என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கனா படம் மூலம் இயக்குனராக அறிமுகமான அருண்ராஜா காமராஜ், அடுத்ததாக இயக்கும் படத்தில் பிரபல நடிகர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
    நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முகத்தன்மை கொண்டவர் அருண்ராஜா காமராஜ். இவர் இயக்கத்தில் கடந்தாண்டு வெளியான கனா திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்றது. மேலும் இப்படம் தெலுங்கிலும் கவுசல்யா கிருஷ்ணமூர்த்தி என்ற பெயரில் ரீமேக் ஆனது. தற்போது அடுத்த படத்திற்கான வேலைகளில் பிசியாக இருக்கிறார் அருண்ராஜா. 

    கார்த்தி, அருண்ராஜா காமராஜ்

    இப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஏப்ரல் மாதம் தொடங்க உள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தில் நடிகர் கார்த்தி நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் இப்படத்தில் முன்னணி தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்ற உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கார்த்தி தற்போது மணிரத்னம் இயக்கும் பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
    ஆஸ்கார் விருது விழாவில் நான்கு விருதுகளை வென்ற பாரசைட் படம் மீது விஜய் பட தயாரிப்பாளர் வழக்கு தொடர இருப்பதாக கூறப்படுகிறது.
    ஆஸ்கார் விருது பெற்ற ‘பாரசைட்’ கொரிய படம் தமிழில் விஜய் நடிப்பில் வந்த மின்சார கண்ணா படத்தின் காப்பி போல் இருப்பதாக சர்ச்சை கிளம்பி உள்ளது. இதுகுறித்து இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமாரிடம் கேட்டபோது, அப்படியொரு கதையை 20 வருடங்களுக்கு முன்பே நான் தேர்வு செய்ததை நினைத்து மகிழ்கிறேன். இந்த பிரச்சினையில் சட்ட ரீதியான நடவடிக்கை எடுக்க முடியும் என தயாரிப்பாளர் தேனப்பன் கூறினார்.

    மின்சார கண்ணா பட போஸ்டர்

    தேனப்பன் அளித்த பேட்டியில் இந்த பிரச்சினை வெளிநாட்டு விவகாரம் என்பதால் அதற்குரிய வழக்கறிஞரை நியமிக்க வேண்டும். இதுகுறித்த எனது முடிவை விரைவில் வெளியிடுவேன் என்றார். வழக்கு தொடர அவர் தயாராகி வருவதாக கூறப்படுகிறது. கொரியன் படமான ‘பாரசைட்’ சிறந்த திரைப்படம், வெளிநாட்டு படம், திரைக்கதை, இயக்குனர் ஆகிய நான்கு பிரிவுகளில் ஆஸ்கார் விருது வென்றது குறிப்பிடத்தக்கது.
    ஆனந்த் பால்கி இயக்கத்தில் சந்தானம், வைபவி நடிப்பில் உருவாகி உள்ள ‘சர்வர் சுந்தரம்’ திரைப்படம் மீண்டும் முடங்கி உள்ளது.
    சந்தானம் நடித்துள்ள சர்வர் சுந்தரம் படம் கடந்த 31-ந்தேதி திரைக்கு வருவதாக இருந்தது. அதேநாளில் சந்தானத்தின் டகால்டி படமும் வெளியானதால் சர்வர் சுந்தரம் ரிலீசை 14-ந்தேதிக்கு தள்ளி வைத்தனர். ஆனால் அந்த தேதியிலும் படம் வரவில்லை. மாறாக வருகிற 21-ந்தேதி சர்வம் சுந்தரம் திரைக்கு வரும் என்று அறிவித்தனர். ஆனால் அப்போதும் திரைக்கு வர வாய்ப்பில்லை. மீண்டும் படம் தள்ளிப்போகிறது. 

    இது தொடர்பாக டுவிட்டரில் பதிவிட்டுள்ள அப்படத்தின் இயக்குனர் ஆனந்த் பால்கி, “படம் குறித்த தவறான அறிவிப்புக்கு ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். சில தவறுகளினால் இது நடந்துள்ளது. ரிலீஸ் தேதி விரைவில் அறிவிக்கப்படும்” என்றார்.

    சந்தானம், வைபவி

    இந்த நிலையில் சர்வர் சுந்தரம் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களால் படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக குற்றம்சாட்டப்பட்டு உள்ளது. வினியோக உரிமை பெற்றவர் படத்தை மேலும் இருவருக்கு கை மாற்றியதாகவும் அவர்கள் படத்தை அடமானம் வைத்துள்ளதாகவும் பட அதிபர் சங்கத்தில் புகார் அளிக்கப்பட்டு உள்ளது.

    படத்தின் தயாரிப்பாளர் கெனன்யா பிலிம்ஸ் செல்வகுமார் கூறும்போது, சர்வர் சுந்தரம் படத்தை வாங்கிய வினியோகஸ்தர்களால் படம் வெளிவருவதில் தாமதம் ஏற்பட்டு உள்ளது. படத்தை திரைக்கு கொண்டு வராமல் முடக்கி இருப்பது வேதனை அளிக்கிறது. இந்த பிரச்சினையில் தீர்வுகாணும்படி தயாரிப்பாளர் சங்கத்தை அணுகி உள்ளோம் என்றார். தயாரிப்பாளர் சங்கத்தில் இன்று பேச்சுவார்த்தை நடக்க உள்ளது.
    நடிகர் போஸ் இயக்கியுள்ள கன்னி மாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலந்துக் கொண்ட விஜய் சேதுபதி, காதலர்களுக்கு அட்வைஸ் கொடுத்துள்ளார்.
    நடிகர் போஸ் இயக்கியுள்ள கன்னி மாடம் படத்தின் இசை வெளியீட்டு விழாவில் விஜய் சேதுபதி கலந்து கொண்டு பேசியுள்ளார். இந்த இசை வெளியீட்டு விழா காதலர் தினத்தில் நடந்ததால், காதலர் தின வாழ்த்துக்களை தெரிவித்து கொண்ட விஜய் சேதுபதி, லவ் யூ என்று முத்தங்களையும் கொடுத்திருந்தார். 

    அவர் இசை வெளியீட்டு விழாவில் பேசும் போது, போஸ் வெங்கட் மிகவும் நல்ல மனிதர். சிலரின் முகங்களை பார்த்தாலே தெரிந்து விடும். அவர்கள் எப்படிபட்ட மனதை கொண்டவர்கள் என்று, அப்படி நான் அவர் முகத்தை பார்த்து தெரிந்து கொண்டேன் என கூறினார்.

    விஜய் சேதுபதி

    மேலும் போசை மெட்டி ஒலி நாடகத்தில் இருந்து நான் பார்த்து ரசித்து வருகிறேன் என கூறினார். விஜய் சேதுபதி பேசி முடிக்கும் போது காதலர் தின வாழ்த்துக்களை கூறிவிட்டு சட்டென்று ஜாக்கிரதையாக காதலியுங்கள் என்று ரசிகர்களுக்கு ஒரு சிறிய அட்வைஸ் கொடுத்தார்.

    கன்னி மாடம் படத்தில் ஸ்ரீராம் கார்த்திக், சயா தேவி மற்றும் ஆடுகளம் முருகதாஸ் ஆகியோர் முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து உள்ளனர்.
    தெலுங்கில் முன்னணி நடிகராக இருக்கும் மகேஷ் பாபு, ஒரு படத்திற்கு சம்பளம் வாங்காமல் அதைவிட அதிகமாக சம்பாதித்திருக்கிறார்.
    மகேஷ்பாபு நடிப்பில் கடந்த மாதம் சங்கராந்தி பண்டிகை கொண்டாட்டமாக ‘சரிலேறு நீக்கெவரு’ என்கிற படம் வெளியானது. இந்த படத்திற்கு கிடைத்த வரவேற்பு காரணமாக இப்போது வரை படம் தியேட்டர்களில் சிறப்பாக ஓடிக் கொண்டிருக்கிறது.

    அனில் ரவிபுடி இயக்கிய இந்த படத்தை தில் ராஜு, அணில் சுங்கரா ஆகியோருடன் மூன்றாவது தயாரிப்பாளராக மகேஷ்பாபுவும் இணைந்து தயாரித்திருந்தார். இந்த படம் சுமார் 75 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாகியிருந்தது. இப்படத்தில் நடிப்பதற்கு சம்பளம் என எதுவும் பேசாத மகேஷ்பாபு படத்திற்காக அட்வான்ஸ் கூட வாங்காமல் நடித்துக் கொடுத்தார்.

    மகேஷ் பாபு

    அதேசமயம் வழக்கமாக அவருக்கு கொடுக்கப்படும் சம்பளத் தொகையான 20 கோடி ரூபாய் என்கிற மிகப்பெரிய சுமை இல்லாமல் இந்த படத்தை தயாரித்து முடித்தனர் தில் ராஜுவும் அனில் சுங்கராவும். தியேட்டர் வெளியீட்டு உரிமைகள் அல்லாத உரிமைகள், அதாவது சாட்டிலைட், எப்எம் மற்றும் டிஜிட்டல் ரைட்ஸ் என அனைத்து உரிமங்களும் மகேஷ்பாபுவுக்கு சம்பள தொகையாகவும் மூன்று தயாரிப்பாளர்களில் ஒருவர் என்கிற ரீதியில் பங்குத் தொகையாகவும் வழங்கப்பட்டிருக்கிறதாம். 

    இவற்றின் மதிப்பு மட்டும் கிட்டத்தட்ட 82 கோடி ரூபாய் என்கிறார்கள் தெலுங்கு சினிமா வட்டாரத்தில். அந்தவகையில் தனது சம்பளத்தை விட 300 சதவீதம் அதிகமாக ‘சரிலேறு நீக்கெவரு’ படம் மூலம் சம்பாதித்திருக்கிறாராம் மகேஷ்பாபு.. இனி அடுத்தடுத்து நடிக்கும் தனது படங்களிலும் இதே பாணியை அவர் பின்பற்றப் போவதாக சொல்லப்படுகிறது.
    வெயில், அங்காடித்தெரு படங்களை இயக்கிய வசந்த பாலன், ஒரு படத்தை வெளியிடுவதற்குள் உயிர் போகிறது என்று கூறியிருக்கிறார்.
    தமிழ் சினிமாவில் தரமான படம் எடுக்கும் இயக்குனர்களில் ஒருவர் வசந்தபாலன். அதற்கு ஒரு உதாரணம் என்றால் அவரது அங்காடித் தெரு படத்தை கூறலாம். இவர் சமீபத்தில் ஜெயில் என்ற புதிய படத்தை இயக்கியுள்ளார், அப்படத்தை வெளியிட முடியாமல் வசந்தபாலன் திணறி வருவதாக தெரிகிறது. 

    அவர் தனது சமூக வலைத்தள பக்கத்தில், ஒரு தயாரிப்பாளர பிடிக்கிறதுக்கு தலைகீழ நிக்கனும். ஒரு ஹீரோ கிடைக்கிறதுக்கு தலைகீழா நடக்கனும். ஷூட்டிங் தடையின்றி நடக்க கையில அக்னிச்சட்டியோட கயித்துல நடக்கனும். இது எல்லாத்தையும் கூட தாங்கிடலாம்.

    வசந்தபாலனின் ஜெயில்

    ஆனால் எடுத்த படத்தை வெளியிட தான் உயிர் கொஞ்சம் கொஞ்சமாக போகிறது என்று பதிவு செய்துள்ளார்.
    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான மான்ஸ்டர் திரைப்படம் வெளியான அதே மாதத்தில் பொம்மை படத்தை வெளியிட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளனர்.
    எஸ்.ஜே.சூர்யா நடிப்பில் வெளியான படம் ‘மான்ஸ்டர்’. நெல்சன் வெங்கடேசன் இயக்கிய இப்படத்தில் பிரியா பவானி சங்கர் நாயகியாக நடித்திருந்தார். இப்படம் கடந்த வருடம் மே மாதம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது.

    'மான்ஸ்டர்' படத்துக்கு பிறகு எஸ்.ஜே.சூர்யா - பிரியா பவானி சங்கர் இணைந்து ‘பொம்மை’ என்ற படத்தில் நடித்து வருகிறார்கள். இந்த படத்தை ராதா மோகன் இயக்க, யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கிறார். இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. 

    பொம்மை படத்தில் எஸ்.ஜே.சூர்யா

    இந்நிலையில் மான்ஸ்டர் படம் போல் பொம்மை திரைப்படத்தையும் மே மாதம் வெளியிட படக்குழுவினர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    தென்னிந்திய திரையுலகில் முன்னணி நடிகையாக இருக்கும் அனுஷ்கா, கிரிக்கெட் வீரர் ஒருவருடன் டேட்டிங் சென்றதாக கூறப்படுகிறது.
    பாகுபலி ஜோடியான பிரபாஸ், அனுஷ்கா இருவரும் காதலிக்கின்றனர் திருமணம் செய்ய முடிவுசெய்திருப்பதாக கடந்த 2 வருடத்துக்கும் மேலாக திரையுலகில் கிசுகிசு உலவி வருகிறது. நாங்கள் நல்ல நண்பர்கள், எங்களுக்குள் காதல் இல்லை என்று இருவரும் பலமுறை கூறிவிட்டாலும் ரசிகர்கள் அதை கண்டு கொள்ளவில்லை. 

    அவர்கள் ஒருபடிமேலே சென்று இருவர் பெயரையும் இணைத்து. ‘பிரனுஷக்கா’ என குறிப்பிடுகின்றனர். இந்நிலையில் பிரபாஸ், அனுஷ்கா ரசிகர்களை அதிர்ச்சிக்குள்ளாக்கும் புதிய தகவல் பரவி வருகிறது. அதாவது அனுஷ்கா வட இந்தியாவை சேர்ந்த கிரிக்கெட் வீரர் ஒருவரை காதலிப்பதாகவும் அவருடன் டேட்டிங்கில் ஈடுபடுவதாகவும் கூறப்படுகிறது. 

    அனுஷ்கா ஷெட்டி

    அவரைத்தான் அனுஷ்கா மணக்க இருப்பதாகவும் திரையுலகில் பேச்சு எழுந்துள்ளது. கிரிக்கெட் வீரர் ஒருவரை நடிகை மணப்பதென்பது ஏற்கனவே நடந்திருக்கும் ஒரு விஷயம் என்பதால் இந்த காதல் கிசுகிசு உண்மையாக இருக்குமா என்று கேட்கத் தொடங்கி உள்ளனர். ஆனால் அனுஷ்கா இதுபற்றி பதில் எதுவும் சொல்லாமல் மவுனம் காத்து வருகின்றார்.
    ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி நடிப்பில் உருவாகி இருக்கும் டைட்டானிக் படத்தின் முன்னோட்டம்.
    ஜானகிராமன் இயக்கத்தில் கலையரசன், ஆனந்தி, ஆஷ்னா சவேரி, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் 'டைட்டானிக்: காதலும் கவுந்து போகும்'. சி.வி.குமார் தயாரிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்துக்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். 

    படம் குறித்து தயாரிப்பாளர் சிவி.குமார் கூறியதாவது: 'டைட்டானிக்' படம் தொடங்கி 25 நாட்கள் படப்பிடிப்பு நடத்தினார்கள். இந்தப் படத்தின் கதைக்கு அவ்வளவுதான் தேவைப்பட்டது. அந்த 25 நாட்களிலேயே சுமார் 60 நாட்களுக்கான செலவு பண்ணினார்கள். இந்தக் கதையைப் படிக்கும்போது 'ஆண் பாவம்' படம் ஞாபகம் வந்தது. அந்தத் தலைப்பைக் கேட்டேன், தரமாட்டேன் என்று சொல்லிவிட்டார்கள். 

    டைட்டானிக் படக்குழு

    பள்ளிக் காதல், கல்லூரிக் காதல், வேலைக்குச் செல்லும்போது உள்ள காதல், திருமணத்துக்குப் பிறகான காதல் என 4 காதல்கள் படத்தில் உள்ளன. ஒரு ஜாலியான படமாக இருக்கும்.'ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் ஒரு வேலை முடியும் என்றால், அதற்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்தால் நீ பெரிய ஆளல்லை. ஒரு கோடி ரூபாய் வேலையை 10 லட்ச ரூபாயில் முடித்தால்தான் நீ பெரிய ஆள்' என்று அப்பா சொல்வார். அதைத்தான் நான் செய்து வருகிறேன்”. என கூறினார். 
    மாஸ்டர் படத்தில் விஜய் பாடியிருக்கும் ‘ஒரு குட்டி கதை’ பாடல் யூடியூப்பில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது.
    விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்து வருகிறார். மாஸ்டர் என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்கிறார். மேலும் மாளவிகா மோகனன், ஆண்ட்ரியா, சாந்தனு, அர்ஜூன் தாஸ், கௌரி கிஷன் உள்ளிட்ட பலர் நடிக்கிறார்கள்.

    சமீபத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு நெய்வேலியில் நடைபெற்றது. விஜய் இதில் கல்லூரி பேராசிரியராக நடித்து வருகிறார். இந்நிலையில், விஜய் பாடி அனிருத் இசையமைத்திருக்கும் ஒரு குட்டி கதை என்ற பாடல் காதலர் தினத்தை முன்னிட்டு வெளியானது.

    விஜய்

    வெளியான சில வினாடிகளிலேயே பல பார்வையாளர்களை கடந்து சமூக வலைத்தளத்தில் வைரலானது. தற்போது இந்த பாடல் 12 மில்லியன் பார்வையாளர்களை கடந்து சாதனை படைத்துள்ளது.
    நடிகை கேத்தரின் தெரசா, ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தும் பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
    கேத்தரின் தெரசா தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து இருக்கிறார். முன்னதாக சீனியர் தெலுங்கு நடிகர் என்.டி. பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரின் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் தரப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்படத்தில் கேத்ரின் நடிக்க மறுத்துவிட்டதாக பின்னர் தகவல் வெளியானது. ஆனால் இதுபற்றி யாரும் உறுதிபடுத்தவில்லை. 

    இந்நிலையில் கேத்ரின் தெரசா தனது புதிய பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவரிடமே அதற்கான பதிலை பெற விரும்பிய நிருபர்கள் என்.டி.பாலகிருஷ்ணா படத்தில் நடிக்கிறீர்களா என்றனர். அதைக்கேட்டு கோபம் அடைந்த கேத்தரின்,'என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல நான் சரியான நபர் கிடையாது. 

    கேத்தரின் தெரசா

    அதுபற்றி சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் அல்லது தயாரிப்பாளர் ரவீந்தர் ரெட்டி அல்லது இயக்குனரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். இதுதொடர்பாக எந்த பதிலும் நான் சொல்ல மாட்டேன் என ஏற்கெனவே தெளிவாக கூறியிருக்கிறேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் கணகலங்கி இருக்கிறார்.
    விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்த 96 படத்தினை தற்போது தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அதில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் நடித்துள்ளார்.

    தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

    சமந்தா

    இப்படத்தை பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த ஒரு ரசிகர், வாய்விட்டு கதறி அழுதார். “ஜானு படம் என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை போல் இருக்கிறது. என் பழைய வாழ்க்கையை ‘ஜானு’ நினைவூட்டியது’’ என்று கூறி கண்கலங்கினார், அந்த ரசிகர்!
    ×