என் மலர்
முன்னோட்டம்
போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரமாண்டமான முறையில் தயாரித்திருக்கும் கஜானா படத்தின் முன்னோட்டம்.
போர் ஸ்கொயர் ஸ்டுடியோஸ் சார்பில் பிரபாதிஸ் சாம்ஸ் பிரமாண்டமான முறையில் தயாரிக்கும் படம் கஜானா. இப்படத்தை தயாரிப்பதோடு, படத்தின் கதையும் அவரே எழுதியுள்ளார். ஜோதிகா நடித்த ’ராட்சசி’ பட இயக்குநர் சை.கெளதம் ராஜ் திரைக்கதை, வசனம் எழுத, அறிமுக இயக்குனர் யாசின் இயக்குகிறார்.
இயக்குனர் வேலுபிரபாகரன் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் யோகி பாபு, நான் கடவுள் ராஜேந்திரன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள். எழுநூறு ஆண்டுகளுக்கு முன்பு தமிழ் பேரரசர் ஒருவரால் புதைக்கப்பட்ட பிரம்மாண்ட கஜானாவை கண்டுபிடிக்கும் முயற்சியில் இறங்கும் இளைஞர்களின் சாகசப் பயத்தையும், அந்த கஜனாவை காப்பாற்றும் பேய்களின் அட்டகாசங்களையும், பொழுதுபோக்கு அம்சங்களுடன், திகில் மற்றும் காமெடியோடு சொல்லப்பட்டிருக்கும் இப்படம் பெண்கள் மற்றும் குழந்தைகளை வெகுவாக கவரும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.

தற்போது இறுதிக்கட்ட பணியில் இருக்கும் ‘கஜானா’ திரைப்படம் 2022 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.
அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் வசந்த் ரவி, பாரதிராஜா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ராக்கி’ படத்தின் முன்னோட்டம்.
தரமணி படத்தின் மூலம் பிரபலமான வசந்த் ரவி, அடுத்ததாக நடித்துள்ள படம் ‘ராக்கி’. அறிமுக இயக்குனர் அருண் மாதேஸ்வரன் இப்படத்தை இயக்கி உள்ளார். இயக்குனர் பாரதிராஜாவும் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். தர்புகா சிவா இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார்.

ராக்கி படக்குழுவினர்
இப்படத்தின் வெளியீட்டு உரிமையை நடிகை நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனம் கைப்பற்றி உள்ளது. இப்படத்தின் டீசர், டிரைலர், புரமோ வீடியோ ஆகியவை வெளியாகி ரசிகர்களிடம் வரவேற்பு பெற்றுள்ளது. இப்படம் டிசம்பர் 23ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
சில்பகலா புரொடக்ஷன்ஸ் சார்பில் மது வெள்ளை கடவு தயாரிப்பில் உருவாகும் புகைப்படம் படத்தின் முன்னோட்டம்.
சில்பகலா புரொடக்ஷன்ஸ் சார்பில் மது வெள்ளை கடவு தயாரிக்கும் 'புகைப்படம்' படத்தின் பூஜை கேரளாவில் உள்ள திருவனந்தபுரத்தில் நடைபெற்றது. இப்படத்தில் நாயகனாக மானவ் ஆனந்த், நாயகியாக கிருபா சேகர் நடிக்க உள்ளார். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் ஷிவானி, ராகுல் மற்றும் பலர் நடிக்க உள்ளனர்.
இப்படத்திற்கு ஒளிப்பதிவு லாரன்ஸ் அந்தோணி, இசை சத்யராஜ், படத்தொகுப்பு பாண்டி, கலை இயக்கம் சாஜி, கதை, திரைக்கதை, வசனம், எழுதி இயக்குகிறார் சுரேஷ் முருகன்.
இப்படத்தின் படப்பிடிப்பு ஜனவரி முதல் வாரத்தில் கேரளாவில் திருவனந்தபுரத்தில் துவங்கி சென்னை மற்றும் பாண்டிச்சேரியில் இரண்டு கட்டமாக நடைபெற உள்ளது.

இப்படத்தைப் பற்றி இயக்குனர் சுரேஷ் முருகன் கூறுகையில்,
சிறுவயதிலேயே தாய் தந்தையை இழந்த கதாநாயகனுக்கு தாய் தந்தையுடன் பேச ஆசை ஏற்பட்டது. அதனால் ஆவியுடன் பேசுவதை பற்றிய ஆராய்ச்சி கதாநாயகன் மேற்கொள்கிறார். கதாநாயகியின் தாய் தந்தை திடீரென்று விபத்தில் மரணம் அடைய அவர்களுடைய ஆவியுடன் பேசும்போது பல திடுக்கிடும் உண்மைகள் கிடைக்கிறது.
இதனால் நாயகனும், நாயகியும் பேராபத்தில் சிக்குகிறார்கள். அதிலிருந்து அவர்கள் எப்படி மீண்டார்கள் என்பதுதான் படத்தின் கதை என்கிறார் இயக்குனர்.
ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘யூகி’ படத்தின் முன்னோட்டம்.
அறிமுக இயக்குனர் ஜாக் ஹாரிஸ் இயக்கத்தில் உருவாகி உள்ள படம் 'யூகி'. இப்படத்தில் கதிர், நரேன், நட்டி, பவித்ரா லட்சுமி, கயல் ஆனந்தி மற்றும் ஆத்மியா ராஜன் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கிறார்கள். தென்னிந்திய நடசத்திர நடிகர்களான, பிரதாப் போத்தன், ஜான் விஜய், முனீஷ் காந்த், சினில் சைனுதீன், வினோதினி, அஞ்சலி ராவ் மற்றும் பிந்து சஞ்சீவ் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.
இப்படத்திற்கு பாக்கியராஜ் ராமலிங்கம் திரைக்கதை எழுதுகிறார், புஷ்பராஜ் சந்தோஷ் ஒளிப்பதிவு செய்கிறார். பாடல்களுக்கு ரஞ்சின் ராஜ் இசையமைக்க, டான் வின்சென்ட் பின்னணி இசையமைக்கிறார். பன்மொழிகளில் தயாராகும் இப்படம் கோவிட் பொது முடக்க காலத்தில், அனைத்து முன்னெச்சரிக்கைகளையும் முறையாக கடைப்பிடித்து, சென்னை மற்றும் பாண்டிச்சேரி பகுதிகளில் படமாக்கப்பட்டுள்ளது. விரைவில் இப்படம் வெளியாக இருக்கிறது.
ஆறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை படத்தின் முன்னோட்டம்.
நபீஹா மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக "சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை" என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். நாயாகியாக சுபிக்ஷா நடித்துள்ளார். மற்றும் சுபலட்சுமி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.
இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 6 விருதுகளை அள்ளியிருக்கிறது. டிசம்பர் 24ம் தேதி திரி பேஸ் கிரியேசன்ஸ் பட நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்கள்.

சுபிக்ஷா - ருத்ரா
பிஜு விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜேஷ் அப்புகுட்டன் மற்றும் ருத்ரா இசையமைத்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி மகேஷ் பத்மநாபன் இயக்கி இருக்கிறார்.
எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள 'கள்ளன்' படத்தின் முன்னோட்டம்.
எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'கள்ளன்'. இதில் இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ‘தோழா’ படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்த நிகிதா நடித்துள்ளார். இவர்களுடன் வேலா ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தரராஜா, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், ரெஜின், பருத்திவீரன் முருகன், அருண், மாயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.
இந்தப் படத்தைப் பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். இவர், இயக்குனர் அமீர், 'கற்றது தமிழ்' ராம் இருவரிடம் பல்வேறு படங்களில் உதவியாளராக இருந்தவர். எண்பதுகளின் இறுதிக் காலகட்டத்தில் நடக்கிற மாதிரியான காலகட்டத்தைக் கொண்ட 'கள்ளன்' திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் திரைக்கு வரவிருக்கிறது. அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வலைத்தளத்தில், 'கள்ளன்' படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார்.
கே இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நா.முத்துக்குமார், யுகபாரதி, சந்திரா தங்கராஜ் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். எம்.எஸ்.பிரபு, கோபி ஜகதீஸ்வரன் ஆகியோர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்கள்.
ராமாரீல்ஸ் சார்பாக ஜான் சுதீர் மற்றும் கிரண் தனமாலா தயாரித்து இருக்கும் குறள் 388 படத்தின் முன்னோட்டம்.
முறைசெய்து காப்பாற்றும் மன்னவன் மக்கட்கு
இறையென்று வைக்கப் படும்.’ என்ற திருக்குறளின் 388-வது குறளை அடிப்படையாக கொண்டு, இன்றைய அரசியல் களத்தில் மக்களின் அதிகாரத்தை நிலைநாட்ட, அவசியமான மாற்றம் ஒன்றை மக்கள் முன்வைத்து, பொழுதுபோக்கிற்கு உத்திரவாதம் மற்றும் சிந்திக்க தூண்டும் சமாச்சாரம் என ‘குறள் 388’ உருவாகி இருக்கிறது.
இத்திரைப்படத்தை ராமாரீல்ஸ் சார்பாக ஜான் சுதீர் மற்றும் கிரண் தனமாலா தயாரித்து இருக்கிறார்கள். பிரபல தெலுங்கு நடிகர் மோகன்பாபுவின் மூத்த மகனும் பிரபல தெலுங்கு நடிகருமான மஞ்சு விஷ்ணு கதாநாயகனாக நடிக்கிறார். இதுவரையில் கவர்ச்சியில் இறங்காத சுரபி இதில் கவர்ச்சிகரமான கதாநாயகியாக களமிறங்கியுள்ளார். இவர்களுடன் சம்பத் குமார், நாசர், ’முனீஷ் காந்த்’ ராமதாஸ், ஜெயபிரகாஷ், பஞ்சு சுப்பு, தலைவாசல் விஜய், ப்ரகதி, சுரேகா வாணி, சனா, அஜய் ரத்னம், சாக்ஷி ஷிவா, என பெரும் நட்சத்திரப் பட்டாளம் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
இப்படம் மூலம் ஜி.எஸ். கார்த்திக் இயக்குநராக அறிமுகமாகிறார். பிரபல பத்திரிகையாளர் இரா. ரவிஷங்கர் திரைக்கதை மற்றும் வசனம் எழுதியுள்ளார். எஸ். எஸ். தமன் இசையில் பாடல்களை விவேக் எழுதியுள்ளார். கனல் கண்ணன், ஸ்டன் சில்வா, வெங்கட் ஆக்ஷனிலும், ப்ரவீன். கே.எல். எடிட்டிங்கிலும், ராஜேஷ் யாதவ் ஒளிப்பதிவிலும், ஸ்ரீதர், பானு நடனத்திலும் குறிப்பிடத்தக்க வகையில் பங்களித்து இருக்கிறார்கள்.
அமெரிக்கா, தாய்லாந்து, சென்னை, ஹைதராபாத் என பிரம்மாண்டமான பொருட்செலவில் சிந்திக்க வைக்கும் ஒரு கமர்ஷியல் திரைப்படமாக வெளியாக இருக்கிறது ‘குறள் 388’.
விருது பெற்று குறும்பட இயக்குநர் தாமோதரன் செல்வகுமார் இயக்கத்தில் உருவாகி இருக்கும் 'ஆத்மிகா' படத்தின் முன்னோட்டம்.
சில குறும்படங்கள் இயக்கியதுடன் பெங்களூரில் நடைபெற்ற 'ஆசிய விருதுகள்' திரைப்பட விழாவில் தான் இயக்கிய 'மூடர் 'குறும் படத்திற்காகச் சிறந்த இயக்குநருக்கும் சிறந்த வசனகர்த்தாவுக்கும் என இரு விருதுகள் பெற்றவர் தாமோதரன் செல்வகுமார். இவர் தற்போது இயக்கியுள்ள படத்திற்கு 'ஆத்மிகா' என்று பெயர் வைத்து இருக்கிறார்கள்.
இப்படத்தில் வெற்றிவேல் படத்தில் சசிகுமாரின் தம்பியாக நடித்தவரும் பிரேமம், நேரம் போன்ற படங்களில் நடித்தவருமான ஆனந்த்நாக் நாயகனாக நடித்துள்ளார். விஜே ஐஸ்வர்யா முத்துசிவம் நாயகியாக நடித்துள்ளார். மற்றும் ஜீவா ரவி, பிர்லா போஸ் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்கள்.
இப்படத்திற்கு கலைசக்தி ஒளிப்பதிவு செய்துள்ளார். சரண்குமார் இசையமைத்துள்ளார். படத்தொகுப்பை ராஜேஷ் கவனிக்க, கலை இயக்கத்தை கார்த்தி மேற்கொள்ள, சண்டைக்காட்சிகளை ஆனந்த் அமைத்துள்ளார்.
ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத் மற்றும் அலங்கார் பாண்டியன் தயாரிப்பில், கிச்சா சுதீப் நடிப்பில் உருவாகி இருக்கும் விக்ராந்த் ரோணா படத்தின் முன்னோட்டம்.
நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில், பிரமாண்ட பட்ஜெட்டில் தயாராகியுள்ள, “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தின் போஸ்டர் மற்றும் க்ளிம்ப்ஸஸ் காட்சித்துணுக்குகள் மூலம் ரசிகர்களின் பேரார்வத்தை தூண்டிவிட்ட நிலையில், தற்போது தயாரிப்பாளர்கள் ஜாக் மஞ்சுநாத், ஷாலினி மஞ்சுநாத் மற்றும் அலங்கார் பாண்டியன் படத்தின் வெளியீட்டு தேதியை அறிவித்துள்ளனர்.
ஜீ ஸ்டூடியோஸ் வழங்கும் “விக்ராந்த் ரோணா” திரைப்படத்தில், கிச்சா சுதீப், நிரூப் பண்டாரி, மற்றும் ஜாக்குலின் ஃபெர்ணான்டஸ் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். இத்திரைப்படம் 3-D பதிப்பில், 24 பிப்ரவரி 2022 வெளியாகிறது. தயாரிப்பாளர்கள் இந்த அறிவிப்புடன் கிச்சா சுதீப் ‘பேந்தம்’ பைக்கில் அமர்ந்திருக்கும் மோஷன் போஸ்டரையும் வெளியிட்டுள்ளனர்.

விக்ராந்த் ரோணா படத்தின் போஸ்டர்
இப்படம் 3-D பதிப்பில், 14 மொழிகளில், 55 நாடுகளில் வெளியாகவுள்ளது. இப்படத்தை அனூப் பண்டாரி இயக்கியுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு தேதி ரசிகர்களை பெரும் உற்சாகத்துடன் திரையரங்கு அனுபவத்திற்கு தயாராக்கியுள்ளது.
நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சதுரங்கவேட்டை 2’ படத்தின் முன்னோட்டம்.
கடந்த 2014-ஆம் ஆண்டு மனோபாலா தயாரிப்பில் நட்டி நடராஜ் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சதுரங்க வேட்டை’. அரவிந்த் சாமி நடிக்க ‘சதுரங்கவேட்டை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார். இப்படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கி உள்ளார். முந்தைய பாகத்தின் இயக்குனர் வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார்.

தயாரிப்பாளர் மனோபாலாவின் பிக்டர்ஸ் ஹவுஸ் அண்டு சினிமா சிட்டி நிறுவனம் தயாரித்துள்ள சதுரங்க வேட்டை 2 திரைப்படம் ஆன் ஸ்கை டெக்னாலஜி பிரைவெட் லிமிடேட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் வெளியிட இருக்கிறார். இப்படம் வருகின்ற ஜனவரி மாதம் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் மற்றும் பிரபு இணைந்து வழங்கும் க் படத்தின் முன்னோட்டம்.
தர்மராஜ் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர்கள் நவீன் மற்றும் பிரபு இணைந்து வழங்கும், ஜீவி படத்தின் திரைக்கதை ஆசிரியர் பாபு தமிழ் இயக்கத்தில் புதுமுகங்கள் யோகேஷ், அனிகா விக்ரமன் நடித்திருக்கும் திரைப்படம் “க்”. தமிழ் சினிமாவில் புதுவகை உளவியல் பேண்டஸி ஜானரில், ரசிகர்களுக்கு புது அனுபவத்தை தரும் இத்திரைப்படம் வரும் டிசம்பர் 10 முதல் உலகமெங்கும் திரையரங்குளில் வெளியாகிறது.
ஜீவி திரைப்படத்தில் முக்கோண தொடர்பியல் விதி எனும் கருவை வைத்து, கதை திரைக்கதை அமைத்து ரசிகர்கள் மற்றும் விமர்சகர்களிடம் மிகப்பெரிய அளவில் பாராட்டுக்களை குவித்த, இயக்குநர் பாபுதமிழ் “க்” படத்தில் மீண்டும் ஒரு புது வகை ஜானரில் ரசிகர்களை அசத்தியுள்ளார். ஒரு கால்பந்து விளையாட்டு வீரனுக்கு ஏற்படும் உளவியல் சிக்கல்களும் அதனையொட்டி நடக்கும் ஃபேண்டஸி தருணங்களையும் மையமாக வைத்து, இத்திரைப்படம் உருவாகியுள்ளது.
உலகளவில் உளவியல் திரில்லர் திரைப்படங்கள் ஏராளமாக வந்திருந்தாலும், உளவியல் ஃபேண்டஸி என்பது ரசிகர்களுக்கு மிகப் புதுமையானது. அந்த வகையில் புது அனுபவத்தை தரும் படமாக, ஜீவி படத்தை விடவும் பல திருப்பங்களும், ஆச்சர்யங்களும் கொண்ட திரில் அனுபவத்தை தரும் படைப்பாக இப்படம் உருவாகியுள்ளது.

யோகேஷ் - அனிகா
முழுக்க முழுக்க சென்னையை சுற்றியுள்ள பகுதிகளில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஒரு பாடல் காட்சி மட்டும் மலேஷியாவில் படமாக்கப்பட்டிருக்கிறது.
புதுமுகங்கள் யோகேஷ் மற்றும் அனிகா முதன்மை பாத்திரங்களில் நடிக்க, நடிகர்கள் குரு சோமசுந்தரம், ஆடுகளம் நரேன், ஒய்.ஜி.மகேந்திரன் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடித்துள்ளனர். புதுமுக ஒளிப்பதிவாளர் ராதாகிருஷ்ணன் இப்படத்திற்கு ஒளிப்பதிவு செய்துள்ளார்.
இசையமைப்பாளர் கவாஸ்கர் அவினாஷ் மனதை மயக்கும் இசையை தந்துள்ளார். பியார் பிரேமா காதல் பட புகழ் எடிட்டர் மணிக்குமரன் இப்படத்திற்கு படத்தொகுப்பு செய்துள்ளார். ரசிகர்களை ஒரு புதிய உலகிற்கு அழைத்து செல்லும் விதமாக, “க்” திரைப்படம் 2021 டிசம்பர் 10 முதல் உலகெங்கும் திரையரங்குகளில் வெளியாகிறது.
தமிழ்த்திரையுலக வரலாற்றில் இதுவரை இல்லாத பெருமை நிகழ்வாக சமீபத்தில் 100 விஐபிக்கள் ஒரு வாஸ்கோடகாமா படத்தின் பர்ஸ்ட் லுக்கை வெளியிட்டனர்.
5656 புரொடக்ஷன் சார்பில் உருவாகும் 'வாஸ்கோடகாமா' படத்தை மலேசியாவில் பல பெரிய நிறுவனங்கள் நடத்தும் டத்தோ பி .சுபாஷ்கரன் தயாரிக்கிறார். கதை திரைக்கதை எழுதி இந்தப் படத்தை ஆர்ஜிகே எனப்படும் ஆர்.ஜி.கிருஷ்ணன் இயக்குகிறார்.
இந்தப் படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது. இப்பூஜையில் சிறப்புவிருந்தினராக இயக்குநர் கே.எஸ்.ரவிகுமார், தயாரிப்பாளர்கள் ஜி.தனஞ்செயன், கே.ராஜன் ஆகியோர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர். இந்நிகழ்வில் படத்தின் தயாரிப்பாளர் டத்தோ பி. சுபாஷ்கரன், இயக்குநர் ஆர்.ஜி.கிருஷ்ணன், நாயகன் நகுல், இசை அமைப்பாளர் என்.வி.அருண் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.






