என் மலர்tooltip icon

    முன்னோட்டம்

    சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை படத்தின் போஸ்டர்
    X
    சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை படத்தின் போஸ்டர்

    சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை

    ஆறு விருதுகளை அள்ளிக்குவித்த படம் சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை படத்தின் முன்னோட்டம்.
    நபீஹா  மூவீஸ் புரொடக்ஷன் என்ற பட நிறுவனம் சார்பில் நுபாயஸ் ரகுமான் தயாரித்துள்ள படத்திற்கு கவித்துவமாக "சக்கரை தூக்கலாய் ஒரு புன்னகை"  என்று பெயர் வைத்துள்ளனர். இப்படத்தில் நாயகனாக ருத்ரா நடித்துள்ளார். நாயாகியாக சுபிக்‌ஷா நடித்துள்ளார். மற்றும் சுபலட்சுமி, ராட்சசன் வினோத் சாகர், கணபதி, பீட்டர் ஹார்ட்லி, மகேஷ் பத்மநாபன், சுனந்தா ஆகியோர் நடித்துள்ளனர்.

    இப்படம் பல்வேறு திரைப்பட விழாக்களில் கலந்து கொண்டு 6 விருதுகளை அள்ளியிருக்கிறது. டிசம்பர் 24ம் தேதி திரி பேஸ் கிரியேசன்ஸ் பட நிறுவனம் தமிழகமெங்கும் இப்படத்தை வெளியிடுகிறார்கள்.

    சுபிக்‌ஷா - ருத்ரா
    சுபிக்‌ஷா - ருத்ரா

    பிஜு விஸ்வநாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்திற்கு ராஜேஷ் அப்புகுட்டன் மற்றும் ருத்ரா இசையமைத்துள்ளனர். கதை, திரைக்கதை எழுதி மகேஷ் பத்மநாபன் இயக்கி இருக்கிறார்.
    Next Story
    ×