ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகும் ஜிகிரி தோஸ்த்

படத்தை அறன் எழுதி, இயக்க, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழு முடிவு.
ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி நடிப்பில் ரிலீசுக்கு தயாராகும் ஜிகிரி தோஸ்த்
Published on

இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனர் ஷங்கரின் முன்னாள் உதவி இயக்குனரும், பல விருதுகளை வென்ற குறும்படங்களை இயக்கியவருமான அறன் தமிழ் சினிமாவில் இயக்குனராக களமிறங்குகிறார். கே.பிரதீப் உடன் சேர்ந்து இப்படத்தை தயாரிப்பதுடன் படத்தின் முக்கியமான கதாபாத்திரத்திலும் நடிக்கிறார் அறன். ஜிகிரி தோஸ்த் என்ற தலைப்பில் உருவாகி இருக்கும் இந்த படத்தை எஸ்.பி.அர்ஜூன் மற்றும் ஹக்கா ஜெ இணைந்து தயாரித்துள்ளனர்.

அறன் மட்டுமின்றி பிக் பாஸ்-இல் புகழ் பெற்ற ஷாரிக் ஹாசன், அம்மு அபிராமி ஆகியோரும் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். இவர்களுடன் வி.ஜே.ஆஷிக், பவித்ர லக்ஷ்மி, அனுபமா குமார், கௌதம் சுந்தரராஜன், சிவம், ஜாங்கிரி மதுமிதா, லேட் ஆர்.என்.ஆர். மனோகர், சரத், பப்ளிக் ஸ்டார் துரை சுதாகர் ஆகியோரும் முன்னணி கதாபாத்திரங்களை ஏற்று நடித்துள்ளனர்.

படத்தை அறன் எழுதி, இயக்க, அஸ்வின் விநாயகமூர்த்தி இசையமைக்கிறார். படத்தொகுப்பு பணிகளை அருள் மொழி வர்மன், ஒளிப்பதிவு ஆர்.வி. சரண், சண்டை பயிற்சி மகேஷ் மேத்யூ, நடனம் தினா, ஆடியோகிராஃபி பணிகளை சரவண குமார், டி.ஐ. மற்றும் சி.ஜி. பணிகளை ஏ.கே. பிரசாத் ஆகியோர் மேற்கொண்டுள்ளனர். இந்த படத்தின் பாடல்களை சுதன் பாலா எழுதியிருக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்புகள் முடிந்து தற்போது பின்னணி வேலைகள் நடைபெற்று வருகிறது. டிசம்பர் மாதம் இப்படத்தை வெளியிட படக்குழுவினர் முடிவு செய்துள்ளனர்.

Related Stories

No stories found.
X

Maalai Malar
www.maalaimalar.com