என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    என்ன பிரச்சினை வந்தாலும் சொல்லு, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நடிகையிடம் நடிகர் ஒருவர் உறுதியளித்திருக்கிறாராம்.
    கணவரை பிரிந்த அந்த மலையாள நடிகை தமிழ் பட உலகுக்கு தாமதமாகவே அறிமுகமாகி இருக்கிறாராம். இங்கே உள்ள கதாநாயகர்கள் அனைவரையுமே அவருக்கு பிடித்து இருக்கிறதாம். அதனால் அவருடைய நட்பு வட்டாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறதாம்.

    “உனக்கு எந்த பிரச்சினை வந்தாலும், உடனே எனக்கு சொல்லிவிடு... நான் பார்த்துக் கொள்கிறேன்...” என்று நடிகையிடம் தன் வீர தீரங்களை ஜாடை மாடையாக காட்டி உறுதி அளித்தாராம், ஒரு பிரபல நடிகர்!
    பிரபல இந்தி நடிகையும், தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்தவருமான சோனம் கபூர், விமான நிறுவனம் மீது சரமாரியாக விமர்சித்து புகார் கூறியிருக்கிறார்.
    இந்தி நடிகை சோனம் கபூர். அனில்கபூரின் மகளான இவர் தனுசுடன் ராஞ்சனா என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை சரமாரியாக விமர்சித்துள்ளார்.

    சோனம் கபூர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த மாதம் மூன்று முறை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளேன். இதில் இரண்டு முறை எனது உடமைகளை இழந்து விட்டேன். அதை வேறு விமானத்தில் அனுப்பி வைத்து விட்டனர். இதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். இனி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    இதை அந்த விமான நிறுவனத்துக்கும் டேக் செய்திருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்டுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், லக்கேஜ் தாமதத்துக்கு வருந்துகிறோம், இது பற்றி சரியாக தகவல் அளித்துள்ளீர்களா?’ என்று கேட்டிருந்தது.

    சோனம் கபூர் ட்விட்

    இதற்கு சோனம் கபூர் ‘எல்லாம் முடிந்துவிட்டது. நீங்கள்தான் இனி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மோசமான நிர்வாக செயல்பாடு’ என்று கோபமாக பதில் கூறியுள்ளார்.

    இதையடுத்து அந்த விமான நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளது. விரைவாக உங்கள் உடமைகள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

    நடிகை பூஜா ஹெக்டேவும் இதை ஆமோதித்துள்ளார். அவர் ‘கடந்த மாதம் எனது 2 உடமைகளை தொலைத்து விட்டார்கள். பின்னர் கூரியர் மூலம் அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு இது வாடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
    அவன் இவன், பிரம்மன், தூங்காவனம் படங்களில் நடித்த மதுஷாலினி, அவர்களின் பேச்சால் குழப்பத்துக்கு ஆளானேன் என்று கூறியிருக்கிறார்.
    பாலா இயக்கிய அவன் இவன், சசிகுமார் நடித்த பிரம்மன், கமல்ஹாசனின் தூங்காவனம் உட்பட சில படங்களில் நடித்தவர் மது ஷாலினி. பின்னர் தெலுங்கில் கவனம் செலுத்தி வந்த அவர், இப்போது மீண்டும் தமிழுக்கு வந்திருக்கிறார். அவர் நடிப்பில் உருவான பஞ்சராக்‌ஷரம் கடந்த மாதம் வெளியானது. 

    மதுஷாலினி அளித்த பேட்டியில் கூறியதாவது:- இடைவெளி எல்லாம் இல்லை தொடர்ந்து நடித்துக்கொண்டுதான் இருக்கிறேன். எனக்கு தொடர்ந்து வாய்ப்புகள் வந்துகொண்டிருந்தன. ஆனால் அவை அனைத்துமே ஒரே மாதிரியான கேரக்டர் கொண்டவையாக இருந்தன. நடித்த கேரக்டரிலே நடிக்க வேண்டாம் என்பதால் அவற்றில் நடிக்கவில்லை. இருந்தாலும் மற்ற மொழிகளில் பிசியாகத்தான் நடித்து வருகிறேன். 

    மதுஷாலினி

    எனக்கு ஒரு விஷயம் இங்கு புரியவில்லை. எப்போதாவது சில இயக்குனர்களை விழாக்களிலோ அல்லது எங்காவதோ சந்திக்கும்போது, 'இந்த கேரக்டருக்கு உங்களைத்தான் நடிக்க வைக்கலாம் என்று நினைத்தோம். நீங்கள் பிசியாக இருப்பீர்கள் என்று விட்டுவிட்டோம் என்று சொல்கிறார்கள். இது ஏன் என்று தெரியவில்லை. 

    பிறகு நான் தமிழில் நடிக்கும்போது, உங்களை இங்க பார்க்கவே முடியலையே என்கிறார்கள். நான் வேறு மொழிக்குச் சென்றதும் நீங்க இல்லைன்னா என்ன, உங்க படங்கள் பேசுகின்றன என்கிறார்கள். எனக்கு இப்படி பேசுவது குழப்பத்தை ஏற்படுத்துகின்றன. இப்போது ஒரு விஷயத்தை மட்டும் புரிந்துகொண்டேன். நான் நடிகை, எந்த மொழியில் இருந்து வந்தாலும் ரசித்து நடிக்க வேண்டியது என்பதுதான் அது’. இவ்வாறு அவர் கூறினார். 
    ரஜினி நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் ‘தர்பார்’ படத்தில் இடம் பெற்றிருக்கும் சர்ச்சைக்குரிய வசனத்தை நீக்க தயார் என்று பட நிறுவனம் அறிவித்துள்ளது.
    ரஜினிகாந்த் - ஏ.ஆர்.முருகதாஸ் கூட்டணியில் வெளியாகியுள்ள படம் தர்பார். ரஜினிகாந்த் காவல்துறை அதிகாரியாக நடித்திருக்கும் இந்தப் படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்துள்ளார். லைகா நிறுவனம் தயாரித்துள்ள இப்படம் ரசிகர்களிடம் வரவேற்பு பெற்று வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    இந்தப் படத்தின் ஒரு காட்சியில் காவல்துறை அதிகாரி ஒருவர், இப்போதெல்லாம் சிறையிலிருப்பவர்கள் ஷாப்பிங் போகிறார்கள் என்று ரஜினியிடம் பேசுவதாக வசனம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த வசனம் சொத்துக்குவிப்பு வழக்கில் சிறையிலிருக்கும் சசிகலாவை மனதில் வைத்தே உருவாக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது.


    இந்நிலையில், தர்பாரில் இருக்கும் வசனத்தை நீக்க தயார் என்று லைகா நிறுவனம் அறிவித்துள்ளது. அந்த அறிவிப்பில், எங்களின் தர்பார் திரைப்படத்தில் கைதிகள் சிறைச்சாலையை விட்டு வெளியே செல்வதை குறிக்கும் வார்த்தைகள் பொதுவாக எழுதப்பட்டதே தவிர, எந்த ஒரு தனிப்பட்ட நபரையும் குறிக்கவோ அல்லது யார் மனதையும் புண்படுத்தவோ எழுதப்பட்டது அல்ல. இருப்பினும் அந்த குறிப்பிட்ட சில வார்த்தைகள் சிலரது மனதை புண்படுத்துவதுவாக தெரியவந்ததால், அது படத்திலிருந்து நீக்கப்படுவதாக தெரிவித்துக் கொள்கிறோம்’ இவ்வாறு லைகா நிறுவனம் கூறியுள்ளது.
    நடிகர் விஜய் மாஸ்டர் படப்பிடிப்பு தளத்தில் மாற்றுத்திறனாளிகள் தம்பதியான குமார் - கீதா இருவரையும் சந்தித்து பேசி நெகிழ வைத்திருக்கிறார்.
    தனியார் டிவி விருதுகள் வழங்கும் விழா சமீபத்தில் நடைபெற்றது. இந்த விழாவுக்கு முன்பாக முன்னணி நடிகர்களின் ரசிகர்களை வைத்து ஒரு கலந்துரையாடல் நிகழ்வு நடைபெற்றது. இதில் மாற்றுத்திறனாளிகள் தம்பதியான குமார் - கீதா இருவரும் கலந்து கொண்டனர். 

    இதில் குமார் பேசும் போது, "அண்ணா.. உங்களைப் பார்க்க வேண்டும் என 20 ஆண்டுகளாக பல முயற்சிகள் செய்து கொண்டிருக்கிறேன். அனைத்திலுமே எனக்குத் தோல்விகள்தான் வந்துள்ளது. நான் சாகிறதுக்குள்ள ஒரே ஒரு முறை உங்களைப் பார்க்க வேண்டும் என ஆசைப்படுகிறேன் அண்ணா. நீங்கள் நல்லாயிருக்கணும், 100 ஆண்டுகள் நல்லாயிருக்கணும். 1000 வருஷம் நல்லாயிருக்கணும். அண்ணி, குழந்தைகளுடன் சந்தோஷமா இருக்கணும். எங்களுக்கு நிறைய படம் கொடுக்கணும். நிறைய பெயர், புகழ் எல்லாம் சம்பாதிக்கணும். அதாவது உங்களுக்கு முன்பாகவே நாங்கள் இருவரும் செத்துப் போய்விட வேண்டும். நீங்கள் இல்லாத ஒரு உலகத்தை என்னால் நினைத்துப் பார்க்க முடியவில்லை" என்று பேசினார். 

    விஜய்

    இந்த வீடியோ விஜய் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றது. பலருமே இவர்களை விஜய் சந்திக்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்தனர். இந்நிலையில், இருவரையும் 'மாஸ்டர்' படப்பிடிப்பு தளத்தில் சந்தித்து பேசினார் விஜய். 

    நீங்கள் இல்லாத உலகத்தை நினைத்துப் பார்க்க முடியவில்லை என்ற வார்த்தைகள் எல்லாம் என்னை ரொம்பவே நெகிழ வைத்துவிட்டது என விஜய் கூறினார். உங்களுடன் நடிக்க வேண்டும் என்று குமார் கேட்க, கண்டிப்பாக பண்ணலாம் என்று கூறியுள்ளார் விஜய். 
    தமிழில் முன்னணி நடிகையாக வலம் வரும் ஐஸ்வர்யா ராஜேஷ், தனது பிறந்தநாளை குழந்தைகளுடன் கொண்டாடி இருக்கிறார்.
    தமிழ் பட உலகில் முன்னணி நடிகையாக உயர்ந்துள்ளார் ஐஸ்வர்யா ராஜேஷ். இவர் முதன்மை கதாபாத்திரத்தில் நடித்து வெளியான ‘கனா’ திரைப்படம் சூப்பர் ஹிட்டானது. சமீபத்தில் சிவகார்த்திகேயனுக்கு தங்கையாக நம்ம வீட்டு பிள்ளை படத்தில் நடித்தார்.

    தற்போது தமிழில் வானம் கொட்டட்டும் திரைப்படமும், தெலுங்கில் விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வொர்ல்ட் பேமஸ் லவ்வர் படத்திலும் நடித்து வருகிறார். இவர் தனது பிறந்தநாளை இன்று கொண்டாடி வருகிறார். இவருக்கு திரைத்துறையினர் மற்றும் ரசிகர்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

    குழந்தைகளுடன் ஐஸ்வர்யா ராஜேஷ்

    இன்று இவர் ஹோப் தொண்டு நிறுவனத்தில் தனது பிறந்தநாளை குழந்தைகளோடு கேக் வெட்டி கொண்டாடி இருக்கிறார். மேலும் குழந்தைகளுடன் சிரித்து பேசி விளையாடி அவர்களுடன் இருந்தது வாழ்க்கையில் மறக்க முடியாத தருணம் என்று ஐஸ்வர்யா ராஜேஷ் கூறினார்.
    மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்திற்காக நடிகர் ஜெயம்ரவி மொட்டை அடிப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    இயக்குனர் மணிரத்னம் தற்போது நீண்ட நாள் கனவான ‘பொன்னியின் செல்வன்’ படத்தை இப்போது மீண்டும் கையில் எடுத்திருக்கிறார். இந்த படத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ், திரிஷா, அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய், மோகன் பாபு, ஜெயராம், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் நடித்து வருகிறார்கள். 

    தமிழ், தெலுங்கு, மலையாளம் மற்றும் இந்தி என பல மொழிகளில் இந்தப் படம் உருவாகிறது. படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்ட நடிகர்கள் எல்லோரும் தலைமுடியை வளர்க்கவும், வாள் சண்டை, குதிரை ஏற்றம் போன்ற பழைய கலைகளை கற்றுக்கொள்ளவும் பயிற்சிகள் எடுத்துக்கொண்டு வருவதாகவும் சொல்லப்படுகிறது. இந்த படத்தின் கதாபாத்திரத்திற்காக ஜெயம் ரவி மொட்டை அடிக்க இருக்கிறாராம்.

    ஜெயம் ரவி

    இதன் படப்பிடிப்பு சில வாரங்களுக்கு முன்பு தான் தொடங்கப்பட்டது. தற்போது நடிகர் ஜெயராம், கார்த்தி, ஜெயம் ரவி மூவரும் எடுத்துக் கொண்ட புகைப்படம் ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. ரசிகர்கள் அனைவரும் இந்த படத்தின் மீது அதிக எதிர்பார்ப்புடன் உள்ளார்கள்.
    மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் கர்ணன் படத்திற்காக நடிகர் தனுஷ் தனது தோற்றத்தை மாற்றியுள்ளார்.
    நடிகர் தனுஷ் தற்போது தனது 41-வது படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு கர்ணன் என்று பெயர் வைக்கப்பட்டு உள்ளது. இந்த படத்தை பரியேறும் பெருமாள் படத்தை இயக்கி பிரபலமான மாரி செல்வராஜ் இயக்குகிறார். எஸ்.தாணு தயாரிக்கிறார். இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக மலையாள நடிகை ரெஜிஷா விஜயன் நடிக்கிறார்.

    லால், தனுஷ்

    மாஞ்சோலை தேயிலை தோட்ட தொழிலாளர்கள் வாழ்க்கையை மையமாக வைத்து இப்படம் தயாராகிறது. படப்பிடிப்பு நெல்லையில் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்நிலையில், இப்படத்தில் வில்லனாக நடிக்கும் லால், தனுஷுடன் இருக்கும் புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். தனுஷ் புதிய தோற்றத்தில் இருக்கும் அந்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. 
    துரை செந்தில்குமார் இயக்கத்தில் தனுஷ் நடித்துள்ள பட்டாஸ் படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் தனுஷ் நாயகனாக நடித்துள்ள படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். இப்படத்தில், தனுஷ் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சோடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். இளம் இசையமைப்பாளர்கள் விவேக்-மெர்வின் இப்படத்திற்கு இசையமைத்துள்ளனர்.

    பட்டாஸ் பட போஸ்டர்

    இப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், பட்டாஸ் படத்தின் சென்சார் குறித்த முக்கிய அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி பட்டாஸ் படத்திற்கு ‘யு’ சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது. குடும்பங்கள் கொண்டாடும் படமாக இது இருக்கும் என கூறப்படுகிறது. இப்படம் ஜனவரி 15-ந் தேதி ரிலீசாக உள்ளது. 
    ரமேஷ் ஜி இயக்கத்தில் வருண் கிஷோர், அம்மு அபிராமி நடிப்பில் உருவாகி வரும் அடவி படத்தின் முன்னோட்டம்.
    இயக்குநர் ரமேஷ் ஜி இயக்கத்தில் உருவாகி வரும் படம் அடவி. இப்படத்தில் வருண் கிஷோர் கதாநாயகனாக நடித்துள்ளார். அவருக்கு ஜோடியாக ‘ராட்சசன்’, ‘அசுரன்’ படங்களில் நடித்த அம்மு அபிராமி நடிக்கிறார். ஸ்ரீ கிரிஷ் பிக்சர்ஸ் சார்பில் கே.சாம்பசிவம் தயாரிக்கும் இப்படத்திற்கு சரத் ஜடா இசையமைக்கிறார். இயக்குநர் ரமேஷ் ஜி ஒளிப்பதிவு செய்கிறார். 

    அடவி படக்குழு

    படம் பற்றி இயக்குனர் ரமேஷ்ஜி கூறியதாவது:- ‘இயற்கை எழில் கொஞ்சும் ஒரு மலைப்பகுதியில் ரிசார்ட் கட்டுவதற்காக அங்கு வாழும் மக்களை விரட்ட ஒரு கும்பல் முயற்சி செய்கிறது. அந்த காட்டுவாசி கிராமத்தை சேர்ந்த வினோத்தும், அம்மு அபிராமியும் மக்களை ஒன்று சேர்த்து அந்த கும்பலிடம் போராடுகிறார்கள். அவர்களது போராட்டம் வென்றதா? என்பதே கதை. சப்வே என்ற மலைவாழ் மக்களின் தெய்வத்தை படத்தின் திருப்புமுனைக்கு பயன்படுத்தியுள்ளதாக அவர் கூறினார்.
    ரஜினிகாந்த் நடித்துள்ள தர்பார் படத்தை பார்த்த நடிகை குஷ்பு, ரஜினி காந்தம் போல நம்மை ஈர்ப்பதாக தெரிவித்துள்ளார்.
    ரஜினிகாந்த் நடிப்பில் தர்பார் படம் நேற்று உலகம் முழுவதும் வெளியானது. ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கிய இந்த படத்தில் நயன்தாரா, யோகிபாபு, நிவேதா தாமஸ், சுனில் ஷெட்டி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். தர்பார் படம் சென்னையில் மட்டும் 26 தியேட்டர்களில் 73 திரைகளில் 337 காட்சிகள் திரையிடப்பட்டுள்ளன. முதல் நாளில் மட்டும் சென்னையில் ரூ. 2.27 கோடி வரை வசூலித்துள்ளது. இப்படத்தை பார்த்த திரை பிரபலங்கள் பலரும் பாராட்டி வருகின்றனர். 

    ரஜினிகாந்த், குஷ்பு

    அந்த வகையில் நடிகை குஷ்பு, தர்பார் படத்தை பார்த்துவிட்டு அதுபற்றி டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ளார். அவர் பதிவிட்டுள்ளதாவது “ரஜினி காந்தம் போல நம்மை ஈர்க்கிறார். அவர் மீது தான் கண்கள் இருக்கிறது. அவர் மட்டும் தான் இந்திய சினிமாவின் சூப்பர்ஸ்டார் என்பதில் ஆச்சர்யமில்லை. தர்பார் பொங்கல் ட்ரீட். முருகதாஸுக்கு நன்றி” என குஷ்பு டுவிட் செய்துள்ளார். ரஜினியின் அடுத்த படமான ’தலைவர்168’-ல் குஷ்பு நடித்து வருவது குறிப்பிடத்தக்கது. 
    நடிகை ரம்யா பாண்டியன் சமீபத்தில் மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
    ராஜூ முருகன் இயக்கத்தில் தேசியவிருது வாங்கிய 'ஜோக்கர்', சமுத்திரக்கனி நடித்த 'ஆண் தேவதை' உள்ளிட்ட படங்களில் நடித்தவர், ரம்யா பாண்டியன். இவர், கடந்தாண்டு தன் வீட்டு மொட்டைமாடியில் எடுத்த போட்டோ ஷூட் பரபரப்பானது. `ஆண் தேவதை’ படத்திற்குப் பிறகு, வேறு எந்த படத்திலும் ஒப்பந்தம் ஆகாமல் இருந்த இவருக்கு, இந்த போட்டோ ஷூட் பல வாய்ப்புகளை வாங்கி கொடுத்துள்ளதாக கூறப்படுகிறது.

    இவர் கமிட் ஆகியுள்ள படங்களின் படப்பிடிப்பு தொடங்க சில மாதங்கள் ஆகும் என்பதால், இவர் தற்போது சமையல் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்றுள்ளார். அந்த நிகழ்ச்சிக்கு ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 

    ரம்யா பாண்டியன்

    சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கும் ரம்யா பாண்டியன், அவ்வப்போது போட்டோஷூட் நடத்தி அதனை டுவிட்டர், இன்ஸ்டாகிராமில் பதிவிட்டு வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது மாடர்ன் உடையில் போட்டோஷூட் நடத்தியுள்ளார். அந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது. 
    ×