என் மலர்

  கிறித்தவம்

  ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தபோது எடுத்த படம்.
  X
  ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் சிறப்பு திருப்பலி நடந்தபோது எடுத்த படம்.

  திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில்புத்தாண்டு சிறப்பு திருப்பலி

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் தலைமை போதகர் ஸ்டாலின் ஜெபராஜ் தலைமையில் புத்தாண்டு ஆராதனை நடந்தது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.
  திண்டுக்கல் புனித வளனார் பேராலயத்தில், புத்தாண்டு மற்றும் இயேசு கிறிஸ்துவின் தாய் அன்னை மரியாள் பெருவிழா சிறப்பு திருப்பலி, திண்டுக்கல் மறைமாவட்ட ஆயர் தாமஸ் பால்சாமி தலைமையில் நேற்று இரவு நடந்தது. இதனை ஆயரின் செயலர் ஜேம்ஸ், பேராலய பங்குத்தந்தை சகாயராஜ், உதவி பங்கு தந்தையர்கள் நெல்சன் அமல்ராஜ், ஜெபராஜ் மற்றும் பாதிரியார்கள் இணைந்து சிறப்பு திருப்பலியை நிறைவேற்றினர். இந்த திருப்பலியில் முதலில் நன்றி வழிபாடு நடந்தது. அதைத்தொடர்ந்து ஆயர் மறையுரை ஆற்றினார். பின்னர் நற்கருணை ஆசீர் வழங்குதல் நடைபெற்றது. இதில் ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

  இதேபோல் திண்டுக்கல் சி.எஸ்.ஐ. தூய பவுல் ஆலயத்தில் தலைமை போதகர் ஸ்டாலின் ஜெபராஜ் தலைமையில் புத்தாண்டு ஆராதனை நடந்தது. திண்டுக்கல் டி.இ.எல்.சி. திருத்துவ நாதர் ஆலயத்தில் சபை குருக்கள் அருள் எம்.செல்வராஜ், ஜான் சத்திய சீலன், சுரேஷ்பாபு ஆகியோர் தலைமையில் ஆண்டு இறுதி திருவிருந்து ஆராதனை நடைபெற்றது.
  Next Story
  ×