என் மலர்
முன்னோட்டம்
புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கத்தில் சசிகுமார், நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ராஜவம்சம் படத்தின் முன்னோட்டம்.
நடிகர் சசிகுமாரின் அடுத்த படம் ராஜவம்சம். இப்படத்தை புதுமுக இயக்குனர் கதிர்வேலு இயக்கி உள்ளார். இவர் இயக்குனர் சுந்தர் சி-யிடம் உதவி இயக்குனராக பணியாற்றியவர். சாம் சி.எஸ் இசையமைத்துள்ள இப்படத்திற்கு சித்தார்த் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படத்தில் சசிகுமார் ஜோடியாக நிக்கி கல்ராணி நடித்துள்ளார்.
மேலும் சதீஷ், யோகி பாபு, ராதாரவி, தம்பி ராமையா, விஜயகுமார், கும்கி அஸ்வின், சிங்கம்புலி, நிரோஷா, மனோபாலா, சாம்ஸ், ஆடம்ஸ் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். 49 நடிகர், நடிகைகளுடன் உருவாகும் ராஜவம்சம், தலைப்புக்கு ஏற்றார்போல் குடும்பங்கள் கொண்டாடும் படமாக தயாராகிறது. இப்படத்தை செந்தூர் பிலிம்ஸ் சார்பில் டி.டிராஜா தயாரித்துள்ளார். நவம்பர் 26 ஆம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
விக்ரம் சுகுமாறன் இயக்கத்தில் சாந்தனு, கயல் ஆனந்தி நடிப்பில் உருவாகி வரும் ‘இராவண கோட்டம்’ படத்தின் முன்னோட்டம்.
`மதயானை கூட்டம்' படத்தை இயக்கிய விக்ரம் சுகுமாறன், சுமார் 6 ஆண்டுகளுக்கு பிறகு `இராவண கோட்டம்' என்ற படத்தை இயக்குகிறார். சாந்தனு நாயகனாக நடிக்கும் இந்த படத்தை கண்ணன் ரவி தயாரிக்கிறார். இப்படத்தில் சாந்தனுவுக்கு ஜோடியாக கயல் ஆனந்தி நடிக்கிறார். முற்றிலும் வித்தியாசமான கதைக்களத்துடன் இப்படம் உருவாகி வருகிறது.
இந்த படத்திற்கு ஜஸ்டின் பிரபாகரன் இசையமைக்கிறார். லாரன்ஸ் கிஷோர் இப்படத்தின் படத்தொகுப்பு பணிகளை கவனிக்கிறார். படத்தின் கதை தட்பவெப்பநிலையைப் பொறுத்தது. ஆதலால், வருடத்துக்கு 3 மாதங்கள் மட்டுமே படப்பிடிப்பு நடத்த முடியும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது. முதற்கட்ட படப்பிடிப்பு முடிந்துள்ளது.
சிவராகுல் இயக்கத்தில் விஜீத், ஹமைரா பரத்வாஜ், நதியா, நேசி, ஸ்டெபி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘சில்லாட்ட’ படத்தின் முன்னோட்டம்.
சிவராகுல் இயக்கத்தில் உருவாகி உள்ள திரைப்படம் ‘சில்லாட்ட’. அறிமுக நாயகன் விஜீத் ஹீரோவாக நடித்துள்ளார். இவருக்கு ஜோடிகளாக வெவ்வேறு மாநிலங்களைச் சேர்ந்த ஹமைரா பரத்வாஜ், நதியா, நேசி, ஸ்டெபி ஆகிய 4 அழகிகள் நடித்துள்ளார்கள். ‘சுருட்டு சுடலை’ என்ற கதாபாத்திரத்தில் இயக்குனர் சிவராகுல் நடித்துள்ளார்.
சிவஞானம் பிலிம் புரொடக்சன் சார்பில் சிவஞான ஹரி, மற்றும் எம்.பி.அழகன் இருவரும் இணைந்து தயாரித்துள்ளனர். தஷி இசை அமைக்கும் இப்படத்துக்கு பகவதி பாலா ஒளிப்பதிவு செய்துள்ளார்.
படத்தைப் பற்றி இயக்குனர் கூறியதாவது: “‘சில்லாட்ட’ என்பது தென் தமிழகத்தில் புழக்கத்தில் உள்ள சொல். அது பனைமரத்தை சார்ந்தது. பனை மரத்தில் உள்ள ஓலைகளையும், மட்டைகளையும் தாங்கி நிற்கும் வலைதான் சில்லாட்ட.

சில்லாட்ட படக்குழு
புனிதமான பனை தொழிலை அழித்துவிட்டு, செங்கல் சூளையை எழுப்பி சமூகத்துக்கு விரோதமான தொழிலில் ஈடுபடுகிறார், ஒருவர். இதனால் பனை தொழிலை நம்பியிருக்கும் தொழிலாளிகள் பாதிக்கப்படுகிறார்கள். இரு தரப்பினருக்கும் இடையே ஏற்படும் மோதலில் வெற்றி யாருக்கு? என்பதே ‘சில்லாட்ட’ படத்தின் கதை.
சி.வி.குமார் தயாரிப்பில் மனோ கார்த்திகேயன் இயக்கத்தில் சதீஷ், மிர்ணாளினி ரவி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜாங்கோ படத்தின் முன்னோட்டம்.
தமிழ் சினிமாவுக்கு பல புது டைரக்டர்களை அறிமுகப்படுத்தியவர், சி.வி.குமார். இவர் அடுத்ததாக தயாரித்திருக்கும் படம் ‘ஜாங்கோ’. சதீஷ் என்ற புதுமுகம் கதாநாயகனாகவும், மிர்ணாளினி ரவி கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். இவர்களுடன் கருணாகரன், ராம்தாஸ், சந்தானபாரதி, வேலு பிரபாகர் ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

“இது, அறிவியல் சம்பந்தப்பட்ட கதை. நகைச்சுவைக்கு முக்கியத்துவம் கொடுத்து உருவாக்கப்பட்டுள்ளது. டைரக்டர் அறிவழகனிடம் உதவி டைரக்டராக பணிபுரிந்த மனோ கார்த்திகேயன், இந்த படத்தின் மூலம் டைரக்டர் ஆகிறார். நிவாஸ் பிரசன்னா இசையமைத்திருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது ரிலீசுக்கு தயாராகியுள்ளது. வரும் நவம்பர் 19ம் தேதி இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்த ’என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் முன்னோட்டம்.
குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பிரபலமான அஸ்வின் நடித்த ’என்ன சொல்ல போகிறாய்’ படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் முடிந்த நிலையில் இந்த படத்தின் டீசர் சமீபத்தில் வெளியாகி உள்ளது.


மேலும் இந்த டீசரில் உள்ள பாடல் வரிகள் பலரையும் கவரும் வகையில் உள்ளது. விவேக் மெர்வின் இசையில், ஹரிஹரன் இயக்கத்தில் உருவாகியுள்ள இந்த திரைப்படத்தில் அஸ்வின், அவந்திகா மிஸ்ரா, தேஜூ அஸ்வினி, புகழ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை டிரைடன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.
ஏ.சி.முகில் இயக்கத்தில் பிரபுதேவா, நிவேதா பெத்துராஜ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘பொன் மாணிக்கவேல்’ படத்தின் முன்னோட்டம்.
நேமிசந்த் ஜபக் பிலிம்ஸ் சார்பில் ஹித்தேஷ் ஜபக் தயாரிப்பில் உருவாகி இருக்கும் திரைப்படம் பொன் மாணிக்கவேல். பிரபுதேவா நாயகனாக நடித்துள்ள இப்படத்தை ஏ.சி.முகில் இயக்கி உள்ளார். பிரபுதேவாவுக்கு ஜோடியாக நிவேதா பெத்துராஜ் நடித்துள்ளார். இயக்குநர் மகேந்திரன், சுரேஷ் மேனன், முகேஷ் திவாரி ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.


பிரபுதேவா - நிவேதா பெத்துராஜ்
டி.இமான் இசையமைத்துள்ள இப்படத்திற்கு கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இப்படத்தில் பிரபுதேவா போலீஸ் அதிகாரியாக நடித்துள்ளார். ஆக்ஷன் கலந்த கமர்ஷியல் படமாக உருவாகி உள்ள இப்படம் நவம்பர் 19 ஆம் தேதி நேரடியாக ஹாட் ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருக்கிறது.
முன்னணி நடிகைகளான காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா உள்பட ஐந்து நடிகைகள், கதையின் நாயகிகளாக நடித்திருக்கும் 'கருங்காப்பியம்' படத்தின் முன்னோட்டம்.
'யாமிருக்க பயமே', 'கவலை வேண்டாம்', 'காட்டேரி' ஆகிய படங்களை இயக்கிய இயக்குனர் டீகே இயக்கத்தில் தயாராகியிருக்கும் புதிய திரைப்படம் 'கருங்காப்பியம்'. இந்த படத்தில் நடிகைகள் காஜல் அகர்வால், ரெஜினா கசாண்ட்ரா, ஜனனி, ரைசா வில்சன் ஆகியோர் கதையின் நாயகிகளாக நடிக்க, இவர்களுடன் நடிகர்கள் கலையரசன், யோகி பாபு, கருணாகரன், ஜான் விஜய், ஷா ரா, 'லொள்ளு சபா' மனோகர், விஜே பார்வதி, விஜே ஆஷிக் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள்.
இவர்களுடன் ஈரான் நாட்டு நடிகையான நொய்ரிகா புதுமுக நாயகியாக அறிமுகமாகிறார். விக்கி ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்திற்கு எஸ். என். பிரசாத் இசையமைக்கிறார். விஜய் படத்தைத் தொகுக்க, செந்தில் ராகவன் கலை இயக்கத்தை கவனித்திருக்கிறார். சண்டைக்காட்சிகளை அசோக் அமைத்திருக்கிறார்.

பெண்களை மையப்படுத்தி உருவாகி இருக்கும் 'கருங்காப்பியம்' படத்தை வெற்றிவேல் டாக்கீஸ், பேவ் (PAVE) என்டர்டெய்ன்மென்ட்ஸ் மற்றும் ஏ. பி. இன்டர்நேஷனல் ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருக்கிறது.
தனிகை, குவின்ஸி, வேல்முருகன் நடிப்பில் நியூட்டன் ஜி, தயாரித்து இயக்கும் "கருப்பு கண்ணாடி" படத்தின் முன்னோட்டம்.
அணி கிரியேஷன்ஸ் சார்பில் அறிமுக இயக்குனர் நியூட்டன் ஜி, தயாரித்து இயக்கும் படம் "கருப்பு கண்ணாடி". இப்படத்தில் தொகுப்பாளர் தனிகை கதாநாயகனாகவும், புதுமுக நடிகை குவின்ஸி கதாநாயகியாகவும் நடித்துள்ளார். மேலும் சரண் ராஜ், நடிகர் கஜரஜ், பாடகர் வேல்முருகன், நடிகை சுபாஷினி ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

தனிகை
கருப்பு கண்ணாடி திரைப்படம் சைக்கோ த்ரில்லர் வகையை சார்ந்தது. சம்சாத் ஒளிப்பதிவு செய்துள்ள இப்படத்துக்கு, சித்தார்த்தா பிரதீப் இசை அமைக்கிறார். எழுமின், உருமி ஆகிய திரைப்படங்களின் படத்தொகுப்பாளராக பணியாற்றிய கார்த்திக் ராம் இப்படத்திற்கு படத்தொகுப்பு பணிகளை மேற்கொண்டுள்ளார். மெட்ரோ மகேஷ் இப்படத்திற்கான சண்டை காட்சிகள் வடிவமைப்பாளர் ஆக பணியாற்றி உள்ளார்.
பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் உருவாகி வரும் ‘புரவி’ படத்தின் முன்னோட்டம்.
பிளாக் பீப்பிள் பிக்சர்ஸ் சார்பாக எஸ்.சுமதி தயாரிப்பில், ஜி ஜே சத்யா இயக்கத்தில், பிக்பாஸ் சாக்ஷி நடிப்பில் உருவாகி வரும் படம் ‘புரவி’. பெண்களை மையமாகக் கொண்டு அதிரடி, அரசியல், திரில்லர் பாணியில் உருவாக இருக்கிறது.
‘பிக்பாஸ்’ புகழ் சாக்ஷியுடன் இணைந்து சம்பத்ராம், காஜல் பசுபவேட்டி, ஷிமோர், சலீமா, தீபா, அம்மன் சுந்தர் ஆகியோருடன் முக்கிய வேடத்தில் ஆரிஃப், ரிஷி சுப்பிரமணியம், லோகேஷ், சந்தோஷ் டேனியல், சுபாஷ் சந்திரபோஸ், பூஷ்மிஹா, இஷ்மத் பானு, நளினி கணேசன், பர்ஷத் நடிக்கிறார்கள்.
கோபி ஜெகதீஸ்வரன் ஒளிப்பதிவு செய்ய, படத்தொகுப்பு பொறுப்புகளை மணிகுமார், ரகு சேதுராமன் கவனிக்க, கலைக்கு எம்எஸ்பி மதன் பொறுப்பேற்கிறார். பி முகம்மது ஆதிப் இசையமைக்க, பாடல்களை கே வி கார்த்திக் எழுதியிருக்கிறார். நடன அசைவுகளுக்கு சதீஷ் பொறுப்பேற்க, அதிரடிக் காட்சிகளை அசோக் குமார் கவனிக்கிறார்.
ரிதுன் இயக்கத்தில் மைண்ட் டிராமா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘நினைவோ ஒரு பறவை’ படத்தின் முன்னோட்டம்.
மைண்ட் டிராமா புரொடக்ஷன்ஸ் மற்றும் ஒயிட்டக் ஸ்டுடியோஸ் இணைந்து தயாரிக்கும் படம் ‘நினைவோ ஒரு பறவை’. இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வந்த நிலையில், கொரோனா வைரஸ் காரணமாக தடைபட்டு வந்தது. தற்போது நான்காம் கட்ட படப்பிடிப்பு டிசம்பர் முதல் வாரத்தில் காரைக்குடியில் துவங்கவுள்ளது.
படப்பிடிப்பு மீண்டும் தொடங்குவது குறித்து தயாரிப்பு நிறுவனம் கூறுகையில், ‘’எங்களது படத்திலிருந்து மீனா மினிக்கி.... மற்றும் இறகி இறகி...., கனவுல உசுர..... என்ற பாடல்களுக்கு ரசிகர்கள் மிகப்பெரிய வரவேற்பு கொடுத்தார்கள். இந்த கொரோனா பெருந்தொற்று காரணத்தால் நாங்கள் படப்பிடிப்புக்கு செல்லவில்லை. மனிதர்களின் உயிரை விட நாங்கள் படப்பிடிப்பை பெரிதாகக் கருதவில்லை. தற்போது சாதாரண சூழல் நிலவி வருவதால் அடுத்த மாதம் டிசம்பரில் காரைக்குடியில் படப்பிடிப்பை துவங்க உள்ளோம்.

படக்குழுவினர்
அதேபோல் இந்த கொரோனா பெரும் தொற்றால் எங்கள் படத்தில் பணி புரிந்த சிலரையும் நாங்கள் இழந்து விட்டோம். அது மிகவும் மன வேதனை அளித்தது. மீண்டும் தற்போது புதிய உற்சாகத்தோடு அடுத்தகட்டப் படப்பிடிப்பை டிசம்பர் முதல் காரைக்குடியில் துவக்க உள்ளோம்’’.
நினைவோ ஒரு பறவை படத்தை ரிதுன் இயக்க யூடியூப் புகழ் ஹரி பாஸ்கர் சிறுவயது கதாநாயகனாக நடிக்கிறார். தமன் இசை அமைக்கும் இப்படம் 2022 ஏப்ரல் மாதம் திரைக்கு வர உள்ளது.
ரவி தேஜா, வம்சி, அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸின் அனைத்திந்திய படத்திற்கு 'டைகர் நாகேஸ்வர ராவ்' என பெயரிடப்பட்டுள்ளது.
‘மாஸ் மகாராஜா’ என அன்புடன் அழைக்கப்படும் ரவி தேஜா பல படங்களில் பிஸியாக இருந்து வருகிறார். ஒவ்வொரு திரைப்படமும் மற்ற படங்களில் இருந்து வித்தியாசமாக இருக்க வேண்டும் என்பதில் அவர் கவனமாக இருந்து வருவதோடு, ஒவ்வொரு கதாபாத்திரத்திற்கும் மாறுபாடு காட்டி வருகிறார்.
இதற்கிடையே, புதிய படமொன்றில் ரவி தேஜா ஒப்பந்தம் ஆகியுள்ளார். 'டைகர் நாகேஸ்வர ராவ்' என்று பெயரிடப்பட்ட இப்படத்தின் கதை, 1970-களில் வாழ்ந்த துணிச்சல் மிகுந்த பலே திருடன் மற்றும் ஸ்டூவர்ட்புரம் மக்கள் எதிர்கொண்ட உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டதாகும்.

டைகர் நாகேஸ்வரராவ் போஸ்டர்
படத்தை இயக்கவிருக்கும் வம்சி கடந்த 3 ஆண்டுகளாக தனது குழுவினருடன் இணைந்து திரைக்கதை மற்றும் இதர முன்-தயாரிப்பு வேலைகளில் ஈடுபட்டு வருகிறார். அபிஷேக் அகர்வால் ஆர்ட்ஸ் பேனரில் அபிஷேக் அகர்வால் தயாரிக்கிறார், தேஜ் நாராயண் அகர்வால் வழங்குகிறார்.
ஆர் மதி ஐஎஸ்சி ஒளிப்பதிவை கையாள, ஜி.வி.பிரகாஷ் குமார் இசையமைக்கிறார். அவினாஷ் கொல்லா தயாரிப்பு வடிவமைப்பை கவனிக்க, ஸ்ரீகாந்த் விசா வசனம் எழுதுகிறார். மயங்க் சிங்கானியா இணை தயாரிப்பாளராக இருப்பார். படம் குறித்த மேலும் தகவல்கள் விரைவில் வெளியாக இருக்கிறது.
சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா, ராமச்சந்திரன், இனியா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘காபி’ படத்தின் முன்னோட்டம்.
‘ஓம்’ சினி வென்ச்சர்ஸ் சார்பாக சாரதி சதீஷ் தயாரிக்க, அறிமுக இயக்குனர் சாய் கிருஷ்ணா இயக்கத்தில், ராகுல் தேவ், முக்தா கோட்சே, சௌந்தரராஜா மற்றும் ராமச்சந்திரன் ஆகியோருடன் இணைந்து இனியா முக்கிய வேடத்தில் நடித்திருக்கும் படம் ‘காபி’.
நமக்கு தெரியாமலே நம்மை அச்சுறுத்திக் கொண்டிருக்கும் ஒரு மிகப்பெரிய சமூக அவலத்தை சொல்லும் விதமாக இப்படத்தை உருவாக்கி வருகிறார்கள். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து பின்னணி வேலைகள் மும்முரமாக நடைபெற்று வருகிறது.
இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழுவினர் சமீபத்தில் வெளியிட்டுள்ளனர். இதில் கை கட்டப்பட்ட நிலையில் இனியா நிற்கும் போஸ்டர் சமூக வலைத்தளத்தில் கவனம் பெற்றது.






