என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தமிழ், இந்தி மொழி படங்களில் நடித்து மிகவும் பிரபலமான கங்கனா ரணாவத், இந்திக்கு முக்கியத்துவம் கொடுங்கள் என்று அறிவுரை கூறியுள்ளார்.
    இந்தி திவஸ் (இந்தி தினம்) தினத்துக்காக கங்கனா ரணாவத் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் கூறியுள்ளதாவது: இந்தி நம் தேசிய மொழி. ஆனால் அதை பேச நாடு மிகவும் யோசிக்கிறது. நம்பிக்கையுடன் ஏபிசிடி சொல்கிறார்கள். ஆனால் அதையே இந்தியில் சொல்ல நம்பிக்கை வருவதில்லை. 

    தங்கள் பிள்ளைகள் அற்புதமாக ஆங்கிலத்தில் பேசுவதாகப் பெருமையுடன் கூறுகிறார்கள் பெற்றோர்கள். தங்களுடைய ஆங்கிலம் பலவீனமாக இருந்தால் அதற்காக அவமானப்படுகிறார்கள். ஆனால் அதே நிலை இந்தியில் இருந்தால் துளி வருத்தம் ஏற்படுவதில்லை.

    கங்கனா

    திரையுலகம் என்னுடைய ஆங்கிலத்தை கண்டு கேலி செய்துள்ளது. விமர்சனம் செய்துள்ளது. ஆனால் இந்திக்குத்தான் நான் முன்னுரிமை அளிக்கிறேன். இதன்மூலம் என்னால் பெரிய உயரத்தை அடைந்து வெற்றியை அடைய முடியும். பெற்றோர்களே, இந்தியை உங்கள் குழந்தைகளுக்கு சொல்லித் தாருங்கள். நாட்டு நெய் மூலம் உருவாக்கப்படும் பரோட்டாவில் உள்ள ருசி பீட்சா, பர்க்கரில் கிடைக்காது. மா (அம்மா)-வில் உள்ள அன்பு, மாம்-மில் கிடையாது’. இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
    கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில் சித்தார்த், திவ்யான்ஷா கௌஷிக், யோகிபாபு நடிப்பில் உருவாகி வரும் டக்கர் படத்தின் முன்னோட்டம்.
    தற்போதைய தமிழ் சினிமாவில் வெளியாகும் முக்கால்வாசி படங்களில் யோகிபாபுவின் பெயர் தவறாது இடம்பெற்று விடுகிறது. தியேட்டருக்கு கூட்டத்தை இழுக்கும் வசீகரங்களில் ஒன்றாக அவர் மாறி இருக்கிறார். தனக்கே உரித்தான காமெடி பஞ்ச்களால் கவரும் அதே வேளையில் திரைப்படங்களில் முழு  நாயகனாகவும் தற்போது ரசிகர்களை கவர்ந்து வருகிறார். 

    நடிகர் சித்தார்த் நடிப்பில் இயக்குநர் கார்த்திக் ஜி கிரிஷ் இயக்கும் “டக்கர்” அப்பா மகன் என இரண்டு ரோல்களில் கலக்கலாக நடித்திருக்கிறார் யோகிபாபு. திரையில் அப்பா மகன் என இரு தோற்றங்களில் அவர் வரும்போது அரங்கம் அதிரும் என்கிறார் இயக்குநர்.

    சித்தார்த் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் திவ்யான்ஷா கௌஷிக் நாயகியாக நடிக்கிறார். இரண்டு வேறு வேறு, கோபம் கொப்பளிக்கும் மனநிலை கொண்ட இருவரும் சந்திக்கும் போது, அவர்களது அளவுக்கு அதிகமான ஈகோ மனநிலையால் அவர்கள் வாழ்வில் ஏற்படும் பிரச்சனைகளை சுவாரஸ்யமாக சொல்லும் கதைதான் “டக்கர்”.  

    பேஷன் ஸ்டுடியோஸ் சார்பில் சுதன் மற்றும் ஜெயராம் இத்திரைப்படத்தை தயாரிக்கிறார்கள். வாஞ்சிநாதன் முருகேசன் ஒளிப்பதிவு செய்ய, நிவாஸ் கே பிரசன்னா இசையமைக்கிறார். கௌதம் ஜி.ஏ. படத்தொகுப்பு செய்கிறார்.
    புடவையில் எடுத்த போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரம்யா பாண்டியன், அதைப்பற்றி கவலை இல்லை என்று கூறியிருக்கிறார்.
    தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர் படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன் கடந்த ஆண்டு ஒரு போட்டோஷூட் மூலம் வைரல் ஆனார். புத்தாண்டு பற்றி அவர் அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது, '2019ம் ஆண்டு, ரொம்ப சிறப்பாக இருந்தது. 2020ம் ஆண்டும், சிறப்பாகவே இருக்கும் என கருதுகிறேன். 

    ரம்யா பாண்டியன்

    கடந்த ஆண்டு, சேலையில் நடத்திய போட்டோ ஷூட்டுக்கு, பெரிய வரவேற்பு கிடைக்கும் என்று நினைக்கவில்லை. அது, எனக்கும், சேலைக்கும் உள்ள பிணைப்பாகவும், என் அதிர்ஷ்டமாகவும் இருக்கலாம். சமூகவலைதளங்களில் வரும், 'நெகடிவ் கமென்ட்'களை பற்றி, நான் கவலைப்படுவது இல்லை,''என்றார்.
    ஜே.என்.யு பல்கலைக்கழக மாணவர்கள் தாக்கப்பட்டதை குறித்து பாலிவுட் நடிகை சன்னி லியோன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
    சமீபத்தில் ஜே.என்.யு பல்கலைக்கழகத்தில் மர்ம நபர்கள் நுழைந்து மாணவர்களை கொடூரமாக தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இதனைத் தொடர்ந்து நடிகை தீபிகா படுகோன் ஜே என் யு மாணவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தார். இதனால் அவரை பலரும் விமர்சித்து வருகின்றனர்.

    சன்னி லியோன்

    இந்நிலையில் இத்தாக்குதல் குறித்து பாலிவுட் நடிகை சன்னி லியோன் கண்டனங்களை தெரிவித்துள்ளார். அதில், 'ஜே என் யு தாக்குதல் சம்பவம் மாணவர்களை மட்டுமல்லாது அவர்களது பெற்றோர்களையும் அச்சப்படவைத்துள்ளது. வன்முறையை நிறுத்துமாறு நான் ஒவ்வொருவரையும் கேட்டுக்கொள்கிறேன். யாரையும் பாதிக்காத வகையில் பிரச்சனைக்கு தீர்வு காண வேண்டும்' என கூறியுள்ளார்.
    பிரபல பாலிவுட் நடிகையும், சயீப் அலிகானின் மகளான சாரா அலிகானிடம் ரசிகர் ஒருவர் அத்துமீறிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
    நடிகைகளிடம் ரசிகர்கள் கையை பிடித்து இழுத்து ரகளை செய்வதும் தொடர்ந்து நடக்கிறது. இதில் சில நடிகைகளுக்கு நகக்கீறல் காயங்கள் ஏற்பட்டுள்ளன.

    இந்தி நடிகை சாரா அலிகானையும் ரசிகர் ஒருவர் அத்துமீறி முத்தமிட்ட சம்பவம் தற்போது நடந்துள்ளது. இவர் பிரபல இந்தி நடிகர் சயீப் அலிகான்-நடிகை அம்ரிதா சிங் மகள் ஆவார். அம்ரிதா சிங்கை விவாகரத்து செய்து விட்டு நடிகை கரீனா கபூரை சயீப் அலிகான் 2-வது திருமணம் செய்து கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 

    சாரா அலிகான்

    சாரா அலிகானும் பெற்றோரைப்போல் இந்தி படங்களில் நடித்து வருகிறார். இந்த நிலையில் மும்பையில் ஜிம்முக்கு சென்று உடற்பயிற்சி செய்து விட்டு திரும்பிய சாரா அலிகானை ரசிகர்கள் சூழ்ந்து செல்பி எடுத்தனர். அப்போது ஒரு ரசிகர் அவரது கையைப்பிடித்து இழுத்து முத்தமிட்டார்.

    இதனால் சாரா அதிர்ச்சியானார். முத்தமிட்டவரை பாதுகாவலர் பிடித்து தள்ளினார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது. அதை பார்த்த ரசிகர்கள் ஜிம்மில் இருந்து வந்த போது சாரா அலிகான் ஆபாச ஆடை அணிந்து இருந்ததாக குறைகூறி வருகிறார்கள்.
    எலி படத்தின் தயாரிப்பாளர் சதீஷ்குமார் கொடுத்த புகாரின் பெயரில் வடிவேலு தலைமறைவாகி விட்டார் என்ற தகவலுக்கு விளக்கம் அளித்துள்ளார்.
    நகைச்சுவை நடிகர் வடிவேலு சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். இம்சை அரசன் 24-ம் புலிகேசி படத்தில் நடிக்க மறுத்ததற்காக புதிய படங்களுக்கு அவரை ஒப்பந்தம் செய்ய தயாரிப்பாளர் சங்கம் தடை விதித்தது.

    கமல்ஹாசனின் தலைவன் இருக்கின்றான் படத்தில் அவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியானது. ஆனாலும் படப்பிடிப்பை தொடங்குவதில் தாமதம் ஏற்பட்டது.

    இந்த நிலையில் வடிவேலுவை வைத்து எலி படத்தை தயாரித்த சதீஷ்குமார் தனக்கு அந்த படம் மூலம் நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக குற்றம் சாட்டினார். இதுகுறித்து அவர் கூறும்போது, “வடிவேலுவை வைத்து படம் எடுப்பதற்காகவே நான் பட நிறுவனம் தொடங்கினேன். அவர் நடித்த எலி படத்தினால் எனக்கு ரூ.14 கோடி வரை நஷ்டம் ஏற்பட்டது. அதற்கு ஈடாக 2 படங்களில் நடித்து தருவதாக உறுதி அளித்தார். ஆனால் சொன்னபடி செய்யவில்லை. என்னையும் எனது குடும்பத்தினரையும் மிரட்டுகிறார். வடிவேலுக்கு சம்பள பாக்கி இருப்பதாக அவரது உறவினர் பணம் கேட்டு மிரட்டுகிறார்” என்றார்.

    வடிவேலு

    இதுகுறித்து போலீசிலும் புகார் அளித்தார். வடிவேலுவை போலீஸ் தேடுவதாகவும் அவர் தலைமறைவாகி விட்டார் என்றும் தகவல் பரவின. இதனை வடிவேலு மறுத்துள்ளார். என்னை களங்கப்படுத்தவும், எதிர்காலத்தை வீணாக்கவும் இதுபோன்ற குற்றச்சாட்டுகள் கூறப்படுகின்றன. நான் தலைமறைவாகவில்லை. கோவிலுக்கு சென்று இருந்தேன்” என்று கூறியுள்ளார்.
    பாலிவுட்டில் முன்னணி நடிகையாக இருக்கும் பிரியங்கா சோப்ராவின் ஆடையை ரசிகர்கள் விமர்சித்து வருகிறார்கள்.
    தமிழன் படத்தில் விஜய் ஜோடியாக நடித்த பிரியங்கா சோப்ரா இந்தியில் பிரபல நடிகையாக இருக்கிறார். அமெரிக்க பாப் பாடகர் நிக்ஜோனசை காதலித்து திருமணம் செய்து கொண்டார். ஹாலிவுட் படங்களிலும் நடித்து வருகிறார். 

    பட விழாக்களுக்கும் பொது நிகழ்ச்சிகளுக்கும் பிரியங்கா சோப்ராவும் நிக் ஜோனசும் ஜோடியாக சென்று வருகிறார்கள். சமீபத்தில் அமெரிக்காவில் நடந்த விருது வழங்கும் விழாவில் ஹாலிவுட் நடிகர், நடிகைகள் பலர் கலந்து கொண்டனர். இந்த நிகழ்ச்சியில் கணவர் நிக் ஜோனசுடன் பிரியங்கா சோப்ரா பங்கேற்றார்.

    பிரியங்கா சோப்ரா

    அவர்களுக்கு சிவப்பு கம்பள வரவேற்பு அளிக்கப்பட்டது. அப்போது முத்தமிட்டு போட்டோவுக்கு போஸ் கொடுத்தனர். விழா முடிந்ததும் அனைவரும் இரவு விருந்தில் கலந்து கொண்டார்கள். அதில் பிரியங்கா சோப்ரா அணிந்து வந்த ஆடை அனைவரையும் கவர்ந்தது. கறுப்பு நிற மேலாடையும், வித்தியாசமான ஸ்கர்ட்டும் அணிந்து இருந்தார்.

    கால்களை வெளிகாட்டும் வகையில் கண்ணாடி இழை போன்று அந்த ஆடை இருந்தது. இந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி எதிர்ப்பை கிளப்பி உள்ளது. அந்த ஆடையை அணிந்து வந்த பிரியங்கா சோப்ராவை ரசிகர்கள் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
    பிரபல பின்னணி பாடகர் ஜேசுதாஸ் நேற்று 80-வது பிறந்த நாளை கொண்டாடினார். இதையொட்டி அவருக்கு பிரதமர் மோடி, கேரள முதல்-மந்திரி பினராயி விஜயன் உள்ளிட்ட தலைவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.
    கேரளாவை சேர்ந்த பிரபல கர்நாடக இசைக்கலைஞரும், சினிமா பின்னணி பாடகருமான ஜேசுதாஸ் கடந்த 1940-ம் ஆண்டு ஜனவரி 10-ந் தேதி பிறந்தார். இவருக்கு நேற்று 80-வது பிறந்த நாள் ஆகும்.

    இதையொட்டி அவர் கர்நாடகாவின் கொல்லூர் மூகாம்பிகை கோவிலில் தனது குடும்பத்தினருடன் சென்று வழிபட்டார். கேரள பாரம்பரிய உடையில் சிறப்பு பூஜைகள் செய்து அம்மனை வழிபட்ட அவருக்கு, அங்கு குழுமியிருந்த ஏராளமான ரசிகர்கள் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி

    பாடகர் ஜேசுதாசின் பிறந்த நாளையொட்டி அவருக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்தார். இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில் வெளியிட்ட வாழ்த்து செய்தியில், ‘80-வது பிறந்தநாள் கொண்டாடும் பன்முக திறன் வாய்ந்த ஜேசுதாஸ்ஜிக்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். அவரது மெல்லிசையும், ஆன்மாவை ஈர்க்கும் குரலும் அனைத்து வயதினரிடையேயும் அவரை பிரபலமாக்கியது. இந்திய கலாசாரத்துக்கு அவர் மதிப்புமிக்க பங்களிப்பை செய்துள்ளார். அவர் நீண்டகாலம் ஆரோக்கியமாக வாழ வாழ்த்துகிறேன்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

    கேரள முதல்-மந்திரி பினராயி விஜயனும், ஜேசுதாசுடன் தான் இருக்கும் புகைப்படம் ஒன்றை டுவிட்டரில் வெளியிட்டு வாழ்த்து கூறியிருந்தார். இதைப்போல திரைத்துறை, இசைத்துறை பிரபலங்கள் மற்றும் அரசியல், சமூக தலைவர்கள் என ஏராளமானோர் ஜேசுதாசுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.

    1961-ம் ஆண்டு முதல் இசைத்துறையில் தனது இனிய குரலால் ஆதிக்கம் செலுத்தி வரும் ஜேசுதாஸ், கர்நாடக இசை பஜனைகள், பக்தி பாடல்கள், திரைப்பட பாடல்கள் என 80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி சாதனை படைத்துள்ளார். இதில் திரைப்பட பாடல்கள் மட்டுமே 25 ஆயிரத்துக்கும் மேல் பாடியுள்ளார்.

    மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், பெங்காளி, ஒடியா என பெரும்பாலான இந்திய மொழிகளில் பாடியுள்ள ஜேசுதாஸ், ஆங்கிலம், அரபி, லத்தீன் மற்றும் ர‌ஷியன் போன்ற வெளிநாட்டு மொழிகளிலும் பாடியிருப்பது சிறப்பாகும். கேட்போரை கவர்ந்திழுக்கும் தெய்வீகமான குரலுக்கு சொந்தக்காரரான அவர், ‘கான கந்தர்வன்’ என இசை ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படுகிறார்.

    நாட்டின் மிகச்சிறந்த பாடகர்களில் ஒருவரான ஜேசுதாஸ் சிறந்த பின்னணி பாடகருக்கான தேசிய விருதை 8 முறையும், கேரள அரசின் விருதை 25 முறையும், தமிழகம் மற்றும் ஆந்திர அரசின் விருதுகளை முறையே 5 மற்றும் 4 முறையும் பெற்றுள்ளார். ஜேசுதாசின் கலை சேவையை பாராட்டி பத்மஸ்ரீ, பத்மபூ‌‌ஷண், பத்மவிபூ‌‌ஷண் விருதுகள் வழங்கி மத்திய அரசு கவுரவித்து உள்ளது.

    காமெடி நடிகராக வலம் வந்த நடிகர் வடிவேலு, என்னையும் என் குடும்பத்தையும் மிரட்டுவதாக தயாரிப்பாளர் பேட்டியளித்துள்ளார்.
    நடிகர் வடிவேலு எலி திரைப்படத்தில் நடித்த போது அந்த படத்தின் தயாரிப்பாளர் சதீஷ் குமாருக்கு தனது நண்பர் ராம்குமாரிடம் ஒன்றரை கோடி ரூபாய் வாங்கிக் கொடுத்ததாக கூறப்படுகிறது.

    அந்த பணத்தை திருப்பி கொடுக்காததால் வடிவேலு கொலை மிரட்டல் விடுத்ததாக சதீஷ் குமார் தரப்பில் மதுரை கே.புதூர் காவல்நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், தயாரிப்பாளர் சதீஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அவர் கூறியதாவது:-

    எலி திரைப்படத்தில் நடிகர் வலுவேலுவை நடிக்க வைத்து 10 கோடி ரூபாய் வரை நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தமிழ் திரையுலகில் பல படங்கள் நடிகர் வடிவேலுவால் பிரச்சினை ஆகி பாதியில் நிற்கிறது.

    வடிவேலு

    என்னுடைய வீட்டிற்கு நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் வந்து தகராறு செய்துள்ளார். மொத்தம் 14 கோடி ரூபாய் நஷ்டம் ஏற்பட்டுள்ளது. நஷ்டத்திற்கு ஈடாக 2 படங்கள் நடித்து தருவதாக கூறினார். ஆனால் அதை செய்யவில்லை.

    சம்பள பிரச்சினையை பேசித்தீர்த்துக்கொள்வோம் என கூறுகிறேன். நீதிமன்றமும் பேசி தீர்க்கவே கூறி உள்ளது. ஆனால் நடிகர் வடிவேலு என்னையும், என் குடும்பத்தினரையும் மிரட்டி வருகிறார். தகாத வார்த்தைகளில் பேசி வருகிறார். நடிகர் வடிவேலுக்காக மட்டுமே சினிமா நிறுவனத்தை தொடங்கினேன்.

    அவருக்கு இருந்த நல்ல பெயரால் அவரை முழுமையாக நம்பினேன். தற்போது நடிகர் வடிவேலுக்கு சம்பள பாக்கி இருப்பதால் நடிகர் வடிவேலுவின் உறவினரான மணிகண்டன் என்பவர் பணம் கேட்டு மிரட்டுகின்றார்’.

    இவ்வாறு அவர் கூறினார்.
    பிக்பாஸ் மூலம் மிகவும் பிரபலமான நடிகை சாக்‌ஷி அகர்வால், தற்போது வெளியிட்டிருக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    ரஜினியின் காலா, அஜித்தின் விஸ்வாசம் படங்களில் நடித்தவர் சாக்‌ஷி அகர்வால், சில படங்களில் நாயகியாகவும் நடித்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியின் 3-வது சீசனில் போட்டியாளராக கலந்து கொண்டு மிகவும் பிரபலமானார். தற்போது டெடி, சிண்ட்ரெல்லா போன்ற படங்களில் நடித்து வருகிறார். 

    இவர் எப்போதும் சமூக வலைத்தளங்களில் கவர்ச்சியான புகைப்படங்களை வெளியிட்டு வருவார். சமீபத்தில் கோவாவில் நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படங்களை வெளியிட்டிருந்தார். அந்த புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலானது. 

    சாக்‌ஷி அகர்வால்

    தற்போது புடவையில் இருக்கும் புகைப்படங்களை சாக்‌ஷி அகர்வால் வெளியிட்டிருக்கிறார். இது ரசிகர்களை அதிகளவில் கவர்ந்துள்ளது. இந்த புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.
    என்ன பிரச்சினை வந்தாலும் சொல்லு, நான் பார்த்துக் கொள்கிறேன் என்று நடிகையிடம் நடிகர் ஒருவர் உறுதியளித்திருக்கிறாராம்.
    கணவரை பிரிந்த அந்த மலையாள நடிகை தமிழ் பட உலகுக்கு தாமதமாகவே அறிமுகமாகி இருக்கிறாராம். இங்கே உள்ள கதாநாயகர்கள் அனைவரையுமே அவருக்கு பிடித்து இருக்கிறதாம். அதனால் அவருடைய நட்பு வட்டாரம் நாளுக்கு நாள் பெருகி வருகிறதாம்.

    “உனக்கு எந்த பிரச்சினை வந்தாலும், உடனே எனக்கு சொல்லிவிடு... நான் பார்த்துக் கொள்கிறேன்...” என்று நடிகையிடம் தன் வீர தீரங்களை ஜாடை மாடையாக காட்டி உறுதி அளித்தாராம், ஒரு பிரபல நடிகர்!
    பிரபல இந்தி நடிகையும், தனுஷுடன் ராஞ்சனா படத்தில் நடித்தவருமான சோனம் கபூர், விமான நிறுவனம் மீது சரமாரியாக விமர்சித்து புகார் கூறியிருக்கிறார்.
    இந்தி நடிகை சோனம் கபூர். அனில்கபூரின் மகளான இவர் தனுசுடன் ராஞ்சனா என்ற படத்தில் நடித்திருந்தார். இவர் பிரிட்டிஷ் ஏர்வேஸ் நிறுவனத்தை சரமாரியாக விமர்சித்துள்ளார்.

    சோனம் கபூர் தனது சமூக வலைத்தளப் பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    இந்த மாதம் மூன்று முறை பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்துள்ளேன். இதில் இரண்டு முறை எனது உடமைகளை இழந்து விட்டேன். அதை வேறு விமானத்தில் அனுப்பி வைத்து விட்டனர். இதில் இருந்து பாடம் கற்றுக் கொண்டேன். இனி பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமானத்தில் பயணம் செய்ய மாட்டேன்.

    இவ்வாறு அவர் கூறியிருக்கிறார்.

    இதை அந்த விமான நிறுவனத்துக்கும் டேக் செய்திருந்தார். இதற்கு மன்னிப்பு கேட்டுள்ள பிரிட்டிஷ் ஏர்வேஸ் விமான நிறுவனம், லக்கேஜ் தாமதத்துக்கு வருந்துகிறோம், இது பற்றி சரியாக தகவல் அளித்துள்ளீர்களா?’ என்று கேட்டிருந்தது.

    சோனம் கபூர் ட்விட்

    இதற்கு சோனம் கபூர் ‘எல்லாம் முடிந்துவிட்டது. நீங்கள்தான் இனி நடவடிக்கை எடுக்க வேண்டும். இது மோசமான நிர்வாக செயல்பாடு’ என்று கோபமாக பதில் கூறியுள்ளார்.

    இதையடுத்து அந்த விமான நிறுவனம் மீண்டும் மன்னிப்பு கேட்டுள்ளது. விரைவாக உங்கள் உடமைகள் கிடைக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம் என்று தெரிவித்துள்ளது.

    நடிகை பூஜா ஹெக்டேவும் இதை ஆமோதித்துள்ளார். அவர் ‘கடந்த மாதம் எனது 2 உடமைகளை தொலைத்து விட்டார்கள். பின்னர் கூரியர் மூலம் அனுப்பி வைத்தனர். இவர்களுக்கு இது வாடிக்கை என்று தெரிவித்துள்ளார்.
    ×