search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.
    X
    ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம் நடந்த போது எடுத்த படம்.

    ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றம்

    கருங்கல் அருகே ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது.
    கருங்கல் அருகே ஆலஞ்சி புனித சவேரியார் ஆலய 181-வது பங்கு குடும்ப திருவிழா நேற்று தொடங்கியது. இதையொட்டி நேற்று மாலையில் ஜெபமாலை, புகழ்மாலை, கொடியேற்றம், திருப்பலி, மறையுரை போன்றவை நடந்தது. கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியூஸ் கொடியேற்றி வைத்தார். இதில் மறை வட்டார அருட்பணியாளர்கள், அருட்பணி பேரவையினர், அருட்சகோதரிகள், பங்குமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.

    விழா வருகிற 14-ந் தேதி வரை நடக்கிறது. திருவிழா நாட்களில் காலை, மாலை வேளைகளில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை போன்றவை நடக்கிறது.

    நாளை (ஞாயிற்றுக்கிழமை) காலை 7 மணிக்கு முதல்திருவிருந்து வழங்கும் திருப்பலி அருட்பணியாளர் ஜேசுதாசன் தலைமையில் நடக்கிறது. அருட்பணியாளர் ஸ்டீபன் மறையுரையாற்றுகிறார்.

    விழாவின் 9-வது நாளான 13-ந் தேதி காலை 7 மணிக்கு திருமுழுக்கு திருப்பலி, திருமண பொன்விழா, வெள்ளிவிழா திருப்பலி, 11 மணிக்கு முதியோருக்கான திருப்பலி, மாலை 5.30 மணிக்கு சிறப்பு மாலை ஆராதனை, இரவு 8 மணிக்கு சிறப்பு வானவேடிக்கை, புனிதரின் தேர் பவனி போன்றவை நடைபெறும்.

    விழாவின் இறுதி நாளான 14-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு திருப்பலி, காலை 8.45 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடக்கிறது. கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை தலைமை தாங்குகிறார். பின்னர் 11 மணிக்கு புனிதரின் தேர் பவனி, மாலை 5 மணிக்கு திருவிழா நன்றி திருப்பலி, கொடியிறக்கம் போன்றவை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை மரிய சூசை வின்சென்ட் தலைமையில், பங்குபேரவையினர், பங்குமக்கள் செய்துள்ளனர்.
    Next Story
    ×