என் மலர்tooltip icon

    கிறித்தவம்

    பூண்டி மாதா பேராலயத்தில் ஆன்மீக தந்தை அருளானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது. தொடர்ந்து சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.
    உலகமெங்கும் உள்ள கிறிஸ்தவர்களின் தவக்காலம் சாம்பல் புதன் நிகழ்ச்சியுடன் தொடங்கியது. தவக்காலத்தின் முதல் வெள்ளியான நேற்று மாலை பூண்டி மாதா பேராலயத்தில் ஆன்மீக தந்தை அருளானந்தம் தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    தொடர்ந்து சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது. இதில் பேராலய அதிபர் பாக்கியசாமி, துணை அதிபர் அல்போன்ஸ், தியானமைய இயக்குனர் குழந்தைராஜ், உதவிபங்குத்தந்தை அருண்சவரிராஜ் ஆகியோர் கலந்து கொண்டனர். இதேபோல் பூதலூர் புனித ஆரோக்கிய அன்னை ஆலயத்திலும் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடைபெற்றது.

    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை காணும் போது பிதாவாகிய தேவன் தமது ஜனத்தின் மீது வைத்த அவரது அன்பையும் நாம் காண இயலும்.
    இயேசு கிறிஸ்துவின் சிலுவைப்பாடுகளை காணும் போது பிதாவாகிய தேவன் தமது ஜனத்தின் மீது வைத்த அவரது அன்பையும் நாம் காண இயலும். தேவன் தம்முடைய ஒரே பேறான குமாரனை விசுவாசிக்கிறவன் எவனோ அவன் கெட்டுப்போகாமல் நித்திய ஜீவனை அடையும் படிக்கு அவரைதந்து  அருளி உலகத்தின் அன்பு கூர்ந்தார். ஆதாமின் பாவத்தின் மூலம் அடிமையப்பட்டுபோன மனுக்குலத்தின் மீட்பிற்காக தேவன் தம்முடைய சொந்த குமாரனை சிலுவையிலே ஒப்புக்கொடுத்தார். தம்முடைய ஒரே பேறான குமாரனை ஒப்புக்கொடுத்து அவருடைய மரணத்தின் மூலம் உலகை மீட்பதே பிதாவின் மீட்பின் திட்டம். தம்முடைய சொந்த குமாரன் என்றும் பாராமல் நமக்காக இயேசுவை சிலுவையில் அறையும் படி பிதாவாகிய தேவன் ஒப்புக்கொடுத்ததே அவரது அன்பு ஆகும்.

    நாம் பாவிகளாயிருக்கையில் கிறிஸ்து நமக்காக மரித்ததினால் தேவன் நம் மேல் வைத்த தமது அன்பை விளங்கப்பண்ணுகிறார்(ரோ:5:78) என்று வேதம் தேவனுடைய அன்பை வெளிப்படுத்துகிறது. பழைய ஏற்பாட்டுக்காலத்திலே நியாயப்பிரமாணம் பாவம் செய்தவர்களிடத்தில் அன்பையோ இரக்கத்தையோ காண்பிக்கவில்லை. பாவத்தின் சம்பளம் மரணம் என்று வேதம் கூறுகிறது. பாவம் செய்த மனுக்குலத்திற்கு எவ்வித இரக்கமும் காட்டாமல் கடுமையான தண்டனை அந்நாட்களில் வெளிப்படுத்தப்பட்டது.

    ஆனாலும் அன்புள்ள தேவன் முழு மனுக்குலத்தினையும் மீட்டெடுக்க கிருபையாய் தமது குமாரனை அனுப்பினார். வேதனைகளின் மத்தியில் வாழ்ந்த ஜனங்களை பார்த்து கிறிஸ்துவானவர் மனதுருகினார். கிருபையுள்ள வார்த்தைகளை ஜனங்கள் மத்தியிலும் தேவாலயத்திலும் பிரசங்கித்தார். பாவத்திலே வாழ்ந்து தங்களுக்கு மீட்பே இல்லையோ என ஏங்கித்தவித்த முழுமனுக்குலத்துக்காகவும் தம் அன்பை வெளிப்படுத்த கல்வாரி சிலுவையிலே ஜீவனையும் கொடுத்தார். நீதிமானுக்காக ஒருவன் மரிக்கிறது அரிது.

    நல்லவனுக்கு ஒருவேளை ஒருவன் மரிக்க துணிவான். முழு உலகமும் கிறிஸ்துவானவர் தம் அன்பால் சிந்தின ரத்தத்தினாலே மீட்பை பெற்றது. பாவத்தின் சம்பளம் மரணம். தேவனுடைய கிருபைவரமோ நம்முடைய கர்த்தராகிய இயேசுகிறிஸ்துவினால் உண்டான நித்திய ஜீவன். இது உங்களால் உண்டானதல்ல. இது உங்களால் உண்டானதல்ல. இது தேவனுடைய ஈவு (எபோ:2:8) நாமும் சகோதரருக்காக ஜீவனை கொடுக்கக் கடனாளிகளாயிருக்கிறோம் (யோ:3:16) என்று வேதம் கூறுகிறது. பிரியமானவர்களே தேவன் இவ்விதமாய் நம்மிடத்தில் அன்பு கூர்ந்திருக்க நாமும் ஒருவரிடத்தில் ஒருவர் அன்பு கூறக் கடனாளிகளாயிருக்கிறோம்.

    அவருடைய பிள்ளைகளாகிய நாம் கிறிஸ்துவின் அன்பை உலகிலே வெளிப்படுத்துவோம். நாம் இரக்கத்தை பெறவும் ஏற்ற சமயத்தில் சகாயஞ்செய்யுங்கிருபையை அடையவும் தைரியமாய் கிருபாசனத்தண்டையிலே சேரக்கடவோம் என்று வேதம் அனைவருக்கும் இந்த கிருபையை பெற்றுக்கொள்ள அழைப்பு கொடுக்கிறது. நாமும் கிறிஸ்துவின் அன்பை வெளிப்படுத்துவோம். தேவனுக்குரியவர்களாய் வாழ்வோம்.

    போதகர் அமல்ராஜ்.

    பெத்தேல் ஏ.ஜி,திருச்சபை, மண்ணரை, திருப்பூர்
    ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் புனித வியாகுல அன்னை ஆலய திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.
    ஆரல்வாய்மொழி, தேவசகாயம் மவுண்டில் புனித வியாகுல அன்னை ஆலயம், மறைசாட்சி தேவசகாயம் திருத்தலம் ஆகிய இரட்டை திருத்தலம் உள்ளது. இங்கே ஒவ்வொரு ஆண்டும் புனித வியாகுல அன்னை ஆலயம் திருவிழா 10 நாட்கள் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு திருவிழா நாளை (வெள்ளிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. அன்று காலை 6 மணிக்கு திருப்பலி, 11 மணிக்கு நவநாள் திருப்பலி, மாலை 3 மணிக்கு திருவிழா வரவேற்பு மேளம், தொடர்ந்து கொடி நேர்ச்சை, ஜெபமாலை, இரவு 7 மணிக்கு கொடியேற்றம், திருப்பலி ஆகியவை நடக்கிறது. கோட்டார் மறை மாவட்ட பொருளாளர் அலோசியஸ் பென்சிகர் தலைமை தாங்குகிறார். முட்டம் மறைமாவட்ட முதல்வர் ஜாண்ரூபஸ் மறையுரை நிகழ்த்துகிறார்.

    தொடர்ந்து வருகிற விழா நாட்களில் ஜெபமாலை, புகழ்மாலை, திருப்பலி, மறையுரை, கலை நிகழ்ச்சிகள் நடக்கிறது.

    21-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6.30 மணிக்கு முதல்திருவிருந்து திருப்பலியும், இரவு 8.30 மணிக்கு மறைக்கல்வி ஆண்டு விழாவும், 26-ந் தேதி இரவு 8.15 மணிக்கு நற்கருணை பவனியும் நடக்கிறது.

    27-ந் தேதி மாலை 5 மணிக்கு திருப்பயணிகள் திருப்பலி, இரவு 9 மணிக்கு வாணவேடிக்கை, 10.30 மணிக்கு தேர்பவனி ஆகியவையும், விழாவின் நிறைவு நாளான 28-ந் தேதி அதிகாலை 5 மணிக்கு ஜெபமாலை, புகழ்மாலை தொடர்ந்து திருவிழா திருப்பலி, காலை 7.30 மணி மலையாள திருப்பலி, பிற்பகல் 3.30 மணிக்கு தேர்பவனி, இரவு 7 மணிக்கு நற்கருணை ஆசீர், 9.30 மணிக்கு தேவா கலைக்குழு வழங்கும் மறைசாட்சி தேவசகாயம் வரலாற்று நாடகம் ஆகியவை நடக்கிறது. விழாவுக்கான ஏற்பாடுகளை திருத்தல அதிபர் பிரான்சிஸ் சேவியர், பங்குத்தந்தை பிரைட், பங்கு மக்கள், பங்கு அருட்பணி பேரவை, அருட்சகோதரிகள் செய்து வருகிறார்கள்.
    கோவையில் கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது. கொரோனா அச்சம் காரணமாக அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர்.
    இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்பட்ட தினத்தை புனித வெள்ளி யாக உலகம் முழுவதும் உள்ள கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர். இதனை தொடர்ந்து சிலுவையில் அறையப்பட்ட 3-வது நாளில் இயேசு உயிர்த்தெழுந்த தினம் ஈஸ்டர் பண்டிகையாக கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய 40 நாட்களை, இயேசுவின் சிலுவைப்பாடுகளை நினைவு கூறும் வகையில் தவக்காலமாக கிறிஸ்தவர்கள் கடைபிடிக்கின்றனர்.

    இந்த தவக்காலத்தின் தொடக்கமாக கோவையில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நேற்று காலை சிறப்பு பிரார்த்தனை, திருப்பலி நடைபெற்றது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். கொரோனா அச்சம் காரணமாக அனைவரும் முக கவசம் அணிந்து இருந்தனர்.

    கோவை பெரியகடை வீதியில் உள்ள புனித மிக்கேல் அதிதூதர் ஆலயத்தில் நேற்று காலை தவக்கால தொடக்க திருப்பலி மற்றும் சிறப்பு பிரார்த்தனை மறை மாவட்ட முதன்மை குரு ஜான் ஜோசப் ஸ்டேனிஸ் தலைமையில் நடைபெற்றது. மாலையில் மறை மாவட்ட பிஷப் தாமஸ் அக்குவினாஸ் தலைமையில் நடைபெற்றது.

    இதில் ஆலய பங்கு குரு ஜான் தனசேகரன் உள்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆண்டுதோறும் சாம்பல் புதனை குறிக்கும் வகையில் கிறிஸ்தவர்களின் நெற்றியில் சாம்பல் கொண்டு சிலுவை அடையாளம் இடப்படுவது வழக்கம். ஆனால் இந்த ஆண்டு கொரோனா தொற்று அச்சம் காரணமாக சாம்பல் கையில் வழங்கப்பட்டன. அதன்பின்னர் கிறிஸ்தவர்கள் தங்களது நெற்றியில் அந்த சாம்பலை கொண்டு சிலுவை அடையாளமிட்டனர்.“மனிதனே நீ மண்ணாக இருக்கின்றாய், மண்ணுக்கே திரும்புவாய் மறவாதே“ என்பதை நினைவுபடுத்தி இந்த நிகழ்ச்சி நடந்தது.

    இதேபோல் சேரன்மாநகர் வேளாங்கன்னி ஆலயத்தில் பாதிரியார்கள் லாரன்ஸ், தேவதாஸ் தலைமையில் திருப்பலி நடந்தது. கோவை புலியகுளம் புனித அந்தோணியார் ஆலயத்தில் பாதிரியார் ராயப்பன் தலைமையிலும், ராமநாதபுரம் உயிர்த்த ஆண்டவர் ஆலயத்தில் பாதிரியார்கள் உபகாரம்,ஜெரோம் தலைமையிலும், மற்றும் காட்டூர் கிறிஸ்து அரசர் ஆலயம், கோவைப்புதூர் குழந்தை ஏசு ஆலயம் உள்ளிட்ட கிறிஸ்தவ ஆலயங்களில் சாம்பல் புதன் திருப்பலி நடைபெற்றது.

    இதனை தொடர்ந்து தவக்காலத்தையொட்டி ஆலயங்களில் சிலுவைப்பாதை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது. தொடர்ந்து வருகிற ஏப்ரல் 2-ந் தேதி புனித வெள்ளியும், 4-ந் தேதி ஈஸ்டர் பண்டிகையும் நடைபெறுகிறது.
    தவக்காலம் தொடக்கத்தையொட்டி பூண்டி மாதா பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. திருப்பலிக்கு பின்னர் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.
    திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள பூண்டி மாதா பேராலயத்தில் கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடக்கத்தையொட்டி நேற்று சிறப்பு திருப்பலி நடந்தது. அப்போது கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று கையில் ஏந்தி வந்த குருத்தோலைகளை எரித்து அதிலிருந்து கிடைத்த சாம்பலை புனிதம்செய்து ஆலயத்துக்கு வந்தவர்களின் நெற்றியில் பூசப்பட்டது. இதையடுத்து பேராலய அதிபர் பாக்கியசாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.

    இதில் துணை அதிபர் அல்போன்ஸ், தியான மைய இயக்குனர் குழந்தை ராஜ், உதவி பங்குத்தந்தை அருண் சவரிராஜ், ஆன்மிக தந்தையர் அருளானந்தம், கருணைதாஸ் ஆகியோர் கலந்து கொண்டனர். பின்னர் மாலையில் திருப்பலிக்கு பின்னர் சிலுவைப்பாதை நிகழ்ச்சி நடந்தது.

    பூண்டி மாதா பேராலயத்தில் தவக்காலத்தின் போது ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் மாலை சிலுவைப்பாதை நடைபெறும். அடுத்த மாதம் (மார்ச்) 26-ந் தேதி மைக்கேல் பட்டி ஆலயத்தில் இருந்து தவக்கால நடைபயணத்தை குடந்தை மறைமாவட்ட ஆயர் அந்தோணிசாமி அடிகளார் தொடங்கி வைக்கிறார்.

    நடைபயணம் பூண்டி மாதா பேராலயத்தை அடைந்தவுடன் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டு சிலுவைப்பாதை நடைபெறும். அடுத்த மாதம் 28-ந் தேதி ஏசு ஜெருசலேம் நகருக்கு வருகை தந்ததை வரவேற்கும் விதமாக குருத்தோலை ஞாயிறு பவனி நடக்கிறது. இந்த பவனி பேராலய மக்கள் மன்றத்தில் இருந்து தொடங்கி பூண்டி மாதா பேராலயத்தில் முடிவடையும். இதற்கான ஏற்பாடுகளை பேராலய அதிபர், துணை அதிபர், தியான மைய இயக்குனர் மற்றும் பங்கு மக்கள் செய்து வருகின்றனர்.
    சாம்பல் புதனையொட்டி வேளாங்கண்ணி பேராலயத்தில் சிறப்பு திருப்பலி நடந்தது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்து கொண்டனர்.
    நாகை மாவட்டம் வேளாங்கண்ணியில் புனித ஆரோக்கிய அன்னை பேராலயம் உள்ளது. இந்த ஆலயத்தில் சாம்பல் புதன் நிகழ்ச்சி நேற்று நடந்தது. கிறிஸ்தவர்களின் தவக்காலம் தொடங்கியதையொட்டி சிறப்பு திருப்பலி நடந்தது. இயேசு கிறிஸ்து சிலுவையில் அறையப்படும் நாள் நெருங்குவதை அறிந்து உலக மக்களின் பாவங்களை போக்க உபவாசம் இருந்து ஜெபித்தார். இந்த காலத்தை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் ஒவ்வொரு ஆண்டும் 40 நாள் உபவாசம் இருப்பது வழக்கம். இந்த 40 நாட்களை கிறிஸ்தவர்கள் தவக்காலம் என்றும் புனித நாட்கள் என்றும் கூறி வருகின்றனர்.

    இந்த காலத்தில் அனைவரும் நற்சிந்தனை, நல் ஒழுக்கம், நற்பண்பு, அடுத்தவர்களுக்கு உதவும் நோக்கத்தோடும் பகைமையை போக்கி நல் உறவு வைத்துக்கொள்ளுதல் மற்றும் புலால் உண்ணாமலும் இருந்து 40 நாட்கள் உபவாசம் இருந்து தவக்காலம் கடைபிடிக்கப்படும். இதனால் அவர்கள் வாழ்க்கையில் நல்ல நிகழ்வு தொடர்ந்து நடைபெறும். உடல் ஆரோக்கியம் பெறும் என கருதப்படுகிறது. இந்த தவக்காலம் நேற்று தொடங்கியது. இந்த புனித நாள் சாம்பல் புதன் என்று அழைக்கப்படுகிறது.

    சாம்பல் புதனையொட்டி நேற்று நாகை பகுதியில் உள்ள அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை மற்றும் திருப்பலிகள் நடந்தன. இதன் ஒரு பகுதியாக வேளாங்கண்ணி பேராலயத்தில் காலை 6 மணிக்கு உதவி பங்குத்தந்தை டேவிட் தன்ராஜ் தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தது.

    திருப்பலியின் போது கடந்த ஆண்டு குருத்தோலை பவனியின்போது பயன்படுத்தப்பட்ட குருத்தோலைகளை எரித்து உருவாக்கப்பட்ட சாம்பலை கிறிஸ்தவர்களின் நெற்றியில் சிலுவைபோல் பூசி ஆசீர்வாதம் செய்வது வழக்கம். ஆனால் தற்போது கொரோனா தொற்று பரவுவதால் சாம்பலை தலையில் தெளித்தும், கையில் வழங்கியும் ஆசிர்வாதம் செய்தனர். அதனைத் தொடர்ந்து ஆலயத்தில் திருப்பலி நடந்தது.

    இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் கலந்துகொண்டனர். தொடர்ந்து கத்தோலிக்க கிறிஸ்தவர்களுக்கு நற்கருணை வழங்கும் நிகழ்ச்சி நடந்தது. இதில் கிறிஸ்தவர்களுக்கு நற்கருணையை நாக்கில் வழங்குவது வழக்கம். ஆனால் கொரோனா தொற்று காரணமாக கையில் வழங்கப்பட்டது.
    கிறிஸ்தவர்களால் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக 40 நாட்கள் உபவாசம் இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். கிறிஸ்தவர்களின் தவக்காலம் இன்று தொடங்குகிறது.
    கிறிஸ்தவர்களால் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் விதமாக 40 நாட்கள் உபவாசம் இருந்து தவக்காலத்தை அனுசரிப்பது வழக்கம். இதனை லெந்து நாட்கள், கஸ்தி நாட்கள் என்றும் சொல்வது உண்டு. இந்த தவக்காலம் சாம்பல் புதன் தினத்தில் இருந்து தொடங்கும். இந்த ஆண்டுக்கான சாம்பல் புதன் இன்று வருவதால், தவக்காலம் இன்று முதல் தொடங்குகிறது.

    இதையொட்டி தேவாலயங்களில் இன்று காலை சாம்பல் புதன் சிறப்பு வழிபாடு நடைபெறும்.

    தவக்காலத்தில் கிறிஸ்தவர்கள் உபவாசம் இருப்பார்கள். மேலும் தினந்தோறும் கிறிஸ்தவ ஆலயங்கள் மற்றும் வீடுகளில் இயேசுவின் சிலுவைப்பாடுகளை தியானிக்கும் வகையில் சிலுவைப்பாதை வழிபாடும் நடைபெறும்.

    தவக்காலமான 40 நாட்களின் தொடர்ச்சியில் குருத்தோலை ஞாயிறு, பெரிய வியாழன் நிகழ்வுகளும் நடைபெறும். அதன்பின்னர் புனித வெள்ளியும் கடைப்பிடிக்கப்படும்.

    அதனைத் தொடர்ந்து சிலுவையில் அறையப்பட்ட இயேசு 3-வது நாளில் உயிர்த்தெழுந்ததை ஈஸ்டர் பண்டிகையாக கிறிஸ்தவர்கள் கொண்டாடுவார்கள்.
    சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். அசைவ உணவை தவிர்க்கிறார்கள். ஆடம்பர செலவை குறைத்து அதற்கு செலவிடும் பணத்தை சேகரித்து ஏழைகளுக்கு உதவுகிறார்கள்.
    இயேசு கிறிஸ்துவின் சிலுவை பாடுகளை நினைவு கூறும் வகையில் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தை அனுசரிக்கிறார்கள்.

    இயேசு உயிர்தெழுந்த தினமான ஈஸ்டர் பண்டிகைக்கு முந்தைய 40 நாட்கள் தவக்காலமாக கடை பிடிக்கப்படுகிறது.

    இந்த நாட்களில் இயேசு சிலுவையில் அறையப்பட்டு உயிர் விட்ட போது அவர் பட்ட துன்பங்கள் நினைவு கூறப்படுகிறது.

    இந்த தவக்காலம் வருடந்தோறும் சாம்பல் புதன் அன்று தொடங்குகிறது. இந்த ஆண்டு நாளை சாம்பல்புதன் அனுசரிக்கப்படுகிறது. இதையொட்டி கிறிஸ்தவ ஆலயங்களில் நாளை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது.

    இதில் கடந்த ஆண்டு குருத்தோலை ஞாயிறு அன்று வழங்கப்பட்ட குறுத்தோலைகளை சேமித்து எரித்து சாம்பல் ஆக்கப்படுகிறது.

    பின்னர் அதை புனிதப்படுத்தி கிறிஸ்தவர்களின் நெற்றியில் பாதிரியார்கள் பூசுகிறார்கள். மனிதர்களின் மரணத்தை நினைவூட்டும் வகையிலும் மனமாற்றம் அடைந்து புதுவாழ்வு வாழ வேண்டும் என்பதற்காகவும் இந்த சாம்பல் நெற்றியில் பூசப்படுகிறது.

    சாம்பல் புதன் முதல் கிறிஸ்தவர்களின் 40 நாள் தவக்காலம் தொடங்குகிறது. இதில் பல்வேறு கட்டுப்பாடுகளை கடைபிடிக்கிறார்கள். அசைவ உணவை தவிர்க்கிறார்கள். ஆடம்பர செலவை குறைத்து அதற்கு செலவிடும் பணத்தை சேகரித்து ஏழைகளுக்கு உதவுகிறார்கள்.

    இந்த நாட்களில் கிறிஸ்தவ ஆலய வழிபாடுகளில் இயேசுவின் சிலுவை துயரம் நினைவுகூறப்படுகிறது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் ஆலயங்களில் இயேசு கிறிஸ்து சிலுவை மரணத்தை நினைவூட்டும் சிலுவைப் பாதை சிறப்பு வழிபாடு நடைபெறுகிறது. இதில் ஏராளமான கிறிஸ்தவர்கள் பங்கேற்கிறார்கள்.

    இந்த தவக்காலத்தில் ஏழைகளுக்கு உணவு அளிப்பது, வருமானம் இல்லாமல் தவிப்பவர்களுக்கு பொருள் உதவி செய்வது, ஆஸ்பத்திரியில், சிறையில் துன்பப்படுவோரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறுவது போன்ற நிகழ்ச்சிகளும் நடைபெறுகின்றன.

    இந்த ஆண்டு ஈஸ்டர் பண்டிகை ஏப்ரல் மாதம் 4-ந் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொண்டாடப்படுகிறது. அதற்கு முந்தைய வியாழக் கிழமை பெரிய வியாழனாக அனுசரிக்கப்படுகிறது. அன்றைய தினம் இயேசு சிலுவையில் அறையப் படுவதற்கு முன்பு தனது சீடர்களுக்கு அவர் கடைசி இரவு உணவு வழங்கியது நினைவுகூறப்படுகிறது. அன்றைய தினம் கிறிஸ்தவ ஆலயங்களில் பாதிரியார்கள் பொதுமக்களின் பாவங்களை கழுவி முத்தமிடுகிறார்கள். போப் ஆண்டவரும் சாதாரண மக்களின் பாதங் களை கழுவி முத்தமிடுவது வாடிக்கையாக உள்ளது.

    மறுநாள் புனித வெள்ளியாக கடைபிடிக்கப்படுகிறது. அன்றைய தினம் அனைத்து கிறிஸ்தவ ஆலயங்களிலும் சிலுவை மரணத்தை நினைவுகூரும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகிறது. புனித சனிக்கிழமை ஆலயங்களில் வழிபாடு நடைபெறுவது இல்லை. அன்று நள்ளிரவு ஈஸ்டர் பண்டிகை சிறப்பு பிரார்த்தனை வழிபாடு நடைபெறுகிறது. அதை தொடர்ந்து ஞாயிறு அன்று ஈஸ்டர் பெருவிழா கொண்டாடப்படுகிறது.

    உலகம் முழுவதும் கிறிஸ்தவர்கள் தவக்காலத்தையும் புனித வாரத்தையும் அனுசரிக்கிறார்கள். ஈஸ்டர் பண்டிகையை சிறப்பாக கொண்டாடுகிறார்கள்.
    பாபநாசத்தில் புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழாவை முன்னிட்டு மின் அலங்கார தேர் பவனி வந்தது. தேர் திருவிழாவில் பாபநாசம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
    பாபநாசத்தில் புனித அந்தோணியார் ஆலய தேர் திருவிழா நடந்தது. இதையொட்டி கஞ்சி வார்த்தல் நடந்தது. புனித செபஸ்தியார் திருத்தல பங்குத்தந்தை பிரான்சிஸ் அடிகளார் தலைமையில் சிறப்பு திருப்பலி நிறைவேற்றப்பட்டது.

    இதையடுத்து அந்தோணியாரின் மின் அலங்கார தேர் பவனி வந்தது. தேர் திருவிழாவில் பாபநாசம் மற்றும் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் கலந்து கொண்டனர்.
    அழகிய மண்டபம் அருகே உள்ள செம்பருத்தி விளைபுனித அந்தோணியார் ஆலய திருவிழாவின் தேர்பவனி நடந்தது. இதில் திரளான கிறிஸ்துவர்கள் கலந்து கொண்டனர்.
    அழகிய மண்டபம் அருகே உள்ள செம்பருத்தி விளைபுனித அந்தோணியார் ஆலய திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நேற்று முடிவடைந்தது.

    நேற்று முன்தினம் நடந்த முதல் திருவிருந்து திருப்பலிக்கு பாளையங்கோட்டை முன்னாள் ஆயர் ஜூடு பால்ராஜ் தலைமை தாங்கி மறையுரையாற்றினார். இதில் 18 சிறுவர்களுக்கு முதல் திருவிருந்து கொடுக்கப்பட்டது.

    நேற்று தேர்பவனி நடந்தது. இதையொட்டி காலை திருவிழா சிறப்பு திருப்பலிக்கு அருட்பணியாளர் அல்போன்ஸ் தலைமை தாங்கி திருப்பலியை நிறைவேற்றினார். அதைத்தொடர்ந்து மதியம் 12 மணிக்கு கொடி இறக்கம் நடைபெற்றது. அதன்பிறகு நடந்த நிகழ்ச்சிக்கு பங்கு தந்தைகள் ராபர்ட் ஜான் கென்னடி, அருள் ஜெகதீஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாலை 6 மணிக்கு கூட்டு திருப்பலி நடைபெற்றது. இரவு 8.30 மணிக்கு தேர்பவனி நடந்தது.

    திருவிழா ஏற்பாடுகளை பங்குதந்தை ராபர்ட் ஜான் கென்னடி, இணை பங்குத்தந்தை அருள் ஜெகதீஷ், துணைத்தலைவர் கிரகோரி, செயலாளர் சுபா பொருளாளர் ராஜேஷ் மோன், துணைச் செயலாளர் ஸ்டாலின் சேகர் மற்றும் பங்குப்பேரவை, பங்கு மக்கள் இணைந்து செய்து இருந்தனர்.
    கொடைக்கானலில் உள்ள புனித அந்தோணியார் ஆலய நூற்றாண்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேர்பவனி நடைபெற்றது. இதைத்தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது.
    கொடைக்கானலில் உள்ள புனித அந்தோணியார் ஆலய நூற்றாண்டு திருவிழா கடந்த 2-ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவை முன்னிட்டு தினமும் மறையுரை சிந்தனைகளும், சிறப்பு திருப்பலிகளும் நடைபெற்றன. விழாவின் முக்கிய நாளான நேற்று முன்தினம் இரவு ஆலய நூற்றாண்டு சிறப்பு திருப்பலி நடைபெற்றது இதில் சேலம் மறைமாவட்ட ஆயர் சிங்கராயன் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்த்தினார்.

    இதைத்தொடர்ந்து புனித அந்தோணியாரின் இரவில் மின் அலங்கார தேர்பவனி நகரின் முக்கிய வீதிகள் வழியாக வந்து நேற்று அதிகாலையில் ஆலயத்தை அடைந்தது. திருவிழாவின் இறுதி நாளான நேற்று மதுரை நொபிலி மெட்ரிக் பள்ளி முதல்வர் அடைக்கலராஜ் கலந்துகொண்டு சிறப்பு திருப்பலி நிகழ்த்தினார். பின்னர் பகல் நேர சப்பர பவனி நகரின் பல்வேறு பகுதிகள் வழியாக சென்று ஆலயத்தை அடைந்தது. இதைத்தொடர்ந்து திருக்கொடி இறக்கப்பட்டு அன்னதானம் வழங்கப்பட்டது. திருவிழா ஏற்பாடுகளை திருத்தல வட்டார அதிபர் எட்வின் சகாயராஜா, உதவி பங்குதந்தையர்கள் பென்னி லாரன்ஸ் ஜஸ்டின், அருள் ஜஸ்டின், புனித அந்தோணியார் சங்கத்தினர், விழாக்குழுவினர் செய்திருந்தனர்.
    அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித லூர்து அன்னை திருவிழா கொண்டாடப்பட்டது. தொடர்ந்து பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் திருப்பலி நடந்தது.
    பிரான்ஸ் நாட்டில் லூர்து நகரில் உள்ள மசபியேல் என்ற குகையில் பெர்னதெத் என்ற இளம்பெண்ணுக்கு 1858-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 11-ந் தேதி ஏசுவின் தாய் மரியாள் காட்சி கொடுத்தார்.

    இதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி மாதம் புனித லூர்து அன்னை திருவிழாவாக கத்தோலிக்க கிறிஸ்தவர்களால் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில் அழகப்பபுரம் புனித அந்தோணியார் ஆலயத்தில் புனித லூர்து அன்னை திருவிழா கொண்டாடப்பட்டது.

    அன்று காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை ஆலய மைதானத்தில் தொடர் ஜெபமாலை நடந்தது. பின்னர் 6.30 மணிக்கு அழகப்பபுரத்தில் முக்கிய வீதிகள் வழியாக மெழுகுவர்த்தி ஏந்தி ஜெபமாலை ஜெபித்தபடி பவனியாக சென்றனர். தொடர்ந்து பங்குத்தந்தை செல்வராயர் தலைமையில் திருப்பலி நடந்தது.
    ×