என் மலர்
முன்னோட்டம்
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில் கிஷோர் ராஜ்குமார் இயக்கத்தில் சதீஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் நாய் சேகர் படத்தின் முன்னோட்டம்.
ஏஜிஎஸ் எண்டர்டெயின்மென்ட் தயாரிப்பில், சதீஷ் நாயகனாக நடித்துள்ள திரைப்படம் 'நாய் சேகர்', அறிமுக இயக்குனரான கிஷோர் ராஜ்குமார் இப்படத்தின் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார். இதுவரை நகைச்சுவை வேடங்களுக்கு பெயர் பெற்ற சதீஷ், நாய் சேகர் படத்தின் மூலம் கதையின் நாயகனாக அறிமுகமாகிறார். மேலும் குக் வித் கோமாளி புகழ் பவித்ரா லட்சுமி இந்த படத்தின் வாயிலாக வெள்ளித்திரையில் அறிமுகமாகி, சதீஷின் ஜோடியாக நடித்துள்ளார்.
இப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ள நாய் கேரக்டருக்கு மிர்ச்சி சிவா டப்பிங் பேசியிருக்கிறார். 500 படங்களுக்கும் மேல் இசையமைத்துள்ள சங்கர் கணேஷ் இப்படத்தின் எதிர் நாயகனாக நடித்துள்ளார். ஜார்ஜ் மரியன், 'லொள்ளு சபா' மாறன், இளவரசு, லிவிங்ஸ்டன், மனோபாலா, ஞானசம்பந்தம் மற்றும் 'கலக்கப் போவது யாரு' பாலா ஆகியோரும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். மேலும். இயக்குனர் கிஷோர் ராஜ்குமாரும் ஒரு சுவாரஸ்யமான பாத்திரத்தில் நடித்துள்ளார்.
பிரவீன் பாலு ஒளிப்பதிவு செய்ய, ராம் பாண்டியன் படத்தொகுப்பை கையாண்டுள்ளார். எம் ஜி முருகன் இப்படத்தின் கலை இயக்குனர் ஆவார். பாடல்களை சிவகார்த்திகேயன், விவேக் மற்றும் இயக்குநர் கிஷோர் ராஜ்குமார் ஆகியோர் எழுதியுள்ளனர்.

பவித்ரா லட்சுமி - சதீஷ்
படத்தின் பாடல்களுக்கு அஜீஷும் சிறப்பு பாடல் ஒன்றுக்கு அனிருத் ரவிச்சந்தரும் இசையமைத்துள்ளனர். நடனத்தை சாண்டியும் சண்டைக்காட்சிகளை மிராக்கல் மைக்கேலும் வடிவமைத்துள்ளனர். படத்தின் நிர்வாகத் தயாரிப்பாளர் எஸ்.எம்.வெங்கட் மாணிக்கம், கிரயேட்டிவ் ப்ரொடியூசர் அர்ச்சனா கல்பாத்தி.
ஏஜிஎஸ் என்டர்டெயின்மென்ட் பேனரில் கல்பாத்தி எஸ் அகோரம், கல்பாத்தி எஸ் கணேஷ் மற்றும் கல்பாத்தி எஸ் சுரேஷ் தயாரித்துள்ள, இப்படம் ஜனவரி 13-ஆம் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக உள்ளது.
ஸ்கை மேஜிக் பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் தயாரித்திருக்கும் "சினம் கொள்" படத்தின் முன்னோட்டம்.
ஸ்கை மேஜிக் பட நிறுவனம் சார்பில் காயத்ரி ரஞ்சித் மற்றும் பாக்ய லட்சுமி டாக்கீஸ் நிறுவன சார்பில் பாக்ய லட்சுமி வெங்கடேஷ் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் "சினம் கொள்".
ஆண்டவன் கட்டளை, மிக மிக அவசரம் போன்ற படங்களில் நடித்த அரவிந்த் இந்த படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மற்றும் நர்வினி டெய்சி, லீலாவதி, பிரேம் ஆகியோரும் நடித்துள்ளனர்.
ஒளிப்பதிவு - M.R.பழனிக்குமார், இசை - N.R.ரகுநந்தன், வசனம் மற்றும் பாடல்கள் - தீபச் செல்வன், எடிட்டிங் - அருணாசலம் சிவலிங்கம், கலை - நிஸங்கா ராஜகரா, தயாரிப்பு - காயத்ரி ரஞ்சித், பாக்யலட்சுமி வெங்கடேஷ், கதை, திரைக்கதை எழுதி இயக்கி இருக்கிறார் ரஞ்சித் ஜோசப்.
உலகத்திற்கு யுத்தம் முடிவுற்றது என்று சொல்லப் பட்டாலும் இன்றும் ஈழத்தில் நடந்து கொண்டிருக்கும் யுத்தத்தை இதில் பதிவு செய்துள்ளார். இப்படம் வருகின்ற 14.01.2022 பொங்கல் அன்று ஓ.டி.டி தளத்தில் வெளியாக உள்ளது.
பேட்லர்ஸ் சினிமா சார்பாக கருப்பையா முருகன் இயக்கி இருக்கும் ‘விடியாத இரவொன்று வேண்டும்’ படத்தின் முன்னோட்டம்.
பேட்லர்ஸ் சினிமா சார்பாக ‘யானை மேல் குதிரை சவாரி’ படத்தை தயாரித்து இயக்கிய கருப்பையா முருகன் தற்போது இயக்கி இருக்கும் படம் ‘விடியாத இரவொன்று வேண்டும்’. இப்படத்தில் ‘பிடிச்சிருக்கு’, ‘முருகா’, ‘கோழி கூவுது’ படங்களில் நடித்த அசோக் கதாநாயகனாக நடிக்க, ஹிரித்திகா ஸ்ரீனிவாஸ் கதாநாயகியாக அறிமுகமாகிறார். மேலும் முத்துராமன், ஈ.ராமதாஸ், சௌமியா, முத்துக்காளை, பிரபாகரன் மற்றும் பலர் நடித்திருக்கிறார்கள்.
படம் பற்றிப் பேசிய இயக்குனர் கருப்பையா முருகன், “எதிர்பாராத விபத்துக்கள் ஏற்படும்போது விபத்தில் சிக்கியவர்களை நாம் காப்பாற்றுகிறோமா அல்லது பிரச்சனைகள் வருமென்று ஒதுங்கி போகிறோமா என்பதை பற்றி திரில்லிங்காக சொல்லும் படம் இது. படம் முழுக்க ஒரே இரவில் நடப்பதால், இரவில் மட்டுமே சென்னை மற்றும் அரக்கோணம் பகுதிகளில் படப்பிடிப்பு நடந்துள்ளது ” என்றார்.
இசை - வி.கோகுலகிருஷ்ணா, ஒளிப்பதிவு - வினோத் காந்தி, படத்தொகுப்பு - பிரீத்தி மோகன், இணை தயாரிப்பு - ஆர்.எஸ்.பிரேமலதா, ரேகா கணேஷ் ஆகியோர் பணியாற்றி இருக்கிறார்கள். ரிலீசுக்கு தயாரான இப்படத்துக்கு சென்சாரில் யூ சர்பிகேட் கிடைத்திருக்கிறது.
சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரிப்பில் தர்புகா சிவா இயக்கத்தில் உருவாகி இருக்கும் முதல் நீ முடிவும் நீ படத்தின் முன்னோட்டம்.
“முதல் நீ முடிவும் நீ” இளைய சமூகத்தின் உணர்வுகளை மையமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. வாழ்வை நம்பிக்கையுடன் எதிர்கொண்டு, வாழ்வில் மன அமைதியை பெறுவது பற்றியான கதைக்கருவில் இப்படம் உருவாகியுள்ளது. தமிழ்நாட்டின் சென்னையில் 90’s களின் பிற்பகுதியில் வளர்ந்து வரும் உயர்நிலைப் பள்ளிக் குழந்தைகளின் கண்ணோட்டத்தில் இந்தக்கதை விவரிக்கப்பட்டுள்ளது.
“முதல் நீ முடிவும் நீ” திரைப்படத்தில், அமிர்தா மாண்டரின், பூர்வா ரகுநாத், கே.ஹரிஷ், சரண் குமார், ராகுல் கண்ணன், நரேன் விஜய், மஞ்சுநாத் நாகராஜன், மீத்தா ரகுநாத், வருண் ராஜன், சரஸ்வதி மேனன், சச்சின், கௌதம் ராஜ் சிஎஸ்வி, ஹரினி ரமேஷ், கிஷன் தாஸ் உட்பட இளம் நட்சத்திர நடிகர்கள் இணைந்து நடித்துள்ளனர்.

இத்திரைப்படத்தை எழுதி இயக்குவதுடன், இயக்குனர் தர்புகா சிவா இப்படத்திற்கு இசையும் அமைத்துள்ளார். சுஜித் சாரங் (ஒளிப்பதிவு), ஸ்ரீஜித் சாரங் (எடிட்டிங்), தாமரை-கீர்த்தி-காபர் வாசுகி (பாடல் வரிகள்), ஆனந்த் (இணை இயக்குனர் மற்றும் கிரியேட்டிவ் புரடியூசர்), வாசுதேவன் (கலை), G வெங்கட் ராம் (விளம்பர புகைப்படம்), கண்ணதாசன் DKD (விளம்பர வடிவமைப்புகள்) , ராஜகிருஷ்ணன் M.R(ஒலி வடிவமைப்பு), மற்றும் நவீன் சபாபதி (கலரிஸ்ட்) ஆகியோர் தொழில்நுட்ப வல்லுநர்களாக பணியாற்றியுள்ளனர்.
சூப்பர் டாக்கீஸ் சார்பில் சமீர் பாரத் ராம் தயாரித்துள்ள இப்படம் ஜனவரி 21, 2022 அன்று ஜீ5 ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன்.புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரித்திருக்கும் அடங்காமை படத்தின் முன்னோட்டம்.
திருக்குறள் கருத்தில் உருவாகியிருக்கும் திரைப்படம் 'அடங்காமை'. இப்படத்தை வோர்ஸ் பிக்சர்ஸ் சார்பில் பொன்.புலேந்திரன், ஏ.என்.மைக்கேல் ஜான்சன் தயாரித்திருக்கிறார்கள். "திருக்குறள் வாழ்வியல் நெறிகளை இரண்டே வரிகளில் கூறும் அற்புதமான நூல். அதிலும் குறிப்பாக 'அடக்கமுடைமை' அதிகாரத்தில் முதலில் வரும் 'அடக்கம் அமரருள் உய்க்கும் அடங்காமை ஆரிருள் உய்த்து விடும் 'என்ற குறள் 100 பேருந்துகளில் 95 பேருந்துகளிலாவது இடம்பெற்றிருக்கும். ஏன் இந்த வாழ்வியல் சிந்தனை மட்டும் எல்லாவற்றிலும் இருக்கிறது என்பதை யோசித்த போது அதை வைத்து ஒரு கதையை உருவாக்கி இருக்கிறார் இயக்குனர்
இப்படத்திற்கு ஒளிப்பதிவு பி.ஜி.வெற்றி, பாடல் இசை கியூரன் மென்டிசன், திரை இசை எம்.எஸ்.ஸ்ரீகாந்த், எடிட்டிங் துரைராஜ், பாடல்கள் ஏ.இரமணிகாந்தன், கெறால்ட் மென்டிசன், நடனம் சீதாபதிராம். கபில் ஷாம், சண்டைக்காட்சிகள் முரளி, வசனம் ஏ.பி.சிவா.
அடங்காமை திரைப்படத்தை மூன் மீடியா சார்பில் தமிழகமெங்கும் ஜனவரி 7 முதல் வெளியிடுகிறார்கள்.
சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்திரி தயாரிப்பில் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் வரலாறு முக்கியம் படத்தின் முன்னோட்டம்.
ஜீவா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வரலாறு முக்கியம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி தயாரிக்கிறார்.
நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இப்படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் என்.பி. (எடிட்டிங்), ராஜு சுந்தரம்-பிருந்தா (நடன அமைப்பு), மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன் (பாடலாசிரியர்கள்), ஆர்.சக்தி சரவணன் (ஸ்டன்ட் டைரக்ஷன்), மோகன் (கலை), வாசுகி பாஸ்கர் (ஆடை வடிவமைப்பு), எஸ்.ஏ.சண்முகம் (மேக்கப்) ஆகியோர் இப்படத்தின் மற்ற தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.
சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரடக்சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
அய்யன் மற்றும் சேதுபூமி ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கி, நடிக்கும் 'ஓங்காரம்' படத்தின் முன்னோட்டம்.
இளையராஜா இசையில் அய்யன் மற்றும் சேதுபூமி ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி இயக்கி, நடிக்கும் மூன்றாவது படம் 'ஓங்காரம்'. இப்படத்தில் இடம்பெறும் 'புலிடா இவன் பேரு, புலித்தேவன் வகையாரு எனத் தொடங்கும் பாடலை பரமக்குடி பக்கத்தில் நயினார் கோவில் சுற்றுப் புறங்களில் இயக்குனரும், நாயகனுமான ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி ஆக்ரோஷமாக ஆட, "ஓங்காரம்" படத்திற்காக படமாக்கப்பட்டிருக்கிறது.

ஞானகரவேல் எழுதி இருக்கும் இப்பாடலை மகாலிங்கம் பாடியிருக்கிறார். இப்படத்தில் ஒளிப்பதிவு சாம் க.ரொனால்டு, இசை வி.டி.பாரதி - வி.டி.மோனீஷ், பாடல் ஞானகரவேல், படத்தொகுப்பு வி.எஸ். விஷால், கலை - செல்வம் ஜெயசீலன், நடனம் தினா, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக், இணைத் தயாரிப்பு கார்த்திகா உமாமகேஸ்வரன், ரேகா முருகன். தயாரிப்பு - கௌசல்யா ஏழுமலையான் ஆகியோர் பணியாற்றி வருகிறார். இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
ஜாக்கி சான், அர்னால்ட் இருவரும் இணைந்து நடித்த "அயன் மாஸ்க்" படத்தின் முன்னோட்டம்.
சைனா, ரஷ்யா, அமெரிக்கா ஆகிய நாடுகளில் பெரும் வசூலை வாரிக் குவித்த "அயர்ன் மாஸ்க்" ஆங்கிலப் படம், தமிழ் மக்களின் உள்ளத்தை வாரிக் குவிக்க தமிழில் வருகிறது.
வெறித்தனமான சண்டைக் காட்சிகளும், மகிழ்ந்து சிரிக்க காமெடி காட்சிகளும் நிறைந்த இப்படம் 49.1 பில்லியன் பட்ஜெட்டில் உருவாகி இருக்கிறது. பொங்கல் பண்டிகையை முன்னிட்டு வெளியாக இருக்கிறது.
டிராகனை அழித்து, மகாராணியை காப்பாற்ற ஜாக்கி சான் சைனா செல்கிறார். ஜாக்கி சானை அர்னால்ட் முதலில் துரத்துகிறார். பிறகு இருவரும் இணைந்து டிராகன் மற்றும் வில்லனுடன் படுபயங்கரமாக மோதுகிறார்கள். இறுதியில் டிராகனை அழித்தார்களா, மகாராணியை காப்பாற்றினார்களா என்பதே கதை.
இரண்டு மணி நேர படமாக, இருவரும் ரசிகர்களை மகிழ்விக்க தமிழ் பேசி வருகிறார்கள். ஜூராசிக் பார்க், கிங்காங் போன்ற படங்களை தமிழில் வெளியிடப்பட்ட பிரபல நிறுவனமான ஹன்சா பிக்சர்ஸ் "அயர்ன் மாஸ்க்" படத்தை தமிழில் வெளியிடுகிறது!
சரவணன் சுப்பையா இயக்கத்தில் அனேகா, கதிரவன் நடிப்பில் உருவாகி உள்ள ‘மீண்டும்’ படத்தின் முன்னோட்டம்.
அஜித்குமார் நடித்த ‘சிட்டிசன்’ படத்தை இயக்கியவர் சரவணன் சுப்பையா. இவர் நீண்ட இடைவெளிக்குப்பின் இயக்கியுள்ள படம், ‘மீண்டும்.’ நடிகர் மணிகண்டனை, `கதிரவன்' என்று பெயர் மாற்றி கதாநாயகனாக நடிக்க வைத்து இருக்கிறார் சரவணன் சுப்பையா. கதாநாயகியாக நட்பே துணை பட நடிகை அனேகா நடித்துள்ளார். இதில் இயக்குனர் சரவணன் சுப்பையாவும் நடித்து இருக்கிறார்.
படத்தை பற்றி அவர் கூறியதாவது: ‘‘தாய்நாட்டுக்கு எதிரான ஒரு முக்கிய பிரச்சினையை விசாரிக்கும்படி, கதாநாயகன் கதிரவனிடம் ஒப்படைக்கிறார்கள். இதை ஒரு சவாலாக ஏற்று களம் இறங்குகிறார், கதிரவன். அவரை எதிரிகள் பிடித்து சித்ரவதை செய்கிறார்கள். அந்த கொடூரம் அதிர்ச்சியின் உச்சம்.
படத்தின் உச்சக்கட்ட காட்சி, இதுவரை இந்திய திரையுலகில் யாரும் படமாக்கியிராதது. எஸ்.எஸ்.ஸ்டான்லி, யார் கண்ணன், கேபிள் சங்கர், சுப்பிரமணியசிவா, துரை சுதாகர், இந்துமதி, மோனிஷா, அனுராதா ஆகியோரும் நடித்துள்ளனர்’ என்றார்.
சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி, காயத்ரி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மாமனிதன்’ படத்தின் முன்னோட்டம்.
சீனு ராமசாமி - விஜய் சேதுபதி கூட்டணி மூன்றாவது முறையாக இணைந்த படம் ‘மாமனிதன்’. இப்படத்தை இசையமைப்பாளர் யுவன் ஷங்கர் ராஜா தயாரித்துள்ளார். இதில் விஜய் சேதுபதி ஆட்டோ டிரைவராக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக காயத்ரி நடித்துள்ளார்.
இந்தப் படத்திற்கு இளையராஜா மற்றும் யுவன் சங்கர் ராஜா இணைந்து இசை அமைத்துள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து 2 ஆண்டுகள் ஆனாலும் சில பிரச்சினைகள் காரணமாக படம் ரிலீசாகாமல் உள்ளது.
இந்நிலையில், மாமனிதன் படத்திற்கு சென்சாரில் யு சான்றிதழ் வழங்கப்பட்டிருப்பதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர். இதையடுத்து இப்படம் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜி.ஆர்.வெங்கடேஷ், கே.வினோத் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் ஐஸ்வர்யா முருகன் படத்தின் முன்னோட்டம்.
ஜி.ஆர்.வெங்கடேஷ், கே.வினோத் ஆகியோர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் ‘ஐஸ்வர்யா முருகன்’. இப்படத்தை ஆர்.பன்னீர் செல்வம் இயக்கி இருக்கிறார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘கருப்பன்' படத்திற்கு பிறகு, முந்தைய படங்களின் சாயல் இல்லாமல் ஒரு கதை பண்ணலாம் என்று யோசிக்கும் போதுதான் ரொம்ப நாள் என் மனதில் உருவாக்கி வைத்திருந்த இந்த ஆணவக் கொலை “ஐஸ்வர்யா முருகன்” கதையை உருவாக்கினேன்.
அதன் பின்னணியில் படம் பண்ண நினைத்த போது நிறைய தகவல்கள் கிடைத்தது. மனதை கல்லாக்கிக்க வேண்டியது இருந்தது. அப்படிப்பட்ட நிஜங்களின் பிம்பம் தான் இது. காதலையும், வலியையும், பிரிவையும் பல படங்களில் சொல்லிட்டாங்க. ஆனால் இங்கே ஒரு காதல், காதலர்களின் குடும்பங்களைச் எப்படி சிதைத்து.. துயரங்களை உண்டாக்கியது என்ன.. இப்படி பல நிஜங்களை சொல்ற படம் தான் “ஐஸ்வர்யா முருகன்”. வாழ்க்கை உங்களை எந்த எல்லைக்கும் கூட கொண்டுப் போக வைக்கும்” என்றார்.
இப்படத்தில் ஹீரோவாக அருண் பன்னீர்செல்வம் அறிமுகமாகிறார். கேரளாவைச் சேர்ந்த வித்யாபிள்ளை ஹீரோயினாக அறிமுகமாகிறார். மேலும் தெய்வேந்திரன், ஹர்ஷ் லல்வானி, சாய்சங்கீத், குண்டுகார்த்திக், தீனா, ராஜா, சங்கீதா, நாகேந்திரன்னு புதுமுகங்கள் நடித்திருக்கிறார்கள்.
அர்ஜுன் ஜெனா ஒளிப்பதிவையும், கணேஷ் ராகவேந்திரா இசை பணியையும், ஜான் ஆபிரகாம் எடிட்டிங் பணியையும் செய்கிறார்கள்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா, சம்ஸ்கிருதி நடிப்பில் உருவாகி வரும் ‘தண்ணி வண்டி’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் தம்பி ராமையாவின் மகன் உமாபதி ராமையா நடிப்பில் உருவாகி இருக்கும் படம் தண்ணி வண்டி. ராசு மதுரவன், மனோஜ் குமார் மற்றும் தருண் கோபி ஆகியோரின் உதவியாளராக நீண்டகாலமாக பணியாற்றிய மாணிக்க வித்யா இந்த படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். வில் அம்பு புகழ் சம்ஸ்கிருதி நாயகியாக நடித்துள்ளார்.
இந்த படத்தில் தம்பி ராமையா அப்பாவாக நடிக்க, தேவதர்ஷினி, பாலசரவணன், வித்யுலேகா, சேரன் ராஜ், மனோஜ் குமார், ஜார்ஜ், பாவா லட்சுமணன், 'காதல்' சுகுமார், முல்லை, விஜய் டிவி புகழ் கோதண்டம், 'ஆடுகளம்' நரேன், கிருஷ்ணமூர்த்தி, மதுரை முத்து, 'பிச்சைக்காரன்' மூர்த்தி மற்றும் இன்னும் சில பிரபலமான நடிகர்களும் நடித்துள்ளனர்.

வெங்கட் (ஒளிப்பதிவு), வீர சமர் (கலை), ஏ.எல்.ரமேஷ் (படத்தொகுப்பு), மோசஸ் (இசை), ஏ.வி.பழனிசாமி (தயாரிப்பு நிர்வாகம்), மோகன்ராஜ் - கவிஞர் சாரதி - கதிர் மொழி (பாடல்கள்), சுப்ரீம் சுந்தர் (சண்டைப்பயிற்சி), தினேஷ் - தீனா (நடனம்), புச்சி (ஆடைகள்), மூவேந்தர் (மேக்கப்), மூர்த்தி (ஸ்டில்ஸ்) மற்றும் ஸ்ரீதர் (டிசைனர்) ஆகியோர் தொழில்நுட்ப கலைஞர்களாக பணிபுரிந்துள்ளனர். இப்படம் டிசம்பர் 31 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.






