என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    ஓங்காரம் படத்தின் போஸ்டர்
    X
    ஓங்காரம் படத்தின் போஸ்டர்

    ஓங்காரம்

    அய்யன் மற்றும் சேதுபூமி ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்‌.கேந்திரன் முனியசாமி இயக்கி, நடிக்கும் 'ஓங்காரம்' படத்தின் முன்னோட்டம்.
    இளையராஜா இசையில் அய்யன் மற்றும் சேதுபூமி ஆகிய படங்களை இயக்கிய ஏ.ஆர்‌.கேந்திரன் முனியசாமி இயக்கி, நடிக்கும் மூன்றாவது படம் 'ஓங்காரம்'. இப்படத்தில் இடம்பெறும் 'புலிடா இவன் பேரு, புலித்தேவன் வகையாரு எனத் தொடங்கும் பாடலை பரமக்குடி பக்கத்தில் நயினார் கோவில் சுற்றுப் புறங்களில் இயக்குனரும், நாயகனுமான ஏ.ஆர்.கேந்திரன் முனியசாமி ஆக்ரோஷமாக ஆட, "ஓங்காரம்" படத்திற்காக படமாக்கப்பட்டிருக்கிறது.

    ஓங்காரம்

    ஞானகரவேல் எழுதி இருக்கும் இப்பாடலை மகாலிங்கம் பாடியிருக்கிறார். இப்படத்தில் ஒளிப்பதிவு சாம் க.ரொனால்டு, இசை வி.டி.பாரதி - வி.டி.மோனீஷ், பாடல் ஞானகரவேல், படத்தொகுப்பு வி.எஸ். விஷால், கலை - செல்வம் ஜெயசீலன், நடனம் தினா, சண்டை பயிற்சி ஃபயர் கார்த்திக், இணைத் தயாரிப்பு கார்த்திகா உமாமகேஸ்வரன், ரேகா முருகன். தயாரிப்பு - கௌசல்யா ஏழுமலையான் ஆகியோர் பணியாற்றி வருகிறார். இப்படத்தை விரைவில் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
    Next Story
    ×