என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    பிரபல ஓவியர் மற்றும் நடிகர் ஏ.பி.ஸ்ரீதர், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு சிகிச்சையளிக்கும் செவிலியர்கள், மருத்துவ உதவியாளர்களுக்கு சிறிய அர்ப்பணிப்பை கொடுத்திருக்கிறார்.
    ஓவியங்கள் மூலம் உலக அளவில் பெயர் பெற்றவர் ஏ.பி.ஸ்ரீதர். இவருடைய கைவண்ணத்தில் கிளிக் ஆர்ட், 3டி ஓவியம், மெழுகு சிலை உள்ளிட்ட பலவகை உள்ளது. அதுபோல் சமூகத்தில் நடக்கும் பிரச்சனைகளுக்கு, இயற்கை சீற்றத்திற்கும் இவர் ஓவியங்கள் மூலம் குரல் கொடுத்து வருகிறார். இவர் ஓவியர் மட்டுமில்லாமல், ஆந்திரா மெஸ், ஜடா படத்தில் வில்லனாக நடித்திருக்கிறார்.

    ஏ.பி.ஸ்ரீதரின் ஓவியம்

    தற்போது உலகமே கொரோனா வைரஸ் என்ற நோயின் பிடியில் சிக்கி தவித்து வருகிறது. சீனாவில் தொடங்கிய இந்த நோயின் தாக்கம் உலக நாடுகள் முழுக்க பரவி மக்களுக்கும் மக்களை காப்பாற்றும் மருத்துவர்களுக்கும் மிகப் பெரும் அச்சுறுத்தலை ஏற்படுத்தி இருக்கிறது. இந்த சூழலில் மக்களுக்கு நம்பிக்கையையும் தைரியத்தையும் கொடுப்பதற்காகவும் அவர்களை இந்த நோயில் இருந்து மீட்க தன்னலமற்று போராடும் மருத்துவர்கள், செவிலியர்களுக்கும் ஒரு சின்ன பங்களிப்பை கொடுத்திருக்கிறார் ஓவியர் ஏ.பி.ஸ்ரீதர்.

    ஏ.பி.ஸ்ரீதரின் ஓவியம்

    இதுகுறித்து ஏ.பி.ஸ்ரீதர் கூறும்போது, ‘ கொரோனா வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டவர்கள் மட்டுமின்றி அதற்கு சிகிச்சை அளிக்கும் மருத்துவர்கள் செவிலியர்கள் மருத்துவ உதவியாளர்கள் இவர்கள் அனைவருமே இந்த நோயில் இருந்து மக்களை காப்பாற்ற மிகப் பெரும் பங்காற்றி வருகிறார்கள். தங்கள் உயிரைப் பணயம் வைத்து நோயாளிகளை காப்பாற்ற போராடும் மருத்துவர்களுக்கும் செவிலியர்களுக்கும் எனது சிறிய அர்ப்பணிப்பு தர விரும்புகிறேன். அவர்களது சீரிய பணிக்கு செய்யும் சிறிய கைமாறாக என்னுடைய இந்த ஓவியங்களை அர்ப்பணிக்கிறேன்’ என்றார்.
    இசையமைப்பாளர் இளையராஜா நிருபர்களுக்கு பேட்டி அளிக்கும் போது, என்னால் அப்படி செய்ய முடியாது என்று கூறியிருக்கிறார்.
    இசையமைப்பாளர் இளையராஜாவின் இசை நிகழ்ச்சி அடுத்த மாதம் (மார்ச்) 27-ந் தேதி துபாயில் நடக்கிறது. இதுகுறித்து துபாயில் இளையராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, தற்போது தமிழ் பட உலகில் இருக்கும் இசையமைப்பாளர்கள், திரைப்படங்களுக்கு சுதந்திரமாக இசையமைக்கிறார்களா? என்று கேள்வி எழுப்பப்பட்டது.

    அதற்கு பதில் அளித்து இளையராஜா கூறியதாவது:-

    இசையமைப்பாளர்களுக்கு சுதந்திரம் இல்லை என்று யாரும் சொல்லவில்லை. ஆனாலும் அவர்கள் விருப்பத்துக்கு இசையமைத்தால் அதை முழு சுதந்திரம் என்று எப்படி சொல்ல முடியும்? சுதந்திரமாக இசையமைப்பதால் மட்டுமே பாடல்கள் நிற்பதில்லை. ஒரே விஷயத்தை அதே மாதிரி ஏன் திரும்ப செய்ய வேண்டும்.

    இளையராஜா

    குறிப்பிட்ட பாடலை சொல்லி அதுமாதிரியான பாடல் வேண்டும் என்று யாராவது கேட்டால் என்னால் கொடுக்க முடியாது. மற்றவர்கள் அதே மாதிரி பாடலை உருவாக்கி கொடுக்கலாம். ஆனால் என்னால் அப்படி செய்ய முடியாது. ஒவ்வொரு பாடலையும் புதிதாகத்தான் உருவாக்குவேன்.

    பாடல்கள் நன்றாக இருக்கலாம். அல்லது அந்த பாடல்கள் நன்றாக இல்லாமல் போகலாம். யாராக இருந்தாலும் 7 ஸ்வரங்களை பயன்படுத்தித்தான் பாடல்களை உருவாக்குகிறார்கள். அதே ஸ்வரம் என் கைக்கு வரும்போது புதுமாதிரி ஆகிறது. மற்றவர்களின் கைக்குள் போகும்போது அவர்களுக்கு ஏற்ற மாதிரி அந்த ஸ்வரம் மாறிக்கொள்கிறது.

    இவ்வாறு இளையராஜா கூறினார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தா, ரசிகர்கள் திரிஷாவை மறந்துவிடுவார்கள் என தெரிவித்துள்ளார்.
    விஜய் சேதுபதி - திரிஷா நடித்த '96' படத்தின் தெலுங்கு ரீமேக்கான 'ஜானு'வில் சர்வானந்தும், சமந்தாவும் நடித்துள்ளனர். இந்த படத்தின் டீசர் வெளியானதில் இருந்தே திரிஷா நடிப்புடன் சமந்தாவை ஒப்பிட்டு பேசி வருகிறார்கள். இந்த நிலையில் சமீபத்திய பேட்டியில் சமந்தா கூறியதாவது: இதுவரை நான் நடித்த அனைத்து படங்களையும் விட சிறப்பான நடிப்பை இந்த படத்தில் கொடுத்திருக்கிறேன். 

    முக்கியமாக திரிஷாவின் நடிப்பை நகலெடுக்க விரும்பாமல் எனது சாயலில் நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறேன். அதனால் அவரது நடிப்பில் இருந்து ஜானுவில் மாறுபட்ட சமந்தாவை பார்க்கலாம். 96 படத்தைப் பொறுத்தவரை திரிஷா சிறப்பாக நடித்திருந்தார். அதில் எந்த மாற்றமும் இல்லை. 

    சமந்தா, திரிஷா

    ஆனபோதும் ஜானு படம் பார்க்க தியேட்டருக்கு வரும் ரசிகர்கள், திரிஷாவை மறந்து விடுவார்கள். ஜானுவான சமந்தாவைத்தான் மனதில் கொள்வார்கள். அந்த அளவுக்கு சர்வானந்துடன் எனது கெமிஸ்ட்ரி பல அதிசயங்களை வெளிப்படுத்தியிருக்கிறது என தெரிவித்துள்ளார்.
    பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்கத்தில் விமல், காருண்ய கேதரின் நடிப்பில் உருவாகி வரும் சோழநாட்டான் படத்தின் முன்னோட்டம்.
    பாரிவள்ளல் தயாரிப்பில் பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்கி வரும் புதிய படம் ‘சோழநாட்டான்’. இப்படத்தில் விமல் நாயகனாக நடிக்கிறார். அவருக்கு ஜோடியாக காருண்ய கேதரின் என்ற அழகி, நடிக்கிறார். மேலும் தென்னவன், நாகி நாயுடு, டேனியல் பாலாஜி, சென்ட்ராயன், போஸ் வெங்கட், சீதா ஆகியோரும் நடிக்கிறார்கள். 

    விமல், காருண்ய கேதரின்

    மிக முக்கியமான ஒரு வில்லன் வேடத்தில், முன்னணி நடிகர் ஒருவர் நடிக்கிறார். ‘சோழநாட்டான்’, வரலாற்று பின்னணியில், முழுக்க முழுக்க அதிரடி சண்டை காட்சிகள் நிறைந்த திகில் படம். இதுவரை நடித்திராத ஒரு வேடத்தில், விமல் நடிக்கிறார். வரலாற்று கதையில் இவர் நடிக்கும் முதல் படம், இதுவாகும்.
    நடிகை ராஷ்மிகா திரைப்படத்திற்கு டப்பிங் பேச மறுப்பதாக செய்திகள் பரவி வரும் நிலையில், இயக்குனர் நந்தா கிஷோர் அதுகுறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    கீதா கோவிந்தம், டியர் காம்ரேட் படங்கள் மூலம் புகழ் வெளிச்சம் பெற்ற நாயகி ராஷ்மிகா மந்தனா, தற்போது தெலுங்கில் பிசியான நடிகையாக நடித்துக் கொண்டிருக்கிறார். தமிழில் கார்த்தி உடன் சுல்தான் படத்தில் நடித்தவர், அடுத்ததாக சூர்யாவின் படத்திலும் நடிக்க இருப்பதாக கூறப்படுகிறது. தாய் மொழியான கன்னடத்தில் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு இவர் நடிக்க ஒப்புக்கொண்ட படம் தான் 'பொகரு'. 

    துருவ் ஷார்ஜா ஹீரோவாக நடித்துள்ள இந்த படத்தின் படப்பிடிப்பு பணிகள் முடிவடைந்து, டப்பிங் வரைக்கும் வந்துவிட்டது. ஆனால் இந்த படத்திற்கு டப்பிங் பேச ராஷ்மிகா நேரம் ஒதுக்காததால் நீண்ட நாட்களாக இந்த படம் கிடப்பிலேயே கிடக்கிறது. ராஷ்மிகா பிசியான நடிகையாகிவிட்டால் தேதி கொடுக்காமல் இழுத்தடிக்கிறார் என்று தற்போது செய்திகள் பரவ துவங்கியுள்ளன. 

    ராஷ்மிகா

    ஆனால் படத்தின் இயக்குனர் நந்தா கிஷோர் இதை மறுத்துள்ளார். இதுபற்றி அவர் கூறும்போது, "ராஷ்மிகா ஏற்கனவே இந்த படத்திற்கான பாதி டப்பிங் பேசிவிட்டார். தற்போது அவர் பிசியான நடிகையாக இருப்பதால் அவருக்கு ஏற்றபடி சென்னையிலோ அல்லது ஐதராபாத்திலோ டப்பிங் பேசுவதற்கான ஏற்பாடுகளை செய்து தர நாங்கள் தயாராகவே இருக்கிறோம். 

    ஆனால் இதுபற்றி அவரிடம் கூறினால், அவரோ "ஏன் சார்.. நான் என்ன தவறு செய்தேன். என் சொந்த ஊரிலேயே வந்து நான் டப்பிங் பேசி தருகிறேன் என்று சொல்வது தவறா" என்று கூறி சென்னை மற்றும் ஐதராபாத்தில் டப்பிங் பேச விரும்பவில்லை என்று தெரிவித்துவிட்டார். அதனால் அவர் பெங்களூர் வருவதற்காக காத்துக் கொண்டிருக்கிறோம்" என்று கூறியுள்ளார். 
    தமிழில் முன்னணி நடிகராக இருக்கும் தனுஷ், அடுத்ததாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நித்யா மேனன் நடிக்க உள்ளார்.
    தனுஷ் நடிப்பில் கடந்த மாதம் வெளியான பட்டாஸ் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்தை தொடர்ந்து கார்த்திக் சுப்புராஜ் இயக்கும் சுருளி படத்தில் தனுஷ் நடித்து முடித்துள்ளார். தற்போது மாரி செல்வராஜ் இயக்கும் கர்ணன் படத்தில் தனுஷ் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. 

    இந்தி படம் ஒன்றிலும் தனுஷ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். ஆனந்த் எல் ராய் இயக்கும் இப்படத்திற்கு ’அட்ராங்கி ரே’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் தனுஷ் நடிக்கும் 43-வது படம் குறித்த தகவல் வெளியானது. அப்படத்தை கார்த்திக் நரேன் இயக்க உள்ளார்.

    தனுஷ், நித்யா மேனன்

    இதனை தொடர்ந்து தனுஷின் 44-வது படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தை தனுஷ் கதை, திரைக்கதை எழுத உள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் இப்படத்தில் தனுஷுக்கு ஜோடியாக நடிக்க நித்யா மேனன் ஒப்பந்தமாகியுள்ளார். இவர் நடிப்பில் சமீபத்தில் வெளியான சைக்கோ திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது.
    தமிழ் திரையுலகில் முன்னணி காமெடி நடிகராக இருக்கும் யோகிபாபு, ரகசிய திருமணம் செய்தது ஏன் என்பது குறித்து விளக்கம் அளித்துள்ளார்.
    காமெடி நடிகர் யோகி பாபு, திடீரென நேற்று முன்தினம் வேலூரை சேர்ந்த மஞ்சு பார்கவி என்ற பெண்ணை திருமணம் செய்து கொண்டார். இந்த ரகசிய திருமணம் குறித்து யோகி பாபு அளித்த பேட்டியில் கூறியதாவது: எதிர்பாராது சில குடும்ப சூழல் காரணமாக அவசர நிலையில் நான் திருமணம் செய்ய வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டேன். 

    அதனால் யாருக்கும் முறைப்படி அழைக்கவும் திருமணத்தில் உங்களுடைய வாழ்த்துக்களை பெறவும் முடியவில்லை என்கிற வருத்தம் எனக்கு இருக்கிறது. அனைவரும் என்னுடைய குடும்ப சூழலை புரிந்து கொள்ள வேண்டும் என்று இங்கு நான் சொல்ல விரும்புகிறேன். எதிர்பாராத சில சந்தர்ப்பங்களில் எதிர்பாராத சில சூழ்நிலைகள் என் திருமணத்தை அவசர நிலையில் நடத்த வேண்டிய நிலையில் நான் இருந்தேன்.

    மனைவியுடன் யோகிபாபு

    என்ன முடிவு எடுப்பது என்று நான் குழப்பமான நிலையில் இருந்தேன். இரண்டு குடும்பத்தாரிடமும் உட்கார்ந்து பேசி சில முடிவுகள் எடுத்தோம். என் திருமணத்திற்கு முறைப்படி நான் யாரையும் அழைக்கவில்லை என்ற வருத்தங்களும், கோபங்களும் பலருக்கு இருந்து இருக்கலாம். 

    ஆனாலும், என்னை தொலைபேசியில் அழைத்து வாழ்த்துக்கள் மூலமும் அனைத்து சமூகவலைதளங்களிலும் படத்தை வெளியிட்டு வாழ்த்துக்கள் சொன்ன உங்கள் ஒவ்வொருவரையும் கைபிடித்து நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். மார்ச் மாதம் என் திருமண வரவேற்பு நடைபெற உள்ளது. அனைவரையும் முறைப்படி அழைத்து உங்கள் வாழ்த்துக்களை பெற இருக்கிறேன். விரைவில் நாம் சந்திப்போம் என்றார்.
    தனசேகரன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, மடோனா செபாஸ்டியன், ஐஸ்வர்யா ராஜேஷ், ராதிகா, சரத்குமார் ஆகியோர் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘வானம் கொட்டட்டும்’ படத்தின் விமர்சனம்.
    சரத்குமார் தனது அண்ணன் பாலாஜி சக்திவேலை கொல்ல முயற்சித்தவர்களை கொலை செய்து விட்டு சிறைக்கு சென்றுவிடுகிறார். பின்னர் சரத்குமாரின் மனைவி ராதிகா தனது பிள்ளைகள் விக்ரம் பிரபு மற்றும் ஐஸ்வர்யா ராஜேஷுடன் சென்னைக்கு குடியேறுகிறார். கஷ்டப்பட்டு உழைத்து குழந்தைகளை வளர்த்து ஆளாக்குகிறார். முதலில் டிரைவராக வேலைபார்த்து வரும் விக்ரம் பிரபு, பின்னர் கோயம்பேடு மார்க்கெட்டில் சொந்தமாக வாழை மண்டி ஆரம்பிக்கிறார். 

    அவரின் தங்கை ஐஸ்வர்யா ராஜேஷ் சட்டக்கல்லூரியில் படித்து வருகிறார். இந்த சூழலில் கொலை வழக்கில் 16 ஆண்டுகளாக சிறைவாசம் அனுபவித்த சரத்குமார், விடுதலையாகி குடும்பத்தை பார்க்க ஆவலோடு வருகிறார். ஆனால் விக்ரம் பிரபுவும், ஐஸ்வர்யா ராஜேஷும் அவரை ஏற்க மறுக்கிறார்கள். இதனிடையே, சிறையில் இருந்து வந்த சரத்குமாரை தீர்த்து கட்ட, அவர் கொலை செய்தவரின் மகனான நந்தா துடித்து கொண்டிருக்கிறார். இதன் பின்னர் என்ன நடந்தது என்பதே படத்தின் மீதிக்கதை.

    வானம் கொட்டட்டும்

    நாயகன் விக்ரம் பிரபு, சாதிக்கத்துடிக்கும் இளைஞனாக தனது கதாபாத்திரத்தின் தன்மையை உணர்ந்து சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி உள்ளார். அதேபோல் ஐஸ்வர்யா ராஜேஷ் குறும்புத்தனமான தங்கையாக வந்து கவர்கிறார். அவருக்கு விக்ரம்பிரபுவுக்கும் இடையேயான அண்ணன் - தங்கை பாசம் ரசிக்க வைக்கிறது.

    படத்தின் மிகப்பெரிய பலம் சரத்குமாரும், ராதிகாவும் தான். நீண்ட நாட்களுக்கு பின் ஜோடியாக நடித்துள்ள இருவரும் தங்களது அனுபவ நடிப்பால் ஸ்கோர் செய்கிறார்கள். சாந்தனு மற்றும் மடோனா செபஸ்டியனுக்கு அதிக முக்கியத்துவம் இல்லை என்றாலும் கொடுத்த வேலையை கச்சிதமாக செய்துள்ளனர்.

    வானம் கொட்டட்டும்

    இரட்டை வேடத்தில் நடித்துள்ள நந்தா, சரத்குமாரை பழிவாங்க துடிக்கும் வில்லனாக வந்து பார்வையிலேயே மிரட்டுகிறார். மேலும் பாலாஜி சக்திவேல், மதுசூதனன் ஆகியோர் எதார்த்தமாக நடித்துள்ளனர். 

    இயக்குனர் தனசேகரன் அறிமுக படத்திலேயே கதைக்கு ஏற்றபடி கதாபாத்திரங்களை தேர்ந்தெடுத்த விதமும், அதனை கையாண்டுள்ள விதமும் சிறப்பு. சில இடங்களில் திரைக்கதையின் வேகம் குறைகிறது. மற்றபடி குடும்பத்தோடு சென்று ரசிக்க கூடிய வகையில் படத்தை எடுத்துள்ளார்.

    வானம் கொட்டட்டும்

    சித் ஸ்ரீராம் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம். குறிப்பாக கண்ணு தங்கம் பாடல் திரைக்கதைக்கு ஏற்றார் போல் பொருந்திப்போகிறது. அதேபோல் பின்னணி இசை உணர்வுபூர்வமான காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. பிரீதா ஜெயராமின் ஒளிப்பதிவு கச்சிதம்.

    மொத்தத்தில் ‘வானம் கொட்டட்டும்’ பாச மழை.
    வருமான வரித்துறை சோதனை காரணமாக கடந்த இரு தினங்களாக படப்பிடிப்புக்கு செல்லாமல் இருந்த விஜய் இன்று மீண்டும் மாஸ்டர் ஹூட்டிங்கில் கலந்து கொண்டார்.
    நடிகர் விஜய் வீட்டில் நேற்று முன்தினம் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீரென சோதனை நடத்தினர். அப்போது விஜய் தனது புதிய படமான ‘மாஸ்டர்’ படப்பிடிப்பிற்காக நெய்வேலி சென்றிருந்தார். அங்கு சென்ற வருமான வரித்துறை அதிகாரிகள் அவரை தங்களது வாகனத்திலேயே சென்னை அழைத்து வந்து அவரது வீட்டில் வைத்து விசாரணை நடத்தினர்.

    நேற்று 2-வது நாளாக விஜயிடம் விசாரணை நடத்தப்பட்டது. அவரது வீட்டில் நடைபெற்ற சோதனை நேற்று இரவு முடிவடைந்தது. படப்பிடிப்பில் இருந்து விஜய்யை வருமான வரித்துறை அதிகாரிகள் அழைத்து சென்றதால் நேற்று முன்தினம் ‘மாஸ்டர்’ படத்தின் படப்பிடிப்பு பாதியில் நிறுத்தப்பட்டது. நேற்று விஜய் இல்லாமல் மற்ற நடிகர்கள் நடித்த காட்சிகள் படமாக்கப்பட்டதாக தகவல்கள் வெளியாகின.

    இந்நிலையில் இன்று நெய்வேலி இரண்டாவது சுரங்கத்தில் நடைபெற்ற ‘மாஸ்டர்’ படப்பிடிப்பில் விஜய் பங்கேற்றார். இதற்காக இன்று சென்னையில் இருந்து கார்மூலம் நடிகர் விஜய் நெய்வேலி வந்தார். பின்னர் அங்கு 2-வது சுரங்கத்தில் நடைபெற்ற மாஸ்டர் படப்பிடிப்பில் கலந்து கொண்டார்.

    விஜய்

    இன்று காலை 11 மணியளவில் சண்டைக்காட்சி படமாக்கப்பட்டது. இதில் நடிகர்கள் விஜய், விஜய்சேதுபதி ஆகியோர் மோதும் காட்சி படமாக்கப்பட்டது. நடிகர் விஜய் படப்பிடிப்பில் கலந்து கொண்ட தகவல் நெய்வேலி மற்றும் சுற்றுபுற பகுதி மக்களுக்கு தெரியவந்தது. இதனால் அங்கு ஏராளமான விஜய் ரசிகர்கள் திரண்டர். 

    படப்பிடிப்பு நடக்கும் இடத்திற்குள் யாரும் அனுமதிக்கப்படவில்லை. மத்திய தொழிலக பாதுகாப்பு படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். படப்பிடிப்பு காட்சிகள் வெளியே தெரியாமல் இருப்பதற்காக கடும் கட்டுபாடுகள் விதிக்கப்பட்டிருந்தன. அங்கு என்.எல்.சி. அதிகாரிகள் செல்போன்கள் கொண்டு செல்ல அனுமதிக்கப்படவில்லை.
    தமிழில் உன்னை சரணடைந்தேன் உள்ளிட்ட பல படங்களில் நடித்த மீரா வாசுதேவன், கணவரிடம் சித்ரவதைகள் அனுபவித்ததாக கூறியிருக்கிறார்.
    உன்னை சரணடைந்தேன், அறிவுமணி, கத்திக்கப்பல், ஆட்ட நாயகன், அடங்க மறு, ஜெர்ரி உள்ளிட்ட படங்களில் நடித்தவர் மீரா வாசுதேவன், மலையாளத்தில் மோகன்லால் ஜோடியாக தன்மந்த்ரா படத்தில் அறிமுகமாகி முன்னணி நடிகையாக உயர்ந்தார். 2005-ல் பிரபல ஒளிப்பதிவாளர் மகனை மீரா வாசுதேவன் காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

    2010-ல் கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்து பிரிந்தார். பின்னர் மலையாள நடிகர் ஜான் கொக்கனை மறுமணம் செய்தார். அந்த திருமணமும் நீடிக்காமல் அவரையும் விவாகரத்து செய்தார். இவர்களுக்கு அரிஹரா என்ற மகன் உள்ளார். திருமண முறிவுகள் குறித்து மீரா வாசுதேவன் அளித்துள்ள பேட்டி வருமாறு:-

    மீரா வாசுதேவன்

    “திருமணம் முறிந்து விவாகரத்துக்கு சென்றால் இந்த சமூகம் பெண்கள் மீதுதான் குறை சொல்கிறது. ஆனால் அந்த பெண்கள் சந்தித்த தொல்லைகளை கண்டு கொள்வது இல்லை. நான் முதல் திருமணம் செய்து கணவரிடம் அனுபவித்த கொடுமைகள் அதிகம். மன ரீதியாகவும், உடல் ரீதியாகவும் சித்ரவதைகளை அனுபவித்தேன். அதை வார்த்தையால் சொல்ல முடியாது.

    அப்போது எனது உயிருக்கும் மிரட்டல் இருந்தது. இதனால் போலீஸ் பாதுகாப்பு கேட்டேன். 2012-ல் மறுமணம் செய்தேன். அதுவும் மகிழ்ச்சியாக இல்லை. 2-வது கணவரிடமும் மன ரீதியாக சேர்ந்து இருக்க முடியவில்லை. இதனால் அதுவும் விவாகரத்தில் முடிந்தது.”

    இவ்வாறு மீரா வாசுதேவன் கூறினார்.
    தமிழில் முன்னணி நடிகையாக இருக்கும் நயன்தாரா அடுத்ததாக நடிக்கும் படத்தில் இளம் நடிகை யாஷிகா அவருடன் இணைந்து நடிக்க உள்ளார்.
    ஆர்ஜே பாலாஜி கதை, திரைக்கதை எழுதி நடித்த ‘எல்.கே.ஜி’ படம், பெரும் வரவேற்பை பெற்றது. இந்த படத்தை தயாரித்த வேல்ஸ் பிலிம்ஸ் நிறுவனம், அடுத்த படத்தையும் தங்களுக்கே செய்யுமாறு அவருக்கு அட்வான்ஸ் கொடுத்தது. எனவே, புதிய படத்துக்கான கதையையும் தனது நண்பர்களுடன் சேர்ந்து எழுதிய ஆர்ஜே பாலாஜி, அதில் அவரே நாயகனாக நடித்து, இயக்கி வருகிறார். அவரோடு இணைந்து என்.ஜே.சரவணனும் இயக்குநர் பொறுப்பை கவனிக்கிறார்.

    நயன்தாரா, யாஷிகா ஆனந்த்


    ‘மூக்குத்தி அம்மன்’ எனத் தலைப்பு வைக்கப்பட்டுள்ள இப்படத்தில் நயன்தாரா முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்கிறார். முழுக்கதையும் அவர் மீது பயணிப்பது போல திரைக்கதை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், இப்படத்தில் நடிகை யாஷிகா ஆனந்த் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இவர் ஏற்கனவே இருட்டு அறையில் முரட்டு குத்து, ஜாம்பி போன்ற படங்களில் கதாநாயகியாக நடித்துள்ளது குறிப்பிடத்தக்கது.
    தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படத்தின் இந்தி ரீமேக்கில் பிரபல நடிகர் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    அஜித்குமாரின் வீரம், வேதாளம் ஆகிய 2 படங்களும் இந்தியில் ரீமேக் ஆகிறது. வீரம் படம் 2014-ம் ஆண்டு பொங்கல் விருந்தாக திரைக்கு வந்தது. ஜோடியாக தமன்னா நடித்து இருந்தார். சிவா இயக்கினார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. வசூல் சாதனையும் நிகழ்த்தியது.

    இதையடுத்து வீரம் படத்தை தெலுங்கில் கட்டமராயுடு என்ற பெயரில் எடுத்தனர். அஜித்குமார் வேடத்தில் பவன் கல்யாண் நடித்தார். தற்போது இந்தியிலும் வீரம் படம் ‘பச்சன் பாண்டே’ என்ற பெயரில் ரீமேக் ஆகி வருகிறது. இதில் அஜித்குமார் வேடத்தில் அக்‌ஷய்குமார் நடித்து வருகிறார். சமீபத்தில் படத்தின் முதல் தோற்றத்தை வெளியிட்டனர்.

    ஜான் ஆபிரகாம் - அஜித்

    அடுத்து வேதாளம் படமும் இந்திக்கு போகிறது. வேதாளம் 2015-ல் வெளியாகி பெரிய வெற்றி பெற்றது. அஜித்குமாருடன் சுருதிஹாசன், லட்சுமி மேனன், கபீர் சிங், சூரி, தம்பி ராமையா ஆகியோர் நடித்து இருந்தனர். இந்த படத்தின் இந்தி ரீமேக்கில் அஜித்குமார் கதாபாத்திரத்தில் ஜான் ஆபிரகாம் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

    சுருதிஹாசன், லட்சுமி மேனன் கதாபாத்திரங்களில் நடிக்க நடிகைகள் தேர்வு நடக்கிறது. ரோஹித் தவான் இயக்குகிறார். இந்த படத்தின் ஆரம்ப கட்ட பணிகள் தொடங்கி உள்ளன. இந்திக்கு ஏற்றவாறு திரைக்கதையில் லேசான மாற்றங்கள் செய்து வருகிறார்கள்.
    ×