search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிகம்

    வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.
    X
    வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா கொடியேற்றம் நடந்தபோது எடுத்த படம்.

    மார்த்தாண்டம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா தொடங்கியது

    மார்த்தாண்டம், வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலம் நடந்தது.
    மார்த்தாண்டம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையொட்டி மார்த்தாண்டம் ஒய்.எம்.சி.ஏ. வளாகத்தில் இருந்து திருக்கொடி ஊர்வலம் நடந்தது.

    திருக்கொடியை பங்கு அருட்பணி பேரவை துணை தலைவர் ஜோசப் கிரேசியஸ் கையில் ஏந்தி செல்ல, தொடர்ந்து அருட்பணியாளர்கள், பங்கு அருட்பணி பேரவையினர், இறைமக்கள் ஊர்வலமாக சென்றனர்.

    ஊர்வலம் வெட்டுவெந்நி தூய அந்தோணியார் திருத்தல பங்கு வளாகத்தை அடைந்ததும் அங்குள்ள கொடிமரத்தில் குழித்துறை மறை மாவட்ட தொடர்பாளர் இயேசுரெத்தினம் கொடியேற்றி வைத்து திருப்பலிக்கு தலைமை தாங்கினார்.

    கொடியேற்றம் மற்றும் திருப்பலிக்கு திருத்தல பங்கு அருட்பணியாளர் அந்தோணி முத்து, இணைப்பணியாளர் மரிய மார்ட்டின், அருள்வாழ்வு வழிகாட்டி டென்சிங் மற்றும் அருட்பணியாளர்கள் முன்னிலை வகித்து கலந்து கொண்டனர். அருட்பணி ஆன்டணி ஜெயக்கொடி மறையுரையாற்றினார்.

    நிகழ்ச்சியில் வெட்டுவெந்நி திருத்தல பங்கு அருட்பணி பேரவை துணைத் தலைவர், செயலாளர் லில்லிபாய், துணைச் செயலாளர் பிரைட்சிங், பொருளாளர் தங்கையன் மற்றும் உறுப்பினர்கள், இறைமக்கள் கலந்து கொண்டனர். விழா நாட்களில் தினமும் மாலை செபமாலை, திருப்பலி நடைபெறும்.

    12-ந்தேதி காலை 10 மணிக்கு செபமாலை, நவநாள், திருப்பலி, 14-ந்தேதி காலை 8 மணிக்கு கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் தலைமையில் முதல் திருவிருந்து திருப்பலி நடைபெறுகிறது.
    Next Story
    ×