என் மலர்
கிறித்தவம்
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் காற்றாடி மலையில் மறைசாட்சி தேவசகாயம் உயிர் தியாகத்தை நினைவுபடுத்தும் வகையில் இன்று (வியாழக்கிழமை) திருப்பலி நடக்கிறது.
ஆரல்வாய்மொழி தேவசகாயம் மவுண்ட் காற்றாடி மலையில் மறைசாட்சி தேவசகாயம் உயிர் தியாகத்தை நினைவுபடுத்தும் வகையில் ஒவ்வொரு வருடமும் நிகழ்ச்சியாக நடத்தப்படும். அதன்படி நேற்று நிகழ்ச்சி தொடங்கியது. இதையொட்டி காலையில் திருப்பலி, மாலையில் செபமாலை, புகழ்மாலை நடந்தது. அதன் பின்னர் உயிர்த்தியாகச் சுடர் அர்ப்பணம் மறைசாட்சியின் திருக்கொடி ஏற்றம் மற்றும் திருவிழா திருப்பலி நடைபெற்றது. இதில் கோட்டார் மறைமாவட்ட முன்னாள் ஆயர் பீட்டர் ரெமிஜியுஸ் கலந்து கொண்டு தலைமை மற்றும் மறையுரை ஆற்றினார்
இன்று (வியாழக்கிழமை) காலையில் திருப்பலி நடக்கிறது. அதனை தொடர்ந்து மாலை 5.30 மணிக்கு நடைபெறும் சிறப்பு நன்றி திருப்பலியில் கோட்டார் மறைமாவட்ட ஆயர் நசரேன் சூசை கலந்து கொண்டு தலைமை மற்றும் மறையுரை ஆற்றுகிறார். விழா ஏற்பாடுகளை அதிபர், பங்குதந்தைகள், பங்கு அருட்பணி பேரவையினர், அருட் சகோதரிகள் மற்றும் பங்கு இறைமக்கள் செய்துள்ளனர்.

இயேசு கிறிஸ்துவை அற்புதங்களின் நாயகராக கண்டதாலேயே, அவர் வாழ்ந்த யூத சமூகத்தைச் சேர்ந்த பலரும் அவரை இறைமகனாக ஏற்றுக் கொண்டனர்.
இறைமகன் இயேசு மனிதராக இந்த உலகில் வாழ்ந்த காலத்தில், கணக்கற்ற அற்புதங்களைச் செய்ததாக பைபிள் கூறுகிறது. அவர் இன்றும் வாழும் கடவுளாக இருக்கிறார் என்பதற்கு மக்கள் மத்தியில் நிகழும் பல்வேறு அற்புதங்கள் சான்று பகர்கின்றன. இயேசு கிறிஸ்து சிறு வயதிலேயே பல அற்புதங்களை நிகழ்த்தியதாக, பைபிளில் சேர்க்கப்படாத சில பழங்கால நூல்கள் குறிப்பிடுகின்றன.
ஆனால், இயேசுவின் இறையாட்சிப் பணியில் முதல் அற்புதம் கானா ஊர் திருமண வீட்டில் நடைபெற்றதாக பைபிள் சொல்கிறது. திருமண விருந்துக்கான திராட்சை ரசம் தீர்ந்துபோன நிலையில், இயேசு தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்தார். “எனது நேரம் இன்னும் வரவில்லை” என இயேசு முதலில் கூறினாலும், அவரது தாய் மரியாவின் பரிந்துரையை ஏற்று இந்த அற்புதத்தை நிகழ்த்தியதாக நற்செய்தியாளர் யோவான் எடுத்துரைக்கிறார்.
இயேசு கிறிஸ்துவை அற்புதங்களின் நாயகராக கண்டதாலேயே, அவர் வாழ்ந்த யூத சமூகத்தைச் சேர்ந்த பலரும் அவரை இறைமகனாக ஏற்றுக் கொண்டனர். இஸ்ரவேலில் தோன்றிய இறைவாக்கினர்கள், முன்பு அறிவித்த இறையாட்சியை செயல்படுத்த வந்த ‘இறைமகன்’ இயேசு தான் என்ற யூதர்களின் நம்பிக்கைக்கு, அவரது அற்புதங்கள் அனைத்தும் அடித்தளம் அமைத்துக் கொடுத்தன. தமது வாழ்நாளில் மூன்று விதமான அற்புதங்களை இயேசுபிரான் செய்ததாக காண்கிறோம்.
முதலாவதாக, அவர் பலவித பிறவிக் குறைபாடுகள் கொண்டவர்களையும், காய்ச்சல், தொழுநோய், ரத்தப்போக்கு, முடக்குவாதம் உள்ளிட்ட பல நோய்களையும் குணப்படுத்தினார். தீய ஆவியின் தொல்லைகள் என்று கருதப்பட்ட மனநோய், வலிப்பு போன்றவற்றையும் சுகமாக்கினார்.
இயேசுவுக்கு 700 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த இறைவாக்கினர் எசாயா, கடவுள் ஆட்சியில் நிகழவிருக்கும் அற்புதங்களாக முன்னுரைத்தவை இயேசுவின் காலத்தில் நிறைவேறின. “அப்போது பார்வையற்றோரின் கண்கள் பார்க்கும், காது கேளாதோரின் செவிகள் கேட்கும். அப்பொழுது, காலூனமுற்றோர் மான்போல் துள்ளிக்குதிப்பர், வாய் பேசாதோர் மகிழ்ந்து பாடுவர்” (எசாயா 35:5-6) என்ற இறைவாக்கை இயேசு நிறைவு செய்தார்.
இரண்டாவதாக, இயேசு இயற்கை மீது அதிகாரம் கொண்டவராகத் திகழ்ந்தார். அவர் தண்ணீரை திராட்சை ரசமாக மாற்றி அற்புதம் செய்ததை (யோவான் 2:1-11) பைபிள் எடுத்துரைக்கிறது. இரவு முழுவதும் உழைத்து பலன் கிடைக்காத சீமோன் குழுவினருக்கு, வலைகள் கிழியும் அளவுக்கு மீன் கிடைக்கச் செய்ததை லூக்கா (5:1-11) நற்செய்தி கூறுகிறது.
இயேசு ஐந்து அப்பங்களையும், இரண்டு மீன்களையும் கொண்டு ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட மக்களுக்கு உணவு வழங்கியதாக (மாற்கு 6:34-44) நான்கு நற்செய்தி நூல்களும் சான்று பகர்கின்றன. கலிலேய கடல் மீது இயேசு நடந்த அதிசயத்தையும் (மாற்கு 6:46-51), காற்றும் கடலும் இயேசுவின் வார்த்தைகளுக்கு கீழ்ப்படிந்த அற்புதத்தையும் (மத்தேயு 8:23-27) நற்செய்திகள் படம்பிடித்துக் காட்டுகின்றன.
மூன்றாவதாக.. இயேசு கிறிஸ்து வாழ்வின் மீது, அதாவது உயிரின் மேல் அதிகாரம் கொண்டிருந்தார். “வழியும் உண்மையும் வாழ்வும் நானே” (யோவான் 14:6) என்று கூறிய இயேசு, இறந்துபோன மூன்று நபர்களை மீண்டும் உயிருடன் எழுப்பியதாக நற்செய்திகளில் காண்கிறோம். தொழுகைக்கூடத் தலைவர் ஒருவரின் இறந்துபோன மகளுக்கு, அவரது வீட்டிலேயே இயேசு உயிர் கொடுத்ததாக (மத்தேயு 9:23-26, மாற்கு 5:35-43) நற்செய்திகள் கூறுகின்றன. நயீன் ஊர் கைம்பெண்ணின் மகனை கல்லறைக்கு எடுத்துச் செல்லும் வழியில் இயேசு உயிர்பித்ததாக லூக்கா (7:11-17) நற்செய்தியாளர் கூறுகிறார். அதையும் தாண்டி இறந்து அடக்கம் செய்யப்பட்டு நான்கு நாட்களான பிறகு, தமது நண்பர் லாசரை இயேசு உயிரோடு எழுப்பியதாக யோவான் (11:17-44) நற்செய்தி எடுத்துரைக்கிறது.
அனைத்திற்கும் மேலாக, ஆண்டவர் இயேசு, சாவை வென்று தாமே உயிர்த்தெழுந்து தம் சீடர்களுக்கு காட்சிக்கொடுத்தது, அவரது இறைத்தன்மைக்கு சிறப்பான சான்றாக உள்ளது. “என் உயிரை என்னிடமிருந்து யாரும் பறித்துக் கொள்வதில்லை. நானாகவே அதைக் கொடுக் கிறேன். உயிரைக் கொடுக்கவும் எனக்கு அதிகாரம் உண்டு, அதை மீண்டும் பெற்றுக் கொள்ளவும் அதிகாரம் உண்டு. என் தந்தையின் கட்டளைப்படியே நான் இப்படிச் செய்கிறேன்” (யோவான் 10:18) என்று கூறிய இயேசு உலக மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் தம் உயிரையே கையளித்தார். இருந்தாலும், இறந்த மூன்றாம் நாளில் அதை இறைத் தந்தையிடம் இருந்து பெற்றுக் கொண்டார்.
இயேசு கிறிஸ்து மரணத்தை வென்ற அற்புதமே, அவர் மனிதராய் தோன்றிய கடவுள் என்பதை சீடர்கள் உறுதியுடன் நம்ப வழிவகுத்தது. பல்வேறு எதிர்ப்புகள், கொடுமைகள் மற்றும் அச்சுறுத்தல்களைத் தாண்டி, கிறிஸ்தவம் வளர்ந்து பரவி வருவதும் ஆண்டவர் இயேசுவின் அற்புதமே என்பதில் சந்தேகமில்லை. அற்புதங்களின் நாயகரான இறைமகன் இயேசுவிடம் முழுமையாக நம்பிக்கை கொண்டால், நம் வாழ்விலும் அதிசயங்கள் நிகழும் என்பது உறுதி!
- டே.ஆக்னல் ஜோஸ்

நம்முடைய எல்லாக் காரியங்களிலும் நேர்மையாய், கடவுளுக்கு பயந்து நடக்கும்போது, மற்றவர்களுடைய எல்லா சூழ்ச்சிக்கும் தேவன் நம்மை தப்புவிக்கிறார்.
மேதியனாகிய தாரியு என்பவர் அரசராய் இருந்த போது, அவருக்கு கீழ் வரி வசூலிப்போருக்கு மேற்பார்வையாளராக தானியேல் பணியாற்றினார். அவர் நேர்மையாகவும் உத்தமமாகவும் பணி செய்தால், அவரிடம் அரசின் முழு பொறுப்பையும் ஒப்படைக்க அரசர் விரும்பினார். அதை கேள்விப்பட்ட மற்ற மேற்பார்வையாளர்களும், வரி வசூலிப்போர்களும் தானியேல் மீது பொறமை கொண்டனர். அதோடு தானியேல் பற்றி அரசரிடம் குறை சொல்வதற்கான காரணத்தைத் தேடினர்.
ஆனால் தானியேல் தன்னுடைய பணியில் நேர்மையாக செயல்பட்டதால், மற்றவர்களால் ஒன்றும் செய்ய இயலவில்லை. எனவே அவர்கள் “ தானியேல் கடவுளின் சட்டத்தைப் பின்பற்றுவதில் உறுதியானவர். அந்த சட்டத்தை வைத்து அவர் மீது குற்றம் சுமத்துவதைத் தவிர வேறு எந்த வகையிலும் அவர் மீது குற்றம் காண முடியாது” என்றார்கள்.
அதனால் அவர்கள் அரசரிடம் வந்து “முப்பது நாள் வரையில் அரசராகிய உங்களைத் தவிர, வேறெந்த தெய்வத்திடமோ, மனிதனிடமோ யாதொரு விண்ணப்பமும் செய்கின்ற எந்த மனிதனும் சிங்கக் குகைக்குள் தள்ளப்படுவான் என்று நீர் சட்டம் இயற்றி தடையுத்தரவு போடவேண்டும்” என்று வலியுறுத்தினர். அரசனும் அதற்கு ஒப்புக்கொண்டு உத்தரவு பிறப்பித்தான்.
நாள்தோறும் மூன்று வேளையும் தம் கடவுளுக்கு முன்பாக மண்டியிட்டு மன்றாடி, அவருக்கு நன்றி செலுத்துவது தானியேலின் வழக்கம். அவர் இந்தச் சட்டம் கையொப்பமிடப்பட்டதை அறிந்தபின், தம் வீட்டுக்குச் சென்று, மேலறையின் பலகணிகள் எருசலேமை நோக்கித் திறந்திருக்க, முழந்தாளிலிருந்து மன்றாடி கடவுளுக்கு நன்றி செலுத்தினார்.
அவரை குற்றப்படுத்த வகை தேடிக் கொண்டிருந்த மனிதர்கள், முன்னரே கூடிப் பேசிக்கொண்டபடி, தானியேலின் அறையின் உள்ளே நுழைந்து தானியேல் தம் கடவுளிடம் வேண்டுவதையும் மன்றாடுவதையும் கண்டார்கள். அதையே காரணம்காட்டி அரசரிடம் சொல்லி அவரை சிங்கக் குகையில் தள்ளினார்கள். அரசருக்கு இதில் விருப்பம் இல்லாவிட்டாலும், மற்றவா்களின் வலியுறுத்தலால் ஒப்புக்கொண்டார்.
தானியேல் சிங்கக் குகையில் தள்ளப்படும் முன்பு, அரசர் அவரிடம், “நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுள் உன்னை விடுவிப்பாராக!” என்றார். அதுமட்டுமல்ல சிங்கக் குகையில் தானியேல் இருந்த அந்த இரவு நேரத்தில் அரசனால் உண்ணவோ, உறங்கவோ முடியவில்லை. பொழுது விடிந்தவுடன் குகை நோக்கி விரைந்து வந்த அவர், உரத்த குரலில், “தானியேல்! என்றும் உள்ள கடவுளின் ஊழியனே! நீ இடைவிடாமல் வழிபடும் உன் கடவுளால் உன்னை சிங்கங்களிடம் இருந்து விடுவிக்க முடிந்ததா?” என்று கேட்டார்.
அதற்குத் தானியேல், “அரசரே! நீர் நீடூழி வாழ்க! என் கடவுள் தம் தூதரை அனுப்பி, சிங்கங்களின் வாய்களைக் கட்டிப்போட்டார். அவை எனக்குத் தீங்கு எதுவும் செய்யவில்லை; ஏனெனில் அவர் திருமுன் நான் மாசற்றவன். மேலும் அரசரே! உம் முன்னிலையிலும் நான் குற்றமற்றவனே!” என்று மறுமொழி கொடுத்தார்.
இதன் வழியாக தானியேல் தன்னுடைய தேவன் மேல் கொண்டிருந்த நம்பிக்கையை காட்டிலும், அரசன் தானியேலின் கடவுள் மீது அதிக நம்பிக்கை கொண்டிருந்தார். குகையில் பசியுடன் இருந்த சிங்கங்களின் நடுவில் தானியேல் நிம்மதியாகவும், மனநிறைவுடன் இருந்தபோதும், அரண்மனையில் இருந்த அரசனால் அவ்வாறு இருக்க முடியவில்லை. ‘தானியேலை இறைவன் காப்பாரா?, இல்லையா?’ என்ற கவலையுடன், உண்ணவோ, உறங்கவோ முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். அதனால்தான் பொழுது விடிந்ததும், குகை நோக்கி விரைந்து வந்து தானியேல் நலமாக இருப்பதை கண்டு அவர் மிகவும் மகிழ்ச்சியடைந்தார்.
தானியேல் இறைவனின் முன்பு உத்தமாய் நடந்து கொண்டபடியால் அவரை சிங்கத்தின் வாய்க்கு தப்புவித்த தேவன், தாமே தானியேல் வழியாக தம்முடைய மகிமையை அரசருக்கும் வெளிப்படுத்தினார்.
அப்பொழுது தாரியு அரசர், நாடெங்கும் வாழ்ந்துவந்த எல்லா இனத்தவருக்கும், நாட்டினருக்கும், மொழியினருக்கும் ஓர் அறிக்கை விடுத்தார். “உங்களுக்கு மிகுந்த சமாதானம் உண்டாவதாக! என் ஆட்சிக்குட்பட்ட நாடு முழுவதும் உள்ள மக்கள் தானியேலின் கடவுளுக்கு அஞ்சி நடுங்க வேண்டும். இது என் ஆணை. ஏனெனில், அவரே வாழும் கடவுள்; அவர் என்றென்றும் நிலைத்திருக்கின்றார்; அவரது ஆட்சி என்றும் அழிவற்றது; அவரது அரசுரிமைக்கு முடிவே இருக்காது. தானியேலை சிங்கங்களின் பிடியில் இருந்து காப்பாற்றியவர் அவரே; அவரே மீட்பவர்! விடுதலை அளிப்பவரும் அவரே! விண்ணிலும் மண்ணிலும் அரிய செயல்களையும் விந்தைகளையும் ஆற்றுபவர் அவரே!" என்று தேவனை அனைவர் முன்பும் உயர்த்தி அவரது நமது நாமத்தை மகிமைப்படுத்தினார்.
நாம் செய்யும் செயல்கள் யாவும், எப்போதும் மற்றவர்களால் கண்காணிக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றன. நாம் எப்போது தவறு செய்வோம், எந்த வகையில் நம்மை சிக்க வைக்கலாம் என்று சிலர் காரணம் தேடி அலைந்து கொண்டிருக்கிறார்கள். ஆனால் நம்முடைய எல்லாக் காரியங்களிலும் நேர்மையாய், கடவுளுக்கு பயந்து நடக்கும்போது, மற்றவர்களுடைய எல்லா சூழ்ச்சிக்கும் தேவன் நம்மை தப்புவிக்கிறார். அதன் வழியாக நம்மோடு அவர் இருப்பதை அவர்களும் அறியும்படி செய்கிறார்.
நாமும் தானியேலை போல உலகக் காரியங்களிலும், தேவனுடைய காரியங்களிலும் நேர்மையாய் நடப்பதன் மூலம், நம்முடைய பெயர் மட்டுமல்ல, தேவனுடைய பெயரும் மகிமைப்படும் என்பதை உணர்ந்து, எல்லாவற்றிலும் இறைவனுக்கு உகந்த வாழ்க்கை வாழ்வோம்.

கயத்தாறு சத்திரப்பட்டி கிராமத்தில் உள்ள அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழா நாட்களில் திருப்பலி, ஜெப வழிபாடுகள் நடைபெறும்.
கயத்தாறு அருகே சத்திரப்பட்டி கிராமத்தில் அற்புத குழந்தை இயேசு ஆலய திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. பங்குதந்தை வின்சென்ட் அடிகளார் தலைமையில் திருப்பலி, நற்கருணை சிறப்பு வழிபாடுகளுடன் இறை மக்கள் வழிபாடு செய்து ஆலயத்தை மூன்று முறை வலம் வந்து பின்னர் ஜெப வழிபாடு செய்து கொடியேற்றினார்.
இந்த திருவிழா 10 நாட்கள் நடைபெறும். விழா நாட்களில் திருப்பலி, ஜெப வழிபாடுகள் நடைபெறும். 10-ம் நாளில் சப்பர பவனி நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை தலையால்நடந்தான் குளம் திருக்குடும்ப சபை குருக்கள், கயத்தாறு அமலவை கன்னியர்கள் மற்றும் இறை மக்கள் செய்திருந்தனர்.

இயேசு நம்முடன் இருக்க நாம் செய்யவேண்டியது அன்பு, சந்தோஷம், சமாதானம், பொறுமை, தயவு, நற்குணம், விசுவாசம், சாந்தம், இந்த பிரமாணங்களை கைக்கொண்டு கர்த்தருக்குள் நிலைத்திருக்க வேண்டும்.
இயேசு நம்முடன் இருக்கும்போது எத்தனை பெரிய சோதனைகள் வந்தாலும் அதை வென்றெடுக்கலாம்.
பரிசுத்த வேதாகமத்தில் பரிசுத்த பவுல் “”உங்கள் திராணிக்கு மேலாக நீங்கள் சோதிக்கப்படுகிறதற்கு அவர் இடங்கொடாமல், சோதனையைத் தாங்கத்தக்கதாக, சோதனையோடுகூட அதற்குத் தப்பிக்கொள்ளும்படியான போக்கையும் உண்டாக்குவார்” (1கொரிந்தியர் 10:13) என்பதாக கூறியுள்ளார்.
நாமும் சோதனையை சாதனையாக மாற்ற இறைமகன் இயேசு நம்முடன் இருக்க வேண்டும். அவ்வாறு இயேசு நம்முடன் இருக்க நாம் செய்யவேண்டியது அன்பு, சந்தோஷம், சமாதானம், நீடியபொறுமை, தயவு, நற்குணம்,விசுவாசம், சாந்தம், இச்சையடக்கம் இந்த பிரமாணங்களை கைக்கொண்டு கர்த்தருக்குள் நிலைத்திருக்க வேண்டும். இவ்வாறு வாழும்போது நாமும் வெற்றியுள்ள வாழ்க்கை வாழ முடியும்.
– ஒய். டேவிட் ராஜா

இந்த உலகத்தில் உள்ள அனைத்து கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இயேசு கிறிஸ்துவின் கொள்கை மாறுவதே இல்லை. காரணம் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார்.
இந்த உலகத்தில் மனிதனுக்கு எதுலேயும் பூரண உத்தரவாதம் இல்லை. ஆனால், கிறிஸ்து பிறந்தது நமக்கு உத்தரவாதம் தரவே. இந்த உலகத்தில் பலர் அற்புதங்கள் செய்கிறார்கள். ஆனால், எவராலும் நித்தியமான வாழ்வுக்கான உத்தரவாதம் கொடுக்க முடியவில்லை. உலகில் யாரும் தேவகுமாரனாய் பிறந்தது இல்லை. கிறிஸ்து பூமியில் வாழ்ந்த நாட்களிலும், இப்போதும் அவர் செய்கிற அற்புத அதிசயங்கள் எப்படிப்பட்ட பொல்லாத மனிதனையும் புதிய படைப்பாக மாற்றுகிறது.
பாவம் செய்கிற மனிதனுக்கு மரணம் நிச்சயம். எந்த மனிதனும் தாங்க முடியாத சோதனை வரும் போது நிச்சயம் மரணத்தை விரும்புகிறான். பாவத்தால் சாகும் மனிதனுக்கு மரணம் முடிவாகாமல், பாதாள நரக வேதனையே கிடைக்கிறது.
ஆகவே, நீ இறக்க வேண்டியதில்லை. உனக்கு பதிலாக நான் மரித்தேன் என்றார் இயேசு. அதோடு நிறுத்தாமல் 3-ம் நாளில் உயிரோடு எழுந்தார்.
இந்த உலகத்தில் உள்ள அனைத்து கொள்கைகளும் மாறிக்கொண்டே இருக்கும். ஆனால், இயேசு கிறிஸ்துவின் கொள்கை மாறுவதே இல்லை. காரணம் அவர் நேற்றும், இன்றும், என்றும் மாறாதவராக இருக்கிறார். இந்த நாட்களில் ஏற்பட்டுள்ள பலதரப்பட்ட கொள்ளை நோய்களுக்கும், பலவித பிரச்சினைகளுக்கும் பரிபூரண பரிகாரம் இயேசு கிறிஸ்துவின் வசனத்திலும், ரத்தத்திலும், தழும்புகளிலும் இன்றும் உண்டு. இயேசு கிறிஸ்து அனைவருக்கும் நித்திய ஜீவனை குறித்தும், உயிர்தெழுதலைக்குறித்தும் நூற்றுக்கு நூறு உத்தரவாதம் தருகிறார். அவரிடத்திலும், அவரது வார்த்தையிலும் பூரண விசுவாசத்தோடு ஜெபிக்கிற அனைவருக்கும் அவர் உத்தரவாதம் தருகிறார்.
இவ்வாறு போதகர் ஜான் இ.கிறிஸ்டோபர் கூறியுள்ளார்.
ஜான் இ. கிறிஸ்டோபர் தோவாளை போதகர் ஜி.சி.எம். முத்துநகர்.

நாகை மாவட்டம் கருங்கண்ணியில் புனித அந்தோணியார் ஆலயத்தில் தேர் பவனி நடந்தது. முன்னதாக சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல் மற்றும் திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
நாகை மாவட்டம் கருங்கண்ணியில் புனித அந்தோணியார் ஆலயம் உள்ளது. இங்கு ஆண்டின் முதல் செவ்வாய்க்கிழமையை முன்னிட்டு நேற்று முன்தினம் தேர் பவனி நடந்தது. முன்னதாக சிறப்பு நவநாள் கூட்டுப்பாடல் மற்றும் திருப்பலி உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.
மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேர் பல்வேறு வீதிகள் வழியாக சென்று மீண்டும் ஆலயத்தில் நிறைவடைந்தது. விழாவில் கருங்கண்ணி பங்குத்தந்தை சவரிமுத்து மற்றும் பலர் கலந்து கொண்டனர்.
விழா ஏற்பாடுகளை கருங்கண்ணி கிறிஸ்தவ சமுதாய தலைவர் பிரான்சிஸ் மற்றும் ஊர் பொறுப்பாளர்கள், பொதுமக்கள் செய்து இருந்தனர்.

நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான தேர்ப்பவனி நடந்தது. இதில் பக்த சபையினர், பாடகர் குழுவினர், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
நாகர்கோவில் ராமன்புதூர் கார்மல்நகர் திருக்குடும்ப ஆலய திருவிழா 10 நாட்கள் நடந்தது. இதில் 9 மற்றும் 10-ம் நாள் திருவிழா நாட்களில் தேர்ப்பவனி நடந்தது. 9-ம் நாள் திருவிழாவில் இரவு 10 மணிக்கு ஆலய வளாகத்தில் இருந்து தேர்ப்பவனி தொடங்கியது. நிகழ்ச்சியை பங்குதந்தை சகாய பிரபு ஜெபம் செய்து தொடங்கி வைத்தார். தேர் கார்மல் நகர் பங்கின் முக்கிய வீதிகளின் வழியாக சென்று அதிகாலை 4 மணியளவில் ஆலய வளாகம் வந்தடைந்தது.
10-ம் நாள் விழாவில் காலை 6.30 மணிக்கு திருவிழா சிறப்பு திருப்பலி நடந்தது. பிற்பகல் 2 மணிக்கு தேர்ப்பவனி நடந்தது. தேர்ப்பவனிக்கு ஊரின் முக்கிய வீதிகள், சந்திப்புகளில் வரவேற்பு அளிக்கப்பட்டது. இதில் பக்த சபையினர், பாடகர் குழுவினர், இளைஞர்கள் கலந்து கொண்டனர்.
ராமன்புதூர் சந்திப்பில் பங்கு நிர்வாகிகள் தலைவர் ஜோசப் ஆன்டனி, செயலாளர் டூறிங் ஆன்றனி தனிஷ், பொருளாளர் லியோன் ஜேசு ரெத்தினம் ஆகியோருக்கு பொதுமக்கள் சார்பில் பொன்னாடை அணிவிக்கப்பட்டு கவுரவிக்கப்பட்டனர். தேர்ப்பவனி மேளதாளத்துடன் இரவு 8 மணியளவில் ஆலய வளாகம் வந்தடைந்தது. இதற்கான ஏற்பாடுகளை பங்குதந்தை, பங்கு நிர்வாகிகள், செயற்குழு உறுப்பினர்கள், பங்குமக்கள் இணைந்து செய்திருந்தனர்.

நம்மை மாற்றிக்கொள்ளவும், இறை ஆட்சி தகுதியான மனிதர்களாய் வாழவும், புதுவருடம் நமக்கு அழைப்பு விடுகிறது. அதை ஏற்று வாழ்வோம். கிறிஸ்து பிறப்பையும், புதுவருட பிறப்பையும் அர்த்தமுள்ளதாய் கொண்டாடுவோம்.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு பெத்லகேம் எனும் சிற்றூரில் தச்சர் யோசேப்புக்கும், மரியாளுக்கும் மகனாகப் பிறந்தவர் இயேசு. தூய ஆவியால் நிரப்பப்பட்டு கன்னி மரியாளின் மகனாய் இயேசு பிறந்தார். இவர் கடவுளின் குமாரனாய் இவ்வுலகில் வந்தார் என்பதே நம்பிக்கையின் செய்தி.
‘இயேசு கிறிஸ்து இவ்வுலகில் வந்தது, தந்தையின் அன்பு’ என யோவான் கூறியதும் (யோவான்3:16), ‘இயேசு என்ற பெயருக்குப் பாவத்திலிருந்து விடுதலை அளிப்பவர். அதாவது ரட்சகர்’ என மத்தேயு (1:21) கூறியதும் பாவங்களிலிருந்து இவ்வுலகை மீட்க இயேசு பிறந்தார் என்பதையும் அறிய முடிகிறது.
இயேசு கிறிஸ்து உலக ரட்சகர் என்ற நிலையில் அவர் அரண்மனையில் அலங்காரமாக, ஆடம்பரமாகப் பிறக்காமல் மாட்டுத் தொழுவத்தில், ஏழ்மையின் கோலமாகத் தாழ்மையின் வடிவாகப் பிறந்தார். (பிலிப்பியர் 2:4-8).
‘இயேசு பிறந்தார்’ என்ற செய்தி இவ்வுலகில் முதன் முதலாக ஆடுகளை வயல்வெளியில் மேய்த்துக் கொண்டிருந்த மேய்ப்பர்களுக்கு இறைத் தூதரால் அறிவிக்கப்பட்டது. இயேசுவின் தாழ்மை இன்று நம் அனைவரையும் ஆதிக்க, ஆடம்பர வாழ்விலிருந்து மாற்றம் பெற்று, ஏழை, எளிய மக்களோடு ஒன்றித்து வாழ அழைப்பு விடுக்கிறது. அனைத்து மக்களும் ஒற்றுமையுடன் வாழவும், ஒன்றாக, நிறைவாக, அனைத்தையும் பகிர்ந்து வாழவும் வேண்டும் என்பதே கிறிஸ்துமஸ் பண்டிகை நமக்கு வலியுறுத்தும் கருத்து.
அதேபோல பெத்லகேமில் குழந்தையாகப் பிறந்த இயேசு பெத்லகேமிலேயே குழந்தையாகவே இருந்து விடவில்லை. இயேசு ஞானத்திலும் உடல் வளர்ச்சியிலும் மிகுந்து கடவுளுக்கும் மனிதருக்கும் உகந்தவராய் வாழ்ந்தார்.
‘பின்பு இயேசு தூய ஆவியின் வல்லமை உடையவராய்க் கலிலேயாவுக்குத் திரும்பிப் போனார். அவரைப் பற்றிய பேச்சு சுற்றுப்புறம் எங்கும் பரவியது’ என்று இயேசுவின் ஆவிக்குரிய வல்லமையை விவிலியம் பேசுகிறது.
‘அவர் நகரங்கள், சிற்றூர்கள் எல்லாம் சுற்றிவந்தார். விண்ணரசைப் பற்றிய நற்செய்தியைப் பறைசாற்றினார்; நோய் நொடிகள் அனைத்தையும் குணமாக்கினார்’ என இயேசு அநேகருடைய குறை வாழ்வை நிறை வாழ்வாக்கியதை விவிலியம் பேசுகிறது.
அதன் உச்சகட்டமாக, மக்களின் பாவங்களுக்காக சிலுவையில் அறையப்பட்டார். சிலுவையில் அறையப்பட்ட இயேசு கல்லறையிலேயே இருந்து விடவில்லை. உயிர்த்தெழுந்தார். உயிர்த்தெழுந்த உலக ரட்சகர் மண்ணுலகிலேயே இருந்துவிடவில்லை. நமக்காய் பரிந்து பேச, விண்ணுலகம் சென்றார். அவர் அங்கேயும் நிலையாய் இருந்துவிடப் போவதில்லை.
அவர் மறுபடியும் மண்ணுலகம் வந்து நம்மை அவரோடு இருக்கும்படி நம்மைப் பரம வீட்டுக்கு அழைத்துச் செல்வார்.
‘தந்தை வாழும் இடத்தில் உறைவிடங்கள் பல உள்ளன. நான் போய் உங்களுக்கு இடம் ஏற்பாடு செய்த பின் திரும்பி வந்து உங்களை என்னிடம் அழைத்துக்கொள்வேன்’ (யோவான் 14:3) என அதை விவிலியமும் உறுதிப்படுத்துகிறது.
இப்படி ஆண்டவர் இயேசுவின் பிறப்பு முதல் அவரது இரண்டாம் வருகை வரை மனித வாழ்வின் மாற்றத்தை மையப்படுத்தியே அமைகிறது. அப்படி கிறிஸ்து பிறப்பு உணர்த்தும் மாற்றத்தை நமக்குள் கொண்டு வந்திருக்கிறோமா...? என்பதை புதுவருட பிறப்பில் சிந்திக்க கடமைப்பட்டிருக்கிறோம். நம்மை மாற்றிக்கொள்ளவும், இறை ஆட்சி தகுதியான மனிதர்களாய் வாழவும், புதுவருடம் நமக்கு அழைப்பு விடுகிறது. அதை ஏற்று வாழ்வோம். கிறிஸ்து பிறப்பையும், புதுவருட பிறப்பையும் அர்த்தமுள்ளதாய் கொண்டாடுவோம்.
-ஆர்.ஆண்டனி ராஜ், சென்னை.

காயல்பட்டினம் கொம்புத்துறை புனித முடியப்பர் ஆலய திருவிழா நடந்தது. இதில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர்.
காயல்பட்டினம் கொம்புத்துறையில் பழமை வாய்ந்த புனித முடியப்பர் ஆலயத்தின் 477-வது ஆண்டு பெருவிழா கடந்த 24-ந் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. மணப்பாடு மறைவட்ட முதன்மை குரு இருதயராஜ் அடிகளார் கொடியேற்றி திருப்பலி நடத்தினார். அன்று இரவு 12 மணிக்கு கிறிஸ்துமஸ் சிறப்பு திருப்பலி நடைபெற்றது.
தொடர்ந்து தினமும் காலையில் திருப்பலியும், மாலையில் மறையுரை, நற்கருணை ஆசீரும் நடைபெற்றது. 9-ம் திருநாளான 1-ந் தேதி புத்தாண்டு தினத்தை முன்னிட்டு காலையில் புத்தாண்டு திருப்பலியினை தூத்துக்குடி மறைமாவட்ட ஆயர் ஸ்டீபன் அந்தோணி ஆண்டகை நிறைவேற்றினார். மாலையில் ஆராதனையையும் அவர் நடத்தினார். தொடர்ந்து இரவு புனித முடியப்பர் சப்பர பவனி நடைபெற்றது.
நேற்று காலை 7 மணிக்கு சேலம் மாவட்டத்தின் முன்னாள் ஆயர் சிங்கராயன் ஆண்டகை கலந்து கொண்டு திருவிழா ஆடம்பர கூட்டுத் திருப்பலியை நிறைவேற்றினார். இதில் சிறுவர், சிறுமியர் முதல்முறையாக நற்கருணையை உட்கொள்ளுதல் மற்றும் உறுதிப்பூசுதல் பெறும் நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில் சுமார் 75-க்கும் மேற்பட்ட சிறுவர், சிறுமியர் பங்குபெற்றனர். காலையில் இருந்து மாலை வரை தொடர் திருப்பலிகள் நடைபெற்றது.
ஆறுமுகநேரி பங்கு மக்களுக்காக அலாய்சியஸ் அடிகளார், சிங்கித்துறை மக்களுக்காக சில்வெஸ்டர் அடிகளார், தூத்துக்குடி குரும்பூர் பங்கு மக்களுக்காக பபிஸ்டன் அடிகளார், பழையகாயல் பங்கு மக்களுக்காக அமுதன் அடிகளார், புன்னக்காயல் பங்கு மக்களுக்காக புன்னக்காயல் பங்குத்தந்தை பிராங்கிளின் அடிகளார் மற்றும் துணை பங்குத்தந்தை சுதர்ஸன் அடிகளாரும் நிறைவேற்றினர்.
மாலை 4 மணிக்கு வீரபாண்டியன்பட்டணம் பங்கு மக்களுக்காக பங்குத்தந்தை கிருபாகரன் அடிகளார், உதவி பங்குத்தந்தை பனிமயம் அடிகளார் ஆகியோர் திருப்பலி நிறைவேற்றினர்.
தொடர்ந்து ஆலந்தலை அமலிநகர் மக்களுக்காக ஜெயக்குமார் அடிகளார் மற்றும் ரவிந்திரன் அடிகளாரும் நிறைவேற்றினார்கள். விழாவில் திரளான கிறிஸ்தவர்கள் பங்கேற்றனர். திருவிழா ஏற்பாடுகளை பங்குத்தந்தை பிரதிஷ் அடிகளார், ஊர் கமிட்டி தலைவர் மரியநாயகம் மற்றும் நிர்வாகிகள் செய்திருந்தனர்.

ராமநாதபுரம் அருகே பி.முத்துச்செல்லாபுரத்தில் புனித மூவரசர் திருக்காட்சி பெருவிழாவையொட்டி தேர்பவனி நடைபெற்றது.
குழந்தை ஏசு பிறந்ததும் அவரை காணச்சென்ற 3 அரசர் களான புனித கஸ்பார், புனித மெல்கியூர், புனித பல்த்தசார் ஆகியோரின் நினைவாக ராமநாதபுரம் அருகே உள்ள பி.முத்துச்செல்லாபுரம் பகுதியில் மூவரசர் ஆலயம் அமைந்து உள்ளது. பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் கிறிஸ்துமஸ் திருவிழாவையொட்டி புனித மூவரசர் திருக்காட்சி பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெற்று வருகிறது.
இதன்படி இந்த ஆண்டு மூவரசர் திருக்காட்சி பெருவிழா கடந்த மாதம் 24-ந் தேதி கொடி ஏற்றத்துடன் தொடங்கியது. ஆலயம் முன்புறம் அமைந்துள்ள பிரமாண்ட கொடிக் கம்பத்தில் திருவிழா கொடி ஏற்றப்பட்டது. தொடர்ந்து நவநாள் திருப்பலிகள் நடைபெற்று நேற்று முன்தினம் 1-ந் தேதி மாலை திருவிழா திருப்பலியும், புனிதர்களின் ஆடம்பர தேர்பவனியும் சிறப்பாக நடைபெற்றது.
அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தின் முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான இரவை பகலாக்கும் வகையில் வாணவெடி நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இதனை தொடர்ந்து நேற்று காலை பெருவிழா புது நன்மை மற்றும் கூட்டுத் திருப்பலியும் நடைபெற்றதோடு மாலையில் பொங்கல் வைக்கும் வைபம் நடைபெற்றது. விழாவின் நிறைவாக நேற்று மாலை ஆலயம் முன்பு ஏற்றப்பட்ட பிரமாண்டமான கொடி இறக்கம் நடைபெற்றது. நிகழ்ச்சிகளில் திருவரங்கம் பங்குத்தந்தை செபஸ்தியான், பள்ளி தாளாளர் அமல சிங்கராயர், உப பங்குத்தந்தை சஜு மற்றும் பி. முத்துச்செல்லாபுரம் பங்குத்தந்தைகள், கிராம இறைமக்கள் கலந்து கொண்டனர்.

திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் தலைமை போதகர் ஸ்டாலின் ஜெபராஜ் தலைமையில் புத்தாண்டு ஆராதனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில், புத்தாண்டு மற்றும் இயேசு கிறிஸ்துவின் தாய் அன்னை மரியாள் பெருவிழா சிறப்பு திருப்பலி, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நேற்று இரவு நடந்தது. இதனை ஆயரின் செயலர் ஜேம்ஸ், பேராலய பங்குத்தந்தை சகாயராஜ், உதவி பங்கு தந்தையர்கள் நெல்சன் அமல்ராஜ், ஜெபராஜ் மற்றும் பாதிரியார்கள் இணைந்து சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர். இந்த திருப்பலியில் முதலில் நன்றி வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து ஆயர் மறையுரை ஆற்றினார். பின்னர் நற்கருணை ஆசீர் வழங்குதல் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
இதேபோல் திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் தலைமை போதகர் ஸ்டாலின் ஜெபராஜ் தலைமையில் புத்தாண்டு ஆராதனை நடந்தது. திண்டுக்கல் டி.இ.எல்.சி. திருத்துவ நாதர் ஆலயத்தில் சபை குருக்கள் அருள் எம்.செல்வராஜ், ஜான் சத்திய சீலன், சுரேஷ்பாபு ஆகியோர் தலைமையில் ஆண்டு இறுதி திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.