என் மலர்
முன்னோட்டம்
மனோ வெ. கண்ணதாசன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘இறுதி பக்கம்’ படத்தின் முன்னோட்டம்.
ட்ரீம் கிரியேஷன்ஸ் சார்பில் உருவாகியுள்ள திரைப்படம் 'இறுதி பக்கம்'. இப்படத்திற்குக் கதை எழுதி இயக்கியிருக்கிறார் மனோ வெ. கண்ணதாசன். ஜோன்ஸ் ரூபர்ட் இசையமைத்துள்ள இப்படத்துக்கு பிரவின் பாலு ஒளிப்பதிவு செய்துள்ளார். அம்ருதா ஶ்ரீநிவாசன், ராஜேஷ் பாலச்சந்திரன், விக்னேஷ் சண்முகம், ஸ்ரீராஜ் ஆகியோர் நடித்து இருக்கிறார்கள்.
படத்தைப் பற்றி அவர் கூறியதாவது: “பொதுவாக பெரும்பாலான திரைப்படங்களில் ரசிகர்கள் திரையில் பார்க்கிற பாத்திரங்கள் யாரையும் எளிதில் வகைப்படுத்தி குணத்தைப் புரிந்து கொள்ளும் வகையில் புறவயத் தன்மையுடன்தான் இருக்கும். ஒன்று நல்லவனாக இருப்பான், அல்லது கெட்டவனாக இருப்பான், அல்லது நல்லவன் கெட்டவனாகத் தெரிவான், கெட்டவன் நல்லவனாக மாறுவான்.

இப்படி பார்க்கிறவர் கற்பனையில் உருவகித்துக் கொள்ளும்படித் தான் பாத்திரங்களின் அமைப்பு இருக்கும். ஆனால் கதைகள், நாவல்கள் படிக்கும் போது சோதனை முயற்சியான படைப்புகளைப் படிக்கும்போது படிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு விதமான கதை புலப்படும். வேறு விதமான கதைகளை, பாத்திரங்களின் இயல்புகளை அகவயமாக உணர்வார்கள்.
அப்படித் திரைப்பட உலகில் ஒரு முயற்சிதான் இந்த 'இறுதி பக்கம்'. ஒரு கொலை நடந்து இருக்கும். அந்தக் கொலையைச் செய்தது யார்? என்பதுதான வெளியே தெரியும் கேள்வி. ஆனால் ஆளாளுக்கு வெவ்வேறு வகையான மன நிலையில் அதைப் பார்ப்பார்கள். வேறு வகையான கேள்விகள் இருக்கும். ஆனால் யாராலும் கொலையாளியை ஊகிக்க முடியாது. அப்படி ஒரு படமாக 'இறுதிப் பக்கம்' இருக்கும்” என்கிறார்
எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் ஸ்ரீ கார்த்திக் இயக்கத்தில் சர்வானந்த், அமலா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கணம்’ படத்தின் முன்னோட்டம்.
எங்கேயும் எப்போதும் புகழ் சர்வானந்த் நடிப்பில், அறிமுக இயக்குநர் ஶ்ரீகார்த்திக் இயக்கத்தில் அம்மா பாசத்தை மையமாக வைத்து ஒரு அழகான சயின்ஸ் பிக்சன் படத்தை தமிழ் தெலுங்கு என இரு மொழிகளிலும் பிரமாண்டமாக உருவாகி வருகிறது. கணம் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் நடிகை அமலாவும் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.
படத்தின் கதையை கேட்டு தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு கண்கலங்கி விட்டாராம். 25 வருடங்களாக சினிமாவை விட்டு ஒதுங்கி இருந்த அமலா, இந்த படத்தில் அம்மாவாக நடிக்கிறாராம். இவரது மகனாக சர்வானந்த் நடிக்கிறார். ஸ்ரீ கார்த்திக் இப்படத்தை இயக்கி உள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு ஆகிய 2 மொழிகளில் தயாராகிறது.
வசந்த பாலன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ், அபர்ணதி நடிப்பில் உருவாகி இருக்கும் ஜெயில் படத்தின் முன்னோட்டம்.
ஜி.வி.பிரகாஷை தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக அறிமுகப்படுத்திய வசந்தபாலன், ஜி.வி.பிரகாஷை வைத்து `ஜெயில்' என்ற படத்தை இயக்கி இருக்கிறார். இந்த படத்தில் நாயகனாக நடிப்பதோடு மட்டுமில்லாமல் 12 வருடங்களுக்கு பிறகு வசந்த பாலன் படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார். ஜெயில் படத்தில் ஜி.வி.பிரகாஷ் ஜோடியாக அபர்ணதி நடித்துள்ளார்.

முக்கியக் கதாபாத்திரங்களில் ‘பள்ளிப்பருவத்திலே’ படத்தில் நாயகனாக நடித்த நந்தன் ராம், ‘பசங்க’ பாண்டி, ராதிகா உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். கிரிக்கஸ் சினி கிரியேஷன்ஸ் சார்பில் ஸ்ரீதரன் மரியதாசன் தயாரித்துள்ள இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கணேஷ் சந்திரா கையாண்டுள்ளார். இப்படத்தின் வெளியீட்டு உரிமையை கே.இ.ஞானவேல் ராஜா கைப்பற்றி உள்ளார்.
இயக்குநர் பாசில் ஜோசப் இயக்கத்தில் நடிகர் டோவினோ தாமஸ் நடிப்பில் உருவாகியுள்ள மின்னல் முரளி திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி வெளியாகிறது.
90களின் பின்னணியில் சாதாரண மனிதனாக இருந்து மின்னல் தாக்கியதன் மூலம் மாறிய சூப்பர் ஹீரோவாக மாறும் ஒருவனின் கதையை வைத்து மின்னல் முரளி என்ற படம் உருவாகியுள்ளது. மனித உணர்வுகளின் பல பக்கங்களை தொட்டுச்செல்லும் இத்திரைப்படம் பிரமாண்ட ஆக்சன் காட்சிகளும் விழாக்காலத்தில் குடும்பங்கள் இணைந்து ரசிக்கும் படமாக உருவாகியுள்ளது.
இத்திரைப்படம் மலையாள இளம் நடிகர் டோவினோ தாமஸ் இதுவரை திரையில் தோன்றியிராத மாறுபட்ட தோற்றத்தில் சூப்பர் ஹீரோவாக நடித்துள்ளார். இவர் பல திறமை வாய்ந்த நடிகர்களான குரு சோமசுந்தரம், ஹரிஸ்ரீ அசோகன் மற்றும் அஜு வர்கீஸ் ஆகியோருடன் இணைந்து நடித்துள்ளார்.

தற்போது இப்படத்தின் தமிழ் டிரைலர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. வீக்கெண்ட் ப்ளாக்பஸ்டர் நிறுவனத்தின் சார்பில், ஷோபியா பால் தயாரிக்க, பாசில் ஜோசப் இயக்கியுள்ள “மின்னல் முரளி” திரைப்படம் டிசம்பர் 24 ஆம் தேதி நெட்பிளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது. மலையாள மொழியில் உருவாகியுள்ள இந்தப் படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் ஆங்கில மொழில்களிலும் வெளியிடப்படவுள்ளது.
புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கத்தில் விஷால், டிம்பிள் ஹயாத்தி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘வீரமே வாகை சூடும்’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விஷால் நடிப்பில் தற்போது ‘வீரமே வாகை சூடும்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இப்படத்தை புதுமுக இயக்குனர் து.ப.சரவணன் இயக்கி உள்ளார். இப்படத்தில் விஷாலுக்கு ஜோடியாக இளம் நடிகை டிம்பிள் ஹயாத்தி நடித்துள்ளார். மேலும் நகைச்சுவை கதாபாத்திரத்தில் யோகிபாபுவும், மலையாள நடிகர் பாபுராஜ் வில்லனாகவும் நடித்துள்ளனர்.

யுவன் சங்கர் ராஜா இசையமைக்கும் இப்படத்திற்கு கவின் ராஜ் ஒளிப்பதிவு செய்துள்ளார். நடிகர் விஷால் தனது சொந்த தயாரிப்பு நிறுவனமான விஷால் பிலிம் பேக்ட்ரி மூலம் இப்படத்தை தயாரிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
கார்த்திக் சவுத்ரி இயக்கத்தில் விக்ரம் பிரபு, வாணி போஜன் நடிப்பில் உருவாகி வரும் ‘பாயும் ஒளி நீ எனக்கு’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் விக்ரம் பிரபு நடிப்பில் உருவாகி உள்ள புதிய படம் ‘பாயும் ஒளி நீ எனக்கு’. இப்படத்தை கார்த்திக் சவுத்ரி என்பவர் இயக்கி உள்ளார். இவர், அமெரிக்காவில் திரைப்படம் தொடர்பான படிப்பை படித்து முடித்தவர். பிரபல தெலுங்கு நடிகர்கள் ஜூனியர் என்.டி.ஆர், ராம்சரண் ஆகிய இருவரின் படங்களிலும் பணிபுரிந்து இருக்கிறார். இப்படத்தில் விக்ரம் பிரபுவுக்கு ஜோடியாக வாணி போஜன் நடிக்கிறார்.

வாணி போஜன், விக்ரம் பிரபு
படத்தை பற்றி இயக்குனர் கூறியதாவது: “இது, அதிரடியான சண்டை காட்சிகள் நிறைந்த படம். கதாநாயகன் விக்ரம் பிரபு இதுவரை நடித்திராத ஒரு கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அவருடைய கதாபாத்திரம், ‘சஸ்பென்ஸ்’ ஆக வைக்கப்பட்டு இருக்கிறது. பாலுமகேந்திராவின் கூத்துப்பட்டறையில் பயிற்சி பெற்ற சுரேஷ் பார்கவ் ஒளிப்பதிவு செய்கிறார். மணிஷர்மாவின் மகன் மஹதி ஸ்வர சாகர், இசையமைப்பாளராக அறிமுகம் ஆவதாக அவர் தெரிவித்துள்ளார்.
டோனிசான் இயக்கத்தில் நிவாஸ் ஆதித்தன், நித்யஸ்ரீ நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கொடியன்’ படத்தின் முன்னோட்டம்.
இயக்குனர் டோனிசான் இயக்கத்தில் நேரு நகர் நந்து தயாரித்துள்ள படம் ‘கொடியன்’. இந்த படத்தில் நிவாஸ் ஆதித்தன் நாயகனாகவும், நித்யஸ்ரீ கதாநாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். யோக் ஜேப்பி வில்லன் வேடத்தில் வருகிறார்.
இந்த படத்திற்கு இசை கேபர் வாசுகி, பின்னணி இசை கிரிநந்த் - விஜய் கார்த்திகேயன் அமைத்திருக்கிறார்கள். ஒளிப்பதிவு மற்றும் கதை இயக்கம் செய்துள்ளார் டோனிசான். சக்ரவர்த்தி பிலிம் இண்டர்நேஷனல் நிறுவனம் தயாரித்துள்ளது.
கொடிய சம்பவங்களை நிகழ்த்துவதும் மனிதர்களே, மிருகங்களை விட கொடூரமாக மனித வாழ்வில் நடந்துகொண்டு மிருகங்களை கொடிய மிருகங்கள் என்று கூறும் மனிதர்கள் வாழும் பூமி இது.

ஆதித்தன், நித்யஸ்ரீ
நாகரீகம் வளர்ந்தாலும் மனிதனுக்குள் இருக்கும் கொடூரமனம் இன்னும் அதிகமான கொடூரமானதாகவே மாறிக்கொண்டு வருகிறது.
கொடியன் படமும் மனிதனுக்குள் இருக்கும் கொடிய மனிதத்தை பற்றிபேசும் படமாக உருவாக்கப்பட்டுள்ளது. கொடைக்கானல் மற்றும் அதனை சுற்றுயுள்ள பகுதிகளில் படமாக்கப்பட்ட இத்திரைப்படம் தற்போது சர்வதேச விருதுகளைப்பெற்று வருகிறது.
டி.ஜே.ஞானவேல் இயக்கத்தில் சூர்யா, பிரகாஷ் ராஜ், ரஜிஷா விஜயன் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘ஜெய் பீம்’ படத்தின் முன்னோட்டம்.
நடிகர் சூர்யாவின் 39-வது படம் ஜெய் பீம். இப்படத்தை கூட்டத்தில் ஒருவன் பட இயக்குனர் டி.ஜே.ஞானவேல் இயக்கி உள்ளார். நடிகர் சூர்யா கவுரவ வேடத்தில் நடித்துள்ள இப்படத்தில் பிரகாஷ் ராஜ், கர்ணன் பட நடிகை ரஜிஷா விஜயன், லிஜோமோல் ஜோஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார்கள். இப்படத்தை நடிகர் சூர்யா, தனது 2டி நிறுவனம் மூலம் தயாரித்துள்ளார்.

இருளர் பழங்குடியினரின் வாழ்க்கை மற்றும் பிரச்சனைகளை மையமாக வைத்து இப்படம் உருவாகி உள்ளது. நடிகர் சூர்யா, பழங்குடியின மக்களுக்காக வாதாடும் வழக்கறிஞர் வேடத்தில் நடித்துள்ளார். இப்படம் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய 3 மொழிகளில் வெளியாக உள்ளது. ஷான் ரோல்டன் இசையமைத்துள்ள இப்படத்திற்கு எஸ்.ஆர்.கதிர் ஒளிப்பதிவு செய்து உள்ளார்.
மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் குமரி.டிக்சன் நடிப்பில் உருவாகி இருக்கும் “கபளீஹரம்” படத்தின் முன்னோட்டம்.
தனிகட்சி மூலம் அரசியல் களம் வகித்த குமரி.டிக்சன் தற்பொழுது சினிமா துறையில் கால்பதித்திருக்கிறார். தற்பொழுது மகிழ் புரொடக்ஷன்ஸ் தயாரிப்பில் உருவான “கபளீஹரம்” எனும் சினிமாவில் ஹீரோவாக நடித்து முடித்துள்ளார். இந்த திரைப்படம் கிருஷ்ணகிரி, ஓசூர், பெங்களுர், சென்னை, மகாராஷ்ட்ரா மற்றும் கர்நாடகா ஆகிய இடங்களில் படப்பிடிப்பு நடந்து நிறைவடைந்துள்ளது.
இத்திரைப்படத்தில் முருகவேல் எனும் பெயரில் போலீஸ் இன்ஸ்பெக்டர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். இத்திரைப்படத்தில் மைம் கோபி, யோகிராம், மற்றும் பல புதுமுகங்கள் நடித்துள்ளனர். அண்மையில் டிரைவர், கிளீனர்களை கொடூரமாக கொலை செய்து லாரிகளை கடத்தும் வட இந்திய கும்பல் காவல் துறையினரால் கைது செய்யப்பட்ட உண்மை சம்பவத்தை மையமாக கொண்டு இத்திரைப்படம் கதையமைக்கப்பட்டுள்ளது.
குமரி.டிக்சன் என்னும் அவரது பெயரை தக்ஷன் விஜய் என்று மாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இத்திரைப்படம் நவம்பர் மாதம் திரைக்கு வரும் என்று தக்ஷன் விஜய் கூறினார்.
முரளி கார்த்திக் இயக்கத்தில் விஷ்ணு விஷால், ஐஸ்வர்யா ராஜேஷ் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘மோகன் தாஸ்’ படத்தின் முன்னோட்டம்.
விஷ்ணு விஷால் ஸ்டுடியோஸ் எனும் பட நிறுவனம் சார்பில் தயாராகி வரும் திரைப்படம் 'மோகன் தாஸ்'. 'களவு' என்ற படத்தைத் தொடர்ந்து இயக்குநர் முரளி கார்த்திக் இயக்கத்தில் தயாராகி வரும் 'மோகன்தாஸ்' படத்தில் நடிகர் விஷ்ணு விஷால் கதையின் நாயகனாக நடிக்கிறார்.
இவருடன் நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ், இந்திரஜித் சுகுமாரன், ஷாரீக் ஹாஸன், லல்லு, பிரகாஷ் ராகவன், பூர்ணிமா பாக்கியராஜ் உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். விக்னேஷ் ராஜகோபாலன் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த படத்திற்கு, கே.எஸ்.சுந்தரமூர்த்தி இசையமைக்கிறார். எடிட்டர் கிருபாகரன் படத்தொகுப்பு பணியை கவனிக்கிறார்.

விஷ்ணு விஷால்
சென்னை மற்றும் அதன் சுற்றுப்புறத்தில் நடைபெற்றுவந்த இப்படத்தின் படப்பிடிப்பு அண்மையில் முழுமையாக நிறைவடைந்தது. இதனைத் தொடர்ந்து படத்தின் தொகுப்பு மற்றும் பின்னணி பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அடுத்த ஆண்டு கோடையில் 'மோகன் தாஸ்' படத்தை வெளியிடுவதற்கான பணிகளில் படக்குழுவினர் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
சூரிய கிரண் இயக்கத்தில் வரலட்சுமி சரத்குமார் முதன்மை கதாபாத்திரத்தில் நடிக்கும் ‘அரசி’ படத்தின் முன்னோட்டம்.
வரலட்சுமி சரத்குமார் நடிப்பில் உருவாகும் புதிய படம் ‘அரசி’. தெலுங்கில் சத்யம், பிரம்மாஸ்திரம் போன்ற வெற்றி படங்களை இயக்கிய சூரிய கிரண், இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகிறார். ரசி மீடியா மேக்கர்ஸ், வி.வி பிலிம்ஸ் சார்பில் ஏ.ஆர்.கே.ராஜராஜா, ஆவடி சே.வரலட்சுமி ஆகியோர் தயாரிக்கிறார்கள்.

இப்படத்தில் நடிகை வரலட்சுமி சரத்குமாருடன் கார்த்திக்ராஜு சித்தார்த் ராய், சந்தானபாரதி, அபிஷேக், சாப்ளின் பாலு, அந்தோணி தாஸ், மீரா, கலக்கப்போவது யாரு சிவா, ஹரி ஆகியோர் நடிக்கின்றனர். செல்வா ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு சித்தார்த் விபின் இசையமைக்கிறார். பாடல்களை ஆவடி. சே.வரலட்சுமி, முருகானந்தம் ஆகியோர் எழுதுகின்றனர்.
அறிமுக இயக்குனர் குரு ராமானுஜம் இயக்கத்தில் வெற்றி, தியா மயூரி நடிப்பில் உருவாகி வரும் ‘ரெட் சேன்டில்’ படத்தின் முன்னோட்டம்.
வலுவான கதைக் களத்தோடு உருவாகும் படம் ‘ரெட் சேன்டில்’. இதில் நாயகனாக வெற்றி நடித்துள்ளார். இவர் ‘ஜீவி’, ‘ 8 தோட்டாக்கள்’ போன்ற படங்களில் நடித்தவர். நாயகியாக தியா மயூரி நடிக்கிறார். வில்லனாக ‘கே.ஜி.எஃப்’ புகழ் கருடா ராம் நடிக்கிறார்.
முக்கியமான வேடங்களில் எம்.எஸ்.பாஸ்கர், கணேஷ் வெங்கட்ராம், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், மாரிமுத்து, ‘கபாலி’ விஷ்வாந்த், மாரி விநோத், 'கர்ணன்' ஜானகி உட்பட ஏராளமான நட்சத்திரங்கள் நடிக்கிறார்கள்.
‘கழுகு’ சத்ய சிவாவிடம் பணியாற்றிய குரு ராமானுஜம் இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். சாம்.சி.எஸ் இசையமைத்துள்ளார். ஜெ.என்.சினிமா நிறுவனம் சார்பில் மிகப் பிரம்மாண்டமாக இந்தப் படத்தை தயாரித்துள்ளார் பார்த்தசாரதி.
படம் குறித்து இயக்குநர் குருராமானுஜம் கூறியதாவது, “இது ஆக்ஷன் கலந்த த்ரில்லர் ஜானரில் உருவாகும் படம். 2015-ல் நடந்த உண்மைச் சம்வத்தை மையமாக வைத்து இந்தப் படத்தை எடுத்துள்ளேன். அப்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அப்பாவி இளைஞர்களின் உயிர் போலீஸ் தோட்டக்களுக்கு இரையானது என்பது வரலாறு.
உண்மையில் இது போன்ற செயல்களில் ஈடுபடும் இளைஞர்கள் மிகவும் பின் தங்கிய குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். அவர்களின் வறுமையை பயன்படுத்தி மூளைச் சலவை செய்து இத்தொழிலில் ஈடுபட வைப்பதை மையமாக வைத்து திரைக்கதை அமைக்கப்பட்டு உள்ளது’ என்றார்.






