என் மலர்
முன்னோட்டம்
சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய், மீனாட்சி, காளிவெங்கட், பாலசரவணன் நடிப்பில் உருவாகி இருக்கும் சிவ சிவா படத்தின் முன்னோட்டம்.
நடிகர் ஜெய் நடிக்கும் 30-வது படத்துக்கு, ‘சிவ சிவா’ என்று பெயர் சூட்டப்பட்டு இருக்கிறது. இதில் அவர் கதாநாயகனாக நடித்திருப்பதுடன், இசையமைப்பாளராகவும் பணியாற்றி இருக்கிறார். அவருக்கு ஜோடியாக மீனாட்சி நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரங்களில் ஜெயப்பிரகாஷ், காளிவெங்கட், பாலசரவணன், அருள்தாஸ், முக்தார்கான் ஆகியோரும் நடித்துள்ளனர்.
கவிஞர் வைரமுத்து, யுகபாரதி, ஏகாதசி ஆகிய 3 பேர்களும் பாடல்களை எழுத, வேல்ராஜ் ஒளிப்பதிவில் படத்தை இயக்கியிருப்பவர், சுசீந்திரன். இந்த படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகி இருக்கிறது. தமிழ் படத்தில் ஜெய்யும், தெலுங்கு படத்தில் ஆதியும் கதாநாயகனாக நடித்து இருக்கிறார்கள். எஸ்.ஐஸ்வர்யா தயாரித்து இருக்கிறார். படப்பிடிப்பு முழுவதும் முடிவடைந்தது.
பாம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரிப்பில், நம்பிக்கை சந்துரு இயக்கத்தில் உருவாகி இருக்கும் 3.33 படத்தின் முன்னோட்டம்.
தமிழ் சினிமாவின் பிரபல டான்ஸ் மாஸ்டராக இருப்பவர் சாண்டி. இவர் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராகக் கலந்துகொண்டார். அதில் அவருக்கென தனி பாணியில் பேச்சு, நகைச்சுவை என கவனம் ஈர்த்தார். டான்ஸ் மாஸ்டரான சாண்டி, பிக் பாஸ் வெளிச்சத்தினால் நாயகனாகவும் ஒரு படத்தில் நடித்துள்ளார்.
3:33 (மூணு முப்பத்தி மூணு) என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படம் முழு நீள திகில் படமாக ஒவ்வொரு காட்சியும் பயமுறுத்தும் வகையில் உருவாகியுள்ளது. சாண்டியுடன் பிக்பாஸ் பிரபலங்களான சரவணன், ரேஷ்மா ஆகியோரும், இயக்குனரும் நடிகருமான கவுதம் மேனனும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

பாம்பூ ட்ரீஸ் புரொடக்ஷன்ஸ் சார்பாக ஜீவிதா கிஷோர் தயாரித்துள்ள இப்படத்தை அறிமுக இயக்குநர் நம்பிக்கை சந்துரு இயக்கி இருக்கிறார். இப்படம் டிசம்பர் 3 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
லைகா புரடக்ஷன்ஸ் தயாரிப்பில் யோகி பாபு நடித்திருக்கும் பன்னிகுட்டி திரைப்படத்தை , 11:11 புரடக்ஷன்ஸ் நிறுவனம் தமிழ்நாடு மற்றும் கேரளாவில் வெளியிடுகிறது.
யோகி பாபு நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘பன்னிகுட்டி’. இப்படத்தை அனுசரண் இயக்கியுள்ளார். யோகி பாபுவைத் தவிர்த்து, கருணாகரன், திண்டுக்கல் லியோனி, சிங்கம் புலி, விஜய் டிவி புகழ் ராமர், தங்க துரை போன்ற முன்னணி நகைச்சுவை நடிகர்கள் மற்றும் இன்னும் பல முன்னணி பிரபலங்கள் இணைந்து நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு கே இசையமைக்க, சதீஷ் முருகன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ரவி முருகையா கதை எழுதியுள்ளார், மேலும் இயக்குனர் அனுசரனுடன் இணைந்து திரைக்கதையும் எழுதியுள்ளார். சண்டைப்பயிற்சி இயக்கத்தை பயர் கார்த்திக் செய்ய, எம்.ஆர்.ராஜகிருஷ்ணன் (ஆடியோகிராஃபி), முருகன் (ஸ்டில்ஸ்), எம்.சிவகுமார் (தயாரிப்பு மேலாளர்), சமீர் பரத் ராம் (நிர்வாகத் தயாரிப்பாளர்) ஆகியோர் தொழில்நுட்ப குழுவில் பணியாற்றியுள்ளனர்.

லைகா புரடக்ஷன்ஸ் தயாரித்துள்ள இப்படத்தின் வெளியீட்டு, உரிமையை 11:11 புரடக்ஷன்ஸ் டாக்டர் பிரபு திலக் பெற்றுள்ளார். இப்படத்தினை தமிழ்நாடு மற்றும் கேரளாவில் 11:11 புரடக்ஷன்ஸ் நிறுவனம் வெளியிடுகிறது.
பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் தயாரிப்பில் டாக்டர் பிரகபல் இயக்கத்தில் உருவாகி இருக்கும் மட்டி படத்தின் முன்னோட்டம்.
பிரமாண்ட அளவில் ஆறு மொழிப் படமாக உருவாகியிருக்கும் படம் 'மட்டி' (Muddy). இந்தியாவின் முதன்முதலாக கரடுமுரடான மண் சாலைப் பந்தயத்தை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இப்படத்தை அறிமுக இயக்குனர் டாக்டர் பிரகபல் இயக்கி உள்ளார். பிரேமா கிருஷ்ணதாசின் பிகே7 கிரியேஷன்ஸ் இப்படத்தைத் தயாரித்துள்ளது. குடும்பம், பகை, பழிவாங்கல், ஆக்ஷன், திகில் என்று பல வண்ணங்களில் இப்படக்கதை சுற்றிச் சுழலும்.
'கே ஜி.எப்' படத்திற்கு இசை அமைத்த ரவி பஸ்ரூர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். ஹாலிவுட் படங்களில் பணியாற்றிய கே.ஜி.ரதீஷ் ஒளிப்பதிவு செய்துள்ளார். 'ராட்சசன்' படப்புகழ் சான் லோகேஷ் எடிட்டிங் செய்திருக்கிறார். 'புலி முருகன்' புகழ் ஆர்.பி.பாலா இப்படத்திற்குத் தமிழில் வசனம் எழுதி இருக்கிறார்.

யுவன் கிருஷ்ணா, ரிதன், அனுஷா சுரேஷ், அமித் சிவதாஸ் நாயர் ஆகியோர் முதன்மைக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இவர்கள் தவிர பல படங்களில் அறிமுகமான முகங்களும் இப்படத்தில் பங்கேற்றுள்ளனர். இந்தப் படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, ஆங்கிலம் என ஆறு மொழிகளில் உருவாகி இருக்கிறது. இந்த திரைப்படம் டிசம்பர் 10 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.
விஷால் தனது பிலிம் பேக்டரி மூலம் தயாரித்து நடித்திருக்கும் வீரமே வாகை சூடும், படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விஷாலின் விஷால் பிலிம் பேக்டரி சார்பில் அறிமுக இயக்குநர் து.ப. சரவணன் இயக்கி வரும் திரைப்படம் “வீரமே வாகை சூடும்''. அதிகார மட்டதிற்கு எதிராக எளியவன் ஒருவன் போர்க்கொடி தூக்கும் கதைதான் இப்படம். வரும் 2022 ஜனவரி 26 அன்று இப்படத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது படக்குழு.
அதிகார பலம் படைத்தவர்களை எதிர்கொள்ளும் சாமானியன் ஒருவனின் கதையில் விஷாலின் மாறுபட்ட நடிப்பில் உருவாகியுள்ளது இப்படம். அனைத்து ரசிகர்களும் ரசிக்கும் வகையில் கமர்ஷியல் ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. ஐதராபாத்தின் பல பகுதிகளிலும், சென்னையை சுற்றியுள்ள பகுதிகளிலும் படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தில் விஷால் நாயகனாக நடிக்க, டிம்பிள் ஹயாதி நாயகியாக நடிக்கிறார். யோகிபாபு, மாரிமுத்து, துளசி, கவிதா பாரதி, அர்.என்.ஆர். மனோகர், பாபுராஜ், பில்லி முரளி, ரவீனா, கே.எஸ்.ஜி.வெங்கடேஷ் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடிக்கிறார்கள்.
யுவன் சங்கர் ராஜா இப்படத்திற்கு இசையமைக்கிறார். கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்ய, என்.பி.ஶ்ரீகாந்த் படத்தொகுப்பு செய்கிறார்.
ஜி.எம்.ஏ பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர், விநாயகா சுனில் தயாரித்துள்ள கிராண்மா படத்தின் முன்னோட்டம்.
ஹாலிவுட் தரத்தில் ஒரு பேய்ப் படம் என்கிற அழுத்தமான நம்பிக்கையோடு 'கிராண்மா' என்கிற படம் உருவாகியுள்ளது. இப்படத்தை ஜி.எம்.ஏ பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் ஜெயராஜ் ஆர்,விநாயகா சுனில் தயாரித்துள்ளனர். ஷிஜின்லால் எஸ்.எஸ் இயக்கியுள்ளார். பிரதான பாத்திரங்களில் சோனியா அகர்வால், விமலா ராமன், சார்மிளா நடித்துள்ளனர்.
மலையாளப் படங்களில் நாயகனாக நடித்து வந்த ஹேமந்த் மேனன் இதில் வில்லனாக நடித்துள்ளார். குழந்தை நட்சத்திரம் பௌர்ணமிராஜ் முக்கியமான பாத்திரத்தில் நடித்துள்ளார். கேரளாவின் மலைப் பகுதிகளில் இதன் படப்பிடிப்பு நடைபெற்றுள்ளது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை திரையுலகின் பிரபலங்கள் சோனியா அகர்வால், விமலாராமன், சார்மிளா, பாவனா மேனன், வரலட்சுமி சரத்குமார், ரம்யா நம்பீசன், இனியா, சூர்யா ஜே.மேனன், ஆரதி சாஜன், லியானா லிஷாய், தீப்தி சதி, ஷிவதா, மரினா மைக்கேல், கோகுல் சுரேஷ், சரத் அப்பானி, ஹேம்நாத் மேனன், அன்சன் பால், மெஹ்பூல் சல்மான், முகமது ரபி என 19 திரைப் பிரபலங்கள் வெளியிட்டுள்ளனர்.

படத்தின் ஆடியோ, டிரைலர் விரைவில் வெளியாக இருக்கிறது. 'கிராண்மா' கதையிலும் காட்சியமைப்பிலும் மனம் கவரப்பட்ட சோனியா அகர்வால், சண்டைக் காட்சிகளில் டூப் இல்லாமல் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
இப்படத்தின் கதை திரைக்கதை எழுதி இருப்பவர் ஷிபின். படத்திற்கு ஒளிப்பதிவு - யஸ்வந்த் பாலாஜி .கே, எடிட்டிங் - அஸ்வந்த் ரவீந்திரன், இசை- சங்கர் ஷர்மா, ஒப்பனை - அமல் தேவ், வசனம் தயாரிப்பு வடிவமைப்பு- அப்துல் நிஜாம், சினிமா மீது தாகம் கொண்ட இளைஞர்களின் கூட்டணியில் இப்படம் உருவாகி உள்ளது.
ஏ.எல்.அழகப்பன் மற்றும் பி.மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ள சித்திரைச் செவ்வானம் படத்தின் முன்னோட்டம்.
சமுத்திரக்கனி நடிப்பில், இயக்குனர் விஜய் எழுத்தில், ஸ்டண்ட் மாஸ்டர் சில்வா இயக்கத்தில் உருவாகி இருக்கும் படம் ‘சித்திரைச் செவ்வானம்’. லாக்கப், க.பெ.ரணசிங்கம், மதில், ஒரு பக்க கதை, மலேஷியா டு அம்னீஷியா, டிக்கிலோனா, விநோதய சித்தம் உள்ளிட்ட படங்களை வழங்கிய ஜீ5, இப்படத்தை டிசம்பர் 3ஆம் தேதி முதல் ஓடிடி தளத்தில் வெளியிடுகிறது.
இப்படத்தில் முன்னணி இயக்குனரும் நடிகருமான சமுத்திரக்கனி முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பூஜா கண்ணன் மற்றும் ரீமா கல்லிங்கல் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். பூஜா, சாய் பல்லவியின் தங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்திற்கு சாம்.சி.எஸ் இசையமைப்பாளராகவும், பிரவீன் கே.எல். படத்தொகுப்பாளராகவும், ஒளிப்பதிவாளர்களாக மனோஜ் பரமஹம்சா மற்றும் கே.ஜி.வெங்கடேஷ் பணிப்புரிந்துள்ளனர்.
பிரபல இயக்குனர் விஜய் அவர்கள் இப்படத்தை எழுதி வெளியிடுகிறார். ஏ.எல்.அழகப்பன் மற்றும் பி.மங்கையர்க்கரசி இணைந்து தயாரித்துள்ளனர்.
ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் தயாரிப்பில் சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கும் ‘அயோத்தி’ படத்தின் முன்னோட்டம்.
பிரபல தயாரிப்பாளரும் விநியோகஸ்தருமான ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன், சசிகுமார் நடிப்பில் மந்திர மூர்த்தி இயக்கத்தில் உருவாகும் புதிய திரைப்படத்தை தயாரிக்கிறார். 'அயோத்தி' என்று பெயரிடப்பட்ட இந்த படத்தின் படப்பிடிப்பு நவம்பர் 22-ம் தேதி (இன்று) தொடங்கவுள்ளது.
மதுரை மற்றும் ராமேஸ்வரம் சுற்றுவட்டார பகுதிகளில் 45 நாட்கள் படப்பிடிப்பு நடைபெறும் என்று மந்திர மூர்த்தி கூறினார்.
படத்தை பற்றி அவர் மேலும் கூறுகையில், "எல்லோரும் வாழ்நாளில் ஒருமுறையாவது சந்திக்கும் ஒரு விஷயத்தைப் பற்றியது இந்தப் படம். இந்த கதையோடு மக்கள் அவர்களை எளிதில் தொடர்பு படுத்திக்கொள்ள முடியும். நாம் வாழும் உலகின் மறுபக்கத்தைக் காட்டும் உணர்ச்சிகரமான ஒரு கதை இது. கதையை கேட்டவுடன் சசிகுமார் இப்படத்தில் நடிக்க சம்மதம் தெரிவித்தார்," என்றார்.

சசிகுமார்
மதுரை, ராமேஸ்வரம் பின்னணியில் உருவாகும் திரைப்படத்துக்கு ‘அயோத்தி’ என்று பெயர் வைக்கப்பட்டுள்ளதே என்று கேட்டதற்கு, “இந்த படத்திற்க்கு இந்த தலைப்பு மிகவும் பொருத்தமாக இருக்கும். அதற்கான காரணத்தை இப்போதே கூறுவது நன்றாக இருக்காது,” என்றார் அவர்.
'குக் வித் கோமாளி' புகழ், போஸ் வெங்கட் மற்றும் யஷ்பால் சர்மா உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர். என்.ஆர்.ரகுநந்தன் இந்த படத்திற்கு இசையமைக்கிறார், மாதேஷ் ஒளிப்பதிவு செய்கிறார்.
ட்ரீம் லைட் பிக்சர்ஸ் (பி) லிமிடெட் சார்பாக சிங்கப்பூர் என்.ஹபீப் தயாரிக்கும் கோட்டைமுனி படத்தின் முன்னோட்டம்.
ட்ரீம் லைட் பிக்சர்ஸ் (பி) லிமிடெட் சார்பாக சிங்கப்பூர் என்.ஹபீப் மிகுந்த பொருட்ச் செலவில் மிகப் பிரமாண்டமாக தயாரிக்கும் படம் கோட்டைமுனி. புதுமுக இயக்குனரான ந.இளைய பிரபாகரன் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இப்படத்தை இயக்குகிறார்.
1980 காலகட்டத்தில் இராமேஸ்வரம், தனுஷ்கோடி பகுதிகளில் கடல் அரசனாக நிஜத்தில் வாழ்ந்த கோட்டைமுனி என்பவரின் வாழ்க்கையில், இலங்கை தனுஷ்கோடி பகுதிக்கு இடையே கடலில் நடந்த கடத்தல் சம்பவங்களை மையப்படுத்தி கேங்க்ஸ்டர் படமாக கோட்டைமுனி திரைப்படம் உருவாகிறது. இதில் கோட்டைமுனியாக முற்றிலும் வித்தியாசமான கதாப்பாத்திரத்தில் ஆர்.கே.சுரேஷ் நடிக்கிறார்.
நீண்ட நெடுநாளைக்குப் பிறகு முற்றிலும் வித்தியாசமான தோற்றத்தில் வத்திக்குச்சி, காலா படத்தில் நடித்த திலீபன் முக்கிய கதாப்பாத்திரம் ஏற்றிருக்கிறார். மேலும் சைத்தான் படப் புகழ் அருந்ததி நாயர் கதைநாயகியாக நடிக்க, ஷரவணசக்தி, ராஜசிம்மன், நிழல்கள் ரவி, சச்சு, தாமு, முத்துராமன், முத்துக்காளை, திருமுருகன், உள்பட பலர் நடிக்கின்றனர்.
ஒளிப்பதிவு ஏ.எம்.எம்.கார்த்திகேயன் கவனிக்க, எம்.எஸ்.பாண்டியன் இசையமைக்கிறார். அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் கோட்டைமுனி திரையில் வெளியாக இருக்கிறது.
கியுபிரேம் மூவி சார்பில் டாக்டர் அரவிந்த். கே மற்றும் ஒயிட் சாண்ட் புரோடக்சன்ஸ் சார்பில் அபய் குமார் ஆகிய இருவரும் தயாரிக்கும் கிரவுன் படத்தின் முன்னோட்டம்.
இந்திய சினிமாவில் முதன்முறையாக 3D தொழில்நுட்பத்தில் கதாநாயகியை சூப்பர் ஹீரோவாக வைத்து உருவாகும் திரைப்படம் கிரவுன் (Crown). இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, இங்கிலீஷ் மற்றும் அரபிக் போன்ற மொழிகளில் ஒரே நேரத்தில் உருவாகிறது.
இதில் கதாநாயகியாக சூப்பர் ஹீரோ கதாபாத்திரத்தில் மிஸ் இந்தியா பட்டம் வென்ற அதிதி வர்ஸ் நடிக்கிறார். மேலும் முக்கிய கதாபாத்திரத்தில் ஹாலிவுட், அரபிக், சைனா, சவுத் கொரியா போன்ற நாட்டைச் சேர்ந்த நடிகர்களும் இந்தி, தெலுங்கு, தமிழ் திரையுலகின் முக்கிய நட்சத்திரங்களும் நடிக்க உள்ளனர்.
படத்தை நரேன் பிரநிஸ் ராவ் என்பவர் இயக்குகிறார் இவர் மலேசியாவில் செட்டிலான தமிழன் ஆவார்.
ஜோகி சர்மா, பொன்சங்கர் மற்றும் கே.பி.பிரபு ஆகிய மூவர்கள் ஒளிப்பதிவாளராக பணியாற்றுகிறார்கள். இப்படத்திற்கு இசை மரியா ஜெரால்டு, சண்டைப் பயிற்சி திலீப் சுப்பராயன், கலை இயக்குனர் ரேம்போன் பால்ராஜ், எடிட்டர் ஜே.ஜெய ராஜேந்திர சோழன்.

இதில் ஒளிப்பதிவாளர் பொன்சங்கர், தமிழில் தமிழன் என்று சொல் மற்றும் லிவிங் டுகெதர் என்ற படங்களின் இயக்குனர் ஆவார். அதேபோல் எடிட்டர் ஜே.ஜெய ராஜேந்திர சோழன் மீண்டும் வா அருகில் வா எனும் படத்தின் இயக்குனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.
மேலும் பல ஹாலிவுட் படங்களுக்கு கிராபிக்ஸ் பணிகளை மேற்கொண்ட தொழில்நுட்ப கலைஞர்களை கொண்டு வி.ஜானகிராமன் மேற்பார்வையில் கிராபிக்ஸ் பணிகள் நடைபெற்று வருகிறது. இப்படத்தை கியுபிரேம் மூவி சார்பில் டாக்டர் அரவிந்த். கே மற்றும் ஒயிட் சாண்ட் புரோடக்சன்ஸ் சார்பில் அபய் குமார் ஆகிய இருவரும் தயாரிக்கிறார்கள்.
தி ஷோ பிபுள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும், புதிய திரைப்படத்திற்கு கேப்டன் என தலைப்பிடப்பட்டுள்ளது.
ஆர்யா மற்றும் இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூட்டணியில் வெளியான திரைப்படம் ‘டெடி’. இப்படத்தின் வெற்றியை தொடர்ந்து இவர்கள் கூட்டணி மீண்டும் புதிய படத்தின் மூலம் இணைந்திருக்கிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் துவங்கி இனிதே நடந்து வரும் நிலையில், இப்படத்திற்கு “கேப்டன்” என்று தலைப்பு வைத்திருக்கிறார்கள்.
இப்படம் குறித்து இயக்குனர் சக்தி சௌந்தர் ராஜன் கூறுகையில்.. “கேப்டன்” எனும் தலைப்பு நேர்த்தியானது, நிஜத்தில் பல விசயங்களில் மிகப்பெரும் மதிப்பை கொண்டிருக்கும் தலைப்பு இது. ஒரு விளையாட்டு குழுவில் ஆரம்பித்து, சமூகத்தின் எந்த ஒரு குழுவிலும், கேப்டன் எனும் பொறுப்பு மிக முக்கியமானது. அது வெறும் தலைமை என்கிற இடம் கிடையாது. மொத்த குழுவையும் வழிநடத்தி செல்லும் கடமை கொண்ட, மிகமுக்கியமான பொறுப்பு. இது அப்படியே படத்தில் ஆர்யா ஏற்றிருக்கும் பாத்திரத்திற்கும் கச்சிதமாக பொருந்தும். தொடர்ந்து தரமான வெற்றிப்படைப்புகளை தந்து வரும் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன் மேலும் கூறுகையில், தலைப்பு ஒரு படத்திற்கு மிகவும் முக்கியம், அதுதான் ரசிகர்களை படம் நோக்கி ஈர்க்கும் மிக முக்கியமான கருவி, அதிலும் OTT தளங்கள் ஆதிக்கம் செலுத்தும் இந்த காலத்தில் திரைப்படங்கள் மொழி, நாடு, இன எல்லைகளை கடந்து உலகின் பல முனைகளுக்கும் எளிதாக சென்று சேர்கிறது. ஆனால் அங்குள்ள ரசிகர்களை படத்தை நோக்கி இழுக்கும் முதல் அம்சமாக இருப்பது, படத்தின் தலைப்பு தான். எல்லாவற்றையும் தாண்டி இந்த கதையும், களமும் இந்த தலைப்பு 100 சதம் பொருத்தமானது என்பதை நிரூபிக்கும் என்றார்.
படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு விரைவில் முடிவடையவுள்ளது. படக்குழு இரண்டாம் கட்ட படப்பிடிபிற்காக, வட இந்திய பகுதிகளுக்கு டிசம்பர் மாத மத்தியில் செல்லவுள்ளது. அங்கு படத்தின் பெரும்பாலான காட்சிகள் படமாக்கப்படவுள்ளது. இப்படத்தில் நடிகை சிம்ரன், ஐஸ்வர்யா லக்ஷ்மி, தியாகராஜன், காவ்யா ஷெட்டி, ஹரிஷ் உத்தமன், கோகுல், பரத் ராஜ் மற்றும் பல முக்கிய நடிகர்கள் இணைந்து நடிக்கின்றனர்.
“கேப்டன்” படத்திற்கு, டி.இமான் இசையமைக்க, கார்கி பாடல்கள் எழுதியுள்ளார். யுவா ஒளிப்பதிவு செய்ய, பிரதீப் ஈ ராகவ் படத்தொகுப்பு செய்துள்ளார். ஆர்.சக்தி சரவணன் சண்டைப்பயிற்சி இயக்குநராக பணியாற்ற, எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்கம் செய்துள்ளார்.
இப்படத்தை எழுதி இயக்குகிறார் இயக்குநர் சக்தி சௌந்தர் ராஜன். நடிகர் ஆர்யாவின் தி ஷோ பிபுள் மற்றும் திங்க் ஸ்டுடியோஸ் நிறுவனங்கள் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரிப்பில், ஹரிகுமார் இயக்கத்தில், பிரபுதேவா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘தேள்’ படத்தின் முன்னோட்டம்.
ஸ்டூடியோ கிரீன் சார்பில் கே.ஈ.ஞானவேல்ராஜா தயாரித்திருக்கும் படம் ‘தேள்’. இப்படத்தில் கதாநாயகனாக பிரபுதேவா நடித்திருக்கிறார். இவருக்கு ஜோடியாக கோமாளி படத்தில் நடித்த சம்யுக்தா நடித்திருக்கிறார். மேலும் ஈஸ்வரி ராவ், யோகிபாபு உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.

‘தூத்துக்குடி,’ ‘மதுரை சம்பவம்’ உள்பட பல படங்களில் கதாநாயகனாக நடித்த பிரபல நடன இயக்குனர் ஹரிகுமார் கதை - திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கி இருக்கிறார். பிரபுதேவா - ஹரிகுமார் இருவருமே நடன இயக்குனர்களாக இருந்து கதாநாயகன் ஆனவர்கள். படங்களை இயக்கியும் இருக்கிறார்கள். சத்யா இப்படத்திற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது.






