என் மலர்tooltip icon

    சினிமா செய்திகள்

    கிராந்தி மாதவ் இயக்கத்தில் விஜய் தேவரகொண்டா, ராஷி கண்ணா, ஐஸ்வர்யா ராஜேஷ், கேத்ரின் தெரசா நடிப்பில் வெளியாகி இருக்கும் வேர்ல்ட் பேமஸ் லவ்வர் விமர்சனம்.
    கதாசிரியராக வேண்டும் என்று கனவோடு இருக்கிறார் விஜய் தேவரகொண்டா. இவரும் நாயகி ராஷி கண்ணாவும் திருமணம் செய்துக் கொள்ளாமல் ஒரே வீட்டில் வாழ்ந்து வருகிறார்கள். வேலைக்கு ஏதும் போகாமல் ராஷி கண்ணாவின் பணத்தில் வாழ்ந்து வருகிறார் விஜய் தேவரகொண்டா.

    இந்நிலையில், விஜய் தேவரகொண்டா இதுவரைக்கும் எந்த கதையும் எழுதாததால் ராஷி கண்ணாவுக்கும் அவருக்கும் பிரச்சனை ஏற்படுகிறது. இதனால் இருவரும் பிரிகிறார்கள். வருத்தத்தில் இருக்கும் விஜய் தேவரகொண்டா, தன்னை மையமாக வைத்து கதை எழுதுகிறார்.

    வேர்ல்ட் பேமஸ் லவ்வர்

    எழுதிய கதையோடு ராஷி கண்ணாவை பார்க்க செல்கிறார். அங்கு ராஷி கண்ணா வேறொரு பிரச்சனையில் இருக்கிறார். இறுதியில் விஜய் தேவரகொண்டா கதையாசிரியர் ஆனாரா? ராஷி கண்ணாவும், விஜய் தேவரகொண்டாவும் இணைந்தார்களா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    படத்தில் நாயகனாக நடித்திருக்கும் விஜய் தேவரகொண்டா இளமை துள்ளலுடன் நடித்துள்ளார். காதல், சென்டிமெண்ட் என நடிப்பில் அதகளப்படுத்தி இருக்கிறார். முழு படத்தையும் தன் தோளில் தாங்கி செல்கிறார். நாயகியாக வரும் ராஷி கண்ணா நடிப்பால் ரசிகர்களை கவர்ந்திருக்கிறார். குடும்ப பெண்ணாக மனதில் பதிகிறார் ஐஸ்வர்யா ராஜேஷ். கொடுத்த வேலையை செய்திருக்கிறார் கேத்ரின் தெரசா.

    வேர்ல்ட் பேமஸ் லவ்வர்

    காதலை மையமாக வைத்து படத்தை இயக்கி இருக்கிறார் கிராந்தி மாதவ். காதல் காட்சிகள் படத்தில் அதிகம் இருந்தாலும் அதை ரசிக்கும் அளவிற்கு இல்லை என்பதே வருத்தம். திரைக்கதையில் கூடுதல் கவனம் செலுத்தி இருக்கலாம்.

    ஜெயகிருஷ்ணா கும்மாடியின் ஒளிப்பதிவு ரசிக்க வைக்கிறது. கோபி சுந்தரின் இசையில் பாடல்கள் அனைத்தும் கேட்கும் ரகம்.

    மொத்தத்தில் ‘வேர்ல்ட் பேமஸ் லவ்வர்’ இன்னும் பேமஸ் ஆக வேண்டும்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமான நடிகை ரைசா, வால்டர் என்பவருடன் லவ்வால் ஒன்றிணைந்திருக்கிறார்கள்.
    பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானவர் நடிகை ரைசா. இந்நிகழ்ச்சிக்குப் பிறகு ‘பியார் பிரேமா காதல்’ என்ற படத்தில் ஹரிஷ் கல்யாணுக்கு ஜோடியாக நடித்தார். இப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு பெற்றது. இப்படத்தை அடுத்து ‘ஆலிஸ்’ என்ற படத்திலும், ‘காதலிக்க யாருமில்லை’ படத்திலும் நடித்து வருகிறார்.

    தற்போது ஹேஸ்டேக் லவ் என்ற படத்தில் நடிக்கிறார். இதில் நாயகனாக வால்டர் நடிக்கிறார். இப்படத்தை போஸ்கோ என்பவர் இயக்குகிறார். இவர் அட்லியிடம், ராஜா ராணி, தெறி, மெர்சல் ஆகிய பணியாற்றி இருக்கிறார். கலைப்புலி தாணு தயாரிக்கும் இப்படத்திற்கு சாம் சி.எஸ் இசையமைக்கிறார்.

    புதிய படத்தின் போஸ்டர்

    இயக்குனர் போஸ்கோ சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ‘ஹீரோ’ படத்தின் கதை என்னுடையது என்று வழக்கு தொடர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. 
    கீரா இயக்கத்தில் சமுத்திரகனி நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் சென்சார் எதிர்ப்பால் படத்தின் பெயர் மாற்றப்பட்டுள்ளது.
    ‘பச்சை என்கிற காத்து’, ‘மெர்லின்’ ஆகிய படங்களில் கவனம் ஈர்த்த இயக்குநர் வ.கீரா, இம்முறை ‘எட்டு திக்கும் பற’ படத்தின் மூலமாக வருகிறார். இப்படம் குறித்து இயக்குநர் கீரா கூறும்போது, ‘பற என்பது சாதியத்தின் குறியீடு அல்ல, பற என்பது விடுதலையின் குறியீடு. ஆனால் அதை சென்சாரில் புரிந்துகொள்ளவில்லை. 

    எதிர்ப்பு வந்ததால் பெயரை எட்டு திக்கும் பற என்று மாற்றியுள்ளேன். நான் சாதி வெறியன் அல்ல. அப்படி ஒரு சாயத்தை பூசி மிரட்டுகிறார்கள். போன், சமூகவலைதளங்கள் மூலமாக கொலை மிரட்டல்கள் வருகின்றன. நான் சாதி எதிர்ப்பாளன். ஒரே இரவில் நடக்கும் கதையை மொத்தமாக ஒரே புள்ளியில் இணைப்பது தான் படத்தின் சுவாரசியம்.

    சமுத்திரகனி

    ஆணவக்கொலையை எதிர்க்கும் படமாக இப்படம் இருக்கும். படத்தில் அம்பேத்கர் என்ற கேரக்டரில் சமுத்திரக்கனி நடித்துள்ளார். சமூக நலனுக்காக போராடுபவர்களுக்கு ஆதரவாக இருக்கும் கேரக்டரை அம்பேத்கர் கேரக்டர் வெளிப்படுத்தும் அதை மிகச்சிறப்பாக செய்திருக்கிறார்'. இவ்வாறு அவர் கூறினார்.
    பிரபு சாலமன் இயக்கத்தில் ராணா, விஷ்ணு விஷால் நடிப்பில் உருவாகி வரும் காடன் படத்தின் முன்னோட்டம்.
    ஈரோஸ் இண்டர்நேஷனல் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘காடன்’. மனிதனுக்கும், யானைக்குமான ஆழமான உறவை உணர்வுப்பூர்வமாக, நெஞ்சம் நெகிழத்தக்க வகையில் எடுத்துரைக்கிறது. அதிலும் குறிப்பாக உண்மை சம்பவங்களை மையமாக கொண்டு இந்த திரைப்படம் உருவாகியிருக்கிறது.

    மிகுந்த எதிர்பார்ப்புகளைப் பெற்றிருக்கும் இந்த திரைப்படத்தில், கதாநாயகனாக ராணா நடிக்க, அவருடன் இணைந்து விஷ்ணு விஷால் தமிழ் மற்றும் தெலுங்கில் நடித்திருக்கிறார். இந்தியில் ‘ஹாத்தி மேரே சாத்தி’ என பெயரிடப்பட்டுள்ள இப்படத்தில், புல்கிட் சாம்ராட் அவருடன் இணைந்து நடிக்கிறார். இந்த மூன்று திரைப்படங்களிலும் ஸ்ரியா பில்கோங்கர் மற்றும் சோயா உசேன் முக்கிய வேடங்களில் நடித்திருக்கின்றனர்.

    இப்படத்தில் இயற்கை எழிலின் மகத்துவத்தையும், போராட்டக் களத்தின் பரபரப்பையும் அருமையாக காட்சிப்படுத்தியிருக்கிறார் அறிமுக ஒளிப்பதிவாளர் அசோக் குமார். இப்படத்தின் படத்தொகுப்புக்கு புவன் பொறுப்பேற்றிருக்கிறார். இதன் மூலம் அவர் தமிழ், தெலுங்கு, ஹிந்தி திரையுலகுக்கு ஒரே நேரத்தில் அறிமுகமாகிறார். ஸ்டண்ட்ஸ் சிவா, ஸ்டன்னர் சாம் இப்படத்தின் அதிரடி காட்சிகளுக்கு விறுவிறுப்பேற்றியிருக்கிறார்கள்.

    இப்படத்திற்கு ஷாந்தனு மோய்த்ரா இசையமைத்திருக்கிறார். வருகின்ற ஏப்ரல் 02ம் தேதி உலகமெங்கும் வெளியிடப்படுகிறது.
    இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடித்து வரும் ஷாலு ஷம்மு, காதலர் தினத்தில் வெளியிட்ட கவர்ச்சி புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.
    தமிழில் 2013ல் வெளிவந்த வருத்தப்படாத வாலிபர் சங்கம் படத்தில் ஹீரோயினின் தோழியாக நடித்தவர் நடிகை ஷாலு. இப்படத்தை அடுத்து மிஸ்டர் லோக்கல் படத்தில் நடித்திருந்தார். தற்போது இருட்டு அறையில் முரட்டு குத்து 2 படத்தில் நடித்து வருகிறார். 

    இவர் சமூக வலைத்தளங்களில் மிகவும் கவர்ச்சியான வீடியோக்கள் மற்றும் புகைப்படங்களை பதிவிட்டு வருகிறார். தற்போது காதலர் தினத்தை முன்னிட்டு போட்டோஷூட் எடுத்து அந்த புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். 

    ஷாலு ஷம்மு

    துணி கூட இல்லாமல் ரோஜா பூக்களை மட்டுமே உடலை மறைத்துகொண்டு கவர்ச்சியாக போஸ் கொடுத்துள்ளார் ஷாலு ஷம்மு. லவர்ஸ் டே அதுவுமாக இப்படி ஒரு போட்டோஷூட் தேவையா என்றுதான் ரசிகர்கள் விமர்சித்து வருகின்றனர்.
    தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வரும் காஜல் அகர்வால், நான்கு மொழிகளிலும் பிசியாக நடித்து வருகிறார்.
    தமிழில் பாரிஸ் பாரிஸ், இந்தியன் 2 ஆகிய படங்களில் நடிக்கும் காஜல் அகர்வால் ஆங்கில படம் ஒன்றிலும் நடித்து வருகிறார். இதுகுறித்து அவர் கூறியதாவது: தற்போது புதுப்படங்களில் நடிக்க கதை கேட்டு வருகிறேன். வெங்கட் பிரபு இயக்கும் வெப் சீரிஸ் மூலம் சினிமாவில் இருந்து இன்னொரு கட்டத்தை நோக்கி செல்கிறேன். 

    இந்தியில் ஜான் ஆப்ரகாம் ஜோடியாக மும்பை சகா படத்தில் நடிக்கிறேன். தெலுங்கிலும், ஆங்கிலத்திலும் உருவாகும் பிராட்ஸ்டர்ஸ் என்ற படத்தில் விஷ்ணு மஞ்சுவுடன் சேர்ந்து நடிக்கிறேன். கதையும், என் கேரக்டரும் பிடித்திருந்தால் மட்டுமே சினிமாவில் நடிப்பேன்.

    காஜல் அகர்வால்

    திரையுலகில் இத்தனை வருடங்களுக்கு பிறகும் வெற்றிகரமான ஹீரோயினாக நீடிப்பது குறித்து மிகவும் சந்தோஷப்படுகிறேன். இது எனக்கு கிடைத்த பரிசு’. இவ்வாறு அவர் கூறினார்.
    ஜெய் நடிப்பில் உருவாகி வரும் புதிய படத்தின் படப்பிடிப்பு முடியும் முன்பே சாட்டிலைட்ஸ் உரிமம் கோடியில் விற்பனையாகியுள்ளது.
    ஜெய் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘பிரேக்கிங் நியூஸ்’. இயக்குநர் ஆண்ட்ரூ பாண்டியன் எழுதி இயக்கும் இப்படத்தில் முதல் முறையாக வித்தியாசமான சூப்பர் ஹீரோ வகை படமாக உருவாகியுள்ளது. இதில் ஜெய்யுடன் பானு ஶ்ரீ, பழ கருப்பையா, இந்திரஜா, மானஸ்வி, ராகுல் தேவ், தேவ் கில் ஆகியோர் முக்கிய பாத்திரங்களில் நடிக்கிறார்கள். 

    சமீப காலங்களில் தென் இந்திய திரைப்படங்கள் பெரும் விலையில் இந்தியில் சாட்டிலைட் ரைட்ஸ் வாங்கப்பட்டு அங்கு மொழிமாற்றம் செய்து திரையரங்குகளிலும், தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப்படுகிறது. தற்போது இன்னும் படமே வெளிவராத நிலையில் படத்தின் கதை மற்றும் உருவாக்கத்தின் ஈர்ப்பில் பிரேக்கிங் நியூஸ் படம் இந்தியில் ரூ. 1.8 கோடிக்கு ரைட்ஸ் விற்கப்பட்டு சாதனை படைத்திருக்கிறது.

    ஜெய்

    விஷால் பீட்டர் இசையமைக்கும் இப்படத்திற்கு ஜானி லால் ஒளிப்பதிவு செய்கிறார். ஆண்டனி படத்தொகுப்பு செய்கிறார். கிட்டதட்ட 400 தொழில் நுட்ப கலைஞர்கள் தினேஷ் குமார் மேற்பார்வையில் விஷுவல் எஃபெக்ட்ஸ் காட்சிளை வடிவமைத்து வருகிறார்கள்.
    அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்து புகழ் பெற்ற நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் தற்போது நடித்திருக்கும் படத்தின் டிரைலரை மாதுரி தீட்சித் வெளியிட்டுள்ளார்.
    தமிழில் அபியும் நானும், உன்னைப்போல் ஒருவன் படங்களில் நடித்து புகழ் பெற்றவர் கணேஷ் வெங்கட்ராமன். இவர் கமல் தொகுத்து வழங்கிய பிக்பாஸ் நிகழ்ச்சியிலும் கலந்துக் கொண்டார். தற்போது இவர் ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ என்னும் பாலிவுட் படத்தில் நடித்துள்ளார்.

    இப்படத்தின் டிரைலரை பிரபல பாலிவுட் நடிகை மாதுரி தீட்சித் வெளியிட்டுள்ளார். ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ படத்தின் விக்ரம் சிங் என்ற வில்லனாக நடிக்கும் கணேஷ் இப்படத்தின் ஒரு வலிமை மிகுந்த தாதாவாக நடித்திருப்பதாகவும் அதற்காக அந்த கதாபாத்திரத்தின் தன்மை அறிந்து நடித்திருப்பதாகவும் கூறியுள்ளார்.

    மேலும், என் இள வயது முதலே என்னுள் ஈர்ப்பை உண்டாக்கிய மாதுரி தீட்சித் எனது முதல் இந்தி படத்தின் டிரைலரை வெளியிட்டிருப்பது மிகவும் சந்தோஷமாக இருக்கிறது என்று நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் கூறியுள்ளார்.

    படக்குழுவினருடன் மாதிரி தீட்சித்

    டிரைலரில் உள்ள உண்மையான அதிரடி சாகசங்களை நடிகை மாதுரி தீட்சித் பாராட்டியதோடு, கதாநாயகனாக நடிக்கும் கரண் நாத் மற்றும் கணேஷின் கதாபாத்திரமறிந்து நடித்திருக்கும் யுக்தியை பாராட்டினார். 

    ஷைன்னா நாத் தயாரிப்பில் சேகர் சூரி இயக்கியிருக்கும் ‘கன்ஸ் ஆஃப் பனாரஸ்’ பிப்ரவரி 28ம் தேதி வெளியாகவுள்ளது.
    நேர்கொண்ட பார்வை படத்தை அடுத்து அஜித் நடித்து வரும் வலிமை படத்தில் 12 வருடங்களுக்குப் பிறகு அஜித்துடன் பிரபல நடிகர் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
    ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்கு பிறகு மீண்டும் வினோத் இயக்கத்தில் அஜித் நடித்து வருகிறார். இந்த படத்துக்கு ‘வலிமை’ என்று பெயரிட்டுள்ளனர். போனிகபூர் தயாரித்து வரும் இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடக்கிறது. அஜித்துடன் நடிக்கும் நடிகர், நடிகைகள் விவரங்களை ரகசியமாக வைத்துள்ளனர்.

    கதாநாயகியாக கியூமா குரோஷி நடிப்பதாக கூறப்படுகிறது. வில்லனாக பிரசன்னா நடிக்கிறார் என்று பேசப்பட்டது. வலிமையில் நடிக்கிறீர்களா? என்ற ரசிகர் ஒருவரின் கேள்விக்கு பதில் அளித்த பிரசன்னா, தகவலுக்காக காத்திருக்கிறேன் என்றார். பின்னர் அவர் நடிக்கவில்லை என்பது உறுதிப்படுத்தப்பட்டது.

    நவ்தீப் - அஜித்

    இந்த நிலையில் தற்போது நவ்தீப்பை வலிமை படத்தில் அஜித்குமாருக்கு வில்லனாக நடிக்க தேர்வு செய்து இருப்பதாக இணைய தளங்களில் தகவல் பரவி வருகிறது. நவ்தீப் ஏற்கனவே அஜித்துடன் ஏகன் படத்தில் நடித்து இருந்தார். ஏகன் திரைப்படம் 2008ம் ஆண்டு வெளியானது. மேலும் தமிழில் அறிந்தும் அறியாமலும், இளவட்டம் உள்பட பல படங்களில் நடித்துள்ளார்.

    சமீபத்தில் திரைக்கு வந்த ஜீவாவின் சீறு படத்தில் வில்லனாக வந்தார். வலிமை படத்தில் அஜித்துக்கு வில்லனாக நவ்தீப் நடிப்பதை படக்குழுவினர் உறுதிப்படுத்தவில்லை. விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    என்னிடம் உரிமம் பெறாமல் ரீமேக் செய்தால் நடிகர் தனுஷ் மீது வழக்கு தொடருவேன் என்று இயக்குனர் விசு கூறியிருக்கிறார்.
    ரஜினிகாந்த் நடித்து 1981-ல் திரைக்கு வந்து ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்ற படம் நெற்றிக்கண். லட்சுமி, சரிதா, மேனகா, விஜயசாந்தி, கவுண்டமணி ஆகியோரும் நடித்து இருந்தனர். எஸ்.பி.முத்துராமன் இயக்கி இருந்தார். பாலச்சந்தரின் கவிதாலயா பட நிறுவனம் தயாரித்தது.

    நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்து ரஜினிகாந்த் கதாபாத்திரத்தில் நடிக்க விரும்புவதாக தனுஷ் தொடர்ந்து கூறி வருகிறார். தற்போது இதற்கான ஆரம்ப கட்ட வேலைகளை அவர் தொடங்கி இருப்பதாகவும், தற்போதைய ரசிகர்களுக்கு ஏற்ற வகையில் கதையில் சிறிய மாற்றங்கள் செய்ய இருப்பதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.

    ரஜினியின் நெற்றிக்கண

    நெற்றிக்கண் ரீமேக்கை இயக்குவது யார் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நெற்றிக்கண் படத்தை தனது அனுமதி இல்லாமல் ரீமேக் செய்யக் கூடாது என்று டைரக்டர் விசு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது:-

    “தனுஷ் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்ய இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இந்த தகவல் பொய் என்றால் கண்டுகொள்ள மாட்டேன். உண்மையாக இருக்குமானால் படத்தின் தயாரிப்பு நிறுவனமான கவிதாலயாவிடம் அவர் உரிமம் வாங்குவதை விட கதாசிரியரான என்னிடம் வந்து கேட்பதே சரியாக இருக்கும். என்னிடம் உரிமம் பெறாமல் நெற்றிக்கண் படத்தை ரீமேக் செய்தால் தனுஷ் மீது கோர்ட்டில் வழக்கு தொடருவேன்.”

    இவ்வாறு விசு கூறியுள்ளார்.
    ராணா இயக்கத்தில் ஹிப்ஹாப் ஆதி, ஐஸ்வர்யா மேனன் நடிப்பில் வெளியாகி இருக்கும் ‘நான் சிரித்தால்’ படத்தின் விமர்சனம்.
    ஐடி நிறுவனத்தில் பணியாற்றும் ஆதிக்கு ஒரு விசித்திரமான பிரச்சனை உள்ளது. அதாவது சோகமானாலோ, பதற்றம் ஏற்பட்டாலோ அவருக்கு தாங்கமுடியாமல் சிரித்துவிடுவார். இந்த சிரிப்பால் அவர் வேலையை இழக்கிறார். அவரது காதலும் சிக்கலுக்குள்ளாகிறது. இந்த சூழலில் காணாமல் போன தன் நண்பனை மற்ற நண்பர்களுடன் இணைந்து தேட ஆரம்பிக்கின்றார் ஆதி.

    இதேபோல் தாதாக்களான ரவி மரியாவும் கே.எஸ். ரவிக்குமாரும் ஒருவரை ஒருவர் கொல்ல முயற்சிக்கின்றனர். கே.எஸ். ரவிக்குமாரை கொல்ல ரவி மரியா மூன்று ரவுடிகளை அனுப்பி வைக்கிறார். நண்பனை தேடி செல்லும் ஆதி எதிர்பாராத விதமாக கே.எஸ். ரவிக்குமாரிடம் சிக்கி கொள்கிறார். இறுதியில் ஆதி அங்கிருந்து எப்படி தப்பித்தார்? அவரின் காதல் கை கூடியதா? என்பதே படத்தின் மீதிக்கதை.

    நான் சிரித்தால் படக்குழு

    கெக்க பெக்க எனும் பெயரில் எடுக்கப்பட்டு பெரும் வரவேற்பை பெற்ற குறும்படத்தை முழு நீள படமாக எடுத்துள்ளனர். நாயகன் ஆதி, வழக்கம்போல தனது துறுதுறுப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். காதல், காமெடி, டான்ஸ் என கமர்ஷியல் ஹீரோவாக அசத்தி இருக்கிறார். நாயகி ஐஸ்வர்யா மேனன், கொடுத்த வேலையை கச்சிதமாக செய்து இருக்கிறார். 

    ஆதியின் தந்தையாக வரும் படவா கோபி, டைமிங் காமெடிகளின் மூலம் சிரிக்க வைக்கிறார். ஆதிக்கும் அவருக்கும் இடையிலான அப்பா, மகன் கெமிஸ்ட்ரி நன்றாக ஒர்க் அவுட் ஆகி உள்ளது. அதேபோல் வில்லனாக நடித்துள்ள கே.எஸ்.ரவிக்குமார் மற்றும் ரவிமரியா, இருவருமே அனுபவ நடிப்பை கொடுத்துள்ளனர். 

    நான் சிரித்தால் படக்குழு

    இந்த கதையை கெக்க பெக்க எனும் குறும்படம் மூலம் ரசிக்க வைத்த இயக்குனர் ராணா, இந்த படத்தில் அதனை தவறவிட்டுள்ளார். கதாபாத்திரங்களில் தேர்வில் கவனம் செலுத்தி உள்ள இயக்குனர், திரைக்கதையில் கோட்டை விட்டுள்ளார். காமெடி காட்சிகள் சில இடங்களில் மட்டுமே ரசிக்கும் படியாக உள்ளது. 

    ஹிப்ஹாப் ஆதியின் இசையில் பிரேக் அப், நான் சிரித்தால் ஆகிய பாடல்களை தவிர மற்றவை மனதில் ஒட்டவில்லை. வாஞ்சிநாதனின் ஒளிப்பதிவில் காட்சிகள் பளிச்சிடுகின்றன. 

    மொத்தத்தில் ‘நான் சிரித்தால்’ கலகலப்பு குறைவு.
    மாஸ்டர் படத்திற்காக அனிருத் இசையில் விஜய் பாடியுள்ள ‘ஒரு குட்டி கதை’ எனும் பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
    விஜய் - லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் மாஸ்டர் படம் உருவாகி வருகிறது. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனனும், வில்லனாக விஜய் சேதுபதியும் நடிக்கிறார்கள். மேலும் சாந்தனு, ஆண்ட்ரியா, கவுரி கிஷான் ஆகியோரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார். 

    படத்தின் சிங்கிள் டிராக் காதலர் தினமான இன்று வெளியிடப்பட்டது. ஒரு குட்டி கதை என தொடங்கும் அப்பாடலை விஜய் பாடியுள்ளார். அனிருத் இசையில் நடிகர் விஜய் பாடும் இரண்டாவது பாடல் இதுவாகும். ஏற்கனவே கத்தி படத்திற்காக அனிருத் இசையில் ‘செல்பி புள்ள’ பாடலை பாடியது குறிப்பிடத்தக்கது. இப்பாடலை கனா படத்தின் இயக்குனர் அருண்ராஜா காமராஜ் எழுதியுள்ளார். பெரும் எதிர்பார்ப்புக்கிடையே வெளியான இப்பாடல் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.
    ×