என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    திருவட்டார் அருகே கண்ணனூர் சி.எஸ்.ஐ. ஆலய அர்ப்பண விழா நாளை (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது. சிறப்பு விருந்தினராக குமரி பேராயர் செல்லையா கலந்து கொண்டு புதிய ஆலயத்தை அர்ப்பணம் செய்து அருளுரை வழங்குகிறார்.
    திருவட்டார் அருகே கடமலைக்குன்று சேகரம், கண்ணனூர் சி.எஸ்.ஐ. ஆயர் மண்டல திருச்சபை புதிய ஆலய அர்ப்பண விழா, 200-வது ஆண்டு நிறைவு விழா, நினைவு தூண் அர்ப்பண விழா, சிறப்பு மலர் வெளியீட்டு விழா, புதிய பணித்தள அடிக்கல் நாட்டு விழா, அருட்பணியாளர் அர்ப்பண விழா, கிராம ஊழிய தொடக்க விழா ஆகிய விழாக்கள் நாளை (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. சேகர ஆயர் ஜார்ஜ் வேததாஸ் தலைமை தாங்குகிறார். திருச்சபை ஆயர் லிபின் ராஜ், உதவி திருப்பணியாளர் ஜெயக்குமார் ஆமோஸ் ஆகியோர் முன்னிலை வகிக்கிறார்கள். சிறப்பு விருந்தினராக குமரி பேராயர் செல்லையா கலந்து கொண்டு புதிய ஆலயத்தை அர்ப்பணம் செய்து அருளுரை வழங்குகிறார்.

    விழாவில் முன்னாள் பேராயர்கள், போதகர்கள், பேராய தலைவர்கள், அரசியல் தலைவர்கள் கலந்து கொண்டு வாழ்த்தி பேசுகிறார்கள். விழாவை முன்னிட்டு வருகிற திங்கள் மற்றும் செவ்வாய்க்கிழமைகளில் நற்செய்தி கூட்டம் நடக்கிறது. இதில் நெய்யூர் சேகர ஆயர் ஸ்டேன்லி ராஜ் தேவச்செய்தி அளிக்கிறார்.

    17-ந் தேதி சாம்பல் புதன் சிறப்பு ஆராதனையும், 18-ந் தேதி ஐசக் மற்றும் ஐாபி ஐசக் குழுவினரால் சிறப்பு கூடுகையும் நடைபெறும்.

    விழா ஏற்பாடுகளை சபை செயலாளர் பால்ராஜ் தலைமையில் சபை குழுவினர் செய்துள்ளனர்.
    திருச்சி புனித லூர்து அன்னை ஆலய 125-ம் ஆண்டு தேர்பவனி விழா நேற்று இரவு நடைபெற்றது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    திருச்சி புனித லூர்து அன்னை ஆலய 125-ம் ஆண்டு தேர்பவனி விழா நேற்று இரவு நடைபெற்றது.

    திருச்சி செயின்ட் ஜோசப் கல்லூரி வளாகத்தில் இருந்து புறப்பட்ட தேர்பவனி மெயின்கார்டு கேட் வழியாக என்.எஸ்.பிரோடு, தெப்பக்குளம், நந்தி கோவில் தெரு வழியாக சத்திரம் பஸ்நிலையம் வந்து மீண்டும் ஜோசப் கல்லூரி மைதானத்தை அடைந்தது.

    இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    மார்த்தாண்டம், வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலம் நடந்தது.
    மார்த்தாண்டம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலம் நடந்தது.

    திருக்கொடியை பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் ஜோசப் கிரேசியஸ் கையில் ஏந்தி செல்ல, தொடர்ந்து அருட்பணியாளர்கள், பங்கு அருட்பணி பேரவையினர், இறைமக்கள் ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு வளாகத்தை அடைந்ததும் அங்குள்ள கொடிமரத்தில் குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் இயேசுரெத்தினம் கொடியேற்றி வைத்து திருப்பலிக்கு தலைமை தாங்கினார்.

    கொடியேற்றம் மற்றும் திருப்பலிக்கு திருத்தல பங்கு அருட்பணியாளர் அந்தோணி முத்து, இணைப்பணியாளர் மரிய மார்ட்டின், அருள்வாழ்வு வழிகாட்டி டென்சிங் மற்றும் அருட்பணியாளர்கள் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். அருட்பணி ஆன்டணி ஜெயக்கொடி மறையுரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் வெட்டுவெந்நி திருத்தல பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர், செயலாளர் லில்லிபாய், துணைச் செயலாளர் பிரைட்சிங், பொருளாளர் தங்கையன் மற்றும் உறுப்பினர்கள், இறைமக்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் மாலை செபமாலை, திருப்பலி நடைபெறும்.

    12-ந்தேதி காலை 10 மணிக்கு செபமாலை, நவநாள், திருப்பலி, 14-ந்தேதி காலை 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது.
    திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் இடைவிடா சகாய அன்னை திருவிழாவில் சிறப்பு திருப்பலி, சகாய அன்னை மின்தேர்பவனி நடந்தது.
    திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில் இடைவிடா சகாய அன்னை திருவிழா கடந்த 7-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவையொட்டி தினமும் நவநாள் திருப்பலி, நற்கருணை ஆசீர் நடைபெற்றது.

    திருவிழாவின் நிறைவு நாளான நேற்று காலை குணமளிக்கும் வழிபாடும், அதைத்தொடர்ந்து மாலையில் சிறப்பு திருப்பலி, சகாய அன்னை மின்தேர்பவனி நடந்தது. இதனை வனத்துறை அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன் தொடங்கி வைத்தார். திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி முன்னிலை வகித்தார்.

    இதில் திண்டுக்கல் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர் மருதராஜ், கூட்டுறவு ஒன்றிய குழு தலைவர் ராஜ்மோகன், மெர்சி செந்தில்குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். இந்த மின்தேர் பவனி திண்டுக்கல்லின் 4 ரத வீதிகள் வழியாக வந்து பேராலயத்தை அடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை பங்குத்தந்தை சகாயராஜ் மற்றும் உதவி பங்கு தந்தைகள் செய்திருந்தனர்.
    திருச்சி பாலக்கரை பருப்புகாரத் தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழாவின் சிகர நிகழ்ச்சியாக தேர்பவனி நடைபெற்றது. இன்று (புதன்கிழமை) மாலை 7 மணிக்கு பங்கு தந்தை ஜோசப் திருப்பலி நடத்துகிறார்.
    திருச்சி பாலக்கரை பருப்புகாரத் தெருவில் உள்ள புனித செபஸ்தியார் ஆலய திருவிழா கடந்த 1-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவின் சிகர நிகழ்ச்சியாக நேற்று தேர்பவனி நடைபெற்றது. தேர்பவனியை காங்கிரஸ் பொதுக்குழு உறுப்பினர் ரெக்ஸ் தொடங்கி வைத்தார்.

    இந்த தேர்பவனி எடத்தெருவில் இருந்து தொடங்கி கேம்ஸ் டவுன், பாலக்கரை ரவுண்டானா வழியாக மீண்டும் எடத்தெருவை வந்தடைந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர். இன்று (புதன்கிழமை) மாலை 7 மணிக்கு பங்கு தந்தை ஜோசப் திருப்பலி நடத்துகிறார். நாளை (வியாழக்கிழமை) மதியம் 1 மணிக்கு அன்னதானம் நடைபெறுகிறது.
    போத்தனூரில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு தொடக்க விழா நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட கத்தோலிக்க ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.
    போத்தனூரில் உள்ள சூசையப்பர் ஆலயத்தில் ஆண்டு தொடக்க விழா நேற்று நடைபெற்றது. இதில், கோவை மாவட்ட கத்தோலிக்க ஆயர் தாமஸ் அக்குவினாஸ் கலந்து கொண்டு விழாவை தொடங்கி வைத்தார்.

    முன்னதாக சூசையப்பர் ஆலயத்திற்கு வந்த ஆயருக்கு ஆலயத்தை சேர்ந்த மக்கள் வரிசையாக நின்று கையில் மெழுகு திரி ஏந்தி வரவேற்றனர். பின்னர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள புனித சூசையப்பர் ஆலய முகப்பை திறந்து வைத்தார். தொடர்ந்து கொடி மரத்தில் சூசையப்பர் கொடியை ஏற்றினார். இதையடுத்து கொரோனா காலத்தில் இறந்தவர்கள் உடல்களை நல்லடக்கம் செய்த முஸ்லிம் சமுதாயத்தை சேர்ந்த நல்லடக்க குழுவினருக்கு ஆயர் தாமஸ் அக்குவினாஸ் பொன்னாடை போற்றி கவுரவித்து, நினைவு பரிசுகளை வழங்கினார்.

    நிகழ்ச்சியில் கோவை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் தனிஸ்லாஸ், புனித சூசையப்பர் ஆலய பங்கு தந்தை ஹென்றி, உதவி பங்கு தந்தை டேவிட், மற்றும் பக்த சபையினர், பங்கு மக்கள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
    மார்த்தாண்டம், வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தலப்பங்கு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    மார்த்தாண்டம், வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தலப்பங்கு திருவிழா இன்று (செவ்வாய்க்கிழமை) மாலை கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி இன்று செபமாலை, நவநாள், திருப்பலி ஆகியவை அருட்பணி விக்டர் தலைமையில் நடக்கிறது. அருட்பணி பெனடிக்ட் ஆனலின் மறையுரையாற்றுகிறார். மாலை 5 மணிக்கு செபமாலை, நவநாள், திருக்கொடி பவனி, 6 மணிக்கு குழித்துறை மறைமாவட்ட தொடர்பாளர் பேரருட்பணி இயேசுரெத்தினம் கொடியை ஏற்றி வைத்து திருப்பலிக்கு தலைமை தாங்குகிறார். அருட்பணி ஆன்டணி ஜெயக்கொடி மறையுரையாற்றுகிறார்.

    திருவிழா நாட்களில் தினமும் மாலை 5.30 மணிக்கு செபமாலை, திருப்பலி நடக்கிறது. 12-ந்தேதி காலை 10 மணிக்கு அருட்பணி கில்பர்ட் லிங்சன் தலைமையில் திருப்பலி, 14-ந்தேதி காலை 8 மணிக்கு கோட்டாறு மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடக்கிறது.

    திருவிழாவின் கடைசி நாளான 16-ந்தேதி காலை 8.30 மணிக்கு மலையாள திருப்பலி, 9.30 மணிக்கு தமிழில் திருப்பலி, 11 மணிக்கு மறைமாவட்ட நிதி பரிபாலகர் அருட்பணி அகஸ்டின் தலைமையில் திருப்பலி நடக்கிறது. மாலை 4.30 மணிக்கு செபமாலை, தொடர்ந்து பாளையங்கோட்டை மறைமாவட்ட ஆயர் ஆன்டணிசாமி தலைமையில் திருவிழா நிறைவு திருப்பலி நடக்கிறது.

    திருவிழாவானது பெருந்தொற்று காலத்தை கருத்தில் கொண்டு பொதுநலன் கருதி விழா நாட்களில் ஆண்டு விழாக்கள், கலை நிகழ்ச்சிகள், நாடகங்கள், சப்பரபவனி, சமபந்தி ஆகிய நிகழ்வுகள் தவிர்த்து மற்ற வழிபாட்டு நிகழ்வுகள் எந்தவித குறைவும் இல்லாமல் நடைபெறும் என்று திருத்தலபங்கின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    விழாஏற்பாடுகளை வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தலப்பங்கு அதிபர் அந்தோணிமுத்து, பங்கு இணைப்பணியாளர் மரிய மார்ட்டின், அருள்வாழ்வு வழிகாட்டி டென்சிங், பங்கு அருட்பணி பேரவை துணைத்தலைவர் ஜோசப் கிரேசியஸ், செயலாளர் லில்லி பாய், துணை செயலாளர் பிரைட் சிங், பொருளாளர் தங்கையன் மற்றும் உறுப்பினர்கள் செய்து வருகிறார்கள்.
    குளச்சல் தூய காணிக்கை அன்னை ஆலயத்தில் திருவிழா திருப்பலி நடந்தது. இதில் ஆயர் நசரேன் சூசை பங்கேற்று திருப்பலி நிறைவேற்றினார்.
    குளச்சல் தூய காணிக்கை அன்னை திருத்தல திருவிழா கடந்த 29-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் தினமும் மாலை ஜெபமாலை, புகழ்மாலை, நவநாள், திருப்பலி ஆகியவை நடந்தது. 3-ம் நாள் காலை 7 மணிக்கு திருவிருந்து திருப்பலி, இரவு 9 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழா,

    5-ம் நாள் காலை 9 மணி முதல் மாலை 4 மணிவரை நற்கருணை ஆராதனை, இரவு 7 மணிக்கு புனித மரியன்னை மேல்நிலைப்பள்ளி மைதானத்திலிருந்து முக்கிய நிகழ்ச்சியான காணிக்கை அன்னை திருச்சப்பர மெழுகுவர்த்தி பவனி, 9-ம் நாள் காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, மாலை 6 மணிக்கு மாலை ஆராதனை ஆகியவை நடந்தது.

    10-ம் நாள் விழாவான நேற்று காலை 6 மணிக்கு மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் தலைமையில் இளங்குரு மட அதிபர் அருட்பணி பஸ்காலிஸ் மறையுரை ஆற்றினார். 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்கி பெருவிழா திருப்பலி நிைறவேற்றி மறையுரையாற்றினார்.

    இதில், குளச்சல் மறை வட்டார முதன்மை பணியாளர் பிரான்சிஸ் டி.செய்ல்ஸ், தூய காணிக்கை அன்னை திருத்தல பங்குத்தந்தை மரிய செல்வன், இணை பங்குத்தந்தையர், அருள் பணியாளர்கள், அருட்சகோதரர்கள், அருள் சகோதரிகள் மற்றும் பங்கு நிர்வாக குழுவினர், பங்கு மக்கள் திரளாக கலந்து கொண்டனர். தொடர்ந்து திருக்கொடி இறக்கம், புத்தக கண்காட்சி, இலவச மருத்துவ முகாம் ஆகியவற்றுடன் விழா நிறைவடைந்தது.
    கந்திகுப்பம் அருகே உள்ள எலத்தகிரியில் 117-ம் ஆண்டு பாறை கோவில் திருவிழா ஆடம்பர தேர் பவனி மற்றும் வாணவேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
    கந்திகுப்பம் அருகே உள்ள எலத்தகிரியில் 117-ம் ஆண்டு பாறை கோவில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவையொட்டி கடந்த 31-ந் தேதி கொடியேற்றம் மற்றும் நவநாள் திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து தினமும் இரவு நேரங்களில் பூண்டி மாதா தேர்பவனி, புனித அந்தோணியார் தேர் பவனி, புனித சூசையப்பர் தேர் பவனி, குழந்தை இயேசு தேர்பவனி, பெரியநாயகி மாதா தேர்பவனி, வேளாங்கண்ணி மாதா தேர்பவனி ஆகியவை நடைபெற்றது.

    நேற்று முன்தினம் ஆடம்பர தேர் பவனி மற்றும் வாணவேடிக்கையுடன் திருவிழா நிறைவு பெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்களும், பொதுமக்களும் கலந்துகொண்டனர்.
    திருச்சி காட்டூர் ஆர்.கே.புரத்தில் அற்புத குழந்தை ஏசு ஆலயத்தில் 9-ம் ஆண்டு தேர்பவனி திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது.
    திருச்சி காட்டூர் ஆர்.கே.புரத்தில் அற்புத குழந்தை ஏசு ஆலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் 9-ம் ஆண்டு தேர்பவனி திருவிழா கடந்த 29-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

    நேற்று முன்தினம் இரவு விழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதையொட்டி சிறப்பு ஆராதனையை பங்குதந்தை சூசைராஜ் நடத்தி வைத்தார். இந்த வருடம் கொரோனா காரணத்தினால் தேர்பவனியானது ஆலய வளாகத்திற்குள் நடைபெற்றது.

    விழா ஏற்பாடுகளை கத்தோலிக்க இளைஞர்கள், கத்தோலிக்க மகளிர் அணி மற்றும் கத்தோலிக்க நிர்வாகிகள் செய்திருந்தனர். இதில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் கலந்து கொண்டனர்.
    கருங்கல் அருகே ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது.
    கருங்கல் அருகே ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய 181-வது பங்கு குடும்ப திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கொடியேற்றி வைத்தார். இதில் மறை வட்டார அருட்பணியாளர்கள், அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள், பங்குமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    விழா வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு முதல்திருவிருந்து வழங்கும் திருப்பலி அருட்பணியாளர் ஜேசுதாசன் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார்.

    விழாவின் 9-வது நாளான 13-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, திருமண பொன்விழா, வெள்ளிவிழா திருப்பலி, 11 மணிக்கு முதியோருக்கான திருப்பலி, மாலை 5.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை, புனிதரின் தேர் பவனி போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 14-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, காலை 8.45 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்குகிறார். பின்னர் 11 மணிக்கு புனிதரின் தேர் பவனி, மாலை 5 மணிக்கு திருவிழா நன்றி திருப்பலி, கொடியிறக்கம் போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை மரிய சூசை வின்சென்ட் தலைமையில், பங்குபேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.
    அழகிய மண்டபம் அருகே உள்ள குருவிக்காடு புனித அந்தோணியார் ஆலய 5-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை)திருப்பலியும், தேர் பவனியும் நடைபெறுகிறது.
    அழகிய மண்டபம் அருகே உள்ள குருவிக்காடு புனித அந்தோணியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி நடந்து வருகிறது. குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் இயேசு ரத்தினம் தலைமை தாங்கி கொடியை ஏற்றி வைத்தார்.

    5-ம் திருவிழாவான நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணிக்கு முன்னாள் குருகுல முதல்வர் மரியாள் தலைமையில் திருப்பலியும், 11 மணிக்கு தேர் பவனியும் நடைபெறுகிறது. அதனை தொடர்ந்து மாலை பொதுக்கூட்டம் மற்றும் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    விழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை ஒய்ஸிலின் சேவியர், பங்கு பேரவையினர், பங்கு மக்கள் இணைந்து செய்துள்ளனர்.
    ×