என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    ‘மெர்சல்’ படத்தை தயாரித்த ஸ்ரீ தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்திடம் இருந்து சம்பளபாக்கியை வாங்காமல் விட மாட்டேன் என்று மேஜிக் நிபுணர் கூறியிருக்கிறார்.
    விஜய் - அட்லீ கூட்டணியில் வெளியான படம் ‘மெர்சல்’. இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்று வெற்றிகரமாக ஓடியது. இப்படத்தை தேனாண்டாள் பிலிம்ஸ் சார்பாக ஹேமா ருக்மணி தயாரித்திருந்தார். 

    மெர்சல் படத்தில் 3 கதாபாத்திரங்களில் நடித்திருந்த விஜய், ஒரு கதாபாத்திரத்தில் மேஜிக் நிபுணராக வருவார். ஒரு காட்சியில் மேஜிக் மூலமாக சண்டையிடுவது போல படமாக்கி இருப்பார்கள்.

    இந்த சண்டைக்காட்சி உள்பட மேஜிக் தொடர்பான காட்சிகளில் பணிபுரிந்தவர் சர்வதேச மேஜிக் நிபுணர். இவர் ஏற்கனவே ‘மெர்சல்’ படத்தில் இன்னும் தனக்கு சம்பள பாக்கி இருப்பதாக கூறியிருந்தார். இந்நிலையில், சம்பளத்தை வாங்காமல் போக மாட்டேன் என்று வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். 

    அதில், ‘மெர்சல் படத்திற்காக விஜய்க்கு மேஜிக் தந்திரங்கள் குறித்த பயிற்சி அளித்த எனக்கு தயாரிப்பு நிறுவனமான தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் இன்னும் ரூ.4 லட்சம் சம்பள பாக்கி வைத்திருக்கிறது. பலமுறை அந்த பணத்தை கேட்டும் தயாரிப்பு தரப்பில் இருந்து பதில் வராததால் கடந்த ஏப்ரல் மாதம் கனடாவில் இருந்து சென்னைக்கு வந்து வழக்கறிஞரிடம் ஆலோசனை செய்து சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்ய தயாராகியிருக்கிறேன்.

    ராமன் சர்மா

    மேலும் சென்னை வந்திருந்தபோது 'பிகில்' படப்பிடிப்பில் இருந்த விஜய், அட்லீ ஆகியோர்களை சந்தித்தேன். ஆனால் தனது சம்பள பாக்கி குறித்து அவர்களிடம் நான் பேசவில்லை. மெர்சல்' படத்தில் பணிபுரிந்த ஒருசில கலைஞர்களை தான் சந்தித்தபோது அவர்களுக்கும் சம்பள பாக்கி இருந்ததை தான் அறிந்து கொண்டேன். 

    தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனத்தினர் பொருளாதார சிக்கலில் இருப்பதாக கூறுவதை தான் நம்பவில்லை. சமீபத்தில் கூட ஹேமா ருக்மணி தனது சமூக வலைத்தளத்தில் ஒரு மிகப்பெரிய ஷோரூமில் பர்சேஸ் செய்த புகைப்படத்தை மகிழ்ச்சியுடன் பதிவு செய்துள்ளார். எனவே தான் கஷ்டப்பட்டு பணிபுரிந்ததற்கான சம்பளத்தை வாங்காமல் விடப்போவதில்லை என்று கூறியுள்ளார்.
    ஏ1 படத்தின் வெற்றியை தொடர்ந்து சந்தானம் அடுத்ததாக கார்த்திக் யோகி இயக்கும் படத்தில் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் காமெடியனாக வலம் வந்த சந்தானம் தற்போது ஹீரோவாக நடித்து வலம் வருகிறார். இவர் நடித்த 'தில்லுக்கு துட்டு', 'சக்க போடு போடு ராஜா', 'தில்லுக்கு துட்டு 2' போன்ற படங்கள் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. சமீபத்தில் வெளியான ‘ஏ1’ திரைப்படமும் ரசிகர்களை கவர்ந்தது. 

    ஷங்கரின் அசோசியேட் இயக்குனராக பணியாற்றிய விஜய் ஆனந்த் இயக்கத்தில் உருவாகி வரும் ‘டகால்டி’ படத்தில் சந்தானம் கதாநாயகனாக நடித்து வருகிறார். இந்நிலையில், சந்தானத்தின் அடுத்த படத்தின் அறிவிப்பு வெளியாகியுள்ளது.

    சந்தானத்தின் அடுத்த படம்

    கார்த்திக் யோகி இயக்கும் புதிய படத்தில் சந்தானம் மூன்று வேடங்களில் நடிக்க இருக்கிறார். இந்த படத்தை கேஜேஆர் ஸ்டூடியோஸ் மற்றும் சோல்ஜர்ஸ் பேக்டரி நிறுவனமும் இணைந்து தயாரிக்கிறார்கள். இதன் டைட்டில் லுக் போஸ்டர் வரும் செப்டம்பர் 5ம் தேதி வெளியிட இருக்கிறார்கள்.
    மறைந்த நடிகை ஸ்ரீதேவி - போனிகபூர் தம்பதியின் முதல் மகள் ஜான்வி கபூர், தற்போது குஞ்ஜன் சக்சேனா வாழ்க்கை வரலாறு படத்தில் நடித்து வருகிறார்.
    மறைந்த நடிகை ஸ்ரீதேவி - போனிகபூர் தம்பதியின் முதல் மகள் ஜான்வி கபூர். ஸ்ரீதேவியின் மறைவுக்கு பின், ஜான்வி நடிப்பில் முதல் படமான 'தடக்' வெளியானது. 'தடக்' படத்தின் இணை தயாரிப்பாளர்களில் ஒருவரான கரண் ஜோகர், ஜான்வியை வைத்து மீண்டும் படம் தயாரித்துள்ளார். 

    ’குஞ்ஜன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்’ என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் முதல் பார்வை போஸ்டர் நேற்று வெளியிடப்பட்டது. இதில் பெண் ராணுவ பைலட் குஞ்ஜன் கதாபாத்திரத்தில் ஜான்வி கபூர் நடிக்கிறார். குஞ்ஜன் சக்சேனா கார்கில் போர் சமயத்தில் காயம்பட்ட எண்ணற்ற இந்திய ராணுவ வீரர்களைப் பாதுகாப்பாக இடம் மாற்றியதில் முக்கிய பங்கு வகித்தவர். சவுர்ய சக்ரா விருது பெற்ற முதல் பெண்ணும் இவரே. 

    குஞ்ஜன் சக்சேனா - தி கார்கில் கேர்ள் பட போஸ்டர்

    இவரது வாழ்க்கை வரலாற்றைச் சொல்லும் படம் இது. படத்தின் முதல் பார்வை போஸ்டரைப் பகிர்ந்த கரண் ஜோகர், "பெண்ணால் பைலட் ஆக முடியாது என்றார்கள். ஆனால், உறுதியாக இருந்து பறக்க வேண்டும் என்று விரும்பினார். 'குஞ்ஜன் சக்சேனா - தி கார்கில் கேர்ள்’, மார்ச் 13, 2020 அன்று வெளியாகிறது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்த படத்துக்காக ஜான்வி தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டதோடு, 6 கிலோ எடை குறைத்துள்ளார்.
    தமிழில் நடிகர், பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குனர் என்று வலம் வரும் தனுஷ், மலையாளத்தில் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
    தமிழில் முன்னணி நடிகராக வலம் வருபவர் தனுஷ். இவர் நடிப்பில் தற்போது ‘அசுரன்’ திரைப்படம் உருவாகியுள்ளது. வெற்றிமாறன் இயக்கத்தில் உருவாகி இருக்கும் இப்படம் விரைவில் வெளியாக இருக்கிறது. தனுஷ் தான் நடித்த சில படங்களுக்கு பாடல் எழுதியிருக்கிறார் தனுஷ். 

    முதல் முறையாக மலையாள படத்துக்கு பாடல் எழுதியிருக்கிறார் தனுஷ். அந்த பாடலை அவரே பாடியும் உள்ளார். நாதிர்ஷா இதற்கு இசையமைத்துள்ளார். பிரதர்ஸ் டே என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் பிருத்விராஜ், மடோனா செபஸ்டியன், ஐஸ்வர்யா லட்சுமி, பிரயாகா மார்ட்டின், மியா ஜார்ஜ் ஆகியோர் நடித்துள்ளார்கள்.

    தனுஷ்

    இந்த படத்தில் 4 ஹீரோயின்களுடன் பிருத்விராஜ் நடித்துள்ளார். இந்த படத்துக்குதான் தனுஷ் பாடல் ஒன்றை எழுதியிருக்கிறார். ஏற்கனவே மலையாளத்தில் படம் தயாரித்துள்ள தனுஷ், இப்போது அங்கு பாடலாசிரியராகவும் மாறியுள்ளார்.
    நேர்கொண்ட பார்வை படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கும் புதிய படத்தில் அஜித்துக்கு வில்லனாக பிரபல பாலிவுட் நடிகர் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
    நேர்கொண்ட பார்வை படத்திற்குப் பின் அஜித் நடிக்கும் புதிய படத்தில் பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனை நடிக்கவைக்க படக்குழு முயற்சித்துவருகிறது. அஜித், ஹெச்.வினோத், போனி கபூர் ஆகியோர் மீண்டும் கூட்டணி அமைத்து உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இந்த மாத இறுதியில் தொடங்கப்படுவதாக இருந்தது. 

    தற்போது இதன் படப்பிடிப்பு அடுத்த மாதம் நடைபெறவுள்ளது. இதில் வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க பாலிவுட் நடிகர் அஜய் தேவ்கனிடம் பேச்சுவார்த்தை நடைபெற்றுள்ளது. அஜித்தின் விருப்பத்திற்குரிய ஸ்போர்ட்ஸ், ரேஸ் ஆகியவற்றை உள்ளடக்கியதாக இந்தப் படம் இருக்கும் என போனிகபூர் சமீபத்தில் தெரிவித்திருந்தார். 

    அஜய் தேவ்கன், அஜித்

    மற்றொரு புறம் என்னை அறிந்தால் படத்திற்குப் பின் அஜித் காவல்துறை அதிகாரியாக இந்தப் படத்தில் நடிப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் வலுவான வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்க படக்குழு அஜய் தேவ்கனை நாடியுள்ளது. அஜய் தேவ்கன் இதற்கு முன்னதாக கமல்ஹாசன் நடிக்கும் இந்தியன் 2 படத்தில் நடிப்பதாக இருந்தது. 

    அப்போது ராஜமௌலி இயக்கும் ஆர்.ஆர்.ஆர் படத்தில் அவர் ஒப்பந்தமாகியிருந்ததால் அவரால் நடிக்க முடியாமல் போனது. இந்நிலையில் ‘அஜித் 60’ படத்தில் அவர் நடிக்க சம்மதம் தெரிவித்தால் அவர் தமிழில் அறிமுகமாகும் முதல் படம் இதுவாக அமையும்.
    ஷங்கர் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தியன் 2 படத்தில் கமல்ஹாசனுக்கு வில்லனாக பிரபல நடிகர் நடிக்க உள்ளார்.
    ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடிப்பில் 1997ஆம் ஆண்டு வெளியான படம் இந்தியன். இதன் இரண்டாம் பாகத்தை கமல்ஹாசன், காஜல் அகர்வால் நடிக்க பிரம்மாண்டமாக உருவாக்க திட்டமிட்டு தொடங்கப்பட்டது. அதிக பொருள் செலவில் உருவாகிக் கொண்டிருக்கும் இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. காஜல் அகர்வால், சித்தார்த், பிரியா பவானி சங்கர், ரகுல் ப்ரீத் சிங் எனப் பல்வேறு நடிகர்கள் இதில் இணைந்திருந்தனர். 

    எந்தக் காலத்துக்கும் பொருந்திப்போகும் ஊழல் பிரச்னையைப் பற்றி `இந்தியன்' முதல் பாகத்தில் பேசியிருந்தார் ஷங்கர். இதைத் தொடர்ந்து 2-ஆம் பாகமான இதில், பெண்களுக்கு ஏற்படும் பாலியல் அவலங்களை பேச இருப்பதாக தகவல்கள் வெளியாகின. கமலுடன் முதல் முறையாக விவேக் சேர்ந்து நடிக்கிறார். ஷங்கர் இயக்கத்தில் பாய்ஸ், அந்நியன், சிவாஜி படங்களில் விவேக் நடித்தார். 

    பாபி சிம்ஹா

    முதல்கட்ட படப்பிடிப்புக்கும் இரண்டாம் கட்ட படப்பிடிப்புக்கும் இடையே ஆறு மாதங்களுக்கும் அதிகமான இடைவெளி ஏற்பட்டுவிட்டது. தயாரிப்பு தரப்பில் ஏற்பட்ட பிரச்சினைகள், கமலின் தேர்தல் பிரச்சாரம் ஆகியவை படப்பிடிப்பு தள்ளிப்போனதற்கான காரணங்களாக கூறப்பட்டது. இரண்டாம் கட்ட படப்பிடிப்பு கடந்த 12ந்தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. முன்னணி நடிகர், நடிகைகள் இணைந்து நடிப்பதால் அவர்களது காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன. 

    கமல் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் மூன்றாவது சீசன் நடைபெற்றுவரும் நிலையில் அதில் வாரத்தில் இரு நாள்கள் கலந்துகொள்ள வேண்டியுள்ளது. இந்தியன் 2 படப்பிடிப்புக்கும் பிக் பாஸ் நிகழ்ச்சிக்கான கால்ஷீட்டில் பிரச்சினை ஏற்பட்டுவிடாமல் இருக்க கவனமுடன் அவருக்கான தேதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன.  

    இந்தியன் 2 படத்தில் கமலுக்கு வில்லனாக நடிக்க இந்தி முன்னணி நடிகர்களிடம் பேசினார்கள். ஆனால் தேதிகள் சரியாக வராததால் தமிழ் நடிகரே வில்லனாக நடிக்க இருக்கிறார். படத்தின் வில்லனாகத் தற்போது பாபி சிம்ஹா கமிட்டாகியுள்ளார். இதுவரை வெறும் பேச்சுவார்த்தைகள் மட்டுமே போய்க்கொண்டிருந்த நிலையில், தற்போது பாபி சிம்ஹாவே வில்லனாக நடிப்பது உறுதியாகியுள்ளது.  
    சாச்சி இயக்கத்தில் வைபவ், பல்லக் லல்வானி, ராதாரவி, இளவரசு நடிப்பில் வெளியாகி இருக்கும் சிக்சர் படத்தின் விமர்சனம்.
    சின்னத்தம்பி படத்தில் மாலைக்கண் நோய் உள்ளவராக கவுண்டமணி நடித்த கதாபாத்திரத்தை மையப்படுத்தி எடுத்திருக்கும் படம் தான் சிக்சர். நாயகன் வைபவ் சிவில் இஞ்ஜினியர். இவருக்கு மாலை 6 மணிக்கு மேல் கண் தெரியாது. இதனால் எங்கு இருந்தாலும் 6 மணிக்கு வீட்டுக்கு வந்து விடுவார். இவரது அப்பா இளவரசும், அம்மா ஸ்ரீரஞ்சனியும் வைபவுக்கு தீவிரமாக பெண் தேடுகிறார்கள். வைபவ் ஒரு நாள் மாலை வேலை முடித்துவிட்டு வீட்டுக்கு வரும்போது, அவரது வண்டி பழுதாகி நின்றுவிடுகிறது. 

    இதனால் இவர் நண்பர் சதீசுக்கு போன் செய்து தன்னை அழைத்து செல்லும்படி கூறிவிட்டு பெசன்ட் நகர் பீச்சில் ஹெட் போன் மாட்டிக்கொண்டு பாடல் கேட்டவாறு அமர்ந்திருக்கிறார். அப்பொழுது மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்தபேராசிரியையை கைது செய்யக்கூறி ஆர்ப்பாட்டம் நடைபெறுகிறது. இதில் நடுவில் அமர்ந்திருக்கும் நாயகன் என்ன நடக்கிறது என்றே தெரியாமல் பாட்டு கேட்டவாறு அமர்ந்திருக்கிறார். 

    சிக்சர்

    அரசியல்வாதியான என்.ஆர்.மனோகரின் ஆட்கள் போலீஸ் உதவியுடன் ஆர்பாட்டகாரர்களை விரட்ட முயற்சிக்கிறார்கள். இதற்கு பயந்து பிறர் கலைந்து சென்றாலும், வைபவ் மட்டும் அதே இடத்தில் அமர்ந்திருக்கிறார். வைபவின் துணிச்சலை பார்த்த ஆர்பாட்டகாரர்கள் மீண்டும் ஒன்று திரள்கின்றனர். இதனால் ஆர்பாட்டம் வெற்றி பெறுகிறது. இதையடுத்து ஆர்பாட்டகாரர்கள் அனைவரும் வைபவை பாராட்டுகின்றனர். 

    இந்த சூழலில் அங்கு செய்தி சேகரிக்க வரும் நாயகி பல்லக் லல்வானி, வைபவ் மீது காதல் வயப்படுகிறார். தனக்குள்ள குறையை மறைத்து வைபவும் அவரை காதலித்து வருகிறார். இன்னொரு புறம் அந்தப் போராட்டத்தால் பாதிக்கப்பட்ட அரசியல்வாதி என்.ஆர்.மனோகர் வைபவை கொல்லத் துடிக்கிறார். மாலைக்கண் நோயால் ஏற்படும் பிரச்சனைகளை தாண்டி அவர் காதலில் ஜெயித்தாரா? அரசியல்வாதியிடம் இருந்து உயிர் தப்பினாரா? என்பதே மீதிக்கதை.

    சிக்சர்

    நாயகன் வைபவ் மாலைக்கண் நோய் உள்ள இளைஞர் கதாபாத்திரத்தை எளிதாக கையாண்டு இருக்கிறார். இந்த கதாபாத்திரத்திற்கு தேவையான வெகுளித்தனமான முகம் இவருக்கு அழகாக பொருந்தி இருக்கிறது. குறிப்பாக தனக்கு பார்வை தெரியாததை அறிந்த ராதாரவியிடம் மாட்டிக்கொள்ளும்போது நடிப்பில் ரசிக்க வைத்திருக்கிறார். 

    தொலைக்காட்சி நிருபராக நடித்திருக்கும் நாயகி பல்லக் லல்வானி, அழகு பதுமையாக வலம் வருகிறார். ராமர், சதீஷ் ஆகியோர் அவ்வப்போது வந்தாலும் சிரிக்க வைக்க தவறவில்லை. மேலும் இளவரசு, ராதாரவி அனுபவ நடிப்பால நம்மை ரசிக்க வைக்கிறார்கள். என்.ஆர்.மனோகர் மற்றும் ஏ.ஜே. வில்லத்தனத்தால் மிரட்டுகின்றனர்.

    சிக்சர்

    அறிமுக இயக்குனர் சாச்சி, மாலைக்கண் நோய் என்பதை கதையின் கருவாக கொண்டு படத்தை நகைச்சுவையாக நகர்த்திய விதம் சிறப்பு. ஜிப்ரானின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்த்தாலும், பாடல்கள் ஓகே ரகம் தான். பி.ஜி.முத்தையாவின் நேர்த்தியான ஒளிப்பதிவு கண்களுக்கு விருந்தளிக்கிறது. 

    மொத்தத்தில் ’சிக்சர்’ நகைச்சுவை விருந்து.
    நந்தன் சுப்பராயன் இயக்கத்தில் அஞ்சன், அஸ்மிதா நடிப்பில் வெளியாகி இருக்கும் மயூரன் படத்தின் விமர்சனம்.
    சிறு வயதிலேயே தாய் தந்தையை இழந்த நாயகன் அஞ்சன், தனது மாமாவின் அரவணைப்பில் வளர்ந்து வருகிறார். சிதம்பரத்தில் உள்ள கல்லூரியில் படிக்க செல்லும் அவருக்கு அமுதவாணன் பாலாஜி ராதாகிருஷ்ணன் மூன்றுபேரும் நண்பர்களாகிறார்கள்.

    அந்த பகுதியில் வசிக்கக்கூடிய நாயகி அஸ்மிதாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார் அஞ்சன். அஸ்மிதாவின் பார்வையிலும் காதல் தெரிவதால் அஞ்சன் தனது காதலை துணிவோடு சொல்கிறார். முதலில் மறுக்கும் அஸ்மிதா, பின்னர் வீட்டின் சம்மதத்துடன் அஞ்சனின் மாமாவுடன் பேசி திருமண நாளையும் முடிவு செய்கிறார்கள்.

    மயூரன்

    இந்த சூழ்நிலையில், அந்த பகுதியில் மிகவும் செல்வாக்கும், ஆள் பலமும் கொண்ட வேல ராமமூர்த்தி கட்டப்பஞ்சாயத்து செய்து தாதாவாக வலம் வருகிறார். அவருக்கு வலதுகரமாக ஆனந்தசாமி செயல்பட்டு வருகிறார். அஞ்சன் தங்கி இருக்கும் கல்லூரியில் வெளிமாநில இளைஞன் ஒருவனை வைத்துக்கொண்டு போதைமருந்து தொழில் செய்து வருகிறார் ஆனந்தசாமி. ஒரு நாள் கல்லூரி விடுதியில் இருக்கும் அஞ்சனின் நண்பனை கொன்றுவிடுகிறார் ஆனந்த சாமி.

    இதற்குப் பழிவாங்க ஆனந்த சாமியை அஞ்சன் கொன்றுவிடுகிறார். இதனால் சினம் கொண்ட வேலராமமூர்த்தி அஞ்சனை கொலை செய்ய தேடி அலைகிறார். இதிலிருந்து அஞ்சன் தப்பித்தாரா? அஸ்மிதாவுடன் ஒன்று சேர்ந்தாரா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    மயூரன்

    நாயகன் அஞ்சன் புதிய முகம் என்றாலும் கதாபாத்திரத்தை உணர்ந்து திறம்பட செய்திருக்கிறார். சண்டைக் காட்சிகளிலும், பாடல்களிலும் பரவாயில்லை என்று சொல்லலாம். நாயகி அஸ்மிதாவிற்கு படத்தில் மிகப்பெரிய வேலை இல்லை என்றாலும், வரும் காட்சிகளில் மனதில் நிற்கிறார். படத்திற்கு மிகப்பெரிய பலம் வேலராமமூர்த்தி. தன்னுடைய அனுபவ நடிப்பால் அந்த கதாபாத்திரத்தை எல்லோர் மனதிலும் நிற்க வைக்கிறார். அவருடைய வலது கரமாக இருக்கும் ஆனந்த சாமி வில்லத்தனத்தில் மிரட்டியிருக்கிறார். நாயகனின் நண்பர்களாக அமுதவணன், பாலாஜி, ராதாகிருஷ்ணன் கதைக்கு பொருத்தமாக பொருந்தி உள்ளனர்.

    மயூரன்

    பாலாவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய நந்தன் சுப்புராயன் கதை, திரைக்கதை, வசனம், இயக்கம் என அனைத்து பொறுப்புகளையும் ஏற்றிருக்கிறார். முதல் பாதி சற்று மெதுவாக நடந்தாலும் இரண்டாவது பாதியில் கதையின் விறுவிறுப்பை கூட்டி ரசிக்க வைத்திருக்கிறார். பெரும்பாலும் புதிய முகங்கள் என்றாலும் அவர்களை திறம்பட வேலை வாங்கி அதில் வெற்றியும் கண்டிருக்கிறார். படத்திற்கு பரமேஷ்வரின் ஒளிப்பதிவு கூடுதல் பலம் சேர்த்திருக்கிறது. ஜுபின் பின்னணி இசை காட்சிகளுக்கு ஒத்துழைப்பு கொடுத்திருக்கிறது.

    மொத்தத்தில் ‘மயூரன்’ அஞ்சான்.
    தெலுங்கானாவில் பிரபாஸ் படத்துக்கு பேனர் கட்டும்போது மின்சாரம் தாக்கியதில் ரசிகர் ஒருவர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    சுஜித் இயக்கத்தில் பிரபாஸ், ஷ்ரத்தா கபூர், அருண் விஜய் உள்ளிட்டோர் நடித்த படம் சாஹோ. சுமார் 300 கோடி பட்ஜெட்டில் உருவாகி இருக்கும் இப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியாகியுள்ளது. பாகுபலி படத்துக்கு பின்னர் இந்த படம் வெளியாவதால் திரையரங்குகளில் பிரபாஸ் ரசிகர்கள் பேனர்கள், கட் அவுட்கள் என்று கொண்டாடி வருகிறார்கள். ரசிகர்கள் கொண்டாட இரவு 1 மணிக்கே காட்சி போடலாம் என அரசு அனுமதி அளித்துள்ளது.

    சம்பவம் நிகழ்ந்த திரையரங்கம்

    இந்நிலையில், தெலுங்கானாவில் உள்ள திரையரங்கம் ஒன்றில் பிரபாஸின் ரசிகர் ஒருவர் பேனர் கட்டிய போது மின்சார ஒயர் உரசியதால் மின்சாரம் பாய்ந்ததில் தியேட்டர் கட்டிடத்தில் இருந்து கீழே விழுந்து பரிதாபமாக உயிரிழந்தார். இது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது. இதுகுறித்து தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், விசாரணை நடத்தி உள்ளார்கள். பிரேத பரிசோதனைக்கு அந்த நபரின் உடல் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அவர் பற்றிய விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை. 
    தனது ரூ.2,800 கோடி மதிப்பிலான சொத்துகளை மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுப்பேன் என அமிதாப் பச்சன் உறுதிபட கூறியுள்ளார்.
    இந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சனுக்கு, மகன் அபிஷேக் பச்சன் தவிர சுவேதா என்ற மகளும் உள்ளார். இவர் தொழில் அதிபர் நிகில் நந்தாவை திருமணம் செய்துள்ளார். 76 வயதான அமிதாப் பச்சனுக்கு ரூ.2 ஆயிரத்து 800 கோடி சொத்துகள் இருப்பதாக மதிப்பிடப்பட்டு உள்ளது. இந்த சொத்துகளை மகனுக்கும், மகளுக்கும் சமமாக பிரித்து கொடுப்பதாக அமிதாப் பச்சன் விருப்பம் தெரிவித்து உள்ளார். 

    அமிதாப் பச்சன் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி வருகிறார். அதில் தனது விருப்பத்தை வெளிப்படுத்திய அவர், தனது சொத்துகளுக்கு மகன் அபிஷேக் மட்டும் உரிமை கோர முடியாது என்று கூறினார். மேலும் மகன் மற்றும் மகள் இருவருக்கும் சமமாக சொத்துகளை பிரித்து கொடுப்பேன் என்றும் தெரிவித்தார். ஏற்கனவே ஒரு தடவை தனது வலைத்தள பக்கத்தில், ‘நான் இறக்கும்போது, எனது சொத்துகளை மகன், மகளுக்கு சமமாக விட்டு செல்வேன்’ என்று கூறியிருந்தார்.

    மகன், மகளுடன் அமிதாப் பச்சன்

    பாலின சமத்துவத்தை பற்றி அடிக்கடி பேசி வரும் அமிதாப்பச்சன் தனது மகள் மீதான அன்பை அவ்வப்போது வெளிப்படுத்தி வருகிறார். 2015-ம் ஆண்டு பிரதமர் மோடி தொடங்கி வைத்த ‘பேடி பச்சாவ், பேடி படாவ்’ (பெண் குழந்தைகளை காப்போம், பெண் குழந்தைகளுக்கு கல்வி அளிப்போம்) என்ற பிரசார இயக்கத்தையும் அமிதாப் பச்சன் ஆதரித்தார். மேலும் பெண் குழந்தைகள் நலனுக்கான ஐ.நா.சபை தூதராகவும் அவர் செயல்படுகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
    சினிமா பிரபலங்களான அமலா பால் மற்றும் பஹத் பாசில் ஆகியோருக்கு எதிராக வரி ஏய்ப்பு செய்ததாக தொடரப்பட்ட குற்றப்பிரிவு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டு உள்ளன.
    வரி ஏய்ப்பு தொடர்பான அறிக்கை சமீபத்தில் திருவனந்தபுரம் தலைமை நீதித்துறை நீதிமன்றத்தில் குற்றப்பிரிவு சார்பில் தாக்கல் செய்யப்பட்டது. குற்றப்பிரிவு தகவல் படி, இரு நடிகர்களும் தங்கள் வாகனங்களை மாநிலத்திற்கு வெளியில் இருந்து வாங்கியிருந்தனர். மேலும், அவர்கள் வேறு இடங்களில் பதிவு செய்வதன் மூலம் மாநில கருவூலத்திற்கு எந்த இழப்பும் ஏற்படவில்லை என கூறப்பட்டு உள்ளது.

    அமலாபால் பெங்களூருவில் வாகனத்தை வாங்கி இருந்தார். பாசில் தனது வாகனத்தை பெங்களூரு மற்றும் டெல்லியில் இருந்து வாங்கியிருந்தார். தவிர, பாசில் வாகனங்களின் பதிவை கேரளாவுக்கு மாற்றி, சர்ச்சை வெடித்த உடனேயே வரி செலுத்தியிருந்தார். எவ்வாறாயினும் அமலாபால் தனது வாகனத்தை ஒரு போலி முகவரியில் பதிவு செய்ததாக புதுச்சேரியில் உள்ள  அதிகாரிகளுக்கு நாங்கள் அறிவித்துள்ளோம். அவர்கள் அது குறித்து நடவடிக்கை எடுப்பார்கள்  என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அமலா பால், பஹத் பாசில்

    எவ்வாறாயினும், இதேபோன்ற வரி ஏய்ப்பு குற்றச்சாட்டுகளில் நடிகராக மாறிய அரசியல்வாதி சுரேஷ் கோபிக்கு எதிரான குற்றப்பிரிவு விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மற்ற இருவரையும் போலல்லாமல், அவர் இந்த வாகனத்தை கேரளாவில் வாங்கியிருந்தார், தற்போது வரை, அவர் வரி ஏய்ப்பு செய்வதற்காக ஒரு தவறான முகவரியில் புதுச்சேரியில் பதிவு செய்திருந்தார் என்பதற்கு வலுவான ஆதாரங்கள் உள்ளன.

    வரி விதிப்பை தவிர்ப்பதற்காக புதுச்சேரியில் தங்கள் வாகனங்களை பதிவு செய்த 380 வாகன உரிமையாளர்களுக்கு எதிராக விசாரணை பல்வேறு கட்டங்களில் உள்ளது என்று அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அண்மையில், புதுச்சேரி போக்குவரத்து துறைக்கு கடிதம் அனுப்பிய கேரளா மாநில போலீசார், அமலாபால் சொகுசு கார் பதிவு செய்த விவகாரம் தொடர்பாக மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கும்படி கடிதம் எழுதியிருந்தனர். அதன்படி புதுச்சேரி சட்டத்துறை வல்லுனர்களுக்கு கடிதம் அனுப்பியுள்ள புதுச்சேரி  போக்குவரத்து துறை, இதுகுறித்து ஆலோசனை கேட்டுள்ளது. 
    ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமான சர்வானந்த், நீண்ட இடைவெளிக்கு தற்போது மீண்டும் தமிழ் படத்தில் நடித்து வருகிறார்.
    ‘ஜோக்கர்’, ‘காஷ்மோரா’, ‘அருவி’, ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘NGK’, ‘ராட்சசி’ போன்ற பல வெற்றிப்படங்களை தயாரித்த நிறுவனம் ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ். தற்போது கார்த்தி நடித்திருக்கும் ‘கைதி’ படத்தைத் தயாரித்து வருகிறது. ‘மாநகரம்’ லோகேஷ் கனகராஜ் இயக்கியுள்ள இப்படம், இந்த ஆண்டு தீபாவளி பண்டிகைக்கு வெளிவருகிறது.

    ட்ரீம் வாரியர் பிக்சர்ஸ் நிறுவனம் அடுத்ததாக புதிய படம் ஒன்றை தயாரிக்கிறது. ‘எங்கேயும் எப்போதும்‘ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி தற்போது தெலுங்கில் முன்னணி நாயகர்களில் ஒருவராக திகழும் சர்வானந்த் இப்படத்தில் கதாநாயகனாக நடிக்கிறார்.  இவருக்கு ஜோடியாக, ‘துருவ நட்சத்திரம்’ படத்தின் நாயகி ரீத்து வர்மா நடிக்கிறார். இவர்களுடன் நாசர், சதீஷ், ரமேஷ் திலக் மற்றும் பலர் நடிக்கிறார்கள். இப்படத்தின் மூலம் ஸ்ரீகார்த்திக் இயக்குநராக அறிமுகமாகிறார். 

    சர்வானந்த், ரீத்து வர்மா

    வாழ்க்கையில் பிரிக்கமுடியாத விஷயங்களான நட்பு, காதல், தாய்பாசம், இவற்றை பின்னணியாக கொண்டு ஜனரஞ்சகமாக அமைக்கப்படுள்ளது இதன் கதை. இப்படத்தின் படப்பிடிப்பு சென்னையில் பூஜையுடன் துவங்கி உள்ளது. 2020ம் ஆண்டு கோடை விடுமுறையில் வெளியிட திட்டமிட்டுள்ளார்கள்.
    ×