என் மலர்
சினிமா செய்திகள்
2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருதுகளை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி சென்னையில் நடந்த விழாவில் வழங்கி இருக்கிறார்.
2011 முதல் 2018 வரையிலான கலைமாமணி விருது பெறும் கலைஞர்களின் பெயர் பட்டியலை தமிழக அரசு சமீபத்தில் வெளியிட்டது. தற்போது அவர்களுக்கு விருது வழங்கும் விழா சென்னையில் நடைபெற்றது. இதில் பட்டியலில் இடம் பெற்றவர்களுக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி விருதுகளை வழங்கி கவுரவப்படுத்தினார்.
சினிமாத்துறையில், ஆர்.ராஜசேகர், பாண்டு, குட்டி பத்மினி, பிரசன்னா, நளினி, வேல்முருகன், கார்த்தி, சரவணன், பொன் வண்ணன் உள்ளிட்ட பலருக்கு வழங்கப்பட்டுள்ளது.

இவ்விழாவில் மூத்த கலைஞர்களுக்கான உதவித்தொகை ரூ.2000-லிருந்து, ரூ.3000-மாக உயர்த்தி வழங்கப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்திருக்கிறார்.
கன்னிராசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய நடிகர் விமல், முதல் முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் என்று கூறியிருக்கிறார்.
விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

இதில் விமல் பேசும்போது, ‘இந்தப்படம் மிக அருமையாக வந்திருக்கு. யோகிபாபு, ரோபோசங்கர், காளிவெங்கட் எல்லோர் கூடவும் எனக்கு காம்பினேஷன் சீன்ஸ் இருக்கு. படம் ரொம்ப ஜாலியாக இருக்கும். இயக்குநர் முத்துக்குமரன் எப்போதும் பத்து பெண்களோடு தான் இருப்பார். அதனால் அவர் அடுத்த வருடம் கண்டிப்பாக கல்யாணம் செய்துவிடுவார். மேலும் அடுத்தடுத்து பல படங்களில் நடித்து வருகிறேன். பல படங்களில் பல கதாநாயகிகளுடன் நடித்துள்ளேன். ஆனால், இந்த படத்தில் முதல்முறையாக ஒரு ஆம்பளயோட நடித்திருக்கிறேன் என்று வரலட்சுமியை பற்றி கலகலப்பாக கூறினார்.
ஜனநாதன் இயக்கத்தில் உருவாகி வரும் ‘லாபம்’ படத்தில் ஸ்ருதிஹாசனை தொடர்ந்து, பிரபல நடிகை ஒருவர் விஜய் சேதுபதியுடன் இணைந்து நடித்து வருகிறார்.
எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய்சேதுபதி, ஸ்ருதிஹாசன் நடித்து வரும் படம் ‘லாபம்’. இப்படத்தை விஜய்சேதுபதி புரொடக்ஷனும் 7 சிஎஸ் என்டெர்டெயின்மென்ட் நிறுவனமும் இணைந்து தயாரிக்கின்றன. மிகப்பெரிய பட்ஜெட்டில் உருவாகும் இப்படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்கிறார். டி.இமான் இசை அமைக்கிறார்.
இவர்களுடன் இப்படத்தில் தற்போது சாய் தன்ஷிகா இணைந்துள்ளார். இப்படத்தில் இணைந்தது குறித்து தன்ஷிகா கூறும்போது, ‘ஜனநாதன் சாரின் படங்கள் வெறும் கமர்சியல் அம்சத்தோடு நின்று விடுவதில்லை. அதைத் தாண்டிய சமூக சிந்தனை அவரது படத்தில் இருக்கும். லாபமும் அப்படியான படம் தான். விவசாயிகளின் வாழ்நிலையை பேசுவதோடு வெள்ளையர்கள் காலத்தில் இருந்து நம் விவசாய மக்களின் உழைப்பு எப்படியெல்லாம் சுரண்டப்படுகிறது என்பதை படம் அழுத்தமாகப் பேசுகிறது.

அன்று விவசாயிகளுக்கு எதிராகப் போடப்பட்ட விதை இன்று வரையிலும் எப்படி வளர்ந்துள்ளது என்பதை மிக அற்புதமாக படம் பேசும். இப்படத்தில் நான் நடிக்க வேண்டும் என்று ஜனநாதன் சார் சொல்லவும், கதையே சொல்ல வேண்டாம் சார் என்றேன். ஏனென்றால் அவர் மீது எனக்கு அத்தகைய நம்பிக்கை. பேராண்மை படத்தில் எப்படி ஒரு மாணவி போல அவரிடம் கற்றுக்கொண்டேனோ அதேபோல் இந்த லாபம் படத்திலும் கற்று வருகிறேன். இப்படத்தில் விஜய்சேதுபதியை மக்களுக்கு ரொம்ப பிடிக்கும்’ என்றார்.
கன்னிராசி படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய வரலட்சுமி சரத்குமார், நான் திருமணம் செய்து கொள்ள மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
விமல் நடிப்பில் தற்போது உருவாகி இருக்கும் படம் ‘கன்னி ராசி’. இதில் இவருக்கு ஜோடியாக வரலட்சுமி சரத்குமார் நடித்துள்ளார். இவர்களுடன் பாண்டியராஜன், ரோபோ சங்கர், யோகி பாபு மற்றும் பலர் நடித்துள்ளார்கள். கிங் மூவி மேக்கர்ஸ் ஷமீம் இப்ராகிம் தயாரித்திருக்கும் இப்படத்தை எஸ்.முத்துக்குமரன் இயக்கியிருக்கிறார்.
இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில், தயாரிப்பாளர் ஷமீம் இப்ராகிம், இயக்குனர் எஸ்.முத்துக்குமரன், நடிகர் விமல், நடிகை வரலட்சுமி சரத்குமார், நடிகர் ரோபோ சங்கர், இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவாளர் எஸ்.செல்வகுமார், பாடலாசிரியர் யுகபாரதி உள்ளிட்ட படக்குழுவினர் கலந்துக் கொண்டனர்.

வரலட்சுமி பேசும்போது, ‘பொதுவாகவே புது இயக்குநர்கள் என்றால் எனக்குப் பிடிக்கும். ஸ்கிரிப்ட் படிக்கும் போதே விழுந்து விழுந்து சிரித்தேன். இந்த டீம் செம்ம எனர்ஜியாக இருந்தது. படமும் அதே எனர்ஜியாக இருக்கும். இந்த படம் காதல் திருமணத்தை மையமாக வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. நிஜ வாழ்க்கையில் எனக்கு திருமணத்தில் விருப்பம் இல்லை. நான் யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டேன். நான் இவ்வளவு நடிகர்களுடன் சேர்ந்து நடித்தது இல்லை. பாண்டியராஜன் சார், யோகிபாபு, ரோபோ சங்கர் என பலருடன் சேர்ந்து ஜாலியாக நடித்தேன். விமல் சிறந்த நடிகர். அவருடன் பணியாற்றியது புது அனுபவமாக இருந்தது. இப்படம் முழுக்க முழுக்க குடும்பங்கள் கொண்டாடும் ஒரு ஜாலியான படம்’ என்றார்.
நேர்கொண்ட பார்வை படத்தில் இடம்பெற்றுள்ள அகலாதே பாடலின் வீடியோ யூடியூப்பில் வெளியாகி வைரலானது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’நேர்கொண்ட பார்வை’. இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அதுமட்டுமின்றி வசூலிலும் சாதனை படைத்து வருகிறது.
‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப்படத்தில் தமிழ் ரசிகர்களுக்கு ஏற்றவாறு ஒருசில விஷயங்களை சேர்த்துள்ளார் இயக்குனர் வினோத். அதில் ஒன்று தான் 'அகலாதே' பாடல். இப்பாடலை யுவன் ஷங்கர் ராஜா பாடியுள்ளார். இப்படத்தில் அஜித்- வித்யாபாலன் கணவன், மனைவியாக நடித்துள்ளனர். அவர்களுக்கு இடையேயான காதலை வெளிப்படுத்தும் வகையில் இப்பாடல் இடம்பெற்றுள்ளது.

இந்நிலையில் அகலாதே பாடலின் வீடியோவை படக்குழு இன்று யூடியூப்பில் வெளியிட்டது. இப்பாடல் வெளியான சில நிமிடங்களில் இணையத்தில் வைரலானது.
தளபதி 64 படத்தில் ராஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில், அந்த வாய்ப்பு நழுவியதால் அவர் ஏமாற்றம் அடைந்துள்ளார்.
கன்னட படமான கிரிக்பார்ட்டி மூலம் நடிகையானவர் கர்நாடகாவை சேர்ந்த ராஷ்மிகா மந்தனா. அவர் தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுடன் சேர்ந்து நடித்த கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் ஆகிய படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. தெலுங்கு திரையுலகில் வேகமாக வளர்ந்து வருகிறார் ராஷ்மிகா.
பாக்யராஜ் கண்ணன் இயக்கத்தில் கார்த்தி நடித்து வரும் படம் மூலம் தமிழுக்கும் வந்துவிட்டார் ராஷ்மிகா. பிகில் படத்தை அடுத்து விஜய் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்கும் தளபதி 64 படத்தில் அவருக்கு ஜோடியாக ராஷ்மிகா மந்தனா நடிக்கப் போவதாக கூறப்பட்டது. இது குறித்து அவர் கூறியதாவது: நான் விஜய்யுடன் சேர்ந்து நடிக்கிறேனா என பலரும் என்னிடம் கேட்கிறார்கள்.

எனக்கும் விஜய்யுடன் சேர்ந்து நடிக்க ஆசையாகத் தான் உள்ளது. அந்த நாளை எதிர்பார்த்து காத்திருக்கிறேன் என்றார். தளபதி 64 படத்தில் ராஷ்மிகா நடிக்கக்கூடும் என்று கூறப்பட்ட நிலையில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானியிடம் பேச்சுவார்த்தை நடந்துள்ளது. பாலிவுட்டில் பிசியாக இருக்கும் கியாரா, விஜய் படத்திற்காக தேதிகள் அட்ஜஸ்ட் செய்வதாக தெரிவித்துள்ளார். இது ராஷ்மிகாவுக்கு ஏமாற்றத்தை அளித்துள்ளது.
சமுத்திரகனி அடுத்ததாக நடிக்கும் படத்தில், பிரபல நடிகருக்கு வில்லனாக நடித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
‘நா பேரு சூர்யா நா இல்லு இந்தியா’ படத்துக்குப் பிறகு, எந்தப் படத்திலும் கமிட்டாகாமல் இருந்தார், அல்லு அர்ஜுன். தொடர்ந்து அவர் நடித்த படங்களுக்கு சரியான வரவேற்பு கிடைக்காததால் கதைகள் தேர்ந்தெடுப்பதில் அதிக கவனம் செலுத்திவந்தார்.
இப்போது திரிவிக்ரம் ஸ்ரீநிவாஸ் இயக்கத்தில் நடித்துவருகிறார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பூஜா ஹெக்டே, நிவேதா பெத்துராஜ் ஆகியோர் நடிக்கின்றனர். தவிர, ஜெயராம், தபு, பிரம்மானந்தம் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துவரும் இப்படத்துக்கு, தமன் இசையமைக்கிறார்.

இந்த நிலையில், படத்தின் வில்லனாக சமுத்திரக்கனி ஒப்பந்தமாகி நடித்துவருகிறார். இதன் படப்பிடிப்பு கடந்த ஏப்ரல் மாதம் தொடங்கி நடைபெற்று வருகிறது. சமுத்திரக்கனி நடித்துள்ள அடுத்த சாட்டை திரைப்படம் வருகிற செப்டம்பர் 5-ந் தேதி ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
தனுஷ், சாய் பல்லவி நடிப்பில் வெளியான மாரி 2 படத்தில் இடம் பெற்ற ரவுடி பேபி பாடல் யூடியூப்பில் புதிய சாதனை படைத்திருக்கிறது.
தனுஷ், சாய்பல்லவி நடிப்பில் கடந்த ஆண்டு இறுதியில் வெளியான படம் ‘மாரி 2’. யுவன் சங்கர் ராஜா இசையில் வெளியான இந்த படத்தின் பாடல்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் ரவுடி பேபி என்ற பாடலை தனுஷ் எழுதி பாடி இருந்தார். இந்த பாடலுக்கு பிரபு தேவா நடனம் அமைத்திருந்தார். இந்த பாடலில் தனுஷ், சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களை கவரும் வண்ணம் அமைக்கப்பட்டிருந்தது.
‘மாரி 2’ படம் வெளியான சில நாட்களிலேயே ரவுடி பேபி பாடலின் வீடியோவை ‘யூடியூப்’பில் படக்குழுவினர் வெளியிட்டனர். இணையத்தில் வைரலான இந்த பாடல் சர்வதேச பில்போர்ட் இசைப்பட்டியலிலும் இடம்பெற்று புதிய சாதனை படைத்தது. இப்பாடல் வெளியானது முதல் பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறது.

கடந்த ஜூன் மாதம் வரை 500 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்த இப்பாடல், தற்போது 600 மில்லியன் பார்வையாளர்களை கடந்து மீண்டும் ஒரு மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் தென்னிந்திய மொழிகளில் வெளியான பாடல்களிலேயே அதிக பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நேர்கொண்ட பார்வை’ படம் 4 நாட்களில் 40 கோடி வசூல் செய்துள்ளது.
எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ’நேர்கொண்ட பார்வை’. போனி கபூர் தயாரித்து, அவரே நேரடியாக விநியோகஸ்தர்களிடம் கொடுத்து விநியோகம் செய்தார். ‘பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்தப்படம் முதல் நாளில் பெரும் வரவேற்பை பெற்றது. ஞாயிறு வரை இந்தப்படம் தமிழகத்தில் மொத்த வசூலில் 40 கோடியைத் தாண்டியுள்ளது.
நேற்றும் விடுமுறை என்பதால் நல்ல வசூல் இருக்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. சென்னையில் இந்தப் படம் முதல் 4 நாட்களில் மட்டும் 5.5 கோடி வசூல் செய்துள்ளது. ஒவ்வொரு நாளுமே 1 கோடியைத் தாண்டியே வசூல் செய்திருப்பதால் மிகவும் மகிழ்ச்சியில் இருக்கிறார் போனிகபூர்.

முக்கியமாக மல்டிப்ளக்ஸ் திரையரங்குகளில் இந்தப் படத்துக்கு நல்ல கூட்டம் இருக்கிறது. சிசென்டர்கள் எனப்படும் பகுதிகளில் மட்டும் மிகக் குறைந்தளவிலேயே வசூல் செய்து வருகிறது. முக்கிய நகரங்கள் அனைத்திலுமே நல்ல வசூலைக் குவித்து வருவது குறிப்பிடத்தக்கது.
மேலும், வெளிநாட்டு வசூல் 1 மில்லியன் டாலரைத் தாண்டிவிட்டதாக தயாரிப்பாளர் போனி கபூர் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் 250கே டாலர்கள் வசூலித்துள்ளது. அஜித்தின் முந்தைய படமான ‘விஸ்வாசம்‘ படத்தை விட இது அதிகம்.

ஏனென்றால் அந்தப் படம் ‘பேட்ட’ உள்ளிட்ட சில படங்களுடன் வெளியானது. கேரளா, கர்நாடகா மாநிலங்களில் எதிர்பார்த்ததை விட நல்ல வசூல் செய்து வருவதாகவும், விரைவில் இதற்காக முதலீடு செய்யப்பட்ட பணம் திரும்பிவிடும் என்று விநியோகஸ்தர்கள் தரப்பில் தெரிவித்தார்கள்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கோமாளி’ படத்தின் முன்னோட்டம்.
பிரதீப் ரங்கநாதன் இயக்கத்தில் ஜெயம்ரவி, காஜல் அகர்வால் ஜோடியாக நடித்துள்ள படம் கோமாளி. வேல்ஸ் பிலிம் இண்டர்நேஷனல் சார்பில் ஐசரி கணேஷ் தயாரித்துள்ளார். படத்தின் இன்னொரு கதாநாயகியாக சம்யுக்தா ஹெக்டே நடிக்கிறார். கே.எஸ்.ரவிகுமார், யோகி பாபு இருவரும் முக்கிய வேடங்களில் நடிக்கிறார்கள். பிஜிலி ரமேஷ், பொன்னம்பலம் காமெடி வேடங்களில் வர, ஆர்.ஜே ஆனந்தி இந்த படத்தில் மூலம் தமிழில் அறிமுகமாகிறார்.
ஜெயம்ரவி இதில் ராஜா, ஆதிவாசி, பிரிட்டீஷ் காலத்து அடிமை, 1990-களில் வாழ்ந்த இளைஞர் உள்பட 9 வேடங்களில் அவர் நடிக்கிறார். இந்த 4 வேடங்கள் தவிர மற்ற வேடங்கள் ரகசியமாக வைக்கப்பட்டுள்ளன. இப்படத்திற்கு ஹிப்ஹாப் ஆதி இசையமைத்துள்ளார். ரிச்சர்ட் எம் நாதன் ஒளிப்பதிவு செய்ய, பிரவீன் கேஎல் படத்தொகுப்பை கவனிக்கிறார்.

படம் குறித்து இயக்குனர் பிரதீப் ரங்கநாதன் கூறுகையில், ’இது காமெடி மற்றும் எமோஷன் கலந்த ஒரு குடும்பப் படம். இது சமூக ஊடகங்களில் பரவி வரும் எதிர்மறை கருத்துகளை பற்றி பேசும் படம், இறுதியில் நல்ல ஒரு கருத்தையும் சொல்லியிருக்கிறோம். இப்படத்தில் 9 வித்தியாசமான தோற்றங்களில் ஜெயம்ரவி தோன்றுவார், 90களின் பின்னணியில் அவரின் தோற்றம் இன்னும் சுவாரஸ்யமாக இருக்கும்’ என கூறினார்.
குடிபோதையில் அடித்து துன்புறுத்துவதாக பிரபல இந்தி கொடுத்த புகாரின் பேரில் அவரது கணவரை போலீசார் கைது செய்துள்ளனர்.
பிரபல இந்தி நடிகை ஸ்வேதா திவாரி. இவர் பல இந்தி டி.வி. தொடர்களிலும் நடித்து இருக்கிறார். இந்தி பிக்பாஸ் நிகழ்ச்சியில் வந்தும் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார். ஸ்வேதா திவாரியும், இந்தி நடிகர் ராஜா சவுத்ரியும் நீண்ட நாட்களாக காதலித்தனர். பின்னர் இருவரும் திருமணம் செய்துகொண்டார்கள்.
இந்த நிலையில் இருவருக்கும் திடீர் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 9 வருடங்களுக்கு முன்பு விவாகரத்து செய்து கொண்டனர். இவர்களுக்கு பாலக் என்ற மகள் இருக்கிறார். அதன்பிறகு இந்தி நடிகர் அபினவ் கோலிக்கும், ஸ்வேதா திவாரிக்கும் காதல் மலர்ந்தது. 2013-ம் ஆண்டு அபினவ் கோலியை ஸ்வேதா திவாரி 2-வது திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஒரு ஆண் குழந்தை உள்ளது.

அபினவ்வுக்கு குடிப்பழக்கம் இருந்தது. தினமும் போதையில் வீட்டுக்கு வந்து ஸ்வேதா திவாரியுடன் சண்டை போட்டதாக கூறப்படுகிறது. இதனால் குடும்ப வாழ்க்கையில் பிரச்சினை ஏற்பட்டது. குடும்பத்தினர் சமரசம் செய்துவைக்க முயற்சித்தும் பலன் இல்லை. இந்த நிலையில் கணவர் அபினவ் மீது ஸ்வேதா திவாரி மும்பை காந்திவிலி போலீசில் புகார் செய்தார்.
புகார் மனுவில் அபினவ் தன்னையும், தனது மகளையும் தினமும் குடித்துவிட்டு வந்து போதையில் அடித்து துன்புறுத்துகிறார் என்று கூறியுள்ளார். போலீசார் வழக்குப்பதிவு செய்து அபினவ்வை கைது செய்தனர்.
நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து அஜித் நடிக்கும் அடுத்த படத்தில், அவர் பைக் ரேஸராக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அஜித்குமார் தொடர்ந்து அதிரடி படங்களில் நடித்து வந்தார். வேதாளம், விவேகம், விஸ்வாசம் ஆகியவை சண்டை படங்களாகவே வந்தன. வேதாளம், விஸ்வாசம் படங்களில் தாதா வேடம் ஏற்று வில்லன்களுடன் மோதினார். தற்போது திரைக்கு வந்துள்ள ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் வக்கீல் வேடத்தில் நடித்துள்ளார். இந்த படம் மூலம் இன்னொரு நடிப்பு பரிமாணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது.
வசூலும் குவிக்கிறது. இந்த நிலையில் மீண்டும் அதிரடி கதையில் நடிக்க அஜித் தயாராகி உள்ளார். இந்த படத்தையும் வினோத் இயக்குகிறார். போனிகபூர் தயாரிக்கிறார். படப்பிடிப்பு இந்த மாதம் இறுதியில் பூஜையுடன் தொடங்குகிறது. படத்தில் நடிக்கும் இதர நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. ஸ்ரீதேவியின் மகள் ஜான்வியும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்த படம் குறித்து போனிகபூர் கூறியதாவது:- “அஜித் நடிக்க உள்ள புதிய படம் முழுமையான அதிரடி சண்டை படமாக இருக்கும். அனைத்து தரப்பினரையும் திருப்திப்படுத்தும் வகையில் பொழுதுபோக்கு படமாகவும் இருக்கும். பைக் மற்றும் கார் பந்தய சாகச காட்சிகள் படத்தில் இடம்பெறும். குறிப்பாக பைக் பந்தயத்துக்கு முக்கியத்துவம் அளிக்கப்படும். இந்த படத்தை தமிழில் மட்டுமே தயாரிக்கிறேன். இந்தியில் வெளியிடுவது குறித்தும் யோசிப்பேன்.”
இவ்வாறு போனிகபூர் கூறினார்.






