என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    • ஜிகர்தண்டா- 2 திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    • இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.

    'ஜிகர்தண்டா' படத்தின் வெற்றியைத் தொடர்ந்து 8 வருடங்களுக்கு பிறகு இந்த படத்தின் இரண்டாம் பாகம் உருவானது. தீபாவளியை முன்னிட்டு வெளியாகியிருந்த இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது.


    கார்த்திக் சுப்பராஜ் இயக்கியுள்ள இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா மற்றும் ராகவா லாரன்ஸ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இப்படம் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு பிரபலங்கள் பலரும் தங்களது வாழ்த்து மழையை பொழிந்து வருகின்றனர்.


    இந்நிலையில், இப்படத்தில் இடம்பெற்றுள்ள 'தீக்குச்சி' பாடலின் வீடியோ வெளியாகியுள்ளது. இந்த பாடலை ரசிகர்கள் சமூக வலைதளத்தில் வைரலாக்கி வருகின்றனர்.




    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரைத்துறையில் முதன் முதலாக ஆரம்பித்த சங்கம் இது.
    • இந்த சங்கத்தில் இரண்டு முறை தலைவராக இருக்கலாம் என்ற விதி உள்ளது.

    தமிழ் திரைப்பட இசையமைப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக தற்போது இசையமைப்பாளர் தீனா உள்ளார். இந்த சங்கத்தின் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. இரண்டு முறை தலைவராக இருந்த தீனா மூன்றாவது முறையும் தலைவர் பதவிக்கு போட்டியிடவுள்ளார். இது குறித்து தீனாவிடம் இளையராஜா பேசியுள்ள ஆடியோ வைரலாகியுள்ளது.

    அந்த ஆடியோவில் "திரைத்துறையில் முதன் முதலாக ஆரம்பித்த சங்கம் இது. இந்த இசையமைப்பாளர்கள் சங்கத்தை ஆரம்பித்தது எம்.பி.ஸ்ரீனிவாசன். இந்த சங்கத்தில் இரண்டு முறை தலைவராக இருக்கலாம் என்ற விதி உள்ளது. நீ ஏற்கெனவே இரண்டு முறை தலைவராக இருந்து விட்டாய்.

    மூன்றாவது முறையாகவும் ஏன் போட்டியிடுகிறாய்? அடுத்தத் தலைமுறைக்கு வாய்ப்புக் கொடுக்க வேண்டாமா? இந்த சங்கத்தில் தற்போது முறைகேடுகள் நடப்பதாகச் சொல்கிறார்கள். அதற்குள் நான் போக விரும்பவில்லை. ஆனால், அவர்கள் முன்வைக்கும் கோரிக்கையை ஒரு தலைவராக நீ ஏற்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால், இதைச் சொல்கிறேன். நீ இரண்டு முறை தலைவராக இருந்து பல நல்ல விஷயங்களை செய்திருக்கிறாய். அந்த மனநிறைவோடு தலைவர் பதவியை விட்டுக் கொடுக்க வேண்டும்" என அவர் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.

    இளையராஜாவின் இந்த ஆடியோவிற்கு இசையமைப்பாளர் தீனா விளக்கம் கொடுத்துள்ளார். அதில், "1960-ம் ஆண்டு எம்.பி.ஸ்ரீனிவாசன் போட்ட உத்தரவு இது என்று அண்ணா சொல்கிறார். சங்க விதிமுறைகள் கால மாற்றத்திற்கேற்றபடி மாறும். அதன்படி, ஒருவர் எத்தனை முறை வேண்டுமானாலும் தேர்தலில் நிற்கலாம். இளையராஜாவிடம் யாரோ தவறாக சொல்லி இருக்கிறார்கள். அவரை நேரில் பார்த்து இதுகுறித்து புரிய வைக்கப் போகிறேன். தேர்தல் நிச்சயம் நடக்கும்" என தெரிவித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • கவுதம் மேனன் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'துருவ நட்சத்திரம்'.
    • இப்படம் 24-ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாகவுள்ளது.

    விக்ரம் நடிப்பில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட படம் 'துருவ நட்சத்திரம்'. இந்த படத்தை கவுதம் மேனன் இயக்கியுள்ளார். கதாநாயகியாக ரீத்துவர்மா நடித்துள்ளார். இவர்களுடன் பார்த்திபன், ராதிகா சரத்குமார், சிம்ரன் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.


    இப்படத்தின் பணிகள் 2017-ஆம் ஆண்டிலேயே தொடங்கப்பட்டு 2018-ஆம் ஆண்டில் திரைக்கு கொண்டு வர திட்டமிட்டிருந்த நிலையில், சில காரணங்களால் தள்ளிப்போனது. இதையடுத்து சமீபத்தில் இப்படம் நவம்பர் 24-ஆம் தேதி ரிலீஸாக உள்ளதாக படக்குழு அறிவித்திருந்தது.


    இந்நிலையில், 'துருவ நட்சத்திரம்' திரைப்படத்தை இயக்குனர் லிங்குசாமி பார்த்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "மும்பையில் 'துருவ நட்சத்திரம்' படத்தின் பைனல் கட்டை பார்த்தேன். மிகவும் சிறப்பாக இருந்தது. விஷுவலாக பார்க்கும் பொழுது விக்ரம் அருமையாக உள்ளார். விநாயக் கவனத்தை ஈர்க்கிறார். அனைவரும் திறமையாக நடித்துள்ளனர். படக்குழுவிற்கு வாழ்த்துகள்" என்று பதிவிட்டுள்ளார்.


    • மன்சூர் அலிகான், திரிஷா குறித்து மிகவும் சர்ச்சனையான கருத்துக்களை கூறினார்.
    • மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.

    லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான், திரிஷா குறித்து மிகவும் சர்ச்சனையான கருத்துக்களை கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. நடிகைகள் திரிஷா, மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

    இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டிப்பாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நடிகை த்ரிஷா புகார் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியுமாறு டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகானுக்கு தெலுங்கு நடிகர் சிரஞ்சீவி கண்டனம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் தனது சமூக வலைதளத்தில், "நடிகை திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசிய கண்டிக்கத்தக்க கருத்துகள் என் கவனத்திற்கு வந்தது. அவரின் இந்த மரியாதை இல்லாத அருவருக்கத்தக்கப் பேச்சு நடிகைக்கு மட்டுமல்ல எந்த பெண்ணுக்கும் நேரக்கூடாது.

    இதனை கடுமையான வார்த்தைகள் கொண்டு கண்டிக்க வேண்டும். இதுபோன்ற வக்கிரமான வார்த்தைகள் பெண்களை துவண்டு போகச் செய்திடும். திரிஷாவுக்கு மட்டுமல்ல இது போன்ற மோசமான கருத்துகளை எதிர்கொள்ளும் பெண்களுக்கும் ஆதரவாக உடன் நிற்கிறேன்" என குறிப்பிட்டுள்ளார். இந்த பதிவை திரிஷா ரீ டுவிட் செய்துள்ளார்.



    • மன்சூர் அலிகானின் வீடு நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ளது.
    • வழக்கின் முக்கிய ஆவணங்களாக மன்சூர் அலிகான் பேசியுள்ள ஆடியோக்களை சேர்க்க உள்ளனர்.

    சென்னை:

    நடிகை திரிஷா பற்றி வில்லன் நடிகர் மன்சூர் அலிகான் தெரிவித்த கருத்துக்கள் கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டன குரல்கள் எழுந்த நிலையில் தேசிய மகளிர் ஆணையம் மன்சூர் அலிகான் மீது உரிய நடவடிக்கை எடுக்க போலீஸ் டி.ஜி.பி.க்கு உத்தரவிட்டது.

    இதைத் தொடர்ந்து சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப் ராய் ரத்தோர் மன்சூர் அலிகான் மீது தகுந்த சட்ட பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க அறிவுறுத்தினார்.

    இதைத் தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார் நேற்று பிற்பகல் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். 354-ஏ, ஐ.பி.சி. (பெண்களின் உணர்வுக்கு குந்தகம் விளைவித்தல்), 509 ஐ.பி.சி. (பெண்களை இழிவுபடுத்தி பேசுவது) ஆகிய 2 சட்ட பிரிவுகளின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள வழக்கு தொடர்பாக இன்ஸ்பெக்டர் தனலட்சுமி விசாரணை நடத்தி வருகிறார்.

    இந்த 2 சட்டப் பிரிவுகளும் 2 ஆண்டுகள் வரையில் சிறை தண்டனை அனுபவிக்கக் கூடிய சட்டப் பிரிவுகளாகும். இந்த வழக்கில் மன்சூர் அலிகான் மீது அடுத்தகட்ட நடவடிக்கை எடுக்க போலீஸ் முடிவு செய்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் கூறும்போது, 'மன்சூர் அலிகானிடம் விசாரணை நடத்துவதற்காக அவருக்கு முறைப்படி சம்மன் அனுப்ப உள்ளோம். இந்த சம்மன் இன்று அனுப்பப்படும். மன்சூர் அலிகானை போலீஸ் நிலையத்துக்கு நேரில் வரவழைத்து விசாரணை நடத்த முடிவு செய்துள்ளோம். இதன் பின்னர்தான் அவர் மீது கைது நடவடிக்கை பாயுமா? என்பது தெரிய வரும் என்று தெரிவித்தனர்.

    மன்சூர் அலிகானின் வீடு நுங்கம்பாக்கம் பகுதியில் உள்ளது. அவரது வீடு இருக்கும் எல்லையில் உள்ள ஆயிரம் விளக்கு மகளிர் போலீசார்தான் திரிஷா மீதான அவதூறு கருத்துக்கள் பற்றி விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    திரிஷா பற்றி மன்சூர் அலிகான் பேட்டி அளித்த வீடியோ மற்றும் அதன் பிறகு அவர் பேசிய வீடியோக்கள் ஆகியவைகளை இந்த வழக்கில் முக்கிய ஆதாரங்களாக போலீசார் கருதுகிறார்கள். வழக்கின் முக்கிய ஆவணங்களாக மன்சூர் அலிகான் பேசியுள்ள இந்த ஆடியோக்களை சேர்க்க உள்ளனர்.

    இதற்காக அவர் பேசிய வீடியோக்களையும் போலீசார் சேகரித்து வைத்துள்ளனர். வழக்கு விசாரணையின் போது இந்த வீடியோக்களை கோர்ட்டில் தாக்கல் செய்யவும் போலீசார் முடிவு செய்துள்ளனர்.

    மன்சூர் அலிகானுக்கு எதிராக நடிகர் சங்கம் ஏற்கனவே கருத்து தெரிவித்துள்ள நிலையில், போலீசார் அவர் மீது வழக்கு போட்டிருப்பதால் அவர் மீதான பிடி இறுகியுள்ளது.

    • திரிஷா குறித்து மன்சூர் அலிகான் பேசியதற்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது.
    • இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்தது.

    சென்னை:

    லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான் திரிஷா குறித்து மிகவும் சர்ச்சனையான கருத்துக்களை கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. நடிகைகள் திரிஷா, மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

    இந்த விவகாரத்தில் தேசிய மகளிர் ஆணையம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்த நிலையில், தேசிய மகளிர் ஆணைய உறுப்பினர் குஷ்பு கண்டிப்பாக இந்த விவகாரத்தில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில், நடிகர் மன்சூர் அலிகான் மீது 2 பிரிவுகளில் நுங்கம்பாக்கம் அனைத்து மகளிர் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    நடிகை த்ரிஷா புகார் குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்த விவகாரம் தொடர்பாக வழக்கு பதியுமாறு டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் அறிவுறுத்திய நிலையில் காவல்துறை நடவடிக்கை எடுத்துள்ளது.

    • சித்தா திரைப்படத்தை இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்தது.
    • சித்தா படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார்.

    நடிகர் சித்தார்த் நடிப்பில் கடந்த செப்டம்பர் மாதம் வெளியான திரைப்படம் சித்தா. பண்ணையாரும் பத்மினியும், சேதுபதி உள்ளிட்ட படங்களை இயக்கிய அருண்குமார் இந்த படத்தை இயக்கி இருந்தார். இடாகி எண்டர்டெயிண்மெண்ட் நிறுவனம் தயாரித்த இந்த படத்திற்கு திபு தாமஸ் இசையமைத்து இருந்தார்.

    இந்த படத்திற்கு விமர்சன ரீதியில் நல்ல வரவேற்பு கிடைத்ததோடு, பிரபலங்கள் பலரும் இந்த படத்திற்கு வாழ்த்து தெரிவித்து இருந்தனர். இந்த நிலையில், சித்தா படத்தின் ஓ.டி.டி. ரிலீஸ் தேதி குறித்த அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டு இருக்கிறது.

    அதன்படி சித்தா திரைப்படம் டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் ஓ.டி.டி. தளத்தில் நவம்பர் 28-ம் தேதி வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டு இருக்கிறது. மேலும் இதற்கான போஸ்டரும் வெளியிடப்பட்டு இருக்கிறது. 

    • லியோ படத்தில் திரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாக உருவெடுத்தது.
    • அவரது கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

    சென்னை:

    லியோ படத்தில் திரிஷாவுடன் நடித்தது குறித்து மன்சூர் அலிகான் பேசியது சர்ச்சையாக உருவெடுத்துள்ளது. மன்சூர் அலிகானின் இந்தக் கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.

    இதற்கிடையே, இன்று செய்தியாளர்களைச் சந்தித்த மன்சூர் அலிகான், நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளது என தெரிவித்தார்.

    இந்நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக நடிகை விஜயலட்சுமி இன்று ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது:

    திரிஷாவை பற்றி மன்சூர் அலிகான் சொன்ன ஸ்டேட்மெண்ட்டு, தமிழிசை செளந்தரராஜன் அம்மா வரைக்கும் போயிருச்சி. அது மட்டுமா.. குஷ்பூ மேடம் உடனே, மகளிர் ஆணையத்திடம் சொல்லி ஆக்சன் எடுக்க வைப்பேனு சொல்றாங்க. அடேங்கப்பா.. பெண்களுக்கு எவ்வளவு பாதுகாப்பா இருக்காங்கப்பா.

    ஆனால் ஒரு விஷயம் எனக்கு புரியல. ஆகஸ்டில் நானும் வீரலட்சுமியும் வந்து சீமான் மேல கம்ப்ளெய்ன்ட் பண்ணோம் இல்லையா.. அப்போ சீமானும், நாம் தமிழர் கட்சிக்காரங்களும் என்னையும், வீரலட்சுமியையும் ரொம்ப கொச்சையா பேசுனாங்க. ரொம்ப ஆபாசமா பேசுனாங்க.

    இதனால எனக்கு மன அழுத்தம் அதிகமாகி குஷ்பு மேடமுக்கு வீடியோ போட்டே சீமான் மீது நடவடிக்கை எடுக்க சொன்னேன். ஆனால் மேடம் கண்டுக்காமயே விட்டுட்டாங்க. ஏன்? ஒருவேளை, பா.ஜ.க.வுக்கு ஒரு பிரச்சினைனா சீமான் வந்து குரல் கொடுக்குறாரே.. அந்த நன்றியா இருக்குமோ என தெரிவித்துள்ளார்.

    • கியூன் கரு பிக்சர் கேர்ஸ் ஆன் தம் 23 என்ற இசை ஆல்பத்தையும் இயக்கியுள்ளார்.
    • சினிமா நடிப்பு மட்டுமின்றி உடல் தகுதி விஷயத்திலும் அக்கறை கொண்டவர் திஷா பதானி.

    கிரிக்கெட் வீரர் எம்.எஸ்.தோனியின் வாழ்க்கை வரலாற்றை கொண்டு உருவான படம் எம்.எஸ்.தோனி-தி அன்டோல்ட் ஸ்டோரி. இந்த படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் திஷா பதானி. தொடர்ந்து இந்தி திரையுலகில் பல படங்களில் நடித்து முன்னணி கதாநாயகியாக திகழ்ந்து வருகிறார்.

    சிறுத்தை சிவா இயக்கத்தில், சூர்யா நடிப்பில் உருவாகும் 'கங்குவா' படத்தில் கதாநாயகியாக நடித்து வருகிறார் திஷா பதானி. கமல், அமிதாப் பச்சன், பிரபாஸ் நடிக்கும் கல்கி 2829 ஏடி படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார்.

    கியூன் கரு பிக்சர் கேர்ஸ் ஆன் தம் 23 என்ற இசை ஆல்பத்தையும் இயக்கியுள்ளார். சினிமா நடிப்பு மட்டுமின்றி உடல் தகுதி விஷயத்திலும் அக்கறை கொண்டவர் திஷா பதானி. உடலை கட்டுக்கோப்பாக வைத்து கொள்ள தீவிர உடற்பயிற்சி என தனியாக நேரத்தை ஒதுக்கி பயிற்சி செய்வதை வழக்கமாக கொண்டுள்ளார்.

    இது மட்டுமின்றி இன்ஸ்டாகிராமில் அதிக ஆர்வம் கொண்ட திஷா பதானி, தனது புகைப்படங்கள், வீடியோக்களை அடிக்கடி வலைதளங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வகையில் தற்போது வெண்ணிற ஆடையில் கவர்ச்சியாக உடையணிந்து புகைப்படங்களை வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்களுக்கு 8 லட்சம் பார்வையாளர்கள் லைக்குகளையும் கொடுத்து வருகின்றனர்.

    • படத்தை அறன் எழுதி, இயக்க, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார்.
    • டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு.

    இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனரும், பல விருதுகளை வென்ற குறும்படங்களை இயக்கியவருமான அறன் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்குகிறார். கே.பிரதீப் உடன் சேர்ந்து இப்படத்தை தயாரிப்பதுடன் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் அறன். ஜிகிரி தோஸ்த் என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை எஸ்.பி.அர்ஜூன் மற்றும் ஹக்கா ஜெ இணைந்து தயாரித்துள்ளனர்.

    அறன் மட்டுமின்றி பிக் பாஸ்-இல் புகழ் பெற்ற ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.ஜே.ஆஷிக், பவித்ர லக்ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா, லேட் ஆர்.என்.ஆர். மனோகர், சரத், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

    படத்தை அறன் எழுதி, இயக்க, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அருள் மொழி வர்மன், ஒளிப்பதிவு ஆர்.வி. சரண், சண்டை பயிற்சி மகேஷ் மேத்யூ, நடனம் தினா, ஆடியோகிராஃபி பணிகளை சரவண குமார், டி.ஐ. மற்றும் சி.ஜி. பணிகளை ஏ.கே. பிரசாத் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தின் பாடல்களை சுதன் பாலா எழுதியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

    • பிக்பாஸ் சிபி நடிக்கும் புதிய படத்தின் படப்பிடிப்பு துவக்கம்.
    • இந்த படத்திற்கு ஜீவி பட வசனகர்த்தா பாபு தமிழ் வசனம் எழுதியுள்ளார்.

    கிரவுன் பிக்சர்ஸ் எஸ்.எம். இப்ராகிம் தயாரிப்பில் உருவாகும் புதிய படத்தை அறிமுக இயக்குனர் பிரகாஷ் கிருஷ்ணன் இயக்க இருக்கிறார்.

    வஞ்சகர் உலகம், மாஸ்டர் போன்ற படங்களில் நடித்த சிபி இந்த படத்தில் நாயகனாக நடிக்கிறார். இவருடன் குஷிதா கல்லப்பு, பருத்திவீரன் சரவணன், ஜெயபிரகாஷ் மற்றும் நிரோஷா ஆகியோர் இந்த படத்தின் முன்னணி கதாபாத்திரங்களாக நடித்துள்ளனர்.

    இந்த படத்திற்கு ஜீவி பட வசனகர்த்தா பாபு தமிழ் வசனம் எழுத, ஒளிப்பதிவு கோபி கிருஷ்ணன், படத்தொகுப்பு பிரதீப், இசையமைப்பாளர் கேபர் வாசுகி மேற்கொண்டுள்ளனர். இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தின் படப்பிடிப்பு நேற்று (நவம்பர் 20) சென்னையில் துவங்கியது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • திரிஷா குறித்து நான் தவறாக பேசவே இல்லை.
    • கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும்.

    லியோ படத்தில் நடித்தது குறித்து பேசிய மன்சூர் அலிகான் திரிஷா குறித்து மிகவும் சர்ச்சனையான கருத்துக்களை கூறினார். மன்சூர் அலிகானின் இந்த கருத்துக்கு கண்டனங்கள் வலுத்து வருகிறது. நடிகைகள் திரிஷா, மாளவிகா மோகனன், பாடகி சின்மயி, இயக்குநர் லோகேஷ் கனகராஜ், கார்த்திக் சுப்பராஜ் உள்ளிட்டோர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில் தென்னிந்திய நடிகர் சங்கமும் கண்டனம் தெரிவித்தது.


    இதுகுறித்து தென்னிந்திய நடிகர் சங்கம் வெளியிட்ட அறிக்கையில், சக நடிகர்களைப் பற்றி நகைச்சுவை என்ற பெயரில் தரக்குறைவாக பேசிய மன்சூர் அலிகானை தென்னிந்தியா நடிகர் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது. எந்த ஊடகம் முன்பு அவர் பேசினாரோ அந்த ஊடகம் முன்பு உண்மை மனதுடன் பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டுகிறோம். மேலும் தன் தவறு உணர்ந்து, மனம் வருந்தி, உண்மையாக பொது மன்னிப்பு கூறும் வரை அவரை சங்கத்திலிருந்து ஏன் தற்காலிகமாக நீக்கம் செய்யக்கூடாது என கூறியிருந்தது.

    இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த மன்சூர் அலிகான், திரிஷாவை நான் பாராட்டி பேசியதற்காக அவர் எனக்கு நன்றிதான் சொல்ல வேண்டும். திரிஷா குறித்து நான் தவறாக பேசவே இல்லை. நான் மன்னிப்பு கேட்கக்கூடியவனா? எரிமலை குமுறினால் எல்லோரும் ஓடிப்போய் விடுவீர்கள். நடிகர் சங்கம் இமாலய தவறை செய்துள்ளது. கண்டன அறிக்கையை நடிகர் சங்கம் வாபஸ் பெற வேண்டும். என்னை கருப்பு ஆடாக காட்டி விட்டு நடிகர் சங்கம் நல்ல பேர் எடுக்க முயற்சி செய்கிறது என கூறினார்.

    ×