என் மலர்

    முன்னோட்டம்

    வரலாறு முக்கியம் படத்தின் போஸ்டர்
    X
    வரலாறு முக்கியம் படத்தின் போஸ்டர்

    வரலாறு முக்கியம்

    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    • Whatsapp
    • Telegram
    • Linkedin
    • Print
    • koo
    சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் ஆர்.பி.சௌத்திரி தயாரிப்பில் ஜீவா நடிப்பில் உருவாகி இருக்கும் வரலாறு முக்கியம் படத்தின் முன்னோட்டம்.
    ஜீவா நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் வரலாறு முக்கியம். இந்த படத்தை அறிமுக இயக்குனர் சந்தோஷ் ராஜன் எழுதி இயக்குகிறார். சூப்பர் குட் பிலிம்ஸ் சார்பில் தயாரிப்பாளர் ஆர்.பி.சௌத்திரி தயாரிக்கிறார்.

    நடிகை காஷ்மீரா பர்தேஷி (சிவப்பு மஞ்சள் பச்சை படப்புகழ்) கதாநாயகியாக நடிக்கும் இப்படத்தில் பிரக்யா நாகரா, வி.டி.வி கணேஷ், கே.எஸ்.ரவிக்குமார், மலையாள நடிகர் சித்திக், சரண்யா பொன்வண்ணன், சாரா, லொள்ளு சபா சுவாமிநாதன், மொட்ட ராஜேந்திரன், லொள்ளு சபா மனோகர், காளி ராஜ்குமார், ஆதிரை மற்றும் சில முன்னணி நடிகர்கள் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    இப்படத்திற்கு சக்தி சரவணன் ஒளிப்பதிவு செய்ய, ‘ஜிமிக்கி கம்மல்’ பாடல் புகழ் ஷான் ரகுமான் இசையமைக்கிறார். ஸ்ரீகாந்த் என்.பி. (எடிட்டிங்), ராஜு சுந்தரம்-பிருந்தா (நடன அமைப்பு), மதன் கார்க்கி, சந்தோஷ் ராஜன் (பாடலாசிரியர்கள்), ஆர்.சக்தி சரவணன் (ஸ்டன்ட் டைரக்ஷன்), மோகன் (கலை), வாசுகி பாஸ்கர் (ஆடை வடிவமைப்பு), எஸ்.ஏ.சண்முகம் (மேக்கப்) ஆகியோர் இப்படத்தின் மற்ற தொழில்நுட்பக் குழுவில் பணியாற்றுகின்றனர்.

    சென்னை, கோயம்புத்தூர், ஹைதராபாத் மற்றும் கேரளா ஆகிய இடங்களில் இப்படம் படமாக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், போஸ்ட் புரடக்‌சன் பணிகள் தற்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.
    Next Story
    ×