என் மலர்
சினிமா செய்திகள்
நடிகை கேத்தரின் தெரசா, ரூ.1 கோடி சம்பளம் கொடுத்தும் பிரபல தெலுங்கு நடிகரின் படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துவிட்டதாக கூறப்படுகிறது.
கேத்தரின் தெரசா தற்போது விஜய் தேவரகொண்டாவுக்கு ஜோடியாக வேர்ல்டு பேமஸ் லவ்வர் படத்தில் நடித்து இருக்கிறார். முன்னதாக சீனியர் தெலுங்கு நடிகர் என்.டி. பாலகிருஷ்ணா நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக கேத்ரின் நடிப்பதாக தகவல் வெளியானது. இதற்காக அவருக்கு ரூ.1 கோடி சம்பளம் தரப்படுவதாகவும் கூறப்பட்டது. ஆனால் அப்படத்தில் கேத்ரின் நடிக்க மறுத்துவிட்டதாக பின்னர் தகவல் வெளியானது. ஆனால் இதுபற்றி யாரும் உறுதிபடுத்தவில்லை.
இந்நிலையில் கேத்ரின் தெரசா தனது புதிய பட புரமோஷன் நிகழ்ச்சியில் பங்கேற்க வந்தார். அவரிடமே அதற்கான பதிலை பெற விரும்பிய நிருபர்கள் என்.டி.பாலகிருஷ்ணா படத்தில் நடிக்கிறீர்களா என்றனர். அதைக்கேட்டு கோபம் அடைந்த கேத்தரின்,'என்னைப் பற்றி என்ன நினைத்துக்கொண்டிருக்கிறீர்கள்? நீங்கள் கேட்கும் கேள்விக்கு பதில் சொல்ல நான் சரியான நபர் கிடையாது.

அதுபற்றி சம்பந்தப்பட்ட தயாரிப்பு நிறுவனம் அல்லது தயாரிப்பாளர் ரவீந்தர் ரெட்டி அல்லது இயக்குனரிடம் தான் நீங்கள் கேட்க வேண்டும். இதுதொடர்பாக எந்த பதிலும் நான் சொல்ல மாட்டேன் என ஏற்கெனவே தெளிவாக கூறியிருக்கிறேன்' என்று கூறிவிட்டு அங்கிருந்து வேகமாக புறப்பட்டு சென்றார்.
தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக இருக்கும் சமந்தாவின் படத்தை பார்த்து ரசிகர் ஒருவர் கணகலங்கி இருக்கிறார்.
விஜய் சேதுபதி மற்றும் திரிஷா நடித்திருந்த 96 படத்தினை தற்போது தெலுங்கில் ஜானு என்ற பெயரில் ரீமேக் செய்துள்ளனர். அதில் திரிஷா நடித்த ஜானு கதாபாத்திரத்தில் சமந்தா நடித்துள்ளார். விஜய் சேதுபதி கதாபாத்திரத்தில் சர்வானந்த் நடித்துள்ளார்.
தற்போது இப்படம் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்று வருகிறது. மேலும் வெற்றிகரமாக திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இப்படத்தை பார்த்துவிட்டு தியேட்டரை விட்டு வெளியே வந்த ஒரு ரசிகர், வாய்விட்டு கதறி அழுதார். “ஜானு படம் என் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தை போல் இருக்கிறது. என் பழைய வாழ்க்கையை ‘ஜானு’ நினைவூட்டியது’’ என்று கூறி கண்கலங்கினார், அந்த ரசிகர்!
திருஞானம் இயக்கத்தில் திரிஷா நடிப்பில் உருவாகி இருக்கும் பரமபதம் விளையாட்டு படத்தின் ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
திருஞானம் இயக்கத்தில் உருவாகி இருக்கும் திரைப்படம் ’பரமபதம் விளையாட்டு’. கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ள இப்படத்தில் திரிஷா முன்னணி கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். மேலும் நந்தா, ரிச்சர்ட், வேலராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர்.

இந்நிலையில், இப்படத்தின் ரிலீஸ் தேதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி இப்படம் வருகிற பிப்ரவரி 28-ந் தேதி ரிலீசாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 24 Hrs நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு ஆர்.டி.ராஜசேகர் ஒளிப்பதிவு செய்ய, அம்ரீஷ் கணேஷ் இசையமைத்திருக்கிறார்.
பிரபல தொகுப்பாளினி கீர்த்தியை காதலித்து திருமணம் செய்துக் கொண்ட சாந்தனு, இருவரும் இரண்டு முறை பிரேக்-அப் செய்தோம் என்று கூறியுள்ளார்.
தமிழ் திரையுலகில் தனக்கென்று முத்திரையை பதித்தவர் பாக்யராஜ், அவரது மகன் சாந்தனு சக்கரகட்டி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். தொடர்ந்து பல படங்களில் நடித்தவர் தற்போது விஜய்யுடன் மாஸ்டர் படத்தில் நடிக்கிறார். இவரும், டி.வி. தொகுப்பாளர் கீர்த்தியும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர்.
இதுகுறித்து சாந்தனு அளித்துள்ள பேட்டியில், நாங்கள் பல தடவை காதலித்து, பின்னர் திருமணம் செய்து கொண்டோம். பள்ளியில் காதல், கல்லூரியில் காதல் என கடைசியில் திருமணத்தில் முடிந்தது.

இரண்டு முறை பிரேக் அப் செய்து கொண்டோம், அதிகபட்சமாக எட்டு ஆண்டுகள் வரை பேசாமல் இருந்தோம். விஜய்யிடம் என்னை பொறுக்கி என்றே கீர்த்தி சொல்லி இருக்கிறார். ஆனால் திருமணத்திற்கு பின்னர் எனக்காக அவருக்கு பிடிக்காத விசயங்களை கூட செய்கிறார். நிறைய மாற்றங்கள் இருக்கிறது என கூறியுள்ளார்.
மேலும் கீர்த்தி பேசுகையில், இவரும் எனக்காக நிறைய செய்திருக்கிறார், வீட்டு வேலைகளை என்னுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி, கணவன் என்றால் அப்படித்தான் இருக்க வேண்டும் என கூறியுள்ளார்.
நடிகரும் இயக்குனருமான பிரபுதேவா, அடுத்ததாக சைக்கோ திரில்லர் கதையம்சம் கொண்ட புதிய படத்தில் நடித்து வருகிறார்.
பாலிவுட்டில் முன்னணி இயக்குனராக இருக்கும் பிரபுதேவா, தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். இவர் நடித்துள்ள யங் மங் சங், பொன் மாணிக்கவேல் போன்ற படங்கள் ரிலீசுக்கு தயாராகி வருகின்றன. இந்த நிலையில், அவர் அடுத்ததாக ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கும் பஹிரா என்ற படத்தில் நடிக்கிறார். காதலர் தினத்தன்று வெளியான இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. இதில் பிரபுதேவாவின் நெற்றியில் மூன்றாவது கண் இருப்பது போல் தோற்றம் அமைந்துள்ளது.

இந்த படம் குறித்து இயக்குனர் ஆதிக் ரவிச்சந்திரன் கூறுகையில், பிரபுதேவா குலேபகாவலி படத்தில் நடிக்கும் போதே இந்த கதையை சொன்னேன். அதன் பிறகு பாலிவுட் படங்களை இயக்க சென்றுவிட்டார். அந்த படங்களை முடித்த கையோடு வந்து பஹிரா படத்தில் நடித்து கொடுத்தார். 50 சதவீத படப்பிடிப்பு முடிந்து விட்டது. இது ஒரு சைக்கோ திரில்லர் திரைப்படம். இதுவரை பார்த்திராத பிரபுதேவாவை இந்த படத்தில் பார்க்கலாம் என கூறினார்.
கனா படத்தை தயாரித்ததன் மூலம் மகளிர் உலக கோப்பை கிரிக்கெட்டுக்கு விளம்பர தூதராக சிவகார்த்திகேயன் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஆஸ்திரேலியாவில் வருகிற 21-ந்தேதி மகளிர் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டி தொடங்க உள்ளது. இந்த தொடரை விளம்பரம் செய்ய ஆஸ்திரேலிய தூதரகம் முடிவு செய்துள்ளது.
அதற்காக பெண்கள் கிரிக்கெட் போட்டி கதை குறித்த திரைப்படத்தை தயாரித்து நடித்த சிவகார்த்திகேயனை அணுகியது. இதையடுத்து நடந்த பேச்சு வார்த்தைக்கு பின் தற்போது சிவகார்த்திகேயன் இந்த போட்டியின் விளம்பர தூதராக நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

‘கனா’ என்ற படத்தை தயாரித்ததால் அந்த படத்தை பார்த்து ஆஸ்திரேலியாவில் நடக்கும் உலக கோப்பை கிரிக்கெட் போட்டியை விளம்பரம் செய்ய என்னை அணுகினர். நாம் அனைவரும் இந்த போட்டிக்கு ஆதரவு தரவேண்டும். நமது அணியை மட்டுமல்லாது அனைத்து வீராங்கனைகளுக்கும் நாம் ஆதரவு கொடுக்க வேண்டும்.
மேலும் இந்தியா மற்றும் ஆஸ்திரேலிய அணி இறுதிப்போட்டிக்கு தகுதி பெறும் என கணிக்கிறேன். அனைத்து அணிகளுக்கும் எனது வாழ்த்துக்கள்
இவ்வாறு சிவகார்த்திகேயன் கூறியுள்ளார்.
சுந்தர்.சி இயக்கத்தில் உருவாக உள்ள அரண்மனை படத்தின் 3-ம் பாகத்தில் பிக்பாஸ் பிரபலம் ஒருவர் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.
சுந்தர்.சி இயக்கிய அரண்மனை பேய் படம் 2 பாகங்கள் வந்துள்ளன. இந்த 2 பாகங்களும் வெளியாகி வசூல் சாதனை நிகழ்த்திய நிலையில், தற்போது அரண்மனை படத்தின் 3-ம் பாகம் தயாராக உள்ளது. ஏற்கனவே 2 பாகங்களை இயக்கி வெற்றிகண்ட சுந்தர் சி தான் இந்த படத்தையும் இயக்க உள்ளார். இப்படத்திற்கான நடிகர், நடிகை தேர்வு நடக்கிறது.

இதில் கதாநாயகனாக ஆர்யாவும், அவருக்கு ஜோடியாக ராஷி கண்ணாவும், ஆண்ட்ரியாவும் நடிக்க உள்ளனர். இந்நிலையில், இப்படத்தில் மேலும் ஒரு ஹீரோயின் இணைந்துள்ளார். பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு பிரபலமான சாக்ஷி அகர்வால், அரண்மனை 3-ம் பாகத்தில் நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பை மார்ச் மாதம் தொடங்க திட்டமிட்டுள்ளனர்.
நெல்சன் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடிக்கும் டாக்டர் படம் குறித்த முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது.
நடிகர் சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்தாண்டு வெளியான ஹீரோ, நம்ம வீட்டு பிள்ளை போன்ற படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. இவர் தற்போது ரவிகுமார் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘அயலான்’ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தின் படப்பிடிப்பு இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதனை தொடர்ந்து, கோலமாவு கோகிலா பட புகழ், நெல்சன் இயக்கும் புதிய படத்தில் சிவகார்த்திகேயன் நடிக்க உள்ளார். இப்படத்திற்கு டாக்டர் என பெயரிடப்பட்டுள்ளது.
Birthday special! #DOCTOR 👨⚕️🩺 FIRST LOOK will be out at 11:03 AM tomorrow! #DoctorFirstLook Tiktok, tiktok, tiktok...⏱️#HBDSK@Siva_Kartikeyan@Nelson_director@anirudhofficial@priyankaamohan@SKProdOffl@KalaiArasu_@KVijayKartik@DoneChannel1@proyuvraaj@gobeatroutepic.twitter.com/W0ghjGPwOW
— KJR Studios (@kjr_studios) February 16, 2020
இப்படத்தில் நாயகியாக பிரியங்கா நடிக்கிறார். மேலும் யோகிபாபு, வினய் உள்ளிட்ட பலர், முக்கிய வேடத்தில் தோன்றுகின்றனர். கேஜேஆர் ஸ்டூடியோஸ் நிறுவனத்துடன் சிவகார்த்திகேயனின் எஸ்.கே.புரொடக்ஷன் நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில், சிவகார்த்திகேயனின் பிறந்தநாளான்று டாக்டர் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது. அதன்படி நாளை (பிப்ரவரி 17) காலை 11.03 மணிக்கு வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டப்பிங் கலைஞர்கள் சங்க தலைவர் ராதாரவியிடம் மன்னிப்பு கேட்க முடியாது என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.
டப்பிங் கலைஞர்கள் சங்கத்துக்கு 2018ம் ஆண்டு நடந்த தேர்தலில் வெற்றி பெற்று ராதாரவி தலைவராக இருந்து வருகிறார். சங்க நிர்வாகக்குழுவின் பதவிக்காலம் முடிவதால் விருகம்பாக்கத்தில் உள்ள திருமன மண்டபத்தில் தேர்தல் நடந்தது. ராதாரவி தலைவர் பதவிக்கு போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்பட்டு விட்டதால் மற்ற பதவிகளுக்கு தேர்தல் நடைபெற்றது.

தேர்தலில் ஓட்டு போட்டுவிட்டு வந்து பேட்டியளித்த ராதாரவி ‘சின்மயி மன்னிப்பு கேட்டால் டப்பிங் யூனியனில் மீண்டும் சேர்த்துக்கொள்வோம்’ என்று கூறினார். ராதாரவியின் இந்த கருத்துக்கு சின்மயி ‘ராதாரவி காலில் விழுந்தோ அல்லது வீட்டுக்கு சென்றோ மன்னிப்பு கேட்க முடியாது. சட்ட ரீதியாக இந்த பிரச்சினையை எதிர்கொள்வேன்’ என்று கூறினார்.
காமெடி, குணச்சித்ரம், நாயகன் என 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நீடித்து வரும் விவேக் புதிய அவதாரம் எடுத்துள்ளார்.
கடந்த 1987-ம் ஆண்டு இயக்குனர் கே.பாலச்சந்தர் இயக்கிய ’மனதில் உறுதி வேண்டும்’ படத்தின் மூலம் நடிகர் விவேக் திரையுலகில் அறிமுகமானார். இதைதொடர்ந்து பல படங்களில் காமெடி வேடங்களில் நடித்து வந்த விவேக், தமிழ் திரையுலகின் முன்னணி நகைச்சுவை நடிகராக வலம் வருகிறார். தொடர்ந்து திரைப்படங்களில் பிசியாக நடித்துவரும் விவேக், மரம் நடுதல் போன்ற சமூக பணிகளிலும் ஆர்வம்காட்டி வருகிறார்.

சுமார் 30 ஆண்டுகளுக்கு மேலாக சினிமாவில் நீடித்து வரும் விவேக், விரைவில் இயக்குனராக களம் காண்கிறார். தற்போது படத்திற்கான திரைக்கதை உருவாக்கத்தில் தீவிரமாக இருக்கும் இவர், தனது படத்தில் ஒரு பிரபலமான நடிகரை நடிக்க வைக்க பேசி வருகிறார். விரைவில் இதற்காக அறிவிப்பு வெளியாக உள்ளதாக கூறப்படுகிறது.
கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா நடிப்பில் வெளியாகி இருக்கும் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் விமர்சனம்.
கதாசிரியராக வேண்டும் என்று கனவோடு இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இவரும் நாயகி ராஷி கண்ணாவும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். வேலைக்கு ஏதும் போகாமல் ராஷி கண்ணாவின் பணத்தில் வாழ்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.
இந்நிலையில், விஜய் தேவரகொண்டா இதுவரைக்கும் எந்த கதையும் எழுதாததால் ராஷி கண்ணாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இருவரும் பிரிகிறார்கள். வருத்தத்தில் இருக்கும் விஜய் தேவரகொண்டா, தன்னை மையமாக வைத்து கதை எழுதுகிறார்.

எழுதிய கதையோடு ராஷி கண்ணாவை பார்க்க செல்கிறார். அங்கு ராஷி கண்ணா வேறொரு பிரச்சனையில் இருக்கிறார். இறுதியில் விஜய் தேவரகொண்டா கதையாசிரியர் ஆனாரா? ராஷி கண்ணாவும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.
படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா இளமை துள்ளலுடன் நடித்துள்ளார். காதல், சென்டிமெண்ட் என நடிப்பில் அதகளப்படுத்தி இருக்கிறார். முழு படத்தையும் தன் தோளில் தாங்கி செல்கிறார். நாயகியாக வரும் ராஷி கண்ணா நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குடும்ப பெண்ணாக மனதில் பதிகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கொடுத்த வேலையை செய்திருக்கிறார் கேத்ரின் தெரசா.

காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் கிராந்தி மாதவ். காதல் காட்சிகள் படத்தில் அதிகம் இருந்தாலும் அதை ரசிக்கும் அளவிற்கு இல்லை என்பதே வருத்தம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.
ஜெயகிருஷ்ணா கும்மாடியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.
மொத்தத்தில் ‘வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’ இன்னும் பேமஸ் ஆக வேண்டும்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா, வால்டர் என்பவருடன் லவ்வால் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரைசா. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து ‘ஆலிஸ்’ என்ற படத்திலும், ‘காதலிக்க யாருமில்லை’ படத்திலும் நடித்து வருகிறார்.
தற்போது ஹேஸ்டேக் லவ் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் நாயகனாக வால்டர் நடிக்கிறார். இப்படத்தை போஸ்கோ என்பவர் இயக்குகிறார். இவர் அட்லியிடம், ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய பணியாற்றி இருக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

இயக்குனர் போஸ்கோ சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ஹீரோ’ படத்தின் கதை என்னுடையது என்று வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.






