என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    கள்ளன் படத்தின் போஸ்டர்
    X
    கள்ளன் படத்தின் போஸ்டர்

    கள்ளன்

    எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள 'கள்ளன்' படத்தின் முன்னோட்டம்.
    எட்செட்ரா எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் சார்பில் வி.மதியழகன், எஸ்.ரவிச்சந்திரன் இருவரும் இணைந்து தயாரித்துள்ள படம் 'கள்ளன்'. இதில் இயக்குநர் கரு.பழனியப்பன் கதாநாயகனாக நடித்திருக்கிறார். கதாநாயகியாக ‘தோழா’ படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்த நிகிதா நடித்துள்ளார். இவர்களுடன் வேலா ராமமூர்த்தி, நமோ நாரயணன், செளந்தரராஜா, ஸ்டண்ட் மாஸ்டர் தினேஷ் சுப்பராயன், ரெஜின், பருத்திவீரன் முருகன், அருண், மாயா உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள்.

    இந்தப் படத்தைப் பிரபல எழுத்தாளரும், பத்திரிகையாளருமான சந்திரா தங்கராஜ் இயக்கியுள்ளார். இவர், இயக்குனர் அமீர், 'கற்றது தமிழ்' ராம் இருவரிடம் பல்வேறு படங்களில் உதவியாளராக இருந்தவர். எண்பதுகளின் இறுதிக் காலகட்டத்தில் நடக்கிற மாதிரியான காலகட்டத்தைக் கொண்ட 'கள்ளன்' திரைப்படம் வருகிற ஜனவரி மாதம் திரைக்கு வரவிருக்கிறது. அதற்கான அறிவிப்பு கடந்த வாரம் வெளியான நிலையில் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் தனது வலைத்தளத்தில், 'கள்ளன்' படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார்.

    கே இசையமைத்திருக்கும் இந்தப் படத்தில் நா.முத்துக்குமார், யுகபாரதி, சந்திரா தங்கராஜ் பாடல்களை எழுதியிருக்கிறார்கள். எம்.எஸ்.பிரபு, கோபி ஜகதீஸ்வரன் ஆகியோர் ஒளிப்பதிவாளராக பணியாற்றி இருக்கிறார்கள்.
    Next Story
    ×