என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    சதுரங்க வேட்டை 2
    X
    சதுரங்க வேட்டை 2

    சதுரங்க வேட்டை 2

    நிர்மல் குமார் இயக்கத்தில் அரவிந்த் சாமி, திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சதுரங்கவேட்டை 2’ படத்தின் முன்னோட்டம்.
    கடந்த 2014-ஆம் ஆண்டு மனோபாலா தயாரிப்பில் நட்டி நடராஜ் நடித்து வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற படம் ‘சதுரங்க வேட்டை’. அரவிந்த் சாமி நடிக்க ‘சதுரங்கவேட்டை’ படத்தின் இரண்டாம் பாகம் உருவாகி உள்ளது. அவருக்கு ஜோடியாக திரிஷா நடித்துள்ளார்.  இப்படத்தை விஜய் ஆண்டனி நடிப்பில் வெளிவந்த ‘சலீம்’ படத்தை இயக்கிய நிர்மல் குமார் இயக்கி உள்ளார். முந்தைய பாகத்தின் இயக்குனர் வினோத் கதை, திரைக்கதை, வசனம் எழுதி உள்ளார். 

    சதுரங்க வேட்டை 2

    தயாரிப்பாளர் மனோபாலாவின் பிக்டர்ஸ் ஹவுஸ் அண்டு சினிமா சிட்டி நிறுவனம் தயாரித்துள்ள சதுரங்க வேட்டை 2 திரைப்படம் ஆன் ஸ்கை டெக்னாலஜி பிரைவெட் லிமிடேட் நிறுவனத்தின் தயாரிப்பாளர் முத்து சம்பந்தம் வெளியிட இருக்கிறார். இப்படம் வருகின்ற ஜனவரி மாதம் உலகம் முழுதும் திரையரங்குகளில் வெளியாகிறது.
    Next Story
    ×