்டும் எனும் செய்தி அறிவிக்கப்பட்டது. எருசலேம் தேவாலயத்தை மீண்டும் கட்டி எழுப்புவதைக் குறித்த இறைவாக்கும் அவரிடம் இருந்தது. ஆனாலும் அவர் அதைக் காணுமுன் இறந்து விட்டார்.
மக்கள் சிலைவழிபாடு செய்வதை எதிர்த்தார். நாடு முழுவதும் ஏழைகள் சுரண்டப்படுவதைக் கண்டு கடுமையான இறைவாக்குகளை உரைத்தார். அவர்களுடைய நன்றி இல்லாத நிலைமையையும் கடுமையாகக் கடிந்து கொண்டார்.
இறைவன் தீர்ப்பிடுவார் என்பதையும், இறைவன் பழிவாங்குவார் என்பதையும், மீண்டும் மக்களை ஒருங்கிணைப்பார் என்பதையும் இந்த நூல் விளக்குகிறது. விவிலியத்தின் கடைசி நூலான திருவெளிப்பாடு நூலுக்கான சாவி இந்த எசேக்கியேல் நூலில் இருப்பதாக இறையியலாளர்கள் குறிப்பிடுகின்றனர்.