search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    சரல் புனித பேதுரு பவுல் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது
    X

    சரல் புனித பேதுரு பவுல் ஆலய திருவிழா இன்று தொடங்குகிறது

    குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே சரலில் உள்ள புனித பேதுரு பவுல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது.
    குமரி மாவட்டம் குருந்தன்கோடு அருகே சரலில் உள்ள புனித பேதுரு பவுல் ஆலய திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) தொடங்கி 30-ந்தேதி வரை 10 நாட்கள் நடக்கிறது. நாளை காலை 6.30 மணிக்கு கல்லறை தோட்டத்தில் திருப்பலி நடக்கிறது.

    மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை, கொடியேற்றம் மற்றும் திருப்பலி நடக்கிறது. இதற்கு நுள்ளிவிளை பங்குத்தந்தை அருளப்பன் தலைமை தாங்க, அருட்பணியாளர் ரூபஸ் அருளுரையாற்றுகிறார். இதில் திருநயினார்குறிச்சி பங்குத்தந்தை லியோன் கென்சன் சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார். தினமும் காலை மற்றும் மாலை திருப்பலியும், கலை நிகழ்ச்சிகளும் நடக்கிறது. 23-ந்தேதி மாலை 6.30 மணிக்கு குழந்தை இயேசு பவனி நடைபெறுகிறது.

    29-ந்தேதி காலை 7 மணிக்கு பாதுகாவலர் விழா, திருமுழுக்கு திருப்பலி, மூத்த உறுப்பினர்கள் கவுரவிக்கப்படுகிறார்கள். இதற்கு கீழஆசாரிபள்ளம் பங்குத்தந்தை அந்தோணிப்பிச்சை தலைமை தாங்க, மறைமாவட்ட இளைஞர் இயக்க செயலாளர் ஜெனிபர் எடிசன் அருளுரை வழங்குகிறார். மதியம் 12 மணிக்கு அன்பின் விருந்து நடக்கிறது.

    மாலை 5.45 மணிக்கு ஜெபமாலை மற்றும் சிறப்பு ஆராதனையும் நடைபெறுகிறது. இதற்கு அருட்பணியாளர் ஆன்றனி அல்காந்தர் தலைமை தாங்க, அருட்பணியாளர் ஸ்டீபன் அருளுரை வழங்குகிறார். இரவு 8 மணிக்கு அன்பியங்களுக்கு இடையே போட்டி நடனம் நடக்கிறது. 30-ந்தேதி காலை 6 மணிக்கு திருவிழா திருப்பலியும், 8 மணிக்கு ஆடம்பர திருவிழா மற்றும் முதல் திருவிருந்து திருப்பலி ஆகியவை நடைபெறுகிறது. நிகழ்ச்சிக்கு கோட்டார் மறைமாவட்ட குருகுல முதல்வர் ஹிலாரியுஸ் தலைமை தாங்க, அருட்பணியாளர் டேவிட் அருளுரை வழங்குகிறார். அதன்பிறகு கொடியிறக்கப்படுகிறது. மாலை 6.30 மணிக்கு மறைக்கல்வி மன்ற ஆண்டு விழா நடக்கிறது.
    Next Story
    ×