என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் பட்டாஸ் படத்தின் முதல் நாள் வசூல் பற்றிய விபரத்தை படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
    தனுஷ் நடிப்பில் தற்போது வெளியாகி இருக்கும் படம் 'பட்டாஸ்'. இப்படத்தை எதிர்நீச்சல், காக்கிச்சட்டை, கொடி படங்களின் இயக்குநர் துரை செந்தில்குமார் இயக்கியுள்ளார். தனுஷ் இப்படத்தில் இரட்டை வேடங்களில் நடித்துள்ளார். தனுஷுக்கு ஜோடியாக மெஹ்ரின் பிர்சாடா, சினேகா ஆகியோர் நடித்துள்ளனர். 

    சத்யஜோதி பிலிம்ஸ் தயாரித்த இப்படத்திற்கு விவேக்-மெர்வின் இசையமைத்துள்ளனர். அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து வெளியாகி இருக்கும் இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. 

    பட்டாஸ் வசூல்

    இந்நிலையில் இப்படம் தமிழ்நாட்டில் மட்டும் முதல் நாளில் ரூ. 6.5 கோடி வசூல் செய்திருப்பதாக படக்குழுவினர் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருக்கிறார்கள்.
    ஜெயகுமார், புன்னகை பூ கீதா தயாரிப்பில் தினேஷ், தீப்தி திவேஸ் நடிப்பில் உருவாகி வரும் ‘நானும் சிங்கிள் தான்’ படத்தின் முன்னோட்டம்.
    திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குகிறார் கோபி என்பவர் இயக்கியுள்ளார். இப்படம் குறித்து அவர் கூறும்போது, ‘சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே ‘நானும் சிங்கிள் தான்’ என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.

    தமிழ்சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம். 

    இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ் சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும் என்கிறார் இயக்குனர் கோபி. 
    யாரும் இல்லாத போது என்னை அழைத்தார் என்று நடிகை ரூபஞ்சனா மித்ரா இயக்குனர் மீது மீடூ புகார் அளித்துள்ளார்.
    நடிகர்கள், இயக்குனர்கள், தயாரிப்பாளர்கள் தொடர்ந்து ‘மீ டூ’ வில் சிக்கி வருகிறார்கள். நடிகர் நானா படேகர் மீது நடிகை தனுஸ்ரீதத்தா பாலியல் புகார் சொன்னார். நடிகை ஸ்ரீரெட்டி பட வாய்ப்பு அளிக்க படுக்கைக்கு அழைத்ததாக தெலுங்கு நடிகர்கள், இயக்குனர்களை அம்பலப்படுத்தினார்.

    இந்தி இயக்குனர்கள் சாஜித் கான், சுபாஷ் கபூர், சுபாஷ் கை, லவ் ரஞ்சன், நடிகர் அலோக் நாத் மற்றும் தமிழ் நடிகர்கள், இயக்குனர்கள் உள்ளிட்ட பலர் மீது ‘மீ டூ’ புகார் கூறப்பட்டது. இந்த நிலையில் பிரபல பெங்காலி இயக்குனர் அரிந்தம் செல் மீது நடிகை ரூபஞ்சனா மித்ரா ‘மீ டூ’ புகார் தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    அரிந்தம் செல் - ரூபஞ்சனா மித்ரா

    “இயக்குனர் அரிந்தம் செல் தனது அலுவலகத்துக்கு வரும்படி என்னை அழைத்தார். மாலை 5 மணிக்கு அவரது அலுவலகத்துக்கு நான் சென்றபோது அங்கு அவர் மட்டுமே இருந்தார். எனக்கு சந்தேகம் ஏற்பட்டது. அவர் திடீரென்று எழுந்து வந்து என்னை பிடித்து பின்னால் தள்ளிக்கொண்டு போனார்.

    அலுவலகத்தில் நாம் இருவர் மட்டுமே இருக்கிறோம் என்றார். அவரது ஆசைக்கு உடன்பட மறுத்தேன். சிறிது நேரத்தில் அவரது மனைவி அங்கு வந்தார். அதன்பிறகு நான் அரிந்தமின் அலுவலகத்தில் இருந்து அழுதபடியே வெளியே சென்றேன்.” இவ்வாறு அவர் கூறினார்.
    குடும்ப பிரச்சனை காரணமாக டி.வி. நடிகை ஜெயஸ்ரீ சென்னையில் அவரது இல்லத்தில் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.
    வம்சம் டி.வி. தொடரில் வில்லியாக நடித்து வருபவர் ஜெயஸ்ரீ. ஆபிஸ் என்ற தொடர் மூலம் பிரபலமானவர் ஈஸ்வர். இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். பின்னர், அடையாறு மகளிர் காவல் நிலையத்தில், தனது கணவர் ஈஸ்வர் அவரது தாயாருடன் சேர்ந்து கொண்டு கொடுமைபடுத்துவதாகவும், தொலைக்காட்சி தொடரில் நடித்து வரும் நடிகை ஒருவருடன் தொடர்பு வைத்துக்கொண்டு தன்னை கொடுமைப்படுத்துவதாக நடிகை ஜெயஸ்ரீ புகார் கொடுத்தார். 

    அதன்பின், தனக்கு கொலை மிரட்டல்கள் வருவதாகவும், கொலை மிரட்டல் விடுப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் ஜெயஸ்ரீ சமீபத்தில் கமிஷ்னர் அலுவலகத்தில் புகார் கூறினார். 

    மருத்துவமனையில் ஜெயஸ்ரீ

    இந்நிலையில், நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்துள்ளார். தற்போது சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் ஜெயஸ்ரீ சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீசார் விசாரணை நடத்தில் வருகிறார்கள்.
    தமிழில் வெற்றிப் படங்களில் நடித்து வரும் கதிர் மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷ் இருவரும் பிரபல இயக்குனர்கள் இயக்கும் வெப் தொடரில் நடிக்க இருக்கிறார்கள்.
    சினிமாவை அடுத்து வெப் தொடர்கள் ரசிகர்களை ஆக்கிரமிக்க தொடங்கி உள்ளன. இந்தியில் ஆரம்பித்த இந்த வெப் தொடர் மோகம் தமிழ், தெலுங்கிலும் பரவி உள்ளது. முன்னணி நடிகர், நடிகைகள் வெப் தொடர்களில் நடிக்க வருகிறார்கள். ஜெயலலிதாவின் வாழ்க்கை வெப் தொடராக வெளியாகி வரவேற்பை பெற்றுள்ளது.

    சத்யராஜ், பிரசன்னா, பாபிசிம்ஹா, நித்யாமேனன், பிரியாமணி, மீனா, தமன்னா இந்தி நடிகர்கள் அக்‌ஷய்குமார், அர்ஜுன் ராம்பால், ஜாக்கி ஷாரப். அபிஷேக் பச்சன், நவாஜூதின் சித்திக், விவேக் ஓபராய், நடிகைகள் கியூமா குரோஷி, கியாரா அத்வானி ஆகியோரும் வெப் தொடர்களில் நடிக்கிறார்கள்.

    கதிர் - ஐஸ்வர்யா ராஜேஷ்

    இந்த நிலையில் நடிகர் கதிர், நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் ஆகியோரும் புதிய வெப் தொடரில் நடிக்க உள்ளனர். இவர்கள் நடிக்கும் வெப் தொடரை புஷ்கர் காயத்ரி இயக்குகின்றனர். இதன் படப்பிடிப்பு விரைவில் தொடங்க உள்ளது.
    இசைஞானி இளையராஜாவுக்கு கேரள அரசு சபரிமலை சன்னிதானத்தில் ஹரிவராசனம் விருது கொடுத்து கௌரவப்படுத்தியுள்ளது.
    மத நல்லிணக்கம் மற்றும் தேசிய ஒருமைப்பாட்டுக்காக அதிக பங்களிப்பு அளித்தவர்களுக்கு ஹரிவராசனம் விருதை கேரளா அரசாங்கம் ஒவ்வொரு ஆண்டும் வழங்கி வருகிறது. இந்த விருதில் ரூ.1 லட்சம் பணம், சான்றிதழ் மற்றும் கேடயம் வழங்கப்படும்.

    கடந்த வருடம் ஹரிவராசனம் விருதை பாடகி பி.சுசிலாவுக்கு வழங்கப்பட்டது. இந்த நிலையில் தற்போது ஹரிவராசனம் விருது   இசையமைப்பாளர் இளையராஜாவுக்கு வழங்கப்பட்டது. சபரிமலை சன்னிதானத்தில் வைத்து நடைபெற்ற நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ஹரிவராசனம் விருது வழங்கப்பட்டது.

    இளையராஜா

    மேலும் இந்நிகழ்ச்சியில் இளையராஜாவுக்கு ‘வணக்கத்துக்குரிய இசைஞானி’ என்ற பட்டமும் வழங்கப்பட்டது. ஹரிவராசனம் விருது பாடகர்கள் எஸ்.பி.பாலசுப்பிரமணியம், கே.ஜே.ஜேசுதாஸ், கே.எஸ்.சித்ரா உள்ளிட்டோருக்கும் ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
    லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் இன்று மாலை வெளியிட்டுள்ளது.
    சென்னை:

    விஜய்யின் 64-வது படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ், மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, கவுரி கி‌ஷன், வி.ஜே.ரம்யா, ஸ்ரீமன் உள்ளிட்ட பலர் விஜய்யுடன் நடித்துள்ளனர். சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்துள்ள இந்த படத்துக்கு அனிருத் இசையமைத்து வருகிறார். கோடை விடுமுறைக்கு வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. 

    இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இதன் பர்ஸ்ட் லுக் போஸ்டரை புத்தாண்டை முன்னிட்டு படக்குழு கடந்த டிசம்பர் 31-ம் தேதி வெளியிட்டது. இதில் விஜய்யின் லுக் மட்டும் இடம் பெற்றிருந்தது.

    இதற்கிடையே, இந்த படத்தின் செகண்ட் லுக் போஸ்டரை பொங்கல் தினத்தில் மாலை 5 மணிக்கு வெளியிட இருப்பதாக படக்குழுவினர் அறிவித்திருந்தனர். 

    இந்நிலையில், விஜய், விஜய் சேதுபதி நடிப்பில் உருவாகி வரும் மாஸ்டர் படத்தின் இரண்டாவது போஸ்டரை தயாரிப்பு நிறுவனம் இன்று மாலை வெளியிட்டது. அதிலும் விஜய் மட்டுமே இடம்பெற்றுள்ளார்,
    துரை செந்தில் குமார் இயக்கத்தில் தனுஷ், சினேகா, மெஹ்ரின் பிர்சாடா நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘பட்டாஸ்’ படத்தின் விமர்சனம்.
    குப்பத்து பகுதியில் வாழ்ந்து வரும் நாயகன் தனுஷ், சின்ன சின்ன திருட்டுகளை செய்து வருகிறார். அதே பகுதியில் இருக்கும் நாயகி மெஹ்ரின் பிர்சாடா அதிகமாக சம்பாதிப்பதால் அந்த ஏரியாவையே அராத்து பண்ணி வருகிறார். இவருடைய ஆட்டத்தை அடக்க திட்டம் போடும் தனுஷ், நவீன் சந்திரா நடத்தும் கிக் பாக்ஸிங் கிளப்பில் மெஹ்ரின் பிர்சாடா வேலை செய்வதை அறிந்துக் கொள்கிறார்.

    கிக் பாக்ஸிங் கிளப்பிற்கு சென்று அங்கு இருக்கும் பொருட்களை திருடி மெஹ்ரினை சிக்க வைக்கிறார் தனுஷ். இதனால் மெஹ்ரினின் வேலைக்கு ஆபத்து வருகிறது. ஒரு கட்டத்தில் தனுஷிடம் கிக் பாக்ஸிங்கில் இருக்கும் சர்ட்டிபிகேட் ஒன்றை எடுத்து வரும்படி மெஹ்ரின் உதவி கேட்க, அவரும் அங்கு செல்கிறார்.

    பட்டாஸ் விமர்சனம்

    இதே சமயம் ஜெயில் இருந்து வரும் சினேகா, கிக் பாக்ஸிங் கிளப்பின் உரிமையாளர் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார். அப்போது தீ விபத்து ஏற்படுகிறது. இதிலிருந்து சினேகாவை காப்பாற்றுகிறார் தனுஷ். மேலும் தனுஷை பார்த்தவுடன் சினேகா அதிர்ச்சியடைகிறார். 

    இறுதியில் சினேகா ஏன் நவீன் சந்திராவை கொல்ல முயற்சி செய்கிறார். தனுஷை கண்டு சினேகா அதிர்ச்சியடைய காரணம் என்ன? என்பதே படத்தின் மீதிக்கதை.

    பட்டாஸ் விமர்சனம்

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் தனுஷ், இரட்டை வேடத்தில் அசத்தி இருக்கிறார். தந்தை, மகன் என்று நடிப்பில் வித்தியாசம் காண்பித்திருக்கிறார். முதல் பாதியில் புள்ளிங்கோ ஸ்டைலில் துறுதுறு இளைஞனாகவும், பிற்பாதியில் அடிமுறை என்னும் தற்காப்பு கலை சொல்லி தரும் ஆசானாகவும் பளிச்சிடுகிறார். குறிப்பாக முதற்பாதியில் காமெடியில் கலக்கி இருக்கிறார். ஆக்‌ஷன் காட்சிகளில் அதிக மெனகெட்டிருக்கிறார்.

    சினேகாவிற்கு படத்தில் நடிக்க அதிக வாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ளது. கதாபாத்திரத்தை உணர்ந்து சிறப்பாக நடித்திருக்கிறார். நடிப்பு மட்டுமில்லாமல் சண்டைக் காட்சியிலும் கவனிக்க வைத்திருக்கிறார். மற்றொரு நாயகியாக வரும் மெஹ்ரின் பிர்சாடா அழகு பதுமையாக வருகிறார். கொடுத்த கதாபாத்திரத்தை செவ்வனே செய்திருக்கிறார். முனிஸ்காந்த் மற்றும் தனுஷின் நண்பராக வருபவரின் காமெடி கைக்கொடுத்திருக்கிறது. அனுபவ நடிப்பால் கைத்தட்டல் பெற்றிருக்கிறார் நாசர். வில்லத்தனத்தில் மிரட்டி இருக்கிறார் நவீன் சந்திரா. 

    பட்டாஸ் விமர்சனம்

    அடிமுறை என்னும் தற்காப்பு கலையை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் இயக்குனர் துரை செந்தில் குமார். கதாபாத்திரங்களிடையே சிறப்பாக வேலை வாங்கி இருக்கிறார். நம்மிடம் இருந்து தோன்றிய கலைகள் பிரிந்து வேறொரு பெயரில் உருவாகி பிரபலமாகி இருக்கிறது. நம்மிடம் இருக்கும் கலையை வளர்க்க வேண்டும் என்ற கருத்தை சொல்லியிருக்கிறார் இயக்குனர். இத்துடன் திரைக்கதைக்கு தேவையான காதல், காமெடி, ஆக்‌ஷன் கலந்து ரசிக்கும் படி கொடுத்திருக்கிறார்.

    விவேக் மெர்வின் இசையில் பாடல்கள் ஏற்கனவே வெளியாகி சூப்பர் ஹிட்டாகி உள்ளது. ஓம் பிரகாஷின் ஒளிப்பதிவோடு பார்க்கும் போது கண்களுக்கு விருந்து படைத்திருக்கிறது. ஆக்‌ஷன் காட்சிகளில் ஓம் பிரகாஷின் கேமரா சிறப்பாக விளையாடி இருக்கிறது.

    மொத்தத்தில் ‘பட்டாஸ்’ சிறப்பான வெடி. ரேட்டிங் 3/5.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா - இயக்குனர் விக்னேஷ் சிவனின் காதலை மையமாக வைத்து ஒரு படம் உருவாகியுள்ளது.
    திரி இஸ் ஏ கம்பெனி என்ற பட நிறுவனம் மற்றும் ஜெயகுமார், புன்னகை பூ கீதா ஆகியோர் இணைந்து தயாரித்துள்ள படம் ‘நானும் சிங்கிள் தான்’. இந்த படத்தில் தினேஷ் கதாநாயகனாக நடித்துள்ளார். கதாநாயகியாக தீப்தி திவேஸ் நடித்துள்ளார். மற்றும் மொட்ட ராஜேந்திரன், மனோபாலா, செல்வேந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

    டேவிட் ஆனந்த்ராஜ் ஒளிப்பதிவு செய்யும் இப்படத்திற்கு ஹித்தேஷ் மஞ்சுநாத் இசையமைத்து வருகிறார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கியுள்ளார் கோபி.

    இப்படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘சிங்கிள் என்ற வார்த்தை தற்போது மிகவும் கேட்சிங்கானது. அதன் அடிப்படையிலே ‘நானும் சிங்கிள் தான்’ என்ற டைட்டிலோடு களம் இறங்கி இருக்கிறோம். டைட்டில் போலவே கண்டெண்டிலும் தனிக் கவனம் செலுத்தி இருக்கிறோம்.

    தினேஷ்- தீப்தி

    தமிழ் சினிமாவில் நடிகை நயன்தாராவின் காதல் மிகப்பிரபலம். அந்தக்காதலை அடிப்படையாக வைத்தே ஒரு கதையை தயார் செய்துள்ளோம். நயன்தாரா - விக்னேஷ் சிவன் ஜோடி பலர் ஆசீர்வதிக்கும் ஜோடியாக இருந்தாலும் இப்போது வரை சிலரால் ஆச்சர்யமாக பார்க்கும் ஜோடியும் கூட.

    இந்த படத்தின் ஹீரோவின் லட்சியமே நயன்தாரா போல் ஒரு பெண்ணை திருமணம் செய்ய வேண்டும் என்பது தான். தமிழ்சினிமாவில் பெரிதாக கல்லா கட்டிய படமான அஜித்தின் பில்லா படத்தில் நயன்தாரா டாட்டூ குத்தி இருப்பார். அந்த டாட்டூ குத்திய நபராக இப்படத்தின் ஹீரோ வருகிறார். நயனுக்கு டாட்டூ குத்திய ஹீரோ தன் ஹார்ட்டைப் பறிகொடுக்க காதல் பேய்ப் பிடித்து திரிவது தான் கதை. இதற்குள் நயன் விக்னேஷ் சிவன் காதல் சமாச்சாரமும் இருக்கும் என்றார். இப்படம் பிப்ரவரி மாதம் வெளியாக உள்ளது.
    நவீன் மணிகண்டன் இயக்கத்தில் விகாஷ், மதுமிதா, டெல்லி கணேஷ், சித்ரா நடிப்பில் வெளியாகி இருக்கும் என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா படத்தின் விமர்சனம்.
    நாயகன் விகாஷ் ஊரில் வேலைக்கு ஏதும் போகாமல் நண்பர்களுடன் ஊர் சுற்றி வருகிறார். இவரது அப்பா டெல்லி கணேஷ், மகன் பொறுப்புள்ளவனாக மாற வேண்டும் என்று நினைக்கிறார். ஆனால், விகாஷோ சங்கம் ஒன்று அமைத்து ஊரில் உள்ள பிரச்சனையில் தலையிட்டு வருகிறார்.

    இந்நிலையில், நாயகி மதுமிதாவை பார்த்தவுடன் காதல் வயப்படுகிறார். ஒரு கட்டத்தில் இருவரும் காதலித்து வரும் நிலையில், இவர்களின் காதலுக்கு பிரச்சனை ஏற்படுகிறது. அது என்ன பிரச்சனை? அதை எப்படி விகாஷ் சமாளித்தார்? இருவரும் ஒன்று சேர்ந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா

    படத்தின் நாயகனாக நடித்திருக்கும் விகாஷ், காதல், காமெடி, ஆக்‌ஷன் என்று நடிப்பில் கவர முயற்சி செய்திருக்கிறார். நாயகி மதுமிதா கொடுத்த வேலையை செய்திருக்கிறார். சின்னத்திரையில் பிரபலமான ராமர் காமெடியில் கலக்கி இருக்கிறார். குறிப்பாக ராகுல் தாத்தா இரண்டு தோற்றங்களில் ரசிக்க வைத்திருக்கிறார். 

    அப்பாவாக நடித்திருக்கும் டெல்லி கணேஷின் அனுபவ நடிப்பு படத்திற்கு பலம் சேர்த்திருக்கிறது. அம்மாவாக நீண்ட இடைவெளிக்குப் பிறகு சித்ரா நடித்திருக்கிறார். இவருடைய நடிப்பும் கவனிக்க வைத்திருக்கிறது.

    என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா

    வழக்கமான காதல் கதையை காமெடி கலந்து சொல்லியிருக்கிறார் இயக்குனர் நவீன் மணிகண்டன். காதல் காட்சிகளை விட காமெடி காட்சிகள் ஓரளவிற்கு கைக்கொடுத்திருக்கிறது. டெல்லி கணேஷின் பிளாஸ்பேக் காட்சி ரசிக்க வைக்கிறது.

    எஸ்.ஆர்.ராமின் இசையில் இரண்டு பாடல்கள் கேட்க வைக்கிறது. லோகேஷின் ஒளிப்பதிவில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    மொத்தத்தில் ‘என் சங்கத்து ஆள அடிச்சவன் எவன்டா’ சுமாரானவன்.
    தொடர் தோல்விகளை சந்தித்து வரும் நடிகர், அடுத்ததாக நடிக்கும் படத்தில் அந்த நடிகையுடன் நடிக்க மாட்டேன் என்று கூறியிருக்கிறாராம்.
    தொடர் தோல்விகளால் பாதிக்கப்பட்டுள்ள கடவுளின் பெயரை கொண்ட கதாநாயகன் அடுத்து ஒரு வெற்றி படம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறாராம். அவருடைய அடுத்த படத்துக்கு கதாநாயகியாக ஏற்கனவே ஒரு படத்தில் அவருடன் நடித்த ஐந்தெழுத்து நடிகையின் பெயரை தயாரிப்பாளர் சிபாரிசு செய்தாராம்.

    இதை கேட்ட நடிகர், “அந்த நடிகை நடித்த 4 படங்கள் தொடர் தோல்விகளை தழுவி இருக்கிறது. அதனால் அவர் வேண்டவே வேண்டாம்” என்று கதாநாயகன் கூறிவிட்டாராம்!
    டூ லெட் படத்தின் மூலம் பிரபலமான நடிகர் சந்தோஷ் நம்பிராஜன், தற்போது நடித்து சிங்கப்பூர் பொங்கல் என்ற பாடலை உருவாக்கி இருக்கிறார்.
    டூ லெட் படம் மூலம் பலருடைய கவனத்தை ஈர்த்தவர் நாயகன் சந்தோஷ் நம்பிராஜன். இவர் தற்போது சிங்கப்பூர் பொங்கல் என்ற பாடலை உருவாக்கி நடித்து இயக்கி இருக்கிறார். சூப்பர் சிங்கர் வெற்றியாளர்கள் செந்தில் கணேஷ், ராஜலட்சுமி ஆகியோர் இந்த பாடலை பாடியிருக்கிறார்கள். 

    இப்பாடல் குறித்து சந்தோஷ் நம்பிராஜன் கூறும்போது, ‘தமிழர்கள் சாதி, மதம், நாடு கடந்து கொண்டாடும் பண்டிகை பொங்கல். மிக பிரமாண்டமாக சிங்கப்பூர், மலேசியா, மதுரையில் படப்பிடிப்பு நடந்துள்ளது. சிங்கப்பூர் தமிழுக்கும் தமிழர்களுக்கும் உலகில் வேறு எங்கும் இல்லாத சிறப்பு அங்கீகாரமான ஆட்சி மொழியை முதன்முதலில் தந்துள்ளது. இது தமிழுக்கும் தமிழர்களுக்கும் பெருமை. அதனால் தான் 'சிங்கப்பூர் பொங்கல்' தமிழர் திருநாள் பாடல் சிங்கப்பூரில் உருவாக காரணம்’ என்றார். மேலும் 2020ல் முதல் படம் ஆரம்பிக்க உள்ளது, அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு வெளியாகும் என்று சந்தோஷ் நம்பிராஜன் கூறினார்.



    இந்த பாடலை வடிவரசு எழுத ஷர்வன் கலை இசையமைத்திருக்கிறார். ஹாலிவுட், பாலிவுட் கோலிவுட் போல சிங்காவுட் நிறுவனம் சிங்கப்பூர் தலைமையிடமாக கொண்டு பல நல்ல படங்களை உருவாக்க போகிறது. சிங்கப்பூர் உள்ளூர் கலைஞர்களையும், நடிகர்களையும் உலகறியச் செய்ய போவதாக இந்த பாடலின் தயாரிப்பாளர்கள் லோகன் மற்றும் சரஸ் கூறியுள்ளார்கள்.

    ×